Tuesday, January 23, 2007

சாமியையும் விட்டு வைக்காத சாதிப் பிரச்னை!

'இந்து மதத்திற்கு வாருங்கள்' என்று இனிய இஸ்லாமிய சகோதரர்களை அழைத்த சகோதரர் எழில் அவர்களுக்கு எனது இன்னொரு கேள்வி:

இதுவும் இந்து மதம்தானா?

இந்து மதம் எங்கே போகிறது, இருபத்தொராம் நூற்றாண்டில் இப்படியுமொரு கொடுமை, பார்ப்பனர்களின் சாதி வெறிக்கு சாமிகூடத் தப்பவில்லை.

சிங்கப்பூர் அரசின் Hindu Endowment Board இன் கீழ் வரும் நான்கு இந்துக் கோயில்களில் மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும், சிங்கப்பூரின் மிகவும் பழைமையான இந்துக் கோயிலாகிய இந்த மாரியம்மன கோயில் 1819 இல் சேர் ஸ்ரான்போட் றாபிள்ஸ் சிங்கப்பூரை உருவாக்க முன்பே இருந்து வந்துள்ளது.

இந்தக் கோயிலின் பிரதான பூசகராகிய பிராமணர், இந்தக் கோயிலின் முதன்மையான கடவுளாகிய, கருவறையிலுள்ள மாரியம்மனுக்குப் பூசை செய்ய மறுத்து விட்டார். அதனால் மாரியம்மனுக்கு பூசை செய்வது பிராமணரல்லாத, பண்டாரங்கள் என அழைக்கப்படும் தமிழர்கள்.

பிரதம பூசகராகிய பிராமணர் மாரியம்மனுக்குப் பூசை செய்ய மறுத்ததன் காரணம் என்னவென்றால், மாரியம்மன் தீண்டப்படாத தமிழர்களாகக் கருதப்படும் பறையர்களின் கடவுள் என்பது தான் அவரது கருத்தாம்.

பிராமணர்களால் உருவாக்கப்பட்ட புராணக் கதைகளின் படி மாரியம்மன் கூடத் தீண்டத்தகாதவராம் எப்படியிருக்கிறது கதை. மாரியம்மனைத் தீண்டத்தகாதவராக்கி, அவருக்குப் பண்டாரங்கள், அதாவது தமிழர்களைக் கொண்டு பூசையைச் செய்வித்துக் கொண்டு, பிராமணர்களால் உயர்சாதிக் கடவுளாகக் கருதப்படும் விக்கிரகங்களுக்கு மட்டும் தான் பிரதம பிராமண அர்ச்சகர் அர்ச்சனை, பூசைகளைச் செய்வாராம்.

இந்தச் செயல் மாரியம்மனை இழிவு படுத்தி, தமிழர்களின் கடவுள் என்ற காரணத்துக்காக அவமதிப்பது மட்டுமல்ல, தமிழர்களை அதாவது சிங்கப்பூர் தமிழர்களை மட்டுமல்ல உலகத் தமிழர்களனைவரும் அவமதிக்கும் செயலாகும் என்பது தான் பிராமணருக்கெதிராக வழக்குத் தொடர்ந்திருக்கும் சிங்கப்பூர்த் தமிழர் M. RAVI, அவர்களின் கருத்தாகும்.

எந்தவொரு உண்மையான இந்துவாவது, இந்துக்கள் பெருமளவில் வேறுமதங்களை நாடி ஒடுகிறார்களே, என்ன காரணமாக இருக்குமென காரணத்தைத் தேடினால், வேறெங்கும் பார்க்க வேண்டாம், இப்படியான பார்ப்பனர்கள் தான் இந்துக்கள், இந்துமதத்தை விட்டு ஓடுவதற்குக் காரணம்

இந்த பிராமண அர்ச்சகர் சிங்கப்பூர் தமிழர்களை அவமதித்தது மட்டுமல்ல, அவருக்குச் சோறு போடும் மாரியம்மனைத் தீண்டத்தகாதவராக்கியது மட்டுமல்ல, சிங்கப்பூர் அரசமைப்பின் படி , அரசாங்க மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் கோயிலில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் எதிர்த்து, சிங்கப்பூர் Hindu Endowment Board க்கும் மாரியம்மன் கோயில் சபைக்கும் எதிராக M. RAVI, C/O Messrs L. F. Violet Netto 101 Upper Cross Street #05-45 People’s Park Centre Singapore 058357 அவர்களால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சிங்கப்பூர் மாரியம்மன் கீழ்சாதியாம்...!
நன்றி: உணர்வுகள்

17 comments:

Anonymous said...

Do any Shia muslim is allowed to go to Sunni muslim mosque and reverse also? Why do they fight between them though Allah is the only god?

Anonymous said...

ஊசியின் தைக்கும் திறன் அறியாமல் 'ஓட்டை ஊசியே!' என்று விளித்துவிட்டவரை சல்லடைக்கண்களாய் துளைத்தெடுத்து உன் வண்டவாளம் இது தான் என்று தண்டவாளத்தில் ஏற்றிவருகிறீர்கள்.

எனிவே, ஒரு மரைக்காயரை எழுத வைத்ததற்காகவாவது அந்நபருக்கு நன்றி சொல்லலாம்.
பாய், கீப் இட் அப்!

said...

அன்பு சகோதரர் மரைக்காயர்,

உங்களது அன்பான கேள்விக்கு நன்றி.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பிராம்மணர்கள் பூசாரிகளாகத்தான் இருக்கிறார்கள். பல பிராம்மணர்களுக்கு சுடலைமாடன், அங்காளம்மன் போன்ற தெய்வங்கள் குலதெய்வங்கள். இது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன்.

இந்த வழக்கு வேறேதோ காரணத்தினால் என்று நினைக்கிறேன்.

மனிதனுக்கு ஜாதி உயர்வு தாழ்ச்சி பார்க்கக்கூடாது என்று ராமானுஜர் பசவர் போன்ற இந்து பெரியார்கள் வற்புறுத்தி வந்திருக்கிறார்கள் என்பதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

நன்றி.

said...

//Anonymous said...
Do any Shia muslim is allowed to go to Sunni muslim mosque and reverse also? Why do they fight between them though Allah is the only god? //

அனானி நண்பரே, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஷியா பள்ளியில் சுன்னி முஸ்லிம்களும் சுன்னி பள்ளியில் ஷியாக்களும் தொழுகை நடத்த எந்தத் தடையும் இல்லை. சென்னை ஆயிரம் விளக்கு மசூதி ஒரு ஷியா பள்ளி. சுன்னி முஸ்லிம்கள் அங்கு தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். இதே சிங்கப்பூரில் உள்ள ஷியா பள்ளி ஒன்றிலும் சுன்னி முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஷியாக்கள் ஹஜ் கடமை நிறைவேற்ற வேண்டுமென்றால் மக்காவிற்குதான் வர வேண்டும். அங்கு சுன்னி முறைப்படிதான் தொழுகை நடக்கிறது.

இந்த இரண்டு பிரிவினரும் சண்டை போட்டுக் கொள்வது அரசியலுக்காக. இவர்கள் இருவரும் நம்பிக்கை கொண்டிருப்பது ஒரே இறைவனைத்தான்.

said...

//பாய், கீப் இட் அப்! //

நன்றி சுந்தர் அவர்களே.

said...

//இந்த வழக்கு வேறேதோ காரணத்தினால் என்று நினைக்கிறேன். //

அன்பு சகோதரர் எழில்,

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இந்த வழக்கை தொடுத்திருக்கும் திரு.ரவி ஒரு வக்கீல். இந்த வழக்கைப் பற்றிய நீண்ட விளக்கங்கள் இந்த பதிவில் இருக்கிறன.

http://uncleyap-news.blogspot.com/2007/01/legal-rights-activist-m-ravi.html

மனிதனுக்கே ஜாதி உயர்வு தாழ்ச்சி பார்க்கக்கூடாது என்று ராமானுஜர் பசவர் போன்ற இந்து பெரியார்கள் வற்புறுத்தி வந்திருக்கிறார்கள் என்றபோதிலும், திரு.ரவியின் மனுவில் சுட்டிக் காட்டியிருப்பது போல சாமிக்கே சாதி உயர்வு தாழ்வு கற்பிக்க யார் காரணம்? இதுவும் இந்து மதம்தானே? என்பதுதான் எனது கேள்வி. நன்றி.

Anonymous said...

இந்த இரண்டு பிரிவினரும் சண்டை போட்டுக் கொள்வது அரசியலுக்காக. இவர்கள் இருவரும் நம்பிக்கை கொண்டிருப்பது ஒரே இறைவனைத்தான்.

If this is true, Every religions are have belief on their god or Gods. All Jathi/Colour etc are Politics.

Yes….for all Muslim/Christian/Hindu/Jews

I am from African countries, I saw in person Sunni won't allow Shia in the Mosques and vice versa...

India is not having Shia -Sunni Populations equal. SO you cannot show Chennai is an example....

On that case there is no jathi problem in African Hindus.

Anonymous said...

MUSLIMS KILL MUSLIMS. WHY?
WHAT IS SUNNI AND SCHIERK? DIVISION?

GO TO HELL

Anonymous said...

மனிதனுக்கே ஜாதி உயர்வு தாழ்ச்சி பார்க்கக்கூடாது என்று ராமானுஜர் பசவர் போன்ற இந்து பெரியார்கள் வற்புறுத்தி வந்திருக்கிறார்கள் என்றபோதிலும், திரு.ரவியின் மனுவில் சுட்டிக் காட்டியிருப்பது போல சாமிக்கே சாதி உயர்வு தாழ்வு கற்பிக்க யார் காரணம்? இதுவும் இந்து மதம்தானே? என்பதுதான் எனது கேள்வி. நன்றி.

My Answer is "NO Not All"...Hindu religion didnot show any disparities. But there are people who did it...

Do you need any more clarification I can ready to explain with even Islamic traditions.

Kunns

Anonymous said...

அகிலத்துக்கே ஏற்ற மதம் என்று எழில் காட்டும் 'மதத்தைத்' தாங்கிப் பிடிப்பவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட சாராராகவே இருக்கிறார்கள்?

அவர்களுக்குப் பண்பான பின்னூட்டம் இடக்கூடத் தெரியவில்லை..ஹும் என்னத்த அகிலத்துக்கே ஏற்ற..........??

said...

//Anonymous said...
..On that case there is no jathi problem in African Hindus.//

இதை கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்திய இந்துக்கள் ஆப்பிரிக்க இந்துக்களிடமிருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், சாமியையே ஜாதியை காரணம் காட்டி ஒதுக்கும் இவர்கள் மனிதர்களிடையே இருக்கும் ஜாதிப் பிரச்னையையா தீர்க்கப் போகிறார்கள்?

said...

//Anonymous said...
MUSLIMS KILL MUSLIMS. WHY?
WHAT IS SUNNI AND SCHIERK? DIVISION?

GO TO HELL //

அடேடே ஏங்க இப்படி கொதிக்கிறீங்க? உங்க மதத்தைப் பத்தி பேச்செடுத்தாலே உங்களுக்கெல்லாம் இப்படி கோபம் வருமா? அப்படி நான் ஒன்னும் சொல்லிடலையே? 'உங்கள் கொள்கை தவறு, உங்கள் நம்பிக்கை தப்பு' என்று எங்காவது நான் சொன்னேனா? ஒரு இந்துக் கோவிலில் உள்ள ஒரு தவறான நடைமுறையைப் பற்றி ஒரு இந்து குரல் எழுப்பியிருக்கிறார். அதைப்பற்றி வேறு ஒரு பதிவில் இருந்த தகவலை நான் என் பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவே! உங்கள் கொதிப்பை எல்லாம் வேறு யாரிடமாவது காட்டுவதற்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

said...

//Hindu religion didnot show any disparities. But there are people who did it...
Do you need any more clarification I can ready to explain with even Islamic traditions.
Kunns //

விளக்கமளிக்க முன்வந்ததற்கு நன்றி நண்பரே. எனக்கு விளக்கம் சொல்லி என்ன பிரயோசனம்? ஜாதிப் பிரச்னையை காரணம் காட்டி சாமிக்கே பூசை செய்ய மறுப்பவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லி விளங்க வைத்தீர்களென்றாலாவது ஏதாவது பிரயோசனம் உண்டு.

said...

//அவர்களுக்குப் பண்பான பின்னூட்டம் இடக்கூடத் தெரியவில்லை..ஹும் என்னத்த அகிலத்துக்கே ஏற்ற..........?? //

நன்றி நண்பரே, இதுக்கு நான் ஏதாவது பதில் சொல்ல, அதுக்கு பதிலா இன்னும் ரெண்டு 'பண்பான' பின்னூட்டங்கள் வந்தா என்ன பண்றது? :-(

said...

பறையஞ்சாமிய தொட்டு சேவை செய்யறதுக்கு பாப்பார லம்பாடிங்களுக்கு கொடுத்து வெச்சிருக்கனும். ஆத்தா மாரியாத்தா இந்த மண்ணின் சாமியடா முட்டாளுங்களா. அவள அவமதிச்ச நாதாரிகள நாட்ட உட்டே வெரட்டி அடிக்கனும்!

நல்ல பதிவு.

said...

//ஷியாக்கள் ஹஜ் கடமை நிறைவேற்ற வேண்டுமென்றால் மக்காவிற்குதான் வர வேண்டும். அங்கு சுன்னி முறைப்படிதான் தொழுகை நடக்கிறது.//

I wonder why the Anony skipped the above.

Its OK.

Can any Anony counter this ...?

Anonymous said...

When you say Allah is only gos, why shia and sunni and so many sub claases (like castes)in it?