பர்தா எனக்கு சுதந்திர உணர்வு அளிக்கிறது - கமலா சுரையா
"The purdah makes me feel more liberal" என்று சொன்னவர் பிரபல மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் என்கிற சுரையா. Rediff.com-ல் ஒரு பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கமலா சுரையா 1999-ல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது, தனது மதமாற்றத்திற்கு முக்கிய காரணம் முஸ்லிம் பெண்களின் பர்தா முறைதான் என்று குறிப்பிட்டார்.
வெறும் வாய்வார்த்தையாக அல்லாமல் இன்றளவும் பர்தா முறையை கடைப்பிடித்து வருகிறார் சுரையா. இவரை யாரும் வாள் முனையிலோ அரபு நாட்டு பணத்தை காட்டி ஆசை காட்டியோ மதம் மாற்றவில்லை.
அவரது பேட்டியிலிருந்து ஒரு பகுதி:
Q: Has Islam restricted you?
A: I chose the religion out of my convictions and therefore I am ready to work within the constraints and restrictions of Islam. Religion cannot chain one's creativity. Islam is tolerant. Allah is the god of love and forgiveness. My mind tells me that Allah has forgiven me my sins. People ask me why a liberated woman like me chose the purdah. But I tell you, the purdah makes me feel more liberal. Because when you wear a purdah you can travel anywhere in the world and you feel safe.
Nobody is going to make any disparaging remarks against a purdah-clad woman because they are always afraid of Muslim rage. Behind every purdah-clad Muslim woman, some Mussalman is lurking with a dagger to ensure her safety. So purdah is always safe. It protects you. It also keeps the dust, the heat and insects away from your body.
அவரது முழு பேட்டியும் படிக்க இங்கே சொடுக்கவும்.
பின் குறிப்பு: பலாப்பழம் கரடுமுரடாக பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னாராம். அவர் சொன்னதிலும் தவறில்லை. ஆனால் அவர் பலாப்பழத்தின் சுவையை அறியாதவர். அதன் சுவையை அனுபவித்து அறிந்த இன்னொருவரோ அதை சிலாகித்து கூறுகிறார். சிந்திக்கத் தெரிந்தவர்கள் இரண்டாமவரின் கூற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
15 comments:
மரைக்காயர் அய்யா,
ஏன் நீங்களும் பர்தா போட்டுக் கொண்டு மேலும் சுதந்திரமா இருக்கக் கூடாது?கரடு முரடான பலாப் பழத் தோல் போல் பர்தா, இருந்தாலும் ,உள்ளுக்குள் சுவையாக மேலும் இனிப்பாக,நீங்கள் இருப்பீர்கள் அல்லவா?யோசித்துப் பார்த்து முடிவு எடுங்கய்யா.
பாலா
பாலா அய்யா,
எப்படி அய்யா இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க? மாசத்துல 'அந்த' மூணு நாள் நீங்களும் வீட்டுக்கு தூரம்தானா?
//Behind every purdah-clad Muslim woman, some Mussalman is lurking with a dagger to ensure her safety.//
]
is this a very positive and appreciative comment?
//I am ready to work within the constraints and restrictions of Islam//
Islam is having many constraints and restrictions.Thatmeans you dont have freedom. So this itself is self explanatory for the contradictory in Islam.
//Behind every purdah-clad Muslim woman, some Mussalman is lurking with a dagger to ensure her safety.//
]
is this a very positive and appreciative comment? //
வாங்க தருமி அய்யா. மொத மொதலா நம்ம பதிவு பக்கம் வர்றீங்க. வருகைக்கு நன்றி.
சுரையா அவர்கள் இப்படி சொல்லியிருப்பதை நானும் கவனித்தேன். பர்தா அணிந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும் dagger வைத்துக் கொண்டு ஒரு முஸல்மான் பாதுகாப்பிற்கு செல்வதெல்லாம் நடைமுறை சாத்தியமல்ல. ஆனால் அப்படி ஒருவர் வந்தால் அந்தப் பெண் எப்படி பாதுகாப்பாக உணர்வாரோ, அதே உணர்வு பர்தா அணிந்து செல்லும்போது கிடைக்கிறது என சுரையா சொல்லவருவதாக நினைக்கிறேன்.
//Islam is having many constraints and restrictions.Thatmeans you dont have freedom. So this itself is self explanatory for the contradictory in Islam.//
கட்டுப்பாடுகள் இருப்பதால் சுதந்திரமில்லை என்று அர்த்தமில்லை. முரண்பாடுகள் இருப்பதாகவும் பொருள் கொள்ள இடமில்லை.
ஆம். இஸ்லாத்தில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உதாரணமாக
- முஸ்லிம் வட்டி வாங்க முடியாது
- பொய் சொல்ல முடியாது
- மது அருந்த முடியாது
- பன்றிக்கறி சாப்பிட முடியாது
- பெண்கள் உடல்பாகங்கள் வெளியில் தெரியும்படி உடை அணிய முடியாது
- ஆண்களுக்கும் உடை விஷயத்தில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் விருப்பத்தைத்தான் சுரையா சொல்லியிருக்கிறார்.
http://arvindneela.blogspot.com/2007/01/blog-post_25.html//
அரவிந்தனின் பதிவில் உள்ள வீடியோக்களை பார்த்தால் உண்மையில் இஸ்லாம் ஒரு இனியமார்கமாக தெரியவில்லையே. ( அரவிந்தன் பதிவு செய்த வீடியோக்கள் இல்லை அவை. உடனே அவரை போட்டு தாக்காதீர்கள். அல்லா மீது ஆணை நடுநிலைமையோடு யோசித்து பதில் தரவும். )
இதை வெளியிடமாட்டீர்கள் என்பது தெரியும். இருந்தும் கேட்கிறேன்
அரேபிய காலநிலைக்கும், நபிகளின் காலத்தில் பெண்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும் பர்தா போட சொன்னதா? இல்லை எல்லா காலத்திற்கும், எங்கும் இது பொருந்துமா? 48C வெயிலடிக்கிற வேளையும் கருப்பு துணியால் உடல் முழுவதும் மறைத்து செல் என நிர்பந்தம் செய்வது என்ன நியாயம்? பெண்களுக்கு ஆண்களால் பிரச்சனை அதிலிருந்து காக்கவே பர்தா என்றால் தண்டனை ஆண்களுக்கு தானே அவசியம்?
காலவளர்ச்சியில் உரிமைகளை மதங்கள் 'சடங்குகள்', 'சம்பிரதாயங்கள்' பெயரில் அடைத்து வைப்பது சரியல்ல. கிழக்காசியாவில் இஸ்லாமிய பெண்கள் நிலைக்கும், அரேபிய நாடுகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. இந்தியர்கள் அரேபிய நாடுகளின் கலாச்சாரத்தை எடுத்துக்கொள்வதாக தான் தெரிகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் பகுதி இஸ்லாமிய பெண்கள் சேலை தலைப்பால் தலையில் மூடிச்செல்வது வழக்கம். ஆண்கள் அரேபிய வேலைகளுக்கு சென்று வரும் போது கருப்பு கவுன் வாங்கி வந்து பர்தா பரவலாகியது. அதுவரை பர்தா பரவலாக இல்லை, மிகச் சிலரே அணிந்து வந்தனர்.
ஆண்களை போல முடிவெடுத்து, விரும்பி ஆடையணியும் உரிமை பெண்களுக்கும் உண்டு. பர்தா விச்சயத்தில் ஒருவித நிர்பந்தமே செயலாகிறது!
ஆம். இஸ்லாத்தில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உதாரணமாக
- முஸ்லிம் வட்டி வாங்க முடியாது
Vadi Katina Poi
- பொய் சொல்ல முடியாது
Allah only knows
- மது அருந்த முடியாது
Great Joke
- பன்றிக்கறி சாப்பிட முடியாது
Taste differs
- பெண்கள் உடல்பாகங்கள் வெளியில் தெரியும்படி உடை அணிய முடியாது
Katti pudi, Katti pudida pakkaliyae..She is a muslim..
- ஆண்களுக்கும் உடை விஷயத்தில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
Who cares!
//அரவிந்தனின் பதிவில் உள்ள வீடியோக்களை பார்த்தால்... அல்லா மீது ஆணை நடுநிலைமையோடு யோசித்து பதில் தரவும். ) இதை வெளியிடமாட்டீர்கள் என்பது தெரியும். இருந்தும் கேட்கிறேன்//
உங்கள் வேண்டுகோளுக்காக ஒரு சிறப்பு பதிவு.
http://maricair.blogspot.com/2007/01/blog-post_116980489535012024.html
//- முஸ்லிம் வட்டி வாங்க முடியாது
Vadi Katina Poi
- பொய் சொல்ல முடியாது
Allah only knows
- மது அருந்த முடியாது
Great Joke
- பன்றிக்கறி சாப்பிட முடியாது
Taste differs
- பெண்கள் உடல்பாகங்கள் வெளியில் தெரியும்படி உடை அணிய முடியாது
Katti pudi, Katti pudida pakkaliyae..She is a muslim..
- ஆண்களுக்கும் உடை விஷயத்தில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
Who cares! //
கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் அதை மீற விரும்புபவர்கள் மீறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.
ஐயா மரைக்காயரே தங்களின் வினாக்களிற்காண விடைகளை இங்கே எழுதியிருக்கேன்
வந்து, பார்த்து, தெளிந்து செல்க.
திரு அவர்களே, உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.
//அரேபிய காலநிலைக்கும், நபிகளின் காலத்தில் பெண்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும் பர்தா போட சொன்னதா? இல்லை எல்லா காலத்திற்கும், எங்கும் இது பொருந்துமா? 48C வெயிலடிக்கிற வேளையும் கருப்பு துணியால் உடல் முழுவதும் மறைத்து செல் என நிர்பந்தம் செய்வது என்ன நியாயம்? //
தெளிவா சொல்லணும்னா 'பர்தா' என்றொரு ஆடை அதுவும் கருப்புக் கலரில்தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் எதுவும் கிடையாது. பெண்கள் முகம், கை தவிர மற்ற பாகங்களை மறைப்பது போல உடை அணிய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை.
அரபு நாடுகளில் பெரும்பாலும் கருப்பு கலரில் பர்தா அணிகிறார்கள். கிழக்காசிய நாடுகளில் முஸ்லிம் பெண்களின் சாதாரண உடையே இஸ்லாமிய வழிமுறைக்கு உட்பட்டதாக இருப்பதால் அவர்கள் தனியாக பர்தா எதையும் அணிவதில்லை. இந்தியாவில் வட மாநிலங்களில் வேறு விதமாகவும் தென்மாநிலங்களில் வேறு விதமாகவும் பர்தா அணிகிறார்கள்.
'48C வெயிலடிக்கிற வேளையும் கருப்பு துணியால் உடல் முழுவதும் மறைத்து செல்' என யார் நிர்பந்தம் செய்கிறார்கள் என்பதை திரு அவர்கள் தெரிவித்தால் அது நியாயமா இல்லையா என்பதை முடிவு செய்யலாம்.
//பெண்களுக்கு ஆண்களால் பிரச்சனை அதிலிருந்து காக்கவே பர்தா என்றால் தண்டனை ஆண்களுக்கு தானே அவசியம்? //
பெண்களை ஆண்களிடமிருந்து காப்பதற்காகத்தான் பர்தா என்று பார்ப்பது மிக மிக மிக குறுகிய கண்ணோட்டம். பெண்களுக்கு (ஆண்களுக்கும் கூட..) இஸ்லாம் ஏன் கண்ணியமான ஆடைகளை பரிந்துரைக்கிறது என்பதற்கு சில உதாரணங்களை வேண்டுமானால் நாம் சுட்டிக் காட்டலாம். உங்களுக்கு நேரமும் ஆர்வமும் இருந்தால் இந்த வலைத்தளத்திற்கு சென்று படித்துப் பாருங்கள்.
பெண் விடுதலை
//காலவளர்ச்சியில் உரிமைகளை மதங்கள் 'சடங்குகள்', 'சம்பிரதாயங்கள்' பெயரில் அடைத்து வைப்பது சரியல்ல.//
இன்னொரு தவறான கண்ணோட்டம்.
//கிழக்காசியாவில் இஸ்லாமிய பெண்கள் நிலைக்கும், அரேபிய நாடுகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. இந்தியர்கள் அரேபிய நாடுகளின் கலாச்சாரத்தை எடுத்துக்கொள்வதாக தான் தெரிகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் பகுதி இஸ்லாமிய பெண்கள் சேலை தலைப்பால் தலையில் மூடிச்செல்வது வழக்கம். ஆண்கள் அரேபிய வேலைகளுக்கு சென்று வரும் போது கருப்பு கவுன் வாங்கி வந்து பர்தா பரவலாகியது. அதுவரை பர்தா பரவலாக இல்லை, மிகச் சிலரே அணிந்து வந்தனர். //
தமிழகத்தில் இன்று கருப்பு பர்தா பரவலாகியதற்கு அரேபியா ரிட்டர்ன் ஆண்கள் மட்டும் காரணமல்ல. முன்பு அணிந்திருந்த பர்தாக்களை விட இந்த கருப்பு பர்தா சவுகரியமாக இருப்பதாக முஸ்லிம் பெண்களே உணர்வதுதான் முக்கிய காரணம்.
//ஆண்களை போல முடிவெடுத்து, விரும்பி ஆடையணியும் உரிமை பெண்களுக்கும் உண்டு. பர்தா விச்சயத்தில் ஒருவித நிர்பந்தமே செயலாகிறது!//
நிர்ப்பந்தம்..??? கவிஞர் சல்மா, புதுக்கோட்டை ஷரிபா, பதர் சையத், முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி இவர்களெல்லாம் பர்தா அணிந்திருக்கவில்லை. இவர்களிடம் ஏன் அந்த 'நிர்ப்பந்தம்' செல்லுபடியாகவில்லை? துணிச்சலான, முற்போக்கு எண்ணம் உடைய கமலாதாஸ் அவர்கள் சுரையாவாக மாறிய போது 'பர்தா' அணியும்படி அவரை யார் நிர்ப்பந்தித்தார்கள்? தலிபான்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டதும் இஸ்லாத்தை தழுவிய யுவான் ரிட்லியை பர்தா அணியும்படி யார் நிர்ப்பந்தித்தார்கள்?
விரும்பியவர்கள் பர்தா அணிகிறார்கள் (உ.ம் கமலா சுரையா, யுவான் ரிட்லி) விரும்பாதவர்கள் அதை அணிவதில்லை (உ.ம் கவிஞர் சல்மா, பதர் சையத்) இதில் நிர்ப்பந்தம் எங்கிருந்து வந்தது?
அதெல்லாம் இருக்கட்டும், முஸ்லிம் பெண்களுக்கான ஒரு விவகாரத்தில் இந்துத்துவாக்களுக்கு அப்படி என்ன அக்கறை?
// தெளிவா சொல்லணும்னா 'பர்தா' என்றொரு ஆடை அதுவும் கருப்புக் கலரில்தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் எதுவும் கிடையாது. பெண்கள் முகம், கை தவிர மற்ற பாகங்களை மறைப்பது போல உடை அணிய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறை.
//
// தமிழகத்தில் இன்று கருப்பு பர்தா பரவலாகியதற்கு அரேபியா ரிட்டர்ன் ஆண்கள் மட்டும் காரணமல்ல. முன்பு அணிந்திருந்த பர்தாக்களை விட இந்த கருப்பு பர்தா சவுகரியமாக இருப்பதாக முஸ்லிம் பெண்களே உணர்வதுதான் முக்கிய காரணம்.
//
நல்ல கருத்து.
//விரும்பியவர்கள் பர்தா அணிகிறார்கள் (உ.ம் கமலா சுரையா, யுவான் ரிட்லி) விரும்பாதவர்கள் அதை அணிவதில்லை (உ.ம் கவிஞர் சல்மா, பதர் சையத்) இதில் நிர்ப்பந்தம் எங்கிருந்து வந்தது?
அதெல்லாம் இருக்கட்டும், முஸ்லிம் பெண்களுக்கான ஒரு விவகாரத்தில் இந்துத்துவாக்களுக்கு அப்படி என்ன அக்கறை?
//
நல்ல கேள்வி மரைக்காயார் அவர்களே. சம்பந்தப்பட்ட முஸ்லீம் பெண்களின் பிரச்சினை இது. அவர்கள் அதில் திருப்தியும், பாதுகாப்பு உணர்வும் பெரும்போது மற்றவர்கள் கருத்து தேவையற்றது. அதுவும் குஜராத்தில் முஸ்லீம் பெண்களின் கற்பை குறிவைத்து சூறையாடிய இந்துத்துவாக்களுக்கு அவசியமற்றது.
நல்ல பதிவு.
பர்தா பற்றி இந்துத்துவா சக்திகள் பேசுவது நீலிக்கண்ணீரே என்பதை கமலா சுரையாவின் வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன.
ஆண்களுக்கும் உடை உடுத்துவதில் இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கத்தான் செய்கிறது என்பதை 'இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள்' தம் வசதிக்காக மறைத்துப் பேசுகிறார்கள்.
திரு. போன்ற சகோதர உள்ளங்களின் கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில் நன்றாக உள்ளது.
""விரும்பியவர்கள் பர்தா அணிகிறார்கள் (உ.ம் கமலா சுரையா, யுவான் ரிட்லி) விரும்பாதவர்கள் அதை அணிவதில்லை (உ.ம் கவிஞர் சல்மா, பதர் சையத்) இதில் நிர்ப்பந்தம் எங்கிருந்து வந்தது?"" - சரியான கருத்து
Post a Comment