Thursday, May 08, 2008

மதமாற்றத்தை விளையாட்டா எடுத்துக்கலாமா?

நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் கல்லடி விளையைச் சேர்ந்த இளைஞர் தங்கமெர்ஜின். இந்துவான இவர் சில மாதங்களுக்கு முன்பு முஸ்லீமாக தாய் மதத்திற்குத் திரும்பினார் (இப்படி சொல்றதுதான் இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்டு!) .

மதம் மாறி சில மாதங்கள் ஆன நிலையில் இப்போது (மே 5) தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி இடலாக்குடியில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்து தங்கமெர்ஜின் தஞ்சம் புகுந்தார்.

இதற்கிடையே இந்து வாலிபர் ஒருவரை கட்டாய மதமாற்றம் செய்யப்போவதாக தவறான தகவல் பரப்பப் பட்டு இந்து அமைப்பினர் அந்த பகுதியில் திரண்டு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கினர்.

பள்ளிவாசல் நிர்வாகிகள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் போலீசார் தங்கமெர்ஜினை போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

முஸ்லீம் மத கோட்பாடுகள் தனக்கு பிடித்து இருந்ததால் அந்த மதத்துக்கு மாறியதாக தங்கமெர்ஜின் தெளிவாக போலீசாரிடம் தெரிவித்தார்.

அதே சமயம் தங்கமெர்ஜினின் அண்ணனும், அவரது தாயாரும் அதை மறுத்து, தங்கமெர்ஜின் கட்டாயப் படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

'தங்கமெர்ஜின் ஒரு பெண் மீது ஆசைப்பட்டிருக்கிறான். 'அந்த பெண்ணை உனக்கே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால் நீ மதம் மாற வேண்டும்' என சிலர் அவனுக்கு ஆசை வார்த்தை கூறி உள்ளனர். பெண் மீது கொண்ட மோகத்தில் அவன் மதம் மாறி உள்ளான். தற்போது அவனை மதமாற்றிய நபர்கள் ஏமாற்றி விட்டனர். தங்கமெர்ஜின் மதம் மாறியதும் அவனது தந்தை மகாலிங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே தங்கமெர்ஜினை மீண்டும் எங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.' என்று அவர்கள் கூறினர்.

தங்கமெர்ஜின் அவரது குடும்பத்தினர் சொல்வது போல ஒரு முஸ்லிம் பெண்ணின் மீது ஆசைப்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார் என்றால் அது தவறு. இஸ்லாமின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் வெறும் உணர்ச்சி வேகத்தில் மதம் மாறுவது, மத மாற்றம் அல்ல; அது வெறும் பெயர் மாற்றம்தான்!

ஆனால், இந்தச் செய்தியில் பல முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருக்கின்றன.

'கட்டாய மத மாற்றம்' என்று புரளியைக் கிளப்பியவர்கள், பிறகு 'திருமண ஆசை காட்டி' மதம் மாற்றினார்கள் என்கிறார்கள். அப்படி எந்தத் திருமணமும் நடந்ததாகவும் தெரியவில்லை. ஆசை காட்டியவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்றால் தங்கமெர்ஜின் ஏன் இன்னும் முஸ்லிமாகவே இருந்து கொண்டிருக்கிறார்?

கட்டாயப் படுத்தியோ ஆசை காட்டியோ மதம் மாற்றி ஆள் சேர்க்க வேண்டிய தேவை இஸ்லாமிற்கு என்றும் இருந்ததில்லை!

கட்டாயப் படுத்தியோ ஆசை காட்டியோ மதம் மாற்றுவதற்கு தங்கமெர்ஜின் விபரம் புரியாத சிறுவன் அல்ல. 22 வயதைக் கடந்த வாலிபர். நல்லது எது கெட்டது எது என்பதை உணர்ந்து கொள்ளும் பருவத்தை அடைந்தவர்.

அப்படி கட்டாயப் படுத்திதான் அவரை மதம் மாற்றினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், போலிசாரின் விசாரணையில் அவர் உண்மையை சொல்லியிருக்க முடியும். போலிசாரிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றவர்கள் முஸ்லிம்களே என்பதால் முஸ்லிம்கள் இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதும் புரிகிறது!

தங்கமெர்ஜினின் தந்தை கோமா நிலைக்குச் சென்றது வருத்தத்திற்குறிய ஒரு விஷயம்தான். ஆனால் அவரது மதமாற்றத்தால்தான் அவர் உடல் நலம் பாதிக்கப் பட்டார் என்பது ஒரு செண்டிமெண்டல் பிளாக் மெயில் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. தங்கமெர்ஜின் முஸ்லிமாக இருந்தாலும் அவரது பெற்றோர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு மகன் என்ற முறையில் தனது பெற்றோருக்குரிய கடமைகளை அவரால் நிறைவேற்ற முடியும். இஸ்லாம் அதைத்தான் வலியுறுத்துகிறது.

மதமாற்றம் என்பது விளையாட்டு விஷயம் அல்ல. இது போன்ற ஒரு கடினமான முடிவை எடுத்து அதில் திடமாகவும் இருக்கும் தங்கமெர்ஜினுக்கு பாராட்டுக்கள்!

9 comments:

said...

//தங்கமெர்ஜின் முஸ்லிமாக இருந்தாலும் அவரது பெற்றோர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு மகன் என்ற முறையில் தனது பெற்றோருக்குரிய கடமைகளை அவரால் நிறைவேற்ற முடியும். இஸ்லாம் அதைத்தான் வலியுறுத்துகிறது.//
இஸ்லாம் வலியுறுத்தும் பெற்றோருக்குரிய கடமைகளை, அவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் நிறைவேற்ற வேண்டும்.
நல்ல தீர்வோடு சொல்லி இருக்கின்றீர்கள்.

said...

you guys expecting only the hindus to be tolerent. do you follow the same thing? even now, you can see that muslims used volience against some innocent boys just because they were talking to muslim girls, in ramanathapuram.

said...

//இஸ்லாம் வலியுறுத்தும் பெற்றோருக்குரிய கடமைகளை, அவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் நிறைவேற்ற வேண்டும்.//

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சுல்தான்.

திருமறை வசனம் 31:14 - "மனிதனுக்கு அவனது பெற்றோரைப் (பேணுவது) பற்றி நாம் உபதேசித்தோம். அவனது தாய் பலவீனத்திற்கு மேல் பலவீனம் அடைந்தவளாக அவனை (கருப்பையில்) சுமந்திருந்தாள். இன்னும் (அவனுக்குப் பால் குடி மறக்கடித்து) அவன் பிரிவது இரண்டாண்டுகளாகும். எனக்கும், உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே (உன்) மீளுதல் இருக்கிறது"

முஸ்லிமாக திரும்பிய ஒரு சகோதரர் தான் ஏற்றுக் கொண்ட ஏகத்துவக் கொள்கைக்கு மாற்றமில்லாத பிற நற்செயல்களில் தன் முஸ்லிமல்லாத பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடக்கலாம்.

"முஸ்லிமல்லாத என் தாய்க்கு உபகாரம் செய்யலாமா?" என்று கேட்கப்பட்டபோது, "ஆம். உன் அன்னைக்கு உபகாரம் செய்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

said...

//params said...
you guys expecting only the hindus to be tolerent. do you follow the same thing? //

பதிவை இன்னொரு முறை வேண்டுமானால் படித்துப் பாருங்கள் பரம்ஸ்.

தங்கமெர்ஜின் ஒரு முஸ்லிம் பெண்ணின் மீது கொண்ட ஆசையினால் மட்டுமே மதம் மாறியிருந்தால் அது தவறு என்று சொல்லியிருக்கிறேன்.

அப்படியில்லாமல், அவர் யாருடைய கட்டாயமுமில்லாமல் இஸ்லாமின் கோட்பாடுகள் அவருக்கு பிடித்திருந்ததால் முஸ்லிமாக மாறியிருந்தால், அவரை மீண்டும் இந்துவாக மாறும்படி ஏன் வற்புறுத்த வேண்டும்? அவர் முஸ்லிமாக இருந்தாலும் அவரது பெற்றோருக்கு ஒரு நல்ல மகனாகவும் இருக்க முடியும்.

அடுத்து, நீங்கள் சொல்லும் ராமநாதபுரம் சம்பவம்... முனிராஜ் என்பவர் திருமணமான ஒரு முஸ்லிம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது. இது போன்ற சம்பவங்களுக்கு மதச்சாயம் பூசுவதும் மிகத் தவறானது. முனிராஜின் இடத்தில் ஒரு அப்துலோ குலாமோ இருந்திருந்தால் அப்பெண்ணின் கணவர் எப்படி நடந்திருப்பார் என்பதையும் யோசிக்க வேண்டும். 'நீங்களெல்லாம் நம்மாளுங்க.. அதனால 'வாங்க பழகலாம்' என்று கூப்பிட்டிருப்பாரா? இதே முனிராஜ் ஒரு சாந்தியிடமோ, சித்ராவிடமோ இப்படி நடந்திருந்தால் அப்பெண்ணின் கணவர்கள்தான் இப்படி சொல்லியிருப்பார்களா?

said...

///முனிராஜ் என்பவர் திருமணமான ஒரு முஸ்லிம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது///

please dont select just one. there was one more case where an innocent guy just talked to a muslim school girl.. also if a women is willing, why do u bother?

said...

பரம்ஸ், நீங்கள் சொல்லும் கருத்துக்களைத்தான் நானும் என் பதிவில் சொல்லியிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு பழனியில் இரண்டு பேர் இஸ்லாமிலிருந்து இந்து மதத்திற்கு மாற்றப் பட்டதாக செய்திகள் வெளியாயின. அதை எதிர்த்து எந்த முஸ்லிம் அமைப்பும் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் செய்ததாக தெரியவில்லை. Why you guys expecting only the muslims to be tolerent? do you follow the same thing when somebody wants to join Islam?

முஸ்லீம் மத கோட்பாடுகள் தனக்கு பிடித்து இருந்ததால் அந்த மதத்துக்கு மாறியதாக தங்கமெர்ஜின் தெளிவாக போலீசாரிடம் தெரிவித்தார். if that boy is willing, why do u bother?

பி.கு. எனக்கு தமிழ் நன்றாகவே எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் நீங்கள் தாராளமாக தமிழிலேயே பின்னூட்டலாம். நன்றி.

said...

Dear Params,
தமிழகத்தின் திரையுலகத்தை சார்ந்த குஷ்பு இந்து மதத்தை தழுவியதை எதிர்த்து எந்த இஸ்லாமிய மத அமைப்பாவது போராட்டம் நடத்தியதா? இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதற்கு ‘சுன்னத்' செய்து கொள்ளவேண்டும் - ஆனால் ‘ஆரிய சமாஜிடம்' ரூபாய் 5000 கொடுத்தால் மிகவும் சுலபமாக யார் வேண்டுமானாலும் மாறிவிடலாமே. இந்த வாய்ப்பைப்பற்றி உங்களைப்போன்ற உண்மையான இந்துக்கள், போஸ்டர் அடித்து ஆறு, குளம், நடு வீதி, முச்சந்தி என்று ஒட்டி - மற்ற மதத்தவர்களை கவர்ந்து - இந்து மக்களின் எண்ணிக்கையை உயர்த்தி 'பாரத தேசம்' - பாகிஸ்தானாக உருவாகுவதை தடுக்கவேண்டும்..ஒம் காளி! ஜெய் காளி..

said...

மரைக்காயரே,
பரம்ஸ் அங்கிலத்தில் எழுதுகிறாரே என்று சந்தோசப்படுங்கள் - அவர்களின் தேவ பாசயில் எழுதினால், என்ன பன்னுவேள்?

said...

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஷமிர் அலி. பரம்ஸ் ஆங்கிலத்தில் பின்னூட்டுவதன் காரணம் வேறு ஒன்றுமில்லை. 'கண்டுபிடிப்பாளர்களை' பற்றிய பயம்தான்!