Tuesday, December 19, 2006

கதை கதையாம் காரணமாம்!


இன்னிக்கு கதை சொல்ற மூடுல இருக்கேன். பாவம் நீங்கள்லாம் :-(

இதை கற்பனைன்னு சொல்றதா அல்லது நிஜம்னு சொல்றதா என்று எனக்கு தெரியவில்லை. அதனால் அதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

ஒரு நண்பர் என்கிட்ட சொன்னார், "உங்க வீட்டை விட என் வீடு உயர்வானது. அதனால உங்க வீட்டை விட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்துடுங்க"

'சரி, அதையும்தான் பாக்கலாமே'ன்னு அவர் வீட்டை பாக்குறதுக்கு என்னை அழைச்சுகிட்டு போகச் சொன்னேன்.

ஒரு நாள் அவர் என்னை கூட்டிக்கொண்டு போனார். போய்ப் பார்த்தால்....
அவர் வீடு என்று சுட்டிக் காட்டிய இடத்தில் பொட்டல்வெளிதான் இருந்தது! ஆமாங்க. வெறும் திடல்.

"என்ன நண்பரே? வீடுன்னு சொல்லி திடலை காட்டுறீங்களே?" என்றேன்.

"இதுதாங்க வீடு. இதை நீங்க கண்ணால பார்க்க முடியாது. உணரத்தான் முடியும்"னாரு அந்த நண்பர்.

"வீடுன்னா கதவு, சுவர், கூரை இதெல்லாம் இருக்கணுமே?" - இது நான்.

"ஏன் நாலு சுவத்துக்குள்ளேயே கட்டுப்பெட்டித் தனமா அடைஞ்சு கிடக்குறீங்க? இங்க அந்தக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. நீங்க சுதந்திரமா இருக்கலாம்" - அந்த நண்பர்

"அப்படின்னா கண்ட மிருகங்களும் வேஷம் போட்டுட்டு வந்து உங்களை தாக்குனா என்ன செய்வீங்க?"

"அதுங்கள்லாம் எங்களை வந்து தாக்குன பிறகு அதை நாங்கள் அடையாளம் கண்டு உதாசீனம் செய்து விடுவோம்"

"இந்த 'வீட்டுக்கு' பெரிய மனுசங்கன்னு யாரும் இருக்காங்களா? உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தா, ஆலோசனை வேணும்னா யார் கிட்டே கேப்பீங்க?"

"அதெல்லாம் தேவையேயில்லை. பல்வேறு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் உங்களதை தேர்ந்தெடுத்துக்கொள்வது உங்களது சுதந்திரம். உங்களது ஸ்வதர்மம்."

"ஒரே வீடுன்னு சொல்றீங்க. ஆனா, அங்கங்கே தனித்தனி கூட்டமா இருக்காங்களே, அவங்கள்லாம் யாரு? ஒரு கூட்டத்தில இருந்து வர்றவரை இன்னொரு கூட்டத்துல சேர்த்துக்க மாட்டேங்குறாங்களே, ஏன்?"

"அவங்க அப்படித்தான். அவங்களையும் இந்த வீட்டையும் ஏன் இணைச்சு பார்க்கணும்?"

"சரி இந்த வீட்டுக்கு ஒருத்தர் புதுசா வந்தா அவரை எந்தக் கூட்டத்துல சேர்ப்பீங்க?"

"ஏன் அவர் ஒரு கூட்டத்துல போய் சேரணும்? அவரு தனியாவே இருந்துக்கலாமே?"

எனக்கு ஒன்னுமே புரியலை. உங்களுக்கு?

=====

டிஸ்க்ளெய்மர் 1: இன்னொரு பதிவின் தாக்கத்தால் இந்தப் பதிவுக்கு நான் முதலில் வைத்த தலைப்பு வேறு. சில நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று தலைப்பு மாற்றப்பட்டது.

டிஸ்க்ளெய்மர் 2: ஒரு கருத்தை யாராவது சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது.

எமது அடுத்த வெளியீடு:

இதுதாம்லே பெண்ணுரிமைங்குறது! (ஆதாரங்களுடன்)

16 comments:

said...

மென் மேலும் துவேஷங்கள் வேண்டாமே ப்ளீஸ்

http://rasithathu.blogspot.com/2006/12/blog-post_20.html

Anonymous said...

ஆரம்பிச்சட்டங்கப்பா! ஆரம்பிச்சட்டங்கப்பா!
காப்பி அனுப்பிட்டிங்களா, உங்களுக்கு வீட்டை காட்டினவங்களுக்கு.

Anonymous said...

//செந்தில் குமரன் said...
மென் மேலும் துவேஷங்கள் வேண்டாமே ப்ளீஸ் //

நான் அதை வழி மொழிகிறேன்

நல்லதே நினைப்பவன்

said...

//மென் மேலும் துவேஷங்கள் வேண்டாமே ப்ளீஸ்..

நான் அதை வழி மொழிகிறேன்..//

உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி செந்தில் குமரன், நல்லதே நினைப்பவன். அதை ஏற்று இந்த பதிவின் தலைப்பை மாற்றி விட்டேன்.

Anonymous said...

செந்தில் குமரன்களும், மரைக்காயர்களும் தமிழ் சகோதரர்கள் தாம். ஒற்றுமையே தமிழனின் பலம். வேற்றுமையை புகுத்தி பாகுபாடுகளை விதைத்தவன் யார்? இருவரும் நெஞ்சைதொட்டு சொல்லுங்கள்? இந்துவும் அல்ல, முசுலிமும் அல்ல, திராவிடனும் அல்ல, தமிழனும் அல்ல. அவன் யார்?

said...

சகோதரர் மரைக்காயர்,

இதுதான் இந்துமதமா? என்று சரியாகத்தான் கேட்டிருக்கிறீர்கள். ஏன் பெயரை மாற்றினீர்கள் என்று தெரியவில்லை.

நல்ல கேள்விதான். உங்களது குழப்பம் புரிகிறது. நேரமிருக்கும்போது இதற்கு பதில் எழுதுகிறேன்..

எழில்

Anonymous said...

//உங்களது குழப்பம் புரிகிறது. நேரமிருக்கும்போது இதற்கு பதில் எழுதுகிறேன்.. - எழில் //


அக்குரமத்தை பாருங்கையா! குழப்பத்தின் மொத்த உருவமா இவர் இருந்துக்கிட்டு மரைக்காயரோட குழப்பம் இவருக்கு புரியுதாம். என்ன புரியுதோ என்ன எழவோ!

said...

//குழப்பத்தின் மொத்த உருவமா இவர் இருந்துக்கிட்டு மரைக்காயரோட குழப்பம் இவருக்கு புரியுதாம். //

சரியா சொல்லியிருக்கீங்க அனானி நண்பரே. எழில் போன்றவர்களின் பிரச்னை இதுதான். தன்னிடம் உள்ள பிரச்னைகளை பத்தி யோசிக்காம, மத்தவங்களோட பிரச்னை ஒன்னை இவங்களே கற்பனை பண்ணிகிட்டு அதுக்கு தீர்வு சொல்லிகிட்டிருப்பாங்க.

said...

கண்ணாடியில் அழுக்கென்று கதை கட்டுகிறார்கள் எழில் போன்றவர்கள்.
தன் முகத்தில் வைத்துக்கொண்டு!

said...

//கண்ணாடியில் அழுக்கென்று கதை கட்டுகிறார்கள் எழில் போன்றவர்கள்.
தன் முகத்தில் வைத்துக்கொண்டு!//

சரியா சொன்னீங்க ராஜா.
நன்றி.

said...

பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு மட்டுமே இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.

தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"அவனை முதலில் நிறுத்தச் சொல்" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர!

இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.

இந்தப் பின்னூட்டம் இன்னும் சில பதிவுகளிலும் வரும்!

அனைவருக்கும் நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்!

said...

//தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"அவனை முதலில் நிறுத்தச் சொல்" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர!//

அன்பு எஸ்கே அய்யா! உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. என்னுடைய இன்னொரு பதிவில் சல்மான் என்ற சகோதரரும் இதே போல வேண்டுகோள் வைத்திருந்தார். அவருக்கு அளித்த பதிலை இங்கே இடுகிறேன்.

//நிஜத்தில், முஸ்லிம்கள் யாரும் பிற மதங்களின் பால் துவேஷம் பாராட்டி எழுதியதில்லை. எதிர்வினையாக தாக்கி எழுத முற்பட்ட ஒரு சில முஸ்லிம்களையும், சகோதரர்கள் இப்னு பஷீர், அபூ முஹை, நல்லடியார் போன்ற இணைய இஸ்லாமிஸ்ட்கள்:)) கண்டித்து அடக்கியதைத் தான் நான் கண்டிருக்கிறேன்.

ஆனால், இப்போதோ, நல்லப் பிள்ளை வேடத்தில் வந்து காழ்ப்புணர்வைக் கொட்டுகிறவர்களுக்குத் தான் முள்ளை முள்ளால் எடுக்கும் வழியில் அவர்களுடைய காழ்ப்புணர்வை அவர்கள் வழியிலேயே சென்று அகற்ற முயற்சிக்கிறேன். இஸ்லாம் பற்றிய அபத்தமான அவர்களின் காழ்ப்புணர்வை அவர்கள் கைவிடும் பட்சத்தில், என் பதிவுக்கும் அவசியமிருக்காது என்பதை சொல்லி வைக்கிறேன். நன்றி//

இந்து மதத்தை குறைத்து மதிப்பிடும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. எழில் என்பவர் 'இதுதான் இஸ்லாமிய ஷாரியாவா?' என்று ஒரு பதிவிட்டு முஸ்லிம்களை வம்புக்கு இழுத்ததால்தான் நானும் 'இதுதான் இந்து மதமா?' என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதினேன். சகோதரர் செந்தில் குமரன் போன்றவர்கள் 'துவேஷம் வேண்டாமே' என்றதால் அந்த பதிவின் தலைப்பை மாற்றி விட்டேன். உங்களைப் போன்ற இந்து மத சகோதரர்களின் மனம் புண்படக்கூடாது என்பதுதான் என் விருப்பமும். ஆனால் எழில், நீலகண்டன், ஜடாயு போன்றவர்கள் தேவையில்லாமல் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கும்போது அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக இது போல எழுத நேரிட்டு விடுகிறது. முடிந்தவரை அதை தவிர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி.

Anonymous said...

"இந்து மதத்தை குறைத்து மதிப்பிடும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. எழில் என்பவர் 'இதுதான் இஸ்லாமிய ஷாரியாவா?' என்று ஒரு பதிவிட்டு முஸ்லிம்களை வம்புக்கு இழுத்ததால்தான் நானும் 'இதுதான் இந்து மதமா?' என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதினேன்".


அப்படி என்றால் அவருக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? வாழ்க்கையில் ரசிப்பதற்கு எவ்வளவோ உள்ளது. அதை விடுத்து ஏன் இந்த மதங்களைப் பிடித்துத் தொங்குகிறீர்கள்? உணவில், உடையில், அலங்காரங்களில் ஒவிவொர்வர்க்கும் ஒவ்வொரு எண்ணம் இருப்பதைப் போல மதத்திலும் ஒவ்வொரு நம்பிக்கைகள்! மதங்களுக்குக் கொடுக்கும் மதிப்பை மனிதர்களின் மனங்களுக்கு கொடுங்கள்!
அடுத்தவரை இந்த எழுத்துகள் அல்லது வார்த்தைகள் கஷ்டப்படுத்துமே என்ற எண்ணம் வந்தாலே போதும்! எல்லா மதமும் சம்மதம் ஆகி விடும்!

Anonymous said...

கன்னி - பெயர் சரிதானே?!,

தாழ்த்தப்பட்டவள் என்கிற ஒரே காரணத்தால், தான் சமைத்த உணவை உண்ண மறுக்கும் ஆதிக்கசாதி மாணவர்களைப் பார்த்து மனம் குமையும் மகேஸ்வரிகள்...,

தாழ்த்தப்பட்டவள் என்கிற ஒரே காரணத்துக்காக தன் சொந்த நாட்டிலும் குடியரசு தினத்திலும் கொடியேற்ற அனுமதிக்கப்படாத சுனிதா பாபுகள்...

தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற ஒரே காரணத்தால் ஆதிக்க வெறியர்களால் மலம் புகட்டப்பட்டவர்கள்..

(மேலும் விபரங்களுக்கு இதைப்பாருங்கள்: http://adiathiradi.blogspot.com/2006/03/blog-post_24.html)

இப்படி சொந்த வீட்டில் அள்ளிக்கொட்ட வேண்டிய மலம் ஆயிரம் இருக்க, எழில்கள் அடுத்தவன் மூக்கில் உள்ளதை அரைகுறையாக ஆராய்ந்துக்கொண்டிருப்பதன் பின்னணி காழ்ப்பையும் நாம் உணரவேண்டும்.

சகோதரர் மரைக்காயர் போன்றவர்கள் இதுபோல எழுதாமல் போனால் 'எழிலா'க உலா வருபவர்களின் உள் மன விகாரங்களையும் நாம் அறிய இயலாமல் போகும் அல்லவா!

said...

//அப்படி என்றால் அவருக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?//

வித்தியாசம் இருக்குங்க. நாமே வலிய போய் இன்னொருத்தரை தாக்குறதுக்கும் அந்த இன்னொருத்தர் பொறுத்து பொறுத்து முடியாம திருப்பி நம்மை அறையுறதுக்கும் உள்ள வித்தியாசம்.

Anonymous said...

//செந்தில் குமரன்களும், மரைக்காயர்களும் தமிழ் சகோதரர்கள் தாம். ஒற்றுமையே தமிழனின் பலம். வேற்றுமையை புகுத்தி பாகுபாடுகளை விதைத்தவன் யார்? இருவரும் நெஞ்சைதொட்டு சொல்லுங்கள்? இந்துவும் அல்ல, முசுலிமும் அல்ல, திராவிடனும் அல்ல, தமிழனும் அல்ல. அவன் யார்? //

சதீஷ்,
தான் சல்லடையாக இருந்துக்கொண்டு ஊசியின் ஓட்டையை விலாவரியாக விளம்பரப்படுத்திக் குளிர் காய்கிறானே, அவன் தான்!