Tuesday, November 27, 2007

மலேஷியாவில் கோயில்கள் இடிப்பு? உண்மை என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்ட கோயிலை அந்நாட்டு அரசு அப்புறப்படுத்தியது. இதையடுத்து அங்குள்ள இந்துக்கள் சிலர் அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். அதோடு இங்குள்ள இந்துத்துவ வகையறாக்கள் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவிற்கான மலேஷிய தூதரிடம் அங்குள்ள கோயில்களை 'பாதுகாக்க' மனுவும் அளித்தனர். (ஏன்னா, 'இடிக்கிற'தெல்லாம் அவங்க வேலையாச்சே!). ஜெ போன்ற அரசியல்வாதிகளும் இதில் தலையிட்டு குட்டையை குழப்ப முயன்று வருகின்றனர்.

ஆனால், உண்மை நிலவரம் என்ன? இடிக்கப்பட்ட ஆலயம் பழமையானது என்பதாலும், முறையான அனுமதியின்றி ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டது என்பதாலும் அதை இடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, கடந்த நவம்பர் 2005-லேயே, ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ள அந்த இடத்தை காலி செய்து தரும்படி சிலாங்கூர் மாநில அரசு அக்கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதோடு கோவிலை இடம் மாற்றிக் கட்டிக் கொள்வதற்காக இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டுள்ளது. இதை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதன் பிறகே அக்கோயில் தற்போது இடிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அந்நாட்டு மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அக்கட்சி ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ சாமிவேலு கூறும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிலம் வழங்கப்பட்டும் புதிய இடத்துக்கு கோவிலை மாற்றுவதற்கு கோவில் நிர்வாகத்தினர் தயக்கம் காட்டி வந்தனர் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இந்துக்கள் கோவில் கட்டும் போது மாநகர மன்றத்தின் ஒப்புதல் பெறாமல் தங்கள் விருப்பத்திற்கு கட்ட வேண்டாம் என்றும் சாமிவேலு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இவ்விவகாரத்தை மதரீதியானதாக நாங்கள் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கோவில்கள் மட்டுமல்லாது இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்ட ஏராளமான பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டுள்ளன என்று மலேஷிய வாழ் முஸ்லிம்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பொதுவாக எந்த நாட்டிலும் இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவது வழக்கம்தான். சென்ற ஆண்டு என்று நினைக்கிறேன், மதுரையில் இது போல ஆக்ரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருந்த பல கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டன. அவற்றுள் சில கோவில்களும், தர்காக்களும் அடக்கம். அது போல சட்டவரையறைக்குள் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே இந்த மலேஷிய நிகழ்வு. அதை ஊதி ஊதி பெரிதாக்கி குளிர்காய முற்படுகின்றனர் இந்துத்துவாக்களும் சில அரசியல்வாதிகளும்.

சிறுதகவல்: மலேசியாவில் ஏறத்தாழ பதினேழாயிரம் கோயில்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாம்.



நன்றி: தமுமுக

1 comments:

said...

//கோவில்கள் மட்டுமல்லாது இது போன்று ஆக்ரமித்து கட்டப்பட்ட ஏராளமான பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டுள்ளன//

மேற்குறிப்பிட்டவை நன்கு புரிந்தும் கூட இத்தகைய போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் குறிப்பிட்ட சில அமைப்புகள் நடத்தும் அரசியல் ஸ்டண்ட் எல்லாம் கீழ்த்தரமாக மத வெறியை ஊட்டி அதன் மூலம் ஆதாயம் தேடுவதற்காகத்தான் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்.

ஊதிப்பெரிதாக்குபவர்கள், வெற்று செல்லாக்காசுகள் என்பது விரைவில் உலகுக்குத் தெரியவரும்.