நூற்றாண்டுகளை கடக்க மறுப்பவர்கள்!
கணவன் தன் மனைவியை எந்த முறைகளில் கண்டிக்கலாம்? எந்த சூழ்நிலையில் அடிக்கலாம்? அப்படி அடிப்பதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்பதை ஒரு இஸ்லாமிய அறிஞர் விளக்கும் வீடியோ காட்சி ஒன்றை எழில் அவர்கள் தனது வலைப்பதிவில் பதிந்து வைத்திருந்தார். அதே பதிவில் எம்.ஐ.டி-யில் இயற்பியல் பாடங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் காட்டும் ஒரு வீடியோ காட்சியையும் பதிந்திருந்தார்.
அந்த பதிவில் அனானிமஸாக பின்னூட்டமிட்ட அவரது நண்பர் ஒருவர் இந்த இரண்டு வீடியோ காட்சிகளையும் ஒப்பிட்டு ஒரு பின்னூட்டமிட்டிருந்தார். அதில் அவர் சொல்கிறார், "இந்த எம். ஐ. டி காட்சிக்கும் அந்த அல் ஜசீரா காட்சிக்கும்தான் எத்தனை தூரம்? இரண்டு விடியோக்களில் பல நூற்றாண்டுகளை நாம் கடக்கிறோம், கடக்க மறுக்கும் சிலரை அவர் விருப்பப் படியே பின்னே விட்டு விட்டு."
குடும்பம் சீர்குலையாமல் இருப்பதற்காக பொறுப்பற்று இருக்கும் மனைவியை கண்டிப்பது பற்றி இஸ்லாம் சொல்லும் பரிந்துரையை, எம்.ஐ.டி-யில் உயர் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுவதோடு ஒப்பிட்டு, தாம் நூற்றாண்டுகளை கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் மற்றவர்கள் அங்கேயே நின்று கொண்டிருப்பதாகவும் நம்பிக்கொண்டு மற்றவர்களையும் நம்பச் சொல்கிறார்கள் இவர்கள். பாவம்.. தன் நிலை என்னவென்பதை சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளப் பிடிக்காமல் மாற்றானை பழிப்பதில் தற்காலிக இன்பம் பெறும் பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.
உங்கள் ஓப்பீடு சரியல்ல நண்பர்களே! அது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்.
ஜூனியர் விகடன் 28-01-07 தேதி இதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. நாகப்பட்டினம் அருகே உள்ள மீனவ கிராமம் ஒன்றில் கடற்கரையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் ஒதுங்குகிறது. காவல்துறையினர் விசாரணை செய்து கொண்டிருந்தபோது ஆறுமுகம் என்பவர் தனது மூத்த மகன் ரவிச்சந்திரனுடன் வந்து, ‘இறந்து போனது எனது மகள் பரிமளாதான். அவளை நாங்கள்தான் கொலை செய்துவிட்டோம்’ என்கிறார்.
தந்தையே தனது மகளின் கையையும் காலையும் கட்டி நடுக்கடலில் தூக்கி எறிந்து கொன்றிருக்கிறார். இதில் இன்னொரு கொடுமை, இந்தக் கொலைக்கு அவர் தனது மகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டதுதான்!
இந்தக் கொடூர கொலைக்கு காரணம் என்ன? பரிமளாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் காதல் அரும்பியிருக்கிறது. ஆனால், இது அவரது குடும்பத்துக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், வினோத்தின் ஜாதி வேறு என்பதுதான்.
எழிலான நண்பர்களே, இந்த நிகழ்வு ஒரு சிறு உதாரணம் மட்டுமே! எம்.ஐ.டி-யின் தொழில் நுட்பத்தை கொஞ்ச நேரம் ஓரமாக வைத்து விட்டு, இந்த சமுதாய அவலத்தைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். சாதி வேறுபாடு ஒரு தந்தை தான் பெற்ற மகளையே கொலை செய்ய தூண்டுகிறது. இதை ஒப்பீடு செய்து பாருங்கள். 1500 ஆண்டுகளுக்கு முன் காட்டரபிகள் பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பார்களாம். அத்தகைய மடத்தனங்களுக்கு முடிவு கட்டிய இஸ்லாம் இன்று பல நூற்றாண்டுகளை கடந்து வந்து விட்டது. உங்கள் சமுதாயம் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய நீங்கள் எம்.ஐ.டி-யின் உயர் தொழில் நுட்பத்தில் உங்கள் பிரச்னைகளை மறைக்க அல்லது மறக்க முயல்கிறீர்கள்.
பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாமல் நீங்கள் simply sweeping them under the carpet! இந்த அணுகுமுறை பயன் தராது நண்பர்களே! மற்றவர்களிடம் என்ன பிரச்னை இருக்கிறது என்று தூண்டித்துருவி உலகின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்புவதாலும், உங்கள் பிரச்னை தீர்ந்து விடாது. Be brave and Face it! மாற்றாரின் குறைகளை மட்டும் ஆராய்ந்து கொண்டிருந்த எந்த சமுதாயமும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை!
இன்றைக்கு இஸ்லாத்தை பழித்து என்ன பதிவு போடலாம் என்று YouTube-ல் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து நான் மேலே சுட்டிக் காட்டிய ஜூனியர் விகடன் கட்டுரை போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள். இது போன்ற சமுதாய கொடுமைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என்று ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.
பிராமணர் ஒருவரால் வளர்க்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறினார் என்பதை பற்றி சிந்தியுங்கள். இந்துவாக இருந்து பின் சீர்திருத்தவாதியாக மாறிய தந்தை பெரியாரின் கொள்கைகளை கொஞ்சம் நடுநிலையான கண்ணோட்டத்தில் சிந்தித்து பாருங்கள். அன்று மீனாட்சிபுர மக்கள் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதை யோசியுங்கள். இன்றும் நெல்லை ஆய்குடி மக்கள் ஏன் ''நாங்கள் முஸ்லிம்களாய் மதம் மாறுவோம்!'' என்று போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பதையும் யோசியுங்கள். நீங்கள் பயணிக்க வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் நண்பர்களே!
உங்கள் முன் இரண்டு choices இருக்கின்றன:
1. "எங்கள் சமுதாயத்தில் எந்த பிரச்னையும் இல்லை" என்று கண்ணை மூடிக் கொண்டு சாதிப்பது. இதைத்தான் உங்களில் பலர் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த அணுகுமுறையால் பலனேதும் இல்லை. கார்ப்பெட்டிற்கு அடியில் உள்ள குப்பை அப்படியேதான் இருக்கும்!
2. சமுதாய அவலங்களைப் பற்றி சிந்தித்து அவற்றிற்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிய முயல்வது.
The Choice is Yours! வாழ்த்துக்கள்!
28 comments:
"எங்கள் சமுதாயத்தில் எந்த பிரச்னையும் இல்லை" என்று கண்ணை மூடிக் கொண்டு சாதிப்பது. இதைத்தான் உங்களில் பலர் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த அணுகுமுறையால் பலனேதும் இல்லை. கார்ப்பெட்டிற்கு அடியில் உள்ள குப்பை அப்படியேதான் இருக்கும்!
2. சமுதாய அவலங்களைப் பற்றி சிந்தித்து அவற்றிற்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிய முயல்வது.
This is equally applicable to you.
Hello Marakyar,
How about hounr killing in Muslim conuntires. That too legalised. At least in India some rarely some one is going to the extent of killing for intercast marriages, but not having legal approval.Whereas im muslim countries they are legalized as per sharia law. If you need more info search in the web.
அன்பின் மரைக்காயர் அவர்களே! அழகு நயத்துடன் ஆலோசனைகள எடுத்துச் சொல்லும் அருமையான பதிவு.
ஒருமுறை, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து...
''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தவர்கள். சிலைகளை வணங்குபவர்கள், குழந்தைகளைக் கொன்று விடுவோம். என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த சொல்லி விட்டு, எனக்கொரு மகள் இருந்தாள். அவளை நான் அழைத்தாள் சந்தோஷப்பட்டு பதிலளிப்பாள்.
ஒரு நாள் அவளை நான் அழைத்தேன் அவள் என்னைப் பின் தொடர்ந்து வந்தாள். என் வீட்டிற்கு அருகிலிருக்கின்ற ஒரு கிணற்றுக்கு (அவளை அழைத்து) வந்தேன். அவளது கைகளைப் பிடித்துக் கிணற்றில் தள்ளி விட்டேன். என் அருமைத் தந்தையே... என் அருமைத் தந்தையே... என்பதுதான் நான் அவளிடம் கேட்ட கடைசி வார்த்தைகளாகும் என்றும் சொன்னார்.''
இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் தமது இருகண்களிலும் கண்ணீர் நின்று விடும் வரை அழுதார்கள். நபி (ஸல்) அவர்களுடன் இருந்த ஒரு மனிதர், நீங்கள் (இதற்காக) கவலைப்படுகிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், பேசாதிருப்பீராக! அவர் முக்கியமான பிரச்சனையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டு, பின்பு அவரிடம் உமது விஷயத்தை மீண்டும் கூறுவீராக! என்றார்கள்.
அவர் மீண்டும் சொன்னார் அப்போதும் நபி (ஸல்) அவர்கள் கண்களின் கண்ணீர் அவர்களின் தாடியின் மீது வழிந்தோடும் அளவிற்கு அழுதார்கள். பின்னர், நிச்சயமாக அல்லாஹ் அறியாமை காலத்தில் அவர்கள் செய்தவற்றை மன்னித்து விட்டான் எனவே நீர் உமது செயல்களை புதிதாக ஆரம்பித்து செய்து வருவீர்களாக! என்று கூறினார்கள். (நூல்: தாரமி)
//தந்தையே தனது மகளின் கையையும் காலையும் கட்டி நடுக்கடலில் தூக்கி எறிந்து கொன்றிருக்கிறார். இதில் இன்னொரு கொடுமை, இந்தக் கொலைக்கு அவர் தனது மகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டதுதான்!//
எந்த நூற்றாண்டாக இருந்தால் என்ன...?
பெண் என்பவள் கருவிலும், குழந்தைப் பருவத்திலும், பருவ வயதிலும் கொல்லப்படுகிறாள் என்பது நிதர்சனமான உண்மை. இதை பல நூற்றாண்டுகளைக் கடந்து விட்டதாகச் சொல்லிக் கொள்பவர்கள் சிந்திப்பார்களா...?
அன்புடன்,
அபூ முஹை
//This is equally applicable to you..//
முஸ்லிம்களுக்கிடையிலே பிரச்னைகள் இருக்கிறதுதான். அதை நான் இல்லையென்று சொல்லவில்லை. அதெயெல்லாம் அப்படியே விட்டுட்டு கிருஸ்துவ சமுதாயத்திலேயும் இஸ்ரேலிய சமுதாயத்திலேயும் உள்ள குறைகளை நான் ஆராய்ந்து கொண்டிருந்தால் என் சமுதாய பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடுமா?
நம் எழிலான நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவதும் இதுதான்.
'உங்கள் வீடு பற்றி எரிகிறது. நீங்களோ எங்கள் புழக்கடை குப்பைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள்'
//How about hounr killing in Muslim conuntires. That too legalised. At least in India some rarely some one is going to the extent of killing for intercast marriages, but not having legal approval.Whereas im muslim countries they are legalized as per sharia law. If you need more info search in the web. //
உங்கள் வேண்டுகோளை ஏற்று web-ல் தேடினேன் நண்பரே! இதோ விக்கிபீரியாவில் நான் கண்ட கருத்துக்கள்:
As of 2004, honor killings have occurred at the hands of individuals within parts of various countries, such as Albania, Bangladesh, Brazil, Canada, Denmark, Ecuador, Egypt, Germany, India, Iran, Iraq, Israel, Italy, Jordan, Morocco, Pakistan, the Palestinian territories, Sweden, Turkey, Uganda, the United Kingdom and the United States. Honor killings are more common among poor rural communities. In Europe, honor killings have mostly been reported within some Muslim and Sikh communities. Individual Arab Christians living within parts of the Near East, such as sections of Egypt, Jordan and the Palestinian Authority, are said to sometimes carry out the act as well. Many cases of honor killings have been reported in Pakistan.
Honor killing is forbidden in Islam. There is no specific mention of the practice in the Qur'an or Hadiths.
An honor killing....is technically forbidden by the Sharia (Islamic law).
..there is no support for the act in the religion itself.
According to Sheikh Atiyyah Saqr, former head of the al-Azhar University Fatwa Committee (one of the oldest and most prestigious in the Muslim world):
"Like all other religions, Islam strictly prohibits murder and killing without legal justification. Allah, Most High, says, “Who so slayeth a believer of set purpose, his reward is Hell for ever. Allah is wroth against him and He hath cursed him and prepared for him an awful doom.” (An-Nisa’: 93) The so-called “honor killing” is based on ignorance and disregard of morals and laws, which cannot be abolished except by disciplinary punishments."
அபூ முஹை அவர்களே, அருமையான விளக்கத்திற்கு நன்றி. ஏற்கனவே படித்த ஹதீஸாக இருந்தாலும் இப்போது படிக்கும்போதும் மனது கனத்துப் போனது.
பெண் என்பவள் கருவிலும், குழந்தைப் பருவத்திலும், பருவ வயதிலும் கொல்லப்படுகிறாள் என்பது நிதர்சனமான உண்மை. இதை பல நூற்றாண்டுகளைக் கடந்து விட்டதாகச் சொல்லிக் கொள்பவர்கள் சிந்திப்பார்களா...?
In India there are no Hoodoo Laws.
We all know what happened to Muktar Mai and how the islamic
'justice' system treated her.
Many cases of honor killings have been reported in Pakistan.
If something is pointed it will be denied that it is unislamic but the reality is that in islamic countries women are the most oppressed.
//We all know what happened to Muktar Mai and how the islamic
'justice' system treated her.//
முக்தர் மாய்க்கு நேர்ந்த அவலத்தை வெளிச்சமிட்டு காட்டி அவருக்கு நீதி கிடைக்க தூண்டுகோலாய் இருந்தவர் ஒரு பள்ளிவாசல் இமாம்.
//During his weekly Friday sermon, the village imam (prayer leader) declares that a great sin has been committed and asks the villagers to report the matter to the police.
The imam then tells a reporter from a nearby town who publishes the story in the local press.
It is immediately picked up by the international media and the Punjab government asks the police to take immediate action.//
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4620065.stm
சில முஸ்லிம்கள் செய்த இந்த கொடுமையை பற்றி அவர் வெள்ளிக்கிழமை பிரசங்கத்தில் பேசியிருக்காவிட்டால் இந்த பிரச்னை வெளியுலகிற்கு தெரியாமலேயே போயிருக்கும். அந்த இமாம் முஸ்லிம்கள் சிலர் செய்த இந்தத் தவற்றை அப்படியே மறைத்துவிட்டு YouTube-லிருந்து ஒரு ஆதாரத்தை எடுத்து 'கிருஸ்துவர்கள்தான் இப்படி செய்கிறார்கள். இந்துக்கள்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள்' என்று சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கவில்லை. அல்லது MIT வீடியோவை எடுத்துப் போட்டு 'நாங்கள் நூற்றாண்டுகளை கடந்து விட்டோம்' என்று போலிப் பெருமை பேசிக் கொண்டிருக்கவில்லை.
நான் மீண்டும் சொல்கிறேன்..
'உங்கள் வீடு பற்றி எரிகிறது. நீங்களோ எங்கள் புழக்கடை குப்பைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள்'
மரைக்காயர் நல்ல பதிவு.
//'உங்கள் வீடு பற்றி எரிகிறது. நீங்களோ எங்கள் புழக்கடை குப்பைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள்'//
எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை எதிரியின் ஒரு கண்ணையாவது குருடாக்கி விட வேண்டும் என்கிற மாதிரி...
அவர்கள் வீடு பற்றி எரிந்து சாம்பலானாலும் பரவாயில்லை என்று எதிரியின் புழக்கடை குப்பைகளை கிண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நல்ல உதாரணம்
//எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை எதிரியின் ஒரு கண்ணையாவது குருடாக்கி விட வேண்டும் என்கிற மாதிரி...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முஸ்லிம் அவர்களே
இது போன்ற பல உதாரணங்கள் எல்லா மதத்திலும் உண்டு! அது இஸ்லாமையும் சேர்த்து தான்! சமூக பிரச்சனையில் ஏன் உங்களுக்கு இந்த மதமாற்று வேலை??!! எழிலை சாட நினைத்தால் அவரை மட்டும் சாடுங்க ப்ளீஸ் எங்க மத உணர்வை சாடாதீங்க! உங்களுக்கு எப்படி உங்க மதம் நல்லதா தோண்றுதோ அதைப்போல் தான் எங்கள் மதம் எனக்கு!
+
//"எங்கள் சமுதாயத்தில் எந்த பிரச்னையும் இல்லை" என்று கண்ணை மூடிக் கொண்டு சாதிப்பது. இதைத்தான் உங்களில் பலர் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த அணுகுமுறையால் பலனேதும் இல்லை. கார்ப்பெட்டிற்கு அடியில் உள்ள குப்பை அப்படியேதான் இருக்கும்!
2. சமுதாய அவலங்களைப் பற்றி சிந்தித்து அவற்றிற்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிய முயல்வது.
This is equally applicable to you.//
ஓவர் விளம்பரம் வேண்டாம் மரைக்காயரே! எங்களுக்கு இஸ்லாமிய நன்பர்கள் இருக்காங்க அங்க என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியும்!!!
உங்களுக்கு புண்ணியமா போகுது! தயவு செய்து நிறுத்துங்கள் உங்கள் மத பிரச்சாரத்தை!
நல்ல பதிவு மரைக்காயரே!
சுற்றியுள்ள மக்களின் சீர்குலைவுகளுக்கு
ஜாதிவெறி எப்படியெல்லாம் காரணமாக இருக்கிறது என்பதை கண்ணிருந்தும் காண விரும்பாத நம் எழிலான நண்பர்கள் தான் தம் மனப்புண்ணை சொறிந்துக்கொள்ள தம்மை ஏதேதிலோ'இணைய'ச்செய்துக்கொண்டு ஏதேதோ பிதற்றி தம் காழ்ப்பை வெளிச்சப்படுத்துகிறார்கள்.
//ஓவர் விளம்பரம் வேண்டாம் மரைக்காயரே! எங்களுக்கு இஸ்லாமிய நன்பர்கள் இருக்காங்க அங்க என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியும்!!!//
நாங்கள் உங்கள் வேதபுத்தகத்தில் உள்ள தவறை சுட்டி காட்டுகிறோம். நீங்கள் எங்கள் சமுதாய மக்களிடம் உள்ள தவறை சுட்டிக் காட்டுவதில் குறியாக இருக்கிறீர்கள். நாங்கள் வைத்திருக்கும் வேதத்தில் இப்படி உள்ளது என்று கூறி என்றாவது கேள்வி கேட்டுள்ளீர்களா? நான் கேட்கிறேன். அந்த தகப்பன் தன் பிள்ளை கொள்வதற்கு சாதி பிரச்சனை ஒரு காரணமாக இருந்திருக்கிறது. இது உங்கள் மத அடிப்படையில் சரியா? தவறா? தனி மனித பிரச்சனையை ஒதுக்கி விட்டு இப்படி ஆராய முற்படுங்கள். தெளிவு கிடைக்கும்.
அய்யா WTP,
உங்கள் (பிராமண) மதம் பற்றி எழுதும்போது உங்களுக்கு வரும் ஆதங்கத்தை உணர்கிறேன்.
நீங்கள் ஒரு உண்மையைப் புரிந்துக்கொள்ளுங்கள்: இந்த அறிவுரைகளை நீங்கள் எழில் வகையறாக்களுக்குத்தான் முதலில் சொல்லவேண்டும்.
மதப்பிரச்சாரம் என்பதை இன்னொரு மதத்தை அவமதித்துத் தான் செய்யமுடியும் என்பது எழில்கள் பாணிதான்!
மரைக்காயர் நல்ல பதிவு.
//உங்களுக்கு புண்ணியமா போகுது! தயவு செய்து நிறுத்துங்கள் உங்கள் மத பிரச்சாரத்தை!//
WTP சார் நீங்கள் யாரை நிறுத்தச் சொல்கிறீர்கள்? எங்களுக்கு மட்டும் இந்து நண்பர்கள் இல்லையா என்ன?
எங்கள் மத பிரச்சாரத்தை நிறுத்துங்கள் என்று சொல்ல நீங்கள் யாரய்யா..?
வீ த பீப்புள்,
தேவையா சார் இது உங்களுக்கு.
இந்து வேதம் தவறானது, அதைத் தான் நாங்கள் சுட்டிக் காட்டுகின்றோம். சரியான வேதம் கடைபிடிக்கும் இஸ்லாம் மதம் தான் உண்மை மார்க்கம், சத்திய மார்க்கம் என்று கடவுள் நம்பிக்கையில்லாத பெரியார் கூட சொல்லியிருக்கிறார்.
அம்பேத்கார் கூட இஸ்லாத்திற்கு மாறுவதாகத் தான் இருந்தார். ஆனால் அவரை பார்ப்பானப் பாம்புகள் மனம் மாற்றி பௌத்தத்தைத் தழுவ வைத்தனர்.
எங்கள் மதப் பிரச்சாரத்தை நிறுத்துவது என்பது உண்மையை உறக்கச் சொல்வதை நிறுத்துவதற்குச் சமம்.
பெண்கள் இஸ்லாத்தில் ஒடுக்கப் படுகிறார்கள் என்பது சுத்த கற்பனை மற்றும் உண்மைக்குப் புரம்பான பிரச்சாரம்.
அன்பின் wtp அவர்களே!
உப்பைத் தொட்டுகிட்டு உரலை முழுங்குறவன், ஓரமாய் ஊறுகாயைத் தொட்டுகிட்டு பழையதைக் குடித்தவனைப் பார்த்து ஏன்னு கேட்டானாம்!
இஸ்லாத்தின் மீது அடுக்கடுக்காய் அவதூறுகளை அள்ளி எறிந்தவர்களுக்கும், எறிந்து கொண்டிருப்பவர்களுக்கும் முஸ்லிம்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
//உங்களுக்கு எப்படி உங்க மதம் நல்லதா தோண்றுதோ அதைப்போல் தான் எங்கள் மதம் எனக்கு!//
இதை எல்லோரும் நினைவில் கொண்டு செயல்பட்டால் பிரச்சினையே இல்லை.
உணர்ச்சி என்பது எல்லோருக்கும் பொதுவானது. எல்லா சமூகத்தவர்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதை உணர்ந்து, பிற மதத்தவரை சீண்டாமல் இருக்க வேண்டும்.
அப்படி சீண்டினால், சீண்டியவர்களுக்கு பதில் கொடுப்பது முஸ்லிம்களின் உரிமை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
அன்புடன்,
அபூ முஹை
////
உங்கள் சமுதாயம் இன்னும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய நீங்கள் எம்.ஐ.டி-யின் உயர் தொழில் நுட்பத்தில் உங்கள் பிரச்னைகளை மறைக்க அல்லது மறக்க முயல்கிறீர்கள்.
////
i liked this
பாபுஜி
சிராஜுதீன்
சுவனப்பிரியன்
முஸ்லிம்
நஜ்மா
அபூமுஹை
அனானிமஸ்
அயுப்
உங்கள் அனைவரின் வருகைக்கும் உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.
If all is well with islam and those who follow islam why is
that many muslim nations are so
backward in terms of education,
and health indicators.Was it not
a fact that some mullahs in Uttar Pradesh asked muslims not to accept polio vaccines.Who suffered because of this.Why female literacy among muslims is so low?
Is it not a fact that in India a
muslim woman has less rights when
compared to Hindu women on matters
relating to inheritance, divorce.
There are problems in Hindu society as well as Islamic society.
To pretend that one is perfect is
wrong.Hindu society has undergone many reforms.When compared to that
islamic society is still conservative and backward.Hindu society has a long way to go, but islamic society has a longer way to go.So if Hindu society is backward by centuries, islamic society is backward by thousands
of years.
முடிஞ்சா இந்து மதத்துல இன்னின்ன புடலாங்காய் இருக்குதுன்னு சொல்லட்டும். மாறக என் புடலங்காயில் குறை இருக்கறதால, எல்லா புடலங்காயிலயும் குறை இருக்கும்னு சொல்றவன் மூஞ்சில அழுகின தக்காளியை அடிப்போம். முதல் தக்காளி உங்களுடையதாக இருக்கட்டும்.
:))))
leave mr. star of the week with peace. he is ignorant
WTP சார், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
//இது போன்ற பல உதாரணங்கள் எல்லா மதத்திலும் உண்டு! அது இஸ்லாமையும் சேர்த்து தான்! சமூக பிரச்சனையில் ஏன் உங்களுக்கு இந்த மதமாற்று வேலை??!!//
இது போன்ற உதாரணங்கள் இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை. முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கிறது. இது எங்களுக்கும் தெரியும். முஸ்லிம்களின் பிரச்னையில் எழில் போன்றவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?
//எழிலை சாட நினைத்தால் அவரை மட்டும் சாடுங்க ப்ளீஸ் எங்க மத உணர்வை சாடாதீங்க!//
இந்து மதத்திற்கு வாருங்கள் என்று முஸ்லிம்களை எழில் அழைத்தார். அதனால்தான் எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள் என்று நான் கேட்டேன். இதை ஏன் சாடுறதா நீங்க நினைக்குறீங்க?
எழில் என்னை சாடி இருந்தா நான் அவரை சாடியிருப்பேன். அல்லது அதையெல்லாம் செருப்பில் ஒட்டிய சேறாக நினைத்து துடைத்துவிட்டு போய்க்கிட்டே இருப்பேன். ஆனால் அவர் முஸ்லிம்களின் நம்பிக்கையை ஏளனம் செய்கிறார். அதை செய்ய அவருக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை அவர் சார்ந்த சமுதாயத்திலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி அவருக்கு உணர்த்துகிறேன்.
//உங்களுக்கு எப்படி உங்க மதம் நல்லதா தோண்றுதோ அதைப்போல் தான் எங்கள் மதம் எனக்கு!//
கரெக்ட். இதைத்தான் முஸ்லிம்களும் ரொம்ப காலமா சொல்லிட்டிருக்காங்க. இன்னொரு பதிவரிடம் நான் முன்பு கேட்ட கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன். நேசகுமார் போன்றவர்கள் இஸ்லாம் பற்றி அவதூறுகளையும் வரலாற்று புரட்டுகளையும் பரப்புனப்போ 'இன்னொரு மதத்தினரின் நம்பிக்கைகளில் இந்துவாகிய நாம் தலையிடுவது முறையல்ல. இச்செயல் முஸ்லிம்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்' என்று யாரும் அவரை தடுக்கவில்லையே? ஏன்?
//ஓவர் விளம்பரம் வேண்டாம் மரைக்காயரே! எங்களுக்கு இஸ்லாமிய நன்பர்கள் இருக்காங்க அங்க என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியும்!!!//
எங்களுக்கும் தெரியும் சார். எங்கள் சமுதாய பிரச்னைகளை நாங்கள் அப்படியே மறைத்துவிட்டு YouTube-லிருந்து ஒரு ஆதாரத்தை எடுத்து 'கிருஸ்துவர்கள்தான் இப்படி செய்கிறார்கள். இந்துக்கள்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள்' என்று சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கவில்லை. அல்லது MIT வீடியோவை எடுத்துப் போட்டு 'நாங்கள் நூற்றாண்டுகளை கடந்து விட்டோம்' என்று போலிப் பெருமை பேசிக் கொண்டிருக்கவில்லை.
ஆனால் தங்கள் மதத்தில் சமுதாயத்தில் உள்ள அவலங்களையும் கொடுமைகளையும் மறந்துவிட்டு எங்கள் சமுதாய பிரச்னைகளைப் பற்றி வக்கணை பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் கார்ப்பெட்டிற்கு அடியில் உள்ள குப்பைகளை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்படுகிறது.
அதனால்தான் சொல்கிறேன்:
'உங்கள் வீடு பற்றி எரிகிறது. நீங்களோ எங்கள் புழக்கடை குப்பைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள்'
//உங்களுக்கு புண்ணியமா போகுது! தயவு செய்து நிறுத்துங்கள் உங்கள் மத பிரச்சாரத்தை!.//
பிரச்சாரம் செய்றதுல ஒரு தப்பும் இல்லை சார். யார் வேணாலும் அவங்க மதத்தைப் பத்தி பிரச்சாரம் பண்ணலாம். ஆனா மத்தவங்க மதத்தை இழிவு படுத்துனாத்தான் தன் மதம் பிழைக்கும்னு சிலர் நினைக்குறாங்க பாருங்க.. அதுதான் தப்பு.
எல்லா ஜல்லியும் முடிந்தாயிற்றா? ஓ.கே! தக்காளி அடிக்கறவங்க எல்லாம் ரெடியா? என் முகம் ரெடியா தான் இருக்கு! உங்களுக்கு சொன்ன அதே விசயத்தை தான் எழிலுக்கும் சொன்னேன்! எந்த பதிவு என்று தேவையெனில் அவர் பதிவை புரட்டிப்பார்க்கவும்.
//பிரச்சாரம் செய்றதுல ஒரு தப்பும் இல்லை சார். யார் வேணாலும் அவங்க மதத்தைப் பத்தி பிரச்சாரம் பண்ணலாம். ஆனா மத்தவங்க மதத்தை இழிவு படுத்துனாத்தான் தன் மதம் பிழைக்கும்னு சிலர் நினைக்குறாங்க பாருங்க.. அதுதான் தப்பு.//
இப்படி சொல்லும் நீங்க உங்க இந்த பதிவில் என்ன எழுதியிருக்கீங்கன்னு தெரியுதா?? புரியலைன்னா திரும்ப படியுங்க சார்! நீங்களும் அடுத்த மதத்தை இழிவு செய்து தான் உங்க மதப்பிரச்சாரத்தை செய்திருக்கீங்க சார்!
உங்களை போன்றவர்களும் எழில் போன்றவர்களை திருத்த முடியாது!
யார் யாருக்கு எவ்வளவு தக்காளி அடிக்கனும் என் முகத்திலோ கொஞ்சம் மெயில் செய்து அப்பாயிண்மெண்ட் வாங்க ப்ளீஸ்! எவ்வளவு தாங்கனும்ன்னு தெரியாம அடிவாங்க நான் என்ன வடிவேலா!!
நன்றி!
BABUJI
//உங்கள் (பிராமண) மதம் பற்றி எழுதும்போது உங்களுக்கு வரும் ஆதங்கத்தை உணர்கிறேன்.//
ஹூம்! உங்களை திருத்தமுடியாது! இந்து மதத்தில் பிராமணர்கள் மட்டும் தான் இருக்காங்க என்ற லாஜிக் உங்களுக்கு யார் சொன்னா?? அல்லது இந்து மதம் பிராமண மதம் என்று எங்க சொல்லியிருக்கு??
இந்தியாவின் மக்கள் தொகையில் 82 சதவிகிதம் இந்துக்கள், அதாவது சுமார் 82 கோடி மக்கள் இதில் பிராமணர்கள் வெறும் 3-5 சதவிகிதம் தான்(அதிகபட்சம் 5 கோடி)!!!!
புரியுதா?? இல்லை வழக்கமான தூங்கற மாதிரி நடிக்கற கதையா??
Ungal Group Jallihalla oruthar (Adra Sakkai) kurayurare!
ஒரு அனானி நண்பர் மேலே என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். அவரை ஏமாற்ற விருப்பம் இல்லை. இதோ வந்துவிட்டேன்.
இஸ்லாத்தின் பெயரால் எவர் கொட்டும் குப்பைகளையும் அள்ளும் நம்முடைய கட் & பேஸ்ட் மாஸ்டர் அவர்களுக்கு இந்த செய்தி கண்ணில் படாது.
எதற்கெடுத்தாலும் இஸ்லாத்தைக் குறை சொல்லும் நோக்கில் பாகிஸ்தானில் இந்து பெயருடையவர் எவருக்கெனும் வயிறு வலித்தாலோ அல்லது மலேசியாவில் இந்து பெயருடையவருக்கு ஜலதோஷம் பிடித்தாலோ இஸ்லாம் தான் காரணம் என்று தேடிப் பிடித்து நிறுவ முனைவார் அவர். இதனைப் பார்த்தாரா எனத் தெரியவில்லை அல்லது மறந்திருப்பார் / மறைத்திருப்பார்.
இன்றும் அமோகமாக நடக்கும் அடிமைவியாபாரம், நேபாளத்தில். நண்பர்களே இப்போது 2007. கற்காலம் இல்லை.
Desperate plight of Nepal 'slave girls'
In the undergrowth, 13-year-old Junu Shrestha hacks away to gather fodder for her landlady's cattle.
When she has collected a pile bigger than herself, she hoists it onto her back and fixes it with a headband.
She trudges back to the house, 20 minutes away.
She is one of at least 20,000 girls in western Nepal who are working as indentured domestic servants in conditions campaigners say amount to slavery.
Parents send them away in exchange for a sum of money paid by landlords, who sometimes keep the girls for years.
'Nothing wrong'
Usually the girls are recruited by a middleman.
In recent years charitable groups have freed nearly 3,000 such girls, who are known as kamlaris.
Nepal's indentured girls
The girls are not paid for their manual labour
But the system persists despite being outlawed last year.
"I get up at six," Junu tells the BBC shyly.
"I clean the house, sweep the yard, fetch water and feed the cattle.
"I walk to the jungle to cut fodder. Later I wash the dishes, then I bring water again and collect fodder again. Sometimes I wash clothes."
She says she misses her school, and her friends who are now too far away for her to visit.
Her situation is particularly bad. She is an orphan, and used to live with her uncle.
She says he was an alcoholic who sent her away 18 months ago after a house-owner promised him 4,000 rupees a year - about $60 - for Junu's services.
Junu gets no money herself.
The landlady and her daughter see nothing wrong in having Junu as a kamlari. They say the payment is good and that her uncle is happy with it.
"This girl is an orphan and she landed up in our lap," they say.
Regular payments mean a girl may remain a kamlari for years, with no option of leaving.
Ready victims
In the cold winter mist outside the town of Ghorahi, women draw water from a well and children play marbles in the dust.
Families are living in small houses they have built themselves.
Junu Chaudhry and family
The father of Junu Chaudhry, centre, has problems supporting her
These are the kinds of people, mostly from the impoverished Tharu ethnic group, that send their daughters to be indentured labourers.
Most of these families were until recently bonded labourers themselves.
They are squatting on government land and have no money.
Other families used to have land but lost it to richer incomers.
Some offer their daughters in exchange for landlords letting them cultivate the land and keep some of the crop.
Traditionally, many people have seen the kamlari system as positive - a money-earner in big families.
There is little contraception here. Many men believe vasectomies would sap their strength.
The girls miss out on school. Parents often lose almost all trace of their children.
மேலும் படிக்க
http://news.bbc.co.uk/2/hi/south_asia/6405373.stm
உலகின் ஒரே இந்து நாட்டில் இப்படி நடக்க விடலாமா? பொங்கி எழுங்கள் காவிகளே! அங்கே போய் திருத்திவிட்டு வாருங்கள், அப்புறம் பேசுவோம்!
Post a Comment