Monday, January 08, 2007

கட்டுப்படுத்தப் படுவதா இறை?

சகோதரர் எழில் அவர்கள் நாத்திகர்களிடமும் முஸ்லிம்களிடமும் நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்து 'இயேசு என்ற கற்பனை?' என்ற அறிவார்ந்த பதிவு ஒன்றை வைத்து தொடர்ந்து சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள்! நல்லாயிருங்க சார்!

இதே எழில்தான் இனிய இஸ்லாமிய சகோதரர்களின் மீது அக்கறை கொண்டு அவர்களை இந்து மதத்திற்கு அழைத்திருந்தார். 'எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?' என்று நாம் கேட்ட பல கேள்விகளுக்கு இன்னும் அவரிடமிருந்து சரியான பதில் இல்லை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

இந்த பதிவின் பின்னூட்டத்தில் எழில் சொல்கிறார். . "என் தூதரிடம் மட்டும்தான் சொன்னார். அதற்கு பிறகு எங்கும் சொல்லமாட்டார் என்று சொல்வதினாலும்,ஒரே இறைமகன் இவர்தான் என்று சொல்வதாலும் இந்த மதங்களின் அடிபப்டையே மற்ற மதங்களை இழிவு படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கின்றது. சில வேளைகளில் அப்படி இறையை கட்டுப்படுத்துவது அவர்கள் வைத்திருக்கும் "கட்டற்ற இறை" என்ற இலக்கணத்துக்கே பொருந்தாது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது."

முஸ்லிம்களிடம் நல்ல பெயர் கிடைக்கும்(?) என்பதற்காக அவர் இட்ட பதிவில்தான் இந்த பின்னூட்டமும் வந்திருக்கிறது.

கிருஸ்துவம் இயேசு அவர்களை இறைமகன் என்று சொல்வதாலும், இஸ்லாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி இறைத்தூதர் என்று சொல்வதாலும் இந்த மதங்கள் மற்ற மதங்களை இழிவு படுத்துகிறதாம். நான் கேட்கிறேன்.. கிருஸ்துவம், இஸ்லாம் இவற்றுக்கெல்லாம் முற்பட்டதுதானே இந்து மதம்? இன்றளவும் யார் யாரையோ நடமாடும் கடவுள்களாக வரித்துக் கொண்டிருக்கும் இந்து மதம் இந்த இருவரையும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? அப்படி ஏற்றுக் கொள்ளாததால் இந்த இரண்டு மதங்களையும் இந்து மதம் இழிவு படுத்துகிறதா?

இறை என்பது விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று முன்பு சொன்ன எழில், இஸ்லாம் இறையை கட்டுப் படுத்துகிறது என்கிறார். இஸ்லாம் இறையைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

'மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.' (குர்ஆன் - 31:27)

சகோதரர் எழில் அவர்கள் ஒருமுறை குர்ஆன் மொழிபெயர்ப்பை படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். படித்துப் பார்ப்பதால் என்ன வந்து விடப் போகிறது? இதை படிக்க அன்றும், இன்றும், என்றும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.

இப்படிப்பட்ட இறையை யார் கட்டுப் படுத்துகிறார்கள் தெரியுமா? எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தகவல் இப்படி சொல்கிறது;

இந்து மத வேதங்களைக் கற்றுணர்ந்து அதில் விற்பன்ன நிலை அடைந்த சஞ்சய் த்விவேதி ஆச்சாரியா என்பவர் இஸ்லாத்தை ஏற்று முஹம்மது அப்துல் முனீம் என பெயர் கொண்டிருக்கிறார். இவர் அஹமது பண்டிட் எனவும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

பள்ளிப் பருவத்திலேயே சக முஸ்லிம் மாணவன் ஒருவனின் ஐவேளைத் தொழுகைகளைப் பேணுதலுடன் பின்பற்றும் சீரிய ஒழுக்கம் முதலில் இவரைக் கவர்ந்திருக்கிறது. பள்ளி ஆசிரியர்களின் தண்டனைக்கு பயப்படாமல் அந்த முஸ்லிம் மாணவர் தனது தொழுகைகளை பின்பற்றியிருக்கிறார். இது பற்றி அஹமது பண்டிட் அந்த மாணவரிடம் 'பள்ளி நேரம் முடிந்த பிறகு தொழலாமே?' என்று வினவியபோது அவர் சொன்னார், "மன்னியுங்கள் பண்டிட்ஜி, நீங்கள் உங்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ ஒரு சிறிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்து உங்கள் கடவுளரை கட்டுப் படுத்தி வைத்திருக்கிறீர்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த இறைவனால் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் நான் தொழவில்லை என்றால் மறுவுலகில் நான் அதற்கான தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். அந்தத் தண்டனையோடு ஒப்பிட்டால் இந்த உலகில் எனக்கு கிடைக்கும் தண்டனை ஒன்றுமேயில்லை"

அந்த முஸ்லிம் மாணவரின் இந்த பதில்தான் ஆச்சார்யா சஞ்சய் த்விவேதியை அஹமது பண்டிட் ஆக்கியிருக்கிறது.

இப்போது சொல்லுங்கள், இறையை கட்டுப்படுத்துபவர்கள் யார்? இறைவனால் கட்டுப்படுத்தப் படுபவர்கள் யார்?

இந்த பதிவிலேயே சகோதரர் கால்கரி சிவா அவர்கள் இன்னொரு அறிவார்ந்த பின்னூட்டம் வைத்திருக்கிறார்கள்.

"நம் புராணங்கள் கதை என ஏற்றுக் கொள்ளும் அறிவு நம்மிடம் இருக்கிறது. இறைத்தூதன், இறைமகன் என்பவைகளும் கற்பனைகளே என ஏற்றுக்கொண்டுவிட்டால் ப்ரச்னைகள் இல்லையே. அந்த அறிவு இல்லாதால்தானே இவ்வளவு ப்ரச்னைகளும். "

உங்கள் புராணங்கள் கதை என்றால் மற்றவர்களின் நம்பிக்கைகளும் கதையாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? எவ்வளவு நாளைக்குத்தான் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? கண்ணைத் திறந்து பாருங்கள் சார்!

26 comments:

Anonymous said...

மரைக்காயர் : அடடே வாங்க, படிப்பெல்லாம் முடிஞ்சிடுச்சா? இப்போ என்ன செய்றீங்க?

நான் : படிப்பு முடிஞ்சது. நல்ல வேலையும் இப்பத்தான் கிடைச்சிருக்கு.

கால்கரி : ஐய்யோ, ஐய்யோ, ஐய்யய்யோ. எழில், ஓடியாங்க! இந்தாளு நம்மள முட்டாள்னு சொல்றான்.

நான் : உங்கள நான் எப்போ முட்டாள்னு சொன்னேன்?

எழில் : நீ படிச்சிருக்கிறதா சொல்லலை? அப்போ எங்களப் படிக்காத முட்டாள்னு சொல்றதாதானே அர்த்தம்?

கால்கரி : அதானே, அத நாங்களே பெருமயா சொல்லிக்குவமே; ஆனா அத நீ சொல்லக் கூடாது. நீ என்ன சொல்லனும்னா ... நாங்க ஒத்துக்கிறோமில்லையா? அதுபோல நீயும் ஒன்ன படிக்காத முட்டாள்னு ஒத்துக்கிட்டு பெருமைப் படனும். அப்பத்தான் அமைதி நிலவும். நாமெல்லாம் ஒத்துமயா இருக்கலாம். புரியுதா?

நான் : ???

said...

நல்லா சொன்னீங்க படித்தவன். மிக்க நன்றி.

said...

சிந்திக்க வேண்டிய பதிவு! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

Anonymous said...

//நம் புராணங்கள் கதை என ஏற்றுக் கொள்ளும் அறிவு நம்மிடம் இருக்கிறது. //

புராணங்கள் கதை என்றால் அதில் வருபவர்கள் வெறும் கற்பனை கதாபாத்திரங்கள்தானே! கற்பனையான ஒரு விஷயத்திற்காகவா இவர்கள் ஒரு மசூதியை இடித்தார்கள்?

Anonymous said...

//கற்பனையான ஒரு விஷயத்திற்காகவா இவர்கள் ஒரு மசூதியை இடித்தார்கள்?//

மசூதியை இடித்ததற்கு காரணம் RAM.
Racial supemacy, Administration, Money.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

அன்பு மரைக்காயர் ஐயா அவர்களே உங்களுக்கு இந்து மதம் பற்றிய போதிய விளக்கமின்மையால் தாங்கள் இவ்வாறான விமர்சனங்களை தெரிவிக்கின்றீர்கள்

தாங்கள் எழிள் அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்குறிய பதில்ளை விரைவில் நான் உங்களுக்கு ஒரு பதிவில் விளக்குகிறேன்

ஐயா ஒரு இந்துவக இருந்தால் கட்டாயம் கோயிலுக்கு செல்ல வேண்டும், விபூதி தரிக்க வேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் இல்லை.

//நீங்கள் உங்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ ஒரு சிறிய இடத்தை ஒதுக்கிக் கொடுத்து உங்கள் கடவுளரை கட்டுப் படுத்தி வைத்திருக்கிறீர்கள்.//

எப்படி நாங்கள் இறைவனை கட்டுப்படுத்துகிறோமோ ? நல்ல நகைச்சுவை. முழுப்பிரபஞ்சத்திலும் பரந்துள்ள இறைவனை ஒரு சிறிய இடத்தில் அடக்கிவிட முடியுமா என்ன ?
வீடுகளிலோ அலுலவகங்களிலோ ஒரு சிறிய இடதில் இறைவனை வைத்து வழிபட்டால் அந்த இடத்தில் மட்டுமா இறைவன் இருக்கிறான் ? அவன் முழுப்பிரபஞ்சத்திலும் அல்லவா நிறைந்திறுக்கிறான்.

தினமும் ஐந்து வேலை கட்டாயம் தொழ வேண்டும் என்று இஸ்லத்தைபோலோ அல்லது ஞாயிற்றுக் கிழமை கட்டாயம் சர்ச்சுக்கு போக வேண்டும் என்று கிருஸ்துவத்தை போலோ இந்துமதத்தில் இறைவனை கட்டாயம் வழிபட வேண்டும் என்று சட்டம் இயற்றப்படவில்லை. இந்து மதத்தில் சொல்லப்பட்டது இதுதான் " உனக்கு இறைவனை வழிபட விருப்பம் இருந்தால் அவனை வழிபடு இல்லை என்றால் இறைவன் உன்னை'நீ என்னை வழிபடு என்று கெஞ்ச்ப்போவதில்லை.' நீ இறைவனை வழிபடுவதற்காக இறைவன் உனது பாவங்களை மன்னிக்கவோ அல்லது நீ அவனை வழிபடவில்லை என்பதற்காக அவன் உன்னை தண்டிக்கபோவதோ இல்லை. முதலில் நீ உனது கடமைகளை முடி உனது கடமைகளை விட்டுவிடு என்னை வழிபடத்தேவையில்லை. நீஉனது கடமைகளை முடித்துவிட்டு உனக்கு நேரமிருந்தால் என்னை ஒரு கணம் நினைத்தாலே போதும் இதை விட வேறொன்றும் தேவையில்லை என்கிறது இந்து மதம்."

வேத புத்தகங்களை ஒரு முறை வாசித்து விட்டால் வேதங்களில் விற்பன்னராகிவிட முடியுமா என்ன ? இந்துக்கள் ஒரு போதும் இறைவனை எந்த சந்தர்ப்பத்திலும் கட்டுப்படுத்த வில்லை அவன் கட்டுப்படுவதெல்லாம் அன்பு என்ற ஒன்றுக்கே. அல்லாமல் அவனை வேறெவற்றாலும் கட்டுப்படுத்தமுடியாது.

நீங்கள் எழிள் அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் விரைவில் பதிலை ஒரு பதிவெழுதி தெறிவிக்கிறேன்.

எழிள் அவர்கள் குர் ஆனை படிப்பதற்கு முன் தாங்கள் சைவ சித்தாந்த கொள்கைகளை ஒரு முறை படிக்கும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவற்றை படிக்கக்கூட எப்போதும் தடை இல்லை என்பதோடு அவற்றின் "மூலமே" கூடதமிழில்தான் இருக்கின்றது.

"இந்துவாக வாழ்வோம்,இந்துதர்மம் காப்போம்"

said...

//.எழிள் அவர்கள் குர் ஆனை படிப்பதற்கு முன் தாங்கள் சைவ சித்தாந்த கொள்கைகளை ஒரு முறை படிக்கும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்//

என்று HINDU எழுதியுள்ள பின்னூட்டம் மும்முறை வந்துள்ளது.

சைவ சித்தாந்தம் மட்டும் படித்தால் ஒன்பான் அவதாரங்கள் தந்த பெருமாளின் பெருமை பேசும் வைணவத்தை எப்படிப் புரிவது?

சாக்தம், செளரம், கெளமாரம், காணாபத்யம் இவற்றையெல்லாம் எப்போது படிப்பது?

அய்யப்பனை எப்படிப் புரிவது?

அய்யனார் சுவாமியை எப்படிப் புரிவது?

மாடன், காடன் எனத் தமிழர்கள் வணங்கும் நாட்டார் தெய்வங்கள் பற்றி எப்படிப் புரிந்து கொள்வது?

சைவ சித்தாந்தம் மட்டும் படித்தால் இவற்றையெல்லாம் விளங்குவது எப்படி?

said...

ஜாபர் அலி மற்றும் அனானி நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி.

said...

hindhu அவர்களின் பின்னூட்டத்திற்கும் இந்து மதம் பற்றி விளக்கமளிக்க முன்வந்ததற்கும் நன்றி.

//உங்களுக்கு இந்து மதம் பற்றிய போதிய விளக்கமின்மையால் தாங்கள் இவ்வாறான விமர்சனங்களை தெரிவிக்கின்றீர்கள். //

உண்மைதான். எனக்கு இந்து மதம் பற்றிய போதிய விளக்கமில்லைதான். அதனால்தான் எழில் போன்ற சான்றோர்களிடம் இந்து மதம் பற்றிய கேள்விகளை முன்வைக்கிறேன். ஆனால் சரியான பதில்தான் கிடைப்பதில்லை. நான் இந்துமதம் பற்றி விமரிசனங்கள் தெரிவிக்கிறதாக சொல்லியிருக்கீங்க. அப்படியில்லை. நான் இதுவரை கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

//எப்படி நாங்கள் இறைவனை கட்டுப்படுத்துகிறோமோ ? நல்ல நகைச்சுவை. முழுப்பிரபஞ்சத்திலும் பரந்துள்ள இறைவனை ஒரு சிறிய இடத்தில் அடக்கிவிட முடியுமா என்ன ?வீடுகளிலோ அலுலவகங்களிலோ ஒரு சிறிய இடதில் இறைவனை வைத்து வழிபட்டால் அந்த இடத்தில் மட்டுமா இறைவன் இருக்கிறான் ? அவன் முழுப்பிரபஞ்சத்திலும் அல்லவா நிறைந்திறுக்கிறான். //

கோவிலில் இருக்கும் கடவுள்களில் சில கடவுள்கள் மிக சக்தி வாய்ந்தவை என்கிறார்கள். அப்படியென்றால் இன்னொரு ஊரில் இருக்கும் அதே கடவுள் சக்தி குறைந்தவர்தானே? இப்படி ஒரே கடவுளையே ஊருக்கு ஏத்த மாதிரி கோவிலுக்கு ஏத்த மாதிரி சக்தி கூட குறைச்சலா கட்டுப்படுத்தி வச்சிருக்கிறது யார்? முழுப்பிரபஞ்சத்திலும் நிறைந்திறுக்கும் கடவுள் எல்லா கோவில்களிலும் ஒரே மாதிரி சக்தி உடையதாக இருக்க வேண்டாமா?

//..இந்துமதத்தில் இறைவனை கட்டாயம் வழிபட வேண்டும் என்று சட்டம் இயற்றப்படவில்லை. இந்து மதத்தில் சொல்லப்பட்டது இதுதான் " உனக்கு இறைவனை வழிபட விருப்பம் இருந்தால் அவனை வழிபடு இல்லை என்றால் இறைவன் உன்னை'நீ என்னை வழிபடு என்று கெஞ்ச்ப்போவதில்லை.'..
நீஉனது கடமைகளை முடித்துவிட்டு உனக்கு நேரமிருந்தால் என்னை ஒரு கணம் நினைத்தாலே போதும் இதை விட வேறொன்றும் தேவையில்லை என்கிறது இந்து மதம்."//

இந்து மதத்திற்காக இந்த சட்டங்களை இயற்றியது யார்?


//வேத புத்தகங்களை ஒரு முறை வாசித்து விட்டால் வேதங்களில் விற்பன்னராகிவிட முடியுமா என்ன ? //

முடியாது. வேதபுத்தகங்களை படிக்காமலேயே 'இறைமகன் என்பது கற்பனை, இறைத்தூதர் என்பதே தவறு' என்று வியாக்கியானம் சொல்பவர்களுக்கு இது புரிவதில்லை போலிருக்கிறது.

//நீங்கள் எழிள் அவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு நான் விரைவில் பதிலை ஒரு பதிவெழுதி தெறிவிக்கிறேன்.//

ரொம்ப நன்றி. உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறேன்.

//எழிள் அவர்கள் குர் ஆனை படிப்பதற்கு முன் தாங்கள் சைவ சித்தாந்த கொள்கைகளை ஒரு முறை படிக்கும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவற்றை படிக்கக்கூட எப்போதும் தடை இல்லை என்பதோடு அவற்றின் "மூலமே" கூடதமிழில்தான் இருக்கின்றது.//

வணங்காமுடி அய்யா அவர்கள் இதுபற்றி உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கும் பதில் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.

said...

மரைக்காயர் ஐயா

// கோவிலில் இருக்கும் கடவுள்களில் சில கடவுள்கள் மிக சக்தி வாய்ந்தவை என்கிறார்கள். அப்படியென்றால் இன்னொரு ஊரில் இருக்கும் அதே கடவுள் சக்தி குறைந்தவர்தானே? இப்படி ஒரே கடவுளையே ஊருக்கு ஏத்த மாதிரி கோவிலுக்கு ஏத்த மாதிரி சக்தி கூட குறைச்சலா கட்டுப்படுத்தி வச்சிருக்கிறது யார்? முழுப்பிரபஞ்சத்திலும் நிறைந்திறுக்கும் கடவுள் எல்லா கோவில்களிலும் ஒரே மாதிரி சக்தி உடையதாக இருக்க வேண்டாமா?//


நல்ல கேள்வி. ஐயா கடவுளை கட்டுப்படுத்த முடியது என்று நான் ஏற்கனவே சொன்னேன் அதனால் ஊருக்கு ஊர், கோயிலுக்கு கோயில் கடவுளின் சக்தி கூட குறைய என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.இது பொதுவான பேச்சு வழக்கு நம்பிக்கையே ஒழிய வேறொன்றும் அல்ல. கூடவே ஊருக்கு ஊர், கோயிலுக்கு கோயில் கடவுளின் சக்தி கூடும் குறையும் என்று எந்த நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே இது முற்றிலும் பொதுவான பேச்சு வழக்கு நம்பிக்கையே.

ஐயா
//..இந்துமதத்தில் இறைவனை கட்டாயம் வழிபட வேண்டும் என்று சட்டம் இயற்றப்படவில்லை. இந்து மதத்தில் சொல்லப்பட்டது இதுதான் " உனக்கு இறைவனை வழிபட விருப்பம் இருந்தால் அவனை வழிபடு இல்லை என்றால் இறைவன் உன்னை'நீ என்னை வழிபடு என்று கெஞ்ச்ப்போவதில்லை.'..
நீஉனது கடமைகளை முடித்துவிட்டு உனக்கு நேரமிருந்தால் என்னை ஒரு கணம் நினைத்தாலே போதும் இதை விட வேறொன்றும் தேவையில்லை என்கிறது இந்து மதம்."//

இது முற்றிலுமாக நான் உணர்ந்த உண்மை தவிர சட்டம் அல்ல.இவ்வாறு உணர வேண்டிய விடயங்கள் இந்து மதத்தில் நிறைந்து கிடக்கின்றன இவற்றை உணர்ந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் அன்றி இந்து மத நூல்களை கற்றுவிட்டால் மட்டும் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும்.

வணங்காமுடி ஐயா அவர்களின் கேள்விகளுக்கும் விரைவில் எனது பதிவில் விடை கிடைக்கும்.

மரைக்காயர் ஐயா உங்கள் வினாக்களுக்கு நான் விரைவில் விடை தர முயற்சிக்கிறேன்
எனென்றால் நான் ஒரு சிறிய வலைத்தளத்தை வடிவமைத்துக் கொண்டிருப்பதால் நேரம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது அத்துடன் எனக்கு தட்டச்சுவதும் மிகவும் பரிச்சய மற்ற விடயம் ஆகவே தங்களை கொஞ்சம் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.நான் பதிவெழுதியவுடன் உங்களுக்கு பின்னூட்டமிட்டு தெரிவிக்கிறேன்.

நன்றி.

said...

இந்து (மட)க் கடவுளர்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் எதற்கு கருவறைக்குள் ஒழிந்து கொள்ள வேண்டும்? ஆகமம், ஐதீகம் என்பதோடு ஐந்து ஆறு என்ற காலப்பூசைகள் எல்லாம் கட்டுப்பாடுகள் அல்லவா? முனியாண்டி, சுடலை மாடன், வீச்சரிவாள் ஐயனார் இவர்களுக்கெல்லாம் எம் தலித் மக்களின் அசுத்தமான ஊரெல்லைதான் கதியா?

கட்டுப்பாடுகள் இல்லையென்றால் ஒருநாளாவது சுடலை மாடனை திருப்பதியிலும், முனியாண்டியை சபரிமலையிலும், ஐயனாரை காஞ்சி புரத்திலும் வைத்து பூசிக்க முடியுமா? சூத்திரன் காலனிக்குள் பார்ப்பன சாமிகள் வந்தால் கடவுளும் தீட்டாகி விடுவான் என்றானே சுப்பிரமணி. இதெல்லாம் கடவுளைக் கட்டுப்படுத்துவதாகாதா?

இந்து என்று சொல்லாதே! இழிவைத் தேடிக் கொள்ளாதே!!

அறிவுடைநம்பி

said...

\\இது முற்றிலுமாக நான் உணர்ந்த உண்மை தவிர சட்டம் அல்ல.\\

தனி மனிதர்கள் அறிவதெல்லாம் உண்மையாக முடியுமா?, அப்படியானால் கடவுள் மறுப்பாளர்களுக்கும் அவர்கள் அறிந்த உண்மைகள் உள்ளனவே அவர்களும் அவர்களறிந்த உண்மைகளின் படி கடவுள் இல்லை என்கினறனரே அதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இல்லை இந்துமதம்தான் ஏற்றுக் கொள்ளுமா?.

"என் தூதரிடம் மட்டும்தான் சொன்னார். அதற்கு பிறகு எங்கும் சொல்லமாட்டார் என்று சொல்வதினாலும்
எழில்.

தவறு அனைத்து சமுதாயத்திற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கைகளில் ஒன்று. இறைத்தூதர் என்றால் எதோ இராஜங்கப்பதவி ஒன்றுமில்லை ஒரு மனிதருக்கு இறைவனைப்பற்றி அறிவிக்க கிடைக்கும் ஒரு பாக்கியம் அவ்வளவே. அவர்களிடத்திலும் அவர்களின் பொறுப்புப் பற்றி விசாரிக்கப்படும்.

Anonymous said...

மதமாற்றத்தை உயர்குடியினர் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கு இன்று விடை போல் ஒரு கவிதை கிடைத்தது.

நம் கடவுள்கள்
யானைகளாகவும்
காளைகளாகவும்
பறவைகளாகவும்
வந்திருக்கின்றனர்
அவன் ஒரு சண்டாளனாக
ஒரு தலித்தாக ஏன்
பிறக்கவில்லையென்று
கேட்கிறீர்கள்?
நீங்கள் சிந்திக்கிறீர்கள்
அது உங்களை
எங்களிடமிருந்து பிரித்துவிடும்.
மதம் மாறாதீர்கள்
உங்களையே நீங்கள்
சிலுவைக்குள் அறைந்து
கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு நீங்களே
குல்லாய் மாட்டி விடாதீர்கள்

நாய்களே
நீங்கள் போய்விட்டால்
இந்த மதத்திற்கு
யார்தான்
தாழ்ந்த சாதியாக இருப்பது?

- கோசின்ரா வின் கவிதைகளிலிருந்து.

said...

ஐயா அறிவுடைநம்பி மற்றும் ஸயீத் அவர்களே உங்கள் கேள்விகளுக்கும் விரைவில் பதில் எனது பதிவில் கிடைக்கும்

இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

said...

//இதே எழில்தான் இனிய இஸ்லாமிய சகோதரர்களின் மீது அக்கறை கொண்டு அவர்களை இந்து மதத்திற்கு அழைத்திருந்தார். 'எந்த இந்து மதத்தை சொல்கிறீர்கள்?' என்று நாம் கேட்ட பல கேள்விகளுக்கு இன்னும் அவரிடமிருந்து சரியான பதில் இல்லை என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.//

மரைக்காயரே ஏதேது சரியான பதிலை சொல்லாதவரை எழிலை நீங்கள் விடமாட்டீர்கள் போல் தெரிகிறதே?

said...

எழில் பதிலெல்லாம் சொல்ல மாட்டார். அவருக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும். சகோ. இப்னு பஷீர், சுவனப்பிரியன், நல்லடியார், மரைக்காயார் போன்றோர்கள் தமிழில் கேட்ட பல கேள்விகளுக்கு இப்பொழுது அரபுச்சேனல்களில் பதில் தேடுகிறார் போலும்.

வளர்பிறை

said...

//சகோதரர் எழில் அவர்கள் நாத்திகர்களிடமும் முஸ்லிம்களிடமும் நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்து 'இயேசு என்ற கற்பனை?' என்ற அறிவார்ந்த பதிவு ஒன்றை வைத்து தொடர்ந்து சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். //

முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சண்டை மூட்டி விடுவதற்காகவே தேர்ந்தெடுத்த புனைபெயர்களான நேசக்குமார், ஆரோக்கியம் போன்றவற்றின் பின்னால் இருக்கும் கடைந்தெடுத்த கயமைத்தனத்தைத் தன் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளார்...

புரிகிறதா????

said...

HINDHU அவர்களின் பதிலுக்கு நன்றி.

//ஐயா கடவுளை கட்டுப்படுத்த முடியது என்று நான் ஏற்கனவே சொன்னேன் அதனால் ஊருக்கு ஊர், கோயிலுக்கு கோயில் கடவுளின் சக்தி கூட குறைய என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.இது பொதுவான பேச்சு வழக்கு நம்பிக்கையே ஒழிய வேறொன்றும் அல்ல. //

இது HINDHU அவர்களின் தனிப்பட்ட கருத்தே தவிர பெரும்பான்மை இந்துக்களின் கருத்து அல்ல.

இந்து மதத்தில் கடவுள்கள் கட்டுப்படுத்தப் படுகிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் கோவில்களில் சாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிப்பது. காசு கொடுப்பவர்களுக்கு மட்டும்தான் கடவுள் தரிசனம் தருவார் என்பதும் கடவுளை கட்டுப்படுத்துவதுதான்.

//இது முற்றிலுமாக நான் உணர்ந்த உண்மை தவிர சட்டம் அல்ல.இவ்வாறு உணர வேண்டிய விடயங்கள் இந்து மதத்தில் நிறைந்து கிடக்கின்றன//

மீண்டும், இது உங்களின் சொந்த கருத்து. நீங்கள் சொந்தமாக உணர்ந்த ஒரு விடயத்தை இந்துமத விடயமாக கற்பிதம் செய்து கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது.

said...

//கட்டுப்பாடுகள் இல்லையென்றால் ஒருநாளாவது சுடலை மாடனை திருப்பதியிலும், முனியாண்டியை சபரிமலையிலும், ஐயனாரை காஞ்சி புரத்திலும் வைத்து பூசிக்க முடியுமா? //

அய்யா அறிவுடை நம்பி அவர்களின் இந்தக் கேள்விக்கு எழில் அவர்களோ HINDHU அவர்களோ பதில் சொல்வார்கள் என்ரு எதிர்பார்க்கிறேன்.

said...

சகோ.ஸயீத் அவர்களின் விளக்கங்களுக்கு நன்றி. நீங்கள் கேட்ட அருமையான கேள்விக்கு HINDHU அவர்கள் பதில் சொல்வதாக சொல்லியிருக்கிறார். உங்களுடன் சேர்ந்து அதை நானும் எதிர்பார்த்திருக்கிறேன்.

said...

//நாய்களே
நீங்கள் போய்விட்டால்
இந்த மதத்திற்கு
யார்தான்
தாழ்ந்த சாதியாக இருப்பது?

- கோசின்ரா வின் கவிதைகளிலிருந்து.//

பளீரென்று முகத்தில் அறைவது போன்ற கேள்வி. இந்த கவிதையை பின்னூட்டத்தில் இட்ட அன்புடையோன் அவர்களுக்கு நன்றி.

said...

//மரைக்காயரே ஏதேது சரியான பதிலை சொல்லாதவரை எழிலை நீங்கள் விடமாட்டீர்கள் போல் தெரிகிறதே? - முஸ்லிம் //

//எழில் பதிலெல்லாம் சொல்ல மாட்டார். அவருக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும். சகோ. இப்னு பஷீர், சுவனப்பிரியன், நல்லடியார், மரைக்காயார் போன்றோர்கள் தமிழில் கேட்ட பல கேள்விகளுக்கு இப்பொழுது அரபுச்சேனல்களில் பதில் தேடுகிறார் போலும். - வளர்பிறை //

சகோ.முஸ்லிம், வளர்பிறை, உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

said...

//முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சண்டை மூட்டி விடுவதற்காகவே தேர்ந்தெடுத்த புனைபெயர்களான நேசக்குமார், ஆரோக்கியம் போன்றவற்றின் பின்னால் இருக்கும் கடைந்தெடுத்த கயமைத்தனத்தைத் தன் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளார்...

புரிகிறதா????
- அட்றா சக்கை //

வாங்க அ.ச. அவர்களே, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்க சொல்றது ஊரரிந்த ரகசியமாச்சே. நல்லாவே புரியுது.