Friday, February 02, 2007

HINDHU அவர்களுக்கு!

எழில் என்பவரிடம் இந்துமதம் பற்றி நான் கேட்ட சில கேள்விகளுக்கு HINDHU என்ற நண்பர் பதிலளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். இந்து மதம் பற்றி நன்கு புரிதலுள்ள இவரைப் போன்றவர்கள் அதிகம் எழுத வேண்டும் என்றும் விரும்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள் HINDHU அவர்களே!

//அன்பு மரைக்காயர் ஐயார் அவர்களே தாங்கள் இந்துமதம் பற்றி கொண்டிருக்கும் கருத்து தவறானது. தாங்கள் எழில் ஐயா அவர்களிடம் கேட்ட வினாக்களுக்கு விடையளிக்கிறேன் இந்துமதத்தை பற்றி விளக்கவேண்டியது ஒரு இந்துவின் கடமை..// என்று HINDHU அவர்கள் தம் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஐயா, நான் வெளிப்படையாக சொல்கிறேன். எனது பதிவுகள் எல்லாமே ஒரு வகையில் 'பின் வினை' பதிவுகள்தான். இங்கு சில வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். தங்களை இந்து மத காவலர்கள் போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் இந்து மதத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது. அவர்களின் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் தாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போற பாதை கோணலாயிருக்கு என்று குறை சொன்னானாம். அந்த கதைதான் இவர்களின் கதை!!

TATA நிறுவனம் Corus-ஐ வாங்கியதை சொல்லும் பதிவாக இருந்தாலும் அதிலும் முஸ்லிம்களை தாக்க வேண்டும் இவர்களுக்கு. இந்துத்துவ பயங்கரவாதி பால்தாக்கரேயை கண்டிக்கும் பதிவாக இருந்தாலும் அதிலும் முஸ்லிம்களை தாக்குவார்கள். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. முஸ்லிம்களுக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டும் என்ற நல்லெண்ணம் போலிருக்கு இவர்களுக்கு!

இப்படிப்பட்ட பதிவர்களுக்கு பதில் சொல்வதற்காகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். இஸ்லாத்தைப் பற்றியோ, முஸ்லிம்களைப் பற்றியோ குறை சொல்லி பதிவு எழுத இவர்களுக்கெல்லாம் எந்த அருகதையும் கிடையாது என்பதை சுட்டிக் காட்டுவதுதான் எனது பதிவுகளின் நோக்கம்.

எனது பதிவுகள் சில நேரங்களில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இஸ்லாமிய துவேஷ பதிவுகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அவற்றுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

இப்படிப்பட்ட பதிவர்களில் ஒருவர்தான் நம் எழில். இந்து மதத்தைப் பற்றிய எனது கேள்விகளே உங்களுக்கெல்லாம் வருத்தம் அளிக்கிறது என்றால், இஸ்லாம் பற்றி எழில் சொன்ன கருத்துக்களை என்னவென்று சொல்வது? இதையெல்லாம் முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? //“இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.”// என்று சொன்னவர் எழில். இதை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இதற்குகூட பல முஸ்லிம் பதிவர்கள் கோபப்படாமல் தெளிவாக பதிலளித்தபிறகும் 'கேஜி படிக்கும் குழந்தைக்குக் கூட புரியும் அளவுக்கு ஒரு அடையாளம் இருப்பவர்தான் இறைத்தூதராக இருக்க முடியும்' என்று விதண்டாவாதம் செய்தவர்தான் இந்த எழில். தான் ரொம்ப லாஜிக்கலாக பேசுவதாக அவருக்கு எண்ணம் போலிருக்கிறது.

இன்னொரு மதத்தைப் பற்றி இப்படி expert opinion கொடுக்கக்கூடிய ஒரு நபர் தனது சொந்த மதத்தை பற்றி அக்குவேறு ஆணிவேறாக தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? 'இந்து மதம் வாருங்கள்' என்று முஸ்லிம்களை அழைத்துகூட ஒரு பதிவு எழுதினார் இவர். ஆனால் இந்து மதம் பற்றி நான் இவரிடம் கேட்ட கேள்விகளுக்கு இவரால் பதில் சொல்ல முடிந்ததா என்றால் இல்லை. இவரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு HINDHU ஐயா நீங்கள் வந்து பதில் சொல்ல வேண்டியதாகி விட்டது. எனக்கு எழில் பதில் சொல்வார், இறைத்தூதர்கள் விஷயத்தில் இவர் கேட்ட 'லாஜிக்கலான' கேள்விகளை நானும் கேட்கலாம் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவரால் பதில் சொல்ல முடியவில்லையே? சட்டியில் ஒன்றும் இல்லையா? அகப்பை காலியாகவே வருகிறதே? இந்த காலி அகப்பையை வைத்துக் கொண்டுதானா இவர் இஸ்லாமை கிண்ட வந்தார்?

'இந்து மதம் வாருங்கள்' என்ற இவரது பதிவே கூட இவர் எழுதியது அல்ல. யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததைத்தான் இவர் தனது பதிவில் இட்டிருந்தார். தனது சொந்த மதத்தைப் பற்றி நல்லதாக நாலு வார்த்தை சொல்ல முடியாத, அது பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூட வக்கில்லாத இந்த நபர் இன்னொரு மதத்தைப் பற்றி கருத்து சொல்ல என்ன அருகதை இருக்கிறது? இவரைப் போன்றவர்களால் இவர் சார்ந்திருக்கும் இந்து மதத்திற்குத்தான் இழுக்கு!

இவர்களது நடவடிக்கைகள் வெளிப்படுத்தும் உண்மை என்ன தெரியுமா? 'நம் இந்து மதத்தில் உயர்வாக பேச ஒன்னுமேயில்லை. நாம் எப்பாடு பட்டாலும் அதை தூக்கி நிறுத்த முடியாது. அதனால் இஸ்லாமை தாக்கி அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால்தான் நம் மதத்தை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும்' என்று இவர்கள் உள்மனதில் நம்புகிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மதத்தின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை இழந்து போயிருக்கிறார்கள் இவர்கள் பாவம். HINDHU ஐயா போன்றவர்கள் எழில் போன்றவர்களிடம் மிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். போலிச்சாமியார்கள் போன்ற போலி ஆ'சாமி'கள் இவர்கள். இவர்களால்தான் இந்து மதத்திற்கே களங்கம் ஏற்படுகிறது.

HINDHU அவர்களின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த ச.திருமலை அண்ணன் அவர்கள் //மரக்காயர் குரங்கு பிடிக்கக் கிளம்பியதில் எங்களுக்கு எல்லாம் இன்னொரு பிள்ளையார் கிடைத்திருக்கிறார்// என்று குறிப்பிட்டிருந்தார். திருமலை அண்ணன் அவர்கள் பிள்ளையார் பக்தராக இருக்கலாம். அதற்காக அனுமாரை கிண்டலடித்திருக்க வேண்டியதில்லை. :-)

திருமலை ஐயா, 'இதுவரை பிடிக்கக் கருதியது நன்றாகவே பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இனி, பிடிக்கக் கருதுவதும் நன்றாகவே பிடிக்கப் படும்!'

14 comments:

Anonymous said...

'இதுவரை பிடிக்கக் கருதியது நன்றாகவே பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இனி, பிடிக்கக் கருதுவதும் நன்றாகவே பிடிக்கப் படும்!'

நன்றாக உரைத்திருக்கிறீர்கள் மரைக்காயர் பாய்!
முஸ்லீம்கள் தங்களது மதக்கருத்துகளை எடுத்துவைத்து பெருமிதப்படுவது போல, பிராமணீய இந்துத்துவா எழில்கள் தமது 'சனாதனத்தை' எடுத்துவைக்க முடியாமல், மற்ற மதத்தை தாக்குவதிலேயே ஏன் குறியாக இருக்கிறார்கள் என்று நானும் பலமுறை யோசித்திருக்கிறேன்.

HINDHU போன்றவர்கள் முதலில் எழில்களையும் நீலகண்டன்களையும் திருத்த முனைவதே அவர் நம்பிக்கைக்கு பெருமை சேர்க்கும் என்பதை உணர வேண்டும்.

Anonymous said...

//திருமலை ஐயா, 'இதுவரை பிடிக்கக் கருதியது நன்றாகவே பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இனி, பிடிக்கக் கருதுவதும் நன்றாகவே பிடிக்கப் படும்!'//

மரைக்காயரே நீங்கள் குரங்கைத்தானே குறிப்பிடுகிறீர்கள் அல்லது குரங்கு பிடிப்பவரையா?

Anonymous said...

'//இதுவரை பிடிக்கக் கருதியது நன்றாகவே பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இனி, பிடிக்கக் கருதுவதும் நன்றாகவே பிடிக்கப் படும்//

பாக்கிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இதுபோல் உங்க பயங்கரவாதம் பரவினதைதானே சொல்றீங்க ?

said...

//செல்வா said...
HINDHU போன்றவர்கள் முதலில் எழில்களையும் நீலகண்டன்களையும் திருத்த முனைவதே அவர் நம்பிக்கைக்கு பெருமை சேர்க்கும் என்பதை உணர வேண்டும்..//

உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி செல்வா அவர்களே.

said...

//மரைக்காயரே நீங்கள் குரங்கைத்தானே குறிப்பிடுகிறீர்கள் அல்லது குரங்கு பிடிப்பவரையா?//

எனது பதிவை இன்னொரு தடவை படிச்சீங்கன்னா நான் யாரை 'பிடிக்க' நினைச்சேங்குறது உங்களுக்கே தெளிவா தெரியும். திருமலை அண்ணன் அவர்கள் குரங்கு என்று சொன்னது அந்த நபர்களைத்தானா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

said...

என்னுடைய முந்திய பதிவில் ("நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்") சில அனானி கூமுட்டைகள் நான் சொல்ல வந்த விஷயத்தை புரிஞ்சுக்க முடியாம என்னை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தனும் என்ற தங்கள் அபிலாஷையை வெளிப்படுத்துனாங்க. அதே கூமுட்டைகள் இந்த பதிவுக்கும் பெருவாரியாக வந்து 'ஆதரவு' அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(இதுல சிலர் ஏற்கனவே வந்து போயிருக்காங்க!)

Anonymous said...

In the name of God, the most benificent & mercyful
Dear brother Maricair
Assalamu Alaikum.
I'm Naina Mohammed from KAYALPATNAM. Please let me know how to post my message in TAMIL? Let me know the TAMIL Font to be used to post my message.
Brother I too for last few months seeing all anti-Islam propoganda by brothers like Aravinda Neelagandan, Nesakumar. Similarly in THINNAI also there few hypocrites like brother SOOFI all our bursting their anti-Islam feeling through their messages,
I deeply appreciate your feeling to unfold their false comments against ISALM. But at the same time, we MUSLIMS should not react in undecent way. Islam preaches us to face the challanges through decent dialogue. Please refer Chapter 16, verse 125. Therefore, I totally agree to reply for the anti-Islam mesaages but certainly not in the same tone & frequency. Because we are being given with guidence from almighty God. So we must be an leading role model for others in every aspects of life.
So, please use the words carefully while writing your messages. We haved no need to get panic by the da-faming words of anti-Islamists. Because our duty is only to tell the truth and we cannot change the minds of these anti-Islamists. Only the almighty God should give them the realization for the truth.
I too post my comments for some of the anti-islamic messages post by brothers like Aravinda Neelakandan and Nesakumar.
/எனது பதிவுகள் சில நேரங்களில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இஸ்லாமிய துவேஷ பதிவுகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அவற்றுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்./

So, it is important to unfold the truth against falsehood. But it is most important to use decent words in order to keep our IDENTITY as a MUSLIM living according to the teachings of holy Quran & Sunnah of Prophet Mohammed (Peace be upon him)

If there is truth in my meassage all praise to almighty God. If there are any mistakes in this meassge it is because of me and for that I apologize from you.

Regards
Your brother
Naina Mohammed

said...

அன்பு சகோதரர் மரைக்காயர்,

////“இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.”// என்று சொன்னவர் எழில். இதை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? இதற்குகூட பல முஸ்லிம் பதிவர்கள் கோபப்படாமல் தெளிவாக பதிலளித்தபிறகும் 'கேஜி படிக்கும் குழந்தைக்குக் கூட புரியும் அளவுக்கு ஒரு அடையாளம் இருப்பவர்தான் இறைத்தூதராக இருக்க முடியும்'//

நீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். அதனைத்தான் நான் முன்பு சகோதரர் அபுமுஹை, சகோதரர் சுவனப்பிரியன், சகோதரர் இப்னுபஷீர் ஆகியோருக்கு எழுதிய பதில்களிலும் குறிப்பிட்டிருந்தேன். ஏன் அவ்வாறு கருதுகிறேன் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.

இந்து மதத்தை பற்றிய உங்கள் கேள்விகள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. நீங்கள் சொல்வதை திகவினர் கூட (இந்துக்களாக இருந்தும்) கூறுகிறார்கள். கடவுளைப் போலவே இந்துமதத்தையும் வரையறுக்க முடியாது.

அதற்காகத்தான் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து ஆன்மீக உண்ர்வு கொண்ட சூபி ஞானியையும் அவர் எவ்வாறுகொல்லப்பட்டார் என்பது பற்றி குறித்திருந்தேன்.

இறையை உணரும் ஆன்மீகமே இந்துமதம். அது எந்த சமூகத்தில் யாரிடம் தோன்றினாலும் சரி.

ஆன்மீகம் என்பது அரசியல் அல்ல. தெருவில் கூட்டம் சேர்த்து நடத்தும் போராட்டம் அல்ல. அது ஒரு மனிதனுக்கும் இறைக்கும் உள்ள உறவு.. உணர்வு.

said...

அன்பு மரைக்காயர் ஐயா உங்களுக்கு எனது நன்றிகள் தாங்கள் நினைப்பது போல் எழில் ஐயா அவர்கள் இந்து மதம் பற்றி அதிகம் அறியாதவர் அல்ல சொல்லப்போனால் நான் தான் அதிகம் அறியாதவனாய் இருக்க வேண்டும் ஏனென்றால் நான் ஒன்றும் அதிகம் கற்றவன் அல்ல எனக்கு இன்னும் இருபத்தி ஒரு வயது கூட பூர்த்தியாகவில்லை.

என்வகையில் சொல்லப்போனால் எழில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை கொஞ்சம் எளிய நடையில் சொன்னதாகவே படுகிறது. எனக்கு என்ன வருத்தம் என்னவென்றால் தாங்கள் இந்து மதத்தினது உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் தவறான அபிப்பிராயத்துடன் விமர்சிக்க முற்படுவதே ஆகும்.

//எனது பதிவுகள் சில நேரங்களில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இஸ்லாமிய துவேஷ பதிவுகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அவற்றுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.//

எனக்கு எந்த மனவருத்தமும் கிடையாது ஆனால் தாங்களும், தங்களைப் போன்றவர்களும் இந்து மதத்தைப்பற்றி செய்யப்படும் விமர்சனங்கள் தவறான கருத்துப் புரிதல்களுடன் மேற்கொள்ளப்படுவதால் தான் நான் வருந்துகிறேன். தங்களின் மீதான மதத் துவேஷப்பதிவுகளுக்கு தாங்கள் அவரவர்களைத்தான் சாட வேண்டுமே ஒழிய இந்துமதத்தை அல்ல. அவர்கள் தவறாக விமர்சித்தால் தாங்களும் அவர்களைப்போலவே செய்ய வேண்டுமா என்ன?

தாங்கள் சொல்வதைப்போல் பல இஸ்லாமியர்களின் பதிவுகள் இந்துமதத்தை கேவலப்படுத்துவதாக காணப்படுகின்றன நான் அவற்றிற்கும் மறுத்து பதிவெழுத வேண்டும். தாங்கள் எனக்கும் இஸ்லாமிய துவேஷம் என்று கருத வேண்டாம். ஏனென்றால் இந்து மதமெனது தாய் எனது தாயின் குணங்கள் எனக்குத்தான் தெரியும் அக்குணங்களை அயல் வீட்டுக்காரர் தவறான புரிதல்களுடன் விமர்சிக்க முற்படுவாராயின் அது தவறானது என்று விளக்கும் கடமையும், அதேநேரம் அயல் வீட்டுக்காரரின் தாயை பழிக்கும் படியாக அமையக்கூடாது என்ற பொறுப்பும், கண்ணியமும் எனக்கு இருக்கிறது.

இஸ்லாம் மீது தவறான கருத்துக்கள் தெறிவிக்கப்படுமாயின் தாங்கள் மறுக்கலாம், ஆனால் அவை மிகவும் கீழ்தரமான சொற்பிரயோகங்களால் மேற்கொள்ளப்படக்கூடாது தங்களின் பதிவுகளில் இது இல்லை ஆனாலும் வேறும் பலரின் பதிவுகளில் காணப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் முறையான கருத்துப் பகிர்வுக்கு வழிவகுக்காது மாறாக வன்முறையையே வளர்க்கும்.

தாங்கள் ஒருபதிவில் "நாலு பதிவெழுதியும் இதுதான் இந்துமதம் என்று தெரிவிக்க முடியவில்லை" என்று கூறியிருந்தீர்கள் நாலு பதிவில்லை நாலாயிரம் கோடி பதிவெழுதினாலும் இந்துமதத்தின் பேருண்மைகளை எளிதில் விளக்கி விட முடியாது.

நான்கூட பதிவை தொடங்கும் போது எந்த மதத்தையும் விமர்சிக்க கூடாது என்றும், எனது பதிவு முற்றிலுமாக இந்துமதத்தை விளக்க மட்டுமே பயன் பட வேண்டும் என்றும் தான் கருதினேன். ஆனால் இன்று தங்களின் பதிவுகளுக்கு எதிர்ப்பதிவு எழுதும் நிலைக்கு வந்துவிட்டது. அத்துடன் தங்களின் ஏனைய இந்துமதம் பற்றிய பதிவுகளுக்கு என்னிடம் இருந்து எதிர்ப்பதிவு வந்தே தீரும். ஆயினும் நமது கருத்துக்களே மோதவேண்டும், தவிர நாம் அல்ல என்பதையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் சொல்வதைப்போல் நானும் இந்துமதம் பற்றிய தவறான கருத்துக்களை தாங்கி வரும் பதிவுகளுக்கு என்னிடம் இருந்தும் எதிர்ப்பதிவு வரும் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

என்வகையில் தங்கள் கருத்துக்களே எனக்கு எதிர் என்பதையும் தாங்கள் அல்ல என்பதையும், தாங்களும் இப்படியே கருத வேண்டும் என்றும் கருதுகிறேன்.

நன்றி

said...

//இந்து மதத்தை பற்றிய உங்கள் கேள்விகள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை.//

உங்களுக்கு வருத்தம் ஏற்படாது என்பது எனக்கு மிக நன்றாக தெரியும். இந்து மதத்தைப் பற்றி ஓரளவுக்காவது அறிந்தவர்களுக்கு, இந்து மதத்தின் மீது பற்றுதல் உள்ளவர்களுக்குத்தான் அது ஏற்படும். நான் முன்பே சொன்ன மாதிரி,

//இவர்களது நடவடிக்கைகள் வெளிப்படுத்தும் உண்மை என்ன தெரியுமா? 'நம் இந்து மதத்தில் உயர்வாக பேச ஒன்னுமேயில்லை. நாம் எப்பாடு பட்டாலும் அதை தூக்கி நிறுத்த முடியாது. அதனால் இஸ்லாமை தாக்கி அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால்தான் நம் மதத்தை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும்' என்று இவர்கள் உள்மனதில் நம்புகிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மதத்தின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை இழந்து போயிருக்கிறார்கள் இவர்கள் பாவம். //

இந்து மதத்தைப் பற்றி நீங்கள் இதுவரை சொன்ன விளக்கங்கள் இந்து மதத்தை ஒரு ஒரு பொட்டல் திடல் போல சித்தரித்திருக்கின்றன. இதையும் நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

//இறையை உணரும் ஆன்மீகமே இந்துமதம். //

இறைத்தூதர் என்பதற்கு கேஜி படிக்கும் குழந்தைக்கு கூட புரியும் அளவுக்கு அடையாளம் கேட்ட நீங்கள், எந்த அடையாளத்தை வைத்து ஒருவர் இறையை உணர்ந்திருக்கிறார் என்பதை நம்புவீர்கள்? இதுவரை எத்தனை பேர் அதுபோல் இறையை உணர்ந்திருக்கிறார்கள்?

said...

வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ. நெய்னா முஹம்மது அவர்களே,

//Please let me know how to post my message in TAMIL? Let me know the TAMIL Font to be used to post my message.//

எ-கலப்பை என்ற ப்ரோக்ராம் டவுன்லோடு செய்து கொண்டால் போதும். தமிழில் டைப் பண்ணலாம். இந்த வலைப்பக்கத்தில் உபயோகமான தகவல்கள் இருக்கின்றன.

http://kasilingam.com/wiki/doku.php?id=e-sangamam_4

//..But at the same time, we MUSLIMS should not react in undecent way. Islam preaches us to face the challanges through decent dialogue. Please refer Chapter 16, verse 125. Therefore, I totally agree to reply for the anti-Islam mesaages but certainly not in the same tone & frequency. Because we are being given with guidence from almighty God. So we must be an leading role model for others in every aspects of life. So, please use the words carefully while writing your messages..//

உங்கள் மேலான ஆலோசனைக்கு நன்றி சகோதரரே! இஸ்லாம் பற்றிய விஷயங்களில் அனாவசியமாக அத்து மீறி நடப்பவர்களுக்கு அவர்களின் அராஜகப்போக்கை உணர்த்துவதற்காகத்தான் நான் இப்படி எழுத நேர்ந்தது. எனது பதிவுகளில் நான் எதுவும் வரம்பு மீறி எழுதினால் அதை சகோதரர் அவர்கள் தாராளமாக சுட்டிக் காட்டலாம். இன்ஷா அல்லாஹ் நான் என்னை திருத்திக் கொள்ள அது உதவியாக இருக்கும். வரம்பு மீறுபவர்களை இறைவனும் நேசிப்பதில்லை.

//..it is important to unfold the truth against falsehood. But it is most important to use decent words in order to keep our IDENTITY as a MUSLIM living according to the teachings of holy Quran & Sunnah of Prophet Mohammed (Peace be upon him)//

உங்களின் நினைவூட்டலுக்கு மீண்டும் நன்றி சகோதரரே.

said...

HINDHU அவர்களே, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அதற்கு நான் பிறகு பதிலளிக்கிறேன்.

Anonymous said...

இறைவன் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்
அன்பு சகோதரர் மரைக்காயர் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழில் எனது தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற எனது ஆவல் தங்களின் மூலமாக இன்று சிடைக்கப் பெற்றதற்கு முதலில் இறைவனுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு பிறகு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இறைவன் நாடினால் எனது கருத்துக்களை தமிழ் பேசும் நம் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்வேன்
வாழ்த்துக்களுடன்
உங்கள் சகோதரன்
நெய்னா முஹம்மது

said...

அன்பு சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் அழகுத்தமிழில் எழுதத் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து நடையும் அணுகுமுறையும் நன்றாக இருக்கிறது. விரைவில் ஒரு வலைப்பதிவு தொடங்குங்கள் இன்ஷா அல்லாஹ்.