Showing posts with label தேசபக்தி. Show all posts
Showing posts with label தேசபக்தி. Show all posts

Tuesday, February 27, 2007

நீலகண்டன் கேட்ட ஜல்லி!

நண்பர் நீலகண்டன் சவூதி அரேபியா பற்றி ஒரு பதிவு எழுதி 'மிதந்து கொண்டிருக்கிற வெளி முதல் சுவனத்து ப்ரியர் வரை மரக்காயர் முதல் இறைநேச வசை வரைக்குமாக சமாளிப்பு ஜல்லியடிகள் சமத்துவ முலாம் பூசி வரும்' என்பதாக அழைப்பு விடுத்திருந்தார். ஒரு விஷயத்தைப் பத்தி மத்தவங்க கருத்து சொல்றதுக்கு முன்னாடியே அதை 'ஜல்லியடிகள்' என்று முலாம் பூசுறதுல ஒரு சூட்சுமம் இருக்கிறது. வர்ற பதில் நெத்தியடியா இருந்தால்கூட 'ஹி..ஹி.. இதத்தான் நான் ஜல்லியடின்னு முன்னமே சொன்னேன்' அப்படின்னு சமாளிச்சுக்கலாம் பாருங்க!

சரி போகட்டும்.. நாம விஷயத்துக்கு வருவோம். நீலகண்டனோட சந்தேகங்களை ஒன்னொன்னா பார்ப்போம்.



//இரு மசூதிகளின் பொறுப்பாளன் எனும் புகழ்மிக்க அரபு பட்டத்தை சுமந்து கொண்டிருப்பவர் சவூதியின் பட்டத்து அரசர். அந்த குலத்தின் சந்ததிகளுக்கு மட்டுமே உரிய பட்டம் இது. 'இஸ்லாமில் சமத்துவம் உண்டே அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆனால் அவர் இஸ்லாமிய அறிஞர்களிலேயே பேரறிஞரானால் அந்த பட்டம் இவருக்கு அளிக்கப்படுமா?' என்றால் 'இல்லை' என்கிற பதிலுக்கு.. - நீலகண்டன்//
இந்திய அரசியல் சாசன சட்டத்தை நல்லா கரைச்சு குடிச்ச ஒரு பேரறிஞர் இருக்கிறார். அவருக்கு 'நாடாளுமன்ற சபாநாயகர்' என்ற பட்டம் அளிக்கப்படுமா? என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். ஏனென்றால் 'சபாநாயகர்' என்பது ஒரு பட்டமல்ல.. அது ஒரு பதவி என்பது பிரைமரி படிக்கிற பிள்ளைகளுக்கு கூட தெரிஞ்ச விஷயம். இப்படிப்பட்ட ஒரு கேள்வியைத்தான் நம்ம நண்பர் நீலகண்டர் கேட்டிருக்கிறார். சவூதி அரேபியாவின் மன்னராக இருப்பவர் இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் பதவி வகிப்பார். இது அவரது மார்க்க அறிவை வைத்து கொடுக்கப்படும் பட்டமல்ல.

அவர் சவூதி அரேபியா என்ற நாட்டின் மன்னரே தவிர, உலக முஸ்லிம்கள் அனைவரின் தலைவரல்ல. கிருஸ்துவர்களுக்கு போப் இருப்பது போல முஸ்லிம்களுக்கும் ஒரு உலகளாவிய தலைவர் இருந்து, அந்த பதவிக்கு ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர் வர முடியுமா என்று நீலகண்டன் கேட்டிருந்தால் அதில் நியாயம் உண்டு. அப்படி ஒரு பதவி இருந்தால் அது இனம், குலம் சாராத, தகுதியை மட்டும் அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இதுதான் இஸ்லாம் காட்டும் சமத்துவம்.


//"The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சவூதி அரசாங்கம் சொல்லுகிற வரிகள் குரானை அவமதிப்பதாகாதா? - நீலகண்டன்//
'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்குக் கட்டுப்படுங்கள். இத்தூதரான முஹம்மதுக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.'-(குர்ஆன் 4 : 59)

முஸ்லிம்கள் தேசப்பற்றுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டுத்தலைவருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் இறைவனே கட்டளையிடுவதற்கு ஒரு ஆணித்தரமான ஆதாரம் இந்த திருமறை வசனம். நீலகண்டன் சுட்டிக் காட்டியிருக்கும் சவூதி அரசாங்கத்தின் கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. தலைமைக்கு கட்டுப்படுவது என்பதில் ஒரு கண்டிஷன் இருக்கிறது. தலைவர் காட்டும் வழி மார்க்கத்திற்கு முரண்படாததாக இருக்க வேண்டும்.

அதுவும் தவிர, சவுதி அரசாங்கத்தின் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் சவூதி குடிமக்கள்தானே? எல்லா முஸ்லிம்களும் அல்லவே?

//சவூதி அரேபியா போல சமத்துவத்தை பேணும் சொர்க்கத்துக்கு....
இஸ்லாமிய சுவர்க்கத்தின் மண்ணுலக மாடலை... //
இப்படியெல்லாம் யார் சொன்னாங்க?

//இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டபடி சம்பளம் கொடுப்பதில்லை. இது தவிர பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். -நீலகண்டன்//

புனிதத் தலங்கள் இருக்கும் நாடு என்பதால் சவூதி அரேபியா முஸ்லிம்களுக்கு புனித பூமி. அதற்காக அங்கே இருப்பவர்களெல்லாம் புனிதர்களாகி விடுவார்களா? எந்த சமுதாயமாக இருந்தாலும் அதில் சில கேடுகெட்ட கயவர்களும் கலந்துதான் இருப்பார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடந்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா? துறவி என்ற போர்வையில் சிறு வயது சினிமா நடிகை முதல் வயதான பெண் எழுத்தாளர் வரை தனது காம சபலத்தை அடக்க முடியாமல் கைவைத்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நின்றவர்களை மறக்கத்தான் முடியுமா?

சவூதியின் கயவர்களுக்கும் காஞ்சிபுர _ _ _ _ களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? சவூதியில் பாலியல் குற்றம் செய்தவன் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். இதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை. ஆனால் காஞ்சிபுரத்திலோ, இந்த குற்றவாளிகள் இன்னும் 'நடமாடும் கடவுள்'களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் கோடிக்கணக்கான இந்துக்களுக்கும் இந்திய திருநாட்டிற்குமே பெருத்த அவமானம்!

இனி, நீலகண்டனுக்கும் அவரது சகாக்களுக்கும் என்னுடைய கேள்விகள் சில. ஜோரா உங்க ஜல்லிகளை கொண்டு வந்து கொட்டுங்க பார்ப்போம்!

1. இந்து ஒற்றுமை, இந்து தர்மம், என்றெல்லாம் வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் காஞ்சிபுர மடத்தை இழுத்து மூட வேணாம், இப்ப இருக்குற மட அதிபதிகளை விரட்டிவிட்டு ஒரு தலித்தை சங்கராச்சியாரா நியமிக்கணும்னு கோரிக்கை எழுப்பவாவது வக்கு இருக்கிறதா?

2. RSS கூட்டத்துக்கு தலைவரா நீலநிற கண்களை உடைய ஒரு 'சித்பவன்' பிராமணர் மட்டும்தான் வரமுடியுமாமே? ஏன் அப்படி? சித்பவன் பிராமணர்கள் என்றால் யார்? பிராமணர்களிலேயே இவங்க உசத்தியா? RSS கூட்டத்திற்கு யாராவது ஓரு தலித் இதுவரை தலைவரா வந்திருக்கிறாரா? இல்லையென்றால் ஏன்?

3. ஏமாறதவன் என்பவர் சொல்கிறார், "நான் நம் இணைய இஸ்லாமிய சகோதரர்களை கெஞ்சி கேட்பது இதுதான். அறியாமல் நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்." இவர் தன் வருங்கால சந்ததிகளை எந்த படுகுழியில் தள்ளியிருக்கிறார்? அது இஸ்லாத்தை விட எந்த வகையில் உயர்ந்தது? இவரோட கொள்கை வெளியில கவுரவமா சொல்லிக்கிற மாதிரி கொள்கையா இருந்தா தைரியமா அதைப் பத்தி சொல்லலாமே?

Wednesday, January 17, 2007

மனதளவில் பாகிஸ்தானியர்கள்! - ஒரு அதிரடி சர்வே!

"தமிழ் நாட்டில் உள்ள, ஏன் இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லீம்கள் நம்முடைய பண்டைய கலாச்சாரங்களை மதிப்பதில்லை. இன்னும் அவர்கள் மனதளவில் பாகிஸ்தானியர்களாகவே இருக்கின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கிரிக்கெட் மாட்ச் நடக்கும் போது இந்திய வீரர் அவுட்டானால் அதை கைதட்டி ரசிக்கும் கூட்டத்தை கீழக்கரை முகமது சதக் பொறியியல்
கல்லூரியில் காணலாம். இந்தியாவுக்கு ஆதரவாக எவனாவது கைதட்டினால் அவர் தகுந்த?! முறையில் கவனிக்கப்படுவார். "


இந்த தத்துவத்தை சகோதரர் நல்லடியாரின் பதிவில் ஒரு அன்பர் வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பதிவர்களிடையே ரகசியமாக நடத்தப்பட்ட ஒரு கற்பனை சர்வே மூலம் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றன. பங்கேற்ற அனைவரும் தங்கள் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் சாதி மத வேறுபாடின்றி இங்கு அனைவருமே அனானிமஸ்தான்.

அனானி1: "நான் துபாயிலே இருந்தப்போ பார்த்திருக்கிறேன். இந்திய முஸ்லிம்கள் டாக்ஸி ஏற வேண்டுமென்றால் பாகிஸ்தானியரின் டாக்ஸியில்தான் ஏறுவார்கள். சவுதியில் அரேபியர்கள் கூட இவர்களிடம் 'சலாம் அலேகும்' என்று ரகசிய மொழியில் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். அதனால் இவர்கள் இன்னும் மனதளவில் பாகிஸ்தானியர்களாகத்தான் இருக்கிறார்கள்"

அனானி2: "கூகுள் போய் 'கிஸ்' என்று தமிழில் டைப் பண்ணி பாருங்கள். பாகிஸ்தானுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு அப்படியே வெட்ட வெளிச்சமாக தெரியும். 'நர்கிஸ்' என்று இவர்களின் பத்திரிக்கை ஒன்று இருக்கிறது. பா'கிஸ்'தானில் உள்ள 'கிஸ்'ஸும் 'நர்கிஸ்'ஸில் உள்ள 'கிஸ்'ஸும் ஒன்றேதான். தமிழக முஸ்லிம்கள் தங்கள் மனைவிகளை 'கிஸ்' அடிப்பதாகவும் எனது முஸ்லிம் நண்பன் ஒருவன் சொல்லியிருக்கிறான்"

அனானி3: "1945-ல் நேருஜி சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தபோது என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட சம்பவம் இது. பாகிஸ்தானியர்களுக்கும் தமிழக முகமதியர்களுக்கும் உள்ள தொடர்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. 1940-ல் நான்கு பாகிஸ்தானியர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக மதறாஸ் வந்திருந்தபோது இங்கு முகமதியர்களால் நடத்தப்படும் அகமதியா உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறார்கள். அன்று பிளாட்பாரத்தில் செருப்பு தைத்துக் கொண்டிருந்த தொழிலாளி இதை நேரில் கண்ட சாட்சி. இதை யாராவது மறுத்து பேசினார்களென்றால் நான் (கொஞ்ச நாளைக்கு) எழுத மாட்டேன்."

அனானி4: "ஆபிரகாமிய மதவாதிகளைப் பற்றி 'இட்லிமாவோ ஆசதோசக்' தமது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பிரபஞ்ச வெளியின் குறியீட்டுக் கனவின் வெளிப்பாடாக ஆன்மாவற்ற அடிப்படை மதிப்பீடுகள் திகழ்கின்றன என அவர் தெளிவாக விளக்கியுள்ளார். இக்கட்டுரைகளூடாக அவர் மைய நிலை அல்லது விளிப்புநிலை மானுடப்பரிமாணமாக விளக்க முயல்வது ஆபிரகாமிய மதங்களினிடையிலான ஒரு வெளிச்சப்புள்ளி இருத்தலின் சாத்தியத்தைத்தான் என்பதை விளங்கிக் கொண்டால் பாகிஸ்தானியருக்கும் தமிழக ஜிகாதி முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளலாம்."

அனானி5: "நாமெல்லாம் குரங்கிலேருந்து பிறந்தோம் என்று பெருமையா சொல்லிக்கிட்டிருக்குறப்போ இவனுங்க பாட்டுக்கு ஆதாம் ஏவாள்னு கதை விட்டுக்கிட்டிருக்காங்க. இதுலேருந்தே தெரியலையா இவங்க நம்ம கலாச்சாரத்தோட ஒத்து வரமாட்டாங்கன்னு"

அனானி6: "இவங்கள்லாம் பாகிஸ்தான்லேருந்து மண்ணை கடத்திக்கிட்டு வந்து தமிழகம் முழுக்க பரப்பி 'தமிழகத்தை பாகிஸ்தான் மண்'ணாக மாற்ற சதித்திட்டம் போட்டுக் கொண்டிருப்பதாக 'விஜயபாரதம்' பத்திரிக்கையில் ஆதாரத்துடன் போட்டிருக்கிறார்கள்."

அனானி7: "அதனாலத்தான் நான் 'எல்லோரும் இந்து மதத்திற்கு வாருங்கள்' என்று பதிவு போட்டுக் கொண்டிருக்கிறேன். 'இவர் எந்த இந்து மதத்தை சொல்கிறார்' என்று இந்து மதத்தில் உள்ளவர்களே மண்டையை பிச்சுக்கிட்டு யோசனை பண்றதுல மற்ற மதங்களைப் பத்தி யோசிக்கவே அவங்களுக்கு நேரம் இல்லாம போயிடும்."