Monday, September 28, 2009

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்த X X X பயங்கரவாதி கைது!

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக கூறி அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் தகவலின் பேரில் ஜெயின் என்பவர் அமுலாக்க துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

அவருக்கு சொந்தமான 9 வீடுகளும் சோதனை செய்யப்பட்டு, கணக்கில் வராத 60 லட்ச ரூபாய் ரொக்கமும், வெளிநாட்டு கரன்ஸிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர், தனது சகோதரர்கள், பீமால், சத்பால் ஆகியோருடன் இனைந்து சர்வதே அளவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், பொலிவியா, காங்கோ, இத்தாலி ஆகிய நாடுகளில் முகவர்கள் இருப்பதாகவும், சுமார் 5000 கோடி ரூபாய் அளவுக்கு ஹவாலா வர்த்தகம் புரிந்துள்ளதாகவும் முதற் கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.

அதேபோல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதி / இறக்குமதி நிறுவனங்களுக்கு சட்டதிற்கு புறம்பாக பணம் பட்டுவாடா செய்ததாகவும் விசாரனையில் தெரிய வந்துள்ளது. அதே போல் சர்வதேச தீவிரவாதி, தாவூத் இப்ராஹிமுடனும் தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது.

தகவல்: இந்நேரம்.காம்

முக்கிய குறிப்பு: தீவிரவாதிகளை மதத்தோடு சம்பந்தப் படுத்தக் கூடாது என சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் தலைப்பில் X X X என்று மட்டும் போட்டிருக்கிறேன். அந்த இடத்தில் நீங்களாகவே ஏதாவது பெயரை சேர்த்துக் கொண்டீர்களென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. மற்றபடி.. No other Comments!

Friday, September 25, 2009

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் ராணுவ வீரர்!

பீகார் தலைநகர் பாட்னாவில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்திய ராணுவத்தில் 5 ஆண்டுகாலம் சிப்பாயாக பணிபுரிந்த இந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பாட்னா அருகே கான்கர்பாக் என்ற இடத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவர் பதுங்கி இருந்தது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

மேலும் விசாரணையில் அவருக்கு ஐ எஸ் ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்பு உள்ளது என்ற திடுக்கிடும் தகவலும் வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகளின் வரைபடங்கள், ஏவுகணை வகைகள் மற்றும் அதன் தொழிற்நுட்பம் பற்றிய விவரங்கள் அதன் இருப்பிடங்கள் போன்றவைகள் அடங்கிய தஸ்தாவேஜூகளும் அந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

ராணுவத்தில் உள்ள சிப்பாய்களுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு பல உறுதியான தகவல்களை விவரங்களை இவர் சேகரித்துள்ளார். இந்திய பகுதி காஷ்மீரில் உள்ள ஏவுகணைகளின் தொழிற்நுட்பம், நிறுத்தி வைக்கபட்டுள்ள இடங்களின் வரைபடம் ஆகியவை அவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவரிடமிருந்து 5 சிம்கார்டுகளும் ஒரு மொபைல் போனையும் கைப்பற்றிய காவல்துறையினர் அதிலுள்ள நேபாளநாட்டு தொலை பேசி எண்களை கொண்ட சிம்கார்டை கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தகவல்: இந்நேரம்.காம்

மேலே கண்ட தகவலில் சொல்லாமல் விட்ட ஒன்று அந்த நபரின் பெயர்.. அது சுதன் சுதாகர்.

ச்சே.. ஜஸ்ட் மிஸ்..! மவனே! ஒன் பேரு மட்டும் சலீம் அபூபக்கர் என்று இருந்ததுன்னா, இன்னேரம் 'இணைய நீதிமான்'களெல்லாம் சேர்ந்து உன்னை, உன் பரம்பரையை, உன் மதத்தை, உன் மதத்தை பின்பற்றும் மற்ற எல்லோரையும் நார் நாராக கிழித்து தொங்க விட்டு, உனக்கு 'தேசத்துரோகி' பட்டம் சுமத்தி, தூக்குத் தண்டனை கொடுத்து தொங்க விட்டிருப்பார்கள்.

அத்துவானியிலேருந்து தமிழ் புளோக் எழுதுற அம்மாஞ்சி வரைக்கும் உனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றினாத்தான் இந்தியாவுக்கே விமோசனம் கிடைக்கும் என்று போராட்டம் நடத்தியிருப்பாங்க!

அடுத்த விஜயகாந்து படத்திலும் கமலஹாசன் படத்திலும் வில்லனா வர்ற கொடுப்பினையும் உனக்கு கெடச்சிருக்கும்.

சுதாகர்னு பேரு வச்சிருந்ததாலே தப்பிச்சிட்டேடா மவனே!