Thursday, January 04, 2007

போட்டோ, மரியாதை, ஆரத்தி, எம்.எல்.ஏ!

எனது பதிவொன்றில் சகோதரர்கள் வாசகன், அழகு இருவரும் இட்ட பின்னூட்டங்கள் இவை. இவ்வளவு அருமையான தகவல்கள் பின்னூட்டத்திலேயே அமுங்கிப் போகலாமா? அதனால் அதை வைத்து ஒரு தனிப் பதிவு போட்டு விட்டேன்!

நன்றி வாசகன் அவர்களே!
நன்றி அழகு அவர்களே!வாசகன் said...
மரைக்காயர் பாய்,

நீலகண்டன் என்கிற ஸ்யம் சேவக் தொண்டர் 'அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான விஷயங்கள்' என்கிற இஸ்லாமிய நூலுக்கு இலவச விளம்பரம்செய்து, 'இறைவனையன்றி யாருக்கும் தலைவணங்காத இஸ்லாமியக் கொள்கையை பதிவிட்டு
விளக்கிக்கொண்டிருக்கிறார்.

எம்.எல்.ஏ ஆகியபின்னரும் தன் கொள்கையில் உறுதியாக நிற்கும் முஸ்லிமை பாராட்ட மனமில்லாமல், இவ்விஷயத்தை வைத்து குளிர்காய முடியுமா? என்று பார்க்கிறார்.

நான் கேட்கிறேன், எம்.எல்.ஏ ஆனால் மத அடையாளங்களை / கொள்கைகளை விட்டுவிட வேண்டுமா என்ன?அப்படியென்றால், பிராமண எம்.எல்.ஏக்கள் பூணூலைக் கழற்றி வைத்துவிட்டா சட்டசபைக்கு போகின்றனர்?
3/1/07 6:54 PM


திரு. நீலகண்டன் அவர்களுக்கு நான் 2 விஷயங்களுக்காக நன்றி கூற விரும்புகிறேன்.

1. 'அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்' என்ற நூலை தமிழ்மண வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தியதற்காகவும், தாருல் ஹுதா பதிப்பகத்திற்கும் இந்த புத்தகத்திற்கும் இலவச விளம்பரம் கொடுத்ததற்காகவும் எனது நன்றி. தாருல் ஹுதா பதிப்பகத்தின் முகவரியையும் அவரே குறிப்பிட்டிருக்கலாம். பரவாயில்லை.. அவர்களின் முகவரி இதுதான்.

தாருல் ஹுதா
புதிய எண்: 211 (102), முதல் மாடி,
லிங்கி செட்டி தெரு
மண்ணடி, சென்னை - 600 001

இணையத் தள முகவரி

மேலே குறிப்பிட்ட புத்தகம் தவிர மேலும் பல அரிய இஸ்லாமிய நூற்களை இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள். நண்பர்கள் இந்த நூற்களை வாங்கி படித்து பயனடையும்படி கேட்டுக் கொள்கிறேன்.

2. அரசியல்வாதியாக இருந்தாலும் கொள்கையில் உறுதியாக இருக்கும் எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

நீலகண்டன் அவர்கள் இது போன்ற அவரது சேவைகளை தொடர்ந்து செய்து வரும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

வாசகன் அவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கும் நீலகண்டன் மறக்காமல் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

அழகு said...
வாசகன்,

பொதுவாக, சட்டமன்ற உறுப்பினரை மக்கள் தேர்ந்தெடுப்பது தங்கள் தொகுதிக்கு நல்லன செய்வார் என்ற நம்பிக்கையில்.

சிலைக்கு மாலை போடுவதற்கும் ஆரத்தியை ஏற்றுக் கொள்வதற்கும்தான் எம்.எல்.ஏ பதவி என்று உளறிக்
கொட்டுபவனுக்கெல்லாம் பதில் சொல்லத் தொடங்கினால் வாழ்நாள் போதாது.
4/1/07 12:11 AM
சரியா சொன்னீங்க அழகு அவர்களே! அதுல பாருங்க, காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்ல கலந்துக்கிறதுக்காகவே ராம்நாடு மாவட்டம் முழுவதும் ஹசன் அலி அவர்கள் சென்றது இவங்களுக்கு பெருசா தெரியலையாம்! போட்டோவுக்கு மாலை போட மறுத்ததால் அவர் காமராஜரை புறக்கணிக்குறாராம். புறக்கணிக்குறவரு ஏன்யா பிறந்த நாள் கொண்டாட்டத்துல கலந்துக்க வர்றாரு?

நம்புங்கள் இளிச்சவாய் அப்பாவி ஜனங்களே! குஜராத்ல நடந்த இனச்சுத்திகரிப்பு தமிழ்நாட்டுக்கு வரும் நாள் வரை நம்பிக் கொண்டிருங்கள்!

9 comments:

said...

அடடே! இந்தப் பதிவையே இப்பத்தாண்ணே பாக்குறேன்.

மறுபடியும் திசைத் திருப்பியிருக்காங்க அங்கே, பரிவார வழக்கப்படி.

வந்தே மாதரம்னு வணக்கம் சொல்ல மாட்றியே, தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் எப்படி சொல்றே?ன்னு.

வழக்கம்போல நம்ம 'கால்வருடி' தான் எடுத்துக்கொடுத்திருக்காரு.

வணக்கம் வேற, வாழ்த்து வேறன்னு பதில் சொல்றதுக்கு முன்னாடி, "அவனவன் எதைப் பாடுனா ஒனக்கென்ன, பாடாட்டி ஒனெக்கென்ன?" னு கேக்கறேன், பதில் சொல்றானுங்களா, பார்ப்போம்.

said...

அப்புறம், இன்னொரு வழக்கமான மழுப்பல் அதே ஆரிய காரியதரிசி யிடமிருந்து.
பூணூலும் தொப்பி மாதிரி ஒரு அடையாளந்தானாம்.

அய்யா நீலகண்டா, நான் கேட்கிறேன்: தொப்பி அணியாமல் திருமணமே செய்துக்கொண்ட முஸ்லிம்களை நான் காட்டுகிறேன். பூணூல் இல்லாமல் கல்யாணம் வேண்டாம், கருமாதி செய்கிற ஒரு பிராமணரையேனும் உம்மால் காட்ட முடியுமா?

said...

//வந்தே மாதரம்னு வணக்கம் சொல்ல மாட்றியே, தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் எப்படி சொல்றே?ன்னு.//

நாம 85 கோடி பேரும் இந்துதான்னு சொல்றியே, ஒரு இந்து முனியாண்டி பக்தன் கிடா வெட்டி கறி சமைச்சா அதை ஒரு பார்ப்பன இந்து திங்க மாட்டேங்குறியே! அது ஏன்?

//"அவனவன் எதைப் பாடுனா ஒனக்கென்ன, பாடாட்டி ஒனெக்கென்ன?" னு கேக்கறேன், பதில் சொல்றானுங்களா, பார்ப்போம்.//

நாம கேட்டுட்டே இருக்க வேண்டியதுதான். பதில்தான் வராது!

said...

//பூணூலும் தொப்பி மாதிரி ஒரு அடையாளந்தானாம்.//

அடேடே அப்படியா? அப்புறம் என்னாத்துக்கு வருஷாவருஷம் ஆவணி அவிட்டத்தன்னிக்கு பூணூல் renewal பண்றாளாம்?

Anonymous said...

IF muslim will eat Pig kari, bhramin will eat mutton

Anonymous said...

Dear Anony,
A Muslim never eat pig kari. And He never force Brahmin to eat Mutton.

The Question is
Why these 'parivaars' force Muslims to sing/pray/live on their choices?

Do U understand?

said...

//Anonymous said...
IF muslim will eat Pig kari, bhramin will eat mutton//

இந்த அனானி உணர்ச்சிவசப்பட்டு இதே கமெண்டை 4 தடவை அனுப்பியிருக்கார்.

பிரச்னை என்னன்னு கொஞ்சம் புரிஞ்சுக்கிட்டு அப்புறம் கமெண்ட் எழுதுங்க சார்.

ஒரு முஸ்லிம் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துறதை இஸ்லாம் தடுக்குது. அதை செய்ய மாட்டேன்னு சொன்ன ஹசன் அலி மதவெறியர்னா, மட்டன் பிரியாணி சாப்பிட மறுக்கும் பார்ப்பனரும் ஜாதி வெறியர்தானே!

அதென்னங்க முஸ்லிம்கள் பன்னிக்கறி சாப்பிட்டா பார்ப்பனர்கள் மட்டன் சாப்பிடுவாங்களா? அவ்வளவுதானா அவங்க கொள்கையெல்லாம்? நிர்ப்பந்தமான சூழ்நிலையில் ஒரு முஸ்லிம் பன்னிக்கறி கூட சாப்பிடலாம்கிறது உங்களுக்கு தெரியுமா?

said...

மரைக்காயர்,
உங்கள் கருத்து மெத்த சரி.

Non-Veg சாப்பிடு என்று பிராமணர்களை,சைவ பழக்கத்தாரை வற்புறுத்தவும் கூடாது.

Non-Allah என்றுள்ளவற்றை வணங்கு முஸ்லிம்களை வற்புறுத்தவும் கூடாது.

மதநல்லிணக்கத்தின் பெயரால் எல்லாவற்றையும் 'வணங்கு' என்று திணிப்பதும், எல்லாவற்றையும் 'உண்ணு' என்பதும் புஷ் பெயரால் ஜனநாயகம் பேசுவது போன்ற முரண்பாடு.

ஏற்றுக்கொள்கிறேன்.

said...

தமிழ்வாணன், உங்கள் கருத்திற்கு நன்றி.

//மதநல்லிணக்கத்தின் பெயரால் எல்லாவற்றையும் 'வணங்கு' என்று திணிப்பதும், எல்லாவற்றையும் 'உண்ணு' என்பதும் புஷ் பெயரால் ஜனநாயகம் பேசுவது போன்ற முரண்பாடு.//

இந்துமதத்திற்குள்ளேயே பெரும்பாலான இந்து மக்களை அடக்கியாண்டு கொண்டிருக்கும் ஒரு சிறு பிரிவினர், இந்தியாவில் வசிக்கும் பிற மதத்தவர்களையும் 'இதத்தான் செய்யனும், இத செய்யக் கூடாது' என்றெல்லாம் கட்டுப்படுத்த முயல்கிறார்கள். பிரச்னைகள் தோன்றுவதே இதனால்தான்.