Showing posts with label இந்து மதம். Show all posts
Showing posts with label இந்து மதம். Show all posts

Thursday, May 08, 2008

மதமாற்றத்தை விளையாட்டா எடுத்துக்கலாமா?

நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் கல்லடி விளையைச் சேர்ந்த இளைஞர் தங்கமெர்ஜின். இந்துவான இவர் சில மாதங்களுக்கு முன்பு முஸ்லீமாக தாய் மதத்திற்குத் திரும்பினார் (இப்படி சொல்றதுதான் இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்டு!) .

மதம் மாறி சில மாதங்கள் ஆன நிலையில் இப்போது (மே 5) தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி இடலாக்குடியில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்து தங்கமெர்ஜின் தஞ்சம் புகுந்தார்.

இதற்கிடையே இந்து வாலிபர் ஒருவரை கட்டாய மதமாற்றம் செய்யப்போவதாக தவறான தகவல் பரப்பப் பட்டு இந்து அமைப்பினர் அந்த பகுதியில் திரண்டு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கினர்.

பள்ளிவாசல் நிர்வாகிகள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் தங்கமெர்ஜினை போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

முஸ்லீம் மத கோட்பாடுகள் தனக்கு பிடித்து இருந்ததால் அந்த மதத்துக்கு மாறியதாக தங்கமெர்ஜின் தெளிவாக போலீசாரிடம் தெரிவித்தார்.

அதே சமயம் தங்கமெர்ஜினின் அண்ணனும், அவரது தாயாரும் அதை மறுத்து, தங்கமெர்ஜின் கட்டாயப் படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

'தங்கமெர்ஜின் ஒரு பெண் மீது ஆசைப்பட்டிருக்கிறான். 'அந்த பெண்ணை உனக்கே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால் நீ மதம் மாற வேண்டும்' என சிலர் அவனுக்கு ஆசை வார்த்தை கூறி உள்ளனர். பெண் மீது கொண்ட மோகத்தில் அவன் மதம் மாறி உள்ளான். தற்போது அவனை மதமாற்றிய நபர்கள் ஏமாற்றி விட்டனர். தங்கமெர்ஜின் மதம் மாறியதும் அவனது தந்தை மகாலிங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே தங்கமெர்ஜினை மீண்டும் எங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.' என்று அவர்கள் கூறினர்.

தங்கமெர்ஜின் அவரது குடும்பத்தினர் சொல்வது போல ஒரு முஸ்லிம் பெண்ணின் மீது ஆசைப்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார் என்றால் அது தவறு. இஸ்லாமின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் வெறும் உணர்ச்சி வேகத்தில் மதம் மாறுவது, மத மாற்றம் அல்ல; அது வெறும் பெயர் மாற்றம்தான்!

ஆனால், இந்தச் செய்தியில் பல முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருக்கின்றன.

'கட்டாய மத மாற்றம்' என்று புரளியைக் கிளப்பியவர்கள், பிறகு 'திருமண ஆசை காட்டி' மதம் மாற்றினார்கள் என்கிறார்கள். அப்படி எந்தத் திருமணமும் நடந்ததாகவும் தெரியவில்லை. ஆசை காட்டியவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்றால் தங்கமெர்ஜின் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருந்து கொண்டிருக்கிறார்?

கட்டாயப் படுத்தியோ ஆசை காட்டியோ மதம் மாற்றி ஆள் சேர்க்க வேண்டிய தேவை இஸ்லாமிற்கு என்றும் இருந்ததில்லை!

கட்டாயப் படுத்தியோ ஆசை காட்டியோ மதம் மாற்றுவதற்கு தங்கமெர்ஜின் விபரம் புரியாத சிறுவன் அல்ல. 22 வயதைக் கடந்த வாலிபர். நல்லது எது கெட்டது எது என்பதை உணர்ந்து கொள்ளும் பருவத்தை அடைந்தவர்.

அப்படி கட்டாயப் படுத்திதான் அவரை மதம் மாற்றினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், போலிசாரின் விசாரணையில் அவர் உண்மையை சொல்லியிருக்க முடியும். போலிசாரிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றவர்கள் முஸ்லிம்களே என்பதால் முஸ்லிம்கள் இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதும் புரிகிறது!

தங்கமெர்ஜினின் தந்தை கோமா நிலைக்குச் சென்றது வருத்தத்திற்குறிய ஒரு விஷயம்தான். ஆனால் அவரது மதமாற்றத்தால்தான் அவர் உடல் நலம் பாதிக்கப் பட்டார் என்பது ஒரு செண்டிமெண்டல் பிளாக் மெயில் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தங்கமெர்ஜின் முஸ்லிமாக இருந்தாலும் அவரது பெற்றோர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு மகன் என்ற முறையில் தனது பெற்றோருக்குரிய கடமைகளை அவரால் நிறைவேற்ற முடியும். இஸ்லாம் அதைத்தான் வலியுறுத்துகிறது.

மதமாற்றம் என்பது விளையாட்டு விஷயம் அல்ல. இது போன்ற ஒரு கடினமான முடிவை எடுத்து அதில் திடமாகவும் இருக்கும் தங்கமெர்ஜினுக்கு பாராட்டுக்கள்!

Tuesday, November 27, 2007

மலேஷியாவில் கோயில்கள் இடிப்பு? உண்மை என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்ட கோயிலை அந்நாட்டு அரசு அப்புறப்படுத்தியது. இதையடுத்து அங்குள்ள இந்துக்கள் சிலர் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். அதோடு இங்குள்ள இந்துத்துவ வகையறாக்கள் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவிற்கான மலேஷிய தூதரிடம் அங்குள்ள கோயில்களை 'பாதுகாக்க' மனுவும் அளித்தனர். (ஏன்னா, 'இடிக்கிற'தெல்லாம் அவங்க வேலையாச்சே!). ஜெ போன்ற அரசியல்வாதிகளும் இதில் தலையிட்டு குட்டையை குழப்ப முயன்று வருகின்றனர்.

ஆனால், உண்மை நிலவரம் என்ன? இடிக்கப்பட்ட ஆலயம் பழமையானது என்பதாலும், முறையான அனுமதியின்றி ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது என்பதாலும் அதை இடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, கடந்த நவம்பர் 2005-லேயே, ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ள அந்த இடத்தை காலி செய்து தரும்படி சிலாங்கூர் மாநில அரசு அக்கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு கோவிலை இடம் மாற்றிக் கட்டிக் கொள்வதற்காக இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது. இதை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதன் பிறகே அக்கோயில் தற்போது இடிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அந்நாட்டு மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அக்கட்சி ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ சாமிவேலு கூறும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிலம் வழங்கப்பட்டும் புதிய இடத்துக்கு கோவிலை மாற்றுவதற்கு கோவில் நிர்வாகத்தினர் தயக்கம் காட்டி வந்தனர் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்துக்கள் கோவில் கட்டும் போது மாநகர மன்றத்தின் ஒப்புதல் பெறாமல் தங்கள் விருப்பத்திற்கு கட்ட வேண்டாம் என்றும் சாமிவேலு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தை மதரீதியானதாக நாங்கள் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கோவில்கள் மட்டுமல்லாது இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்ட ஏராளமான பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டுள்ளன என்று மலேஷிய வாழ் முஸ்லிம்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பொதுவாக எந்த நாட்டிலும் இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவது வழக்கம்தான். சென்ற ஆண்டு என்று நினைக்கிறேன், மதுரையில் இது போல ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டன. அவற்றுள் சில கோவில்களும், தர்காக்களும் அடக்கம். அது போல சட்டவரையறைக்குள் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே இந்த மலேஷிய நிகழ்வு. அதை ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முற்படுகின்றனர் இந்துத்துவாக்களும் சில அரசியல்வாதிகளும்.

சிறுதகவல்: மலேசியாவில் ஏறத்தாழ பதினேழாயிரம் கோயில்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாம்.



நன்றி: தமுமுக

Thursday, April 12, 2007

இந்துக்களை புண்படுத்தியதா எலிசபெத்தின் திருமணம்?

பிரபல மாடல் அழகி எலிசபெத் ஹர்லி அருண் நாயர் என்ற இந்தியரை கடந்த மார்ச் மாதம் ஜோத்பூரில் மிக ஆடம்பரமாக நடத்தப் பட்ட திருமண வைபவத்தில் கைப்பிடித்தார். இந்து மத முறைப்படி நடத்தப் பட்ட அந்தத் திருமணம் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி யிருக்கிறது. அத்திருமணத்தில் 'இந்து மத சம்பிரதாயங்கள் கேலி செய்யப் பட்டிருப்பதாக' சிலர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர்.

எலிசபெத் ஹர்லி முதல் காரியமாக ஆரிய சமாஜம் போன்ற இடங்களுக்கு போய் அஞ்சோ பத்தோ கொடுத்து ஒரு 'ஆரிய சமாஜி' சர்டிபிகேட் வாங்கி வைத்திருந்தார் என்றால் இந்த பிரச்னையே வந்திருக்காது.!!!

வலைப்பதிவு 'காப்பி & பேஸ்ட் வல்லுனர்' எழில் சார் அவர்களில் கண்களில் வழக்கம் போல இந்த செய்தி படவேயில்லை போலிருக்கிறது. இந்த பதிவை பார்த்த பிறகாவது,

1. இந்துமத சம்பிரதாயங்கள் என்றால் என்னென்ன?
2. அவற்றை யார் உருவாக்கினார்கள்?
3. இந்த சம்பிரதாயங்களை ஒரு வெளிநாட்டினர் கடைப்பிடித்தது ஏன் கேலியாக எடுத்துக் கொள்ளப்பட்டது?
4. கேலியில்லாமால் இந்த சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பது எப்படி?
5. 'இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் ஓகே' என்று ஆரிய சமாஜிடம் ஒரு 'No Objection Certificate' வாங்க வேண்டுமென்றால் என்ன செலவு வரும்?

போன்ற கேள்விகளுக்கு எல்கேஜி பிள்ளைங்களுக்கு புரியுற மாதிரி விளக்கி எழில் சார் அவர்கள் ஒரு பதிவு எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

Report: Hurley-Nayar wedding criticized

Model actress Elizabeth Hurley holds Damian, her four-year-old son, as husband Indian business man Arun Nayar, left, looks on, as they leave the airport after arriving in Jodhpur, India, in this March 7, 2007 file photo. A lawyer and Hindu religious activist has filed a complaint in a western Indian court saying that Hurley and Nayar's Hindu wedding made a "mockery of Hindu customs," a news report said Wednesday, April 11, 2007. Hurley and Nayar, were married in a lavish and traditional Hindu ceremony at a palace-turned-hotel in the western Indian city of Jodhpur on March 9, 2007.

NEW DELHI --A Hindu religious activist has filed a complaint in a western Indian court saying that Elizabeth Hurley and Arun Nayar's Hindu wedding made a "mockery of Hindu customs," a news report said Wednesday.

The 41-year-old British actress-model and Nayar, a 42-year-old Indian businessman, were married in a lavish Hindu ceremony at a palace-turned-hotel in the western Indian city of Jodhpur in March.

The couple first wed in a private civil ceremony in a castle outside London.

"This was a marriage for commercial purposes, but at the cost of religious feelings," Hasti Mal Saraswat, said in his complaint, The Times of India newspaper said. Saraswat is acting on behalf of Vishnu Khandelwal, a local businessman and religious activist.

Jasraj, a Hindu priest who uses just one name, also said that since the couple already had married before, they had no Hindu religious sanction to marry for a second time.

The complaint goes on to say that Hurley did not remove her footwear while walking around the sacred fire at the ceremony and wore revealing clothes.

The report had no details on when the complaint was likely to come up before a judge. India's legal system, burdened by a huge backlog of cases, is notoriously slow and it can take months and even years before complaints come up for hearing.

The petition was filed under a section of the Indian Penal Code that makes it an offense to upset any religious feelings with "deliberate and malicious intention."

Saraswat told the newspaper that Arun Nayar's father, Vinod Nayar, also will testify against the couple. Earlier this week, tabloids in England and India carried reports that Vinod Nayar has severed ties with his son after he was thrown out of the wedding on Hurley's urging.

Hurley and her husband have not commented on the reports or on the complaint.

Actress Hurley appeared in "Austin Powers: International Man of Mystery" and "Bedazzled," and for several years was the international face of Estee Lauder cosmetics. Her 4-year-old son, Damian, accompanied the couple on their trip to India.

Thursday, March 22, 2007

4. இந்துமத சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்

அதர்வண வேதம் 20-ம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13

சுலோகம் 1. அவர் நரசன்ஷா (புகழுக்குறியவர்) - முஹம்மது. அவருக்கு 60090 எதிரிகள் இருந்தும் அவர் பாதுகாப்புடன் கூடிய ஒரு சாந்திமிகு தலைவராக இருப்பார்.

சுலோகம் 2. அவர் ஒட்டகத்தில் சவாரி செய்யும் ஒரு ரிஷியாவார் ''மம்ஹா"

சுலோகம் 3. அவர் ரிஷியாவார். அவருக்கு 100 தங்க நாணயங்களும் பத்து கழுத்து அணிகலன்களும் 300 நல்ல குதிரைகளும் பத்தாயிரம் பசுக்களும் வழங்கப்படும்.

சுலோகம் 4. அவர் இறைவனை துதிப்பவராய் இருப்பார்.

சுலோகம் 5. வணக்க வழிபாடுகளில் தீவிர முயற்சி எடுப்பார்.

சுலோகம் 6. அவருக்கு இறைவன் புறமிருந்து அநேக அருள் வளங்கள் உண்டு.

சுலோகம் 7. அவர் சிறந்த அரசர், மனிதர், மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.

சுலோகம் 8. அவரும் பாதுகாப்பில் இருப்பார். பிறருக்கும் பாதுகாப்பு வழங்குவார்.

சுலோகம் 9. உலக சாந்திக்கு உழைப்பார்.

சுலோகம் 10. அவரின் ஆட்சியில் மக்கள் வளமும், மகிழ்வும் பெறுவர். வறுமை அகன்று வளம் கொழிக்கும்.

சுலோகம் 11. அவர் அச்ச மூட்டி எச்சரிக்க தூண்டுவார்.

சுலோகம் 12. அவர் கொடைத் தன்மையும் தாராளமனமும் கொண்டவர்.

சுலோகம் 13. அவரைப் பின்பற்றுவோர் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகளிலிருந்து இறையருளால் பாதுகாப்பு பெற்று தம் தூதரையும் காத்தனர்.

சுலோகம் 14. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து தீய விளைவுகளில் இருந்தும் பாதுகாப்பு கோரினர்.

இந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

1. சமஸ்கிருத வார்த்தை ''நரஷன்ஸா" என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ''கௌரமா" சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர்.

2. இறைத்தூதர் ஒட்டகச் சவாரி செய்பவர். உறுதியாக இந்தியத் தூதர்களைக் குறிப்பிடவில்லை. எவரும் இந்தியாவில் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வதில்லை. பிராமணர்கள் ஒட்டகச் சவாரி செய்யத் தடை உள்ளது. (மனுஸ்மிருதி பாகம் 25, பக்கம் 472).

மனுஸ்மிருதி அத்தியாயம் 2, சுலோகம் 202 கூறுகிறது. ''ஒரு பிராமணன் ஒட்டகக் கழுதைச் சவாரி செய்வது தடை செய்யப்பட்டது. நிர்வாணமாய் குளிப்பதும் தடையாகும். அவனுடைய மூச்சால் அவனை சுத்தப்படுத்திக் கொள்ளவும்"

3. முஹம்மது எனும் இறைத்தூதர் பெயரை மம்ஹா எனும் ரிஷி என சுலோம் கூறுகிறது. சமஸ்கிருதத்தில் மஹ்மத் என்பது கெட்ட வார்த்தையாகும். ஆகவே மம்ஹா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. அவருக்கு வழங்கப்பட்ட நூறு தங்க நாணயங்கள் அவரின் சிறந்த தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்கள் மக்கத்து இணைவைப்போரால் துன்புறுத்தப்பட்டு அபீஷினியா, மதீனா இடம் பெயர்ந்தனர். பின்னர் மதீனாவில் ஒன்று கூடினர். அவருக்கு வழங்கப்பட்ட 10 கழுத்து அணிகலன்கள் இஸ்லாம் கூறும் ''அஸ்ரத்துல் முபஷ்ஷரா" ஆகும். சுவனத்திற்கு இறைத்தூதரால் நன்மாராயம் கூறப்பட்ட பத்துபேர் (நபித்தோழர்கள்). அவர்களாவன அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி), ஸஆத் பின் அபீவக்காஸ்(ரலி), ஸஆத் பின் ஜைது(ரலி), அபூ உபைதா(ரலி). தூதருக்க வழங்கப்பட்ட 300 குதிரைகள் பத்ருப்போரில் போரிட்டு வெற்றி ஈட்டித்தந்த நபித்தோழர்களைக் குறிக்கும் மூன்று மடங்கு அதிகமாக இருந்த எதிரிகளை வெற்றி கொள்ளப் போரிட்ட இந்நபித்தோழர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக இஸ்லாம் கூறுகிறது. 10000 பசுகள் என்பது இறைத்தூதருடன் மக்கா வெற்றியின் பொது வந்த நபித்தோழர்களைக் குறிக்கிறது. அவர்கள் பரிசுத்தமான, போராடக் கூடிய தீரர்கள் என்பதை அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது.

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும் இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது. பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.(48:29)

''ரெப்ஹ்" என்னும் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் அரபியில் அஹ்மத் ஆகும். இது இறைத்தூதரின் மற்றொருபெயர்.

5. இறைத்தூதரும் அவரின் தோழர்களும் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவர். அது போர்களமாக இருந்தாலும் சரியே.

குர்ஆனின் கீழ் கண்ட வசனம் இதைத் தெளிவுப்படுத்துகிறது.

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்குத் தவிர மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(2:45)

(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும் அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.(4:102)

6. இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட அருள் வளங்களில் ஒன்று அருள் மறை குர்ஆன் ஆகும். அதனை இறைத்தூதர் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார், அவர்கள் அதனை மனனம் செய்தனர்.

குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(21:107)

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்(34:28)

மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(68:4)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:21)

7. கஃபா (மக்காவில் உள்ள இறைவனின் ஆலயம்) புணர்நிர்மாணத்தின் போது அரபுக் கோத்திரங்களுக் கிடையில் எழுந்த போர் மூட்டத்தைக் போக்கி சமாதானம் நிலவச் செய்தவர். இறைத்தூதர் மக்கா வெற்றி கூட மிகப் பெரிய நிலப்பரப்பை இரத்த சேத மின்றி அறுர்மியவர். நபி(ஸல்), தம்மை எதிர்த்த மிகப்பெரும் விரோதிகளையும் மன்னித்த இறைத்தூதர்.

8. அறியாமைக்கால இருளில் மூழ்கிக்கிடந்த அரபுலக மக்களை தம் போதனைகளால் நேர்வழியின் பக்கம் அழைத்தவர்.

குர்ஆன் கூறுகிறது:

74:1 (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

74:2 நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.

74:3 மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.

3:159 அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள் எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.

114:1 (நபியே!) நீர் கூறுவீராக. மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

114:2 (அவனே) மனிதர்களின் அரசன்.

114:3 (அவனே) மனிதர்களின் நாயன்.

வேதங்களைப் பின்பற்றுவோர், இறைவனைப் போற்றிப்புகழ்ந்து இறைத்தூதரைப் பின்பற்றி நரக நெருப்பிலிருந்து விடுபட வேதங்கள் கூறும் சுலோகங்கள் தான் மேலே கூறப்பட்டவை.

ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

Tuesday, March 20, 2007

3. இந்துமத புனித நூல்கள்!

இந்துவத்தில் புனிதம் வாய்ந்த இருவகை நூல்கள் உள்ளன 1) ஸ்ருதி 2) ஸ்மிருதி.

ஸ்ருதி
ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டு, உணரப்பட்டு, புரியப்பட்டது அல்லது அருளப்பட்டது, மிகப் பழமையான பிரசித்தி பெற்றது ஆகும். ஸ்ருதி இரு வகைப்படும் அவை 1) வேதங்கள் 2) உபநிஷங்கள்.

ஸ்மிருதி
ஸ்ருதி போல் புனிதம் வாய்ந்ததல்ல இருப்பினும் இந்துக்களால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. "ஸ்மிருதி" என்றால் ஞாபகங்கள் அல்லது நினைவூட்டல்கள். இந்து இலக்கியங்கள் புரிந்து கொள்ள மிக எளிதானது. ஏனெனில் அவை உலகின் உண்மைகளை குறிப்பால் உணர்த்துகிறது. ஸ்மிருதி இறைவனிடம் இருந்து வந்த புனிதத் தன்மையின்றி இருந்தாலும் மனிதன் வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய அனைத்து வழிமுறைகளையும் கூறுகிறது. சமுதாயத்தில் நிலவும் ஒவ்வொரு செயலுக்கும் விதி முறைகளை கூறுகிறது. தர்மசாஸ்திரம் எனும் இதிகாச புராணங்கள் ஸ்மிருதியில் உள்ளன.

இந்து வேதங்களின் ஆய்வு
ஆக இந்துக்களின் புனித நூல்களாக வேதங்கள், உபநிஷங்கள், புராணங்கள் கருதப்படுகிறது

1. வேதங்கள்
அறிவு ஞானம் எனும் ''வித்" எனும் வேதச் சொல்லிருந்து வேதம் வந்தது. முக்கிய வேதங்கள் 4. ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகியவையாகும். முகாபாஷ்ய பாதாஞ்சலி கூற்றுப்படி ரிக்வேதத்தின் 21 கிளைகள், அதர்வனவேதத்தின் 9 கிளைகள், யஜுர் வேதத்தின் 101 கிளைகள், சாம வேதத்தின் 1000 கிளைகள் ஆக 1131 கிளைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 12 கிளைகள் இப்பொழுது காணக் கிடைக்கிறது.

ரிக், யஜுர், சாம வேதங்கள் பழமையானது இதனை ''தரை வித்யா" என அழைப்பர். அதர்வண வேதம் இறுதியில் வந்தது.

ஆர்ய சமாஜ் என்ற இயக்கத்தின் நிறுவனரான ஸ்வாமி தயானந்தர் கூற்றுப்படி 4 வேதங்களைத் தொகுத்த நாளில் ஒத்த கருத்து இல்லை. தயானந்தர் 1310 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் அருளப்பட்டது எனக் கூறினார். சில அறிஞர்கள் 4000 ஆண்டுகள் முன்பு வேதங்கள் இறங்கின என்பர்.

வேதங்கள் இறங்கிய இடங்களிலும் ஒத்த கருத்து இல்லை. இறங்கிய வேதங்கள் ரிஷிகளிடம் வழங்கப்பட்டன என சிலர் கூறுகின்றனர். இந்த வேறுபட்ட கருத்துகள் இருந்த போதும் வேதங்கள் இந்து தர்மத்தின் ஆதாரப்பூர்வ நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள்.

2. உப நிஷங்கள்
அருகில் இருந்து கற்றவை அறிந்தவை எனப் பொருள். அறியாமையை அகற்றக் கூடியது என மற்றொரு பொருளுமுண்டு.

இந்திய வரலாற்றுப் படி 200க்கும் அதிகமான உபநிஷங்கள் உண்டு. இருப்பினும் நடப்பில் உள்ளவை 10 அல்லது 18 ஆகும்.

உபநிஷங்களுக்கு வேதாந்தம் என்றும் பொருண்டு. தத்துவங்களைக் கூறும் உப நிஷங்களும் உள்ளன. வேதங்களுக்கு பின் தோன்றியவைகளே வேதாந்தம் எனும் இந்த உப நிஷங்கள்.

சிலபண்டிதர்கள் வேதங்களைக் காட்டிலும் உபநிஷங்கள் சிறந்தது எனக் கருதுகின்றனர்.

3. புராணங்கள்

வேத, உபநிஷங்களுக்குப் பின் இந்துக்ளின் புனிதமாக கருதப்படுவது புராணங்கள் ஆகும். உலகம் படைக்கப்பட்டது, முந்தய ஆரியர்களின் வரலாறு, தெய்வங்கள் பற்றிய குறிப்புகளை புராணங்கள் கூறுகின்றன. இவை நூல் வடிவில் அருளப்பட்டதாக கூறுவர். மகாரிஷி வியாசர் புராணங்களை 18 பாகங்களாய் பிரித்தார். அவற்றிக்கு பொருத்தமான தலைப்புகள் இட்டனர். பகவத் கீதை (மகாபாரதம்) இவரது எழுத்துத்திறனால் வெளிப்பட்ட புராணமே. புராணங்களில் முதன்மையானது பவிஷ்ய புராணம். எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதனை இந்துக்கள் கடவுளின் வார்த்தை எனக் கூறுவர். மகாரிஷி வியாசர் இந்நூலை தொகுத்தவர் ஆவார்.

முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் கூற்று
பவிஷ்ய புராணம்ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்தியாயம் 3, சுலோகம் 5 முதல் 8 வரை ''ஒரு வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு மொழியினைச் சார்ந்த ஆன்மீக ஆசிரியர் ஒருவர் தோன்றுவார். அவருடன் தோழர்கள் இருப்பர் அவரின் பெயர் "முஹம்மது"

இந்த சுலோகங்கள் கீழ்கண்ட உண்மைகளை உணர்த்துகிறது.

1. நபியின் பெயர்
2. அவர் அரேபியாவைச் சார்ந்தவர் (சமங்கிருத மருஸ்தல் பாலைவன நிலத்தைக் குறிக்கும்)
3. அந்த நபிக்கு அநேக நபித்தோழர்கள் உண்டு
4. சமஸ்கிருத வார்த்தை ''பர்பதிஸ்நாத்" என்பதன் பொருள் அருட்கொடை

குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதை உறுதிச் செய்கிறது.

(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன்-68:4)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதாரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107)


5. அவர் தீய செயல்களை விரட்டி (ஷைத்தானை) சிலை வணக்கம் அகற்றி ஏகத்துவ கொள்கையை நிலைநாட்டுவார்.

6. அந்த நபி இறைவன் புறமிருந்து பாதுகாப்பளிக்கப்படுவார். அந்த நபி பாவங்களற்றவர்.

பவிஷ்ய புராணம் ப்ரதி ஸாரக் பாகம் 3, காண்டம் 3, ஸ்லோகம் 10-27. மகாரிஷி வியாசர் கூறுகிறார்:

''அத்தூதர் அரேபியாவில் நிலவும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிப்பார். ஆர்ய தர்மத்தை அந்நாட்டிலிருந்து அகற்றுவார். நேர்வழி காட்டும் அத்தூதர் முஹம்மது ஆவார். அவருக்கு பிரம்மன் (கடவுள்) துணைபுரிவார். துஷ்டர்களை அவர் நல்வழிப்படுத்துவார். ஓ ராஜாவே நீர் கெட்டவர்களை (ஷைத்தானைப்) பின்பற்றாதீர். ஆத்தூதரினைப் பின்பற்றுவோர் மாமிசம் உண்பர். விருத்தசேதனம் செய்வர். தாடியுடன் இருப்பர். பாங்கோசை ஒலித்து வழிபாட்டில் ஈடுபடுவர். அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே உண்பர். பன்றி இறைச்சியைத் தவிர்ப்பர். அவர்களுக்கு போர் வெற்றிப்பொருட்கள் ஆகுமானது. அவர்களுக்கு "முஸல்மான்" எனப்பெயர்."

இந்த சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்

1. ஷைத்தான்கள் அரேபியாவை அசுத்தப்படுத்தியிருந்தனர்.
2. ஆர்ய தர்மம் அரேபியாவில் காணப்படவில்லை.
3. சத்திய மார்க்கத்தை அழிக்கப் புறப்பட்ட பெரும் மன்னர்கள் அழிந்தனர் (உதாரணம்) அப்ரஹா

குர்ஆன் கூறுகிறது:(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1)

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்க விடவில்லையா? (105:2)

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3)

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4)

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5)

4. நபிக்கு அல்லாஹ் (பிரம்மா) எதிரிகளை நேர்வழிப்படுத்த துணைபுரிகிறான்.

5. இந்தியன் ராஜா அரேபியா செல்லவில்லை. மாறாக முஸ்லீம்கள் இந்தியா வந்தடைந்தனர்.

6. இறைத்தூதர் ஏகத்துவத்தை போதிப்பவர் நேர்வழிப் படுத்துபவர்.

7. இறைத்தூதர் விருத்த சேதனம் செய்தவர், தாடியை வைத்திருப்பவர்.

8. பாங்கு ஓசை எழுப்பி தொழுபவர்.

9. அனுமதிக்ப்பட்ட உணவை உண்பார், பன்றி இறைச்சி தடுக்கப்பட்டது.

குர்ஆன் கூறுகிறது,
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவை) ஆக்கிருக்கிறான் ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.(2:173)

(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் அம்புகள் மூலம் நீங்கள குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) (5:3)

நபியே!) நீர் கூறும் ''தானாக இறந்தவைகளையும், வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை"...(6:145)

நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும்...(16:115)

10. அநியாயத்தை எதிர்த்து மாற்றாருடன் போரிட தயங்க மாட்டார்கள்.

11. அவர்கள் முஸ்லீம்கள் ஆவர்.

12. அவர்கள் இறைச்சி உண்பர்

குர்ஆன் கூறுகிறது,
...உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன... (5:1)

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம் இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன் அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். (23:21)

பவிஷ்ய புராணம் பாகம் 3, காண்டம் 1, அத்தியாயம் 3 ஸ்லோகம் 21-23

அக்கிரமும் அநீதியும் ஏழு புனித நகரங்களில் தலைவிரித்தாடும் (காசி உள்ளிட்ட) இந்தியாவில் ரச்சாஸ், ஸாபர், பிஹ்ல் போன்ற மூடர்களின் பழக்க வழங்கங்களை மக்கள் பின்பற்றுவர். முஹம்மதுவைப் பின்பற்றும் முஸ்லீம்கள் மிகச் சிறந்த தைரியசாலிகள். முஸல்மான்களிடம் நல்ல குணநலன்கள் காணப்படும். கெட்ட தீய செயல்கள் ஆரியர்களின் பூமியில் ஒன்று திரட்டப்படும். இஸ்லாம் இந்தியாவையும் அதன் தீவுகளையும் ஆட்சி செய்யும். இவ்வுண்மைகளை அறிந்து கொண்ட ஓ முனியே! உமது இரட்சகனைப் புகழ்ந்து துதிப்பாயாக!

குர்ஆன் கூறுகிறது,
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்). (9:33)

முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (61:9)

அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான் சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது. (48:28)

பவிஷ்ய புராண 20-ம் நூல், அதர்வண வேதத்தில் 127வது காண்டம் இன்னும் சில அத்தியாயங்கள் குண்டப் அத்தியாயம் என அழைக்கப்படுகின்றன. குண்டப் என்றால் வறுமையில், துன்பத்தில், சுழல்பவனை நீக்குவது என பொருள் கொள்ளலாம். உலகின் மையப்பகுதியில் உள்ள ஒரு இடத்துடன் இச்செய்தி தொடர்பு உடையது. உம்முல் குர்ஆன் என அழைக்கப்பட்ட மக்காவை இது குறிக்கிறது.

(இதை) குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது,
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான் அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.(3:96)

மக்காவின் மற்றொரு பெயர் பக்கா.அநேக மொழி பெயர்ப்பாளர்கள் குண்டப் அத்தியாயத்தை மொழிபெயர்த்தனர். குறிப்பாக எம். ப்ளாம் பீல்டு, ரால்ப் க்ரிப்ட், பண்டிட் ராஜாராம், பண்டிட் கேம் கரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அதர்வண வேதம் 20-ம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13

சுலோகம் 1. அவர் நரசன்ஷா (புகழுக்குறியவர்) - முஹம்மது.
அவருக்கு 60090 எதிரிகள் இருந்தும் அவர் பாதுகாப்புடன் கூடிய ஒரு சாந்திமிகு தலைவராக இருப்பார்.

சுலோகம் 2. அவர் ஒட்டகத்தில் சவாரி செய்யும் ஒரு ரிஷியாவார் ''மம்ஹா"

சுலோகம் 3. அவர் ரிஷியாவார். அவருக்கு 100 தங்க நாணயங்களும் பத்து கழுத்து அணிகலன்களும் 300 நல்ல குதிரைகளும் பத்தாயிரம் பசுக்களும் வழங்கப்படும்.

சுலோகம் 4. அவர் இறைவனை துதிப்பவராய் இருப்பார்.

சுலோகம் 5. வணக்க வழிபாடுகளில் தீவிர முயற்சி எடுப்பார்.

சுலோகம் 6. அவருக்கு இறைவன் புறமிருந்து அநேக அருள் வளங்கள் உண்டு.

சுலோகம் 7. அவர் சிறந்த அரசர், மனிதர், மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.

சுலோகம் 8. அவரும் பாதுகாப்பில் இருப்பார். பிறருக்கும் பாதுகாப்பு வழங்குவார்.

சுலோகம் 9. உலக சாந்திக்கு உழைப்பார்.

சுலோகம் 10. அவரின் ஆட்சியில் மக்கள் வளமும், மகிழ்வும் பெறுவர். வறுமை அகன்று வளம் கொழிக்கும்.

சுலோகம் 11. அவர் அச்ச மூட்டி எச்சரிக்க தூண்டுவார்.

சுலோகம் 12. அவர் கொடைத் தன்மையும் தாராளமனமும் கொண்டவர்.

சுலோகம் 13. அவரைப் பின்பற்றுவோர் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகளிலிருந்து இறையருளால் பாதுகாப்பு பெற்று தம் தூதரையும் காத்தனர்.

சுலோகம் 14. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து தீய விளைவுகளில் இருந்தும் பாதுகாப்ப கோரினர்.

Friday, March 16, 2007

2. வேதங்களில் இறைக்கோட்பாடு

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.

யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்

குர்ஆன் கூறுகிறது:

...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)

ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.

குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.

குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.

ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.

(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)

குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)

ரிக் வேதம் (6:45:16)

''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.

இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்

''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!

ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.

மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)

இஸ்லாத்தில் மலக்குகள்
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக் கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.

உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு

இந்து மதத்தில் மலக்குகள்
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.

ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்

Thursday, March 15, 2007

1. இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு

இந்து மதம்
சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா (Encyclopedia) உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம் 74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார். ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.

ஹிந்துத்துவம் என்றால் என்ன?
ஹிந்துத்துவம் என்பது ''ஹிந்து" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து என்ற பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத நம்பிக்கை விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் (1830) முஸ்லிம்களல்லாத, கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக, உள்ள பிற மக்களை ஹிந்து என அழைத்தனர்.

மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது தவறு. ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை. எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும்.

ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக் கூறுவது எனக் கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர் ''வேதாந்திகள்" ஆவர்.

இஸ்லாம்-ஒர் அறிமுகம்
''ஸலாம்" எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால் சாந்தி அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்? யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.

இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்
இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில் உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின் நிறுவனர் முஹம்மது நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை நபியுமாவார்.

இந்துமத விசுவாசத்தின் தூண்கள்
இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்துத்துவத்தின் ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையறைகளோ என்று எதுவுமில்லை. ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளை, வணக்க வழிபாடுகளை இவ்வாறு புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு கட்டுக்கோப்பான பொதுவான நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு திருப்தி அளிக்கும் செயலை சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ, கட்டாயம் செய்யவேண்டியது, அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப் போய்விடுவார் என்ற கெடுபிடியோ எதுவும் இல்லை. ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற மத சடங்கு ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார், அதனால் இவர் இந்து அல்லாதவராக ஆகிவிட்டார் என கூறவியலாது. இருப்பினும் இந்துக்களிடம் பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம் இந்துக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.

இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை
ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர் 3 என்பர், சிலர் 33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி என்பர். கற்றறிந்த இந்து ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களை, புராணங்களை) இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனே. அவனே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப் பதிலளிப்பார்.

இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கும் உள்ள வேறுபாடுகள்
இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God’s எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் ’s ஆகும். இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் நம்புகிறான். ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் ’s) ’s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்

பகவத் கீதை 7:20
மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".

சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.

உபநிஷங்கள்:
உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப் பாருங்கள்.

1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்"

''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"

உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது

குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)

2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாகம்-15ல் பக்கம் 745)

குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்

Wednesday, March 14, 2007

"ஐயாயிரம் கொடுத்தால் இந்துவாயிடலாம்!"

மற்ற மதத்தினர் இந்து மதத்திற்கு எப்படி மாற முடியும் என்று கேள்விகள் எழும்போதெல்லாம் ஆர்ய சமாஜ் என்ற அமைப்பு அது போன்ற 'திருப்பணிகளை' செய்து வருவதாக இணைய இந்துத்துவாக்கள் கை காட்டுவார்கள். நண்பர் எழில் அவரது பதிவில் ஆர்ய சமாஜ் தளத்திற்கு இணைப்பு கூட கொடுத்திருக்கிறார். நேசக்குமாரும் ஆரியசமாஜம் முஸ்லிம்களை மதம் மாற்றியதாகவும் அப்படி மாறிய முஸ்லிம்கள் 'ஆரியசமாஜி' என்ற ஜாதியினராக இருந்ததாக அவரது பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஆர்ய சமாஜ் பற்றி ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த குளோரி சந்திரா. தனி தொகுதியான இங்கு இவர், ‘இந்து-பள்ளர்’ என்ற அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அப்போதே இவரது வெற்றியை எதிர்த்து பலதரப்பிலும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் இவரிடம் தேர்தலில் தோற்றுப் போன எதிர்தரப்பினர், "கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பினரான குளோரி சந்திரா, பொய்யான தகவல்களைக் கொடுத்து தேர்தல் கமிஷனையே ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்" என்று குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார்கள்.

எதிர் தரப்பினர் எடுத்து வைத்த ஆதாரங்களை மறுக்க முடியாத சந்திரா, ‘அடிப்படையில் கிறிஸ்டியனான நான், 1994 வது வருடமே மதுரையிலிருக்கும் ஆரிய சமாஜம் என்ற அமைப்பின் மூலமாக இந்துவாக மாறிவிட்டேன்’ என்று கோர்ட்டில் சொல்லி அதற்கான சான்றிதழையும் தாக்கல் செய்திருக்கிறார். சந்திராவின் இந்த வாக்குமூலம்தான் ஆர்ய சமாஜின் உண்மையான 'திருப்பணிகளை' வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சொல்கிறார், "பிப்ரவரி முதல் வாரத்துல சந்திரா குறிப்பிட்டுள்ள மதுரை ஆரிய சமாஜத்துக்குப் போனேன். அங்க ராஜேந்திரன்னு ஒருத்தர் இருந்தார். ‘சொந்தக்காரர் ஒருத்தர் இந்து மதத்துக்கு மாறுனது மாதிரி சான்றிதழ் வேணும்’னு கேட்டேன். உடனே, எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க சம்மதிச்சார். நான், ‘ஜெயபால் டேவிட்’ங்கிற பேரை ‘செல்லையா’ன்னு மாத்தணும்னு எழுதிக்கொடுத்தேன். ஜெயபால் டேவிட் நெல்லை பேராயர்னு கூட தெரியாம ஐயாயிரம் ரூபாய வாங்கிக்கிட்டு அஞ்சு நிமிஷத்துல அவர செல்லையாவாக்கிட்டாங்க. இவ்வளவுக்கும் பேராயரோட அட்ரஸைத்தான் கொடுத்தேன்.

அன்னிக்கு சாயந்தரமே காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் பேரை ‘பெருமாள்சாமி’ன்னு மாத்தணும்னு எழுதிக் கொடுத்தேன். 5.2.2007-ம் தேதியில இருந்து பீட்டர் அல்போன்ஸும், பெருமாள்சாமியாயிட்டார்! சான்றிதழ்ல சட்டமன்ற உறுப்பினர்ங்கிறதை சுருக்கி, ‘ச.ம.உ.’ ன்னு எதுவும் புரியாமலே எழுதிக்கொடுத்துட்டாங்க. இதுக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் செலவாச்சு. பணத்தைக் குடுத்து மதத்தை மாத்துற இந்த ரூட்டுலதான் சந்திராவும் போயிருக்கிறார்’’ என்றார் சண்முகம்.

இந்த விவகாரம் தொடர்பாக இப்போது ஆரிய சமாஜ நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப் போட்டிருக்கிறது போலீஸ். விளக்கமறிவதற்காக ஜூனியர் விகடன் நிருபர்கள் அங்கே சென்றபோது பதில் சொல்ல ஆள் இல்லாமல் பூட்டிக் கிடந்தது அந்த அலுவலகம்.

பீட்டர் அல்போன்ஸை அவருக்குத் தெரியாமலே இந்து மதத்துக்கு மாற்றியிருப்பது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டார்கள். "இதுபற்றி நானும் கேள்விப்பட்டேன். ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. மதத்தை வைத்து இந்த சமூகத்தில் எத்தகைய பித்தலாட்டங்கள் நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று. பெருமாள்சாமியாக இருப்பதில் இந்த பீட்டர் அல்போன்ஸுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் பணி செய்வதற்கு மதம் எனக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. ஆனால், மதத்தை வைத்து இப்படி மக்களை ஏமாற்றும் நபர்கள் அபாயமானவர்கள். இப்படியெல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு மதத்தை மாற்றிச் சான்றிதழ் கொடுப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் இதுபற்றி புகார் செய்யவிருக்கிறேன்..’’ என்று படபடத்தார். - நன்றி: ஜூனியர் விகடன்

ஆரிய சமாஜம் இதை உலகமெங்கும் செய்து வருவதாகவும், பஞ்சாபில் சுதந்திரத்துக்கு முன்பு பெருமளவில் முஸ்லிம்களை இந்துக்களாக ஆக்கியதாகவும் நேசக்குமார் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார். இவர்கள் இண்டர்நேஷனல் லெவலில் மதமாற்றம் என்ற பெயரில் காசு பார்க்கும் ஒரு கும்பல் என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'அங்கே 8000 பேர் மதம் மாறுனாங்க, இங்கே 10,000 பேர் மதம் மாறுனாங்க என்று நண்பர் எழில் அடிக்கடி தன் வலைப்பதிவில் எழுதுவார். 'இது'தான் அந்த மதமாற்றமா? உலகளாவிய அளவில் நல்லா கல்லா கட்டியிருப்பாங்க போலிருக்கே!

இந்த ஆரியசமாஜம் ஒரு சமூக சேவை இயக்கம் என்பது போலவும் இங்கு சிலர் நம் காதில் பூ சுற்றுகிறார்கள். இது அந்தக்காலத்திய இந்து மதவெறி அமைப்புகளுள் ஒன்றுதான். "ஆரிய சமாஜிகள் ஒன்று மற்ற மதத்தினருடன் சண்டை போடுவார்கள். இல்லாவிட்டால் தங்களுக்குள்ளாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்" என்று 1924-லேயே காந்திஜி சொன்னார். இதைத் தொடர்ந்து சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 'இந்து மதத்தை இழிவு படுத்தி இஸ்லாம் பக்கம் சாய்ந்து விட்டார் காந்திஜி' என்று சமாஜிகள் நாடெங்கும் பிரச்சாரம் செய்தார்கள். இது போன்ற பிரச்சாரங்களின் விளைவாகவே இறுதியில் காந்திஜி தனது உயிரையே இழக்க நேரிட்டது என்பது வரலாறு.

Thursday, February 08, 2007

நூற்றாண்டுகளை கடக்க மறுப்பவர்கள்!

கணவன் தன் மனைவியை எந்த முறைகளில் கண்டிக்கலாம்? எந்த சூழ்நிலையில் அடிக்கலாம்? அப்படி அடிப்பதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்பதை ஒரு இஸ்லாமிய அறிஞர் விளக்கும் வீடியோ காட்சி ஒன்றை எழில் அவர்கள் தனது வலைப்பதிவில் பதிந்து வைத்திருந்தார். அதே பதிவில் எம்.ஐ.டி-யில் இயற்பியல் பாடங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு வீடியோ காட்சியையும் பதிந்திருந்தார்.

அந்த பதிவில் அனானிமஸாக பின்னூட்டமிட்ட அவரது நண்பர் ஒருவர் இந்த இரண்டு வீடியோ காட்சிகளையும் ஒப்பிட்டு ஒரு பின்னூட்டமிட்டிருந்தார். அதில் அவர் சொல்கிறார், "இந்த எம். ஐ. டி காட்சிக்கும் அந்த அல் ஜசீரா காட்சிக்கும்தான் எத்தனை தூரம்? இரண்டு விடியோக்களில் பல நூற்றாண்டுகளை நாம் கடக்கிறோம், கடக்க மறுக்கும் சிலரை அவர் விருப்பப் படியே பின்னே விட்டு விட்டு."

குடும்பம் சீர்குலையாமல் இருப்பதற்காக பொறுப்பற்று இருக்கும் மனைவியை கண்டிப்பது பற்றி இஸ்லாம் சொல்லும் பரிந்துரையை, எம்.ஐ.டி-யில் உயர் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுவதோடு ஒப்பிட்டு, தாம் நூற்றாண்டுகளை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் மற்றவர்கள் அங்கேயே நின்று கொண்டிருப்பதாகவும் நம்பிக்கொண்டு மற்றவர்களையும் நம்பச் சொல்கிறார்கள் இவர்கள். பாவம்.. தன் நிலை என்னவென்பதை சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளப் பிடிக்காமல் மாற்றானை பழிப்பதில் தற்காலிக இன்பம் பெறும் பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.

உங்கள் ஓப்பீடு சரியல்ல நண்பர்களே! அது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்.

ஜூனியர் விகடன் 28-01-07 தேதி இதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. நாகப்பட்டினம் அருகே உள்ள மீனவ கிராமம் ஒன்றில் கடற்கரையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் ஒதுங்குகிறது. காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்தபோது ஆறுமுகம் என்பவர் தனது மூத்த மகன் ரவிச்சந்திரனுடன் வந்து, ‘இறந்து போனது எனது மகள் பரிமளாதான். அவளை நாங்கள்தான் கொலை செய்துவிட்டோம்’ என்கிறார்.

தந்தையே தனது மகளின் கையையும் காலையும் கட்டி நடுக்கடலில் தூக்கி எறிந்து கொன்றிருக்கிறார். இதில் இன்னொரு கொடுமை, இந்தக் கொலைக்கு அவர் தனது மகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டதுதான்!

இந்தக் கொடூர கொலைக்கு காரணம் என்ன? பரிமளாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் காதல் அரும்பியிருக்கிறது. ஆனால், இது அவரது குடும்பத்துக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், வினோத்தின் ஜாதி வேறு என்பதுதான்.

எழிலான நண்பர்களே, இந்த நிகழ்வு ஒரு சிறு உதாரணம் மட்டுமே! எம்.ஐ.டி-யின் தொழில் நுட்பத்தை கொஞ்ச நேரம் ஓரமாக வைத்து விட்டு, இந்த சமுதாய அவலத்தைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். சாதி வேறுபாடு ஒரு தந்தை தான் பெற்ற மகளையே கொலை செய்ய தூண்டுகிறது. இதை ஒப்பீடு செய்து பாருங்கள். 1500 ஆண்டுகளுக்கு முன் காட்டரபிகள் பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பார்களாம். அத்தகைய மடத்தனங்களுக்கு முடிவு கட்டிய இஸ்லாம் இன்று பல நூற்றாண்டுகளை கடந்து வந்து விட்டது. உங்கள் சமுதாயம் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய நீங்கள் எம்.ஐ.டி-யின் உயர் தொழில் நுட்பத்தில் உங்கள் பிரச்னைகளை மறைக்க அல்லது மறக்க முயல்கிறீர்கள்.

பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாமல் நீங்கள் simply sweeping them under the carpet! இந்த அணுகுமுறை பயன் தராது நண்பர்களே! மற்றவர்களிடம் என்ன பிரச்னை இருக்கிறது என்று தூண்டித்துருவி உலகின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்புவதாலும், உங்கள் பிரச்னை தீர்ந்து விடாது. Be brave and Face it! மாற்றாரின் குறைகளை மட்டும் ஆராய்ந்து கொண்டிருந்த எந்த சமுதாயமும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை!

இன்றைக்கு இஸ்லாத்தை பழித்து என்ன பதிவு போடலாம் என்று YouTube-ல் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து நான் மேலே சுட்டிக் காட்டிய ஜூனியர் விகடன் கட்டுரை போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். இது போன்ற சமுதாய கொடுமைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என்று ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.

பிராமணர் ஒருவரால் வளர்க்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறினார் என்பதை பற்றி சிந்தியுங்கள். இந்துவாக இருந்து பின் சீர்திருத்தவாதியாக மாறிய தந்தை பெரியாரின் கொள்கைகளை கொஞ்சம் நடுநிலையான கண்ணோட்டத்தில் சிந்தித்து பாருங்கள். அன்று மீனாட்சிபுர மக்கள் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதை யோசியுங்கள். இன்றும் நெல்லை ஆய்குடி மக்கள் ஏன் ''நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!'' என்று போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பதையும் யோசியுங்கள். நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் நண்பர்களே!

உங்கள் முன் இரண்டு choices இருக்கின்றன:

1. "எங்கள் சமுதாயத்தில் எந்த பிரச்னையும் இல்லை" என்று கண்ணை மூடிக் கொண்டு சாதிப்பது. இதைத்தான் உங்களில் பலர் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த அணுகுமுறையால் பலனேதும் இல்லை. கார்ப்பெட்டிற்கு அடியில் உள்ள குப்பை அப்படியேதான் இருக்கும்!

2. சமுதாய அவலங்களைப் பற்றி சிந்தித்து அவற்றிற்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிய முயல்வது.

The Choice is Yours! வாழ்த்துக்கள்!

Tuesday, February 06, 2007

HINDHU அவர்களின் பதில்!

எனது முந்திய பதிவுக்கு HINDHU அவர்கள் பதிலளித்திருக்கிறார்கள். அவருக்கு என் நன்றி.


அன்பு மரைக்காயர் ஐயா உங்களுக்கு எனது நன்றிகள் தாங்கள் நினைப்பது போல் எழில் ஐயா அவர்கள் இந்து மதம் பற்றி அதிகம் அறியாதவர் அல்ல சொல்லப்போனால் நான் தான் அதிகம்
அறியாதவனாய் இருக்க வேண்டும் ஏனென்றால் நான் ஒன்றும் அதிகம் கற்றவன் அல்ல எனக்கு இன்னும் இருபத்தி ஒரு வயது கூட பூர்த்தியாகவில்லை.
எழில் ஐயாவை நான் அறிந்தவனல்ல. ஆனால் இருபத்தி ஒரு வயதே நிரம்பிய உங்களின் எழுத்துக்களில் தெரியும் பெருந்தன்மையும் கண்ணியமும் எழில் அவர்களின் எழுத்துக்களில் தெரிவதில்லை. அதில் தெரிவதெல்லாம் இஸ்லாமிய துவேஷம், காழ்ப்புணர்வு, வெறுப்பு மட்டுமே! குறை குடம் தளும்பத்தானே செய்யும்!


என்வகையில் சொல்லப்போனால் எழில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை கொஞ்சம் எளிய நடையில் சொன்னதாகவே படுகிறது. எனக்கு என்ன வருத்தம் என்னவென்றால் தாங்கள் இந்து
மதத்தினது உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் தவறான அபிப்பிராயத்துடன் விமர்சிக்க முற்படுவதே ஆகும்.

இஸ்லாம் மார்க்கத்தின் உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் தவறான அபிப்ராயத்துடன் எழில் விதண்டாவாதம் செய்ததால்தான் நான் இந்து மதத்தை விமர்சிக்க நேர்ந்தது. இன்னொரு மார்க்கத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் எழிலுக்கு தனது மதத்தைப் பற்றிய கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்க ஏன் முடியவில்லை? அவரது கருத்துப்படி ஒரு இஸ்லாமிய கொள்கை தவறானது என்றால் அதற்கு எழிலின் இந்து மதம் என்ன தீர்வு வைத்திருக்கிறது? 'இது தவறு' என்று சொல்ல முடிந்தவர் 'எது சரி?' என்பதையும் சொல்ல வேண்டும்தானே?



//எனது பதிவுகள் சில நேரங்களில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இஸ்லாமிய துவேஷ பதிவுகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அவற்றுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.//

எனக்கு எந்த மனவருத்தமும் கிடையாது ஆனால் தாங்களும், தங்களைப் போன்றவர்களும் இந்து மதத்தைப்பற்றி செய்யப்படும் விமர்சனங்கள் தவறான கருத்துப் புரிதல்களுடன் மேற் கொள்ளப்படுவதால் தான் நான் வருந்துகிறேன். தங்களின் மீதான மதத் துவேஷப்பதிவுகளுக்கு தாங்கள் அவரவர்களைத்தான் சாட வேண்டுமே ஒழிய இந்துமதத்தை அல்ல. அவர்கள் தவறாக விமர்சித்தால் தாங்களும் அவர்களைப்போலவே செய்ய வேண்டுமா என்ன?
இஸ்லாமிய கொள்கைகள் தவறு என்று சொன்ன எழில் அவர்கள் முஸ்லிம்களை இந்து மதத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இப்படி அழைப்பு விடுப்பதில் ஒரு தவறுமில்லை. ஆனால் இந்து மதத்திற்கு அழைத்த நண்பர் 'எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?' என்று நாம் கேட்டால் தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டாமா? ஆனால் அந்தக் கேள்விகள் உங்களைப் போன்றவர்களுக்கு நான் இந்து மதத்தை சாடுவது போல தெரிகின்றன. 'இந்து மதம் பற்றி இது போல கேள்விகள் எழுவதற்கு நான்தான் காரணம்' என்று பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய எழில் அவர்கள், இப்போது விலகி ஓடுகிறார்.


தாங்கள் சொல்வதைப்போல் பல இஸ்லாமியர்களின் பதிவுகள் இந்துமதத்தை கேவலப்படுத்துவதாக காணப்படுகின்றன நான் அவற்றிற்கும் மறுத்து பதிவெழுத வேண்டும். தாங்கள் எனக்கும்
இஸ்லாமிய துவேஷம் என்று கருத வேண்டாம். ஏனென்றால் இந்து மதமெனது தாய் எனது தாயின் குணங்கள் எனக்குத்தான் தெரியும் அக்குணங்களை அயல் வீட்டுக்காரர் தவறான புரிதல்களுடன் விமர்சிக்க முற்படுவாராயின் அது தவறானது என்று விளக்கும் கடமையும், அதேநேரம் அயல் வீட்டுக்காரரின் தாயை பழிக்கும் படியாக அமையக்கூடாது என்ற பொறுப்பும், கண்ணியமும் எனக்கு இருக்கிறது.

'இந்து மதமெனது தாய்' என்கிற உங்கள் மதப்பற்றை மதிக்கிறேன். இந்து மதத்தைப் பற்றி நன்கு புரிதலுள்ள உங்களைப் போன்றவர்கள் அதிகம் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். இஸ்லாமியர்கள் யாரேனும் அனாவசியமாக இந்து மதத்தை கேவலப்படுத்தி எழுதினார்களென்றால் அது கண்டிக்கத் தக்கது. என்னுடையை பதிவுகளிலேயே கூட சில முஸ்லிம் சகோதரர்கள் என்னை கண்டித்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் பிற மத கடவுள்களை நிந்திக்க வேண்டாம் என்று இஸ்லாம் கட்டளையிட்டிருக்கிறது. பிற மதங்களின் விஷயத்தில் வரம்பு மீற வேண்டாம் என்றும் எச்சரிக்கிறது. இஸ்லாம் பற்றி எடுத்துச் சொல்வதுதான் ஒரு முஸ்லிமின் கடமை.

ஆனால் ஒரு முஸ்லிம் பதிவரை மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதைப் போல எழில், நேசகுமார் போன்றவர்களை பிற இந்துக்கள் கண்டிப்பதை நான் பார்க்கவில்லை. 'நமக்கேன் வம்பு' என்று மற்ற இந்துக்கள் பேசாமல் இருப்பதை எழில் போன்றவர்கள் மவுன அங்கீகாரமாக, ஆதரவாக எடுத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், உங்களைப்போல இந்துமத பற்றாளர்கள் எழில் போன்றவர்கள் வீண்வம்பை விலைக்கு வாங்கும்போது மவுனமாக இருக்காமல் கண்டிக்க முன்வர வேண்டும்.

ஆனால் இஸ்லாம் பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பதிவர்கள் தவறான விமர்சனங்களை முன்வைப்பதை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள் நான் முன்பு சொன்னது போல தங்கள் மதங்களின் மீது நம்பிக்கை இழந்தவர்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால் மட்டும்தான் தனது மதத்தை கொஞ்சமாவது காப்பாற்ற முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாத்தின் கொள்கைகள் தவறு என்று சொல்லத் தெரிந்த இவர்களுக்கு அதற்கு மாற்றுக் கருத்து அவர்களின் மதத்தில் இருக்கிறதா என்றால் பதில் சொல்லத் தெரியாது.

இந்த இஸ்லாமிய துவேஷ பதிவர்களுக்கு பல முஸ்லிம் பதிவர்கள் தெளிவாக பலமுறை விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர்களின் துவேஷ மனங்கள் சமாதானமடையாது. மேலும் மேலும் கேள்விகள், நக்கல் வசனங்கள், துவேஷ வலைப்பக்கங்களிலிருந்து copy & Paste-கள், வரலாற்றுப் புரட்டுகள் என பல வகை தாக்குதல்களை முஸ்லிம்கள் சந்தித்திருக்கிறார்கள். அதனால்தான் நான் எதிர்க்கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். 'இஸ்லாமிய கொள்கை தவறு என்றால் அதற்கு உங்கள் மதத்தில் மாற்றுக் கருத்து என்ன இருக்கிறது? ஆதாரத்துடன் விளக்க முடியுமா? இஸ்லாமிய கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கு முன் உங்கள் மதத்தில் உள்ள கேவலமான கொள்கைகளை சீர்திருத்தி முடித்து விட்டீர்களா?' இதைத்தான் நான் கேட்கிறேன்.


இஸ்லாம் மீது தவறான கருத்துக்கள் தெறிவிக்கப்படுமாயின் தாங்கள் மறுக்கலாம், ஆனால் அவை மிகவும் கீழ்தரமான சொற்பிரயோகங்களால் மேற்கொள்ளப்படக்கூடாது தங்களின்
பதிவுகளில் இது இல்லை ஆனாலும் வேறும் பலரின் பதிவுகளில் காணப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் முறையான கருத்துப் பகிர்வுக்கு வழிவகுக்காது மாறாக வன்முறையையே வளர்க்கும்.
கீழ்த்தரமான சொற்பிரயோகங்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் என்னை எதிர்ப்பவர்கள் இதற்கு எதிர்மாறான நம்பிக்கையில் இருக்கிறார்கள். எனக்கு வரும் பல பின்னூட்டங்களை நான் அனுமதிப்பதில்லை. அதையெல்லாம் பார்த்தீர்களென்றால் வன்முறையை யார் வளர்க்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

தாங்கள் ஒருபதிவில் "நாலு பதிவெழுதியும் இதுதான் இந்துமதம் என்று தெரிவிக்க முடியவில்லை" என்று கூறியிருந்தீர்கள் நாலு பதிவில்லை நாலாயிரம் கோடி பதிவெழுதினாலும் இந்துமதத்தின் பேருண்மைகளை எளிதில் விளக்கி விட முடியாது.
உண்மைதான். இதை நான் ஒப்புக் கொள்கிறேன். இஸ்லாத்தின் பேருண்மைகளைப் பற்றி ஓரிரு பதிவுகளை படித்துவிட்டு மட்டும் முடிவு செய்ய முடியாது என்பதையும் தங்களின் அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு இஸ்லாத்தைப் பற்றி 'அது சரியல்ல, இது தவறு' என்றெல்லாம் 'கருத்து' சொல்வது அடிமுட்டாள்தனம் என்பதையும் எழில் போன்றவர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் நான் அப்படி சொல்லியிருந்தேன்.

நான்கூட பதிவை தொடங்கும் போது எந்த மதத்தையும் விமர்சிக்க கூடாது என்றும், எனது பதிவு முற்றிலுமாக இந்துமதத்தை விளக்க மட்டுமே பயன் பட வேண்டும் என்றும் தான் கருதினேன். ஆனால் இன்று தங்களின் பதிவுகளுக்கு எதிர்ப்பதிவு எழுதும் நிலைக்கு வந்துவிட்டது. அத்துடன் தங்களின் ஏனைய இந்துமதம் பற்றிய பதிவுகளுக்கு என்னிடம் இருந்து எதிர்ப்பதிவு வந்தே தீரும். ஆயினும் நமது கருத்துக்களே மோதவேண்டும், தவிர நாம் அல்ல என்பதையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் சொல்வதைப்போல் நானும் இந்துமதம் பற்றிய தவறான கருத்துக்களை தாங்கி வரும் பதிவுகளுக்கு என்னிடம் இருந்தும் எதிர்ப்பதிவு வரும் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். என்வகையில் தங்கள் கருத்துக்களே எனக்கு எதிர் என்பதையும் தாங்கள் அல்ல என்பதையும், தாங்களும் இப்படியே கருத வேண்டும் என்றும் கருதுகிறேன்.நன்றி

தாராளமாக எழுதுங்கள். உங்களைப் போல இந்து மதப் பற்றாளர்கள் இந்து மதத்தை பற்றி அதிகம் எழுத வேண்டும் என்பதைத்தான் நானும் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் இந்து மதத்தைப் பற்றி எழுதுவதால் எழில் போன்றவர்கள் பொறுப்பிலிருந்து விலகி விட்டதாக பொருளல்ல. அவர் இஸ்லாத்தை பற்றி சொன்ன கருத்துகளுக்கு பதிலாகத்தான் நான் இந்து மதத்தைப் பற்றிய கேள்விகளை அவர் முன் வைத்தேன். அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.

Friday, February 02, 2007

HINDHU அவர்களுக்கு!

எழில் என்பவரிடம் இந்துமதம் பற்றி நான் கேட்ட சில கேள்விகளுக்கு HINDHU என்ற நண்பர் பதிலளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். இந்து மதம் பற்றி நன்கு புரிதலுள்ள இவரைப் போன்றவர்கள் அதிகம் எழுத வேண்டும் என்றும் விரும்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் HINDHU அவர்களே!

//அன்பு மரைக்காயர் ஐயார் அவர்களே தாங்கள் இந்துமதம் பற்றி கொண்டிருக்கும் கருத்து தவறானது. தாங்கள் எழில் ஐயா அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு விடையளிக்கிறேன் இந்துமதத்தை பற்றி விளக்கவேண்டியது ஒரு இந்துவின் கடமை..// என்று HINDHU அவர்கள் தம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஐயா, நான் வெளிப்படையாக சொல்கிறேன். எனது பதிவுகள் எல்லாமே ஒரு வகையில் 'பின் வினை' பதிவுகள்தான். இங்கு சில வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். தங்களை இந்து மத காவலர்கள் போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் இந்து மதத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. அவர்களின் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போற பாதை கோணலாயிருக்கு என்று குறை சொன்னானாம். அந்த கதைதான் இவர்களின் கதை!!

TATA நிறுவனம் Corus-ஐ வாங்கியதை சொல்லும் பதிவாக இருந்தாலும் அதிலும் முஸ்லிம்களை தாக்க வேண்டும் இவர்களுக்கு. இந்துத்துவ பயங்கரவாதி பால்தாக்கரேயை கண்டிக்கும் பதிவாக இருந்தாலும் அதிலும் முஸ்லிம்களை தாக்குவார்கள். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. முஸ்லிம்களுக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்ற நல்லெண்ணம் போலிருக்கு இவர்களுக்கு!

இப்படிப்பட்ட பதிவர்களுக்கு பதில் சொல்வதற்காகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். இஸ்லாத்தைப் பற்றியோ, முஸ்லிம்களைப் பற்றியோ குறை சொல்லி பதிவு எழுத இவர்களுக்கெல்லாம் எந்த அருகதையும் கிடையாது என்பதை சுட்டிக் காட்டுவதுதான் எனது பதிவுகளின் நோக்கம்.

எனது பதிவுகள் சில நேரங்களில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இஸ்லாமிய துவேஷ பதிவுகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அவற்றுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட பதிவர்களில் ஒருவர்தான் நம் எழில். இந்து மதத்தைப் பற்றிய எனது கேள்விகளே உங்களுக்கெல்லாம் வருத்தம் அளிக்கிறது என்றால், இஸ்லாம் பற்றி எழில் சொன்ன கருத்துக்களை என்னவென்று சொல்வது? இதையெல்லாம் முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? //“இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.”// என்று சொன்னவர் எழில். இதை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இதற்குகூட பல முஸ்லிம் பதிவர்கள் கோபப்படாமல் தெளிவாக பதிலளித்தபிறகும் 'கேஜி படிக்கும் குழந்தைக்குக் கூட புரியும் அளவுக்கு ஒரு அடையாளம் இருப்பவர்தான் இறைத்தூதராக இருக்க முடியும்' என்று விதண்டாவாதம் செய்தவர்தான் இந்த எழில். தான் ரொம்ப லாஜிக்கலாக பேசுவதாக அவருக்கு எண்ணம் போலிருக்கிறது.

இன்னொரு மதத்தைப் பற்றி இப்படி expert opinion கொடுக்கக்கூடிய ஒரு நபர் தனது சொந்த மதத்தை பற்றி அக்குவேறு ஆணிவேறாக தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? 'இந்து மதம் வாருங்கள்' என்று முஸ்லிம்களை அழைத்துகூட ஒரு பதிவு எழுதினார் இவர். ஆனால் இந்து மதம் பற்றி நான் இவரிடம் கேட்ட கேள்விகளுக்கு இவரால் பதில் சொல்ல முடிந்ததா என்றால் இல்லை. இவரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு HINDHU ஐயா நீங்கள் வந்து பதில் சொல்ல வேண்டியதாகி விட்டது. எனக்கு எழில் பதில் சொல்வார், இறைத்தூதர்கள் விஷயத்தில் இவர் கேட்ட 'லாஜிக்கலான' கேள்விகளை நானும் கேட்கலாம் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவரால் பதில் சொல்ல முடியவில்லையே? சட்டியில் ஒன்றும் இல்லையா? அகப்பை காலியாகவே வருகிறதே? இந்த காலி அகப்பையை வைத்துக் கொண்டுதானா இவர் இஸ்லாமை கிண்ட வந்தார்?

'இந்து மதம் வாருங்கள்' என்ற இவரது பதிவே கூட இவர் எழுதியது அல்ல. யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததைத்தான் இவர் தனது பதிவில் இட்டிருந்தார். தனது சொந்த மதத்தைப் பற்றி நல்லதாக நாலு வார்த்தை சொல்ல முடியாத, அது பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூட வக்கில்லாத இந்த நபர் இன்னொரு மதத்தைப் பற்றி கருத்து சொல்ல என்ன அருகதை இருக்கிறது? இவரைப் போன்றவர்களால் இவர் சார்ந்திருக்கும் இந்து மதத்திற்குத்தான் இழுக்கு!

இவர்களது நடவடிக்கைகள் வெளிப்படுத்தும் உண்மை என்ன தெரியுமா? 'நம் இந்து மதத்தில் உயர்வாக பேச ஒன்னுமேயில்லை. நாம் எப்பாடு பட்டாலும் அதை தூக்கி நிறுத்த முடியாது. அதனால் இஸ்லாமை தாக்கி அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால்தான் நம் மதத்தை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும்' என்று இவர்கள் உள்மனதில் நம்புகிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மதத்தின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை இழந்து போயிருக்கிறார்கள் இவர்கள் பாவம். HINDHU ஐயா போன்றவர்கள் எழில் போன்றவர்களிடம் மிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். போலிச்சாமியார்கள் போன்ற போலி ஆ'சாமி'கள் இவர்கள். இவர்களால்தான் இந்து மதத்திற்கே களங்கம் ஏற்படுகிறது.

HINDHU அவர்களின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ச.திருமலை அண்ணன் அவர்கள் //மரக்காயர் குரங்கு பிடிக்கக் கிளம்பியதில் எங்களுக்கு எல்லாம் இன்னொரு பிள்ளையார் கிடைத்திருக்கிறார்// என்று குறிப்பிட்டிருந்தார். திருமலை அண்ணன் அவர்கள் பிள்ளையார் பக்தராக இருக்கலாம். அதற்காக அனுமாரை கிண்டலடித்திருக்க வேண்டியதில்லை. :-)

திருமலை ஐயா, 'இதுவரை பிடிக்கக் கருதியது நன்றாகவே பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இனி, பிடிக்கக் கருதுவதும் நன்றாகவே பிடிக்கப் படும்!'

Wednesday, January 31, 2007

''நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!''

"நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!" இப்படிச் சொல்வது தலித் மக்கள் அல்ல. வாணியச் செட்டியார் சமுதாய மக்கள்தான் இப்படிச் சொல்கிறார்கள். அதோடு நிற்காமல், முஸ்லிம் அமைப்புக்களயும் அவர்கள் பார்த்துப் பேசவே, ஆடிப்போய் இருக்கிறது நெல்லை மாவட்ட நிர்வாகம். மத மாற்றத்தின் மூலம் பிரபலமான மீனாட்சிபுரம் பக்கம் உள்ள ஆய்குடியில்தான், இப்படியொரு பகீர் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

நெல்ல மாவட்டம் தென்காசிப் பக்கம் இருக்கிறது, ஆய்குடி. இங்கு சேனைத் தலைவர் சமுதாயத்தினர் மெஜாரிட்டியாய் வாழ்கிறார்கள். சுமார் 1500 குடும்பத்தினர் இருக்கிறார்கள். வாணியச் செட்டியார் சமூகத்தினர் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். தற்போது இந்த வாணியச் செட்டியார் சமுதாயத்தினர்தான் 'முஸ்லிம்களாய் மதம் மாறப்போகிறோம்' என்று போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். இந்த விஷயம் நமது கவனத்திற்கு வர, ஆய்குடிக்குச் சென்றோம். வாணியச் செட்டியார் சமுதாயத் தலைவர் சிதம்பரம் செட்டியாரச் சந்தித்தோம்.

"ஆய்குடியில் மைனாரிட்டியாய் வாழும் எங்க சமுதாயத்தினர் அனவருமே, முஸ்லிம்களாய் மாறப்போகிறோம். இதற்காக ஊர்க்கூட்டம் போட்டுப் பேசினோம். பெண்கள் உள்பட அனைவருமே முஸ்லிம்களாய் மாறச் சம்மதித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக யாரும் கோயிலுக்குச் செல்வதில்ல!" என்றவரிடம், 'அதற்கான காரணம் என்ன?' என்று கேட்டோம்.

மனிதர் கொதித்துப்போய் பேசினார். ''எங்க ஊர்ல அற்புதமான முருகன்கோயில் இருக்கு. திருச்செந்தூருக்கு அடுத்து எங்க ஊர் முருகன் கோயிலில்தான் சூரசம்காரம் மிகவும் பிரமாண்டமாய் நடக்கும். சுத்துப்பட்டு கிராமங்களிலிருந் பல்லாயிரக்கணக்கானோர் அதைப் பார்க்க வருவார்கள். ஊருக்குள் உள்ள சிவன் கோயில் மைதானத்தில்தான் சூரசம்காரம் நடக்கும். மொத்தம் ஏழு நாட்கள் நடைபெறும் அந்தத் திருவிழாவில், இரண்டாம் நாள் மண்டகப்படி எங்க வாணியச் செட்டியார் சமுதாயத்தினருக்கு. அந்தக் காலத்தில் எங்க ஊர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்தது. எனவே, இந்த சிவன்கோயில் தற்போது சுசீந்திரம் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. சிவன்கோயில் மைதானத்தில் நாங்க பிள்ளயார் சிலைய வக்க முடிவு செய்தோம். இதற்காக சுசீந்திரம் சென்று தேவசம்போர்டு அதிகாரிகள சந்தித்துப் பேசி அனுமதி வாங்கினோம். இதனைத் தொடர்ந்து சிவன்கோயில் மைதானத்தில் கடந்த ஆண்டில் நாங்கள் ஒரு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தோம். இரண்டரை அடி உயர கற்சில அது. இந்தப் பிள்ளையார் சிலைதான் பிரச்னைக்குப் பிள்ளயார் சுழி போட்டது. எங்க சமுதாயத்தினர் மட்டுமல்ல, சர்வ சமுதாயத்தினரும் பிள்ளையாரை வணங்கிச் செல்வார்கள். இது எங்க ஊரில் உள்ள மெஜாரிட்டி சமுதாயமான சேனைத் தலவர் சமுதாயத்தினருக்குப் பிடிக்கவில்ல. எனவே, பிள்ளயார்கோயிலை அகற்ற வேண்டும் என்று பெட்டிஷன் மேல் பெட்டிஷன் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ஆனால், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல. எனவே, சேனைத் தலவர் சமுதாயத்தினர் கூடிப்பேசி பிள்ளயார் சிலையை அகற்ற என்ன வழி என்று யோசித்திருக்கிறார்கள். அதன் விளவாக, கடந்த 13-ம் தேதி அவர்கள், எங்கள் பிள்ளையார் சிலைப் பக்கம் இரவோடு இரவாக ஒரு பீடம் அமைத்து, சுடலைமாடன் சிலயை வைத்து விட்டார்கள். இது குறித்த நாங்கள் போலீஸில் புகார் செய்தோம். இதனத் தொடர்ந்து தென்காசி உதவி கலெக்டர் ரமண சரஸ்வதி தலமையில் அதிகாரிகள் வந்தார்கள். சுடலைமாடன் சிலையை அகற்றுமாறு சேனைத் தலவர் சமுதாயத்தினரிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், 'பிள்ளயார் சிலையை அகற்றினால்தான் சுடலைமாடன் சிலையை அகற்றுவோம்' என்று சொல்லி, பிரச்னையை ஊதிப் பெரிதாக்கினார்கள். இதனைக் கேட்டுக் கடுப்பான அதிகாரிகள், சட்டென இரண்டு சிலைகளயும் எடுத்து விட்டார்கள். பீடத்தையும் இடித்து விட்டார்கள்!'' என்று நடந்த கதையைச் சொன்னவர், ''இந்து சமுதாயத்தினரே இந்துக் கோயிலை இடிக்க வைத்தது எவ்வளவு பெரிய அநியாயம்? இனிமேல் நாங்கள் எங்கே போய் சாமி கும்பிடுவது? எனவேதான், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தீர்மானித்தோம்!'' என்றார் ஆவேசமாய்.

கவுன்சிலர் அய்யப்பன் கூறும்போத, ''மெஜாரிட்டி இந்துக்களே எங்களத் தீண்டத்தகாதவங்களாகப் பார்க்குறாங்க. பிளளயார் சிலையை எடுத்ததற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிச்சதனால, சேனைத் தலைவர் சமுதாயத்தினர் எங்கள் மீது சில தடைகைள விதிச்சிருக்காங்க. குறிப்பா, எங்களுக்கு வெற்றிலை கொடிக்காலில் வேலை மறுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் சமுதாயத்தச் சேர்ந்தவங்க டீககடகளில் யாரும் டீ குடிக்கக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. சொல்லப் போனா, எங்கள அடக்கி ஆளப் பார்க்கிறாங்க. பிள்ளயார் சிலய மறுபடியும் அதே இடத்தில் வக்க வேண்டும் என்று கோரி கலெக்டரச் சந்தித்தோம். அவரோ, எங்க மனுவ வாங்கிக் குப்பையில் போட்டு விட்டார். அதன் பிறகு முதல்வருக்கு மனு அனுப்பினோம். அதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்த மாதம் 4ம் தேதி வருஷாபிஷேகம் நடத்த வேண்டும். அதற்குள் பிள்ளயார் சிலை அதே இடத்தில் இருக்கணும். இல்லாவிட்டால் மறுநாளே ஊரில் உள்ள 1500 தலக்கட்டுகளும் முஸ்லிமாய் மாறிவிடுவோம். சிவன்கோயில் பக்கத்தில் எங்க சமுதாயத்திற்குச் சொந்த இடம் இருக்கிறது. அங்கே மசூதி கட்டுவோம்!'' என்றார்.

இதே ஊரச் சேர்ந்த பரமசிவன் ஒரு தீவிர பக்திமான். கடந்த 12 வருடங்களாக சென்னயில் இருந்து திருப்பதிக்குப் பாதயாத்திர சென்று வந்து கொண்டிருக்கிறார். பச்ச வேஷ்டி அணிந்து கழுத்தில் ருத்திராட்ச மாரல, நெற்றி நிறய சந்தனம், விபூதியுடன் காட்சியளித்தார். அவர் கூறும்போது, ''எங்க ஊர்ல நாங்க வச்ச சாமியக் கும்பிட முடியலேன்னா, நாங்க வாழ்ந்து என்ன பயன்? இதுக்கு நல்ல முடிவு தெரியலேன்னா நானும் வேஷததக் கலைச்சிடுவன்னு முடிவு செஞ்சுட்டேன்!'' என்றார்.

ஆண்கள்தான் இப்படி ஆவேசப்பட்டார்கள் என்றால், பெண்கள் அதைவிடவும் கோபமாகப் பேசினார்கள். முத்துலெட்சுமி, மகாலெட்சுமி ஆகிய இருவரும் நம்மிடம், ''கடந்த 3_ம் தேதி திருவாதிரர திருவிழா நடபெற்றது. எங்க சாமய நாங்க கும்பிட முடியலேன்னா, அந்த மததத்ல இருந்து என்ன பயன்? எனவே, எங்க ஊர்ப் பெரியவங்க முடிவுப்படி முஸ்லிமா மாறத்தயாராயிட்டோம்'' என்றனர் ஆவேசமாக. இவர்கள், 'முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்' என்று சொன்னதோடு நிற்கவில்ல. அதற்குச் செயல்வடிவம் கொடுக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதுபற்றி ஊர்த்தலைவர் சிதம்பரம் செட்டியார் கூறும்போது, ''பிள்ளயார் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் பிரயோஜனம் இல்லை. எனவே, ஊர்க் கூட்டம் போட்டு மேல் நடவடிக்யாக என்ன செய்யலாம் என்று மக்களிடம் கேட்டோம். 'நம்மை மதிக்காத மதத்தில் இருந்த என்ன பயன்?' என்றே அனவரும் சொன்னார்கள். அப்போ, அதற்கு என்ன வழி என்று மக்களயே கேட்டோம். அதற்கு அவர்கள் 'பேசாம மதம் மாறிவிடுவோம்' என்று கூறினார்கள். முஸ்லிம் மதம்தான் நமக்குப் பாதுகாப்பு என்றும் அவர்கள் சொன்னார்கள். இதனத் தொடர்ந்தே தென்காசியில் உள்ள கனிபாய் என்பவரிடம் பேசினோம். அவர் பாளயங்கோட்டயில் உள்ள ஓர் அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கே இருந்தவர்களிடம் 'வாணியச் செட்டியார் சமுதாயத்தச் சேர்ந்த நாங்க ஒட்டுமொத்தமா முஸ்லிம்களா மாறத் தீர்மானிச்சிருக்கிறோம்' என்று சொன்னோம். அதற்கு அவங்க, 'அதில் ஒண்ணும் பிரச்ன இல்ல. ஆனா எதுக்கும் நீங்க ஊருக்குப் போய் நிதானமா இன்னும் ஒரு தடவ யோசிச்சிட்டு வாங்க'ன்னு சொன்னாங்க. இதுல என்னத்தை யோசிக்கிறது? வரும் 4_ம்தேதி சில வரலேன்னா 5_ம் தேதி மதம் மாறுவதைத் தவிர வேறு வழியில்ல. இது நாங்களா எடுத்த முடிவுதானே தவிர, வேறு யார் தூண்டுதலிலும் எடுக்கவில்லை!'' என்றார் அவர்.

வாணியச் செட்டியார் சமுதாயத்தினரின் இந்தத் திடீர் முடிவு பற்றி மாற்றுச் சமுதாயமான சேனைத் தலவர் சமுதாயத்தினர் என்ன சொல்கிறார்கள்? அந்தச் சமுதாயத்தின் ஊர் நாட்டாண்மை அருணாசல முதலியாரைச் சந்தித்தோம்.

''அவங்க முஸ்லிமாவெல்லாம் மாற மாட்டாங்க. இது ஒரு மிரட்டல். அவ்வளவுதான். தவிர, பிள்ளயார் சிலையை அகற்றியது நாங்கள் அல்ல. அது பேரூராட்சிக்குச் சொந்தமான இடம். எனவே, ஆக்கிரமித்து வக்கப்பட்டிருந்த பிள்ளயார் சிலையை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியிருக்கிறது. பிள்ளயார் சில மட்டுமல்ல, நாங்க வச்ச சுடலமாடன் சில மற்றும் எட்டுக் கடைகளையும் கூட இடித்துத் தள்ளியிருக்கிறது பேரூராட்சி. ஆனா, இந்த ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்குக் காரணம் எங்க சமுதாயம்தான்னு தவறா நினச்சிக்கிட்டு இருக்காங்க. மற்றபடி நாங்க மெஜாரிட்டி சமுதாயம்ங்கிற உண்மைதான். அவங்களை அடக்கி ஆளணுமுன்னுல்லாம் நாங்க நினச்சதே கிடயாது!'' என்றார் அவர்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 21.01.07

==================
பின் குறிப்பு: இரு இந்து சமுதாயங்கள் தங்களுக்கிடையில் இருக்கும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதற்காக இஸ்லாத்தை பகடைக் காயாக பயன்படுத்துவதாகத்தான் இது தெரிகிறது. இது சரியான அணுகுமுறையாக தெரியவில்லை. சமூக விரோத சக்திகள் 'இந்த பிரச்னைக்கெல்லாம் முஸ்லிம்கள்தான் காரணம்' என்று திசை திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. 4-ம் தேதி சிலை வரலேன்னா 5-ம் தேதி முஸ்லிமா மாறுனவங்க 6-ம் தேதி சிலை வந்துடுச்சுன்னா என்ன செய்வாங்க என்பதையும் யோசிக்க வேண்டும்.

அப்படி இல்லாமல், இஸ்லாத்தின் அடிப்படைகளை அறிந்து கொண்டு, தங்கள் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு இஸ்லாத்தில் விடிவு பிறக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடு முஸ்லிம்களாக மாறுவதே எல்லாத் தரப்பினருக்கும் நல்லது. - மரைக்காயர்

Thursday, January 25, 2007

அம்பேத்காரும் இந்துவா?

"மநுஸ்மிருதி மற்றும் அதைப்போன்ற பிற நூல்களில், மிகவும் கீழ்த்தரமாகக் காணப்படும் கருத்துகள், மிக மோசமான வகையில் மனித உரிமைகளை மீறுவதாக இருக்கின்றன. எனவே, இம்மாநாடு மிக அழுத்தந்திருத்தமாக இதைக் கண்டிப்பதுடன் - அதன் ஒரு வெளிப்பாடாக, மநுஸ்மிருதியை எரிப்பது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.''

- 25.12.1927 அன்று மகத் மாநாட்டில், டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த தீர்மானம்

புரட்சியாளர் அம்பேத்கர் மநுஸ்மிருதியை எரித்த (25.12.1927) 80ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இந்து பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் மூட்டிய தீ, நாடெங்கும் பற்றி எரிய வேண்டிய தேவையை, எவரும் எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. சமத்துவத்திற்கானப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியே மநுஸ்மிருதி எரிப்பு. ‘மநுஸ்மிருதிகள் வழக்கொழிந்து விட்டன; இதை எரிப்பதன் மூலம் அம்பேத்கர் ஏன் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?' என்று அன்றே கேட்கப்பட்டது. இன்றும் இதுபோன்று கேள்வி எழுப்புகின்றவர்களுக்கும் சேர்த்து அம்பேத்கர் தெளிவாக பதிலளித்துள்ளார் : "இந்துக்கள் மநுஸ்மிருதியைப் பின்பற்றுவதால்தான், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் வன்கொடுமைகளை இழைக்கின்றனர். அது, வழக்கொழிந்துவிட்ட ஒரு நூல் என்பது உண்மை எனில், அதை யாராவது எரித்தால், அதற்கு இந்துக்கள் ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? இதை எரிப்பதால் என்ன கிடைக்கும் என்று கேட்கிறார்கள். காந்தி, அயல்நாட்டுத் துணிகளை எரித்ததால் என்ன கிடைத்தது? நியுயார்க்கில் மிஸ் மேயோ எழுதிய ‘அன்னை இந்தியா' என்ற நூலை எரித்ததால் என்ன சாதித்தார்கள்? அரசியல் சீர்திருத்தத்தை வலியுறுத்திய சைமன் குழுவைப் புறக்கணித்ததால், என்ன சாதிக்கப்பட்டது? இவற்றையெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன காரணமோ, மநுஸ்மிருதியை எரிப்பதற்கும் அதுதான் காரணம்.''

இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியைத் தூண்டும் ‘புனித ஆற்றலை' - மநுஸ்மிருதியும், பகவத் கீதையும், இந்து சாஸ்திரங்களும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இந்து வன்முறைகளுக்கு அவைதான் ஊற்றுக்கண். ஆனால், கீழ்த்தரமான இந்நூல்களை விமர்சித்தால், அதை விமர்சிப்பவர்களைத்தான் அரசு கைது செய்கிறது. ‘தமிழ் நாடு முஸ்லிம் மக்கள் கட்சி'யின் தலைவர் எஸ்.எம். பாஷா, மகாபாரதத்தை விமர்சித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலைத் தடை செய்ததோடு மட்டுமின்றி, அவரைக் கைது செய்துமிருக்கிறது (‘தினத்தந்தி' 30.12.06). ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சனம், "சாதிப் பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும்'' என்று பிரகடனப்படுத்தியதன் ஒரு பகுதியாக - ‘அகண்ட இந்து செயல்திட்டம்' ஒன்றை சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி, மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திரமாக சொல்ல முடிகிறது (‘தி இந்து' 3.1.07).

அரசியல் தளத்தில் மய்ய ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க. மற்றும் அதன் சங்பரிவாரங்கள், தற்பொழுது மீண்டும் ‘ராமன் கோயிலைக் கட்டுவோம்' என்று கிளம்பியிருக்கின்றன. உத்திரப் பிரதேச தேர்தலைக் கவனத்தில் கொண்டும், வாஜ்பாய் சொல்வது போல, ‘லக்னோ வழியாக புதுதில்லி செல்லவும்' அவை திட்டமிட்டுள்ளன. அதற்கான அடிப்படைவாதப் பணிகளில் அவை ஈடுபட்டுள்ளன. இந்நாட்டு மக்களிடையே இந்து உணர்வைத் தூண்டி ‘ஓட்டுப் பொறுக்கும் அரசியல்'தான் அது என்று சொல்லப்பட்டாலும், அது இந்து முஸ்லிம் கலவரத்திற்குதான் வித்தூன்றும். இக்கலவரங்கள் மூலம் ‘இந்து ஒற்றுமை' வலுப்பெறுவதால், அதை செயல்படுத்துகின்றனர். இந்த அகண்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே பெரியார் சிலை உடைப்பு!

பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவை ஒரே தேசியமாக சித்தரித்து, இந்து பண்பாட்டைத் திணிக்க முயல்கின்றனர். எனவே, அதற்கு எதிராக நாம் முன்னிறுத்தும் பண்பாடு, மிகவும் வலிமை வாய்ந்ததாக - சாதி, மத ஒழிப்புப் பண்பாடாக இருந்தாக வேண்டும். தமிழ்ப் பண்பாடு என்று பொதுவாகக் கூறுவது போதாமையாகும். இதற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பார்வை சான்று பகர்வதாகவே இருக்கிறது: "... பார்ப்பன எதிர்ப்பை, இந்து மத எதிர்ப்பாக நாம் மாற்றக் கூடாது... மூடநம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும்; வர்ண சாதி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும். கடவுள் இல்லை என்பதைக் கருத்தியலாகப் பரப்ப வேண்டும். ஆனால், மதத்தோடும் கோயிலோடும் போர் புரிவது, எதிர்விளைவை உண்டாக்கும்'' (‘தமிழர் கண்ணோட்டம்' சனவரி 2007). பார்ப்பனர்களை எதிர்க்கலாம்; ஆனால், பார்ப்பனக் கடவுளர்களையும், அவர்களின் மதத்தையும், கோயிலையும் எதிர்க்க வேண்டாம் என்பது, கடைந்தெடுத்த முரண்பாடு இல்லையா?

பார்ப்பன ஆதிக்கம் - இந்து மதத்திலும், கோயில்களிலும், ‘புனித நூல்'களிலும்தான் மிக ஆழமாக வேர் கொண்டிருக்கிறது. அதனால்தான், ‘இத்தகைய வேதங்களையும், சாஸ்திரங்களையும், இந்து மதத்தையும் வெடி வைத்தே தகர்க்க வேண்டும்; வேறு எந்த செயலும் பயன் தராது' என்றார் அம்பேத்கர். எனவே, அம்பேத்கர் மற்றும் பெரியாரைப் பின்பற்றுவதன் மூலம்தான், நாம் இந்து பண்பாட்டுத் தேசியத்தை வேரறுக்க முடியும். இக்கருத்தியல்களை உள்ளடக்காத தமிழ்ப் பண்பாட்டை, இந்து பண்பாடு எளிதில் செறித்துவிடும்!

நன்றி: கீற்று.காம் - மநுஸ்மிருதியை எரிப்போம்!

Tuesday, January 23, 2007

சாமியையும் விட்டு வைக்காத சாதிப் பிரச்னை!

'இந்து மதத்திற்கு வாருங்கள்' என்று இனிய இஸ்லாமிய சகோதரர்களை அழைத்த சகோதரர் எழில் அவர்களுக்கு எனது இன்னொரு கேள்வி:

இதுவும் இந்து மதம்தானா?

இந்து மதம் எங்கே போகிறது, இருபத்தொராம் நூற்றாண்டில் இப்படியுமொரு கொடுமை, பார்ப்பனர்களின் சாதி வெறிக்கு சாமிகூடத் தப்பவில்லை.

சிங்கப்பூர் அரசின் Hindu Endowment Board இன் கீழ் வரும் நான்கு இந்துக் கோயில்களில் மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும், சிங்கப்பூரின் மிகவும் பழைமையான இந்துக் கோயிலாகிய இந்த மாரியம்மன கோயில் 1819 இல் சேர் ஸ்ரான்போட் றாபிள்ஸ் சிங்கப்பூரை உருவாக்க முன்பே இருந்து வந்துள்ளது.

இந்தக் கோயிலின் பிரதான பூசகராகிய பிராமணர், இந்தக் கோயிலின் முதன்மையான கடவுளாகிய, கருவறையிலுள்ள மாரியம்மனுக்குப் பூசை செய்ய மறுத்து விட்டார். அதனால் மாரியம்மனுக்கு பூசை செய்வது பிராமணரல்லாத, பண்டாரங்கள் என அழைக்கப்படும் தமிழர்கள்.

பிரதம பூசகராகிய பிராமணர் மாரியம்மனுக்குப் பூசை செய்ய மறுத்ததன் காரணம் என்னவென்றால், மாரியம்மன் தீண்டப்படாத தமிழர்களாகக் கருதப்படும் பறையர்களின் கடவுள் என்பது தான் அவரது கருத்தாம்.

பிராமணர்களால் உருவாக்கப்பட்ட புராணக் கதைகளின் படி மாரியம்மன் கூடத் தீண்டத்தகாதவராம் எப்படியிருக்கிறது கதை. மாரியம்மனைத் தீண்டத்தகாதவராக்கி, அவருக்குப் பண்டாரங்கள், அதாவது தமிழர்களைக் கொண்டு பூசையைச் செய்வித்துக் கொண்டு, பிராமணர்களால் உயர்சாதிக் கடவுளாகக் கருதப்படும் விக்கிரகங்களுக்கு மட்டும் தான் பிரதம பிராமண அர்ச்சகர் அர்ச்சனை, பூசைகளைச் செய்வாராம்.

இந்தச் செயல் மாரியம்மனை இழிவு படுத்தி, தமிழர்களின் கடவுள் என்ற காரணத்துக்காக அவமதிப்பது மட்டுமல்ல, தமிழர்களை அதாவது சிங்கப்பூர் தமிழர்களை மட்டுமல்ல உலகத் தமிழர்களனைவரும் அவமதிக்கும் செயலாகும் என்பது தான் பிராமணருக்கெதிராக வழக்குத் தொடர்ந்திருக்கும் சிங்கப்பூர்த் தமிழர் M. RAVI, அவர்களின் கருத்தாகும்.

எந்தவொரு உண்மையான இந்துவாவது, இந்துக்கள் பெருமளவில் வேறுமதங்களை நாடி ஒடுகிறார்களே, என்ன காரணமாக இருக்குமென காரணத்தைத் தேடினால், வேறெங்கும் பார்க்க வேண்டாம், இப்படியான பார்ப்பனர்கள் தான் இந்துக்கள், இந்துமதத்தை விட்டு ஓடுவதற்குக் காரணம்

இந்த பிராமண அர்ச்சகர் சிங்கப்பூர் தமிழர்களை அவமதித்தது மட்டுமல்ல, அவருக்குச் சோறு போடும் மாரியம்மனைத் தீண்டத்தகாதவராக்கியது மட்டுமல்ல, சிங்கப்பூர் அரசமைப்பின் படி , அரசாங்க மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் கோயிலில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் எதிர்த்து, சிங்கப்பூர் Hindu Endowment Board க்கும் மாரியம்மன் கோயில் சபைக்கும் எதிராக M. RAVI, C/O Messrs L. F. Violet Netto 101 Upper Cross Street #05-45 People’s Park Centre Singapore 058357 அவர்களால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சிங்கப்பூர் மாரியம்மன் கீழ்சாதியாம்...!
நன்றி: உணர்வுகள்

Monday, January 01, 2007

எந்த இந்து மதத்தைச் சொல்கிறீர்கள்? - 2ம் பாகம்

சகோதரர் எழில் என்னுடைய 'கதை கதையாம் காரணமாம்' பதிவுக்கு பதில் பதிவு எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. என்னுடைய எந்த இந்து மதத்தைச் சொல்கிறீர்கள்? 1ம் பாகத்தில் கேட்ட கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுவரை மூன்றோ நான்கோ பதிவுகள் அவர் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் எனது கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கிறதா?

எனது கேள்விகள்:

1. கடவுள் யார்? அல்லது யாவர்?
இந்தக் கேள்விக்கு எழில் சொன்ன பதில்கள்:


கடவுள் யார் என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்பட்சத்தில் அது தனி கேள்வி. அதற்கான விடையை ஒருவராலும் அளிக்க முடியாது. விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர். கடவுள் தன்னிடம் வந்து பேசினார் என்று கூறுபவர்களிடம் கடவுள் பேசவில்லை. இறையை கண்டவர்கள் அதனை பேசமாட்டார்கள். இறை என்பது விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. விளக்கத்துக்கு அப்பாற் பட்டதுஎன்பதே விளக்கமாகும்போது, விளக்கத்துக்குள்ளும் அடங்கியது.
அய்யா, கடவுளை கொண்டு வந்து என் முன்னே நிறுத்துங்கள் என்று நான் கேட்கவில்லை. கடவுளை define பண்ணுங்கள் என்றும் நான் கேட்கவில்லை. இந்து மதத்தினர் வணங்கும் கடவுள்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்? அந்தப் பெயரைத்தான் நான் கேட்டேன். அந்த கடவுள்களின் தன்மை என்ன? கடவுள் ஒருவர் என்றால் அதற்கு விளக்கம் தேவையில்லை. பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒரு கடவுள் மற்றவரிடமிருந்து எப்படி வித்தியாசப் படுகிறார்கள்? இந்தக் கேள்விதான் நான் கேட்டது.

கடவுள் யார் என்ற கேள்விக்கு ஒருவராலும் விடை அளிக்க முடியாது என்றால்,
பன்றி - வராகமூர்த்தி
நாய் - பைரவமூர்த்தி
மாடு - கோமாதா
யானை - கணபதி
சிங்கம் - நரசிம்மாவதாரம்
மீன் - மச்சாவதாரம்
முதலை - கூர்மாவதாரம்
பெண்பித்தன் - கிருஷ்ணாவதாரம்
குரங்கு - அனுமன்
சுடலைப் பித்தன் - சிவன்
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் - ஐயப்பன்
பாம்பு- நாகராஜன்
மண்டயோடுமாலை அணிந்து ரத்தம் குடிக்கும் காளி
வீச்சரிவாளுடன் நிற்கும் அய்யனார்
(நன்றி: வணங்காமுடி அய்யா)

இவர்களெல்லாம் யார்? இந்த கடவுள்களை வணங்குபவர்களெல்லாம் இந்துக்கள் இல்லையா? அவர்களின் மதம் இந்து மதம் இல்லையா? அதனால்தான் கேட்கிறேன்,

நீங்கள் எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?

2. ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?
என்ற எனது அடுத்த கேள்விக்கு எழில் சொன்ன பதில்கள்:


இந்த வீட்டுக்கு பெரிய மனுஷர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலம் காலமாக எழுதி வைத்திருக்கும் பல்வேறு ஆன்மீக புத்தகங்களும் அந்த ஆன்மீக புத்தகங்களிலிருந்து வியாக்கியானம் சொல்லும் கற்றறிந்தவர்களும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் யார் என்றுதான் நான் கேட்டேன். நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஒரு காவி உடை இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் இந்து மதத்தில் சாமியாராகலாம். சாமியார் என்ற போர்வையில் போதை மருந்து கடத்தலாம், பெண்களை கற்பழிக்கலாம், அடியாள் வைத்து வேண்டாதவனை கொலை செய்யலாம், கருப்பு பணத்திற்கு பாதுகாவலராகலாம். திறமை இருந்தால் செல்வாக்கு வளர்த்துக் கொண்டு அரசியல் பண்ணலாம். அதிலும் Power Politics. இதுபோல போலி (ஆ)சாமிகளிடமிருந்து உங்கள் வீட்டு பெண்களை பாதுகாக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் எழில் சார்? இந்த (ஆ)சாமிகளெல்லாம் இந்துக்கள் இல்லையா? இந்த பெரியவா சின்னவா சொல்ற வியாக்கியானம் எல்லாம் இந்து மதத்துல சேர்த்தி இல்லையா?

நீங்க சொல்ற பெரியவங்க வியாக்கியானம் சொல்றவங்களெல்லாம் வேற எந்த இந்து மதத்தை சேர்ந்தவங்க எழில் சார்?

3. எந்த வேதங்களை பின்பற்றுவது? என்று நான் கேட்டதற்கு எழில் சொன்னார்:


ரிக், யஜூர் சாமம் அதர்வணம் ஆகிய வேதங்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், திருவாசகமும், திருப்பாவையும் இன்று யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தங்கு தடையின்றி படிக்கக் கிடைக்கின்றன. அவற்றை படித்து உணரவும், ஆன்மீக உணர்வு பெறவும் இன்று எதுவும் தடையில்லை.

இந்த 4 வேதங்களின் அடிப்படையிலதான் இந்து மதம் அமைஞ்சிருக்குங்களா? எனக்கு தெரிஞ்சவரை அந்த காலத்துல நம்ம நாட்டு மன்னர்களை எல்லாம் ஏமாத்தி கெட்ட கனா கண்டா ஒரு ஊரை எழுதி கொடுக்கனும்னு மிரட்டுறதுக்குதான் இந்த 4 வேதமும் பயன்பட்டிருக்கு. இல்லீங்களா?

அப்புறம், திருவாசகத்தை வைத்து கோவிலில் அர்ச்சனை செய்ய பிராமணர்கள் எதிர்ப்பது ஏன்? அப்ப பிராமணர்களோட இந்து மதம் வேற, மத்தவாளோட இந்து மதம் வேற தானே?

இதுல, நீங்க எந்த இந்து மதத்தை சொல்றீங்க?

4. இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்? என்ற எனது அடுத்த கேள்விக்கு எழில் சொன்னார்:
ஏன் இந்துமதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்கவேண்டும்? இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது. மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச்
சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.
கேட்க நல்லாத்தான் இருக்கு எழில் சார். ஆனால் நிஜம் இது இல்லையே! ஒரு தலித் இந்து கோவிலுக்கு சாமி கும்பிட போனால் இந்த பாழாப்போன மனுதர்மம்தானே அவனை கோவிலுக்கு உள்ளே போக விடாம தடுக்குது? மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது என்றால், நீங்கள் எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள் எழில் சார்?

உங்கள் மதத்தைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை சொல்றதுக்கு கூட உங்களுக்கு ஒரு 'கருத்து தியாகி' தேவைப்படுகிறார். நாலு பதிவெழுதியும் இன்னதுதான் உங்கள் மதம் என்பதை தெளிவாக சொல்லக்கூட உங்களுக்கு முடியவில்லை. உங்கள் மதத்தைப் பற்றியே சரியாக புரிந்து கொள்ளாத நீங்கள், இஸ்லாம் பற்றி குறை கூறுகிறீர்களா? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போகும் பாதை கோணல் என்று சொல்ல வரலாமா?

மத்தவங்க மத விஷயத்துல மூக்கை நுழைக்குறதுக்கு முன்னாடி, போங்க சார், போய் உங்க மதத்தைப் பத்தி முதல்ல நல்லா தெரிஞ்சுக்குங்க! இந்த பதிவுல எழுதுன விஷயத்தையெல்லாம், யாராவது வெள்ளைக்காரங்க 'இந்தியான்னா பாம்பாட்டி நாடு'ன்னு நெனச்சுக்கிட்டு வருவாங்க, அவங்க கிட்ட போய் சொன்னீங்கன்னா நம்புவாங்க. ஆனா, நான் இந்தியாவுலேயே பிறந்து வளர்ந்து பல விதமான இந்துக்களோட பழகினவன்.

இஸ்லாம் மார்க்கம் தெளிவானது. அதில் எந்த குழப்பத்துக்கும் இடம் இல்லை. ஆனால் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதை முறையாக பின்பற்றாத முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குள் பிரச்னைகள் இருக்கின்றது. கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதெல்லாம் முஸ்லிம்களின் உள்விவகாரம். முஸ்லிம்களுக்குள் உள்ள பிரச்னைகளைப் பத்தி நாங்க பாத்துக்குறோம். எங்கள் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

முஸ்லிம்களுக்கு இருப்பதை விட பன்மடங்கு பிரச்னைகளும் குழப்பங்களும் இந்து மதத்தில் இருக்கிறது. சீர்திருத்த வேண்டிய விஷயங்கள், தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்றது. (சொல்லப் போனால் இந்து மதத்தில் உள்ளவர்களே வெட்கப்படும், பிற மதத்தவர் எள்ளி நகையாடும் இந்துமதத்தின் மூடநம்பிக்கைகளை ஓரளவுக்காவது ஒழிக்க முயற்சி எடுத்த தந்தை பெரியாரை இந்துமதத்தை சீர்திருத்த வந்த பெரிய மனுஷாளாக இந்துக்கள் கொண்டாட வேண்டும். அதுக்கு பதிலாக அவரது சிலையை உடைக்கிறாங்களே உங்க ஆட்கள்?) உங்களை மாதிரி உள்ளவர்கள் உங்கள் மதத்தில் இருக்கும் பிரச்னைகளை மறந்து விட்டு மற்ற மதத்தை குறை சொல்ல புறப்பட்டிருப்பதை ரொம்ப நாகரீகமான வார்த்தையில் சொல்லனும்னா 'அதிகப் பிரசங்கித்தனம்.'

எங்க வேலையை நாங்க பாக்குறோம். அது மாதிரி உங்க வேலையை நீங்க பாருங்க! என்ன சரியா?

Tuesday, December 12, 2006

ஆண் சாதி - பெண் சாதி!

கேள்வி: ஆண்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வதைப் போல், பெண்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வதில்லையே, ஏன்?

பதில்: பண்டைய காலத்திலிருந்து ஆண்கள் வீடு, பசு, தோப்பு, தோட்டம் மாதிரி பெண்களையும்ஒரு பொருளாகவே (commodity) கருதி நடத்தியதால், அவள் தன் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. திருமணமாகும் வரை அவள் தந்தையின் சாதி. ஆன பிறகு, கணவனின் சாதி! சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவிதமான சுதந்திரங்களையும் அனுபவித்து வாழ்ந்த பெண்களை ஆண்கள் அடக்கி அடிமையாக்கியது மாபெரும் தந்திர வரலாறு!

நன்றி: ஹாய் மதன் பதில்கள் - ஆனந்த விகடன் 13-12-06

Saturday, December 09, 2006

சகோதரர் எழிலின் பதில்கள்

சகோதரர் எழிலிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் தனது பதிவில் பதில் அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவரது விளக்கங்களை பார்ப்பதற்கு முன்பாக, எனது டிஸ்கிளைமரை மறுபடியும் நினைவு படுத்திக் கொள்கிறேன். "இந்தப் பதிவில் எந்த விதமான எள்ளலும் இல்லை. கண்ணியமான எனது இந்து மத சகோதரர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமும் இல்லை. எழில் என்பவர் 'இந்து மதம் வாருங்கள்' என்று இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்ததால் அவரது பாணியிலேயே சிலதை தெளிவு படுத்திக் கொள்ளலாமே என்பதற்காக கேட்கும் சில கேள்விகள்தான் இவை." இந்து மதம் பற்றி நான் அதிகம் அறியாதவன். எனது கேள்விகள் யாரையும் புண்படுத்தி விடக்கூடாதே என்ற அச்சத்தினால்தான் இதை இங்கே வலியுறுத்துகிறேன்.

எனது முதல் கேள்வி, கடவுள் யார்? அல்லது யாவர்? இந்தக் கேள்வியில் புராணங்கள் மற்றும் நடைமுறையில் இருக்கும் சில கருத்தாடல்கள் மூலமாக அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் கடவுள் தொடர்பான சில விஷயங்களை சுட்டி விளக்கம் கேட்டிருந்தேன்.

அதற்கு எழிலின் பதில்: "புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை. அவை இறை அல்ல. உபநிஷதமும் திருவாசகமும் விதந்தோதும் இறைவன்,விஷ்ணுமயம் ஜகத்து என்றும், சர்வம் ஈசம் என்றும் கூறுகின்றன.ஒரு கருத்தை குருக்கள் சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது."

கருத்தை விளக்க கதை கூறும்போது கதையை பிடித்து தொங்கக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விப்ர புராணம் சொல்லும் இது மாதிரியான உதாரணங்கள் மூலம் வலியுறுத்தப்படும் கருத்து என்ன என்பதை எழில் விளக்க முடியுமா? அதுவல்லாமல் என் கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கவில்லையே! என் கேள்வி 'கடவுள் யார்? அல்லது யாவர்? '. இதற்கு உதாரணங்கள் இல்லாத நேரடியான பதில் என்ன?

எனது இரண்டாவது கேள்வி, புதிதாக இந்து மதத்திற்கு வரும் ஒருவருக்கு ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?

இதற்கு பதில் சொன்ன எழில் நான் சொன்ன சில உதாரணங்களை மறுத்து, "துறவு என்னும் அறத்தை பின்பற்ற வேண்டியது குருவாக இருக்கும் அனைவருக்கும் தேவையில்லை" என்கிறார். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் கேள்வி அதுவல்லவே! துறவறம் எல்லா குருக்களுக்கும் கட்டாயமில்லை. ஆனால் துறவறத்தை மேற்கொண்ட ஒரு குரு அதை முழுதாக கடைப்பிடிக்க வேண்டுமா இல்லையா? இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி துறவு என்ற அறத்தை ஏற்ற, மற்றவர்களால் 'நடமாடும் கடவுள்' என்ற ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்ட ஒருவர், ஒழுக்கம் பிறழ்ந்து கொலை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார் என்றால், அது அந்த தனி நபரின் குற்றம் மட்டுமா? அல்லது அவர் பின்பற்றிய சாஸ்திர சம்பிரதாயங்களில் உள்ள குறைபாடா? அல்லது ஒரு சாதாரண மனிதரை அந்த அளவுக்கு உயர்த்தி போற்றிய அவரது தொண்டர்களின் தவறா?

மேலும் எழில் சொல்கிறார், "துறவு ஒரு முயற்சி. ஞானம் என்பது விளைவு. விளைவை நோக்கி பல முயற்சிகள் இருக்கலாம்.... பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் உங்களதை தேர்ந்தெடுத்துக் கொள்வது உங்களது சுதந்திரம். உங்களது ஸ்வதர்மம்.ஒருவர் குருவிடமிருந்துதான் ஞானம் பெறவேண்டுமென்று எந்த கட்டாயமும் இல்லை.... அறியக்கூடிய மனம் இருந்தால், ஞானம் சித்திக்கும். ஞானம் அற்றவர்கள் நீங்கள் கூறுவது போன்ற வெளிவேடக்காரர்களாக இருக்கலாம். அவர்கள் நீங்கள் அடையாளம் கண்டுகொண்டது போலவே மக்களால் உதாசீனம் செய்யப்பட்டு விடுவார்கள்".

ஞானத்தை அடைய பல்வேறு பாதைகள் இருக்கின்றன என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக 'ஞானம்' என்றால் என்ன என்பதை தீர்மானிக்க முடியுமா? சென்றடைய வேண்டிய இடம் எது என்பதை தெரிந்து கொண்டால்தானே, நாம் போக வேண்டிய பாதையை தேர்ந்தெடுக்க முடியும்? ஆனால் ஞானம் என்பது அப்படி தீர்மானிக்கப் படும் ஒன்றல்ல. வேதங்களை நன்கு கற்றுணர்ந்த ஒருவர் அடைய விரும்பும் ஞானமும் சாமான்யர் ஒருவர் அடைய விரும்பும் ஞானமும் வேறு வேறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அது போல தன் முழு வாழ்க்கையையும் ஆன்மீக வழியில் செலவிடும் ஒருவரின் ஞானமும் குடும்பப் பொறுப்புள்ள ஒருவரின் ஞானமும் வேறு வேறாக இருக்கும்.

பாதைகள் வேறு வேறாக இருக்கலாம். சென்றடைய வேண்டிய இலக்கே வேறு வேறாக இருந்தால்..?

குருவானவர் சரியான வழிதான் காட்டுகிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு எழில் சொல்கிறார், "எது தர்மத்தை போற்றுகிறதோ, எது தர்மம் தழைத்தோங்க வைக்கிறதோ அது நல்வழி. தர்மம் என்பது எது மக்களை இணக்கத்துடன் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது இந்த மனித குலமும் ஜீவராசிகளும் புல்பூண்டுகளையும் வாழ வைக்கிறதோ அது தர்மம். எது மக்களுக்கு இடையே சண்டையையும் பூசலையும் தோற்றுவிக்கிறதோ அது அதர்மம். ஒரே ஒரு குருவின் வார்த்தைகளை இறையின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளும்போது இது பிரச்னை. அந்த குரு சொன்ன வார்த்தைகளைப் பிடித்து தொங்கும்போது அவை பூசலையும் பிரச்னையையும் உருவாக்குகின்றன. "

நல்வழி, தர்மம், அதர்மம் என்பதற்கு சில விளக்கங்களை எழில் சொல்லியிருக்கிறார். ஆனால் எனது கேள்விக்கான பதில் இதில் இல்லை. நான் கேட்டதை ஒரு உதாரணத்துடன் மறுபடியும் சொல்கிறேன். நடமாடும் கடவுள் என்று ஒருவரை மக்கள் மதித்தார்கள். அவரிடம் அருளாசி பெற படித்தவர்களும் படிக்காதவர்களும் முட்டி மோதினார்கள். ஏனென்றால் அவர் மேல் அந்த மக்கள் வைத்திருந்த நம்பிக்கை. அவர் தன் மத சம்பிரதாயங்களை பேணிக் காப்பவர் என்ற நம்பிக்கை. ஆன்மீகத்தில் நமக்கு இவர் சரியான வழி காட்டுவார் என்ற நம்பிக்கை. ஆனால் அவர் அந்த நம்பிக்கைக்கு ஏற்றவரல்ல என்பதை காலம் கடந்துதான் மக்கள் தெரிந்து கொண்டார்கள். அவரது உண்மையான முகம் வெளிப்படாமலேயே போயிருந்தால் என்னவாகியிருக்கும்? அவரை ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டவர்களின் கதி என்ன? அவர் போதனைகள் சரியானவையா தவறானவையா என்பதை எப்படி சரி காண முடியும்? இது போன்ற வெளிவேடக்காரர்களை மக்கள் எப்படி அடையாளம் காண்பது?

எனது மூன்றாவது கேள்வி, 'எந்த வேதங்களை பின்பற்றுவது?' வேதங்கள் என்று சொல்லப்படுபனவற்றில் பெண்களை கேவலப்படுத்துவது போல சில வசனங்கள் இருப்பதாக வலைப்பதிவுகளில் கூட சிலர் எழுதியிருந்தார்கள். அது தவிர வேதங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்றவர்கள் படிக்க தடை இருப்பதாகவும் பல இடங்களில் எழுதியிருக்கிறார்கள். விப்ர புராணம் போன்றவைகளில் கடவுளர்களை ஒழுக்கம் கெட்டவர்களாக சித்தரிக்கும் கதைகள் இருக்கின்றன. இது போன்ற காரணங்களாலேயே எதுவெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்க, பின்பற்றத்தக்க வேதங்கள் என்ற கேள்வி எழுகிறது.

இதற்கு எழில் சொன்ன பதில்: "பெண்களை கேவலப்படுத்துவதாக சொல்லும் மந்திரம் வேதத்தில் உள்ளது அல்ல. அதன் உட்பொருள் தெரியாமல் கூறினால், அது உங்களுக்கு கேவலமானதாகவே தோன்றும். இதற்கான விளக்கம் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. படிக்கவும். புராணம், மனுதர்மம் ஆகியவை வேதங்கள் அல்ல. வேதங்களை படிக்க தடை ஏதும் இன்று இல்லை. என்றும் இல்லை. காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுவதாக சொல்லப்படும் பிரச்சாரம் பொய். அவை பிரிட்டிஷ் காலத்தில் இந்து மதத்தை கேவலப்படுத்த அவர்களது கைக்கூலிகளால் திணிக்கப்பட்டவை. கிறிஸ்துவ பிரச்சாரகர்களாலும் இஸ்லாமிய பிரச்சாரகர்களாலும் தொடர்ந்து உபயோகிக்கப்பட்டு இன்று உண்மை என்ற நிலையை அடைந்துவிட்டன. வேதம் படித்தால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுமென்றால், எப்படி மாட்டிடையன் கிருஷ்ணன் அவதாரமாக கருதப்பட்டான்? வால்மீகி என்ற வேடனால் எப்படி ராமாயணம் எழுதப்பட்டிருக்க முடியும்?முருகன் ஏன் குறத்தி வள்ளியை திருமணம் செய்துகொள்ளவேண்டும்?கம்பன் என்ற நெசவாளர் சமஸ்கிருதமும் வேதமும் வால்மீகி ராமாயணமும் படித்து கரைதேர்ந்து கம்பராமாயணம் எழுத முடிந்திருக்குமா?சிந்தித்து பாருங்கள். பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். ரிக், யஜூர் சாமம் அதர்வணம் ஆகிய வேதங்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், திருவாசகமும், திருப்பாவையும் இன்று யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தங்குதடையின்றி படிக்கக்
கிடைக்கின்றன. அவற்றை படித்து உணரவும், ஆன்மீக உணர்வு பெறவும் இன்று எதுவும் தடையில்லை.
"

- பெண்களை கேவலப்படுத்துவதாக சொல்லும் மந்திரம் வேதத்தில் இல்லை என்றால் வேதமல்லாத மற்றவைகளில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறாரா எழில்?

- வேதங்களைப் படிக்க தடை எதுவும் இல்லை என்று மூன்று இடங்களில் சொன்ன எழில், மூன்று முறையும் தடை 'இன்று' இல்லை என்று வலியுறுத்தியிருப்பதை கவனித்தால், 'அன்று' தடை இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

- வேதத்தை படிக்க யாருக்கும் தடையில்லை என்பதை விளக்குவதற்காக மாட்டிடையன் கிருஷ்ணன், குறத்தியை திருமணம் செய்த முருகன் என்று சிலவற்றை ஆதாரங்களாக எழில் காட்டியிருக்கிறார். இதுவெல்லாம் புராணக்கதைகள் இல்லையா? இவற்றிற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு? 'புராணம், மனுதர்மம் ஆகியவை வேதங்கள் அல்ல' என்று எழிலே சொல்லியிருக்கிறாரே? அதுவுமல்லாமல் 'புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை.' என்று சொன்ன எழில் மாட்டிடையன், குறத்தி போன்ற கதாபாத்திரங்களை எப்படி ஆதாரமாக காட்ட முடியும்?

மறுபடியும் என் கேள்விக்கே வருகிறேன். எந்த வேதங்களை பின்பற்றுவது? வேதங்கள் அல்லாத மற்றதை (புராணங்கள், மனு சாஸ்திரம் போன்றவை) பின்பற்ற தேவை இல்லை என்று எழில் ஒப்புக் கொள்கிறாரா? அப்படியென்றால் அவற்றை என்ன செய்வது?

எனது நான்காவது கேள்வி இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்? என்பது. இதற்கு எழிலின் பதில் முழுக்க முழுக்க சமாளிப்புதான். "ஏன் இந்து மதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்க வேண்டும்?" என்று கேட்கிறார். எழிலுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஜாதி என்பது இந்து மதத்திலிருந்து பிரிக்க முடியாத அடையாளம் என்பதுதான் உண்மை. ஏதாவது ஒரு நாளிதழைப் பிரித்து மேட்ரிமோனியல் பக்கத்தை அவர் பார்த்தாலே இது புரியும்

எழிலின் அடுத்த சமாளிப்பு, "இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது. மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. மனுதர்மம் அன்று ஜாதிக்கு ஒரு நீதி என்று எழுதியது போல இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மதத்துக்கு ஒரு நீதி என்று எழுதி வைத்திருக்கிறது. அது எப்படி தவறோ அது போல இதுவும் தவறுதான்"

இந்துமதம் என்ற ஆன்மீகத்தில் கடவுளைத் தொழ எல்லோருக்கும் சம உரிமை இருப்பதுதானே முறையாகும்? ஆனால் நடைமுறையில் அப்படியில்லையே? உயர் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் தலித் மக்கள் தங்கள் ஆன்மீக வழிபாடுகளை செய்யவிடாமல் தடுப்பது மனுதர்மம் உருவாக்கிய வர்ணபேதம்தானே?. மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வது மாற்று மதத்தினர் அல்ல. இந்துமதத்தினரேதான். அந்த மனுவையும் கடவுளாக்கி மனாலியில் கோயில் கட்டி கும்பிட்டு வருவதும் அதே இந்துமதத்தினர்தான். மனுதர்மமே தவறு என்றால், அது அறிமுகப்படுத்திய வர்ணாஸ்ரம முறையால் இந்து மதத்திற்கே இழுக்கு என்றால், பாபரி மசூதியை இடிப்பதற்கு பதிலாக இந்த மனு கோவிலை இடித்துத் தள்ளியிருக்க வேண்டாமா?

"இந்துமதத்துக்கு வருபவர்கள் எந்த ஜாதியில் சேரவேண்டும் என்று
கேட்டிருக்கிறீர்கள். ஏன் உங்கள் ஜாதிக்கு என்ன குறை? மரைக்காயர் என்பது ஒரு ஜாதிமாதிரி வைத்துக்கொண்டு சிவபாலன் மரைக்காயர் என்று பெருமையாக இருக்கலாமே
?" என்கிறார் எழில். சிவபாலன் மரைக்காயருடன் சம்பந்தம் பேச அய்யர்களோ அல்லது அய்யங்கார்களோ தயாரா என்பதையும் கொஞ்சம் கேட்டுச் சொன்னால் நல்லது.

" இந்துமதத்தில் குறை ஏதும் இல்லை. சுதந்திரமே குறை, என்னை சிந்திக்கச்சொல்லாதே, கட்டளைகளை கொடு நான் மிஷின் போல நடக்கிறேன் என்று கூறுபவர்களுக்கு மட்டுமே இந்து மதத்தின் சுதந்திரம் ஒரு குறை." என்ற சொல்லும் எழில்தான் அபூமுகை, சுவனப்பிரியனுடன் நடந்த விவாதத்தில், ஒருவர் இறைத்தூதர்தான் என்பதற்கு கே.ஜி. பிள்ளைகளுக்கு புரியுற மாதிரி ஆதாரம் காட்டினால்தான் ஒப்புக் கொள்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார்.

"மனுதர்மத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள்தான் எதிர்த்தனர். மனுதர்மத்தில் உள்ள குறைகளை எதிர்க்கவும் இந்துக்களுக்கு அனாதிகாலம் தொட்டு சுதந்திரம் இருந்தது. மனுதர்மமும் மாற்றமுடியாதது அல்ல. அதன் இறுதி பகுதியில் அதிலுள்ள சட்டங்களை கற்றறிந்தவர்கள் எப்படி மாற்றுவது என்ற வழிமுறையையும் கொடுத்திருக்கிறது." என்கிறார் எழில். மனுதர்மம் அறிமுகப்படுத்திய சமூகக் கொடுமைகளுள் முதன்மையானது பிறப்பினடிப்படையில் மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் வர்ணாஸ்ரமம். இக்கொடுமையை நிவர்த்திக்க இதுவரை மனுதர்மத்தில் எத்தனை மாற்றங்கள் ஏற்படுத்த்ப் பட்டிருக்கின்றன என்பதையும் அந்த மாற்றங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கின்றனவா என்பதையும் எழில் அறியத்தந்தால் நல்லது.

இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். இந்துமதக் காவலர்களாக காட்டிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற அமைப்புகள் இந்துமதத்தை காப்பதை விட அதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. இந்துமதத்தில் ஊடுருவி இருக்கும் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வதை விட மற்ற மதத்தினரை வம்புக்கு இழுப்பதில்தான் இவர்களுக்கு சுவாரஸ்யம் அதிகம். அப்சலை தூக்கில் போடுவதில் காட்டும் தீவிரத்தை தலித்களின் பிரச்னைகளை போக்கி அவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறாமல் இருக்க வைப்பதில் காட்டினார்கள் என்றால் அவர்கள் உண்மையிலேயே இந்துமதக் காவலர்கள்தான் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

எழில் போன்றவர்களின் அணுகுமுறையும் அப்படித்தான் இருக்கிறது. இந்துமதத்தைப் பற்றி உயர்வாக சொல்ல எவ்வளவோ இருக்கும்போது இவர்கள் இஸ்லாமை குறை சொல்வதில் நேரம் செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்து 'நீங்கள் வந்து எங்கள் மதத்தை தாக்குங்கள்' என்று மறைமுகமாக அழைப்பு வைக்கிறார்கள். அதுதான் அவர்கள் விருப்பமென்றால் நாம் என்ன செய்ய முடியும்?