Friday, March 16, 2007

2. வேதங்களில் இறைக்கோட்பாடு

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.

யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்

குர்ஆன் கூறுகிறது:

...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)

ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.

குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.

குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.

ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.

(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)

குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)

ரிக் வேதம் (6:45:16)

''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.

இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்

''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!

ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.

மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)

இஸ்லாத்தில் மலக்குகள்
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக் கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.

உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு

இந்து மதத்தில் மலக்குகள்
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.

ஆக்கம்: நெல்லை இப்னு கலாம் ரசூல்
நன்றி: இஸ்லாம் கல்வி.காம்

2 comments:

said...

இங்கே நீங்கள் வேதங்களில் கூறுவது ஒன்று என மதநல்லிணக்கம் கொண்டுவர முயற்சிக்கிறீர்கள், ஒரு வேளை அது வந்துவிட்டால் தங்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என அஞ்சும் மடவாயுக்களும், போலிகளும், அரை டவுசர்களும் இது அப்படி இல்லை என நிறுவி வெறுப்பை மட்டுமே விதைக்கப் பாடுபடுகிறார்கள்

தமிழ் வலையுலகம் இப்பாதகர்களின் அயோக்கியத்தனத்தைப் புரிந்துகொள்ளாமல் இருக்காது!

said...

//இங்கே நீங்கள் வேதங்களில் கூறுவது ஒன்று என மதநல்லிணக்கம் கொண்டுவர முயற்சிக்கிறீர்கள், ஒரு வேளை அது வந்துவிட்டால் தங்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என அஞ்சும் மடவாயுக்களும், போலிகளும், அரை டவுசர்களும் இது அப்படி இல்லை என நிறுவி வெறுப்பை மட்டுமே விதைக்கப் பாடுபடுகிறார்கள்//

அட்றா சக்கை அவர்களே, இவை என் சொந்த கருத்துகள் இல்லை. அலுவலகத்தில் வேலை கொஞ்சம் கூடுதலாக இருப்பதால் பதிவுகள் எழுத நேரம் கிடைப்பதில்லை. அதனால் இஸ்லாம் கல்வி.காம் தளத்திலிருந்து சகோ.இப்னு கலாம் ரசூல் எழுதிய இந்த அருமையான ஆய்வு கட்டுரையை தொடராக மறுபதிவு செய்கிறேன்.

இதற்கு நேசக்குமார் பதில் கொடுத்திருப்பதை பார்த்தேன். தங்களது வேதங்களைப் பற்றி "அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததில் எனக்கு இது நமக்கு விளங்காத விஷயம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்...வேதத்தின் பக்கம் போக வேண்டாம்." என்று முடிவு செய்திருந்தவரை அந்த வேதத்தைப் பற்றி யோசிக்க வைத்ததே இந்த கட்டுரையின் வெற்றி என்று நினைக்கிறேன்.

இவர்கள் சொல்றதெல்லாம் சொல்லட்டும். கட்டுரைத்தொடர் முடிந்ததும் எனது கருத்துக்களை எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்.