Monday, December 18, 2006

தமிழ் மண்ணே வணக்கம்! - பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்

‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!
அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே!
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே!
இதை வந்தனை கூறி மனத்தில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ?’
என்கிற நம் மூதாதையர் பற்றிய வரலாற்று உணர்வுதான் நமக்கு விடுதலையின் தேவையை உணர்த்தியது.

எப்படி வாழ்கிறோம் என்பதை மதிப்பிட எப்படி வாழ்ந்தோம் என்கிற வரலாறுதான் அளவுகோல். அந்த உணர்வைத் தமிழன் தொலைத்ததால் தான், நம்முடைய கீழாநெல்லியை வெளிநாட்டுக்காரர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். வரலாறு தெரியாமல் போனதால்தான், தமிழகப் பள்ளிகளில் தமிழ் பேசினால் தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தண்டனை கிடைக்கிறது. தமிழ்க் குடும்பங்களின் கிழவன், கிழவிகளைப் பயன்படாதவர்களாக, பாரமானவர்களாகப் பார்ப்பதற்கும் நமக்கு வரலாற்று அறிவு இல்லாமல் போனதுதான் முக்கிய காரணம்.

கடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்.

வரலாறு என்பதை, படித்தால் வேலை கிடைக்காத ஒரு பாடப் பிரிவாக வைத்துவிட்டோம். நம் பெருமைகளை, இழப்புகளை, அதற்கு நாம் தந்த விலையைத் தெரிந்துகொள்வதற்கு வரலாறுதான் நமக்கு கடந்த காலம் காட்டும் கண்ணாடி என்பதை மறந்துவிட்டோம்.

சரி, கடந்த காலத்தை தெரிந்து வைத்துக்கொண்டு என்ன செய்வது?

காலம் காட்டும் கண்ணாடிதான், வருங்காலத்துக்கான பாதைகளையும் காட்டும் கைவிளக்கு. எனவே, வரலாற்றைத் தொலைப்பது என்பது வருங்காலத்தையே தொலைப்பதற்குச் சமம்.

நம் நாட்டின் மிகப் பெரிய தீமை, சாதிப் பிரிவினையும், தீண்டாமைக் கொடுமையும் ஆகும். குஜராத்தில் பூகம்பம் வந்தது. உயர்ந்து நின்ற கட்டடங்கள் எல்லாம் தரைமட்டமாயின. இடிபாடுகளுக்கிடையில் ஆயிரக் கணக்கில் இறந்து கிடந்தனர் நம் மக்கள். கை கால் இழந்து, எலும்பு முறிந்து ஊனமுற்றவர்களாயினர். உயிர் துறந்து, உடைமை துறந்து கூட்டம் கூட்டமாக முகாம்களில் தங்கியிருந்தனர். அந்த நிலையிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், எங்களுக்கும் ஒரே உலையில் உணவு சமைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று பெரிய போராட்டத்தையே நடத்தினர் நம் உயர்சாதிச் சகோதரர்கள். இதைவிட அவமானமும் துயரமும் வேறென்ன இருக்க முடியும்?

பண்டமாற்று முறையில் தேன் கொடுத்து, மீன் வாங்கி உயிர் வாழ்ந்த ஒரு கலாசாரத்திலிருந்து வந்தவர்களுக்குள்தான் இப்போது இத்தகைய கொடூரப் பிரிவினை. எப்படிச் சேர்ந்து வாழ்ந்தோம் என்கிற வரலாறு அடுத்த தலைமுறைக்கு உணர்த்தப்பட்டால் தான், பிரித்த சூழ்ச்சி எதுவென்று உணர முடியும்.

‘நான் விவசாயம் செய்கிற சாதியைச் சேர்ந்தவன் இல்லை’ என்பதை உணர்த்துவதற்காகத்தான் மார்பில் நூல் அணிந்தார்கள் என்பதை நாம் உணர்த்தி இருந்தால், உழவர்கள் சூத்திரர்களாக ஆகியிருக்க மாட்டார்கள். ‘உழந்தும் உழவே தலை’ என்று சொல்கிற திருக்குறளின் அர்த்தமும், ஆழமும்தானே நம் வரலாறு!

இனம், மொழி, நாடு, அரசியல், பொருளாதாரம், இலக்கியம்... இதுபோன்ற ஒவ்வொரு சமூகவியல் துறைக்கும் வரலாறு தேவை. நடந்த நிகழ்வுகளையும் செய்திகளையும் முறைப்படுத்தி வருங்காலத்துக்குச் சான்றாகவும், அறிவுறுத்தலாகவும் அமைவதே வரலாறு. நம் முன்னோர்களின் வாழ்வியல் அனுபவங்களே, வரலாறு! அனுபவங்களைத் தொலைத்துவிட்டு புதியதொரு வாழ்க்கையை வாழ்வது அறிவுடைமை ஆகாது.

‘முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடந்தது?’ என்று கோடிட்ட இடத்தை நிரப்புகிற கேள்வியாக வரலாற்றை நினைவு வைத்திருக்கிறோம். அதுதான் தவறு. ‘ஏன் அந்தப் போர் நடந்தது? அதனால் நிகழ்ந்த பாதிப்புகள் என்னென்ன?’ என்பன போன்ற கேள்விகள் மூலம்தான் வரலாற்றை அணுக வேண்டும். கடந்த காலத்தின் துணை கொண்டு நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளவும், வருங்காலத்தைக் கணிக்கவும் பயன்படுகிற சமூக விஞ்ஞானமாக வரலாற்றை பார்ப்பதே சரியான அணுகுமுறை.

இன்று நடக்கிற ‘இந்து - முஸ்லிம்’ மதக் கலவரங்களுக்கும், நம் மெக்காலே கல்வி முறையில் பயின்ற வரலாற்றுப் பாடத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.‘ஸ்டூவர்ட் மில்’ என்கிற ஆங்கில வரலாற்றாசிரியர், ‘ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்கிற தமது வரலாற்று நூலில், இந்தியாவை ‘இந்து இந்தியா’, ‘முஸ்லிம் இந்தியா’ என்று வகைப்படுத்தினார். இன்று இந்தியாவில் இந்து, முஸ்லிம் மதக் கலவரங்கள் நடப்பதற்கும், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் இரு நாட்டு இந்து - முஸ்லிம்களுக்கு இடையிலான அறிவிக்கப்படாத போராகப் பாவிக்கப்படுவதற்கும், வரலாற்று ஆசிரியர்களின் பிரிவினைகளுக்கும் நேரடியாகச் சம்பந்தம் இருக்கிறது. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியே நமக்கு மெக்காலே கல்வித் திட்டத்தின் மூலம் பாடமாக்கப் பட்டது.

நமக்கென்று ஒரு வரலாறு இல்லை, பண்பாடு இல்லை என்று நமக்கே சொல்லப்பட்டது. நாமும் கிளிப்பிள்ளைகளைப் போலத் திரும்ப அதையே சொன்னோம். நமது மன்னர்களைப் பற்றிய பெருமைகளையும், அவர்களின் போர்த் தந்திரங்களையும், வரி வசூலிக்கும் முறையையும் மட்டுமே வரலாறு என நமக்குப் போதிக்கப்பட்டது. மன்னர்களின் வரலாற்றையே மக்களின் வரலாறுதான் உருவாக்குகிறது என்பது நமக்கு இந்த விஞ்ஞான யுகத்தில் கூடப் புரியவில்லை.

‘மங்கலம்’ என்கிற பெயரில் முடிகிற ஊர்ப் பெயர்கள் இன்று நமக்கு வெறும் ஊர்ப் பெயர்களாக மட்டுமே தெரியும். ஆனால், அரசன் கண்ட ஒரு கெட்ட கனவுக்குப் பரிகாரமாக, நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு அவர்கள் விரும்புகிற பூமியைத் தானமாக தருகிற இடத்துக்கு ‘மங்கலம்’, ‘அகரம்’ என்கிற அடைமொழியுடன் பெயர் தந்தனர். அதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றைத் தேடிச் சென்றால்தான், நம் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தீவிரம் நமக்குப் புரியும்.

ஹிட்லரின் சுயநலத்துக்கு அவருடைய ‘இன மேன்மை வரலாறு’ தான் கருவியாக இருந்தது. ‘ஆரியர்கள், உலகம் ஆளப் பிறந்தவர்கள்’, ‘உலகம் நமதே!’ என்கிற கோஷத்துக்குப் பின்னால் லட்சக்கணக்கான மனித உயிர்கள் விலை பேசப்பட்டன.

பித்தப்பை கற்கள் காரணமாக லூயி மன்னன் அதிக வலியில் துடிதுடிக்க நேர்ந்ததும், அதன் பொருட்டு எழுந்த கோபமுமே பிரெஞ்சுப் புரட்சியின் ஆணி வேர்.

இந்திய வரலாற்றில், இஸ்லாமிய மன்னர்கள் கொடூரமானவர்களாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒளரங்கசீப் மன்னனை கொடூரமானவனாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சொல்லிவருகிறோம். அதுவே, தஞ்சையை ஆண்ட இந்து, மராத்திய மன்னர்களின் அந்தப்புரப் பெண்களின் வயது 12-லிருந்து தொடங்குவதைச் சொல்வது இல்லை. எல்லா மத அரசர்களும் மக்களைத் துன்புறுத்தும் நோக்கம் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அரசர்களை மட்டும் மோசமானவர்களாகச் சித்திரிப்பது வரலாற்றுப் பிழை அல்லவா?

வாழ்ந்த வரலாறும், வீழ்ந்த வரலாறும் முழுமையாகத் தெரிந்தாலொழிய பாபர் மசூதி, ராமர் கோயில் போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு கிடைக்காது.

‘முன்பு ஒரு காலத்தில் அவர்களிடம் பைபிள் இருந்தது... நம்மிடம் நிலங்கள் இருந்தன. இன்று நம்மிடம் பைபிள் இருக்கிறது. அவர்களிடம் நம் நிலங்கள் இருக்கின்றன. நமது நிலத்தில் நாமே அடிமைகள்’ என்கிற ஒரு ஆப்பிரிக்கக் கவிதையில் கறுப்பு - வெள்ளைப் பிரிவினையின் வரலாறும், மதங்கள் மக்களை அடிமை கொள்ள எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்கிற தகவலும் பொதிந்திருக்கிறது.

இப்படி ஒவ்வொன்றையும் வருங்காலத் தலைமுறை, வரலாறாகப் படிக்கும்போதுதான், நடந்த தவற்றை மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். காரணம், வரலாற்று உணர்வுதான் சூழ்ச்சிகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் கேடயம். தாக்குவதற்காக அல்ல; தற்காப்பதற்காக நமது முன்னோர்களின் வரலாற்றை, நமது அடுத்த தலைமுறைக்குச் சரியான கோணத்தில் விளக்க வேண்டியது நமது கடமை அல்லவா?

நன்றி: ஆனந்த விகடன் 29-11-06

49 comments:

said...

நன்றி நண்பரே.. நானே இதை மறுபதிவு செய்ய நினைத்திருந்தேன். தாங்கள் முந்திக்கொண்டீர்கள். வாழ்த்துக்களும், நன்றிகளும்.

வரிஞ்சு கட்டிகுட்டு வருவாங்க பாருங்க! :-)))

said...

நல்ல கருத்துக்கள். பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி. படித்துப் பயனடைந்தேன்.

said...

//வரிஞ்சு கட்டிகுட்டு வருவாங்க பாருங்க! :-)))//

'தமிழ் மண்'ணுலே அவிங்களுக்கு ஒன்னும் தேறாதுன்னு தெரியும். வரமாட்டாங்க; எதிர்பார்க்காதீங்க!

said...

நல்ல பதிவு.
நன்றி நண்பரே..!
'மாறுகண் மன்னன்'களும் நினைவுக்கு வரத்தான் செய்கிறார்கள்.

Anonymous said...

//இந்திய வரலாற்றில், இஸ்லாமிய மன்னர்கள் கொடூரமானவர்களாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒளரங்கசீப் மன்னனை கொடூரமானவனாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சொல்லிவருகிறோம். அதுவே, தஞ்சையை ஆண்ட இந்து, மராத்திய மன்னர்களின் அந்தப்புரப் பெண்களின் வயது 12-லிருந்து தொடங்குவதைச் சொல்வது இல்லை. எல்லா மத அரசர்களும் மக்களைத் துன்புறுத்தும் நோக்கம் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அரசர்களை மட்டும் மோசமானவர்களாகச் சித்திரிப்பது வரலாற்றுப் பிழை அல்லவா?
//
அய்யா அவர்களின் முத்து வரிகள் இவை. வரலாற்றை மறைக்க முயலும் கயவர்களுக்கு செருப்படி.

Anonymous said...

//நான் விவசாயம் செய்கிற சாதியைச் சேர்ந்தவன் இல்லை’ என்பதை உணர்த்துவதற்காகத்தான் மார்பில் நூல் அணிந்தார்கள் என்பதை நாம் உணர்த்தி இருந்தால், உழவர்கள் சூத்திரர்களாக ஆகியிருக்க மாட்டார்கள். //
ஒவ்வொரு தமிழனும் தெரிய வேண்டிய பாடம்.

said...

பாலபாரதி, வெற்றி, அழகு, பாபுஜி, தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

அரைகுறைகளெல்லாம் 'முதுபெரும் எழுத்தாளர்களாக' பவனி வரும் இன்றைய சூழ்நிலையில் பேரா. ஆ.சிவசுப்பிரமணியன் போன்றவர்கள் நிறைய எழுத முன்வரவேண்டும். நம் மண்ணின் உண்மை வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்பட இவர்களின் எழுத்துக்கள் மிக அவசியம்.

Anonymous said...

//நமக்கென்று ஒரு வரலாறு இல்லை, பண்பாடு இல்லை என்று நமக்கே சொல்லப்பட்டது. நாமும் கிளிப்பிள்ளைகளைப் போலத் திரும்ப அதையே சொன்னோம். //
இன்றும் சொல்கிறார்கள், திராவிடம் என்று ஒன்று இல்லை.

Anonymous said...

//அழகு said...
//வரிஞ்சு கட்டிகுட்டு வருவாங்க பாருங்க! :-)))//

'தமிழ் மண்'ணுலே அவிங்களுக்கு ஒன்னும் தேறாதுன்னு தெரியும். வரமாட்டாங்க; எதிர்பார்க்காதீங்க!
//
அப்படி நினைக்காதீங்கப்பா சாதி சண்டை, மத சண்டைன்னு சிண்டு முடிய ஓநாய்கள் வரும்.
சகோதரர்களாய் வாழும் தமிழ் மக்கள் சாதி என்றும் மதம் என்றும் அடித்துக் கொண்டு சாகவேண்டும் என்பது தானே அவனது சித்தாந்தம்.

Anonymous said...

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோர் இது போன்ற செய்திகளை மக்களுக்கு சேர்க்க என்ன செய்தார்கள்? இல்லையென்றால் நாம் இதற்காக என்ன செய்ய வேண்டும்? அய்யா அவர்களை போன்ற வழிகாட்டிகளை பெற்றமைக்காக தமிழ் மக்கள் மன மகிழ்கிறார்கள். ஒவ்வொரு தமிழனும் இது போன்ற உண்மைகளை மக்களிடம் சேர்க்க பாடுபட வேண்டும்.

said...

//வரலாற்று உணர்வுதான் சூழ்ச்சிகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் கேடயம். தாக்குவதற்காக அல்ல; தற்காப்பதற்காக நமது முன்னோர்களின் வரலாற்றை, நமது அடுத்த தலைமுறைக்குச் சரியான கோணத்தில் விளக்க வேண்டியது நமது கடமை அல்லவா?//

சரியான கருத்து.
இதை உணர்ந்து நாம் செயற்பட்டால் ஆரிய இனவாதத்தை இல்லாமல் ஆக்கிவிடலாம்.

said...

நல்ல கருத்துள்ள பதிவு.
"பூங்கவிற்கு" சிபாரிசு செய்யலாம் என நினைத்தேன்.
அனால், ஆனந்தவிகடன் கட்டுரை என அறிந்து ஏமாந்தேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி. வண்க்கம்.

Anonymous said...

வரலாற்றை உணர வேண்டியது ஒரு புறமிருக்க, இங்கே, நிகழ்காலத்திலும் எப்படியெல்லாம் மிகைப்படுத்தி இஸ்லாம் சகோதரர்களுக்கு எதிராக சதிவலைப் பின்னப்படுகிறது என்பதற்கு சில 'ஜட'ப்பதிவுகளே உதாரணமாகி விடுகின்றன.

கறுப்பு புர்கா அதிகரிப்பது அழிவுக்கு அடையாளமென்று அங்கு கொக்கரிக்கின்றன சில பூணூல்கள்.
ஆம். அழிவுக்கு அடையாளம் தான். பூணூல் தத்துவத்திற்கு அழிவு தான்.

*ANBU

said...

நல்ல கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

காக்கா,
பேராசிரியர் நிறையத்தான் எழுதி வருகிறார். அவர் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் "பிள்ளையார் அரசியல்" கவனம் கொள்ளவேண்டிய படைப்பு. படித்துப்பாருங்கள் என்னைப்போலவே உங்களுக்கும் பிடித்துப்போகும்.
அது போல வாசிக்க வேண்டிய மற்றொரு முக்கிய நூல், பேரா.அ.மார்க்ஸ் எழுதிய.., "இசுலாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்"

நன்றி!

said...

//யெஸ்.பாலபாரதி said...
காக்கா,// :-)

பாலபாரதி சார், நீங்க நம்ம பக்கமா?

பேராசிரியரின் எழுத்துக்கள் பற்றிய தகவலுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட மார்க்ஸ் அவர்களின் புத்தகத்தை படித்திருக்கிறேன். பல அரிய வரலாற்றுத்தகவல்கள் அதில் இருக்கின்றன. குறிப்பாக காஷ்மீர் பிரச்னையின் பிண்ணனி. வாய்ப்பு கிடைத்தால் அதில் சில பகுதிகளை இங்கே பதிகிறேன்.

said...

//மாசிலா said...
நல்ல கருத்துள்ள பதிவு.
"பூங்கவிற்கு" சிபாரிசு செய்யலாம் என நினைத்தேன்.
அனால், ஆனந்தவிகடன் கட்டுரை என அறிந்து ஏமாந்தேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி. வண்க்கம்.//

நன்றி மாசிலா அவர்களே,
இது போன்ற கருத்துக்களை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதுவதைவிட பேராசிரியரைப் போன்றவர்கள் எழுதும்போதுதான் அந்தக் கட்டுரை உரிய கவனத்தை பெறும் என்பது எனது கருத்து.

Anonymous said...

மரைக்காயர்,

அ.வி.யில் சி.சு எழுதிய அரைகுறை வரலாற்றுப் பொய்களை இந்த வாரத் திண்ணையில் திரு. ப்ரவாஹன் புட்டுப் புட்டு வெச்சிருக்காரு பாருங்க.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20612142&format=html

நீங்க இங்க சிவப்புல கட்டம் போட்டுக் காட்டியிருக்கற ஒவ்வொரு விஷயமும் எப்படி பச்சைப் பொய்யினு சி.சு.வை நார் நாராக் கிழிச்சிருக்காரு அங்க.

ஏதோ பெரிய கருத்துள்ள கட்டுரை அப்படின்னு இங்க கொக்கரிக்கறவங்க எல்லாம் அந்த திண்ணைக் கட்டுரையப் படிச்சுப் பாருங்க. உங்களப் பாத்தா ரொம்ப பாவமா இருக்கு.

ப்ரவாஹன் போட்டோ போட்டே எழுதியிருக்காரு. பேரப் பாத்து அவரு ஏதோ பார்ப்பன காவி ஆளுன்னு நெனக்காதீங்க. அவரு சாதாரண சிகப்பு கூட இல்லை, செஞ்சிவப்பு ஆசாமி!

மரைக்காயர், இந்தப் பின்னூட்டத்த கண்டிப்பா போடற அளவுக்காவது உங்களுக்கு நேர்மை இருக்குன்னு நெனக்கேன்.

திண்ணை கட்டுரை கடைசிப் பத்தி:
-------------

இஸ்லாமியர்களுக்குக் கரிசனப்படும் பேரா. ஆ.சி, அவர்களைக் கொடூரமானவர்களாகச் சித்தரிப்பதற்குப் வரலாற்றுப் பின்னணி உண்டு என்பதை அறியாதவரா? ஆனந்த விகடன் குழும இதழான ஜூனியர் விகடன் இதழில் மதன் எழுதிய, "வந்தார்கள் வென்றார்கள்" என்பதில் சொல்லியிருப்பதெல்லாம் பொய்யா? அதுவும் தவிர, உலகத்தில் எத்தனையோ மதங்களைச் சேர்ந்த மக்கள் குழுக்கள் பல்வேறு நாடுகளில் உரிமைப் போர் நடத்தி வருகின்றனர். அவற்றில் சில தவறானவை என்றும் சில சரியானவை என்றும் எவ்வாறாகவேனும் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் யாருக்கு எதிராகப் போராடுகிறார்களோ அவர்கள் மீதுதான் தாக்குதல் தொடுக்கின்றனரே தவிர பொதுமக்கள் மீதல்ல. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். அவர்கள் இலங்கை இராணுவத்தின் மீதுதான் தாக்குதல் தொடுக்கிறார்களே தவிர, இலங்கையில் உள்ள சிங்களப் பொதுமக்கள் மீது அல்ல. ஆனால் ஜிகாத் என்கிற ‘புனிதப் போர்' நடத்துகின்ற இஸ்லாமியக் குழுக்கள் பொதுமக்கள் புழங்குகின்ற இடங்களில் வெடிகுண்டு வைத்து மக்களைக் கொல்லுகின்ற கொடூரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் பொதுமக்கள் புழங்குகின்ற இரயிலில் குண்டு வைத்தது, லண்டன் நகரில் இரயில் நிலையங்களில் குண்டு வைத்தது, ஆப்பிரிக்க நாடுகளில் குண்டு வைத்தது என பொது மக்களைக் கொன்றதுதான் வரலாறு. இந்தியாவின் மும்பையிலும் அதற்கும் முன்னர் தமிழகத்தின் கோவையிலும் பொது மக்களைக் கொல்லுகின்ற வகையில் குண்டுகள் வெடித்தனர். இந்திய அரசாங்கத்துடன் அவர்களுக்கு விரோதம் என்றால் இந்திய இராணுவத்தினரை, அல்லது இந்திய அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களை அவர்கள்

எதுசெய்தாலும் அவர்கள் பற்றி வன்முறையாளர்கள் என்று நாம் சொல்லப்போவதில்லை. இந்திய நாய்களுக்கும்,

பிரித்தானிய நாய்களுக்கும், ஸ்பானிய நாய்களுக்கும் பாடம் புகட்டவே குண்டு வெடித்ததாக விளக்கமும் கொடுக்கின்றனர்.

இதற்குக் காரணம் அவர்களின் மத நூலில் முஷ்ரிக்குகளையும் (கடவுளுக்கு [அல்லாவுக்கு] இணை வைப்பவர்களையும்) காஃபிர்களையும் (இறை நம்பிக்கை அற்றவர்கள் மற்றும் பல கடவுளர்களைத் தொழுபவர்களையும்) அழித்தொழிக்க வேண்டும், அதுதான் புனிதப் போர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இத்தகைய கொடூரத்தை இஸ்லாமிய மன்னர்கள் செய்து இருக்கின்றனர். சாதாரண அப்பாவி மக்களை அச்சுறுத்துகின்ற வகையில் பயங்கரவாத செயல்களில் இன்றைக்கும் அதிகமும் ஈடுபட்டு வருவதால்தான் இஸ்லாமியர்கள் பற்றி அவ்வாறு சொல்லப்பட்டது.


வரலாறு இவ்வாறு இருக்க இவை அனைத்தையும் திரித்து தமிழ் மக்கள் ஒரே குடும்பமாகப் பிரிவினை இன்றி இருந்தது போலவும் பூணூல் அணிந்த ஆரியர்கள் வந்துதான் தமிழ் மக்களைப் பிரித்தாண்டதாகவும் வரலாற்று உணர்வு கொள்ளவேண்டும் என்கிற போர்வையில் உண்மையான வரலாற்றைத் திரித்துச் சொல்வதுதான் பேரா. ஆ.சி. செய்துள்ள கிசும்பு.

Anonymous said...

சிவசு அவர்களின் 'கிறித்தவமும் சாதியும்" மற்றொரு முக்கியாமான நூல்
மணிகண்டன்

Anonymous said...

//இது போன்ற கருத்துக்களை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் எழுதுவதைவிட பேராசிரியரைப் போன்றவர்கள் எழுதும்போதுதான் அந்தக் கட்டுரை உரிய கவனத்தை பெறும் என்பது எனது கருத்து.//

Bitter Truth

Anonymous said...

(((கடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பாத எந்தச் சமூகமும் தன் முகவரியைத் தொலைத்துவிடும்.)))

உண்மை தான்
தன்னுடைய கடந்த காலத்தை தெரிந்துக்கொண்டு விட்டவாளோ, அதை திறமையாகப் பிறரிடமிருந்து மறைப்பதும் திரிப்பதும் இதை உணர்த்தப் போதுமானது.

said...

//இதற்குக் காரணம் அவர்களின் மத நூலில் முஷ்ரிக்குகளையும் (கடவுளுக்கு [அல்லாவுக்கு] இணை வைப்பவர்களையும்) காஃபிர்களையும் (இறை நம்பிக்கை அற்றவர்கள் மற்றும் பல கடவுளர்களைத் தொழுபவர்களையும்) அழித்தொழிக்க வேண்டும், அதுதான் புனிதப் போர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.//


திரு.கோபாலோ, ப்ரவாஹனோ நேர்மையுடனிருந்தால் மேற்கண்ட பொருந்தா குற்றச்சாட்டுக்களுக்கு முதலில் ஆதாரத்தை வைத்துவிட்டு பேசுங்கள்.

உண்மையை திரித்தும் உள்ளதை மறுத்தும் ஆரிய அடிவருடும் வேலை இனியும் வேண்டாம்.

said...

//அ.வி.யில் சி.சு எழுதிய அரைகுறை வரலாற்றுப் பொய்களை இந்த வாரத் திண்ணையில் திரு. ப்ரவாஹன் புட்டுப் புட்டு வெச்சிருக்காரு பாருங்க. //

கோபால், நான் இந்தக் கட்டுரையை பார்த்தேன். உண்மையை சொல்லனும்னா இதை பார்த்த பிறகுதான் பேராசிரியரின் கட்டுரையை ஆ.வி.யில் தேடிப்பிடித்து படித்தேன். அதற்காகவாவது நான் ப்ரஹாவனுக்கு நன்றி சொல்லனும்.

//நீங்க இங்க சிவப்புல கட்டம் போட்டுக் காட்டியிருக்கற ஒவ்வொரு விஷயமும் எப்படி பச்சைப் பொய்யினு சி.சு.வை நார் நாராக் கிழிச்சிருக்காரு அங்க. //

அப்படியெல்லாம் இல்லைங்க. பேராசிரியரோட கட்டுரையை சரியா புரிஞ்சுக்காம அரைவேக்காட்டுத்தனமா எழுதப்பட்ட கடிதம் அது.

//ஏதோ பெரிய கருத்துள்ள கட்டுரை அப்படின்னு இங்க கொக்கரிக்கறவங்க எல்லாம் அந்த திண்ணைக் கட்டுரையப் படிச்சுப் பாருங்க. உங்களப் பாத்தா ரொம்ப பாவமா இருக்கு. //

அந்த திண்ணை கடிதத்தோட சுட்டியை மெனக்கெட்டு இங்கே போட்டிருக்கீங்களே, உங்களப் பாத்தாதான் ரொம்ப பாவமா இருக்கு :-(

//ப்ரவாஹன் போட்டோ போட்டே எழுதியிருக்காரு. பேரப் பாத்து அவரு ஏதோ பார்ப்பன காவி ஆளுன்னு நெனக்காதீங்க. அவரு சாதாரண சிகப்பு கூட இல்லை, செஞ்சிவப்பு ஆசாமி! //

அதெப்படிங்க.. போட்டோவ பாத்துட்டே இவர் செஞ்சிவப்பு ஆசாமின்னு உங்களுக்கு தெரிஞ்சுது?

//மரைக்காயர், இந்தப் பின்னூட்டத்த கண்டிப்பா போடற அளவுக்காவது உங்களுக்கு நேர்மை இருக்குன்னு நெனக்கேன். //

பின்னூட்டத்த போடுறதுக்கு மட்டுமில்ல, அதுக்கு பதில் கொடுக்கவும் நேர்மை இருக்கு.

//திண்ணை கட்டுரை கடைசிப் பத்தி:
-------------
இஸ்லாமியர்களுக்குக் கரிசனப்படும் பேரா. ஆ.சி, அவர்களைக் கொடூரமானவர்களாகச் சித்தரிப்பதற்குப் வரலாற்றுப் பின்னணி உண்டு என்பதை அறியாதவரா? ஆனந்த விகடன் குழும இதழான ஜூனியர் விகடன் இதழில் மதன் எழுதிய, "வந்தார்கள் வென்றார்கள்" என்பதில் சொல்லியிருப்பதெல்லாம் பொய்யா? //

பேரா.ஆ.சி. இஸ்லாமியர்களுக்காகவோ இஸ்லாமிய மன்னர்களுக்காகவோ கரிசனப்படவில்லை. அவர் சொல்றதை பாருங்கள். எல்லா மத அரசர்களும் மக்களைத் துன்புறுத்தும் நோக்கம் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அரசர்களை மட்டும் மோசமானவர்களாகச் சித்திரிப்பது வரலாற்றுப் பிழை அல்லவா?

இதைக்கூட புரிஞ்சுக்காமத்தான் உங்க ஆளு திண்ணையில எழுதியிருக்காரு.

//அதுவும் தவிர, உலகத்தில் எத்தனையோ மதங்களைச் சேர்ந்த மக்கள் குழுக்கள் பல்வேறு நாடுகளில் உரிமைப் போர் நடத்தி வருகின்றனர். அவற்றில் சில தவறானவை என்றும் சில சரியானவை என்றும் எவ்வாறாகவேனும் இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் யாருக்கு எதிராகப் போராடுகிறார்களோ அவர்கள் மீதுதான் தாக்குதல் தொடுக்கின்றனரே தவிர பொதுமக்கள் மீதல்ல. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். அவர்கள் இலங்கை இராணுவத்தின் மீதுதான் தாக்குதல் தொடுக்கிறார்களே தவிர, இலங்கையில் உள்ள சிங்களப் பொதுமக்கள் மீது அல்ல.//

நாட்டுநடப்பை கொஞ்சமாவது தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் இவர் திண்ணைக்கு தாழ்வாரத்துக்கெல்லாம் கடிதம் எழுதியிருக்கலாம்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பு, ராஜீவ் காந்தி இறந்த மனித வெடிகுண்டு தாக்குதல், காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல், எறவூர் அப்பாவி மக்கள் படுகொலை, இதெல்லாம் எந்த இலங்கை ராணுவத்துமேல தொடுக்கப்பட்ட தாக்குதல்?

//ஆனால் ஜிகாத் என்கிற ‘புனிதப் போர்' நடத்துகின்ற இஸ்லாமியக் குழுக்கள் பொதுமக்கள் புழங்குகின்ற இடங்களில் வெடிகுண்டு வைத்து மக்களைக் கொல்லுகின்ற கொடூரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் பொதுமக்கள் புழங்குகின்ற இரயிலில் குண்டு வைத்தது, லண்டன் நகரில் இரயில் நிலையங்களில் குண்டு வைத்தது, ஆப்பிரிக்க நாடுகளில் குண்டு வைத்தது என பொது மக்களைக் கொன்றதுதான் வரலாறு. இந்தியாவின் மும்பையிலும் அதற்கும் முன்னர் தமிழகத்தின் கோவையிலும் பொது மக்களைக் கொல்லுகின்ற வகையில் குண்டுகள் வெடித்தனர். இந்திய அரசாங்கத்துடன் அவர்களுக்கு விரோதம் என்றால் இந்திய இராணுவத்தினரை, அல்லது இந்திய அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களை அவர்கள் எதுசெய்தாலும் அவர்கள் பற்றி வன்முறையாளர்கள் என்று நாம் சொல்லப்போவதில்லை. இந்திய நாய்களுக்கும், பிரித்தானிய நாய்களுக்கும், ஸ்பானிய நாய்களுக்கும் பாடம் புகட்டவே குண்டு வெடித்ததாக விளக்கமும் கொடுக்கின்றனர். //

ஒரு இஸ்லாமிய அமைப்பு வன்முறையில சம்பந்தப்பட்டா, அதை கண்டிக்கிற நேர்மை முஸ்லிம்களுக்கு இருக்கு. இதுக்கு நாம எத்தனையோ சான்றுகளை சொல்லலாம். ஆனா, மனிதாபிமானத்தை கொன்னு குழி தோண்டி புதைச்சுட்டு குஜராத்ல வெறியாட்டம் போட்டாங்களே சங்பரிவார வெறியனுங்க.. அதை மத்த இந்துத்துவாக்கள் யாராவது கண்டிச்சாங்களா?

//இதற்குக் காரணம் அவர்களின் மத நூலில் முஷ்ரிக்குகளையும் (கடவுளுக்கு [அல்லாவுக்கு] இணை வைப்பவர்களையும்) காஃபிர்களையும் (இறை நம்பிக்கை அற்றவர்கள் மற்றும் பல கடவுளர்களைத் தொழுபவர்களையும்) அழித்தொழிக்க வேண்டும், அதுதான் புனிதப் போர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. //

அப்படிங்களா? எங்கே அப்படி சொல்லப் பட்டிருக்காம்? ஏதாவது கொஞ்சம் ஆதாரம் காட்டுறது?

//இத்தகைய கொடூரத்தை இஸ்லாமிய மன்னர்கள் செய்து இருக்கின்றனர். சாதாரண அப்பாவி மக்களை அச்சுறுத்துகின்ற வகையில் பயங்கரவாத செயல்களில் இன்றைக்கும் அதிகமும் ஈடுபட்டு வருவதால்தான் இஸ்லாமியர்கள் பற்றி அவ்வாறு சொல்லப்பட்டது. வரலாறு இவ்வாறு இருக்க இவை அனைத்தையும் திரித்து தமிழ் மக்கள் ஒரே குடும்பமாகப் பிரிவினை இன்றி இருந்தது போலவும் பூணூல் அணிந்த ஆரியர்கள் வந்துதான் தமிழ் மக்களைப் பிரித்தாண்டதாகவும் வரலாற்று உணர்வு கொள்ளவேண்டும் என்கிற போர்வையில் உண்மையான வரலாற்றைத் திரித்துச் சொல்வதுதான் பேரா. ஆ.சி. செய்துள்ள கிசும்பு.//

திரிப்பும் கிசும்பும் பேராசிரியர் செய்யலீங்க. உங்க ப்ரவாஹன்தான் செஞ்சிருக்கார்.

said...

நல்ல கட்டுரை. எடுத்து இட்டமைக்கு நன்றி மரைக்காயர்.

மன்னராட்சியில் பொதுவாகவே தனிப்பட்ட மன்னனுடைய வாழ்க்கையை ஆய்ந்தால் மிகப் பெரும்பான்மையாக ஊதாரித்தனமும் சிற்றின்ப வேட்கையும்தான் தெரியும். அதனால்தான் மக்களாட்சி தத்துவமே வந்தது. ஏற்றுக் கொள்ளப்பட்டது. உண்மையோடு பொய்யைக் கலந்து மொகலாய மன்னர்களை தரக்குறைவாக சித்தரிக்கவென்றே மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் சான்றாகக் காட்டப்பட்டிருக்கிறது சிறந்த நகைச்சுவை. அடுத்தது 23ம் புலிகேசி படத்தை சான்றாகக் காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அடுத்து
உலக ரவுடிகள் செய்த அட்டூழியத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெயரில் உள்ள குறிப்பிட்ட சில குழுமங்கள் செய்யும் தவறுகளை முழு இஸ்லாமியர்களும் அங்கீகரிப்பதாக தோற்றம் ஏற்படுத்த முயலும் அடாவடித்தனத்தை மீண்டும் மீண்டும் அரங்கேற்றுகிறார்கள். எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் வெட்கமில்லாமல் எழுதும் அயோக்கியத்தனத்தை என்னவென்று எழுத்தில் சொல்வது. உலக ரவுடிகளின் தீவிரவாதத்துக்கெதிரான போரில் பங்கெடுக்கும் முஸ்லீம் நாடுகள் இவர்கள் கண்ணுக்கு அவ்வப்போது மறைந்தது விடுவது ஏனென்றே தெரியவில்லை.

வரலாற்றுப் பொய்களை திண்ணையில் எழுதியுள்ள ப்ரவாஹனும் அதை எடுத்தாண்டுள்ள கோபாலும் 'யார் என்ன செய்தாலும் சொன்னாலும் முஸ்லீம்களை வம்புக்கிழுக்கும்' குறுமதியாளர்களாகவே தோற்றமளிக்கின்றனர்.

said...

பின்னூட்டத்துக்கு நன்றி சுல்தான்.

//அடுத்தது 23ம் புலிகேசி படத்தை சான்றாகக் காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம்.//

நன்னா சொன்னேள் போங்கோ! :-)

Anonymous said...

மரைக்காயர்,

ஆனந்த விகடன் ஒரு "பக்கப் பற்றாக்குறை" உள்ள வெகுசனப் பத்திரிகை. அதுல ஆதாரம் எல்லாம் கொடுத்து பெரிசா ஒண்னும் எழுத முடியாது. ஞாநி மாதிரி சி.சு. மாதிரி தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக் கருத்துக்களை ஏதோ நடுநிலையாளர் போர்வையில போற போக்குல சொல்லிட்டுப் போறது தான் அங்க நடக்குது.

ஆனா, ப்ரவாஹன் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆதாரம் குடுத்திருக்காரு - பூணூல், மங்கலம் ஊர்ப்பெயர் இதெல்லாம் பத்தி சி.சி எழுதினது முழு கப்சான்னு கொஞ்சம் தமிழக வரலாறு தெரிஞ்ச குழந்தையே சொல்லும்.

so, கடைசியா விவாதத்துல எஞ்சி இருக்கறது முஸ்லீம் மன்னர்கள் கொடுமை + ஜிகாத் சமாசாரம் தான். இது பத்தி, ஆயிரக்கணக்கால ஆதாரங்கள எத்தனையோ பேர் (நேசகுமார் உட்பட) எடுத்துத் தந்தும் மறுபடி மறுபடி ஆதாரம் ஆதாரம்னு கத்தினா எப்படி?

ஆயிரம் வருசமா இந்தியாவில முஸ்லீம் மன்னர்கள் செஞ்ச கொடுமைய அரபு, பாரசீக வரலாற்று நூல்களிலேயே இருக்கே - அது இல்லைன்னு எப்படிச் சொல்லுவீங்க? இத்தனைக்கும் அதுல இருக்கற ஒண்ணு ரெண்டு விஷயம் தான் "வந்தார்கள்.." மாதிரி புத்தகத்தில வந்திருக்கு. அது முழுசயும் எடுத்து யாராவது தமிழ்ல போட்டா தாங்காது. திண்ணையில நாலந்தா பல்கலைக் கழகத்த அழிச்சது பத்தி ஒருத்தரு கொஞ்ச நாள் முந்தி எழுதியிருந்தாரு.. அந்த மாதிரிக் கதையெல்லாம் முழுசா வெளிய வரவே இல்ல.

இதுக்கெல்லாம் காரணம் முஸ்லீம் மதம், குரான்ல இருக்கற வன்முறைத் தூண்டுதல் தானே?

ப்ரவாஹன் ஒரு பயங்கர மார்க்சிஸ்டு.. பல பத்திரிகைகள்ள முந்தி நக்சல் இயக்கத்த ஆதரிச்சுக் கட்டுரையெல்லாம் எழுதிட்டு இருந்தாரு, அத வெச்சுத் தான் "செஞ்சிவப்பு"ன்னு சொன்னேன்.

said...

நல்ல பதிவு பதிந்தமைக்கு நன்றி மரைக்காயரே.

said...

கோபால்,

நீங்க சொன்னதுக்காக மறுபடியும் ஒருதடவை பிரவாஹனோட திண்ணை கடிதத்தை படிச்சேன். நீங்க சொல்ற மாதிரி அவர் பெருசா ஆதாரம் எதையும் கொடுக்கலேங்குறதுதான் உண்மை. இந்தக் கட்டுரைக்கு போய் என்னை கோணார் நோட்ஸ் எழுத வச்சிட்டீங்களே!

சாதிக் கொடுமையை பிராமணர்களைவிட அதிகமா செஞ்சவங்க வெள்ளாளர்கள்தான் என்று வலியுறுத்தும் உத்திதான் அவரது கட்டுரையில் வெளிப்படையா தெரியுது. இவர் திண்ணையில எழுதுன இன்னொரு கட்டுரையிலும் இதே மேட்டரைத்தான் எழுதி இருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னன்னா பேரா.ஆ.சி. தனது கட்டுரையில சாதிக்கொடுமைக்கு காரணம் பிராமணர்கள் மட்டும்தான்னு எந்த இடத்திலேயும் குறிப்பிட்டு சொல்லவில்லை. உயர்சாதியினர் என்றுதான் குறிப்பிடுகிறார்.

சாதிக்கொடுமை, தீண்டாமை எல்லாம் இருக்கு. அதை யார் அதிகம் செஞ்சிருக்காங்கன்றதுதான் ப்ரவாஹனோட பிரச்னை. அதுலயும் வேளாளர்கள் என்ற பிரிவினர் மீது இவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை, சுத்தி சுத்தி அவங்கதான் எல்லாத்துக்குமே காரணம் என்பது போல ஜல்லி அடிச்சிருக்கார்.

அடுத்து, 'பூணூல் அணியும் பழக்கம் ஆரியர்களுடையது அல்ல' என்கிறார் பிரவாஹன். இதற்கு அவர் சொல்லும் ஆதாரம் படு அபத்தமானது. ஆப்பிரிக்காவின் எகிப்து நாட்டில் உள்ள ஓவியங்கள் சிலவற்றில் மார்புக்கு குறுக்கே பூணூல் போல வரையப் பட்டிருக்கிறதாம். இருக்கட்டுமே? 'பூணூல் அணியும் பழக்கம் ஆரியர்களுடையது அல்ல' என்பது இது எப்படி ஆதாரமாகிறது? வேணும்னா, ஆரியர்கள் மட்டுமல்ல மத்தவங்களும் பூணூல் அணிஞ்சிருக்காங்கன்னு சொல்லிக்கலாம்.

அடுத்து மங்கலம். சதுர்வேதி மங்கலங்கள் மட்டுமே பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்ட இடங்கள் என்கிறார். சரி இருக்கட்டும். போர் வீரர்களுக்கும் போர் செய்யும் முறை கற்ற சான்றோர்களுக்கும் சன்மானமாக இடங்கள் கொடுக்கப்பட்டது முறையானதுதான். நாட்டை காப்பதில் உயிரை துச்சமாக மதித்து போரிடுபவர்கள் அவர்கள். ஆனால், அரசன் கண்ட கெட்ட கனவுக்கும் நான்கு வேதம் கற்றவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? எப்படியெல்லாம் நமது அரசர்கள் ப்ரெயின்வாஷ் செய்யப்பட்டிருக்கிறார்கள்! இந்த வரலாறை எல்லாம் நமது வருங்கால சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்த பணியைத்தான் பேராசிரியர் போன்றவர்கள் செய்கிறார்கள்.

//so, கடைசியா விவாதத்துல எஞ்சி இருக்கறது முஸ்லீம் மன்னர்கள் கொடுமை + ஜிகாத் சமாசாரம் தான். இது பத்தி, ஆயிரக்கணக்கால ஆதாரங்கள எத்தனையோ பேர் (நேசகுமார் உட்பட) எடுத்துத் தந்தும் மறுபடி மறுபடி ஆதாரம் ஆதாரம்னு கத்தினா எப்படி? //

எந்த நேசகுமார சொல்றீங்க? அபூமுஹை, நல்லடியார், இப்னுபஷீர் இவங்கள்லாம் கிழிச்சு நார் நாரா தொங்க விட்டாங்களே அவரா? சுல்தான் சொன்ன மாதிரி அடுத்ததா 23-ம் புலிகேசியிலேருந்து ஆதாரம் கொடுப்பீங்க போலிருக்கே?

//ப்ரவாஹன் ஒரு பயங்கர மார்க்சிஸ்டு.. பல பத்திரிகைகள்ள முந்தி நக்சல் இயக்கத்த ஆதரிச்சுக் கட்டுரையெல்லாம் எழுதிட்டு இருந்தாரு, அத வெச்சுத் தான் "செஞ்சிவப்பு"ன்னு சொன்னேன்.//

இலங்கை புலிகள் சிங்கள ராணுவத்தை மட்டும்தான் தாக்குறாங்கன்னு ஒரு போடு போட்டாரு பாருங்க. அப்படியே அசந்து போயிட்டேன். இவரோட மத்த ஆதாரங்களை எந்த அளவுக்கு நம்பலாம்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

Anonymous said...

மரைக்காயர்,

பேராசிரியர் கூட இந்த கேள்விகளுக்கு இத்தனை விளக்கம் கொடுக்க மாட்டார். சபாஷ்!. உங்கள் விளக்கங்களுக்கு.

நல்லதே நினைப்பவன்.

Anonymous said...

சக்கை போடு போடு ராஜா, சாட்டையை எடுத்துக் கொண்டு.

Anonymous said...

நம்ம சந்திரவதனா அக்கா எழுதியிருக்கறத பார்த்தா இவர் ஒரு தலித் போலிருக்கிறதே.
http://sammlung.blogspot.com/

ப்ரவாஹன். வயது 39. இயற்பெயர் சௌமிய நாராயணன். அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் ஆழமான ஈடுபாடுகொண்டவர். "சாதிய ஒடுக்குமுறை ஒழிந்தால்தான் இந்தியாவில் முழுமையான மாற்றம் சாத்தியமாகும்" என்று அழுத்தமாக நம்பும் இவர் ஒத்த கருத்துள்ள சில நண்பர்களுடன் இணைந்து சாதிகளின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். 1999இல் திருச்சூரில் நடைபெற்ற கல்வெட்டியல் ஆய்வாளர் சங்க மாநாட்டில் 'பறையர் வரலாறு' என்னும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்துள்ளார்.
அரசியலிலும் தீவிர ஈடுபாடுகொண்டவர். முதலில் சி.பி.ஐ. எம்.எல். இயக்கத்தில் இணைந்து செயலாற்றியிருக்கிறார். தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட இவர் பிறகு புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்து மாநில அளவில் பொறுப்பு வகித்துச் செயல்பட்டிருக்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ய வேண்டும் என்பதற்கான போராட்டத்திலும் இவர் ஈடுபட்டிருந்தார். தற்போது இந்திய மக்கள் முன்னணி என்ற கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளராக இருந்துவருகிறார்.

said...

தஞ்சைப் பகுதி சோழவம்சாவழிகள் இன்று ஏழ்மையில் உழலுவதாக நக்கீரனில் சென்ற வாரம் படித்தேன். ராஜராஜ சோழரின் வாரிசு சோர்றுக்கு வழியின்றி இதய நோயால் வாடுவதாகவும், அவரின் மகள் +2 பெயிலாகி விட்டதால் மேற்கொண்டு படிக்க வசதி இல்லை என்றும் சோழமன்னரின் வாரிசு சொல்லி இருந்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் முக்கிய சாவி இம்மன்னர் பரம்பரையிடமே இருந்து வந்தது. காலையில் பல்லக்கைக் கொண்டு வந்து சாவியை எடுத்துச் சென்று மாலை இருள் சூழ்வதற்குள் அதே பல்லக்கில் அந்த சாவியை திரும்ப ஒப்படைப்பதும், தேர் ஊர்வலங்களில் முதல் மரியாதை இம்மனரின் வாரிசுகளுக்கும் வழங்கப்பட்டு வந்தது. கடைசியாக 1978 இல் இவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. இவர்தான் சோழ மன்னரின் வாரிசு என்பதற்கு முக்கியமான வரலாற்றுக் குறிப்புகளை ஆதாங்களாக வைத்திருக்கிறார்.

ஆனால் இன்று சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் நிலையில் மன்னர் பரம்பரையை கையேந்த வைத்தவர்கள் சிதம்பரம் பார்ப்பன தீட்ஷிதர்கள் என்று கடைசியில் ஒரு அருவாளைப் போட்டார் பாருங்கள். அப்போதுதான் தெரிந்தது தமிழ்மன்னர்கள் உண்டாக்கிய கோவில்களை சைவத்தலங்கள் என்றும், உடயக்காரர்கள் உள்ளே வந்தால் தீட்டு என்றும் சொல்லி அடக்கி ஒடுக்கிய ஆரியக் கும்பலின் சதி.

நான் சொல்ல வருவது என்னவென்றால் தமிழரின் தஞ்சைத் தரணிக்குள் பார்ப்பனர்கள் குடியேறி பின்னர் தமிழ் கலாச்சாரம் காணமால் போய்விட்டது. இல்லையென்றால் தமிழோசைக் கேட்டுக் கொண்டிருந்த பகுதிகள் இன்று அக்ரஹாரம் என்று புனிதப் படுத்தப்பட்டு சுப்ரபாரதம் ஒலிக்குமா?

தமிழர்கள் ஆழ்ந்து சிந்தித்தால் தமிழ்கலாச்சார சீரழிவுக்கு பார்ப்பனர் படையெடுப்பே காரணம் என்பது விளங்கும்.

தோழரே, மேற்கண்ட பின்னூட்டம் திரு.ஜடாயு என்பவரின் "பாகிஸ்தானாகி வரும் தஞ்சை" என்ற பதிவுக்கு எழுதியது. அவரின் பதிவுகள் பின்னூட்டத்தை ஏற்க மறுக்கிறது. இதே பின்னூட்டம் "கலாச்சார சீரழிவுக்குக் காரணமான பார்ப்பனர்கள்" பற்றிய தமிழ்மண்ணே வணக்கம் பதிவுக்கும் பொருந்துவதாகக் கருதுவதால் இங்கும் பதிக்கிறேன். விரும்பினால் அனுமதியுங்கள்.

அறிவுடைநம்பி

said...

//தமிழ்மன்னர்கள் உண்டாக்கிய கோவில்களை சைவத்தலங்கள் என்றும், உடயக்காரர்கள் உள்ளே வந்தால் தீட்டு என்றும் சொல்லி அடக்கி ஒடுக்கிய ஆரியக் கும்பலின் சதி//

அறிவுடைநம்பி அவர்கள் சொல்வது சரியே.

உலகிலேயே மிகப்பெரிய கோவிலான தஞ்சை பெரியகோவில் தரித்திரியம் பிடித்தக் கோவில் என்று முத்திரை குத்தி, ஒன்றுக்கும் உதவாத கும்பகோணம் கோவில் குளத்திற்கு மஹாமகமாம். இங்கு அரசியல்வாதிகள் வந்தால் அவர்களின் ஆட்சி பரிபோய்விடும் அல்லது கொல்லப்படுவார்கள் என்ற ஐதீகத்தை ஆண்டாண்டுகாலமாக பரப்பி இதன் புகழை தடுத்து விட்டதில் பார்ப்பன சூழ்ச்சிக்கு பெரும்பங்குள்ளது.

கேடுகெட்ட பார்ப்பனர்கள் தங்களுக்கு தோதாக ஆகமங்களை மாற்றியமைத்துக் கொள்வார்கள் என்பதற்கு அழிவின் விளிம்பிலுள்ள தஞ்சைப் பெரியகோவிலே சாட்சி.

Anonymous said...

//வாழ்ந்த வரலாறும், வீழ்ந்த வரலாறும் முழுமையாகத் தெரிந்தாலொழிய பாபர் மசூதி, ராமர் கோயில் போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு கிடைக்காது.//

அது மட்டுமல்ல....வரலாற்றை திரித்து எழுதும் கயவர்கள் இருக்கும் வரை,'தஞ்சாவூர் பாகிஸ்தான் ஆகிறது..பலுசிஸ்தான் ஆகிறது' என்ற போலிக் கூக்குரல்கள் கேட்டுகொண்டுதான் இருக்கும்.

அதே தஞ்சாவூரின் உழைக்கும் மக்களுக்கு ஏற்படும் சாதி இழிவுகள் பற்றியும்,கூலிப் பற்றாக்குறைப் பற்றியும்,விவசாயப் பொருள்களுக்கு விலையில்லாமைப் பற்றியும் இந்த திரிபுவாதிகள் பேசாதது ஏன்..?உண்மையான மக்கள் பிரச்னைகள் பற்றி புரிந்துகொள்ளவும்,பேசவும் வேண்டுமானால் வரலாற்றை,சார்பற்ற மனதோடு மீள் வாசிப்பு செய்யவேண்டும்.

said...

/தஞ்சாவூரின் உழைக்கும் மக்களுக்கு ஏற்படும் சாதி இழிவுகள் பற்றியும்,கூலிப் பற்றாக்குறைப் பற்றியும்,விவசாயப் பொருள்களுக்கு விலையில்லாமைப் பற்றியும் இந்த திரிபுவாதிகள் பேசாதது ஏன்..?/

இதெற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் பார்ப்பன பருப்பு வேகாதே அய்யா!

கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பார்ப்பனர்கள் வகைவகையாய் ஓசியில் உண்டு கொழுத்துள்ளார்கள்.உழைத்து வாழும் வர்க்கத்தை ஓசியில் உண்டு கொழுக்கும் 2% சிறும்பான்மை வர்க்கம் அடக்கியாழும் அவலத்தை ஒரு பதிவில் அழகாகச் சொல்லியுள்ளார்:

-----------
உழைக்காமல் உண்டு கொழுக்கும் பிராமணர்கள் கடவுளுக்கு பூசை செய்கிறேன் என்று கோவில்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஏன் தெரியுமா? பிரம்மனின் தலையிலிருந்து பிறந்த பாவத்துக்காக?!!?! பூசை செய்து சாவதே பிராமணன் பணி என்று நினைத்திருந்தால் அந்த நினைப்பை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்.

முக்கிய கோவில்களின் "இன்றைய ஸ்பெஷல்" ஐயிட்டங்களைப் பார்த்தால் யாருக்குத்தான் பிராமணர் மேல் பொறாமை வராது?

பிள்ளையார்பட்டி - மோதகம்
பழனி - பஞ்சாமிர்தம்
திருப்பதி - லட்டு
காஞ்சீபுரம் - இட்லி
சுசீந்திரம் - வடை
வைரவன்பட்டி - புளியோதரை
பேரையூர் - சம்பா சாதம்
திருக்கருகாவூர் - சர்க்கரைப் பொங்கல்
ஆவுடையார் கோவில் - பாகற்காய் சாதம்
சிதம்பரம் - கற்கண்டு பொங்கல்
திருச்செந்தூர் - அரிசிப்புட்டு

எந்தக் கோயிலில் எந்தப் பிரசாதம் பிரமாதம்? இதோ சொல்கிறது தினத்தந்தி ஜோதிட மலர். கோயிலில் பார்ப்பனர் கொழுத்துப் போய் இருப்பதற்குக் காரணம் புரிகிறதா?

மேலும் இந்தக் கோயில்களில் இந்த பிரசாதம் கொடுக்க வேண்டிய காரணம் பற்றி நிச்சயம் ஒரு புராண கதை இருக்கும். ஆனால் நமக்கெல்லாம் தெரிந்த பெரிய புராணக் கதையில் கண்ணப்ப நாயனார் சிவனுக்கு பன்றிக் கறி படைத்தாரே! அதை சிவனும் ஏற்றுக் கொண்டு அருள் பாலித்தாரே! அப்படியானால் காளஹஸ்தி கோயிலில் பன்றிக் கறி பிரசாதம் கொடுப்பார்களா? அல்லது வருடம் ஒருமுறை பெரிய புராணத்தில் வருவது போல் விழா கொண்டாடி செய்யலாமே.

சீர்காழியிலே முலைப்பால் திருவிழா, காரைக்காலில் தங்க மாங்கனி திருவிழா, மதுரையிலே பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா, கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிழா, நரிகளை பரிகள் ஆக்கிய திருவிழா வரிசையில் காளஹஸ்தியில் பன்றிக்கறி திருவிழா ஏன் செய்யக் கூடாது?

பெரிய புராணத்தில் வரும் அந்தந்த ஜாதி நாயன்மார்களை அந்தந்த ஜாதியினர் கொண்டாட வேண்டுமென்று, தலைக்காவிரியில் . . . . . . வாங்கி, காஞ்சியில் சன்யாசம் வாங்கிய ஓடிப்போய் திரும்பி வந்த சங்கராச்சாரியார் சொன்னாரே, குறைந்த பட்சம் கண்ணப்ப நாயனார் வழிபட்ட இடத்தில் அவருடைய குலமான வேடுவ குலத்தையாவது கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதி அளிப்பார்களா?

பதில் சொல்வாரா காஞ்சி காமகோடி மடத்தின் தலைவர்.

திரு.ஆரோக்கியம் உள்ளவன் அவர்களின் பதிவில் படித்து ரசித்தது.

http://sampiraani.blogspot.com/2005/09/blog-post_28.html

said...

மரைக்காயர்!

வாழ்த்துக்கள். கோபால் போன்றவர்களின் திசை திருப்பல் உத்திகளைப் புரிந்து கொண்டு நிதானமாகவும் பண்பாகவும் பதில் கொடுக்கும் உங்கள் பாங்கு பாராட்டத்தக்கது.

நேசகுமார் போன்றவர்களை மேற்கோள் காட்டும் கோபாலின் தரம் நேசகுமார்த்தரம்தான்.

Anonymous said...

அற்புதமான மழுப்பலை முஸ்லிமுக்கு சாதகமாக திரிப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

என்னுடைய அரேபிய வாழ்க்கையில் நான் பார்க்காத மோசடிகளும், வரலாற்று புரட்டுகளை விடவா இது பெரிது?

இன்றும் கூட உலகமெல்லாம் இஸ்ரேலுடைய அவர்கள் விலை கொடுத்து வாங்கிய நில பாதுகாப்பு போராட்டத்தை தவறாக வரலாறு சொல்லிக் கொடுப்பவர்தானே நீங்கள்?

இன்றைக்கும் இந்த அறிவு கெட்ட திமிர்த்தனம் பிடித்த அரபிகள் தங்களுடைய அரேபிய அந்தப்புரங்களுக்கு தேடுவது இந்நாட்டு சிறுமிகள்தானே?

உங்கள் முதுகை முதலில் பார்க்கவும்

said...

அனானி, இத மாதிரி அசட்டுத்தனமான பின்னூட்டமெல்லாம் எழுதி ஏன்யா உங்க நேரத்தை இப்படி வீணடிக்குறீங்க?

//அற்புதமான மழுப்பலை முஸ்லிமுக்கு சாதகமாக திரிப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.//

சிரிங்க..சிரிங்க.. பேரா.சிவசு மாதிரி விஷயம் தெரிஞ்சவங்க எழுத ஆரம்பிச்சப்புறம் இங்க யாருடைய பொழப்பு சிரிப்பா சிரிக்குதுன்னு எல்லோரும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க.

//என்னுடைய அரேபிய வாழ்க்கையில் நான் பார்க்காத மோசடிகளும், வரலாற்று புரட்டுகளை விடவா இது பெரிது?//

இத யாராவது அரபுநாட்டு அனுபவங்கள்னு எழுதுவாங்க. அங்கே போய் சொல்லுங்க. இந்த பதிவுல நாங்க தமிழ் நாட்டு 'அனுபவங்கள' பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்.

//இன்றும் கூட உலகமெல்லாம் இஸ்ரேலுடைய அவர்கள் விலை கொடுத்து வாங்கிய நில பாதுகாப்பு போராட்டத்தை தவறாக வரலாறு சொல்லிக் கொடுப்பவர்தானே நீங்கள்?//

அப்படிங்களா? காஷ்மீர் நிலத்துக்கு பாகிஸ்தான்காரன் ஒரு விலை தர்றேன்னு சொன்னா உடனே எழுதி கொடுத்துடுவீங்க போலிருக்கே? இது நல்ல தீர்வா இருக்கே?

//இன்றைக்கும் இந்த அறிவு கெட்ட திமிர்த்தனம் பிடித்த அரபிகள் தங்களுடைய அரேபிய அந்தப்புரங்களுக்கு தேடுவது இந்நாட்டு சிறுமிகள்தானே?//

அதனால தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள் செஞ்சதுல்லாம் சரின்னு சொல்றீங்களா?

//உங்கள் முதுகை முதலில் பார்க்கவும்//

உங்க பின்னூட்டத்துலயே உருப்படியா தேறுனது இது ஒன்னுதான். ஆனா இதை நீங்க சொல்ல வேண்டிய இடம் இங்கே அல்ல. புரியும்னு நெனக்கேன்.

இனிமேல இதுபோல அசட்டு பின்னூட்டங்கள் தயவுதாட்சண்யம் பார்க்காமல் குப்பைத்தொட்டிக்கு அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

//ஆனால் இன்று சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் நிலையில் மன்னர் பரம்பரையை கையேந்த வைத்தவர்கள் சிதம்பரம் பார்ப்பன தீட்ஷிதர்கள் என்று கடைசியில் ஒரு அருவாளைப் போட்டார் பாருங்கள். //

அறிவுடைநம்பிக்கு வாழ்த்துக்கள்.

said...

//உண்மையான மக்கள் பிரச்னைகள் பற்றி புரிந்துகொள்ளவும்,பேசவும் வேண்டுமானால் வரலாற்றை, சார்பற்ற மனதோடு மீள் வாசிப்பு செய்யவேண்டும்.//
இதைத்தான் கோபாலுக்கும் ப்ராவாஹனுக்கும் நேசகுமார், மலர்மன்னன், நீலகண்டன் வகையறாக்களுக்கும் நாம் சொல்ல விரும்புவது.
நன்றி ஆழியூரான்,
நன்றி மரைக்காயர்.

said...

\\ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று
பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக நம்
குரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரை\\

இது ஒரு அனானியின் பின்னோட்டக் கவிதையாம் இது யாருக்கும் தெரியாம அழிஞ்சு போகக்கூடாதாம் அதுனால மீள் பதிவாம்.

நல்லாயிருக்கு.

ஆமா அரபு நாட்டுல வேலை பார்த்தப்போ ஈஸ்வரனுக்குப் பதிலா அல்லாவைத்தான் இவரு வணங்கியிருப்பாரோ. இருக்கும் இருக்கும் இல்லைனா இவர் தலை போயிருக்கனுமே!. இவர்தான் இப்படின்னா இன்னும் எத்தனையோ முஸ்லிமல்லாதவங்க அரபு நாட்டுல பணத்துக்காக அல்லாவை வணங்குறாங்களா?.

800 வருஷமா இஸ்லாமியருக்கு கீழேதானப்பா நம்ம நாடு இருந்துச்சு அப்ப இணைவைச்ச குற்றத்திற்கு எவ்வளவு கழுத்து அறுபட்டிருக்கனும். இல்ல இந்த நாட்டு மன்னரெல்லாம் முஸ்லிம் மன்னனுக்குப் பயந்து அல்லாவுக்கு குல்லாவும் ஈஸ்வருக்கு அல்வாவும் கொடுத்துட்டாங்களா?. இன்னும் இதுமாதிரி பழய பல்லவி வேணாம் கேட்டு கேட்டு புலிச்சுப்போச்சு புதுசா ஏதாவது இருந்தா சொல்லுங்க.

said...

\\ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று
பெருங்குரலெடுத்துப் பாடி மகிழ்ந்திருப்போம்,
இணைவைத்த குற்றத்திற்காக நம்
குரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரை.

இது ஒரு அனானியின் பின்னோட்டக் கவிதையாம் இது யாருக்கும் தெரியாம அழிஞ்சு போகக்கூடாதாம் அதுனால மீள் பதிவாம்.\\

தகவலுக்கு நன்றி தொண்டன்.
'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று தினமும் பிரார்த்தித்து வந்த மகாத்மா காந்தியை எந்த முஸ்லிமும் குரல்வளையை அறுக்கவில்லை. அந்த புண்ணிய காரியத்தை செஞ்சவங்க யாருன்னு தெரியும்தானே?

said...

நல்ல வேலை மொஹன்ஜதாரோ ஹரப்பா இவை எல்லாம் பாகிஸ்தான் கைவசம் உள்ளது, இல்லை என்றால் கைபன கணவாய் சரித்திரம் அழிந்து போய் அப்பிரதேசங்களில் ஏதாவது ஒரு கடவுள் அங்கு தான் பிறந்தார் என்று கூறி எல்லா மக்களையும் மாக்களாக்கி விட்டதை உறுதிபடுத்தி இருப்பர். நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

ப்ரவாகன் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் உலவும் இந்துத்வ பேர்வழி. சில சாதியினரை, குறிப்பாக வேளாளரைப் பற்றி திட்டித் தீர்க்கவும், சிலரை உயர்த்திப் பிடிக்கவும், போலிச் சான்றுகளுடனும், தவறான விளக்கங்களுடனும், வம்புச் சண்டைக்காகவும் அலைபவர். தன் சுய சாதி அபிமானத்தை வரலாற்று ஆராய்ச்சி என்ற பெயரில் அடத்தும் திண்ணைக் கூட்டத்தைச் சேர்ந்தவர். திண்ணை வாசகர்களுக்கு இவர்களை அடையாளம் காண்பது எளிது. இவர்கள் ஆரியம், திராவிடம் என்று ஓன்று கிடையாது என்றும், வேளாளர் கீழிருந்து மேல் வந்ததால், மற்றவரை கீழிறக்கி, தீண்டாமையை உருவாக்கினர் என்றும், தமது சாதி சத்திரிய குலம் என்றும், இன்றைய பாரத்தின் அனைத்து இழிவுகளுக்கும் ஆரம்பத்தில் வேளாளரும், பின்னர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய முக்குலத்தோரும்,பின்னர் வெளியிலிருந்து வந்த முஸ்லிம் மதத்தினரும் கிருஸ்வ மதத்தினரும் மட்டுமே காரணம் என்ற பொய் பிரச்சாரங்களை வலையில் செய்யும் கூட்டம். இவர்களின் சுயரூபத்தை அனைவருக்கும் காட்டுவது நமது கடமை.

said...

//தகவலுக்கு நன்றி தொண்டன்.
'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று தினமும் பிரார்த்தித்து வந்த மகாத்மா காந்தியை எந்த முஸ்லிமும் குரல்வளையை அறுக்கவில்லை. அந்த புண்ணிய காரியத்தை செஞ்சவங்க யாருன்னு தெரியும்தானே?//

ஓ...தெரியுமே ஊரறிஞ்ச அய்யருக்கு பூணூல் தோவையா?

said...

//'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று தினமும் பிரார்த்தித்து வந்த மகாத்மா காந்தியை எந்த முஸ்லிமும் குரல்வளையை அறுக்கவில்லை. அந்த புண்ணிய காரியத்தை செஞ்சவங்க யாருன்னு தெரியும்தானே?//

<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>

//அனானி, இத மாதிரி அசட்டுத்தனமான பின்னூட்டமெல்லாம் எழுதி ஏன்யா உங்க நேரத்தை இப்படி வீணடிக்குறீங்க?

//அற்புதமான மழுப்பலை முஸ்லிமுக்கு சாதகமாக திரிப்பதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.//

சிரிங்க..சிரிங்க.. பேரா.சிவசு மாதிரி விஷயம் தெரிஞ்சவங்க எழுத ஆரம்பிச்சப்புறம் இங்க யாருடைய பொழப்பு சிரிப்பா சிரிக்குதுன்னு எல்லோரும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க.

//என்னுடைய அரேபிய வாழ்க்கையில் நான் பார்க்காத மோசடிகளும், வரலாற்று புரட்டுகளை விடவா இது பெரிது?//

இத யாராவது அரபுநாட்டு அனுபவங்கள்னு எழுதுவாங்க. அங்கே போய் சொல்லுங்க. இந்த பதிவுல நாங்க தமிழ் நாட்டு 'அனுபவங்கள' பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்.

//இன்றும் கூட உலகமெல்லாம் இஸ்ரேலுடைய அவர்கள் விலை கொடுத்து வாங்கிய நில பாதுகாப்பு போராட்டத்தை தவறாக வரலாறு சொல்லிக் கொடுப்பவர்தானே நீங்கள்?//

அப்படிங்களா? காஷ்மீர் நிலத்துக்கு பாகிஸ்தான்காரன் ஒரு விலை தர்றேன்னு சொன்னா உடனே எழுதி கொடுத்துடுவீங்க போலிருக்கே? இது நல்ல தீர்வா இருக்கே?

//இன்றைக்கும் இந்த அறிவு கெட்ட திமிர்த்தனம் பிடித்த அரபிகள் தங்களுடைய அரேபிய அந்தப்புரங்களுக்கு தேடுவது இந்நாட்டு சிறுமிகள்தானே?//

அதனால தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள் செஞ்சதுல்லாம் சரின்னு சொல்றீங்களா?

//உங்கள் முதுகை முதலில் பார்க்கவும்//

உங்க பின்னூட்டத்துலயே உருப்படியா தேறுனது இது ஒன்னுதான். ஆனா இதை நீங்க சொல்ல வேண்டிய இடம் இங்கே அல்ல. புரியும்னு நெனக்கேன்.

இனிமேல இதுபோல அசட்டு பின்னூட்டங்கள் தயவுதாட்சண்யம் பார்க்காமல் குப்பைத்தொட்டிக்கு அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//

மரைக்காயர்,

என்னாங்க? எப்படீங்க? பின்னூட்டக்காரர்களுக்குக் கொடுக்கிறீர்களே 'நச்'. அது எப்படீங்க.

ரொம்ப நல்லா இருக்கு.

said...

//இனிமேல இதுபோல அசட்டு பின்னூட்டங்கள் தயவுதாட்சண்யம் பார்க்காமல் குப்பைத்தொட்டிக்கு அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.// அப்படின்னு சொன்ன பிறகு கூட ஒரு அனானி அசட்டுத் தனமான ஒரு பின்னூட்டம் அனுப்பியிருக்கிறார்.

"அரேபியர்களை சொன்னால் உமக்கு ஏனய்யா சுர்ரென ஏறுகிறது?" என்று கேட்கிறார் அந்த அனானி.

எனக்கு எங்கே அய்யா சுர்ரென்று ஏறுகிறது? அரேபியனை உமக்கு பிடிக்கலைன்னா என்யா அவன்கிட்ட வேலை செய்யப் போற? அவனப் பிடிக்கலைன்னா அதை அவன் கிட்டேயே சொல்ல வேண்டியதுதானே? அதை ஏன் இங்கே வந்து சொல்றே?

மத்தவங்கள குறை சொல்றதுக்கு முன்னாடி உங்க முதுக பாருங்கையா. இந்த புத்தி உங்களுக்கு வந்துடுச்சுன்னாலே நாடு முன்னேறிடும்!

Anonymous said...

////என்னுடைய அரேபிய வாழ்க்கையில் நான் பார்க்காத மோசடிகளும், வரலாற்று புரட்டுகளை விடவா இது பெரிது?////

இந்த மூழி ஒப்பாரியை கேட்கும் போதெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிறன்யா....
பாய் பயலே ஒனக்கு ரொம்பத்தான் நெதானம்...
ஒங்கல குண்டுவக்கிற கும்பல்னு சொல்றவனுங்க ஓன் நெதான குண்டு வீச்சில இவிங்க கிளீன் போல்டு ஆகரத பார்த்தா அப்டித்தான் தோனுதுய்யா...

Anonymous said...

//இன்றும் கூட உலகமெல்லாம் இஸ்ரேலுடைய அவர்கள் விலை கொடுத்து வாங்கிய நில பாதுகாப்பு போராட்டத்தை தவறாக வரலாறு சொல்லிக் கொடுப்பவர்தானே நீங்கள்?//

அப்படிங்களா? காஷ்மீர் நிலத்துக்கு பாகிஸ்தான்காரன் ஒரு விலை தர்றேன்னு சொன்னா உடனே எழுதி கொடுத்துடுவீங்க போலிருக்கே? இது நல்ல தீர்வா இருக்கே?

******************
யப்பு நீ என்னதான் சொன்னாலும் சொறிகரர்களும், நீலப்படங்காட்டும் குண்டர்களும், ஜடங்களும், பூண்டு மாமாக்களும் திருந்தவே மாட்டாங்கப்பு..