நீலகண்டன் கேட்ட ஜல்லி!
நண்பர் நீலகண்டன் சவூதி அரேபியா பற்றி ஒரு பதிவு எழுதி 'மிதந்து கொண்டிருக்கிற வெளி முதல் சுவனத்து ப்ரியர் வரை மரக்காயர் முதல் இறைநேச வசை வரைக்குமாக சமாளிப்பு ஜல்லியடிகள் சமத்துவ முலாம் பூசி வரும்' என்பதாக அழைப்பு விடுத்திருந்தார். ஒரு விஷயத்தைப் பத்தி மத்தவங்க கருத்து சொல்றதுக்கு முன்னாடியே அதை 'ஜல்லியடிகள்' என்று முலாம் பூசுறதுல ஒரு சூட்சுமம் இருக்கிறது. வர்ற பதில் நெத்தியடியா இருந்தால்கூட 'ஹி..ஹி.. இதத்தான் நான் ஜல்லியடின்னு முன்னமே சொன்னேன்' அப்படின்னு சமாளிச்சுக்கலாம் பாருங்க!
சரி போகட்டும்.. நாம விஷயத்துக்கு வருவோம். நீலகண்டனோட சந்தேகங்களை ஒன்னொன்னா பார்ப்போம்.
//இரு மசூதிகளின் பொறுப்பாளன் எனும் புகழ்மிக்க அரபு பட்டத்தை சுமந்து கொண்டிருப்பவர் சவூதியின் பட்டத்து அரசர். அந்த குலத்தின் சந்ததிகளுக்கு மட்டுமே உரிய பட்டம் இது. 'இஸ்லாமில் சமத்துவம் உண்டே அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆனால் அவர் இஸ்லாமிய அறிஞர்களிலேயே பேரறிஞரானால் அந்த பட்டம் இவருக்கு அளிக்கப்படுமா?' என்றால் 'இல்லை' என்கிற பதிலுக்கு.. - நீலகண்டன்//இந்திய அரசியல் சாசன சட்டத்தை நல்லா கரைச்சு குடிச்ச ஒரு பேரறிஞர் இருக்கிறார். அவருக்கு 'நாடாளுமன்ற சபாநாயகர்' என்ற பட்டம் அளிக்கப்படுமா? என்று யாராவது கேட்டால் நமக்கு சிரிப்புதான் வரும். ஏனென்றால் 'சபாநாயகர்' என்பது ஒரு பட்டமல்ல.. அது ஒரு பதவி என்பது பிரைமரி படிக்கிற பிள்ளைகளுக்கு கூட தெரிஞ்ச விஷயம். இப்படிப்பட்ட ஒரு கேள்வியைத்தான் நம்ம நண்பர் நீலகண்டர் கேட்டிருக்கிறார். சவூதி அரேபியாவின் மன்னராக இருப்பவர் இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் பதவி வகிப்பார். இது அவரது மார்க்க அறிவை வைத்து கொடுக்கப்படும் பட்டமல்ல.
அவர் சவூதி அரேபியா என்ற நாட்டின் மன்னரே தவிர, உலக முஸ்லிம்கள் அனைவரின் தலைவரல்ல. கிருஸ்துவர்களுக்கு போப் இருப்பது போல முஸ்லிம்களுக்கும் ஒரு உலகளாவிய தலைவர் இருந்து, அந்த பதவிக்கு ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்த மார்க்க அறிஞர் வர முடியுமா என்று நீலகண்டன் கேட்டிருந்தால் அதில் நியாயம் உண்டு. அப்படி ஒரு பதவி இருந்தால் அது இனம், குலம் சாராத, தகுதியை மட்டும் அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இதுதான் இஸ்லாம் காட்டும் சமத்துவம்.
//"The system of government in the Kingdom of Saudi Arabia is that of a monarchy....Citizens are to pay allegiance to the King in accordance with the holy Koran and the tradition of the Prophet, in submission and obedience, in times of ease and difficulty, fortune and adversity." என்று சவூதி அரசாங்கம் சொல்லுகிற வரிகள் குரானை அவமதிப்பதாகாதா? - நீலகண்டன்//'நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்குக் கட்டுப்படுங்கள். இத்தூதரான முஹம்மதுக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.'-(குர்ஆன் 4 : 59)
முஸ்லிம்கள் தேசப்பற்றுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் நாட்டுத்தலைவருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் இறைவனே கட்டளையிடுவதற்கு ஒரு ஆணித்தரமான ஆதாரம் இந்த திருமறை வசனம். நீலகண்டன் சுட்டிக் காட்டியிருக்கும் சவூதி அரசாங்கத்தின் கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. தலைமைக்கு கட்டுப்படுவது என்பதில் ஒரு கண்டிஷன் இருக்கிறது. தலைவர் காட்டும் வழி மார்க்கத்திற்கு முரண்படாததாக இருக்க வேண்டும்.
அதுவும் தவிர, சவுதி அரசாங்கத்தின் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் சவூதி குடிமக்கள்தானே? எல்லா முஸ்லிம்களும் அல்லவே?
//சவூதி அரேபியா போல சமத்துவத்தை பேணும் சொர்க்கத்துக்கு....இப்படியெல்லாம் யார் சொன்னாங்க?
இஸ்லாமிய சுவர்க்கத்தின் மண்ணுலக மாடலை... //
//இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக அரபு நாடுகளுக்கு ஏராளமான பெண்கள் செல்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டபடி சம்பளம் கொடுப்பதில்லை. இது தவிர பாலியல் கொடுமை உட்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். -நீலகண்டன்//
புனிதத் தலங்கள் இருக்கும் நாடு என்பதால் சவூதி அரேபியா முஸ்லிம்களுக்கு புனித பூமி. அதற்காக அங்கே இருப்பவர்களெல்லாம் புனிதர்களாகி விடுவார்களா? எந்த சமுதாயமாக இருந்தாலும் அதில் சில கேடுகெட்ட கயவர்களும் கலந்துதான் இருப்பார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடந்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா? துறவி என்ற போர்வையில் சிறு வயது சினிமா நடிகை முதல் வயதான பெண் எழுத்தாளர் வரை தனது காம சபலத்தை அடக்க முடியாமல் கைவைத்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நின்றவர்களை மறக்கத்தான் முடியுமா?
சவூதியின் கயவர்களுக்கும் காஞ்சிபுர _ _ _ _ களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? சவூதியில் பாலியல் குற்றம் செய்தவன் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டால் அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். இதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை. ஆனால் காஞ்சிபுரத்திலோ, இந்த குற்றவாளிகள் இன்னும் 'நடமாடும் கடவுள்'களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் கோடிக்கணக்கான இந்துக்களுக்கும் இந்திய திருநாட்டிற்குமே பெருத்த அவமானம்!
இனி, நீலகண்டனுக்கும் அவரது சகாக்களுக்கும் என்னுடைய கேள்விகள் சில. ஜோரா உங்க ஜல்லிகளை கொண்டு வந்து கொட்டுங்க பார்ப்போம்!
1. இந்து ஒற்றுமை, இந்து தர்மம், என்றெல்லாம் வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் காஞ்சிபுர மடத்தை இழுத்து மூட வேணாம், இப்ப இருக்குற மட அதிபதிகளை விரட்டிவிட்டு ஒரு தலித்தை சங்கராச்சியாரா நியமிக்கணும்னு கோரிக்கை எழுப்பவாவது வக்கு இருக்கிறதா?
2. RSS கூட்டத்துக்கு தலைவரா நீலநிற கண்களை உடைய ஒரு 'சித்பவன்' பிராமணர் மட்டும்தான் வரமுடியுமாமே? ஏன் அப்படி? சித்பவன் பிராமணர்கள் என்றால் யார்? பிராமணர்களிலேயே இவங்க உசத்தியா? RSS கூட்டத்திற்கு யாராவது ஓரு தலித் இதுவரை தலைவரா வந்திருக்கிறாரா? இல்லையென்றால் ஏன்?
3. ஏமாறதவன் என்பவர் சொல்கிறார், "நான் நம் இணைய இஸ்லாமிய சகோதரர்களை கெஞ்சி கேட்பது இதுதான். அறியாமல் நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்." இவர் தன் வருங்கால சந்ததிகளை எந்த படுகுழியில் தள்ளியிருக்கிறார்? அது இஸ்லாத்தை விட எந்த வகையில் உயர்ந்தது? இவரோட கொள்கை வெளியில கவுரவமா சொல்லிக்கிற மாதிரி கொள்கையா இருந்தா தைரியமா அதைப் பத்தி சொல்லலாமே?