Showing posts with label முஸ்லிம்கள். Show all posts
Showing posts with label முஸ்லிம்கள். Show all posts

Sunday, June 15, 2008

ஜிஹாதி ஹிட் லிஸ்டும் கோவை அல்-உம்மாவும்!

'திண்ணை.காம்'-ல் மலர் மன்னன் என்பாருடன் நடந்த ஒரு விவாதத்தில் எதிர்வினையாக சகோ.வஹ்ஹாபி அவர்களின் வலைப்பதிவில் கண்ட பதிவு இது! (ஆனால் திண்ணை.காம்-ல் இது வெளியானதாகத் தெரியவில்லை) கோவையில் என்ன நடந்தது என்பதை பல ஆதாரங்களுடன் விளக்கும் ஒரு தொகுப்பு ஆவணமாகவே இதைக் காண்கிறேன். வஹ்ஹாபி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

************

பலமுறை சொன்னதுதான்; மீண்டும் சொல்வதில் தவறில்லை: எந்த ஒன்றைப் பற்றி எழுதத் துணிந்தாலும் அதைப் பற்றி முழுக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் அடிப்படை அளவாவது தெரிந்து கொண்டு எழுதுதல் நலம். இல்லையெனில், சென்ற வாரத் திண்ணையில் 'ஹிட்லிஸ்ட்-ல் பெயர் வருவதற்கு' எழுதிய கார்கில் ஜெய்யும் மலர் மன்னனைப் போலவே இறுதிவரை 'அங்கீகாரம் இல்லாத' வரிசையில் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.

தனக்கு அறிவில்லாத ஒன்றைப் பற்றி எழுதாமல் இருப்பதே உத்தமம். அதை விடுத்து, "தஸ்லீமா அக்காவிடம் போய்க் கேள்; ரஸூல் அண்ணனிடம் கேள்" என்றெல்லாம் எழுதி, தன் அறியாமையைத் தானே வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமா? அவ்விருவரைக் குறித்து அலசி ஆராயா விட்டாலும் குறைந்த பட்சம் திண்ணையில் மட்டுமாவது என்ன பேசப் பட்டிருக்கிறது என்று அறிந்து கொண்டு ஜெய் எழுதியிருக்கலாம்.

போகட்டும்.

ஹிட் லிஸ்ட் உருவாகும் அடிப்படையைப் பார்ப்போம்:

இலங்கைக்கு நமது அமைதிப் படையை அனுப்பிய 'குற்றம்' செய்ததால் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஹிட் லிஸ்ட்டில் வந்தார்.

சீக்கியரின் பொற்கோவிலில் இராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிட்ட 'குற்றம்' செய்ததால் இந்தியாவின் இரும்பு மனுஷி என்றழைக்கப் பட்ட இந்திராகாந்தி ஹிட் லிஸ்ட்டில் ஏறினார்.

இவ்விரு பிரதமர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெயரும் ஹிட் லிஸ்ட்டில் ஏற்றப் பட்டது. அப்பெயருக்குச் சொந்தமானவர் காந்திஜி.

"இந்த நாடு இந்துக்களுக்கு மட்டுமின்றி எல்லாருக்கும் சொந்த நாடு. அனைவரும் ஒற்றுமையாக வாழுங்கள்" என்று கூறிய 'குற்றம்' செய்ததால் அவரும் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றார்.

இதுபோல் நிறைய காட்டுகள் உள. அவை அனைத்தும் சொல்லும் ஒரேயொரு செய்தி என்னவெனில், "ஹிட் செய்பவர்களின் பார்வையில் 'குற்றம்' செய்பவர்களாகக் கருதப் படுபவர்கள்தாம் ஹிட் லிஸ்ட்டுக்குள் கொண்டுவரப் படுவார்கள்" என்பதே.

முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கை என்பதே, "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்பதுதான். "ஒருவனே" என்றபோதே, "இரண்டாமவர் இல்லை - அவர் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக இருப்பினும்" என்பது அடக்கம்.

இந்த அடிப்படையைக்கூட அறியாமல், "எங்கள் இறை தூதரை நாங்கள் வணங்க மாட்டோம்; அவர் எங்கள் வணக்கத்திற்குரியவர் அல்ல என்று இப்னு பஷீரோ அவரது ஆதரவாளர்களோ அறிவிப்பார்களா? அப்படி அறிவித்தால் அவர்களின் பெயர்களேகூட ஜிஹாதிகளின் 'ஹிட் லிஸ்ட்' பெயர்ப் பட்டியலில் வந்துவிடாதா?" என்று மலர் மன்னர் திண்ணையில் சவால் விட்டதற்குச் சில சகோதரர்கள் பதில் எழுதினர்; நானும் அவரது கூற்றிலுள்ள அறியாமையைச் சுட்டிக் காட்டி விளக்கம் எழுதி இருந்தேன்.

முஸ்லிம்களின் கொள்கையைச் சொல்வது 'குற்றம்' என்று கருதும் 'ஜிஹாதி'களுக்கு அவ்வாறு சொல்லும் இபுனு பஷீர் வகையறாக்களை ஹிட் லிஸ்ட்டில் வைக்கும் சாத்தியம் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அது மலர் மன்னனுக்கு எப்படித் தெரியும்? இதே ஐயத்தை ஜெய் கிளப்பியிருக்கிறார்.

ஒரேயொரு வாய்ப்புள்ளது.

மலர் மன்னனுக்கு வடநாட்டில் நிறைய 'முக மதிய' நண்பர்கள் இருப்பதாக அவரே திண்ணையில் தெரிவித்திருக்கிறார். அவர்கள் ஒட்டுத் தாடியை உடைய 'ஜிஹாதி'களாக இருப்பதற்கும் அவர்களது ஹிட் லிஸ்ட்டில் இபுனு பஷீருடைய பெயரும் அவரைப் போலவே அறிவிப்புச் செய்யும் என் போன்றோரது பெயர்களும் ஏறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அல்லது, "எங்கள் வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே" என்ற கொள்கையை ஏற்றுச் செயல்படும் 'குற்றம்' செய்பவர்களைத் தமிழக அளவில் அழித்தொழிக்கும் எண்ணத்தோடு தென்காசியில் குண்டு வைத்த 'ஜிஹாதி'களது ஹிட் லிஸ்ட்டில் எங்களுடைய பெயர்கள் இருப்பதற்கோ ஏறுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன.

***

அடுத்து, முஸ்லிம்களைத் தடுக்கும் காவல்துறையின் கதி என்னவாகும் என்பது கார்கில் ஜெய்யிக்குத் தெரியாது என்பதால் அதைக் கோவை அல்-உம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

கோவையில் அல்-உம்மா என்ற அமைப்பே துடைத்தெறியப் பட்டதைக்கூட அறியாமல் எழுதும் ஜெய்யிக்குக் கோவைக் கலவவரங்கள் குறித்து நிறைய செய்திகள் சொல்ல வேண்டும்.

கோவை நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் அதேவேளை சரியாகவும் அறிந்து கொள்ள வேண்டுமாயின் அவற்றை மூன்றாகப் பிரித்துக் கொள்தல் நலம்:

  1. உக்கடம் போக்குவரத்துக் காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை.

  2. காவல்துறையும் காவிகளும் கைகோர்த்துக் கொண்டு கோவையின் முழு முஸ்லிம் சமுதாயத்துக்கே எதிராக ஆடிய கோரத்தாண்டவம்.

  3. தொடர் குண்டு வெடிப்புகள்.


1. காவலர் செல்வராஜின் அநியாயப் படுகொலை

கடந்த 1997 நவம்பர் மாதம் 29ஆம் நாள் சனிக்கிழமையன்று ஒரு பைக்கில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பயணித்ததற்காகக் போக்குவரத்துக் காவலர் செல்வராஜினால் தடுக்கப் பட்டு, அபராதம் செலுத்துமாறு பணிக்கப் பட்டனர்.

செய்த தவறை உணர்ந்து ஒப்புக் கொண்டு அபராதத் தொகையை அம்மூவரும் செலுத்தியிருந்தால் கோவை கொழுந்து விட்டு எரிந்திருக்காது. சாத்தானின் ஆணவக் குணம் மேலோங்கியதால் அம்மூவரும் தம் சகாக்கள் சிலரைத் துணைக்கழைத்துக் கொண்டு வந்து, கடமையைச் செய்தக் காவலர் செல்வராஜை நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர்.

அதனைத் தொடர்ந்து கோவை மாநகரக் காவல்துறை ஆணையாளர் இராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டிலுள்ள அல்-உம்மா அலுவலகத்திற்குக் காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்துத் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்குத் தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைப்பதாகவும் அல்-உம்மாவின் பொதுச் செயலாளர் அன்சாரீ தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அப்பாஸ்(22), ஷபி(22), மற்றும் ஷஃபி(20) ஆகிய மூன்று முஸ்லிம் வாலிபர்கள் காவல்துறையிடம் சரணடைந்தனர்.

சரணந்தவர்களை விசாரித்து, நீதியின் முன் நிறுத்தி, உரிய/உச்சபட்ச தண்டனை வழங்கியிருந்தால் 19 அப்பாவி முஸ்லிம் உயிர்களைப் பலிவாங்கிய கொடுமையையும் முஸ்லிம்களின் கோடிக்கணக்கானச் சொத்துகளின் நாசத்தையும் முஸ்லிம் பெண்களின் மானபங்கத்தையும் கோவை சந்தித்திருக்காது.

***

2. கோவை முஸ்லிம்களுக்கு எதிரான காவி-காவலர்களின் போர்

காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் (30.11.1997) கோவை நகர் முழுதும் காவி-காவலர்களின் கோரத் தாண்டவம் அரங்கேறியது. காவலர் செல்வராஜின் உடல் வைக்கப் பட்டிருந்த கோவை அரசு மருத்துவமனையின் வளாகத்திலும் கலவரம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனை வளாகத்தில் நின்றிருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த பலர் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியும் தீவைத்தும் எரித்தனர். அந்தப் பரபரப்பான சூழ்நிலையின்போது உக்கடத்தில் நடந்த கலவரத்தில் காயம் அடைந்த சிலர் ஒரு வேனில் கொண்டுவரப்பட்டனர். அந்த வேனைப் பார்த்த காவிக் கலவரக் கும்பல் நேராக அந்த வேனுக்குச் சென்று வேனில் இருந்த ஹபீப் ரகுமான் என்பவரைக் கத்தியால் குத்திக் கொன்றது.

சற்று நேரங் கழித்து, மருத்துவமனை வளாக நிலவரம் தெரியாமல் உக்கடப் பகுதிக் கலவரத்தில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அயூப்கான் என்பவரைப் பார்ப்பதற்காக அவருடைய தம்பி ஆரிஃபும் சுல்தான் என்பவரும் ஒரு ஸ்கூட்டரில் வந்தனர். அவ்விருவரையும் கொல்வதற்குக் காவிப்படை ஓடிவந்தது. அவ்விருவரும் அரசு மருத்துவமனை வாசலிலேயே ஸ்கூட்டரைப் போட்டுவிட்டு ஓடினர். ஆனால் வன்முறைக் காவிகள் அவர்களை விரட்டிப் பிடித்துத் தாக்கினர். ஆரிஃபை அடித்துக் கொன்றனர். சுல்தான் பலத்த காயங்களுடன் தப்பி ஓடி விட்டார்.

மருத்துவமனை வளாகத்தில் கொலைவெறிக் காவிகள் குவிந்திருப்பதை அறியாமல் லியாகத் அலிகான் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு வந்தபோது அவரை மருத்துவமனையின் வசலிலேயே வன்முறைக் கும்பல் தடியால் அடித்துக் கொன்றது.

அந்தக் கலவரத்தில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மட்டும் ஹபீப் ரகுமான், ஆரிஃப், லியாகத் அலிகான் ஆகிய மூவர் கத்தியால் குத்தப் பட்டும் அடித்தும் கொலை செய்யப் பட்டனர்.

ஹாரிஸ் என்ற இளைஞர் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தப் பட்டான்.

அந்தக் கொடுமையை ஜூனியர் விகடன் [7 டிசம்பர் 1997] நம் கண்முன் கொண்டு வருகிறது:"கோவையில் நடைபெற்ற கலவரத்தின்போது, கொடூரமான தாக்குதலிலும் சாகாமல் ஓர் ஆள் மட்டும் துடித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு போலிஸ்காரர் ஓடினார். பக்கத்தில் இருந்த போலிஸ் வாகனம் ஒன்றில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோலைப் பிடித்துக் கொண்டு வந்து அந்த ஆள் மீது ஊற்றினார். அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து அதிர்ச்சியுடன் பார்க்க... யாரோ ஒருவன் ஓடிவந்து தீக்குச்சியைச் சுண்டிப் போட்டான். அவ்வளவுதான்... அந்த இளைஞர் தகதகவென்று எரியத் தொடங்கினார். ஒரு டாக்டர் தீயை அணைக்க முயன்றார். உடனே சுற்றி நின்றவர்கள் அந்த டாக்டரைப் பார்த்து சத்தம் போட - வேறு வழி தெரியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து டாக்டர் பின்வாங்கி ஓட வேண்டியதாகி விட்டது."

காவிக் கொலைவெறியர்களோடு காவலர்களும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய கோவைக் கொலைகளுள் அரசு மருத்துவமனை வளாகக் கொலைகள் தொடர்பாக மட்டும் 14 காவியரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கோவை 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதி எம்.பூபாலன் இந்த வழக்கை விசாரித்து, பிரபாகரன், மகேஸ்வரன், விவேகானந்தன், உமாசங்கர், நாராயணன், குமரன், குருநாதன், மணிகண்டன், சீனிவாசன், மாணிக்கம், நாகராஜ் ஆகிய 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கினார். சி.எஸ்.ராஜு, சம்பத், ஆனந்தன் ஆகிய மூவர் விடுதலை செய்யப் பட்டனர்.

ஆயுள் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேற்காணும் 11 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் எம்.கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, "11 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை" என்பதாகக் கூறி அனைவர் மீதும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தனர். கோவை மருத்துவமனை வளாகக் கொலை பாதகர்கள் அனைவரும் அந்த வழக்கிலிருந்து ஒட்டு மொத்தமாக விடுதலையானபோது நீதிதேவதை கண்களை மட்டுமின்றி முகத்தையே மூடிக் கொண்டாள். இது, 30.11.1997இல் நடந்தேறிய கோவை அரசு மருத்துவமனை வளாக வன்முறைக் கொலைகளும் அவை சார்ந்த வழக்குகள் மட்டுமே.

கோவை நகர் முழுதும் நடந்தேறிய காவி-காவலர்கள் ஆடிய கோரத் தாண்டவம் குறித்து பிரண்ட் லைன் மாதமிருமுறை இதழில் (13-26 டிசம்பர் 1997) அதன் சிறப்புச் செய்தியாளர் டி.வி.என்.சுப்பிரமணியன் பின்வருமாறு வருணிக்கிறார்:

"மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று (30.11.1997) வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமல்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்புப் பட்டைகளை அணிந்து திருச்சிசாலை-டவுன்ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல் துறையினரின் மனைவியரும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம்வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.

உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய இடங்களில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கிக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கையக் கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைட்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. கட்டிடங்கள் தரைமட்டமாயின. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகாரக் கடைகள், காலணிக் கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களைத் தெருவில் போட்டுத் தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்குச் சட்டமன்ற உறுப்பினர்
சி.டி.தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி.ரவி அங்கே வந்த போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்துத் தீவிரவாதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். சி.டி தண்டபாணிக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன. (தான் தேர்தலில் ஜெயித்தால் "முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளைப் போலக் கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்" என்று உறுதியளித்து அதை நிறைவேற்றியுமிருந்தார் தலித் சமூகத்தைச் சேர்ந்த தண்டபாணி).

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முஸ்லிம்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர்; அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர்.
ஹபீபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார். இதைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்றத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது.
வார்டு பாய் ஒருவர் அவரை ஓர் அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக்
காப்பாற்றினார்.

தனது ஆயுட்காலச் சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்தியேகப் பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத்
தலைவி அழுது கொண்டே 'எனது கல்யாணப் பட்டுச்சேலை எரிந்து விட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை' என்று நம்மிடம்
சொன்னார். 'அருகிலுள்ள பி1 காவல் நிலையத்திற்குத் தகவல் தந்த போதிலும் அவர்கள்
தங்களுக்கு உதவ முன்வரவில்லை' என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்.


"பிரபலப் பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நாய்யார் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழில் 'எ காங் இன் தி வீல்' என்ற தலைப்பில் 3 ஜனவரி 1998இல் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"நான் அந்த நகரத்திற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன; அல்லது சூறையாடப்பட்டன; கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிகள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்புக் கோடியைத் தாண்டும். இதனை ஹிந்து-முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கர்யத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. காவல் துறையினர் ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர் என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றம் சாட்டுகின்றது. ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். இதனைத் தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு இது சிறிய பிரச்சினை அல்ல. 12 வயது பாலகன் அபுபக்கர் சித்திக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரின் தம்பி முஹம்மது ஆரீப் கர்ண கொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறைக்க முடியாதவை."


தி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி 14 டிஸம்பர் 1997 இதழில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:

"நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட
(முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதைக் கடைகள், முதல்தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர்தான் தீ வைப்புச் சம்பவங்களுக்குத் தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில், 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட, சில காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்"


காவிகளோடு காவலர்கள் கைகோர்த்துக் கொண்டு கோவை முஸ்லிம்களைக் கொடூரமாகக் கொன்றும் அவர்தம் சொத்துகளைச் சூறையாடியும் ஆடிய கோரத் தாண்டவம் வீடியோவாகப் பதிவு செய்யப் பட்டு, டெல்லியில் இயங்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் தேசியச் சிறுபான்மை ஆணையத்திடமும் சமர்ப்பித்து முறையாக நீதி கோரப் பட்டது. அப்போது கிடைக்க வேண்டிய நீதி கிடைத்திருந்தால் கோவை குண்டுவெடிப்பு நாசம் தவிர்க்கப் பட்டிருக்கும்.

***

3. கோவை குண்டு வெடிப்பு

1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தலைவர் அத்வானி கோவை வந்தார். அவர் வருவற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன.

காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், அரசு மருத்துவமனை உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கோவை நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் முதல் குற்றப் பத்திரிகை 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இறுதிக் குற்றப்பத்திரிக்கை 1999ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 7.4.2000இல் குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 2001ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கில் 180 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 166 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்குத் தொடர்பாக 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சாட்சிகள் விசாரணை 7.3.2002இல் தொடங்கியது.

சிறையில் அடைக்கப்பட்ட 166 பேரில், 3 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்ளை உறுதிப் படுத்தியோ மறுத்தோ, விசாரிக்கப் பட்ட 1,300 சாட்சிகளுள் ஒருவர்கூட சாட்சியம் அளிக்கவில்லை. இதன் அடிப்படையில் தங்களை வழக்கில் இருந்து விடுவித்து, சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என அம்மூவரும் கோரியதை, கோவை குற்றவியல் நீதிமன்றம் எவ்விதக் காரணமும் கூறாமல் நிராகரித்தது.

இவ்வழக்கில் கைதான சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் ஆகிய இருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கையின் எந்த இடத்திலும் இவர்களது பெயர்கள் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. ஆவணங்கள் அல்லது சாட்சிகளின் அடிப்படையில்தான் ஒருவரைக் குற்றவாளி/நிரபராதி என்று உலகெங்கிலும் உள்ள நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. FIR பதிவு செய்யாமல், எந்தவித ஆவணமும் இல்லாமல், சாட்சிகளும் இல்லாமல் சர்தாரும் அப்துல்லாஹ்வும் சிறைவாசம் அனுபவித்த கொடுமையும் இவ்வழக்கில்தான் நடந்தேறியது.

45 முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, நான்கே நான்கு பேர்தான் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நான்கு சாட்சியங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்து முன்னணியின் உறுப்பினர்கள்.

இக்குண்டு வெடிப்பு தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த அப்துல் நாசர் மஅதனி மீது, சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனாலும், அதற்கான சாட்சியம் நீதிமன்றத்தில் தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து, தனக்குப் பிணை வழங்காவிட்டாலும் கூட, கேரளத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தன்னை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் மஅதனி மனுக் கொடுத்தார். மஅதனியின் மனுவை உச்சநீதி மன்றம் காது கொடுத்துக் விசாரிக்கக்கூட மறுத்துவிட்டு, விசாரணையின்றியே தள்ளுபடி செய்தது.

முஸ்லிம் 'தீவிரவாதி' மஅதனியிடம் இப்படிக் கறாராக நடந்து கொண்ட இதே உச்சநீதி மன்றம், சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என முறையீடு செய்த ஜெயேந்திரருக்கு, அவ்வழக்குத் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, அவ்வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட சதிக் குற்றச்சாட்டில் இருந்தே அவரை விடுதலை செய்தது.

"மஅதனியை வெளியே நடமாட அனுமதித்தால், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விடும். எனவே, அவரைப் பிணையில்கூட வெளியே விடக் கூடாது'' என அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது தனிஅரசாணை போடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட இந்த அரசாணை, தி.மு.க. ஆட்சியிலும் நீக்கப்படவில்லை.

சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மஅதனியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரைக் குறைந்தபட்சம் மருத்துவச் சிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

சில மாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓர் அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். அவ்வறிக்கையில் பேரா. அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர் வீராசாமி, கவிஞர் சுகிர்தராணி, வழக்கறிஞர் ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மஅதனி பிணையில் விடுவிக்கப்படவில்லை. (அந்த அறிக்கையையும் அதில் கையெழுத்திட்டவர்களையும் "தீவிரவாதிகளுக்குப் பால்" வார்ப்பதாகச் சாடி திண்ணையில் ஒரு கட்டுரையும் வந்தது).

ஆனால் இப்போது மஅதனி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்தக் குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மஅதனியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீஸ் ஆகியவை எப்படி ஈடுகட்டும்? இது மஅதனிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வி.

கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சுமத்தப்பட்டபோது சிறுவன் அப்பாஸுக்கு வயது 16. அவனுக்குச் சிறைச்சாலையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அறுவைச் சிகிச்சைக்கு முன் அவனுக்கு நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், அவன் எவ்வித நோய்த் தொற்றும் இன்றி உடல் நலத்தோடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகோ, 'எய்ட்ஸ்' நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் அவனது இரத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை மருத்துவமனையின் அலட்சியம் என்பதா, அல்லது மருத்துவத் துறையிலும் புகுந்து கொண்டு பழி தீர்த்துக் கொள்ளும் காவிவெறி என்பதா?.

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட இம்முஸ்லிம்கள் அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்கூட, அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைதான் தண்டனை வழங்க முடியும். ஆனால், பிணைகூட கிடைக்காமல் ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகளைச் சிறையில் கழித்து விட்டனர். விசாரணையின்றித் தண்டிக்கப்பட்டுள்ள இந்த அரசு பயங்கரவாதத்தை என்னவென்று அழைப்பது?.

'தடா'சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில்கூட, நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்டுப் பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரணக் குற்றவியல் சட்டங்களின்கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 166 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை. எவ்விதக் குற்றமும் நிரூபிக்கப் படாத மஅதனிக்குப் பிணையே வழங்கக்கூடாது என அ.தி.மு.க. ஆட்சியில் உத்தரவு போடப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அல்உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 69 பேர் மீது சதிக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் 84 பேர் மீது சதிக் குற்றச்சாட்டு அல்லாத வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் தீர்ப்பளித்துள்ள சிறப்பு நீதிமன்றம், மஅதனி உள்ளிட்ட 8 பேரின் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறது.

இத்தீர்ப்பின்படி, 84 பேர் மீதான சதிக் குற்றச்சாட்டு — அதிகபட்சமாக தூக்கு தண்டனைத் தரக்கூடிய குற்றம் — நிரூபணமாகவில்லை. ஆனால், இவர்கள் ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக ஒன்பதரை ஆண்டு்கால 'தண்டனையை' அனுபவித்து விட்டதால், இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து வெளியேவிட்டால், அரசின் நடுநிலையான நீதி பரிபாலனை முறை அம்மணமாகிவிடும். அதனாலேயே இவர்கள் அனுபவித்த தண்டனைக் காலத்தை ஈடு செய்யும் வகையில, தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதாக எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

மஅதனி உள்ளிட்ட 8 பேர் மீது அரசால் சாட்டப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை. ஆனாலும், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய மறுத்துவிட்ட சிறப்பு நீதிமன்றம், விரும்பினால் இவர்கள் பிணையில் வெளியே போகலாம் என உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தாலேயே நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளைப் போலப் பிணையில் வெளியே வந்துள்ள அதிசயமும் இந்த வழக்கில்தான் நடந்தது. தண்டனை அல்லது விடுதலை என்ற நீதி பரிபாலனமுறைக்கு இது எதிரானது என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் இத்தீர்ப்பைக் கண்டித்துள்ளனர்.

ஐந்து பேர் மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்த சிறப்பு நீதிமன்றம், "இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக"க் 'கண்டுபிடித்து'த் தீர்ப்பளித்தது. "இந்த ஐந்து பேர் மீது புதிதாகக் குற்றம் சுமத்தப்பட ஆதாரம் இருந்தால், அக்குற்றச்சாட்டுகளை தனியாக விசாரணை நடத்திதான் தீர்ப்பளிக்க வேண்டும்" என எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் கூறியதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், "இந்நீதிமன்றம் குற்றவியல் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் தீர்ப்பு அளிப்பதாக" எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் திருமலைராசனும், ப.பா.மோகனும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிறப்பு நீதிமன்றம் சார்புத்தன்மையோடு, கொஞ்சம் பச்சையாகச் சொன்னால் காவித் தன்மையோடு நடந்து கொண்டதை நிரூபிக்கும் ஆதாரங்கள் இவை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சட்டபூர்வ உரிமைகளை மறுத்ததன் மூலம், அவர்களை எப்படியாவது தண்டித்துவிட வேண்டும் என்பதில் போலஸும் நீதிமன்றமும் கள்ளக் கூட்டாளிகளாகச் செயல்பட்டதை இவ்வழக்கு விசாரணை நெடுகிலும் காண முடியும்.

கோவை குண்டு வெடிப்பை, கோவை கலவரத்தோடு தொடர்பில்லாத தனித்ததொரு நடவடிக்கையாகப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவை கலவரத்தின் எதிர்வினைதான் கோவை குண்டு வெடிப்பு. இந்தியக் குற்றவியல் சட்ட நடைமுறையின்படி, கோவைக் கலவரத்தைதான் கோவை குண்டு வெடிப்பின் தூண்டுதல் வழக்காகவும், எதிராளியை வம்புச் சண்டைக்கு இழுத்த வழக்காகவும் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.

"இக்கோவைக் கலவரம் கூட, செல்வராஜ் என்ற போக்குவரத்துக் காவலர் சில முஸ்லிம் இளைஞர்களால் கொல்லப்பட்டதையடுத்து, தன்னெழுச்சியாக நடைபெற்றதல்ல; மாறாக, இந்துத் தீவிரவாதிகளும் போலீஸும் கைகோர்த்துக் கொண்டு நடத்திய வன்முறை" என அக்கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய கோகுலகிருஷ்ணன் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

கோவை கலவரத்தைத் தூண்டுதல் வழக்காக நிர்ணயித்து, குண்டு வெடிப்பு வழக்கை நடத்தியிருந்தால், குண்டு வெடிப்பு வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்; அல்லது, குறைந்தபட்ச தண்டனைதான் கொடுத்திருக்க முடியும். இச்சட்ட பூர்வ உரிமை முஸ்லிம்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே, கோவை கலவரத்தைப் பற்றி சிறப்பு நீதிமன்றம் வாய் திறக்கவே மறுத்துவிட்டது.

குற்றச்சாட்டு வனையப்படும் பொழுதே 'அக்குற்றச் சாட்டுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரும் மனு கொடுத்து, அதன் மீது விசாரணை நடத்தக் கோரும் உரிமை' குற்றம் சாட்டப்பட்டோருக்கு உண்டு. "குற்றப்பத்திரிகை 17,000 பக்கங்களைக் கொண்டிருப்பதால், அதைப் படித்து விடுவிப்பு மனு தாக்கல் செய்யக் கால அவகாசம் அளிக்க வேண்டும்" என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரினர். ஆனால், "உச்ச நீதி மன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு இட்டிருப்பதாக"க் கூறி, கால அவகாசம் அளிக்க மறுத்து விட்டது, சிறப்பு நீதிமன்றம்.

இவ்வழக்கில் 9 ஆவது குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்படிருந்த ஓம்பாபு என்பவருக்கு எதிராக, அவரது தம்பி முனாஃபைச் சாட்சி சொல்ல போலீஸார் அழைத்து வந்தனர். முனாஃப் நீதிமன்றத்திலேயே, "தன் அண்ணனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல போலீஸார் தனக்கு இலஞ்சம் கொடுத்ததை" அம்பலப் படுத்தியதோடு, போலீஸார் கொடுத்த பணத்தையும் நீதிமன்றத்திலேயே ஒப்படைத்தார்.

விசாரணையின்போது, சாட்சிகள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் தடுமாறியபோது, போலீஸாரே சாட்சிகளுக்குக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி 'உதவி' செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதியோ, போலீஸாரின் இந்த அத்துமீறலைக் கையைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்.

குற்றவாளிகளைச் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போதும் சிறைச்சாலை வாசலில் சாட்சிகளை நிற்க வைத்து, அவர்களுக்குக் குற்றவாளிகளை போலீஸார் 'அடையாளம் காட்டி' இருக்கின்றனர். போலீஸாரின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைக் குற்றவாளிகள் நீதி மன்றத்தில் முறையிட்ட பிறகும்கூட, சாட்சிகளை போலீஸார் தயார் படுத்துவதை நீதிபதி தடுக்கவில்ல.

கோவை மேட்டுப்பாளையம் சாலையையொட்டி அமைந்துள்ள கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த 38 பேர் மீது குண்டு வெடிப்பு வழக்கு பாய்ந்தது. "இவர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை; குண்டு வெடித்த நாளன்று மாலையில் இந்து முன்னணியினர் கருணாநிதி நகரினுள் புகுந்து, கலவரம் நடத்தி, இந்த 38 பேரைப் பிடித்துச் சென்று போலீசில் அன்றே ஒப்படைத்ததையும் போலீஸார் அவர்களை இரண்டு நாட்கள் கழித்து 16.02.92 அன்று கைது செய்ததாகக் காட்டிய பொய்யையும் அந்த 38 பேருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த வி.என்.ராஜன், இந்து முன்னணியைச் சேர்ந்த முழுநேர ஊழியர் என்பதையும் 'கைது செய்யப் பட்ட' 38 முஸ்லிம்களுக்கும் எதிராகச் சாட்சியம் அளித்த அனைவரும் வீ.என். ராஜனின் சொந்தக்காரர்கள் என்பதையும் எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் விசாரணையின் பொழுது நிரூபித்துள்ளனர். எனினும், ஒரு இந்து முன்னணி குடும்பத்தின் பொய் சாட்சியத்தை நம்பி, 38 முஸ்லிம் குடும்பங்களைத் தண்டித்திருக்கிறது, நீதிமன்றம்.

அத்வானியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த பி.பி.ரோடு, சம்பந்தம் சாலை உள்ளிட்ட மூன்று 'வெவ்வேறு இடங்களில்' குண்டு வைத்த தீவிரவாதிகளை 'நேரில் பார்த்த சாட்சியாக' விஜயகுமார் என்ற ஒரே ஆள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இவரைப் போல 62 சாட்சிகள், 'வேறுபட்டப் பல இடங்களில்' குண்டு வைத்துவிட்டுப் போன குற்றவாளிகளை 'நேரில் பார்த்த சாட்சிகளாக' நிறுத்தப்பட்டனர். சினிமா கதாநாயகர்களைப் போல இந்த சாட்சிகள், 'இரண்டு மூன்று ரோல்களில் பிறந்திருந்தால்' மட்டுமே இது சாத்தியம் என்பதால், இந்த 62 சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த வழக்கின் மிக முக்கியமான குற்றவாளியாக முன் நிறுத்தப்பட்ட மஅதனிக்கு எதிராக அழைத்து வரப்பட்ட 23 சாட்சியங்களுள் ஒருவர்கூட, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சியம் அளிக்கவில்லை. இதிலிருந்தே போலீஸாரின் புலன் விசாரணை எந்த இலட்சணத்தில் நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த 1,300 சாட்சியங்களுள் பெரும்பாலானவை, போலீஸ் தயார்படுத்திக் கொண்டுவந்த பொய்சாட்சியங்கள்; அல்லது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதை விசாரணையின்போதே எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் நிரூபித்துள்ளனர். எனினும், அச்சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நடுநிலையான, நியாயமான தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியுமா?

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கின் விசாரணை தொடங்கும் முன்பே, அவர் சதிச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என நற்சான்றிதழ் வழங்கியது நீதிமன்றம். ஆனால், மஅதனி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, அவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.

அமெரிக்கா, அல்கொய்தா தீவிரவாதிகளை விசாரணையின்றித் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதை எழுதிய இந்தியப் பத்திரிகைகள், தமிழ்நாட்டில் 166 முஸ்லிம்கள் பிணைகூட வழங்கப்படாமல் துன்புறுத்தப்பட்டதைக் கண்டுகொள்ளவேயில்லை.

***

நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப் பட்டது.

அல்-உம்மாவின் தலைவர் கோவை பாஷாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் பொதுச் செயலாளர் அன்ஸாரீக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப் பட்டது.

தங்களின் ஆணவத்தால் தங்களையே அழித்துக் கொண்டது மட்டுமின்றி, தங்கள் சொந்தச் சமுதாய மக்களின் விலை மதிப்பற்ற 19 உயிர்களையும் கோடிக்கணக்கில் உடமைகளையும் தம் சமுதாயப் பெண்கள்தம் மானத்தையும் இழந்து வீதியில் நிற்பதற்கு முதல் காரணமானவர்களான அல்-உம்மாவின் அந்த பைக் வீரர்கள் மூவரும் முஸ்லிம்களின் மன்னிப்புக்குக்கூட அருகதை அற்றவர்கள்.

காவலர் செல்வராஜ் கொலை, கோவைக் கலவரம், குண்டு வெடிப்பு ஆகியவை குறித்து இன்னும் ஏராளம் எழுதலாம். இவற்றையெல்லாம் அறியாமல் வெறுமனே, "கோவை அல்-உம்மாவிடம் கேட்டுக் கொள்" என்று இல்லாத ஓர் அமைப்பிடம் போய்க் கேட்கச் சொன்ன கார்கில் ஜெய் இன்னொன்றும் எழுதியிருக்கிறார். நான் பொய் எழுதியிருக்கிறேனாம். மலர் மன்னன் உண்மையை எழுதியிருக்கிறாராம். இரண்டையும் இனிமேல்தான் நிரூபிக்கப் போகிறாராம்.

போகிற போக்கில் சேறடிக்காமல் ஒவ்வொன்றுக்கும் சான்றுகளை முன்வைத்து எழுதுபவன் என்று திண்ணை வாசகர்களுக்கு வஹ்ஹாபியைப் பற்றி நன்கு தெரியும். உண்மைகளை ஜெய் நிரூபிக்கட்டும். அதற்கு முன்னர் இக்கட்டுரையில் இணைப்பாகவும் ஆறாவது சுட்டியாகவும் கொடுக்கப் பட்டுள்ள உயிரோடு எரிக்கப் படும் இளைஞனையும் அதை ஆசையோடு வேடிக்கை பார்க்கும் கடமை தவறாத காவலரையும் ஒரு முறை பார்த்துக் கொள்ளட்டும்.

ஃஃஃ

சுட்டிகள்:

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80806056&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708236&format=html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805152&edition_id=20080515&format=html

http://poar-parai.blogspot.com/2008/01/rss.html

http://newscap.wordpress.com/2008/02/04/

http://to.wahhabi.googlepages.com/Kovai_violance.jpg

http://nihalvu.blogspot.com/2006/06/blog-post.html

http://www.keetru.com/vizhippunarvu/sep07/jawaahirullah.php

http://www.thinnai.com/?module=displaystory&story_id=206100610&format=html

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1193:2008-05-04-17-14-12&catid=36:2007&Itemid=78

http://www.hindu.com/2006/03/08/stories/2006030809270500.htm

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1096:2008-05-01-08-55-50&catid=36:2007&Itemid=78

Monday, June 02, 2008

இஸ்லாமும் இந்தியாவும்!

' இஸ்லாமும் இந்தியாவும்' என்ற தலைப்பில் கம்யூனிஸ்ட் தலைவர் திரு. டி.ஞானையா எழுதியிருக்கும் நூலைப் பற்றிய தேவ. பேரின்பனின் விமரிசனக் கட்டுரை.

மத அடிப்படைவாதம் இன்றைய உலக அரசியலில் மிகுதியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிருத்துவம், இஸ்லாம், பௌத்தம், இந்து முதலிய மதங்களின் அடிப்படைத்தன்மைகளைப் புதுப்பிப்பது என்ற பெயரால் நவீன அரசியல் ஒன்று நடத்தப்படுகிறது. அது பாசிசத்தையும் பயங்கர வாதத்தையும் கட்டவிழ்த்துவிட்டு அதன் வழியே அறிவிக்கப்படாத போர் ஒன்றும் உலகு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது.

இது யாருடைய போர்? எதற்காக நடத்தப்படுகிறது? யாருடைய நலனுக்காக இந்த மனிதப் படுகொலைகள் நடத்தப்படுகின்றன? போன்ற கேள்விகளுக்கு ஏகாதிபத்தியத்தின் தற்போதைய உலகச் சந்தை செயல்பாட்டிலிருந்தே விடை காண முடியும். காலனிய காலங்களில் பழமையாளர்களாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் தேசிய அளவில் வளர்க்கப்பட்ட மத வகுப்புவாதம் இன்று உலகு தழுவியதாகவும், மக்களின் குடிமை வாழ்வில் அதிகாரத்தோடு தலையிட்டு கொலைவெறியாகவும். பாசிசமாகவும் மாறிவிட்டது.

அது இப்போது உலக மயத்தை இயக்கும் மூலதன சக்திகளின் அரசியல் கருவியாகச் செயல்படுகிறது. இதன் காரணமாகவே, சாமுவேல் ஹட்டிங்டனின் ‘பண்பாடுகளின் மோதல்’ கோட்பாடு ஏகாதிபத்தியத்தின் கொள்கையியலாகப் போற்றப்படுகிறது.

இதற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல நிலைகளில் வளர்க்கப்பட்ட மதம் சிதைக்கப்பட்டு பாசிசத்தின் கருவியாக இன்று மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது.

அடையாள அரசியலின் வழியே இது ஒவ்வொரு தனி நபரையும் அடைகிறது; அவனை வெறியூட்டுகிறது; அவனது மரபுசார்ந்த மதம் என்ற வேரைப் பிடுங்கி அரசியல் அதிகாரத்துக்கான ஒரு கருவியாகுகிறது.

மதம் ஒரு கருத்தியலாக - ஒரு சமூக நிறுவனமாக - ஒரு நம்பிக்கை ஏற்பாடாக - ஒரு தத்துவ முறையின் சாதனமாக சமூக வாழ்விலும், தனி மனிதனுள்ளும் செயல்பட்டு வந்துள்ளது. அது மனித உணர்வு நிலையின் செயல் தனி மனிதனுள்ளும் செயல்பட்டு வந்துள்ளது. அது மனித உணர்வு நிலையின் செயல்பாடாகவே அமைந்தது. அது அரசியல் தன்மையுடையதாகவே வரலாறு நெடுகிலும் இருந்துள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட மதம் என்று எதுவும் இல்லை. மதம் என்ன சொல்கிறது என்பது முக்கியமில்லை. அது என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம் என்றார் டர்க்ஹைம். அந்தச் செயல் வெறும் பண்பாடு வகைப்பட்டதல்ல; பண்பாடு வழியே ஆன அரசியல் பற்றியது. அரசியல் வர்க்கப்போராட்டம் பற்றியது.

மதங்களின் வரலாறு நெடுகிலும் இந்த அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சியைக் காணமுடியும். ஏசு சிலுவையில் கொல்லப்பட்டதும், புத்தர் ஆட்சியைத் துறந்ததும், நபிகள் நாயகம் மெதினா ஆட்சியை அமைத்ததும், தமிழகத்தில் சமணர்கள் சைவர்களால் வேட்டையாடப்பட்டு கழுவேற்றப்பட்டதும் இன்ன பிறவும் அரசியல்தான்.

மதம் என்ற எல்லைக்குள்ளேயே மனித நேயத்தை போற்றுவதற்கான மக்கள் நலனுக்கான இயக்கம் அனைத்து மதங்களிலும் நடைபெற்று வந்துள்ளது. அதுவும் ஒரு அரசியல் வகைப்பட்ட இயக்கமாகவே இயங்கியது.

மரபு சார்ந்த மானுட உணர்வு மற்றும் நிறுவனம் என்ற வகையில் மக்களை அரசியல் ரீதியாக செயல்படவைக்க அது பயன்படுத்தப்படுவது 20ஆம் நூற்றாண்டு அரசியலில் தீவிரமடைந்தது. காலனியத்தை எதிர்த்த தேசிய புரட்சிகளுக்கு மக்களைத் திரட்ட மதம் புதிய விளக்கங்களைப் பெற்றது. அதே சமயத்தில் முதலாளியத்தின் வளர்ச்சியால் மறையும் வர்க்கங்களின் / சமூகப்பகுதிகளின் நலனைக் காக்கவும் மதப்பழமைவாதம் அரசியலாக வளர்க்கப்பட்டது.

அதே சமயத்தில், முதலாளித்துவப் புரட்சி ஜனநாயக ஆட்சி முறை மதச்சார்பின்மை கோட்பாட்டை அடிப்படையான கோட்பாடாக முன்வைத்தது. இதுவுலகப் பிரச்சனைகளில் மதம் தலையிடக்கூடாது என்ற கொள்கை மக்களின் குடிமை வாழ்விலும், அரசியல்/சமூக வாழ்விலும் மதச்சார்பற்ற தன்மையை வளர்த்தது. அறிவியல் மனோநிலையை வளர்ப்பதன் மூலம் இத்தகைய மதச்சார்பற்ற தன்மையை வளர்க்க அரசுகளே செயல்பட்டன. ஐரோப்பிய நாடுகளின் மதச்சார்பின்மைக்கு இந்த அடிப்படை உண்டு.

ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் அறிவியலுக்கு எதிரான ‘போலி அறிவியல்’ மேலைய நாடுகளில் வளர்க்கப்பட்டு அடையாள அரசியல் மாற்றாக முன் வைக்கப்பட்டது. அது ‘நாம்’ ‘அவர்கள்’ என்ற இரண்டு எதிர்எதிரான படைப்பிரிவை உருவாக்கியது. இரண்டுக்கும் இடையிலான புனிதப்போரை - அதிகாரத்தை - இதிகாசப்போரை பிரகடனப்படுத்தியது.

மனித உள்ளங்களில் மதவெறி கொண்ட போர் மனநிலை சதா நிலவுவதற்கான கருத்தியல் நியாயங்கள், கோட்பாடுகள் மிகுந்த செலவு செய்து பரப்பப்படுகிறது. தனது அடையாளப் பெருமிதத்தை மீட்பதற்காகவே மதங்களின் பெருமரபு ஒன்றும் ஆக்கப்படுகிறது. ஏகாதிபத்திய உலகமயத்தின் சுரண்டலை எதிர்த்த கிளர்ச்சிகள் இடதுசாரித் தன்மையை உலகு தழுவிய அளவில் வளர்ந்துவரும் நிலையில் - பெண் விடுதலை - ஒடுக்கப்பட்டோர்; சமூக நீதி போன்ற ஜனநாயக எழுச்சி உருவாகி வரும் நிலையில் கிருத்துவ / இஸ்லாமிய / இந்து மத அடிப்படையிலான ‘பெருமரபு’ ஒன்று அரசியலாக ஆக்கப்பட்டு அந்தப் பெரு மரபுக்கு நிரந்தர எதிரியாக மாற்றுமதம் ஒன்றை முன் வைத்து பண்பாடு அரசியல் ஒன்றை வளர்ப்பதில் ஏகாதிபத்தியம் கவனமாகச் செயல்படுகிறது.

இந்தியாவில் வகுப்புவாதம் இன்றைய வளர்ச்சியில் ஒவ்வொருவரின் மூளையையும், இருதயத்தையும் வேட்டையாடிய வண்ணம் உள்ளது. 80சதவீதமான மக்களை இந்துத்துவா அடிப்படையில் திரட்டவும், 15 சதவீதமான இஸ்லாமிய மக்களை எதிர்த்த தர்மயுத்தத்தின் வழியே ராமராஜ்யம் ஒன்றுகட்டவும் ஆன பிரகடனங்களுக்கான கருத்தியல்கள் வலுவாக மக்களைச் சென்றடைந்துள்ளன.

அறிவியல் மனோநிலை வளர்ச்சி குன்றிய மதச் சார்பற்ற வாழ்நிலை பலவீனமாக உள்ள நிலையில் அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் மதச்சார்பின்மை கோட்பாடு வகுப்பு வாதத்தின் மதச்சார்பு வாழ்க்கைமுறையோடு கூடிய அரசியல் தாக்குதலால் நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்துத்துவா பாசிசத்தை நோக்கிய கருத்தியல்களை வலுவாக்குகிறது.

இஸ்லாமியர்கள் வெளியார்; பழமையாளர்; மாறாதவர்கள்; ஒவ்வாதவர்கள்; சகிப்புத்தன்மையற்றவர்கள்; முரடர்கள்; பயங்கரவாதிகள்; இப்படிஇன்னபிற. இஸ்லாமும், இஸ்லாமியர்களும் பொதுவாக ‘அவர்கள்’ என்ற எதிரிப்படையினராக வைக்கப்பட்டு அணுகப்படும் கண்ணோட்டம் இன்று மேலோங்கி வளர்க்கப்பட்டுள்ள சூழலில் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் சரியாகப் புரிந்துகொள்ள ஞானையாவின் ‘இஸ்லாமும் இந்தியாவும்’ என்ற இந்தநூல் சிறந்த ஆதார நூலாக வந்துள்ளது.

இஸ்லாமியராக இல்லாத ஒருவர் - கம்யூனிஸ்டாக வாழ்பவர் இத்தகைய நூலை எழுதியிருப்பது நூலுக்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. இஸ்லாம் குறித்த ஆய்வு வகைப்பட்ட அரசியல் நூல் என்ற பெருமையைத் தமிழில் இந்நூல் பெறுகிறது; மார்க்சியத்தின் அடிப் படைகளைத் தளர்த்திவிடாமல் நூலாசிரியர் விவாதத்தை நடத்திச் செல்வது நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

இந்நூலில் ஞானையா வாசகரோடு ஒரு நீண்ட உரையாடலை நடத்துகிறார்; வலுவான வாதங்களை முன்வைக்கிறார். தனது நியாயங்களை நிலைநாட்டுகிறார். கடைசியில் முஸ்லிம் இந்தியர்களுக்கு அறிவார்த்த மானவேண்டுகோள் ஒன்றையும் விடுக்கிறார்.

நூலின் முதல் ஐந்து அத்தியாயங்கள் இஸ்லாம், இஸ்லாமிய வரலாறு விளக்கப்படுகிறது.

மதங்களின் வரலாற்றில் இஸ்லாம்தான் கடைசியில் தோன்றிய உலகளாவிய மதம் என்பது குறிப்பிடத்தக்கது. அராபிய சமூக - பொருளாதார வாழ் நிலையிலிருந்து இஸ்லாம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை எளிய தமிழில் அழகுபட விவரிக்கும் ஆசிரியர் இஸ்லாமின் சமத்துவம் - சமாதானம் குறித்த செய்திகளையும், நெறிகளையும் இஸ்லாமிய அடிப்படைகளை அடியொற்றி விளக்குவது சிறப்பானது. இறைத்தூராக அறியப்படும் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் மக்கள் வாழ்க்கை அவரை வேட்டையாடியது; அவர் மதீனாவுக்கு குடிபெயர்ந்து தனது அரசை நிறுவினார்.

அந்த அரசு மத சகிப்புத்தன்மையுள்ள இஸ்லாமிய அரசாக விளங்கியது.

முகமது நபி இறை அவதாரமாகத் தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை. அற்புதங்கள் நிகழ்த்தவில்லை. அது ஏக இறைக் கோட்பாடு மானுட நற்செயல் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது அமைந்தது. நபிகள் நாயகத்தின் வாழ்நாளுக்குப் பிறகு அமைந்த கலிஃபாக்களின் ஆட்சி இஸ்லாமிய அரசை நிறுவியது.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய விஸ்தரிப்பும், பிளவுகளும் தோன்றியதையும் அது குறித்த விவரங் களையும் நூல் விவரிக்கிறது. ஆனால், இஸ்லாமிய ஷரியத் சட்டதிட்டங்களை மீறாமல் அதேசமயத்தில் இஸ்லாம் மதத்தின் மனிதநேயம், அறிதலியல் கோட்பாடுகளை முன்னெடுத்துச் சென்றவர்கள் நபிகள் நாயகத்தின் ‘திண்ணைத்தோழர்கள்’ என்றழைக்கப்பட்ட அவரது நேரடி சீடர்கள். இவர்கள் வழியே ஏழை எளிய மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அரசு அதிகாரத்தையும், வசதிகளையும் மறுத்த சூஃபிக்கள் இயக்கம் ஏழை மக்களின் பெரு மூச்சாக இயங்கியது. ஆனால் அது அதிகாரப் பூர்வமான இஸ்லாமிய ஏற்பாட்டால் ஏற்கப்படவில்லை.

சூஃபிக்கள் ஆன்மிகவாதிகள் அவுலியாக்கள் என அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் வழியே பிறதத்துவங்களுடன் இஸ்லாமியதத்துவம் உறவுகொண்டது. இஸ்லாமிய ஆட்சியாளர்களின் உடைமை வர்க்கச் சார்பு அரசு முறைகளை எதிர்த்தும் இஸ்லாமிய சூஃபிகள் போராடினர். பாரசீகம் தொடங்கி இந்தியா வரை இந்த மரபுபரவியது. இதன் வரலாற்றுப் போக்கைத் தனியாக நூலில் விளக்கியிருந்தால் நூலின் சிறப்பு மேலும் கூடியிருக்கும்.

இந்தியாவில் இஸ்லாமின் வரலாறு குறித்த அத்தியாயங்கள் இந்துத்துவாவாதிகள் முன்வைக்கும் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு நல்ல பதிலடியைத் தருகிறது. தமிழகத்தில் இஸ்லாம் என்ற அத்தியாயம் வரலாற்று வழியிலான ஆதாரங்களை வழங்குகிறது. அரபு வணிகர்கள் மூலம் கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இஸ்லாம் வருகை புரிந்தது; மொகலாய படையெடுப்புகள் வழியே இங்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக, மலையாளத்துக்கும், தமிழுக்கும் இஸ்லாமியர் அளித்த பங்களிப்பு இந்த தேசிய இனங்களின் மரபுகளில் ஒன்றாகப் பரிணமித்தது.

இந்திய விடுதலைப்போரின் நீண்டவரலாற்றை முஸ்லிம் பிரச்சனையைப் புரிந்துகொள்ளாமல் சரியாகப் புரிந்து கொள்ளமுடியாது. நாடு மத அடிப்படையில் பிளவுபட்டதைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் பயன் படுத்திக் கொள்ளப்படவில்லை. காங்கிரஸ்-லீக்பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும்; தேசிய அரசு அமைக்கப்பட்டு அதில் அனைத்து அரசியல் இயக்கங்களும் இணைக்கப்படவேண்டும் என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள் கவனத்தில் கூட கொள்ளப்படவில்லை. இதன் விளைவு: மத அடிப்படையில் பிளவு, வரலாற்றின் மிகப்பெரிய குடிபெயர்வு / மதக்கலகம் - படுகொலைகள். இறுதியாக, மகாத்மா காந்தியின் படுகொலை.

1947க்குப் பிறகு கடந்த 60ஆண்டுகளில் இந்துத்துவா சக்திகள் பாசிசத்தன்மையோடு வளர்ந்தற்கான காரணங்கள் முதலாளித்துவ நெருக்கடியின் போக்கிலிருந்து கண்டறிய வேண்டும். 1947க்குப் பிறகு இந்திய முஸ்லிம்களுக்கு என்று அகில இந்திய கட்சி ஒன்று செயல்படவில்லை என்ற உண்மையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் உம்மா (இஸ்லாமிய சமுதாயம்) இஸ்லாமிய சகோதரத்துவம், உலகுதழுவிய இஸ்லாமிய அரசு ஆகியவற்றின் அடிப்படையிலான இஸ்லாமிய அரசியல் மறுகட்டுமானம் உலக வளர்ச்சிப் போக்கின் விளைவாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமின் பெயரால் பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது.

இது அமெரிக்கா முன்வைக்கும் அரசு பயங்கர வாதத்துக்கு எதிர்விளைவாகவும் வளர்க்கப்படுகிறது. இவை பேரிலான ‘ஜிகாத்’ கருத்தியல் ஏகாதிபத்தியத்தின் வளையத்துக்குள் சிக்கிக்கொண்டதாகவே அமைந்துவிடுகிறது. அராபிய நாடுகளின் மீதான தனது செல்வாக்கை நிலைநாட்ட அமெரிக்கா இஸ்லாம் மதத்துக்குள் தலையிட்டு அல்கொய்தாக்களையும், தாலிபான்களையும் தயாரித்தது. குவினை மத அடிப்படை வாத அடிப்படையில் மறுவாசிப்பு செய்வதற்கான மதரஸாக்களின் நடவடிக்கைகளை ஊக்குவித்தது.

இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் ஏகாதிபத்திய அரசியல் சதியின் விளைவுகளில் ஒன்றே ஆகும். எந்தவகையான மத அடிப்படை வாதமும் மொத்த மதத்தையும் அதன் உறுப்பினர்களையும் தனக்கு மட்டுமே உரியதாக அறிவித்துக் கொள்கிறது. ஆனால், உண்மை அதற்கு நேர் எதிரானது. மதச்சார்பின்மைக்கான போராட்டத்தில் இதனைப் புரிந்துகொள்வது அவசியம்.

ஆராய்ந்து இந்திய முஸ்லிம்களைச் சமூகப் பொருளாதார அடிப்படையில் / அவர்களது வர்க்க வாழ் நிலையின் மீது அரசியல் செயல்பாடு அமையவேண்டும். நீதிபதி சக்கார் குழுவின் அறிக்கை இதில் ஒரு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. இதற்கென ஒதுக்கப்பட்ட அத்தியாயம் மிகச்சிறப்பாக வாதங்களை முன்வைக்கிறது.

நூலின் இறுதியில் முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றுவிடப்படுகிறது.

மதச்சார்பற்ற சக்திகளுடன் சேர்ந்து நிற்பதோடு தமது சமூகப் பொருளாதார, பண்பாடு மேம்பாட்டுக்காகப் பாடுபட வேண்டிய வர்க்க அரசியல் பால் அணிதிரள வேண்டியதன் அவசியத்தை வேண்டுகோள் வலியுறுத்துகிறது. இஸ்லாமுக்குள் நடைபெற வேண்டிய சீர்திருத்தம் குறித்தும் அது பேசுகிறது. இவை பற்றியெல்லாம் இஸ்லாமியர்கள் ஆக்கப் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், அறிஞருமான ஞானையா அவர்களின் நூல் இந்தத் தருணத்தின் தேவையைச் சிறப்பான முறையில் நிறைவுசெய்கிறது.

இஸ்லாமும் இந்தியாவும்
ஆசிரியர்: டி.ஞானையா,
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்,
தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 600 024,
விலை : ரூ 160.00

நன்றி: கீற்று.காம்

Tuesday, July 24, 2007

விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்!

தேச விடுதலை என்று வரும் போது அதில், ஜாதி, மதம், இனம் என்பதற்கெல்லாம் இடம் இல்லை. இந்திய சுதந்திரப் போரில் இஸ்லாமியர்களுக்கும் மிகச்சிறந்த பங்குண்டு. மைசூர் வேங்கை திப்பு சுல்தான், கான் அப்துல் கபார் கான் போன்றவர்களை வரலாற்றால் மறைக்க முடியவில்லை. இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அளிப்பதற்காக நடந்த நாட்டு பிரிவினைக்குப் பின், இந்தியாவுடனே இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்களுக்கு கூட, மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்கள் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும், இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பலருடைய தியாகம் மறைந்துவிட்டது என்றே கூறலாம். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கி போன்றோர் இன்றும் நினைவு கொள்ளத்தக்கவர்கள். அவர் ஷம்லி என்ற இடத்தில் பிரிட்டிஷார்களை ஓடச் செய்தார். அடக்குமுறைகளையும் அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டதில் வியப்பு ஏதும் இல்லை. ஷா வலியுல்லாஹ் மற்றும் ஷாவலியுல்லாஹ் தெஹ்ல்வி ஆகியோரும் பிரிட்டிஷாருக்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்கி சிறப்புப் பெற்றவர்கள். இதை பிரிட்டிஷ் தரைப்படை தளபதி தாம்சனே குறிப்பிட்டுள்ளார்.



"ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற நூலில், விடுதலை உரிமை, நம் நாட்டு சொத்து மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் ஷா வலியுல்லாஹ் எழுதினார். இவரது மகன் அப்துல் அஜீஸ் தெஹ்லவி ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான "பத்வா'க்களை (தண்டனை பேராணை) பிரயோகித்தார். விடுதலைப் போர் துவங்கவும் "பத்வா' அறிவிக்கப்பட்டது.


சையத் அஹ்மத் ஷகீத் (1831) மார்க்க அறிஞரான இவர், உ.பி., ரேபரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் எல்லைப் புறத்தில் தற்காலிக சுதந்திர அரசை துவக்கினார். அது பல ஆண்டுகள் நீடித்தது. தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் பகுதியில் முஜாகிதீன்கள் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் பலகோட் போர்க்களத்தில் பிரிட்டிஷாரை வீரமுடன் எதிர்த்து 300 இஸ்லாமியர்கள் உயிர்த்தியாகம் செய்தார்கள். "சாதிப்பூர்உலமா' இந்த படைக்கு தலைமை தாங்கினார். 1845 முதல் 1871ம் ஆண்டு வரை இவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போர் புரிந்தார்.


மாவீரம் கொண்ட"மவ்லவிகள்' என்று கேட்டாலே பிரிட்டிஷார் நடுங்கினார்கள். 1857ம் ஆண்டில் முதல் சுதந்திரப் போரின் போது, 34 உலமா (இஸ்லாமிய மத சட்ட அறிஞர்) பிரிட்டிஷாருக்கு எதிராக பத்வா அறிவித்தார்கள். மவுலானா காசிம், மவுலானா ரஷீத் அகமது மற்றும் ஹபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்கள் போர்க்களத்திலேயே மடிந்தார்கள். முதல் சுதந்திரப் போர் சமயத்தில் 51 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்திருக்கின்றனர். தலைநகர் டில்லியில் மட்டுமே 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தார்கள். குறுநில அரசான "அவுத்'தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதைப்பார்த்த உருது கவிஞர் மிர்ஸா காலிப், "என் முன்னால்ரத்த ஆறு ஓடியதைப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப்படுவதை பார்த்தேன். மற்றொருபுறம் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதை பார்த்தேன்'' என்றுஎழுதினார்.


இஸ்லாமியர்கள் போரிட்டவரலாற்றை இன்று நினைத்தாலும் உடல் மெய்சிலிர்க்கும்.



சுதந்திர தின வைரவிழாவுக்கு இன்னும் 23 நாட்கள்...

.

இந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றிகள்!

Tuesday, February 27, 2007

நீலகண்டன் கேட்ட ஜல்லி!

நண்பர் நீலகண்டன் சவூதி அரேபியா பற்றி ஒரு பதிவு எழுதி 'மிதந்து கொண்டிருக்கிற வெளி முதல் சுவனத்து ப்ரியர் வரை மரக்காயர் முதல் இறைநேச வசை வரைக்குமாக சமாளிப்பு ஜல்லியடிகள் சமத்துவ முலாம் பூசி வரும்' என்பதாக அழைப்பு விடுத்திருந்தார். ஒரு விஷயத்தைப் பத்தி மத்தவங்க கருத்து சொல்றதுக்கு முன்னாடியே அதை 'ஜல்லியடிகள்' என்று முலாம் பூசுறதுல ஒரு சூட்சுமம் இருக்கிறது. வர்ற பதில் நெத்தியடியா இருந்தால்கூட 'ஹி..ஹி.. இதத்தான் நான் ஜல்லியடின்னு முன்னமே சொன்னேன்' அப்படின்னு சமாளிச்சுக்கலாம் பாருங்க!

சரி போகட்டும்.. நாம விஷயத்துக்கு வருவோம். நீலகண்டனோட சந்தேகங்களை ஒன்னொன்னா பார்ப்போம்.



//இரு மசூதிகளின் பொறுப்பாளன் எனும் புகழ்மிக்க அரபு பட்டத்தை சுமந்து கொண்டிருப்பவர் சவூதியின் பட்டத்து அரசர். அந்த குலத்தின் சந்ததிகளுக்கு மட்டுமே உரிய பட்டம் இது. 'இஸ்லாமில் சமத்துவம் உண்டே அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆனால் அவர் இஸ்லாமிய அறிஞர்களிலேயே பேரறிஞரானால் அந்த பட்டம் இவருக்கு அளிக்கப்படுமா?' என்றால் 'இல்லை' என்கிற பதிலுக்கு.. - நீலகண்டன்//
இந்திய அரசியல் சாசன சட்டத்தை நல்லா கரைச்சு குடிச்ச ஒரு பேரறிஞர் இருக்கிறார். அவருக்கு 'நாடாளுமன்ற சபாநாயகர்' என்ற பட்டம் அளிக்கப்படுமா? என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். ஏனென்றால் 'சபாநாயகர்' என்பது ஒரு பட்டமல்ல.. அது ஒரு பதவி என்பது பிரைமரி படிக்கிற பிள்ளைகளுக்கு கூட தெரிஞ்ச விஷயம். இப்படிப்பட்ட ஒரு கேள்வியைத்தான் நம்ம நண்பர் நீலகண்டர் கேட்டிருக்கிறார். சவூதி அரேபியாவின் மன்னராக இருப்பவர் இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் பதவி வகிப்பார். இது அவரது மார்க்க அறிவை வைத்து கொடுக்கப்படும் பட்டமல்ல.

அவர் சவூதி அரேபியா என்ற நாட்டின் மன்னரே தவிர, உலக முஸ்லிம்கள் அனைவரின் தலைவரல்ல. கிருஸ்துவர்களுக்கு போப் இருப்பது போல முஸ்லிம்களுக்கும் ஒரு உலகளாவிய தலைவர் இருந்து, அந்த பதவிக்கு ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர் வர முடியுமா என்று நீலகண்டன் கேட்டிருந்தால் அதில் நியாயம் உண்டு. அப்படி ஒரு பதவி இருந்தால் அது இனம், குலம் சாராத, தகுதியை மட்டும் அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இதுதான் இஸ்லாம் காட்டும் சமத்துவம்.


//"The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சவூதி அரசாங்கம் சொல்லுகிற வரிகள் குரானை அவமதிப்பதாகாதா? - நீலகண்டன்//
'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்குக் கட்டுப்படுங்கள். இத்தூதரான முஹம்மதுக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.'-(குர்ஆன் 4 : 59)

முஸ்லிம்கள் தேசப்பற்றுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டுத்தலைவருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் இறைவனே கட்டளையிடுவதற்கு ஒரு ஆணித்தரமான ஆதாரம் இந்த திருமறை வசனம். நீலகண்டன் சுட்டிக் காட்டியிருக்கும் சவூதி அரசாங்கத்தின் கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. தலைமைக்கு கட்டுப்படுவது என்பதில் ஒரு கண்டிஷன் இருக்கிறது. தலைவர் காட்டும் வழி மார்க்கத்திற்கு முரண்படாததாக இருக்க வேண்டும்.

அதுவும் தவிர, சவுதி அரசாங்கத்தின் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் சவூதி குடிமக்கள்தானே? எல்லா முஸ்லிம்களும் அல்லவே?

//சவூதி அரேபியா போல சமத்துவத்தை பேணும் சொர்க்கத்துக்கு....
இஸ்லாமிய சுவர்க்கத்தின் மண்ணுலக மாடலை... //
இப்படியெல்லாம் யார் சொன்னாங்க?

//இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டபடி சம்பளம் கொடுப்பதில்லை. இது தவிர பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். -நீலகண்டன்//

புனிதத் தலங்கள் இருக்கும் நாடு என்பதால் சவூதி அரேபியா முஸ்லிம்களுக்கு புனித பூமி. அதற்காக அங்கே இருப்பவர்களெல்லாம் புனிதர்களாகி விடுவார்களா? எந்த சமுதாயமாக இருந்தாலும் அதில் சில கேடுகெட்ட கயவர்களும் கலந்துதான் இருப்பார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடந்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா? துறவி என்ற போர்வையில் சிறு வயது சினிமா நடிகை முதல் வயதான பெண் எழுத்தாளர் வரை தனது காம சபலத்தை அடக்க முடியாமல் கைவைத்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நின்றவர்களை மறக்கத்தான் முடியுமா?

சவூதியின் கயவர்களுக்கும் காஞ்சிபுர _ _ _ _ களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? சவூதியில் பாலியல் குற்றம் செய்தவன் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். இதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை. ஆனால் காஞ்சிபுரத்திலோ, இந்த குற்றவாளிகள் இன்னும் 'நடமாடும் கடவுள்'களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் கோடிக்கணக்கான இந்துக்களுக்கும் இந்திய திருநாட்டிற்குமே பெருத்த அவமானம்!

இனி, நீலகண்டனுக்கும் அவரது சகாக்களுக்கும் என்னுடைய கேள்விகள் சில. ஜோரா உங்க ஜல்லிகளை கொண்டு வந்து கொட்டுங்க பார்ப்போம்!

1. இந்து ஒற்றுமை, இந்து தர்மம், என்றெல்லாம் வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் காஞ்சிபுர மடத்தை இழுத்து மூட வேணாம், இப்ப இருக்குற மட அதிபதிகளை விரட்டிவிட்டு ஒரு தலித்தை சங்கராச்சியாரா நியமிக்கணும்னு கோரிக்கை எழுப்பவாவது வக்கு இருக்கிறதா?

2. RSS கூட்டத்துக்கு தலைவரா நீலநிற கண்களை உடைய ஒரு 'சித்பவன்' பிராமணர் மட்டும்தான் வரமுடியுமாமே? ஏன் அப்படி? சித்பவன் பிராமணர்கள் என்றால் யார்? பிராமணர்களிலேயே இவங்க உசத்தியா? RSS கூட்டத்திற்கு யாராவது ஓரு தலித் இதுவரை தலைவரா வந்திருக்கிறாரா? இல்லையென்றால் ஏன்?

3. ஏமாறதவன் என்பவர் சொல்கிறார், "நான் நம் இணைய இஸ்லாமிய சகோதரர்களை கெஞ்சி கேட்பது இதுதான். அறியாமல் நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்." இவர் தன் வருங்கால சந்ததிகளை எந்த படுகுழியில் தள்ளியிருக்கிறார்? அது இஸ்லாத்தை விட எந்த வகையில் உயர்ந்தது? இவரோட கொள்கை வெளியில கவுரவமா சொல்லிக்கிற மாதிரி கொள்கையா இருந்தா தைரியமா அதைப் பத்தி சொல்லலாமே?

Tuesday, February 20, 2007

நான் ஏன் முஸ்லிமானேன்? - யுவான் ரிட்லி

சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் 'In the Hands of Taliban: Her Extra ordinary Story' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார்.

மேலும்,2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது 'நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி இது:



தொடர்புடைய சுட்டி: ஹிஜாபைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?

Friday, January 26, 2007

பர்தா எனக்கு சுதந்திர உணர்வு அளிக்கிறது - கமலா சுரையா

"The purdah makes me feel more liberal" என்று சொன்னவர் பிரபல மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் என்கிற சுரையா. Rediff.com-ல் ஒரு பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கமலா சுரையா 1999-ல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது, தனது மதமாற்றத்திற்கு முக்கிய காரணம் முஸ்லிம் பெண்களின் பர்தா முறைதான் என்று குறிப்பிட்டார்.

வெறும் வாய்வார்த்தையாக அல்லாமல் இன்றளவும் பர்தா முறையை கடைப்பிடித்து வருகிறார் சுரையா. இவரை யாரும் வாள் முனையிலோ அரபு நாட்டு பணத்தை காட்டி ஆசை காட்டியோ மதம் மாற்றவில்லை.

அவரது பேட்டியிலிருந்து ஒரு பகுதி:




Q: Has Islam restricted you?

A: I chose the religion out of my convictions and therefore I am ready to work within the constraints and restrictions of Islam. Religion cannot chain one's creativity. Islam is tolerant. Allah is the god of love and forgiveness. My mind tells me that Allah has forgiven me my sins. People ask me why a liberated woman like me chose the purdah. But I tell you, the purdah makes me feel more liberal. Because when you wear a purdah you can travel anywhere in the world and you feel safe.

Nobody is going to make any disparaging remarks against a purdah-clad woman because they are always afraid of Muslim rage. Behind every purdah-clad Muslim woman, some Mussalman is lurking with a dagger to ensure her safety. So purdah is always safe. It protects you. It also keeps the dust, the heat and insects away from your body.

அவரது முழு பேட்டியும் படிக்க இங்கே சொடுக்கவும்.

பின் குறிப்பு: பலாப்பழம் கரடுமுரடாக பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னாராம். அவர் சொன்னதிலும் தவறில்லை. ஆனால் அவர் பலாப்பழத்தின் சுவையை அறியாதவர். அதன் சுவையை அனுபவித்து அறிந்த இன்னொருவரோ அதை சிலாகித்து கூறுகிறார். சிந்திக்கத் தெரிந்தவர்கள் இரண்டாமவரின் கூற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Thursday, January 04, 2007

முன்மாதிரி எம்.எல்.ஏ ஹசன் அலி!

ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களைப் பற்றி இந்துத்துவவாதிகள் 'மத வெறியர்' என்ற ரேஞ்சிற்கு திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர் காமராஜர் படத்திற்கு மாலை மரியாதை செய்ய மறுத்ததுதானாம். இந்துத்துவாக்களுக்கு காங்கிரஸ் தலைவர் காமராஜர் மேல் பாசம் பொத்துக் கொண்டு வழிகிறது பாருங்கள்.

இவர்கள் யாரை இப்படி திட்டித் தீர்க்கின்றார்களோ, அதே எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களைப் பற்றி செப்-2006-ல் ஜுனியர் விகடனில் ஒரு கட்டுரை போட்டிருக்கிறார்கள். ஒரு முன்மாதிரி என்று சொல்லத் தக்க வகையில் தொகுதி நலனை கருத்தில் கொண்டு அவர் செய்யும் வித்தியாசமான ஒரு முயற்சியைப் பற்றி இந்தக் கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

'ஒரு முஸ்லிமுக்கு இப்படி நல்ல பெயர் கிடைப்பதா?' என்று இந்துத்துவாக்கள் வயிறெரிவதன் காரணம் உங்களுக்கே புரியும்.

**********
தமிழ்நாட்டில் ஒரு காங்கிரஸ் மந்திரிசபை!

‘‘முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தை ஆள ஒரு அமைச்சரவை இருப்பதுதான் உங்களுக்குத் தெரியும். ஆனால், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி யிலும் ஒரு ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ இருக்கிறது. அங்கும் ஒரு மினி அமைச்சரவை இயங்குகிறது... இந்த சங்கதி உங்களுக்குத் தெரியுமா?’’ என நம் நண்பர் ஒருவர் சொன்னபோது முதலில், ‘இதென்ன துக்ளக் தர்பார்?’ என்றுதான் நமக்குத் தோன்றியது.

ஆனால், ராமநாதபுரம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஹசன் அலியின் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்த்தபோது, அவரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


வெளியூர்க்காரரான ஹசன் அலி ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டபோது, ‘ராமநாதபுரத்தை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்’ என அடித்துச் சொல்லியிருந்தார். இப்போது, தன் தலைமையில் முப்பது பேர்கொண்ட ஒரு மாடல் அமைச்சரவையை ஏற்படுத்தி, தான் தேர்தல் சமயத்தில் சொன்னதை செயலில் காட்டியிருக்கிறார் ஹசன் அலி. அவரது அலுவலகத்துக்குப் போனால் நிதி, மருத்துவம், கல்வி, உணவு, விவசாயம், மீன்வளம், அறநிலையம், சட்டம்-ஒழுங்கு, இளைஞர் நலன், காவல்துறை என எல்லாத் துறைகளுக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டு ‘அமைச்சரவை பட்டியல்’ ஒன்று போடப் பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்தப் பட்டியலில் அமைச்சரவை உறுப்பினர்களின் பெயரோடு, எந்த நேரத்திலும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, அவர்களின் மொபைல் போன் நம்பரும் இடம்பெற்றுள்ளது!

ஹசன் அலியை அவரது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றபோது, ஒருபக்கம் மனுக்கள் ஏந்திய கையோடு தொகுதியினரும், மறுபக்கம் வெள்ளை வேட்டி, சட்டையோடு சிலருமாகக் களை கட்டியிருந்தது அலுவலகம். ‘‘போக்குவரத்து மந்திரி யாருப்பா..? ஸ்கூல் விடுற நேரம் பெரியபட்டணத்துக்குப் போதுமான பஸ் வசதி இல்லையாம். டிரான்ஸ் போர்ட் ஆபீஸர்ஸ்கிட்ட பேசுங்க. இந்தாங்க, இந்த மனுவுக்கு ஒரு ரசீது நம்பர் போட்டுக் கொடுங்க..!’’ என்றும், ‘‘ஐயா, உங்க ஊர் குடிநீர் பிரச்னையை கலக்டெர்கிட்ட சொல்லிட்டேன். ஆர்டர் போடுறேன்னு சொல்லிட்டாரு. சந்தோஷமா போயிட்டு வாங்க’’ என்றும் பரபரப்பாக இருந்தார் ஹசன் அலி.

‘‘என்னென்னவோ கனவோடத்தாங்க எம்.எல்.ஏ. ஆனேன். நானே முன்ன நின்னு எல்லா வேலையையும் எடுத்துக்கட்டிப் பாக்கணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா, அது அவ்ளோ சுலபமில்லைனு தெரிஞ்சுபோச்சு. அதனால என்ன பண்றதுனு யோசிச்சேன். நான் மெட்ராஸ் பிரசிடென்சி காலேஜ்ல படிச்சப்ப, ‘மாதிரி மந்திரிசபை’னு பசங்களுக்குள்ள அமைச்சுக் கல்லூரி சம்பந்தமான நடவடிக்கைகளை ஆலோசனை பண்ணி எடுப்போம். அதே செட்-அப்பை இங்க செயல்படுத்துனா என்னனு தோணுச்சு. உடனே பொதுகாரியங்களைப் பண்றதுல ஆர்வமுள்ள முப்பது பேரைப் புடிச்சு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி துறைகளை ஒதுக்கிக் கொடுத்துட்டேன். எந்த கோரிக்கையோட வந்தாலும் இந்த முப்பது துறைகள்ல ஏதாவது ஒண்ணுல அடங்கிடும். சம்பந்தப்பட்ட மந்திரி (மந்திரி என்றுதான் சரளமாகக் கூறுகிறார்!) அந்த மனுவை பரிசீலிச்சு, ஏத்துக்கிட்டு ஒரு ரசீது போட்டுக் கொடுப்பாங்க. அந்த மனுவுல என்னோட கையெழுத்தோட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஃபார்வர்ட் பண்ணி விரைவான நடவடிக்கைக்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணுவோம். இந்த நிர்வாகத்துக்கு என்னோட சொந்த பணத்தைதான் பயன்படுத்துறேன். அடிக்கடி மீட்டிங் போடுறோம். தொடர்ச்சியா மூணு மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணலைனா, அந்த உறுப்பினர தூக்கிட்டு வேற ஒருத்தர நியமிச்சுருவோம். சட்டசபைக் கூட்டம், வெளியூர் பயணம்னு நான் தொகுதியில் இல்லைனாலும், எல்லா வேலையும் ஸ்மூத்தா போயிட்டு இருக்கும். தி.மு.க. எங்களுக்கு மந்திரி சபைல இடம் கொடுக்கலைனாலும், இந்த மந்திரிசபைல தி.மு.க. உறுப்பினர்களும் இருக்காங்க’’ என்று வாய்விட்டுச் சிரித்தவர் மேலும் தொடர்ந்தார், ‘‘பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்தா வேலை சுலபமா முடியுங்கற சின்ன எண்ணத்தோட விரிவாக்கம்தான் இந்த மாடல் மந்திரிசபை. எனக்கு மக்களோட அடிப்படை வசதிகள் பூர்த்தியாகணும். அதுக்கு அப்புறம் பெரியபெரிய தொழிற் சாலைகள் வந்தா போதும். அதுக்கு இதைப்போல என்னா லான எல்லா முயற்சிகளையும் எடுப்பேன்..!’’ என்று கூறி விடை கொடுத்தார்.

தங்கள் பிரச்னைக்கு ஏதேனும் விடிவு காலம் ஏற்படாதா என்ற ஆதங்கத்துடன் ஹசன் அலியின் ஆபீஸுக்கு வரும் மக்களுக்குப் பொறுப்பான விசாரிப்புகளும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான முயற் சிகளும் பெரும் ஆறுதலாக இருக்கிறது. அதற்காகவாவது மனிதரைப் பாராட்டலாம்!

நன்றி: ஜூனியர் விகடன்

போட்டோ, மரியாதை, ஆரத்தி, எம்.எல்.ஏ!

எனது பதிவொன்றில் சகோதரர்கள் வாசகன், அழகு இருவரும் இட்ட பின்னூட்டங்கள் இவை. இவ்வளவு அருமையான தகவல்கள் பின்னூட்டத்திலேயே அமுங்கிப் போகலாமா? அதனால் அதை வைத்து ஒரு தனிப் பதிவு போட்டு விட்டேன்!

நன்றி வாசகன் அவர்களே!
நன்றி அழகு அவர்களே!



வாசகன் said...
மரைக்காயர் பாய்,

நீலகண்டன் என்கிற ஸ்யம் சேவக் தொண்டர் 'அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான விஷயங்கள்' என்கிற இஸ்லாமிய நூலுக்கு இலவச விளம்பரம்செய்து, 'இறைவனையன்றி யாருக்கும் தலைவணங்காத இஸ்லாமியக் கொள்கையை பதிவிட்டு
விளக்கிக்கொண்டிருக்கிறார்.

எம்.எல்.ஏ ஆகியபின்னரும் தன் கொள்கையில் உறுதியாக நிற்கும் முஸ்லிமை பாராட்ட மனமில்லாமல், இவ்விஷயத்தை வைத்து குளிர்காய முடியுமா? என்று பார்க்கிறார்.

நான் கேட்கிறேன், எம்.எல்.ஏ ஆனால் மத அடையாளங்களை / கொள்கைகளை விட்டுவிட வேண்டுமா என்ன?அப்படியென்றால், பிராமண எம்.எல்.ஏக்கள் பூணூலைக் கழற்றி வைத்துவிட்டா சட்டசபைக்கு போகின்றனர்?
3/1/07 6:54 PM


திரு. நீலகண்டன் அவர்களுக்கு நான் 2 விஷயங்களுக்காக நன்றி கூற விரும்புகிறேன்.

1. 'அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்' என்ற நூலை தமிழ்மண வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியதற்காகவும், தாருல் ஹுதா பதிப்பகத்திற்கும் இந்த புத்தகத்திற்கும் இலவச விளம்பரம் கொடுத்ததற்காகவும் எனது நன்றி. தாருல் ஹுதா பதிப்பகத்தின் முகவரியையும் அவரே குறிப்பிட்டிருக்கலாம். பரவாயில்லை.. அவர்களின் முகவரி இதுதான்.

தாருல் ஹுதா
புதிய எண்: 211 (102), முதல் மாடி,
லிங்கி செட்டி தெரு
மண்ணடி, சென்னை - 600 001

இணையத் தள முகவரி

மேலே குறிப்பிட்ட புத்தகம் தவிர மேலும் பல அரிய இஸ்லாமிய நூற்களை இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். நண்பர்கள் இந்த நூற்களை வாங்கி படித்து பயனடையும்படி கேட்டுக் கொள்கிறேன்.

2. அரசியல்வாதியாக இருந்தாலும் கொள்கையில் உறுதியாக இருக்கும் எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

நீலகண்டன் அவர்கள் இது போன்ற அவரது சேவைகளை தொடர்ந்து செய்து வரும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

வாசகன் அவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கும் நீலகண்டன் மறக்காமல் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

அழகு said...
வாசகன்,

பொதுவாக, சட்டமன்ற உறுப்பினரை மக்கள் தேர்ந்தெடுப்பது தங்கள் தொகுதிக்கு நல்லன செய்வார் என்ற நம்பிக்கையில்.

சிலைக்கு மாலை போடுவதற்கும் ஆரத்தியை ஏற்றுக் கொள்வதற்கும்தான் எம்.எல்.ஏ பதவி என்று உளறிக்
கொட்டுபவனுக்கெல்லாம் பதில் சொல்லத் தொடங்கினால் வாழ்நாள் போதாது.
4/1/07 12:11 AM
சரியா சொன்னீங்க அழகு அவர்களே! அதுல பாருங்க, காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்ல கலந்துக்கிறதுக்காகவே ராம்நாடு மாவட்டம் முழுவதும் ஹசன் அலி அவர்கள் சென்றது இவங்களுக்கு பெருசா தெரியலையாம்! போட்டோவுக்கு மாலை போட மறுத்ததால் அவர் காமராஜரை புறக்கணிக்குறாராம். புறக்கணிக்குறவரு ஏன்யா பிறந்த நாள் கொண்டாட்டத்துல கலந்துக்க வர்றாரு?

நம்புங்கள் இளிச்சவாய் அப்பாவி ஜனங்களே! குஜராத்ல நடந்த இனச்சுத்திகரிப்பு தமிழ்நாட்டுக்கு வரும் நாள் வரை நம்பிக் கொண்டிருங்கள்!

Thursday, December 21, 2006

தமிழகத்தை கலவர பூமியாக்கும் திட்டம்! - ஜனநாயகன்

தமிழகத்தைக் கலவர பூமியாக்க இந்து முன்னணி பயங்கர சதித்திட்டம்!
- ஜனநாயகன்

சமூக நீதிக்கும் அமைதிக்கும் நிலைக்கலனாகி நிற்கும் தமிழகத்தை கலவர பூமியாக்கி முஸ்லிம்களின் ரத்தம் சுவைப்பதற்கு கங்கணம் கட்டி களமிறங்கியுள்ளது காவிப் பரிவாரம். காவி சக்திகள் இதுவரை நடத்தியுள்ள கலவரங்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு பகுதியை கலவரக் காடாய் மாற்றும் முன், அங்குள்ள முஸ்லிம்களையும், அவர்களின் சொத்துக்களையும் துல்லியமாக அடையாளப் படுத்துவார்கள். இதுவே சங்பரிவார சதித்திட்டத்தின் முதல் கட்டமாகும்.

1993ம் ஆண்டு பம்பாயில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பவர்களின் வேடத்தில் சென்று, வீடுதோறும் விசாரித்து முஸ்லிம் வீடுகளில் ஸ்வஸ்திகா குறியிட்டுச் சென்றது சங்பரிவாரக் கும்பல். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரத்தில் சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

குஜராத்தில் 2002ம் ஆண்டில் இதேபோல முஸ்லிம்களை அடையாளம் காணும் பணியை காவிப்படை முடுக்கி விட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரம் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள், தங்கள் வீடுகளை இழந்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டார்கள். பாகல்பூர், பீவண்டி, சூரத், லட்டூர் என வடமாநிலங்களில் இவர்கள் நடத்திய கொடிய கலவரங்களால் பல்லாயிரம் முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சூறையாடப்பட்டன.

மதவெறியை பயங்கரமாகத் தூண்டி, மக்கள் நெஞ்சுகளில் நஞ்சைக் கலந்து, ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, கலவரத்திற்குக் கால்கோள் செய்து பிணங்களில் நடந்து மேலேறுவதே காவிக் கயவர்களின் கடந்த கால வரலாறு.

இந்தக் கொடூர பயங்கரவாதிகளின் கவனம் இப்போது தமிழகத்தில் குவிந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படியாவது இங்கு மதக் கலவரத்தை உருவாக்கி, மாநில அமைதியை மயானத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மத பயங்கரவாதிகளின் மனது துடிக்கிறது.

முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டமாம் தஞ்சைத் தரணியில், அவர் வளர்ந்த திருவாரூர் பகுதியிலிருந்தே மதவெறி நெருப்பை வளர்த்து, தமிழக அமைதியைப் பொசுக்குவதற்குரிய மாபாதகத் திட்டத்தை இந்து முன்னணி பயங்கரவாதிகள் தீட்டியுள்ளனர். அவர்கள் நடத்தும் 'விஜயபாரதம்' என்ற விஷக் கருத்துப் பத்திரிகை மூலம் இந்த விபரீதம் வெளிவந்துள்ளது.

திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சைத் தரணியில் முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், வணிக நிறுவனங்கள், முஸ்லிம் கல்லூரிகள், அரபி மதரஸாக்கள், வசதி படைத்த முஸ்லிம் வீடுகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கெடுத்து அவற்றைத் தாக்குதல் இலக்குகளாய் இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு அடையாளம் காட்டி, விரிவான சதித் திட்டத்தின் ஒரு பகுதியை சங்பரிவார பத்திரிகையான விஜயபாரம் வெளியிட்டுள்ளது. (ஸ்வய ஆவணி 30, கலியுக ஆண்டு 5108(?) 15-09-2006 என்ற தேதிதான் இந்த பாடுபடுகிறது)

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலத்துறை, திருவலஞ்சுழி, கும்பகோணம், சோழபுரம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், மதுக்கூர், ஆவணியாபுரம், திருப்பனந்தாள், சேதுபாவாசத்திரம், ஆடுதுறை, முருக்கங்குடி, நாச்சியார் கோவில், ஒரத்தநாடு உள்ளிட்ட ஊர்களில் இஸ்லாமிய ராஜ்ஜியம் நடப்பதாகவும், அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் விஜயபாரதம் வெறி ஊட்டியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர், கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், ஆழியூர், கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், குடவாசல், அபிவிருத்தீஸ்வரம், அடவங்குடி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, நன்னிலம் ஆகிய ஊர்களையும் நாகை மாவட்டம் நாகூர், தரங்கம்பாடி, கோடியக்கரை, கரியாப்பட்டினம், தோப்புத்துறை, தேத்தாகுடி, பூம்புகார், மயிலாடுதுறை, கிளியனூர், வடகரை, மன்னம்பந்தல், நீடூர், கடலங்குடி, குத்தாலம், வானாதிராஜபுரம், தேரிழந்தூர், திருவாடுதுறை, திருவாலாங்காடு, சீர்காழி, தைக்கால், மேலச்சாலை, பொறையார் ஆகிய ஊர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், பந்தர்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களையும் பார்ப்பனர்களிடமிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டதாகவும், மேற்கண்ட பகுதிகளில் பிராமணப் பெண்களை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பல அட்டூழியங்களை முஸ்லிம் இளைஞர்கள் செய்து, மேற்கண்ட ஊர்களிலிருந்து பார்ப்பனர்களைத் துரத்தி அடித்து விட்டதாகவும், முஸ்லிம்களின் அராஜகங்கள் தாங்க முடியாமல்தான் தஞ்சை பிராமணர்கள் தங்கள் உயிரையும், ஆச்சாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள நாட்டின் பல பகுதிகளுக்கு தப்பிச் சென்று குடியேறி இருப்பதாகவும், தஞ்சை தரணியை முழு முஸ்லிம் ராஜ்ஜியமாக்க முஸ்லிம்கள் சதித்திட்டம் போட்டுள்ளதாகவும், அதன் ஒரு கட்டமாகவே அக்ரஹாரங்களை இடித்து வீடு கட்டிக் கொண்டு, கோவில்களை இடித்து பள்ளிவாசல் கட்டிக் கொண்டு முஸ்லிம்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் விஜயபாரதம் எழுதியுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அழகிய பள்ளிவாசல்களைப் படமெடுத்து வெளியிட்டு, பாழடைந்து கிடக்கும் கோவில்களின் படங்களையும் பக்கத்தில் போட்டு, இதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று நெருப்பைக் கொளுத்தி யிருக்கிறது சங்பரிவாரத்தின் ஏடு. தஞ்சைப் பகுதியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் முகாமிட்டு, முஸ்லிம்களை மிக உற்றுக் கவனித்து, சதித்திட்டங்களை தீட்டியிருப்பதை நாம் உணர முடிகிறது. முஸ்லிம் தொழில் நிறுவனங்களையும், தொழில் அதிபர்களையும், கல்விக் கூடங்களையும் கொடியோர் கும்பல் குறிவைத்திருக்கிறது.

தமிழகத்தை குஜராத் ஆக்கும் சங்பரிவார சதிக்கனவின் முதல் பகுதி இது. அரசு உடனே விழித்துக் கொள்ளாவிடில் ஆபத்தான விளைவுகளை இவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள்.

ஞ்சை தரணியில் முஸ்லிம்கள் எவ்வாறு எழுச்சிப் பெற்றார்கள்? அக்கிரஹாரங்கள் ஏன் காணாமல் போயின? தஞ்சைத் தரணியில் அராஜகம் செய்பவர்கள் யார்? போன்ற விஷயங்களுக்கு விடைகாண நிசங்களை அலசுவோம்...

(உண்மைகள் கண்விழிக்கும் அடுத்த வாரம்...)

நன்றி: தமுமுக

Friday, December 15, 2006

முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள்!

இந்தியாவில் மட்டும் முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை இது. 1954 லிருந்து 1984 வரை உள்ள எண்ணிக்கை இந்திய உள்துறை அமைச்சக பதிவேடுகளிலிருந்து பெறப்பட்டது. அதன் பிறகு உள்ள எண்ணிக்கை கலிபோர்னியாவில் இயங்கும் இந்திய ஆராய்ச்சி மையத்தினால் தொகுக்கப் பட்டது.

தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் பற்றி அரசு வெளியிடும் தகவல்கள் குறித்து முஸ்லிம் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பி வந்திருக்கின்றன. உண்மையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அரசு வெளியிடும் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் எனவும் இந்த அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.


ஆண்டு

வன்முறைச் சம்பவங்கள்

இறந்தவர்கள்

காயமடைந்தவர்கள்

1954

84

34

512

1955

75

24

457

1956

82

82

575

1957

58

12

316

1958

40

7

369

1959

42

41

1,344

1960

26

14

262

1961

92

108

593

1962

60

43

348

1963

61

26

489

1964

1,070

1,919

2,053

1965

173

173

758

1966

144

45

467

1967

198

25

880

1968

346

133

1,549

1969

519

674

2,877

1970

521

298

1,723

1971

321

103

1,330

1972

240

70

1,207

1973

242

72

1,500

1974

248

87

1,266

1975

205

3

962

1976

169

9

794

1977

188

36

1,122

1978

219

108

1,801

1979

304

261

2,379

1980

427

375

2,691

1981

319

196

2,613

1982

474

236

3,025

1983

500

1143

3,652

1984

476

445

4,836

1985

525

328

3,665

1986

633

532

5,321

1987

645

762

7,653

1988

671

802

8,762

1989

634

739

7,438

1990

564

639

6,892

1991

656

817

8,920

1992

1,105

3,000

17,000

மதத் துவேஷத்தை வளர்க்காதீர்கள்!
மதத் துவேஷத்தை ஆதரிக்காதீர்கள்!
மத பயங்கரவாதங்களை ஆதரிக்காதீர்கள்!
மனித உரிமையை மீறாதீர்கள்!
சக மனிதர்களின் மத உணர்வுகளை கொச்சைப் படுத்தாதீர்கள்!
மனிதம் பேணுங்கள்!