மனதளவில் பாகிஸ்தானியர்கள்! - ஒரு அதிரடி சர்வே!
"தமிழ் நாட்டில் உள்ள, ஏன் இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லீம்கள் நம்முடைய பண்டைய கலாச்சாரங்களை மதிப்பதில்லை. இன்னும் அவர்கள் மனதளவில் பாகிஸ்தானியர்களாகவே இருக்கின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கிரிக்கெட் மாட்ச் நடக்கும் போது இந்திய வீரர் அவுட்டானால் அதை கைதட்டி ரசிக்கும் கூட்டத்தை கீழக்கரை முகமது சதக் பொறியியல்
கல்லூரியில் காணலாம். இந்தியாவுக்கு ஆதரவாக எவனாவது கைதட்டினால் அவர் தகுந்த?! முறையில் கவனிக்கப்படுவார். "
இந்த தத்துவத்தை சகோதரர் நல்லடியாரின் பதிவில் ஒரு அன்பர் வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பதிவர்களிடையே ரகசியமாக நடத்தப்பட்ட ஒரு கற்பனை சர்வே மூலம் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றன. பங்கேற்ற அனைவரும் தங்கள் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் சாதி மத வேறுபாடின்றி இங்கு அனைவருமே அனானிமஸ்தான்.
அனானி1: "நான் துபாயிலே இருந்தப்போ பார்த்திருக்கிறேன். இந்திய முஸ்லிம்கள் டாக்ஸி ஏற வேண்டுமென்றால் பாகிஸ்தானியரின் டாக்ஸியில்தான் ஏறுவார்கள். சவுதியில் அரேபியர்கள் கூட இவர்களிடம் 'சலாம் அலேகும்' என்று ரகசிய மொழியில் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். அதனால் இவர்கள் இன்னும் மனதளவில் பாகிஸ்தானியர்களாகத்தான் இருக்கிறார்கள்"
அனானி2: "கூகுள் போய் 'கிஸ்' என்று தமிழில் டைப் பண்ணி பாருங்கள். பாகிஸ்தானுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு அப்படியே வெட்ட வெளிச்சமாக தெரியும். 'நர்கிஸ்' என்று இவர்களின் பத்திரிக்கை ஒன்று இருக்கிறது. பா'கிஸ்'தானில் உள்ள 'கிஸ்'ஸும் 'நர்கிஸ்'ஸில் உள்ள 'கிஸ்'ஸும் ஒன்றேதான். தமிழக முஸ்லிம்கள் தங்கள் மனைவிகளை 'கிஸ்' அடிப்பதாகவும் எனது முஸ்லிம் நண்பன் ஒருவன் சொல்லியிருக்கிறான்"
அனானி3: "1945-ல் நேருஜி சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தபோது என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட சம்பவம் இது. பாகிஸ்தானியர்களுக்கும் தமிழக முகமதியர்களுக்கும் உள்ள தொடர்பை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. 1940-ல் நான்கு பாகிஸ்தானியர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக மதறாஸ் வந்திருந்தபோது இங்கு முகமதியர்களால் நடத்தப்படும் அகமதியா உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறார்கள். அன்று பிளாட்பாரத்தில் செருப்பு தைத்துக் கொண்டிருந்த தொழிலாளி இதை நேரில் கண்ட சாட்சி. இதை யாராவது மறுத்து பேசினார்களென்றால் நான் (கொஞ்ச நாளைக்கு) எழுத மாட்டேன்."
அனானி4: "ஆபிரகாமிய மதவாதிகளைப் பற்றி 'இட்லிமாவோ ஆசதோசக்' தமது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பிரபஞ்ச வெளியின் குறியீட்டுக் கனவின் வெளிப்பாடாக ஆன்மாவற்ற அடிப்படை மதிப்பீடுகள் திகழ்கின்றன என அவர் தெளிவாக விளக்கியுள்ளார். இக்கட்டுரைகளூடாக அவர் மைய நிலை அல்லது விளிப்புநிலை மானுடப்பரிமாணமாக விளக்க முயல்வது ஆபிரகாமிய மதங்களினிடையிலான ஒரு வெளிச்சப்புள்ளி இருத்தலின் சாத்தியத்தைத்தான் என்பதை விளங்கிக் கொண்டால் பாகிஸ்தானியருக்கும் தமிழக ஜிகாதி முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளலாம்."
அனானி5: "நாமெல்லாம் குரங்கிலேருந்து பிறந்தோம் என்று பெருமையா சொல்லிக்கிட்டிருக்குறப்போ இவனுங்க பாட்டுக்கு ஆதாம் ஏவாள்னு கதை விட்டுக்கிட்டிருக்காங்க. இதுலேருந்தே தெரியலையா இவங்க நம்ம கலாச்சாரத்தோட ஒத்து வரமாட்டாங்கன்னு"
அனானி6: "இவங்கள்லாம் பாகிஸ்தான்லேருந்து மண்ணை கடத்திக்கிட்டு வந்து தமிழகம் முழுக்க பரப்பி 'தமிழகத்தை பாகிஸ்தான் மண்'ணாக மாற்ற சதித்திட்டம் போட்டுக் கொண்டிருப்பதாக 'விஜயபாரதம்' பத்திரிக்கையில் ஆதாரத்துடன் போட்டிருக்கிறார்கள்."
அனானி7: "அதனாலத்தான் நான் 'எல்லோரும் இந்து மதத்திற்கு வாருங்கள்' என்று பதிவு போட்டுக் கொண்டிருக்கிறேன். 'இவர் எந்த இந்து மதத்தை சொல்கிறார்' என்று இந்து மதத்தில் உள்ளவர்களே மண்டையை பிச்சுக்கிட்டு யோசனை பண்றதுல மற்ற மதங்களைப் பத்தி யோசிக்கவே அவங்களுக்கு நேரம் இல்லாம போயிடும்."
31 comments:
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.
விளையாட்டில் சிறந்த வீரர் பாராட்டப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
மரைக்காயரே! அருமை! நன்றாக சிரித்தேன்.
சிந்திக்க தூண்டும் அவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.
அருமை அய்யா..
டிஸ்கியைப் போட மறக்காதீங்க...
அனானி 4 தன்னுடையது உளறல் என்று தெரிந்தாலும் சரியான 'விடாக்கண்டனாக' இருப்பார் போல இருக்கிறது.
உங்கள் நகைச்சுவை சூப்பர்!!
என் பங்கு:::
அனானி 8:
என்ன தான் எங்கள் தாய் மொழி எழுத்தே இல்லாத காய்வா மொழியானாலும் நாங்கள் தமிழகத்தில் வாழும் உருது கூடத் தெரியாத முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள் என்று சொல்வோம். அப்படியாவது எங்களை ஐயர் என்றோ ஐயங்கார் என்றோ சொல்ல மாட்டார்களா என்ற நப்பாசை தான்.
டிஸ்கி: இதில் வெளிக்குத்து உள்ளது.
கோவி. கண்ணன், அப்துல்லா, ஜாபர் அலி, வளர்பிறை, அட்றா சக்கை, உங்கள் வருகைக்கும் கருத்துக்களை தெரிவித்ததற்கும் நன்றி.
அ.ச., உங்கள் அனானி8 கருத்து சூப்பர்!
Neer marikayar illay... Mari"kalanda"kayar....Ungalayellam thiruthavae mudiyadu....
//Anonymous said...
Neer marikayar illay... Mari"kalanda"kayar....Ungalayellam thiruthavae mudiyadu....//
ஹா..ஹா.. ஏங்க நகைச்சுவைக்காக சில விஷயங்களை கற்பனை செஞ்சு போட்டதுக்கே இப்படி சொல்றீங்களே, இப்படியெல்லாம் உண்மையிலேயே சீரியஸாவே எழுதுறாங்களே அவங்களை என்ன சொல்வீங்க?
பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் இந்திய வீரரை சுட்டு வீழ்த்தினால். சூப்பராக சுட்டார் என்று ரசிக்கும் கூட்டமாக இருப்பீர்கள் போல இருக்கு.
ராணுவவீரர்களில் சிறந்த வீரன் பாரட்டப்படவேண்டும் என்பதில் கோவி.கண்ணனுக்கு மாற்றுகருத்து உண்டா?
//Anonymous said...
பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் இந்திய வீரரை சுட்டு வீழ்த்தினால். சூப்பராக சுட்டார் என்று ரசிக்கும் கூட்டமாக இருப்பீர்கள் போல இருக்கு.//
வா..ர்..ரே வாஹ்..!
ஏங்க கிரிக்கெட் ஆட்டமும் ராணுவ போரும் ஒன்னா?
இந்திய கிரிக்கெட் வீரர்கள் (குறிப்பாக கேப்டன் srikanth) பாகிஸ்தானில் தாக்கப்பட்டார்களே. அப்போதும் உங்கள் கூட்டம் எள்ளி நகையாடியதே. இதுதான் தேசப்பற்றோ?.
ஒருவேளை பார்பணன் அடிவாங்கினால் சந்தோசம் என்று நினைத்துவிட்டார்களோ?
வழிபாடும், தொழுகையும் ஒன்று தான். கத்தோலிக்கர்கள் பூஜை என்று தான் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் வழிபாடு என்பதால் தான் பொங்கலை கொண்டாட மறுக்கிறோம் என்று கூறுகிறீர்கள்.
முட்டாள்தனமாக இல்லை.
எங்கள் ஊர்பக்கம் வழக்கில் கூறுவது போல "முட்டாள் துளுக்கன்" என்று நிருபிக்கிறீர்களே.
//இந்திய கிரிக்கெட் வீரர்கள் (குறிப்பாக கேப்டன் srikanth) பாகிஸ்தானில் தாக்கப்பட்டார்களே. அப்போதும் உங்கள் கூட்டம் எள்ளி நகையாடியதே. இதுதான் தேசப்பற்றோ?.//
இது என்னங்க சிறுபிள்ளைத்தனமான வாதமா இருக்குது? இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்டதற்கு யாரோ ஒரு கூட்டம் எள்ளி நகையாடுனாங்கன்னா இந்திய முஸ்லிம்கள் யாருக்குமே தேசப்பற்று இல்லைன்னு அர்த்தமா? சதாமை கொடூரமான முறையில தூக்குல போட்டதை சோ கூடத்தான் நியாயப்படுத்தி எழுதினார். அதுக்காக எல்லா பார்ப்பனர்களும் காட்டுமிராண்டிகள், அமெரிக்க அடிவருடிகள்னு யாராவது சொல்ல முடியுமா?
நல்லடியார் பதிவுலேருந்து இடம் மாறி இங்கே வந்துட்டாரு போலிருக்கு இந்த அனானி.
//வழிபாடும், தொழுகையும் ஒன்று தான். கத்தோலிக்கர்கள் பூஜை என்று தான் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் வழிபாடு என்பதால் தான் பொங்கலை கொண்டாட மறுக்கிறோம் என்று கூறுகிறீர்கள்.//
அட ஆமாங்க.. ஆமாம். முஸ்லிம்களுக்கு தொழுகைதான் வழிபாடு. ஆனா அந்த வழிபாடு நம்மை படைச்ச ஒரே இறைவனுக்குத்தான். அதனாலத்தான் சூரியனை வழிபடுற பொங்கலை முஸ்லிம்களால கொண்டாட முடியாது என்கிறோம்.
//எங்கள் ஊர்பக்கம் வழக்கில் கூறுவது போல "முட்டாள் துளுக்கன்" என்று நிருபிக்கிறீர்களே//
உங்களுக்கு பேசுறதுக்கு இனிமேல பாயிண்ட் எதுவும் இல்லாததால என்னைய திட்டி உங்களை யார் என்று வெளிப்படுத்தியதற்கு நன்றி. பூனைக்குட்டி வெளிய வந்துடுச்சு என்று சொல்வார்களே, இங்கே பூனைக்குட்டி இல்லை ஒரு வெறிநாயே வெளியில் வந்திருக்கிறது. பார்த்துங்க..! உங்கள குத்தம் சொல்லி என்ன பயன்? நீங்கள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி போலிருக்கிறது! :-(
Dear friends,
Dont waste all your valuable time to by arguing with Marikayar.Naan pudicha muyalukku moonu kalunnu pesura vidhanda vathakararidum pesi payanillai.
/அதுக்காக எல்லா பார்ப்பனர்களும் காட்டுமிராண்டிகள், அமெரிக்க அடிவருடிகள்னு யாராவது சொல்ல முடியுமா?/
சொல்ல முடியுமே.! எந்தப்பார்ப்பானாவது அமெரிக்கா செய்யிறது தப்புன்னு ஸொல்றானுங்களா? பின்னே அமெரிக்கா அடிவருடின்னுதானே சொல்ல முடியும். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஃபண்டு கலெக்ட் பண்ண உண்டியலை தூக்கிக்கொண்டு அமெரிக்காவுக்குத்தானே போறானுங்க. எந்த பார்ப்பானாவது நேபாளத்துக்கு போயி வசூல் பண்ணி இருக்கானுங்களா?
கலைஞர் ஐயா வைக்கோ கட்சியை ரெண்டா போட்ட மாதிரி ப்ராமன சங்கத்தை (தாம்ராஸ்) யும் ரெண்டாக்கிட்டாராம்.
இவனுங்களுக்கு குடுமி ஆடாம இருக்காது. ஒருத்தன் மாத்தி ஒருத்தன் புடிச்சிக்கிட்டு முத்தமிழறிஞரைக் குறைசொல்ல வந்துட்டானுங்க. சரியான காட்டு மிராண்டிகள்.
//இந்தியாவிலுள்ள தர்காக்கள் எல்லாம் பாகிஸ்தானின் கொலைப்பட்டறைகள்.!!!
பச்சைக்கலரில் வெள்ளை பிறை போட்ட பாகிஸ்தான் கொடியை ஏற்றுகிறார்கள். //
இதை அனானி9 கருத்தாக வைக்கிறேன். :-)
நன்றி அய்யுப்.
மரைக்காயர் என்பது பாகிஸ்தானில் 'கான்' என்பதுக்குச் சமம்.
//Anonymous said...
Dear friends,
Dont waste all your valuable time to by arguing with Marikayar.//
Romba tanks anony..!
திமுக தொண்டரே, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
//பாகிஸ்தான்காரணுங்களை அடிச்சு விரட்டனும். மொதல்ல அத்வானிங்கற கராச்சி நாயை அடிச்சு வெரட்டனும். இந்துக்களே ஒன்று படுவீர்! கோயிந்தா! அரோகரா!//
அயூப்,
நீங்கள் முஸ்லீம் தான். ஆனால் என்னதான் முஸ்லீம் அடையாளத்துடன் நீங்கள் பாகிஸ்தான் சென்றால் அவர்கள் உங்களை முஸ்லீமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உதாரணமாக் இந்தியப்பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்ற முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும் ஏற்படும். ஒருவேளை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் உங்களைப்பயன் படுத்தி இந்தியாவில் ஏதாவது சதிவேலைகள் நடத்த முடியுமா என்றுதான் யோசிப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்துக்களின் நம்பிக்கை வாசகங்களான கோயிந்தா! அரோகரா!-வை ஏளனமாக சொல்லும் உங்களை பாகிஸ்தானுக்கு அடித்து விரட்டினால் என்ன?
//அதுக்காக எல்லா பார்ப்பனர்களும் காட்டுமிராண்டிகள், அமெரிக்க அடிவருடிகள்னு யாராவது சொல்ல முடியுமா?//
திமுகவில் பார்ப்பனர்களே இல்லையா?கும்பகோணத்தில் கோ.ஸி.மணியை ஜெயிக்க வெச்சது பார்ப்பான்கள்தான்ங்கறதை மறந்துடாதீங்கப்பூ. உங்க ஆட்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது. அம்மா வெப்பாங்க ஆப்பு சமயம் பார்த்து.
//'ஆபிரகாமிய மதவாதிகளைப் பற்றி 'இட்லிமாவோ ஆசதோசக்' தமது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பிரபஞ்ச வெளியின் குறியீட்டுக் கனவின் வெளிப்பாடாக ஆன்மாவற்ற அடிப்படை மதிப்பீடுகள் திகழ்கின்றன என அவர் தெளிவாக விளக்கியுள்ளார். இக்கட்டுரைகளூடாக அவர் மைய நிலை அல்லது விளிப்புநிலை மானுடப்பரிமாணமாக விளக்க முயல்வது ஆபிரகாமிய மதங்களினிடையிலான ஒரு வெளிச்சப்புள்ளி இருத்தலின் சாத்தியத்தைத்தான் என்பதை விளங்கிக் கொண்டால் பாகிஸ்தானியருக்கும் தமிழக ஜிகாதி முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளலாம்.'//
இவ்வளவு தெளிவான கருத்துக்களை கூகிளில் எந்த இடத்திலிருந்து பொறுக்கியது என்பதற்கும், அந்த அறிஞரது பிற கருத்துக்களை மற்றவர்கள் அறிய முடியாமலும் source போடாமல் எழுதியதை கண்டிக்கிறேன். அந்த அறிஞர் யூத அறிஞராகத்தான் இருக்கும் என ஐயுறுகிறேன்.
))))))))))))))))))))
அனானி # 10: ஹிந்துஸ்தானுக்கு போட்டியா கபரஸ்தான் கட்டுறாங்க. எல்லா கபரஸ்தானையும் இணைச்சு 2047ல இன்னொரு பாகிஸ்தானை உருவாக்கி விடுவாங்க. அதனால இந்துக்கள் கபரஸ்தானையும் ஒரு கண்ணு வெக்கனும்
//சிநேகிதன் said...
உங்களின் வாதம் சுத்த லூசுத்தனமாக உள்ளது.//
//Anonymous said...
Neer marikayar illay... Mari"kalanda"kayar....//
//Anonymous said...
.. "முட்டாள் துளுக்கன்" என்று நிருபிக்கிறீர்களே. //
இதுதானா உமது கலாச்சாரம்? இந்த கலாச்சாரத்தைத்தானா முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்? தமிழர் கலாச்சாரத்தை பற்றி பேச உமக்கெல்லாம் என்ன யோக்கியதை அய்யா இருக்கிறது?
திருக்குறள் தெரியுமா உமக்கு? அதில் 'இனியவை கூறல்' என்ற தலைப்பில் 10 குறட்பாக்கள் இருக்கின்றன. அதில் 10-வது குறட்பா இப்படி சொல்கிறது:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
9-வது குறள் இப்படி சொல்கிறது:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
இதற்கெல்லாம் பொருள் தெரியுமா அய்யா உமக்கு?
உம்மை விட மிக மிகச் சிறந்த தமிழன் நான். நான் தமிழன் என்பதற்கு உம்மிடம் வந்து சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் எமக்கில்லை.
Do your homework first, before talking about தமிழ் culture!
பொங்கல் மதம் சாராத கலாச்சார பண்டிகை என்று முஸ்லிம்களுடன் நீர் மல்லுக்கட்டுகிறீர். அங்கே என்னடான்னா ஜடாயு என்பவர் பொங்கல் இந்து மத பண்டிகைதான் என்று வாதிடுகிறார். பொங்கல் கொண்டாடிய கிருஸ்துவர் ஜோ-வை அங்கே கடிச்சு குதறிக் கொண்டிருக்கிறார்கள். முடிஞ்சா அவரை போய் காப்பாத்தும். அப்புறம் ஜடாயும் நீரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க முதல்ல. உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை முதல்ல நீக்குற வழியப் பாருங்க. அப்புறமா இங்க வந்து ஊளையிடலாம் என்ன?
//Anonymous said...
மரைக்காயர் என்பது பாகிஸ்தானில் 'கான்' என்பதுக்குச் சமம். //
அய்யா என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே. மரைக்காயர் என்பது தூய தமிழ் வார்த்தை அய்யா. எனது முதல் பதிவிலேயே நான் இப்படி சொல்லியிருக்கிறேன்.
//மரைக்காயர் என்பது 'மரக்கல ஆயர்' என்ற தமிழ்ப்பெயரின் திரிபு.
எனவே, நான் தமிழன்.
இப்பெயரை பெரும்பாலும் தமிழக கடற்கரையோர பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள்.
எனவே, நான் தமிழகத்தை சேர்ந்த இந்தியன், மற்றும் முஸ்லிம்.//
//இவ்வளவு தெளிவான கருத்துக்களை கூகிளில் எந்த இடத்திலிருந்து பொறுக்கியது என்பதற்கும், அந்த அறிஞரது பிற கருத்துக்களை மற்றவர்கள் அறிய முடியாமலும் source போடாமல் எழுதியதை கண்டிக்கிறேன். - சுல்தான் //
சுல்தான்,
இந்த கற்பனை சர்வேயில் பங்கேற்றவர்கள் தங்கள் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் source-ஐ வெளியிட முடியாத நிலையில் இருக்கிறேன்.
:-(
புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.
//ஸ்ரீ..ஸ்ரீ...ஸ்ரீ said...
அனானி # 10: ஹிந்துஸ்தானுக்கு போட்டியா கபரஸ்தான் கட்டுறாங்க...//
ஸ்ரீ..ஸ்ரீ...ஸ்ரீ உங்க பின்னூட்டம் சூப்பர்மா!
இந்துஸ்தான்
பாகிஸ்தான்
கபரஸ்தான்
என்ன ஒரு பொருத்தம்!
நண்பரே,
முதல் அநானி யாருன்னு தெரியல.ஆனா, மனசுல கரி உள்ளவரா இருக்கணும்னு மட்டும் வெளங்குது.
ரெண்டாவது அநானி யாருன்னு மூஸ் மூஸ்ன்னு யோஸிச்சாலும் வெளங்கலை.
மூணாவது யாராயிருந்தாலும் சரியான மண்டூ!
நாலு, சரியான 'அரை'. ஸொல்றத 'வெளங்க'ச் சொல்லாத கேஸு.
ஐஞ்சு, எதுவாவோ வந்து எதுவாவோ பரிணாமம் அடஞ்சவா
ஆறு, நல்லிணக்கத்தக் குதறி 'குடாய' வந்தவாளாயிருக்கும்.
ஏழு, 'யானை'யையே தாந்தான் சுமக்கிறோம்னு நெனக்கிற 'யான வாகனம்'.
கரெக்ட்டா?
என்னென்னவோ பேஸ்ரேளே.. நேக்கு ஒன்னும் புரிய மாட்டேன்றது!
//... கேப்டன் srikanth) பாகிஸ்தானில் தாக்கப்பட்டார்களே. அப்போதும் உங்கள் கூட்டம் எள்ளி நகையாடியதே. இதுதான் தேசப்பற்றோ?.
ஒருவேளை பார்பணன் அடிவாங்கினால் சந்தோசம் என்று நினைத்துவிட்டார்களோ?//
ஸ்ரீகாந்து பார்பானா?
ஐயரா ... இல்லே ஐயங்காரா?
//சுந்தர் said...
...
...
கரெக்ட்டா? //
ரெண்டாவது மாயமான நபரோ?
மூணாவது நபரோட பேர் மனசுக்குள்ளே மலர் ந்து வருவது போல இருந்தாலும் நிச்சயமாக சொல்ல முடியவில்லை.
கரெக்டா?
Post a Comment