ஆண் சாதி - பெண் சாதி!
கேள்வி: ஆண்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வதைப் போல், பெண்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வதில்லையே, ஏன்?
பதில்: பண்டைய காலத்திலிருந்து ஆண்கள் வீடு, பசு, தோப்பு, தோட்டம் மாதிரி பெண்களையும்ஒரு பொருளாகவே (commodity) கருதி நடத்தியதால், அவள் தன் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. திருமணமாகும் வரை அவள் தந்தையின் சாதி. ஆன பிறகு, கணவனின் சாதி! சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவிதமான சுதந்திரங்களையும் அனுபவித்து வாழ்ந்த பெண்களை ஆண்கள் அடக்கி அடிமையாக்கியது மாபெரும் தந்திர வரலாறு!
நன்றி: ஹாய் மதன் பதில்கள் - ஆனந்த விகடன் 13-12-06
4 comments:
ஹையோ அப்டீலாம் இல்லே, அதெல்லாம் சனாதனத்துல ஒரு குறியீடான பதில்னு யாராச்சும் எழிலாக வந்து ஜல்லி அடிச்சா நா ஆச்சர்யப்படமாட்டேன்!
மரைக்காயர் அய்யா
சமூகத்தில் பெண்கள் ஒரு பொருளாகவே கருதப்படும் இந்த இழிவை இன்றுவரைக்கும் தொடரும் நிலையை மாற்ற செலக்டிவ் அம்னீஷியாவால் அவதிப்படும் நேசகுமாரும் அவரது சிங்கியடிகளும் என்ன செய்தார்கள் எனக் கேட்டுச் சொல்ல முடியுமா?
மதன் சொன்னது உண்மைதான். இணைய இந்துத்வாக்களுக்கு இது புரிந்தும்கூட வீணாய் ஜல்லியடிப்பர்கள்
அனானிமஸ், ஏமாறதவன், வணங்காமுடி, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நீலகண்டன் கொஞ்சநாளைக்கு முன் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதாவது முஸ்லிம் முரசு என்ற பத்திரிக்கையில் "பெண் - ஒரு கணவனால் மட்டுமே உண்ணப்பட வேண்டிய உணவல்லவா? அதனால்தான் அது இன்னமும் அதிகமாய் சுத்தமாய் பாதுகாக்கப்பட வேண்டியதாகிறது." என்று ஒரு உதாரணமாக குறிப்பிட்டிருந்தார்களாம். அதை "பெண் : கணவனின் உணவு" என்று தலைப்பு போட்டு அவரும் அவரது அடிப்பொடி அல்லக்கைகளும் கூடி கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்.
இவங்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்வதற்கு பதில் மதன் போன்ற அவர்களின் சமூகத்தை சேர்ந்த ஒருவரே பதில் கொடுத்தால் நன்றாக செருப்பால் அடித்தது போல இருக்கும் என்பதற்காகத்தான் மதனின் இந்த கேள்வி பதிலை இங்கு பதிவிட்டேன்.
மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்புபவர்களை என்ன சொல்ல?
Post a Comment