Thursday, January 25, 2007

அம்பேத்காரும் இந்துவா?

"மநுஸ்மிருதி மற்றும் அதைப்போன்ற பிற நூல்களில், மிகவும் கீழ்த்தரமாகக் காணப்படும் கருத்துகள், மிக மோசமான வகையில் மனித உரிமைகளை மீறுவதாக இருக்கின்றன. எனவே, இம்மாநாடு மிக அழுத்தந்திருத்தமாக இதைக் கண்டிப்பதுடன் - அதன் ஒரு வெளிப்பாடாக, மநுஸ்மிருதியை எரிப்பது எனவும் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.''

- 25.12.1927 அன்று மகத் மாநாட்டில், டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த தீர்மானம்

புரட்சியாளர் அம்பேத்கர் மநுஸ்மிருதியை எரித்த (25.12.1927) 80ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இந்து பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் மூட்டிய தீ, நாடெங்கும் பற்றி எரிய வேண்டிய தேவையை, எவரும் எளிதாகப் புறந்தள்ளிவிட இயலாது. சமத்துவத்திற்கானப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியே மநுஸ்மிருதி எரிப்பு. ‘மநுஸ்மிருதிகள் வழக்கொழிந்து விட்டன; இதை எரிப்பதன் மூலம் அம்பேத்கர் ஏன் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?' என்று அன்றே கேட்கப்பட்டது. இன்றும் இதுபோன்று கேள்வி எழுப்புகின்றவர்களுக்கும் சேர்த்து அம்பேத்கர் தெளிவாக பதிலளித்துள்ளார் : "இந்துக்கள் மநுஸ்மிருதியைப் பின்பற்றுவதால்தான், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவர்கள் வன்கொடுமைகளை இழைக்கின்றனர். அது, வழக்கொழிந்துவிட்ட ஒரு நூல் என்பது உண்மை எனில், அதை யாராவது எரித்தால், அதற்கு இந்துக்கள் ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? இதை எரிப்பதால் என்ன கிடைக்கும் என்று கேட்கிறார்கள். காந்தி, அயல்நாட்டுத் துணிகளை எரித்ததால் என்ன கிடைத்தது? நியுயார்க்கில் மிஸ் மேயோ எழுதிய ‘அன்னை இந்தியா' என்ற நூலை எரித்ததால் என்ன சாதித்தார்கள்? அரசியல் சீர்திருத்தத்தை வலியுறுத்திய சைமன் குழுவைப் புறக்கணித்ததால், என்ன சாதிக்கப்பட்டது? இவற்றையெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன காரணமோ, மநுஸ்மிருதியை எரிப்பதற்கும் அதுதான் காரணம்.''

இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியைத் தூண்டும் ‘புனித ஆற்றலை' - மநுஸ்மிருதியும், பகவத் கீதையும், இந்து சாஸ்திரங்களும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இந்து வன்முறைகளுக்கு அவைதான் ஊற்றுக்கண். ஆனால், கீழ்த்தரமான இந்நூல்களை விமர்சித்தால், அதை விமர்சிப்பவர்களைத்தான் அரசு கைது செய்கிறது. ‘தமிழ் நாடு முஸ்லிம் மக்கள் கட்சி'யின் தலைவர் எஸ்.எம். பாஷா, மகாபாரதத்தை விமர்சித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூலைத் தடை செய்ததோடு மட்டுமின்றி, அவரைக் கைது செய்துமிருக்கிறது (‘தினத்தந்தி' 30.12.06). ஆனால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சனம், "சாதிப் பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும்'' என்று பிரகடனப்படுத்தியதன் ஒரு பகுதியாக - ‘அகண்ட இந்து செயல்திட்டம்' ஒன்றை சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தி, மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திரமாக சொல்ல முடிகிறது (‘தி இந்து' 3.1.07).

அரசியல் தளத்தில் மய்ய ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்த பா.ஜ.க. மற்றும் அதன் சங்பரிவாரங்கள், தற்பொழுது மீண்டும் ‘ராமன் கோயிலைக் கட்டுவோம்' என்று கிளம்பியிருக்கின்றன. உத்திரப் பிரதேச தேர்தலைக் கவனத்தில் கொண்டும், வாஜ்பாய் சொல்வது போல, ‘லக்னோ வழியாக புதுதில்லி செல்லவும்' அவை திட்டமிட்டுள்ளன. அதற்கான அடிப்படைவாதப் பணிகளில் அவை ஈடுபட்டுள்ளன. இந்நாட்டு மக்களிடையே இந்து உணர்வைத் தூண்டி ‘ஓட்டுப் பொறுக்கும் அரசியல்'தான் அது என்று சொல்லப்பட்டாலும், அது இந்து முஸ்லிம் கலவரத்திற்குதான் வித்தூன்றும். இக்கலவரங்கள் மூலம் ‘இந்து ஒற்றுமை' வலுப்பெறுவதால், அதை செயல்படுத்துகின்றனர். இந்த அகண்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே பெரியார் சிலை உடைப்பு!

பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவை ஒரே தேசியமாக சித்தரித்து, இந்து பண்பாட்டைத் திணிக்க முயல்கின்றனர். எனவே, அதற்கு எதிராக நாம் முன்னிறுத்தும் பண்பாடு, மிகவும் வலிமை வாய்ந்ததாக - சாதி, மத ஒழிப்புப் பண்பாடாக இருந்தாக வேண்டும். தமிழ்ப் பண்பாடு என்று பொதுவாகக் கூறுவது போதாமையாகும். இதற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பார்வை சான்று பகர்வதாகவே இருக்கிறது: "... பார்ப்பன எதிர்ப்பை, இந்து மத எதிர்ப்பாக நாம் மாற்றக் கூடாது... மூடநம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும்; வர்ண சாதி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும். கடவுள் இல்லை என்பதைக் கருத்தியலாகப் பரப்ப வேண்டும். ஆனால், மதத்தோடும் கோயிலோடும் போர் புரிவது, எதிர்விளைவை உண்டாக்கும்'' (‘தமிழர் கண்ணோட்டம்' சனவரி 2007). பார்ப்பனர்களை எதிர்க்கலாம்; ஆனால், பார்ப்பனக் கடவுளர்களையும், அவர்களின் மதத்தையும், கோயிலையும் எதிர்க்க வேண்டாம் என்பது, கடைந்தெடுத்த முரண்பாடு இல்லையா?

பார்ப்பன ஆதிக்கம் - இந்து மதத்திலும், கோயில்களிலும், ‘புனித நூல்'களிலும்தான் மிக ஆழமாக வேர் கொண்டிருக்கிறது. அதனால்தான், ‘இத்தகைய வேதங்களையும், சாஸ்திரங்களையும், இந்து மதத்தையும் வெடி வைத்தே தகர்க்க வேண்டும்; வேறு எந்த செயலும் பயன் தராது' என்றார் அம்பேத்கர். எனவே, அம்பேத்கர் மற்றும் பெரியாரைப் பின்பற்றுவதன் மூலம்தான், நாம் இந்து பண்பாட்டுத் தேசியத்தை வேரறுக்க முடியும். இக்கருத்தியல்களை உள்ளடக்காத தமிழ்ப் பண்பாட்டை, இந்து பண்பாடு எளிதில் செறித்துவிடும்!

நன்றி: கீற்று.காம் - மநுஸ்மிருதியை எரிப்போம்!

19 comments:

said...

அம்பேத்கருக்குப் பிறகு வேற யாரும் எரிக்கலயா?

said...

திரு. மரைக்காயர்,

உங்களின் இப்பதிவோடு முழுவதும் ஒத்துப் போகிறேன்.

முதலில் இந்து எனப்படும் மதமே இல்லை. பார்ப்பனியம் தான் இந்து என்ற பசுத்தோலில் மறைந்திருக்கும் கொடும் ஓநாய்.

அண்ணல் அம்பேத்கரையும் அய்யன் வள்ளுவனையும் இந்து (= பார்ப்பனர்) ஆக்கி பார்ப்பனீயத்தை எப்படியாவது நிலைநிறுத்தி தங்கள் ஆதிக்கம் சரியாமல் இருக்க இப்போது வரலாற்றை மாற்றும் முயற்சியில் முனைப்புடன் உள்ளனர் இந்தக் காவிப்படையினர்.

இவர்களின் இம்முயற்சிக்கு என்றோ நெருப்பு வைத்துச் சென்றுவிட்டார் ஈரோட்டுக் கிழவர்.

பாருங்கள் இன்னும் இவரது பெயர் இவர்களுக்கு உதறல் கொடுக்கிறது என்று!

அருமையான இக்கட்டுரையை மீள் பதிவு செய்தமைக்கு நன்றி!

said...

தா.தே.போ.கா உள்ளிட்ட திராவிட கட்சிகள் அந்த கோரிக்கையின்(முதலாளித்துவ கோரிக்கை) தன்மைக்கேற்ப்ப ஊசலாட்டத்துடனே உள்ளனர். பெரியார் தி.கவும் கூட தனது தொண்டர்களை - அது தன்னெழுச்சியாக நடந்த நிகழ்வு என்று கூறி காட்டிக் கொடுத்துவிட்டது. தா.தே.போ.காவின் - இந்த கட்டுரையில் உள்ள தலையங்கம் அந்த கட்சியினர், இதற்க்கு R.S.S.வுடன் இணைந்து பணியாற்றலாம் என்ற அளவு கேவலமான சந்தர்ப்பவாத தலையங்கமாக உள்ளது. அவர்களும் தமது தொண்டர்களின் போர்குணமிக்க நடவடிக்கைகளுக்கு உரிமை கோராமல் 'தன்னெழுச்சி' என்று காட்டிக் கொடுத்து கைகழுவி விட்டனர்.

இந்த கட்டுரை மிகச் சரியாகவே அந்த கோரிக்கைகளை அம்பலப்படுத்துகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் பண்பாடு என்பது பன்முகத் தன்மை கொண்டது. அதை மறுதலித்து, வரலாற்றை புரட்டி படித்தும் அறிவில்லாத, படிப்பறிவே இல்லாத பாமர ஜனங்களை ஏமாற்றி ஒற்றை பார்ப்ப்னிய பண்பாட்டு இந்தியா கட்ட விளைந்துள்ள் இந்துத்துவ வெறியர்களை எதிர்த்து எல்லா மக்களும் மதம், இனம் என்ற அடையாளங்களை முன்னிறுத்தாமல் அணி திரள் வேண்டும். தமது சொந்த சமூக அமைப்புகளில் அத்தகைய அடையாளங்களை முன்னிறுத்தும் அமைப்புகளை புறக்கணித்து மாற்று ஜனநாயக அமைப்புகளை கட்ட வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் அமைப்புகளில் சரியான நிலைப்பாடு கொண்டனவற்றில் ஐக்கியமாக வேண்டும். ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெற முடியும். எதையும் இழக்காமல் சுதந்திரம் சாத்தியமில்லை. எதை இழப்பது என்பது அவரவர் விருப்பத்திலும் இல்லை. சமூகத்தின் இயக்கம் நம்மை நிர்ப்ந்திக்கிறது. எனவெ ஜனநாயக சக்திகள் இவற்றை கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டிய காலம் வீரியமாகிக் கொண்டே செல்கிறது.

இதுவே இன்றைக்கு மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது

நல்ல கட்டுரை. இங்கு பிரசுரித்தமைக்கு நன்றி

அசுரன்

said...

சரியப்பு , இந்து மதம் அப்படித்தேன் ,

http://snakebed.blogspot.com/2007/01/blog-post_116971337167142346.html

உங்க மதத்தை பத்தி கிழிச்சு தொங்கப்போட்டாரே அம்பேத்கார் , ஒத்துகிறீங்களா , புத்த மதத்துக்கு மாறீரிங்களா ?

said...

இணைக்க மறந்து போன பின்குறிப்பு:

வலைப்பதிவு ஒன்றில் பெங்களூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட மேடையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படமும் இடம் பெற்றிருந்ததை பார்க்க நேர்ந்தது. அதைப் பார்த்ததும் இயல்பாக எழுந்த கேள்விதான் இந்த பதிவின் தலைப்பு.

போற போக்கைப் பார்த்தால் ஈ.வெ.ரா பெரியாரையும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் போலிருக்கிறது!

Anonymous said...

பார்ப்பணீய புரட்டில் பெரியாரும் பெரியாழ்வாராகலாம்.

ஆயின், 'தேவை'யை முன்னிட்டு எல்லோரையும் 'இந்து'வாக்குவோம்.
(கவனிக்க, ஹ்ருதய சுத்தியோடு 'ஹிந்து'வாக அல்ல).

ஹிந்து மதத்தின் நோக்கமே 'பார்ப்பணிய நலன்களை பாதுகாப்பது' என்றானதால் தானே அம்பேத்கர் பெளத்தம் போனார்.அப்ப,
பெளத்தத்தையும் இந்துவாக்க பார்ப்பனர்கள் முயல்கிறார்கள்.

said...

//அழகு said...
அம்பேத்கருக்குப் பிறகு வேற யாரும் எரிக்கலயா? //

அதெல்லாம் உண்மையிலேயே இந்துமதத்தை சீர்திருத்த வேண்டும் என்ற அக்கறை உள்ளவர்கள் செய்யும் காரியமல்லவா?

ஆனால், மநுஸ்மிருதியின் வர்ணாஸ்ரம கொள்கையை அடிப்படையாக வைத்து அரசியல் நடத்தி வரும் இந்துத்துவாக்கள் அதை கடுமையாக எதிர்த்த அம்பேத்கரையும் ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் போல படம் காட்டியிருப்பது விந்தையிலும் விந்தை!

said...

//முதலில் இந்து எனப்படும் மதமே இல்லை. பார்ப்பனியம் தான் இந்து என்ற பசுத்தோலில் மறைந்திருக்கும் கொடும் ஓநாய்.//

சரியா சொன்னீங்க தி.ரா. அவர்களே.

said...

/நல்ல கட்டுரை. இங்கு பிரசுரித்தமைக்கு நன்றி - அசுரன் //

வருகைக்கும் கருத்துக்களை தெரிவித்ததற்கும் நன்றி அசுரன் அவர்களே.

said...

//கரு.மூர்த்தி said...
சரியப்பு , இந்து மதம் அப்படித்தேன் ,

உங்க மதத்தை பத்தி கிழிச்சு தொங்கப்போட்டாரே அம்பேத்கார் , ஒத்துகிறீங்களா , புத்த மதத்துக்கு மாறீரிங்களா ? //

ஏம்ப்பு, உங்க இந்து மதம் அப்படித்தேன் என்றால் மத்த மதங்களும் அப்படித்தேன் இருக்குமா என்ன?

said...

//சுந்தர் said...
பார்ப்பணீய புரட்டில் பெரியாரும் பெரியாழ்வாராகலாம். //

:-)

Anonymous said...

பாருங்க மரைக்காயர்.. இப்படி எல்லாம் எழுதினா பார்ப்பன வந்தேறிகளான ****** & ** *** எல்லாம் வருவாங்க.. கூடவே ****** எல்லம் வருவாங்க... அம்பேத்கானுக்கு ( அம்பேத்கார் னா மரியாதை குடுக்கனுமில்ல ) என்ன தெரியும்பாங்க.. எதுக்கு இப்ப அவரை வம்புல இழுத்து விடுறீங்களோ

Anonymous said...

//பார்ப்பன ஆதிக்கம் - இந்து மதத்திலும், கோயில்களிலும், ‘புனித நூல்'களிலும்தான் மிக ஆழமாக வேர் கொண்டிருக்கிறது. அதனால்தான், ‘இத்தகைய வேதங்களையும், சாஸ்திரங்களையும், இந்து மதத்தையும் வெடி வைத்தே தகர்க்க வேண்டும்; வேறு எந்த செயலும் பயன் தராது' என்றார் அம்பேத்கர்.//

இதனால் தான் அம்பேத்கர் இந்து மதத்துலேர்ந்து பவுத்தத்துக்கு மதம் மாறினாரா?

said...

ஐயா மரைக்காயரே தங்களின் வினாக்களிற்காண விடைகளை இங்கே எழுதியிருக்கேன்

வந்து, பார்த்து, தெளிந்து செல்க.

said...

தோழர் மரைக்காயருக்கு.

/"அசுரர்கள்" என்ற பெயர் இவர்களுக்கு ஏன் வந்ததென்றால் இவர்கள் தாங்கள் எண்ணிய கருமத்திலும் கொண்ட இலட்சியத்திலும் மிகவும் உறுதியாக இருந்து இறைவனிடமிருந்து இஷ்ட வரங்களை பெறுவதில் அசுரத்தனமான உறுதியுடன் இருப்பதால் இப்பெயர் வந்தது. /

இந்து என்பவர் உங்களுக்குப் பதில் சொல்லியதின் லட்சணம் இது. சுராபானம், சுரர்கள், அசுரர்கள் ஆகிய சொற்களின் தொடர்பு பற்றி ஆய்வாளர்கள் பலமுறை விளக்கியிருக்கிறார்கள். மேலும் அடிப்படையான கேள்வி, அசுரர் என்கிற வார்த்தை உருவாவதற்கு முன்பே அசுரத்தனம் உருவாகிவிட்டதா?

தோழர் அசுரனுக்கு.

த.தே.பொ.க பற்றி இங்கு எதற்குப் பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. பெரியார் தி.க தன் தோழர்களைக் காட்டிக்கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. உண்மையில் அது தன்னெழுச்சியாக நடந்ததே தவிர தலைமையின் ஆணையின் பேரில் நடைபெற்றதைப் போல தெரியவில்லை. அவர்கள் வீரமணியைப் போலவோ கருணாநிதி போலவோ காட்டிக்கொடுக்கவில்லை.

said...

ஐயா HINDHU அவர்களே, பதிவுக்கு நன்றி.

said...

அம்பேத்காரை இந்து பாசிசவாதிகள் தங்கள் பக்கம் அரசியல் இலாபத்திற்காக இழுக்க முயற்சிக்கிறார்கள். இராமனை ரதத்தில் ஏற்றியும் அரசியல் அறுவடை சாதிக்க முடியாததன் காரணம் சங்கப் பரிவார படைகளுக்கு புரிந்துவிட்டது. அதனால் தான் அனைவரும் இந்து முழக்கம், அம்பேத்காரை பின்பற்றுகிற மக்களை வளைக்க அம்பேத்கார் படங்கள் என பலவித வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்துமதம் பற்றி அண்ணல் அம்பேத்கார் சொன்னவை, கீற்று தளத்திலிருந்து...இனி அம்பேத்கார் பேசுகிறார்.

-000-

"இந்த நாட்டில் நிலவும் இத்தகைய சூழல், புத்துணர்வற்ற நிலையை இனி ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அளித்துவிடும். இந்தச் சூழல் நிலவும் வரை, நம்முடைய முன்னேற்றத்திற்கானப் புத்துணர்வு ஒருபோதும் கிடைக்காது. இந்த மதத்திலிருந்து கொண்டு நாம் இதை எதிர்கொள்ளவே முடியாது. மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும். இந்த அமைப்பு முறையை யார் அழித்தொழிப்பது? இந்த அமைப்பு முறையில், பார்ப்பனன், சத்ரியன், வைசியன் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகை பயன் இருக்கிறது. ஆனால், சூத்திரர்களுக்கு என்ன இருக்கிறது? இந்த மூன்று வர்ணத்தைத் தவிர, பிற சாதியினருக்குப் புத்துணர்வு எப்படி வரும்? சதுர்வர்ண முறை என்பது ஒரு வழக்கமல்ல. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது, அதுதான் மதம்.

இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. நான் ஒரு முறை காந்தியை சந்தித்தபோது, அவர் சொன்னார், ‘நான் சதுர்வர்ணத்தை நம்புகிறேன்.' நான் சொன்னேன்: உங்களைப் போன்ற ‘மகாத்மா'க்கள்தான் சதுர்வர்ணத்தை நம்புகிறார்கள். ஆனால், இந்த சதுர்வர்ணம் என்பது என்ன? சதுர்வர்ணம் என்பது மேல் அல்லது கீழ் என்று உள்ளது. அது எங்கு தொடங்கி எங்கு முடிகிறது? இந்தக் கேள்விக்கு காந்தி பதில் சொல்லவில்லை. அவர் என்ன பதில் சொல்ல முடியும்? நம்மை அழித்தவர்களும் இந்த மதத்தால் அழிக்கப்படுவார்கள். நான் தேவையில்லாமல் இந்து மதத்தைக் குற்றம் சொல்லவில்லை. இந்து மதத்தால் யாருமே வாழ முடியாது; அந்த மதமே ஓர் அழிவு மதம்.

இந்து மதத்தில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறையில், மேலிருக்கும் வர்ணத்தைச் சார்ந்தவர்கள்தான் பயன் பெற்றார்கள். மற்றவர்களுக்கு என்ன பயன்? ஒரு பார்ப்பனப் பெண் குழந்தை பெற்றால், அவருடைய மனம் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவி எப்பொழுது காலியாகும் என்பது பற்றி சிந்திக்கிறது. ஆனால், இதற்கு நேர் மாறாக நம்முடைய துப்புரவுத் தொழிலாளர் பெண்மணி குழந்தை பெறும்போது, அரசாங்கத்தில் ஒரு துப்புரவுப் பணி எப்பொழுது காலியாகும் என்று நினைக்கிறார். இந்து மதத்தின் வர்ண அமைப்பு முறை தான் இத்தகைய விந்தையான சமூக அமைப்புக்கு காரணம். இதிலிருந்து என்ன வகையான மேம்பாட்டை நாம் காண முடியும்? பவுத்த மதத்தின் மூலமே நீங்கள் எதையும் சாதிக்க முடியும்.

பவுத்த மதத்தில் 75 சதவிகித பிக்குகள் பார்ப்பனர்களாக இருந்தார்கள். 25 சதவிகிதம் சூத்திரர்களும் மற்றவர்களும் இருந்தனர். ஆனால், புத்தர் சொன்னார் ‘பிக்குகளே! நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். அந்தந்தப் பகுதிகளில் ஓடும் ஆறுகள் தனித்தனியாகப் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், அவை கடலில் சங்கமிக்கும்போது, தங்களின் அடையாளத்தை இழந்து விடுகின்றன. அவை ஒன்றாகக் கலந்து விடுகின்றன. பவுத்த சங்கம் கடலைப் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமம். எல்லாரும் கடலில் கலந்த பிறகு கங்கை நதி தண்ணீரையோ, மகாநதி தண்ணீரையோ தனியாக அடையாளப்படுத்திப் பார்க்க முடியாது. அதேபோல, நாம் பவுத்த சங்கத்தில் சேர்ந்த பிறகு நாம் நம்முடைய சாதிகளை இழந்து சமமாகிறோம்.' இத்தகைய சமத்துவத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தை மாமனிதர் புத்தர் மட்டுமே செய்தார்."

Anonymous said...

அம்பேத்கார் மட்டுமல்ல,ஏசு,நபி கூட இந்துதான்.

HINDU பதிவில் பார்த்தாத் தெரியும்.

said...

/அம்பேத்கார் மட்டுமல்ல,ஏசு,நபி கூட இந்துதான்./

ஆமாம்பா ஆமாம், மோசஸ், காரல்மார்க்ஸ், ஏங்கெல்ஸ், நீட்ஷே, சேக்ஸ்பியர், பெர்னாட்ஷா எல்லோரும் இந்துதான். இந்து என்பதற்குத்தான் விளக்கமும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாதே.