எந்த இந்து மதத்தைச் சொல்கிறீர்கள்? - 2ம் பாகம்
சகோதரர் எழில் என்னுடைய 'கதை கதையாம் காரணமாம்' பதிவுக்கு பதில் பதிவு எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. என்னுடைய எந்த இந்து மதத்தைச் சொல்கிறீர்கள்? 1ம் பாகத்தில் கேட்ட கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுவரை மூன்றோ நான்கோ பதிவுகள் அவர் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் எனது கேள்விகளுக்கு பதில் கிடைத்திருக்கிறதா?
எனது கேள்விகள்:
1. கடவுள் யார்? அல்லது யாவர்?
இந்தக் கேள்விக்கு எழில் சொன்ன பதில்கள்:
கடவுள் யார் என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்பட்சத்தில் அது தனி கேள்வி. அதற்கான விடையை ஒருவராலும் அளிக்க முடியாது. விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர். கடவுள் தன்னிடம் வந்து பேசினார் என்று கூறுபவர்களிடம் கடவுள் பேசவில்லை. இறையை கண்டவர்கள் அதனை பேசமாட்டார்கள். இறை என்பது விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. விளக்கத்துக்கு அப்பாற் பட்டதுஎன்பதே விளக்கமாகும்போது, விளக்கத்துக்குள்ளும் அடங்கியது.அய்யா, கடவுளை கொண்டு வந்து என் முன்னே நிறுத்துங்கள் என்று நான் கேட்கவில்லை. கடவுளை define பண்ணுங்கள் என்றும் நான் கேட்கவில்லை. இந்து மதத்தினர் வணங்கும் கடவுள்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்? அந்தப் பெயரைத்தான் நான் கேட்டேன். அந்த கடவுள்களின் தன்மை என்ன? கடவுள் ஒருவர் என்றால் அதற்கு விளக்கம் தேவையில்லை. பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒரு கடவுள் மற்றவரிடமிருந்து எப்படி வித்தியாசப் படுகிறார்கள்? இந்தக் கேள்விதான் நான் கேட்டது.
கடவுள் யார் என்ற கேள்விக்கு ஒருவராலும் விடை அளிக்க முடியாது என்றால்,
பன்றி - வராகமூர்த்தி
நாய் - பைரவமூர்த்தி
மாடு - கோமாதா
யானை - கணபதி
சிங்கம் - நரசிம்மாவதாரம்
மீன் - மச்சாவதாரம்
முதலை - கூர்மாவதாரம்
பெண்பித்தன் - கிருஷ்ணாவதாரம்
குரங்கு - அனுமன்
சுடலைப் பித்தன் - சிவன்
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் - ஐயப்பன்
பாம்பு- நாகராஜன்
மண்டயோடுமாலை அணிந்து ரத்தம் குடிக்கும் காளி
வீச்சரிவாளுடன் நிற்கும் அய்யனார்
(நன்றி: வணங்காமுடி அய்யா)
இவர்களெல்லாம் யார்? இந்த கடவுள்களை வணங்குபவர்களெல்லாம் இந்துக்கள் இல்லையா? அவர்களின் மதம் இந்து மதம் இல்லையா? அதனால்தான் கேட்கிறேன்,
நீங்கள் எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?
2. ஆன்மீக வழிகாட்டிகள் யாவர்?
என்ற எனது அடுத்த கேள்விக்கு எழில் சொன்ன பதில்கள்:
அவர்கள் யார் என்றுதான் நான் கேட்டேன். நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஒரு காவி உடை இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் இந்து மதத்தில் சாமியாராகலாம். சாமியார் என்ற போர்வையில் போதை மருந்து கடத்தலாம், பெண்களை கற்பழிக்கலாம், அடியாள் வைத்து வேண்டாதவனை கொலை செய்யலாம், கருப்பு பணத்திற்கு பாதுகாவலராகலாம். திறமை இருந்தால் செல்வாக்கு வளர்த்துக் கொண்டு அரசியல் பண்ணலாம். அதிலும் Power Politics. இதுபோல போலி (ஆ)சாமிகளிடமிருந்து உங்கள் வீட்டு பெண்களை பாதுகாக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் எழில் சார்? இந்த (ஆ)சாமிகளெல்லாம் இந்துக்கள் இல்லையா? இந்த பெரியவா சின்னவா சொல்ற வியாக்கியானம் எல்லாம் இந்து மதத்துல சேர்த்தி இல்லையா?இந்த வீட்டுக்கு பெரிய மனுஷர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலம் காலமாக எழுதி வைத்திருக்கும் பல்வேறு ஆன்மீக புத்தகங்களும் அந்த ஆன்மீக புத்தகங்களிலிருந்து வியாக்கியானம் சொல்லும் கற்றறிந்தவர்களும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறார்கள்.
நீங்க சொல்ற பெரியவங்க வியாக்கியானம் சொல்றவங்களெல்லாம் வேற எந்த இந்து மதத்தை சேர்ந்தவங்க எழில் சார்?
3. எந்த வேதங்களை பின்பற்றுவது? என்று நான் கேட்டதற்கு எழில் சொன்னார்:
இந்த 4 வேதங்களின் அடிப்படையிலதான் இந்து மதம் அமைஞ்சிருக்குங்களா? எனக்கு தெரிஞ்சவரை அந்த காலத்துல நம்ம நாட்டு மன்னர்களை எல்லாம் ஏமாத்தி கெட்ட கனா கண்டா ஒரு ஊரை எழுதி கொடுக்கனும்னு மிரட்டுறதுக்குதான் இந்த 4 வேதமும் பயன்பட்டிருக்கு. இல்லீங்களா?ரிக், யஜூர் சாமம் அதர்வணம் ஆகிய வேதங்களும், நாலாயிர திவ்யபிரபந்தமும், திருவாசகமும், திருப்பாவையும் இன்று யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தங்கு தடையின்றி படிக்கக் கிடைக்கின்றன. அவற்றை படித்து உணரவும், ஆன்மீக உணர்வு பெறவும் இன்று எதுவும் தடையில்லை.
அப்புறம், திருவாசகத்தை வைத்து கோவிலில் அர்ச்சனை செய்ய பிராமணர்கள் எதிர்ப்பது ஏன்? அப்ப பிராமணர்களோட இந்து மதம் வேற, மத்தவாளோட இந்து மதம் வேற தானே?
இதுல, நீங்க எந்த இந்து மதத்தை சொல்றீங்க?
4. இந்து மதத்திற்கு புதிதாக வருபவர்கள் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்? என்ற எனது அடுத்த கேள்விக்கு எழில் சொன்னார்:
ஏன் இந்துமதத்தையும் ஜாதியையும் இணைத்து பார்க்கவேண்டும்? இந்துமதம் என்பது ஆன்மீகம். அது இறையை மனிதன் உணர அழைக்கிறது. மனுதர்மம், இந்திய அரசியலமைப்பு சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் போன்றது. அமெரிக்க அரசியலமைப்புச்கேட்க நல்லாத்தான் இருக்கு எழில் சார். ஆனால் நிஜம் இது இல்லையே! ஒரு தலித் இந்து கோவிலுக்கு சாமி கும்பிட போனால் இந்த பாழாப்போன மனுதர்மம்தானே அவனை கோவிலுக்கு உள்ளே போக விடாம தடுக்குது? மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது என்றால், நீங்கள் எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள் எழில் சார்?
சட்டத்தையும் கிறிஸ்துவத்தையும் போட்டு குழப்பிக்கொள்வது இல்லை. அது போல, மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.
உங்கள் மதத்தைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை சொல்றதுக்கு கூட உங்களுக்கு ஒரு 'கருத்து தியாகி' தேவைப்படுகிறார். நாலு பதிவெழுதியும் இன்னதுதான் உங்கள் மதம் என்பதை தெளிவாக சொல்லக்கூட உங்களுக்கு முடியவில்லை. உங்கள் மதத்தைப் பற்றியே சரியாக புரிந்து கொள்ளாத நீங்கள், இஸ்லாம் பற்றி குறை கூறுகிறீர்களா? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போகும் பாதை கோணல் என்று சொல்ல வரலாமா?
மத்தவங்க மத விஷயத்துல மூக்கை நுழைக்குறதுக்கு முன்னாடி, போங்க சார், போய் உங்க மதத்தைப் பத்தி முதல்ல நல்லா தெரிஞ்சுக்குங்க! இந்த பதிவுல எழுதுன விஷயத்தையெல்லாம், யாராவது வெள்ளைக்காரங்க 'இந்தியான்னா பாம்பாட்டி நாடு'ன்னு நெனச்சுக்கிட்டு வருவாங்க, அவங்க கிட்ட போய் சொன்னீங்கன்னா நம்புவாங்க. ஆனா, நான் இந்தியாவுலேயே பிறந்து வளர்ந்து பல விதமான இந்துக்களோட பழகினவன்.
இஸ்லாம் மார்க்கம் தெளிவானது. அதில் எந்த குழப்பத்துக்கும் இடம் இல்லை. ஆனால் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதை முறையாக பின்பற்றாத முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குள் பிரச்னைகள் இருக்கின்றது. கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதெல்லாம் முஸ்லிம்களின் உள்விவகாரம். முஸ்லிம்களுக்குள் உள்ள பிரச்னைகளைப் பத்தி நாங்க பாத்துக்குறோம். எங்கள் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
முஸ்லிம்களுக்கு இருப்பதை விட பன்மடங்கு பிரச்னைகளும் குழப்பங்களும் இந்து மதத்தில் இருக்கிறது. சீர்திருத்த வேண்டிய விஷயங்கள், தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்றது. (சொல்லப் போனால் இந்து மதத்தில் உள்ளவர்களே வெட்கப்படும், பிற மதத்தவர் எள்ளி நகையாடும் இந்துமதத்தின் மூடநம்பிக்கைகளை ஓரளவுக்காவது ஒழிக்க முயற்சி எடுத்த தந்தை பெரியாரை இந்துமதத்தை சீர்திருத்த வந்த பெரிய மனுஷாளாக இந்துக்கள் கொண்டாட வேண்டும். அதுக்கு பதிலாக அவரது சிலையை உடைக்கிறாங்களே உங்க ஆட்கள்?) உங்களை மாதிரி உள்ளவர்கள் உங்கள் மதத்தில் இருக்கும் பிரச்னைகளை மறந்து விட்டு மற்ற மதத்தை குறை சொல்ல புறப்பட்டிருப்பதை ரொம்ப நாகரீகமான வார்த்தையில் சொல்லனும்னா 'அதிகப் பிரசங்கித்தனம்.'
எங்க வேலையை நாங்க பாக்குறோம். அது மாதிரி உங்க வேலையை நீங்க பாருங்க! என்ன சரியா?
8 comments:
அன்பரே,
இத்தனை ஓட்டைகள் இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் பெருமாள்கோவில் திண்ணைபோல் பூசி மெழுகி, இந்து மதத்திற்கு அழைத்திருக்கிறார். அனேகமாக 2006ஆம் ஆண்டின் நகைச்சுவைப் பதிவாக தேர்ந்தெடுத்து 'இந்துமத இலவசக் கொத்தனார்' பட்டத்தை வலைப்பூ அன்பர்களின் சார்பில் வழங்கக் கடவது.
மற்றபடி, இந்து மதம் என்பது சமீபக் கண்டுபிடிப்பு என்பதை அறியவும்! பார்ப்பன மதம், திராவிட மதம் என்ற இருவேறு நம்பிக்கைகள் மட்டுமே நம்நாட்டில் நடைமுறையில் உள்ளன;உழைக்கும் வர்க்கம், உறிஞ்சும் வர்க்கம் என்ற இருபிரிவுகள் போல்! உழைப்போர் எல்லாம் திராவிடர்; அல்லாதார் பார்ப்பனர் என்ற அடிப்படை வேறுபாட்டை உணர்ந்தால், எந்த இந்துவாக இருக்க எழில் அழைக்கிறார் என்பது ஓரளவு தெளிவாகும்.
அரே மரைக்காயர் பாய்,
உம்மை மாதிரியான அடிப்படைவாதிகளின் எதிர்வினைகளுக்குப் பயந்து எழில் என்பவர் இந்து மதத்தின் பேருண்மைகளைச் சொல்லப் பயந்து அரைகுறையாகப் பதிவு எழுதியுள்ளார். அதை வைத்துக் கொண்டு எள்ளுவது நியாயமா? எங்கள் மதத்தில் கடவுள் தூணிலும் உண்டு-துரும்பிலும் உண்டு. ராமசாமி நாயக்கரின் சிலைய உடைத்தைச் சொல்கிறீர்களே, ஏன் உங்கள் மத தலீபான்கள் புத்தர் சிலைகளை உடைக்கவில்லையா? அதுபோல்தான் இதுவும்.
இப்படிக்கு
G.ரமேஷ் குமார்
/பெரியார் சிலையை உடைத்த மதவெறி விஷமிகள், ஸ்ரீரங்கம் கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்றல்லவா சொல்லி உடைத்தார்கள்? /
முத்தமிழ்காவலர் கலைஞர் கருணாநிதி சொன்னதுபோல், புனிதம் காக்க சிலையை அகற்ற வேண்டுமென்றால் முதலில் கோவில் மாடங்களில் வீற்றிருக்கும் ஆபாசச் சிலைகளைத்தான் அகற்ற வேண்டும். இதற்கு அன்பர் G.ரமேஷ்குமார் என்ன சொல்கிறார்?
எத்தனை பாகம் போட்டுக் கேட்டாலும் பதில் வராத கேள்வி பாய் இது!
பொதுவா, முஸ்லிம்லாம் தேவையில்லாம மத்தவங்களப் பாத்து இப்படிக் கேக்கறதில்லயேன்னு நெனச்சேன். தேவையாத்தான் கேட்ருக்கீங்கன்னு இப்ப நல்லாப் புரியுது.
அந்தப் பக்கம் போய் பார்த்தேன், கலங்கலும் கசடுகளும் அடியில் தங்கிவிட, மேலால் தெளிவு காட்டும் வாஜ்பேயியின் மிதவாத முகமாக அந்த இந்துத்துவ தொண்டர் தெரிகிறார்.
மரக்கலராயரே!
கல்லில் நார் உரிக்கமுடியுமா?
எழிலிடம் உம் வினாவுக்கு விடை கிடைக்குமா ?
சுற்றிச் சுற்றி வருகிறார் எழில்.
Give him one more chance
மரைக்காயர் பாய்,
நீலகண்டன் என்கிற ஸ்யம் சேவக் தொண்டர் 'அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான விஷயங்கள்' என்கிற இஸ்லாமிய நூலுக்கு இலவச விளம்பரம்செய்து, 'இறைவனையன்றி யாருக்கும் தலைவணங்காத இஸ்லாமியக் கொள்கையை பதிவிட்டு விளக்கிக்கொண்டிருக்கிறார்.
எம்.எல்.ஏ ஆகியபின்னரும் தன் கொள்கையில் உறுதியாக நிற்கும் முஸ்லிமை பாராட்ட மனமில்லாமல், இவ்விஷயத்தை வைத்து குளிர்காய முடியுமா? என்று பார்க்கிறார்.
நான் கேட்கிறேன், எம்.எல்.ஏ ஆனால் மத அடையாளங்களை/கொள்கைகளை விட்டுவிட வேண்டுமா என்ன? அப்படியென்றால், பிராமண எம்.எல்.ஏக்கள் பூணூலைக் கழற்றி வைத்துவிட்டா சட்டசபைக்கு போகின்றனர்?
வாசகன்,
பொதுவாக, சட்டமன்ற உறுப்பினரை மக்கள் தேர்ந்தெடுப்பது தங்கள் தொகுதிக்கு நல்லன செய்வார் என்ற நம்பிக்கையில்.
சிலைக்கு மாலை போடுவதற்கும் ஆரத்தியை ஏற்றுக் கொள்வதற்கும்தான் எம்.எல்.ஏ பதவி என்று உளறிக் கொட்டுபவனுக்கெல்லாம் பதில் சொல்லத் தொடங்கினால் வாழ்நாள் போதாது.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத சகோதரர் எழில் அவர்கள் இயேசு என்ற கற்பனை என்று ஒரு பதிவு போட்டிருக்கிறார்கள். இந்து மதம் தவிர மற்ற எல்லா மதங்களிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் பிரமிப்பளிக்கிறது.
அவரது ஆர்வத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் என்னாலியன்ற ஒரு சிறு பரிசாக, நான் சமீபத்தில் படித்து ரசித்த ஒரு வலைப்பதிவின் சுட்டியை இங்கு இணைக்கிறேன்.
நன்றி அய்யா!
அம்பி அண்ட் கோ
Post a Comment