HINDHU அவர்களின் பதில்!
எனது முந்திய பதிவுக்கு HINDHU அவர்கள் பதிலளித்திருக்கிறார்கள். அவருக்கு என் நன்றி.
அன்பு மரைக்காயர் ஐயா உங்களுக்கு எனது நன்றிகள் தாங்கள் நினைப்பது போல் எழில் ஐயா அவர்கள் இந்து மதம் பற்றி அதிகம் அறியாதவர் அல்ல சொல்லப்போனால் நான் தான் அதிகம்எழில் ஐயாவை நான் அறிந்தவனல்ல. ஆனால் இருபத்தி ஒரு வயதே நிரம்பிய உங்களின் எழுத்துக்களில் தெரியும் பெருந்தன்மையும் கண்ணியமும் எழில் அவர்களின் எழுத்துக்களில் தெரிவதில்லை. அதில் தெரிவதெல்லாம் இஸ்லாமிய துவேஷம், காழ்ப்புணர்வு, வெறுப்பு மட்டுமே! குறை குடம் தளும்பத்தானே செய்யும்!
அறியாதவனாய் இருக்க வேண்டும் ஏனென்றால் நான் ஒன்றும் அதிகம் கற்றவன் அல்ல எனக்கு இன்னும் இருபத்தி ஒரு வயது கூட பூர்த்தியாகவில்லை.
என்வகையில் சொல்லப்போனால் எழில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை கொஞ்சம் எளிய நடையில் சொன்னதாகவே படுகிறது. எனக்கு என்ன வருத்தம் என்னவென்றால் தாங்கள் இந்து
மதத்தினது உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் தவறான அபிப்பிராயத்துடன் விமர்சிக்க முற்படுவதே ஆகும்.
இஸ்லாம் மார்க்கத்தின் உட்கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் தவறான அபிப்ராயத்துடன் எழில் விதண்டாவாதம் செய்ததால்தான் நான் இந்து மதத்தை விமர்சிக்க நேர்ந்தது. இன்னொரு மார்க்கத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் எழிலுக்கு தனது மதத்தைப் பற்றிய கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்க ஏன் முடியவில்லை? அவரது கருத்துப்படி ஒரு இஸ்லாமிய கொள்கை தவறானது என்றால் அதற்கு எழிலின் இந்து மதம் என்ன தீர்வு வைத்திருக்கிறது? 'இது தவறு' என்று சொல்ல முடிந்தவர் 'எது சரி?' என்பதையும் சொல்ல வேண்டும்தானே?
//எனது பதிவுகள் சில நேரங்களில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் மனதை புண்படுத்தியிருக்கலாம். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இஸ்லாமிய துவேஷ பதிவுகள் வந்துக் கொண்டிருக்கும் வரை அவற்றுக்கு பதில் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.//இஸ்லாமிய கொள்கைகள் தவறு என்று சொன்ன எழில் அவர்கள் முஸ்லிம்களை இந்து மதத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இப்படி அழைப்பு விடுப்பதில் ஒரு தவறுமில்லை. ஆனால் இந்து மதத்திற்கு அழைத்த நண்பர் 'எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?' என்று நாம் கேட்டால் தெளிவாக விளக்கம் கொடுக்க வேண்டாமா? ஆனால் அந்தக் கேள்விகள் உங்களைப் போன்றவர்களுக்கு நான் இந்து மதத்தை சாடுவது போல தெரிகின்றன. 'இந்து மதம் பற்றி இது போல கேள்விகள் எழுவதற்கு நான்தான் காரணம்' என்று பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய எழில் அவர்கள், இப்போது விலகி ஓடுகிறார்.
எனக்கு எந்த மனவருத்தமும் கிடையாது ஆனால் தாங்களும், தங்களைப் போன்றவர்களும் இந்து மதத்தைப்பற்றி செய்யப்படும் விமர்சனங்கள் தவறான கருத்துப் புரிதல்களுடன் மேற் கொள்ளப்படுவதால் தான் நான் வருந்துகிறேன். தங்களின் மீதான மதத் துவேஷப்பதிவுகளுக்கு தாங்கள் அவரவர்களைத்தான் சாட வேண்டுமே ஒழிய இந்துமதத்தை அல்ல. அவர்கள் தவறாக விமர்சித்தால் தாங்களும் அவர்களைப்போலவே செய்ய வேண்டுமா என்ன?
தாங்கள் சொல்வதைப்போல் பல இஸ்லாமியர்களின் பதிவுகள் இந்துமதத்தை கேவலப்படுத்துவதாக காணப்படுகின்றன நான் அவற்றிற்கும் மறுத்து பதிவெழுத வேண்டும். தாங்கள் எனக்கும்
இஸ்லாமிய துவேஷம் என்று கருத வேண்டாம். ஏனென்றால் இந்து மதமெனது தாய் எனது தாயின் குணங்கள் எனக்குத்தான் தெரியும் அக்குணங்களை அயல் வீட்டுக்காரர் தவறான புரிதல்களுடன் விமர்சிக்க முற்படுவாராயின் அது தவறானது என்று விளக்கும் கடமையும், அதேநேரம் அயல் வீட்டுக்காரரின் தாயை பழிக்கும் படியாக அமையக்கூடாது என்ற பொறுப்பும், கண்ணியமும் எனக்கு இருக்கிறது.
'இந்து மதமெனது தாய்' என்கிற உங்கள் மதப்பற்றை மதிக்கிறேன். இந்து மதத்தைப் பற்றி நன்கு புரிதலுள்ள உங்களைப் போன்றவர்கள் அதிகம் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். இஸ்லாமியர்கள் யாரேனும் அனாவசியமாக இந்து மதத்தை கேவலப்படுத்தி எழுதினார்களென்றால் அது கண்டிக்கத் தக்கது. என்னுடையை பதிவுகளிலேயே கூட சில முஸ்லிம் சகோதரர்கள் என்னை கண்டித்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் பிற மத கடவுள்களை நிந்திக்க வேண்டாம் என்று இஸ்லாம் கட்டளையிட்டிருக்கிறது. பிற மதங்களின் விஷயத்தில் வரம்பு மீற வேண்டாம் என்றும் எச்சரிக்கிறது. இஸ்லாம் பற்றி எடுத்துச் சொல்வதுதான் ஒரு முஸ்லிமின் கடமை.
ஆனால் ஒரு முஸ்லிம் பதிவரை மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதைப் போல எழில், நேசகுமார் போன்றவர்களை பிற இந்துக்கள் கண்டிப்பதை நான் பார்க்கவில்லை. 'நமக்கேன் வம்பு' என்று மற்ற இந்துக்கள் பேசாமல் இருப்பதை எழில் போன்றவர்கள் மவுன அங்கீகாரமாக, ஆதரவாக எடுத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், உங்களைப்போல இந்துமத பற்றாளர்கள் எழில் போன்றவர்கள் வீண்வம்பை விலைக்கு வாங்கும்போது மவுனமாக இருக்காமல் கண்டிக்க முன்வர வேண்டும்.
ஆனால் இஸ்லாம் பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பதிவர்கள் தவறான விமர்சனங்களை முன்வைப்பதை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள் நான் முன்பு சொன்னது போல தங்கள் மதங்களின் மீது நம்பிக்கை இழந்தவர்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால் மட்டும்தான் தனது மதத்தை கொஞ்சமாவது காப்பாற்ற முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாத்தின் கொள்கைகள் தவறு என்று சொல்லத் தெரிந்த இவர்களுக்கு அதற்கு மாற்றுக் கருத்து அவர்களின் மதத்தில் இருக்கிறதா என்றால் பதில் சொல்லத் தெரியாது.
இந்த இஸ்லாமிய துவேஷ பதிவர்களுக்கு பல முஸ்லிம் பதிவர்கள் தெளிவாக பலமுறை விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர்களின் துவேஷ மனங்கள் சமாதானமடையாது. மேலும் மேலும் கேள்விகள், நக்கல் வசனங்கள், துவேஷ வலைப்பக்கங்களிலிருந்து copy & Paste-கள், வரலாற்றுப் புரட்டுகள் என பல வகை தாக்குதல்களை முஸ்லிம்கள் சந்தித்திருக்கிறார்கள். அதனால்தான் நான் எதிர்க்கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். 'இஸ்லாமிய கொள்கை தவறு என்றால் அதற்கு உங்கள் மதத்தில் மாற்றுக் கருத்து என்ன இருக்கிறது? ஆதாரத்துடன் விளக்க முடியுமா? இஸ்லாமிய கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கு முன் உங்கள் மதத்தில் உள்ள கேவலமான கொள்கைகளை சீர்திருத்தி முடித்து விட்டீர்களா?' இதைத்தான் நான் கேட்கிறேன்.
இஸ்லாம் மீது தவறான கருத்துக்கள் தெறிவிக்கப்படுமாயின் தாங்கள் மறுக்கலாம், ஆனால் அவை மிகவும் கீழ்தரமான சொற்பிரயோகங்களால் மேற்கொள்ளப்படக்கூடாது தங்களின்கீழ்த்தரமான சொற்பிரயோகங்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் என்னை எதிர்ப்பவர்கள் இதற்கு எதிர்மாறான நம்பிக்கையில் இருக்கிறார்கள். எனக்கு வரும் பல பின்னூட்டங்களை நான் அனுமதிப்பதில்லை. அதையெல்லாம் பார்த்தீர்களென்றால் வன்முறையை யார் வளர்க்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
பதிவுகளில் இது இல்லை ஆனாலும் வேறும் பலரின் பதிவுகளில் காணப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் முறையான கருத்துப் பகிர்வுக்கு வழிவகுக்காது மாறாக வன்முறையையே வளர்க்கும்.
தாங்கள் ஒருபதிவில் "நாலு பதிவெழுதியும் இதுதான் இந்துமதம் என்று தெரிவிக்க முடியவில்லை" என்று கூறியிருந்தீர்கள் நாலு பதிவில்லை நாலாயிரம் கோடி பதிவெழுதினாலும் இந்துமதத்தின் பேருண்மைகளை எளிதில் விளக்கி விட முடியாது.உண்மைதான். இதை நான் ஒப்புக் கொள்கிறேன். இஸ்லாத்தின் பேருண்மைகளைப் பற்றி ஓரிரு பதிவுகளை படித்துவிட்டு மட்டும் முடிவு செய்ய முடியாது என்பதையும் தங்களின் அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு இஸ்லாத்தைப் பற்றி 'அது சரியல்ல, இது தவறு' என்றெல்லாம் 'கருத்து' சொல்வது அடிமுட்டாள்தனம் என்பதையும் எழில் போன்றவர்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் நான் அப்படி சொல்லியிருந்தேன்.
நான்கூட பதிவை தொடங்கும் போது எந்த மதத்தையும் விமர்சிக்க கூடாது என்றும், எனது பதிவு முற்றிலுமாக இந்துமதத்தை விளக்க மட்டுமே பயன் பட வேண்டும் என்றும் தான் கருதினேன். ஆனால் இன்று தங்களின் பதிவுகளுக்கு எதிர்ப்பதிவு எழுதும் நிலைக்கு வந்துவிட்டது. அத்துடன் தங்களின் ஏனைய இந்துமதம் பற்றிய பதிவுகளுக்கு என்னிடம் இருந்து எதிர்ப்பதிவு வந்தே தீரும். ஆயினும் நமது கருத்துக்களே மோதவேண்டும், தவிர நாம் அல்ல என்பதையும் மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் சொல்வதைப்போல் நானும் இந்துமதம் பற்றிய தவறான கருத்துக்களை தாங்கி வரும் பதிவுகளுக்கு என்னிடம் இருந்தும் எதிர்ப்பதிவு வரும் என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். என்வகையில் தங்கள் கருத்துக்களே எனக்கு எதிர் என்பதையும் தாங்கள் அல்ல என்பதையும், தாங்களும் இப்படியே கருத வேண்டும் என்றும் கருதுகிறேன்.நன்றி
தாராளமாக எழுதுங்கள். உங்களைப் போல இந்து மதப் பற்றாளர்கள் இந்து மதத்தை பற்றி அதிகம் எழுத வேண்டும் என்பதைத்தான் நானும் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் இந்து மதத்தைப் பற்றி எழுதுவதால் எழில் போன்றவர்கள் பொறுப்பிலிருந்து விலகி விட்டதாக பொருளல்ல. அவர் இஸ்லாத்தை பற்றி சொன்ன கருத்துகளுக்கு பதிலாகத்தான் நான் இந்து மதத்தைப் பற்றிய கேள்விகளை அவர் முன் வைத்தேன். அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.
9 comments:
அருமை!!
HINDHUஅவர்கள் நிஜமாகவே உணர்ந்துக்கொள்ள விரும்பினால் இந்த பதில் போதுமானது!
//HINDHUஅவர்கள் நிஜமாகவே உணர்ந்துக்கொள்ள விரும்பினால் இந்த பதில் போதுமானது! //
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பாபு அவர்களே.
பொறுப்பான பதில்கள் சிறப்பான விளக்கங்கள்.
இருவருமே வாழ்த்துக்குரியவர்கள்.
அருமையான கருத்துக்கள் சகோதரரே. நண்பர் HINDHU அவர்கள் இதற்கு அறிவுபூர்வமாக, பொருத்தமாக பதிலலிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
//சுல்தான் said...
பொறுப்பான பதில்கள் சிறப்பான விளக்கங்கள்.
இருவருமே வாழ்த்துக்குரியவர்கள்.//
நன்றி சுல்தான் உங்கள் பின்னூட்டத்திற்கு. சரி..நீங்க எந்த இருவரை சொல்றீங்க? //எழில், நேசகுமார் போன்றவர்களை..// இல்லையே? :-)
//வளர்பிறை said...
அருமையான கருத்துக்கள் சகோதரரே. நண்பர் HINDHU அவர்கள் இதற்கு அறிவுபூர்வமாக, பொருத்தமாக பதிலலிப்பார் என்று எதிர்பார்க்கலாம்//
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி வளர்பிறை அவர்களே.
:)))))))))))))))))))))))))))
ஐயா மரைகாயர் மற்றும் எனது பதிலை ஆவலுடன் எதிர்ப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
////இந்து மதத்தை பற்றிய உங்கள் கேள்விகள்எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை.//
உங்களுக்கு வருத்தம் ஏற்படாது என்பது எனக்கு மிக நன்றாக தெரியும். இந்து மதத்தைப் பற்றி ஓரளவுக்காவது அறிந்தவர்களுக்கு, இந்து மதத்தின் மீது பற்றுதல் உள்ளவர்களுக்குத்தான் அது ஏற்படும். நான் முன்பே சொன்ன மாதிரி,// என்று சொல்லியிருந்தீர்கள்
உண்மைதான் இந்து மதத்தின் மீது எமக்கு பற்று கிடையாதுதான். இந்துமதமும் அதைத்தான் சொல்கிறது என் மனைவி, என்மகள், என் மதம் என்று எதன் மீதும் பற்று வைக்காதே அந்த இறைவனிடம் தவிர. தாங்கள் கூறியதில் எள்ளளவும் பிசகில்லை.
அடுத்து //இவர்களது நடவடிக்கைகள் வெளிப்படுத்தும் உண்மை என்ன தெரியுமா? 'நம் இந்து மதத்தில் உயர்வாக பேச ஒன்னுமேயில்லை. நாம் எப்பாடு பட்டாலும் அதை தூக்கி நிறுத்த
முடியாது. அதனால் இஸ்லாமை தாக்கி அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால்தான் நம் மதத்தை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும்' என்று இவர்கள் உள்மனதில் நம்புகிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மதத்தின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை இழந்து யிருக்கிறார்கள் இவர்கள் பாவம். //
இப்படி நீங்கள் தெரிவித்திருப்பதில் எள்ளளவும் உண்மையில்லை இது இந்து மதத்தை ஓரளவுக்கு தெரிந்து கொண்ட குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது. அப்படியிருக்க இந்து மதத்தை நன்கு அறிந்தவர் இப்படியெல்லம் எண்ணியிருக்க மாட்டார். ஏனென்றால் ஒரு தாய் தன் மகளைக் கொன்றுதான்தான் வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டாள்.
//ஆனால் ஒரு முஸ்லிம் பதிவரை மற்ற முஸ்லிம்கள் கண்டிப்பதைப் போல எழில், நேசகுமார் போன்றவர்களை பிற இந்துக்கள் கண்டிப்பதை நான் பார்க்கவில்லை.//
ஐயா நீங்கள் பர்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அது உண்மை அல்ல. நானே சில பதிவுகளில் கண்டித்திருக்கிறேன் அனானியாக யாருடைய எந்த பதிவு என்று சரியாக ஞாபகமில்லை.
எழில் ஐயா அவர்கள் தங்கள் வினாக்களுக்கு அளித்த பதில் இங்கே
இஸ்லாமிய கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கு முன் உங்கள் மதத்தில் உள்ள கேவலமான கொள்கைகளை சீர்திருத்தி முடித்து விட்டீர்களா?//
தங்களுக்கு இந்துமதத்தின் எந்த கொள்கைகள் கேவலமானதாக தெரிகின்றது?
இந்துமதமானது இஸ்லாம், கிருஸ்த்தவம், மற்றும் சில மதங்களைப்போல் வரலாற்று சிறப்பு மிக்க, சரித்திர புகழ் பெற்ற வரலாற்றுநாயகர்களினால் நிறுவப்பட்டது அன்று.அதனால் இந்துமதத்திற்கு திருக்குராண், பைபில் போன்ற ஒரே நிறுவனப்படுத்தப்பட்ட எந்த நூல்களும் கிடையாது. இதுவே இந்துமதத்தின் மிகப்பெரிய பலமாகும். தாங்கள் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளும் நூல்களை முலுமையாக ஆழ்ந்த கவணத்துடன் ஆராய்ந்து கற்றால் உங்களுக்கு உண்மை புலப்படும்
தங்களின் ஆதங்கம் எனக்கு புரிகின்றது. அதற்காக நான் வருந்துகிறேன். என்னுடைய பதிவில் நீங்கள் கூறுவது போல் கீழ்தரமான சொற்பிரயோகங்கள் இடம்பெறாது என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றேன்.
தங்களின் ஏனைய வினாக்களுக்கு பதில் தயாராகிக் கொண்டிருக்கிறது
இறைவனை கட்டுப்படுத்த முடியுமா ?
அன்பு HINDHU அவர்களே, உங்கள் பதிலுக்கு நன்றி. நான் எழில் அவர்களுக்காக பிரத்யேகமாக வைத்த சில கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்வதற்கு பதிலாக நீங்கள் முன்வந்து பதில் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கும் நன்றி.
//உங்களுக்கு வருத்தம் ஏற்படாது என்பது எனக்கு மிக நன்றாக தெரியும். //
இது நான் எழில் அவர்களிடம் சொன்னது.. அதற்கு நீங்கள் இப்படி பதிலளித்திருக்கிறீர்கள்.
//உண்மைதான் இந்து மதத்தின் மீது எமக்கு பற்று கிடையாதுதான்..//
எழில் அவர்களின் விதண்டாவாதங்களுக்கு பதிலாக நான் இந்து மதத்தை பற்றி விமரிசனம் வைத்தால், அதுவரை வலைப்பதிவு எழுதியிராத தாங்கள் முன்வந்து இந்து மதம் பற்றி விளக்கம் கொடுக்கிறீர்கள் அல்லவா, அதைத்தான் நான் இந்து மதத்தின் மீது உள்ள பற்று என்று சொன்னேன். இஸ்லாத்தைப் பற்றி குறை சொல்லத்தெரிந்த எழில் அவர்கள் என் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை அல்லவா, அதனால்தான் அவர் இந்து மதம் பற்றி கொஞ்சம் கூட அறியாதவர் என்றேன்.
//இஸ்லாமை தாக்கி அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தினால்தான் நம் மதத்தை ஓரளவுக்காவது காப்பாற்ற முடியும்' என்று இவர்கள் உள்மனதில் நம்புகிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மதத்தின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை இழந்து யிருக்கிறார்கள் இவர்கள் பாவம். //
இப்படி நீங்கள் தெரிவித்திருப்பதில் எள்ளளவும் உண்மையில்லை இது இந்து மதத்தை ஓரளவுக்கு தெரிந்து கொண்ட குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது. அப்படியிருக்க இந்து மதத்தை நன்கு அறிந்தவர் இப்படியெல்லம் எண்ணியிருக்க மாட்டார்.//
உங்களால் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் எழிலின் பதிவுகள் வெளிப்படுத்தும் அப்பட்டமான உண்மை இதுதான். தன் மதத்தின் மீது பற்று உள்ளவர் அதை உயர்த்தி பேசுவார். நீங்கள் எழுதிகிறீர்களே அது மாதிரி. தன் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்தான் மற்ற மதங்களை தாக்கினால்தான் தன் மதத்தை காப்பாற்ற முடியும் என்று செயல்படுவார். இதற்கு மிக சிறந்த உதாரணம்தான் நம் எழில் அவர்கள்.
//இஸ்லாமிய கொள்கைகள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கு முன் உங்கள் மதத்தில் உள்ள கேவலமான கொள்கைகளை சீர்திருத்தி முடித்து விட்டீர்களா?//
தங்களுக்கு இந்துமதத்தின் எந்த கொள்கைகள் கேவலமானதாக தெரிகின்றது? //
நான் இந்த கேள்வியை கேட்டது எழில் அவர்களிடம். என் கேள்விக்கு அவர் பதில் சொன்னாலே உங்கள் கேள்விக்கும் அதில் பதில் கிடைத்து விடும்.
//இந்துமதமானது இஸ்லாம், கிருஸ்த்தவம், மற்றும் சில மதங்களைப்போல் வரலாற்று சிறப்பு மிக்க, சரித்திர புகழ் பெற்ற வரலாற்றுநாயகர்களினால் நிறுவப்பட்டது அன்று.அதனால் இந்துமதத்திற்கு திருக்குராண், பைபில் போன்ற ஒரே நிறுவனப்படுத்தப்பட்ட எந்த நூல்களும் கிடையாது. இதுவே இந்துமதத்தின் மிகப்பெரிய பலமாகும். //
இது உங்கள் கருத்து. இதை நான் மறுத்து பேசப்போவதில்லை. இதையே இறைத்தூதருக்கு அடையாளம் கேட்ட எழில் சொல்லியிருந்தால் எனது பதில் வேறு விதமாக இருந்திருக்கும்.
நன்றி.
Post a Comment