Thursday, February 22, 2007

சாதி என்று ஒன்று உண்டென்றால் அது மனித சாதியாக இருக்கட்டும்!

சர்ப்பத்திற்கு மட்டுமா பிளவுண்ட நாக்கு?
சாதி சாதி என வேதம் ஓதும்
சாத்தான்களுக்கும் அது உண்டு!

"நாம எல்லாரும் ஒரே மதம்!
ஆனா என் கோவிலுக்கு நீ வராதே!
உன் சாமியை நான் பூஜிக்க மாட்டேன்!
ஆனா நாம எல்லாரும் ஒரே மதம்!"

அப்பாவிகள் மேல் ஏவிவிட
அடியாட்கள் வேணுமென்றால்
'எல்லாரும் நம்மவா'
'ஏறி அடியுங்கடா துலுக்கனை யெல்லாம்!'

காரியம் ஆன பிறகு
'சூத்திராள் நீ! நெருங்காதே என்னை!
சீ.. போடா அந்தாண்டை!'

சக மனிதனை மனிதனாக
மதிக்கத் தெரியாத இதுவெல்லாம்
மனிதத்தில் சேர்த்தியா என்ன?

வயிற்றுச் சிசுவை நெருப்பில் எறிந்து
'உலக சாதனை' புரிந்த
நர மாமிச பட்சினிகள்,
ரத்தக்கறை படிந்த தம் வாயால்
'பசுவைக் கொல்லாதே' என
போதனை செய்கின்றன.

பதுங்குகுழிகளிலிருந்து வெளிவருகின்றன
பசுத்தோல் போர்த்திய நரிகள்!
தேசப்பிதாவை கொன்று போட்டது
கொடியோர் கூட்டம் அன்று!
தேசபக்தி நாடகம் அரங்கேற்றம் இன்று!

அன்னியனிடம் மண்டியிட்டு
அபயம் தேடிய 'வீர' தலைவர்கள்!
அவர் தம் வழியில் தொண்டர்கள்!
மாற்றி எழுதப்படும் வரலாறுகள்!
என்றும் மாறாமல் பல்லிளிக்கும் பித்தளைகள்!

சமணன், பௌத்தம், நாட்டார் மதங்கள் எல்லாம்
உண்டு செரித்து ருசி கண்ட மலைப்பாம்பு
இஸ்லாமிய ரத்தம் கேட்டு ஏங்கி நிற்கிறது
தன் கோரப் பற்களை காட்டியவாறு!
ஆயிரம் ஆதிசேஷன்கள் சீறி வந்தாலும்
சூரியனை விழுங்க முடியுமா?

மமதை, தற்பெருமை, உன்மத்தம் தலைக்கேறி
மனிதம் மதிக்கத் தெரியா மாக்கள் - இவரா
எம் மார்க்கம் பற்றி பேசத் துணிந்தார்?

6 comments:

said...

இந்த தலைப்பை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே..

said...

வாங்க வாங்க மிதக்கும் வெளி சுகுணா திவாகர் அவர்களே, தலைப்பு காப்பி அடிச்சதுதாங்க! ஆனா கவிதை ஒரிஜினல்!

தலைப்பிற்கும், நான் இந்த கவிதை எழுத ஆதி மூல காரணமாக இருந்த அந்த கவிதைக்கும் நன்றி.

said...

//ஈரோட்டுக் கிழவர்
தெரியாமலா சொன்னார்,
'பாம்பை விட்டு விட்டு
பார்ப்பானை அடி' என்று?//

நண்பர் மரைக்காயர்,

பெரியார் எப்போது இந்த வார்த்தைகளை குறிப்பிட்டார் என சொல்ல இயலுமா? அறிந்து கொள்வதற்காக தான் :)

பெரியாரை வெறுக்க வைப்பதற்காக பார்ப்பனீயம் தன்னிரக்கம் பெற இந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாக எங்கோ படித்த நினைவு.

said...

வருகைக்கு நன்றி திரு அவர்களே, இந்த வார்த்தைகள் நான் முன்பு எங்கோ கேள்விப்பட்டதுதான். வேறொரு பதிவை படித்த தாக்கத்தில் உணர்ச்சிக் குவியலாய் வந்து விழுந்த சொற்றொடர் இது. பெரியார் அப்படி சொல்லியிருக்கவில்லை என்றால் அதை நீக்கிவிடுகிறேன்.

said...

"பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்பானை முதலில் அடித்துக் கொல்" என்று பெரியார் கூறியதாக சில மைக் மன்னர்கள் (ஆவடி மனோகரன், தீப்பொறி ஆறுமுகம், பழனி பாபா ...) முரசு கொட்டி இருக்கின்றனர். ஆனால் பெரியாருடைய பேச்சிலோ எழுத்திலோ இந்தப் 'பொன்மொழி' எங்கும் காணக் கிடைக்கவில்லை.

said...

சுட்டிக் காட்டியதற்கு நன்றி திரு மற்றும் அழகு அவர்களே. அந்த வரிகளை நீக்கி விட்டேன்.