Thursday, December 21, 2006

தமிழகத்தை கலவர பூமியாக்கும் திட்டம்! - ஜனநாயகன்

தமிழகத்தைக் கலவர பூமியாக்க இந்து முன்னணி பயங்கர சதித்திட்டம்!
- ஜனநாயகன்

சமூக நீதிக்கும் அமைதிக்கும் நிலைக்கலனாகி நிற்கும் தமிழகத்தை கலவர பூமியாக்கி முஸ்லிம்களின் ரத்தம் சுவைப்பதற்கு கங்கணம் கட்டி களமிறங்கியுள்ளது காவிப் பரிவாரம். காவி சக்திகள் இதுவரை நடத்தியுள்ள கலவரங்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு பகுதியை கலவரக் காடாய் மாற்றும் முன், அங்குள்ள முஸ்லிம்களையும், அவர்களின் சொத்துக்களையும் துல்லியமாக அடையாளப் படுத்துவார்கள். இதுவே சங்பரிவார சதித்திட்டத்தின் முதல் கட்டமாகும்.

1993ம் ஆண்டு பம்பாயில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பவர்களின் வேடத்தில் சென்று, வீடுதோறும் விசாரித்து முஸ்லிம் வீடுகளில் ஸ்வஸ்திகா குறியிட்டுச் சென்றது சங்பரிவாரக் கும்பல். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரத்தில் சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

குஜராத்தில் 2002ம் ஆண்டில் இதேபோல முஸ்லிம்களை அடையாளம் காணும் பணியை காவிப்படை முடுக்கி விட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளில் சுமார் மூவாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரம் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள், தங்கள் வீடுகளை இழந்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டார்கள். பாகல்பூர், பீவண்டி, சூரத், லட்டூர் என வடமாநிலங்களில் இவர்கள் நடத்திய கொடிய கலவரங்களால் பல்லாயிரம் முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சூறையாடப்பட்டன.

மதவெறியை பயங்கரமாகத் தூண்டி, மக்கள் நெஞ்சுகளில் நஞ்சைக் கலந்து, ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, கலவரத்திற்குக் கால்கோள் செய்து பிணங்களில் நடந்து மேலேறுவதே காவிக் கயவர்களின் கடந்த கால வரலாறு.

இந்தக் கொடூர பயங்கரவாதிகளின் கவனம் இப்போது தமிழகத்தில் குவிந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படியாவது இங்கு மதக் கலவரத்தை உருவாக்கி, மாநில அமைதியை மயானத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மத பயங்கரவாதிகளின் மனது துடிக்கிறது.

முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டமாம் தஞ்சைத் தரணியில், அவர் வளர்ந்த திருவாரூர் பகுதியிலிருந்தே மதவெறி நெருப்பை வளர்த்து, தமிழக அமைதியைப் பொசுக்குவதற்குரிய மாபாதகத் திட்டத்தை இந்து முன்னணி பயங்கரவாதிகள் தீட்டியுள்ளனர். அவர்கள் நடத்தும் 'விஜயபாரதம்' என்ற விஷக் கருத்துப் பத்திரிகை மூலம் இந்த விபரீதம் வெளிவந்துள்ளது.

திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சைத் தரணியில் முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள், வணிக நிறுவனங்கள், முஸ்லிம் கல்லூரிகள், அரபி மதரஸாக்கள், வசதி படைத்த முஸ்லிம் வீடுகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கெடுத்து அவற்றைத் தாக்குதல் இலக்குகளாய் இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு அடையாளம் காட்டி, விரிவான சதித் திட்டத்தின் ஒரு பகுதியை சங்பரிவார பத்திரிகையான விஜயபாரம் வெளியிட்டுள்ளது. (ஸ்வய ஆவணி 30, கலியுக ஆண்டு 5108(?) 15-09-2006 என்ற தேதிதான் இந்த பாடுபடுகிறது)

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூர், பண்டாரவாடை, ராஜகிரி, பாபநாசம், திருப்பாலத்துறை, திருவலஞ்சுழி, கும்பகோணம், சோழபுரம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், மதுக்கூர், ஆவணியாபுரம், திருப்பனந்தாள், சேதுபாவாசத்திரம், ஆடுதுறை, முருக்கங்குடி, நாச்சியார் கோவில், ஒரத்தநாடு உள்ளிட்ட ஊர்களில் இஸ்லாமிய ராஜ்ஜியம் நடப்பதாகவும், அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் விஜயபாரதம் வெறி ஊட்டியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர், கொடிக்கால்பாளையம், அடியக்கமங்கலம், ஆழியூர், கூத்தாநல்லூர், பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், குடவாசல், அபிவிருத்தீஸ்வரம், அடவங்குடி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, நன்னிலம் ஆகிய ஊர்களையும் நாகை மாவட்டம் நாகூர், தரங்கம்பாடி, கோடியக்கரை, கரியாப்பட்டினம், தோப்புத்துறை, தேத்தாகுடி, பூம்புகார், மயிலாடுதுறை, கிளியனூர், வடகரை, மன்னம்பந்தல், நீடூர், கடலங்குடி, குத்தாலம், வானாதிராஜபுரம், தேரிழந்தூர், திருவாடுதுறை, திருவாலாங்காடு, சீர்காழி, தைக்கால், மேலச்சாலை, பொறையார் ஆகிய ஊர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், பந்தர்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களையும் பார்ப்பனர்களிடமிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டதாகவும், மேற்கண்ட பகுதிகளில் பிராமணப் பெண்களை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பல அட்டூழியங்களை முஸ்லிம் இளைஞர்கள் செய்து, மேற்கண்ட ஊர்களிலிருந்து பார்ப்பனர்களைத் துரத்தி அடித்து விட்டதாகவும், முஸ்லிம்களின் அராஜகங்கள் தாங்க முடியாமல்தான் தஞ்சை பிராமணர்கள் தங்கள் உயிரையும், ஆச்சாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள நாட்டின் பல பகுதிகளுக்கு தப்பிச் சென்று குடியேறி இருப்பதாகவும், தஞ்சை தரணியை முழு முஸ்லிம் ராஜ்ஜியமாக்க முஸ்லிம்கள் சதித்திட்டம் போட்டுள்ளதாகவும், அதன் ஒரு கட்டமாகவே அக்ரஹாரங்களை இடித்து வீடு கட்டிக் கொண்டு, கோவில்களை இடித்து பள்ளிவாசல் கட்டிக் கொண்டு முஸ்லிம்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் விஜயபாரதம் எழுதியுள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அழகிய பள்ளிவாசல்களைப் படமெடுத்து வெளியிட்டு, பாழடைந்து கிடக்கும் கோவில்களின் படங்களையும் பக்கத்தில் போட்டு, இதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று நெருப்பைக் கொளுத்தி யிருக்கிறது சங்பரிவாரத்தின் ஏடு. தஞ்சைப் பகுதியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் முகாமிட்டு, முஸ்லிம்களை மிக உற்றுக் கவனித்து, சதித்திட்டங்களை தீட்டியிருப்பதை நாம் உணர முடிகிறது. முஸ்லிம் தொழில் நிறுவனங்களையும், தொழில் அதிபர்களையும், கல்விக் கூடங்களையும் கொடியோர் கும்பல் குறிவைத்திருக்கிறது.

தமிழகத்தை குஜராத் ஆக்கும் சங்பரிவார சதிக்கனவின் முதல் பகுதி இது. அரசு உடனே விழித்துக் கொள்ளாவிடில் ஆபத்தான விளைவுகளை இவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள்.

ஞ்சை தரணியில் முஸ்லிம்கள் எவ்வாறு எழுச்சிப் பெற்றார்கள்? அக்கிரஹாரங்கள் ஏன் காணாமல் போயின? தஞ்சைத் தரணியில் அராஜகம் செய்பவர்கள் யார்? போன்ற விஷயங்களுக்கு விடைகாண நிசங்களை அலசுவோம்...

(உண்மைகள் கண்விழிக்கும் அடுத்த வாரம்...)

நன்றி: தமுமுக

6 comments:

said...

இந்து மதவாத பேய்களை தமிழகம் புதுவை இவைகளில் தலைதூக்கவிடாமல் தடுத்து, அனைத்து மத கலாச்சார சமூகங்கள் இணைந்து இன்பமுடன் வாழ வழி செய்வோம்!

சிறுபான்மையினர் இசுலாமியர், கிறித்துவர் அனைவரும் தமிழர்களின் சகோதர சமூகத்தினரே.

கவனிப்பை தளர்த்தாமல் விழிப்புடன் செயல்படுவோம்.

அன்புடன் தந்தை பெரியார்வழி மாசிலா.

Anonymous said...

//முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சொந்த மாவட்டமாம் தஞ்சைத் தரணியில், அவர் வளர்ந்த திருவாரூர் பகுதியிலிருந்தே மதவெறி நெருப்பை வளர்த்து, தமிழக அமைதியைப் பொசுக்குவதற்குரிய மாபாதகத் திட்டத்தை இந்து முன்னணி பயங்கரவாதிகள் தீட்டியுள்ளனர். அவர்கள் நடத்தும் 'விஜயபாரதம்' என்ற விஷக் கருத்துப் பத்திரிகை மூலம் இந்த விபரீதம் வெளிவந்துள்ளது.//

அடப்பாவிங்களா! இந்த கொடூர சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் மல மன்னன் போல தேசவிரோத சக்திகள் தஞ்சை மாவட்டத்தை குறிவைத்து துவேஷ நெருப்பை பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்களா?

said...

கோவையிலே கடைதிறக்க வந்தேன் என்ற அத்வானி கடையை மட்டுமல்ல கலகத்தையும் திறக்கத்தான் வந்தார்.பணபலமும் பத்திரிக்கை பலமும் ஊரில் பெரியமனிதன்ாக விரும்பும் ஏமளித்தமிழர்களையும் பயன்படுத்துகிறது.கிறித்தவப் பள்ளிகளிலே படித்ததற்கு நன்றிக் கடன் பாதிரியார் குடும்ப்த்தை எரித்தல்.
கலைஞர் ஆட்சி அனைத்து மதவெறிியர்கட்கும் பாடங்கற்பித்து தவறு செய்பவர்களை மட்டுமன்றித் தூண்டிவிடும் நரிகளையும் நசுக்கப்போகிறது.தமிழகம் மீண்டும் மனிதநேய்ப் பூங்காவாக மாறும்.

said...

கருத்து தெரிவித்த மாசிலா, அனானி நண்பர் மற்றும் தமிழனுக்கு நன்றி.

இந்துத்துவாக்களின் இந்த கொடூர சதித்திட்டம் பற்றி அடி-அதிரடி அவர்கள் பெயருக்கு ஏற்ற மாதிரி சிறப்பான பதிவு ஒன்று போட்டிருக்கிறார்கள்.

http://adiathiradi.blogspot.com/2006/12/blog-post.html

Anonymous said...

//தமிழகத்தை குஜராத் ஆக்கும் சங்பரிவார சதிக்கனவின் முதல் பகுதி இது. அரசு உடனே விழித்துக் கொள்ளாவிடில் ஆபத்தான விளைவுகளை இவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள்.//

நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. இவர்கள் செய்தாலும் செய்வார்கள். ஏற்கனவே இரண்டு இடங்களில் இது போன்ற திட்டத்தை அரங்கேற்றியவர்கள்தானே.

said...

மரைக்காயரே
அடி-அதிரடியில் நான் வைத்த மறுமொழி இந்த பதிவுக்கும் பொருந்தும் என்பதால் அதை இங்கேயும் இடுகிறேன்.

தஞ்சை மட்டுமில்லை இந்தியாவையே ம.ம ஆன்கோவின் குடும்ப சொத்தாக கருதுகிறார்கள் அதான் சொறிந்து சொறிந்து தடிப்பை ஏற்படுத்தி கொள்கிறார்கள்.

கவனிக்க:
//தொடக்கத்திலேயே உரிய கவனம் செலுத்தவில்லையெனில்..//

any way good post