Friday, January 26, 2007

இங்கிலாந்து மசூதி வீடியோ சொல்லும் உண்மைகள்!

நமது அருமை நண்பர் திரு.நீலகண்டன் அவர்கள் இங்கிலாந்தின் மசூதிகளில் எடுக்கப்பட்ட சில வீடியோக்களை தமது பதிவில் இட்டிருக்கிறார்.

அந்த வீடியோக்கள் சுட்டிக் காட்டும் சில உண்மைகள்:

1. அங்கு தொழ வருபவர்களிடையே ஜாதி வேறுபாடு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அண்ணல் அம்பேத்கர் எழுதியிருந்தது போல ஷேக், சைய்யது, மொகல், பதான் எல்லோரும் ஒருவரோடொருவர் இணைந்து நின்று தொழுகிறார்கள்.

2. மசூதிக்கு உள்ளே சென்று தொழ ஒரு பிரிவினருக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்றோ மற்றவர்கள் வெளியில் நின்று தொழ வேண்டும் என்றோ யாரும் கட்டுப்பாடுகள் போட்டிருப்பதாக தெரியவில்லை.

3. மசூதியில் தொழுபவர்கள் அனைவரும் ஒரே முறையில்தான் தொழுகிறார்கள்.

4. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. அதிக கட்டணம் கொடுப்பவர்களுக்கு முதல் வரிசையில் இடம் என்பது போன்ற சலுகைகளும் இல்லை.

5. இங்கிலாந்து வெள்ளையர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நாடாக இருந்தபோதிலும் இங்கு உள்ள மசூதி ஒன்றில் கருப்பின முஸ்லிம் ஒருவர் சொற்பொழிவு நடத்த முடிகிறது. 'இங்கு சொற்பொழிவு நடத்த எங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது' என்று யாரும் காவல்துறையை அழைக்கவில்லை.

6. இங்கு தொழுகை நடத்தும் இமாம் கையில் தட்டேந்தி வந்திருப்பவர்களிடம் காசு கேட்கவில்லை.

7. மசூதிக்கு வந்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் கை கொடுத்து முகமன் சொல்லிக் கொள்ளலாம். தீண்டத்தகாதவர்கள் என்று யாரும் இங்கு இல்லை.

8. மசூதிக்கு வரும் முக்கியஸ்தர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முக்கியஸ்தர்கள் தாமதமாக வந்தாலும் தொழுகை அவர்களுக்காக காத்திருக்காது.

9. ஆண்களெல்லாம் சட்டையை கழட்டிவிட்டு வர வேண்டிய தேவையில்லை.

10. மிக முக்கியமாக, இஸ்லாத்தை வெறுப்பவர்கள் கூட மசூதி உள்ளே சென்று வீடியோ எடுக்க முடியும் என்ற அளவுக்கு இங்கு ரகசியங்கள் எதுவும் இல்லை!

என்னங்க.. அந்த பேச்சாளரோட பேச்சைப் பத்தி நான் ஒன்னுமே சொல்லலைங்கிறீங்களா? குர்ஆன், ஹதீஸ் இவற்றுக்கு மாற்றமான பேச்சுக்களை நாங்க ஒரு பொருட்டாவே எடுத்துக்குறதில்லை.

39 comments:

said...

ஆனால் இங்கு பேருந்து மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் குண்டு எப்படி வைப்பது, பாகிஸ்தானுக்கு போயி அதன் தொழில்நுட்பங்களை எப்படி கற்று வருவது என்பது மட்டும் முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும்.

Anonymous said...

11. பள்ளியில் உள்ள இமாம், ஒரு பிரிவினருக்கு மட்டும் தான் தொழுகை நடத்துவேன் என்று அடம் பிடித்து மற்றவர்களை கோர்ட்டுக் போக வைக்க மாட்டார்.

said...

ஐயா மரைக்காயரே தங்களின் வினாக்களிற்காண விடைகளை இங்கே எழுதியிருக்கேன்

வந்து, பார்த்து, தெளிந்து செல்க.

Anonymous said...

Did you CNN's War Inside Program? The program focussed on Muslims in UK. They showed muslim ladies protest against Muslim leaders for not allowing them to pray inside the mosque? (they relayed a scene happend in a mosque based London in which a muslim leader tells muslim ladies that they wont allow ladies inside and he shut it down the doors)This kind of discremination is not in any religion. What do you say about it?

Anonymous said...

//குர்ஆன், ஹதீஸ் இவற்றுக்கு மாற்றமான பேச்சுக்களை நாங்க ஒரு பொருட்டாவே எடுத்துக்குறதில்லை.//


good escape ..

Anonymous said...

மரக்காயர் அண்ணாச்சி,
அமெரிக்காவில் இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் கூட கறுப்பினத்தவர் பூசாரியா இருக்கார். அங்க சாதி பேதம் இல்லை. இன மொழி பேதமில்லை. ஆனா நம்மூர் கோவில்கள்ல பிரச்சனை இருக்கு, அது போல டெல்லி இமாமுக்கு பதிலா ஒரு தலித் முஸ்லீம் (இல்லைங்காதீங்க. சச்சார் கமிட்டியே தலித் முஸ்லீம் பத்தி பேசுது.) டெல்லி ஜும்மா மசூதியில தொழுகை நடத்த முடியுமா? அப்புறம் பார்த்தியளா எல்லாரும் சும்மா வீடியோ எடுத்துற முடியாது. இரகசிய வீடியோ எடுத்துருக்கான் பாத்தியளா. அதெப்படி மரக்காயரே மசூதில நடக்குறதுல அவுக குரான ஃபாலோ பண்றாங்க ஆனா அவுக பேசறப்ப மட்டும் குரானயும் ஹதீஸையும் ஓரங்கட்டிறாக? இததான் மரக்காயரே ரெட்டை நாக்கு ரெட்டை நாக்குன்னு சொல்றாவியளோ? அல்லது ஒருவேள இதுதான் சத்தானிக் வெர்ஸுங்கறாவளே அதோ?

said...

//ஆனால் இங்கு பேருந்து மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் குண்டு எப்படி வைப்பது, பாகிஸ்தானுக்கு போயி அதன் தொழில்நுட்பங்களை எப்படி கற்று வருவது என்பது மட்டும் முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும்.//

அப்படின்னா இந்த வீடியோவில இருக்குறவங்கள்லாம் முஸ்லிம்களே இல்லைங்குறீங்களா?

said...

ஐயா HINDHU அவர்களே, தங்கள் பதிவுக்கு நன்றி.

said...

படம் ரிலிஸ்க்கு முன்னாடி டிரைலர் போடுவாங்க பாத்திங்களா? அதைப் பாத்தா பயங்கரமா, விறுவிறுப்பா இருக்கும் ஆனால், படத்தைப்பார்த்தா ஒன்னுமே இல்லாம படம் ஊத்திக்கும். அந்த மாதிரிதான் இவங்களும் இந்தப்படத்தை ஓட்டுராய்ங்க.

அதில் அருமையாக இஸ்லாமிய கருத்துக்களைக் கூறுகின்றார்கள். ஆனால், இவர்கள் அதை கட் அன்டு பேஸ்ட் செய்து தங்களுடைய புராணக்கதையைச் சேர்த்து பிரமாண்டம் பண்ணி அவங்க பொழைப்ப நடத்துறாங்க.

ஏன் அப்படி செய்யனும்னு கேட்கின்றீர்களா? அங்குள்ள மக்கள் இஸ்லாத்திற்கு கூட்டம் கூட்டமாக போறதைப் பிடிக்காமல் தான் இப்படியெல்லாம் செய்து தடுக்க பார்க்கின்றார்கள். நடக்கற காரியமா என்ன?

said...

//(they relayed a scene happend in a mosque based London in which a muslim leader tells muslim ladies that they wont allow ladies inside and he shut it down the doors)//

எங்கேயோ யாரோ ஓரிருவர் செய்வதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது சார். புனிதத் தலங்களான மக்கா மதினாவிலேயே பெண்கள் மசூதிக்குள் சென்று தொழுகை நடத்துகிறார்கள்.

நீங்க சீரியஸான கமெண்ட் எழுதியிருப்பதாகத்தான் நினைத்தேன் இந்த வரியை பார்க்கும் வரை..

This kind of discremination is not in any religion.

சும்மா கிச்சுகிச்சு மூட்டாதீங்க சார்.

said...

//Anonymous said...
//குர்ஆன், ஹதீஸ் இவற்றுக்கு மாற்றமான பேச்சுக்களை நாங்க ஒரு பொருட்டாவே எடுத்துக்குறதில்லை.//

good escape ..//

எஸ்கேப் இல்லைங்க. உண்மை நிலவரம் அதுதான். ஒரு முஸ்லிம் சொல்லிட்டாருங்கறதுக்காக அவர் சொன்ன எல்லாத்தையும் நாம் அப்படியே நம்பிடனும்னு அவசியம் கிடையாது. குர்ஆன் ஹதீஸ்ல உள்ளதுக்கு மாற்றமா அவர் எதையாவது சொன்னா அதை அலட்சியம் பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். அந்த உரிமை இஸ்லாத்துல இருக்கு.

said...

//Anonymous said...
மரக்காயர் அண்ணாச்சி,
அமெரிக்காவில் இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் கூட கறுப்பினத்தவர் பூசாரியா இருக்கார். அங்க சாதி பேதம் இல்லை. இன மொழி பேதமில்லை. ஆனா நம்மூர் கோவில்கள்ல பிரச்சனை இருக்கு, //

அட அப்படிங்களா? இதை ஏன் ஒரு முன்னுதாராணமா வச்சு இந்தியாவுலேயும் இந்த திட்டத்தை அமுல்படுத்தக் கூடாது? ஒரு சேஞ்சுக்கு கோவில் கருவறைக்குள்ளே ஒரு குப்பனோ சுப்பனோ போய் பூசை பண்றப்போ ராமசாமி அய்யரும் ரங்கராஜன் அய்யங்காரும் வெளீல நின்று ஆரத்தியை தொட்டு கண்ணுல ஒத்திக்கிட்டு தட்டுலே காசு போடலாமில்லையா?

அப்புறம்.. அது என்னங்க.. இந்துமதத்தைப் பத்தி பேசுனா ஆப்பிரிக்காவையும் அமெரிக்காவையும் உதாரணம் காட்டுறீங்க? உண்மையான இந்து மதம் இந்தியாவுல வழக்கொழிஞ்சு போய் இன்னைய தேதிக்கு ஆப்பிரிக்காவுலயும் அமெரிக்காவுலயும் இருக்குறதுதான் அசல் என்று சொல்ல வர்றீங்களா?

//அது போல டெல்லி இமாமுக்கு பதிலா ஒரு தலித் முஸ்லீம் (இல்லைங்காதீங்க. சச்சார் கமிட்டியே தலித் முஸ்லீம் பத்தி பேசுது.) டெல்லி ஜும்மா மசூதியில தொழுகை நடத்த முடியுமா? //

முடியுமே.

//அப்புறம் பார்த்தியளா எல்லாரும் சும்மா வீடியோ எடுத்துற முடியாது. இரகசிய வீடியோ எடுத்துருக்கான் பாத்தியளா.//

அப்படிங்களா? எதை வச்சு 'எல்லாரும் சும்மா வீடியோ எடுத்துற முடியாது'ன்னு சொல்றீங்க?

//அதெப்படி மரக்காயரே மசூதில நடக்குறதுல அவுக குரான ஃபாலோ பண்றாங்க ஆனா அவுக பேசறப்ப மட்டும் குரானயும் ஹதீஸையும் ஓரங்கட்டிறாக? இததான் மரக்காயரே ரெட்டை நாக்கு ரெட்டை நாக்குன்னு சொல்றாவியளோ? அல்லது ஒருவேள இதுதான் சத்தானிக் வெர்ஸுங்கறாவளே அதோ?//

அப்படி இல்லைங்க. அவரோட பேச்சு குர்ஆன் ஹதீஸ்ல உள்ளதுக்கு மாற்றமா இருந்ததுன்னா 'அவருக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்' என்று விட்டுவிட முஸ்லிம்களால் முடியும். உண்மை இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை தேடி நாங்கள் ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் போக வேண்டிய அவசியமில்லை. உண்மையான வழிகாட்டுதல்களுக்கு எந்த ஒரு தனிமனிதரையும் நாங்கள் நம்பி இருக்கத் தேவையில்லை. முஸ்லிம்களுக்கு நடமாடும் கடவுள்கள் கிடையாது.

சத்தானிக் வெர்ஸுன்னா என்ன என்பதை நீங்கள் காஞ்சிபுர மடத்திற்கு சென்றால் ஒருவேளை தெரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால், வீரமணி அய்யா கூட இது பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாராம். அதை படித்தும் தெரிந்து கொள்ளலாம்.

Anonymous said...

என்ன மரைக்காயரே அப்ப அடுத்த டெல்ல்஢ ஜும்மா மசூதி இமாமா புகாரி குடும்பத்த விட்டுட்டு தலித் முஸ்லீமை போடமுடியுமா? அப்ப ஏனையா போடலை? இவ்வளவு நாளா ஏன் புகாரி குடும்பத்து மூத்த ஆம்பிளை வாரிசையே மசூதி இமாமா நியமிச்சுட்டு இருக்கீங்க? நீரு யுகே மசூதியை சொன்னீரு நான் இந்தியா மசூதியை காட்டினேன். அதே போல யுகே உள்ள இஸ்கான் கோவில சொன்னேன். இந்த லாஜிக் கூட உமக்கு புரியல்லியா? எத்தனையோ பாரம்பரிய இஸ்லாமிய நாடுகள்ல இமாம் முஃப்தி மாதிரி பதவியெல்லாம் குடும்பங்க கிட்டதான் இருக்கு தெரிஞ்சிகிடும். நீரு முதல்ல அடுத்த டெல்லி ஜும்மா மசூதி இமாமா தலித் முஸ்லீமை நியமிச்சுட்டு வந்து சொல்லும் பேசுவோம்

said...

//உண்மை இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை தேடி நாங்கள் ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் போக வேண்டிய அவசியமில்லை. உண்மையான வழிகாட்டுதல்களுக்கு எந்த ஒரு தனிமனிதரையும் நாங்கள் நம்பி இருக்கத் தேவையில்லை. முஸ்லிம்களுக்கு நடமாடும் கடவுள்கள் கிடையாது.//

மரைக்காயர் போட்டாரே போடு. இந்துமதத்தை அறிய இனி வெளி நாட்டுக்கு போய்தான் அரியனும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். உண்மைதான் போலும்.

said...

எனக்கு நன்றி எல்லம் வேனாங்க உங்க சந்தேகம் தீர்ந்ததுனா போதும்.

said...

//அப்துல் குத்தூஸ் said...
படம் ரிலிஸ்க்கு முன்னாடி டிரைலர் போடுவாங்க பாத்திங்களா? அதைப் பாத்தா பயங்கரமா, விறுவிறுப்பா இருக்கும் ஆனால், படத்தைப்பார்த்தா ஒன்னுமே இல்லாம படம் ஊத்திக்கும். அந்த மாதிரிதான் இவங்களும் இந்தப்படத்தை ஓட்டுராய்ங்க.//

வாங்க அப்துல் குத்தூஸ் பாய், சரியா சொல்லியிருக்கீங்க. இங்கிலாந்து மசூதியில எடுத்த வீடியோ என்று சொல்லி ஹாங்காங், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியாவில் எடுக்கப்பட்ட பல வீடியோக்களை வெட்டி ஒட்டி முஸ்லிம்கள் மேல தீவிரவாத முத்திரை குத்த வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஒரு அமெச்சூர் முயற்சி.

//ஏன் அப்படி செய்யனும்னு கேட்கின்றீர்களா? அங்குள்ள மக்கள் இஸ்லாத்திற்கு கூட்டம் கூட்டமாக போறதைப் பிடிக்காமல் தான் இப்படியெல்லாம் செய்து தடுக்க பார்க்கின்றார்கள். நடக்கற காரியமா என்ன? //

உண்மை.

said...

//என்ன மரைக்காயரே அப்ப அடுத்த டெல்ல்஢ ஜும்மா மசூதி இமாமா புகாரி குடும்பத்த விட்டுட்டு தலித் முஸ்லீமை போடமுடியுமா? அப்ப ஏனையா போடலை? இவ்வளவு நாளா ஏன் புகாரி குடும்பத்து மூத்த ஆம்பிளை வாரிசையே மசூதி இமாமா நியமிச்சுட்டு இருக்கீங்க? //

அதுக்கு ஒரு அவசியம் ஏற்பட்டா நீரு சொல்ற மாதிரி ஒரு நபரை இமாமா நியமிக்க இஸ்லாத்துல எந்த தடையும் கிடையாது. அப்படி செஞ்சுதான் இதை உமக்கு நிருபிக்க வேண்டும் என்ற தேவையும் இப்போது இருப்பதாக தெரியவில்லை.

//நீரு யுகே மசூதியை சொன்னீரு நான் இந்தியா மசூதியை காட்டினேன். அதே போல யுகே உள்ள இஸ்கான் கோவில சொன்னேன். இந்த லாஜிக் கூட உமக்கு புரியல்லியா?//

யுகே மசூதில ஒரு கருப்பினத்தவர் இமாமாக வர முடியும் என்றால் உலகில் எந்த நாட்டின் எந்த மசூதிக்கு சென்றாலும் இதுதான் நிலை. இந்துக்கோவில்களில் சாதி பேதம் இல்லை என்பதற்கு 85 கோடி இந்துக்களின் இந்தியாவை விட்டுவிட்டு அமெரிக்காவின் இஸ்கான் கோவிலைத்தான் உம்மால் உதாரணம் காட்ட முடிகிறது என்கிற லாஜிக் எனக்கு சத்தியமாக புரியவில்லை.

//எத்தனையோ பாரம்பரிய இஸ்லாமிய நாடுகள்ல இமாம் முஃப்தி மாதிரி பதவியெல்லாம் குடும்பங்க கிட்டதான் இருக்கு தெரிஞ்சிகிடும். நீரு முதல்ல அடுத்த டெல்லி ஜும்மா மசூதி இமாமா தலித் முஸ்லீமை நியமிச்சுட்டு வந்து சொல்லும் பேசுவோம் //

இஸ்கான் கோவில உதாரணம் சொல்ற நீர் தலித் ஒருவரை காஞ்சி மடாதிபதியாக அல்ல, கோவில் அர்ச்சகராக அல்ல, சிதம்பரம் கோவிலில் ஒரே ஒரு வேளை பாசுரம் பாடவைக்கவாவது முடியுமா?

இப்படி உங்கள் மதத்தில் ஆயிரம் குற்றம்குறைகளை வைத்துக் கொண்டு மற்ற மதங்களை குறை சொல்ல புறப்பட்டிருப்பது கேவலமாக தெரியவில்லையா உங்களுக்கெல்லாம்?

Anonymous said...

இஸ்லாத்தில் மடாதிபதி அல்லது மதகுரு என்பதெல்லாம் கிடையாது. மசூதிகளில் யார் பேசினாலும் அது குர்ஆன்க்கும், சுன்னாவுக்கும் முரண்பட்டால் அதை கேட்பவர்கள் பேசியவரின் சொந்த கருத்தாகவே அதை கருதுவர்.

இதெல்லாம் நண்பர் திரு.நீலகண்டன் அவர்களுக்கு தெரியாதா என்ன?. அவருக்கு இராமகோபாலன், பால்தாக்கரே, தொக்கடியாவெல்லாம் சிறுபான்மையினர்க்கு எதிராக பேசிய விடியோ தொகுப்பு கிடைக்கவில்லை போலும், கிடைத்திருந்தால் அதையும் போட்டிருப்பார். ஆமாம் டெல்லி இமாம் என்றால் யார்? அவரென்ன இந்திய முஸ்லீம்களின் பிரதிநிதியா? என்று விளக்கியிருக்கலாமே.

said...

நன்றி சினேகிதன்

//இங்கு பேருந்து மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் குண்டு எப்படி வைப்பதுஇ பாகிஸ்தானுக்கு போயி அதன் தொழில்நுட்பங்களை எப்படி கற்று வருவது என்பது மட்டும் முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும்.//

மசூதிகள் இறைவனை வணங்குவதற்காக மட்டுமே முஸ்லிம்களால் பயன்படுத்தப்படுகிறது. அரச பயங்கரவாதங்களும், அரச தீவிரவாதங்களும் இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகிறது.

கற்பினி பெண்களின் (குஜராத்) வயிற்றை அரிவாளால் கிழித்து அந்த சிசுவை வெளியில் எடுத்துப்போட்டு எடுத்துப் போட்டு ஓம் காளி, ஜெய் காளி என்று கூக்குரலிடும் ஈனப்பிறவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

விமர்சகன்

said...

//எங்கேயோ யாரோ ஓரிருவர் செய்வதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது சார். புனிதத் தலங்களான மக்கா மதினாவிலேயே பெண்கள் மசூதிக்குள் சென்று தொழுகை நடத்துகிறார்கள். //

Best post. Keep it up Mr Maraikkayar.

said...

//இந்துமதத்தை அறிய இனி வெளி நாட்டுக்கு போய்தான் அரியனும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். உண்மைதான் போலும்.//

பின்னூட்டத்திற்கு நன்றி asalamone.

said...

//Anonymous said...
..ஆமாம் டெல்லி இமாம் என்றால் யார்? அவரென்ன இந்திய முஸ்லீம்களின் பிரதிநிதியா? என்று விளக்கியிருக்கலாமே..//

நல்ல கேள்வி அனானி நண்பரே, டெல்லி மசூதி இமாமுக்கு இந்திய முஸ்லிம்களே கொடுக்காத முக்கியத்துவத்தை இவர்கள் ஏன் கொடுக்கிறார்கள் என்பது எனக்கும் புரியாத புதிர்தான். என்னைப் பொருத்தவரையில் அவர் இந்திய தலைநகரில் இருக்கும் ஒரு பெரிய மசூதியின் இமாம். அவ்வளவுதான்.

said...

மரைக்காயர் போட்ட போடுல அவிகல்லாம் பம்மிட்டாகளே ... என்னா?

said...

//கற்பினி பெண்களின் (குஜராத்) வயிற்றை அரிவாளால் கிழித்து அந்த சிசுவை வெளியில் எடுத்துப்போட்டு எடுத்துப் போட்டு ஓம் காளி, ஜெய் காளி என்று கூக்குரலிடும் ஈனப்பிறவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். - விமர்சகன்//

பின்னூட்டத்திற்கு நன்றி விமர்சகன்.

said...

//Best post. Keep it up Mr Maraikkayar.//

நன்றி சுவனப்பிரியன் அவர்களே.

said...

//மரைக்காயர் போட்ட போடுல அவிகல்லாம் பம்மிட்டாகளே ... என்னா? //

'உள்வாங்கிக்கிட்டு' இருக்காங்களோ என்னவோ!

பின்னூட்டத்திற்கு நன்றி அழகு அவர்களே.

said...

//மரைக்காயர் போட்ட போடுல அவிகல்லாம் பம்மிட்டாகளே ... என்னா//

அழகு- இது நாகர்கோவில் நகர் வாழ் மக்கள் பேச்சா இருக்கிறதே? உண்மைதானே? அந்த ஊரு தான் எனக்கும். அதனால் உங்களை தூக்கிட்டேன் சரியா?

அசலம் ஒன்

Anonymous said...

////(they relayed a scene happend in a mosque based London in which a muslim leader tells muslim ladies that they wont allow ladies inside and he shut it down the doors)//

எங்கேயோ யாரோ ஓரிருவர் செய்வதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது சார். புனிதத் தலங்களான மக்கா மதினாவிலேயே பெண்கள் மசூதிக்குள் சென்று தொழுகை நடத்துகிறார்கள்.

நீங்க சீரியஸான கமெண்ட் எழுதியிருப்பதாகத்தான் நினைத்தேன் இந்த வரியை பார்க்கும் வரை..

This kind of discremination is not in any religion.
//
Your are trying to hide the fact that ladies are not allowed for preyar along with men in majority of the mosques. That is truth. I meant dicremination between men and women in the above context. I never heared such kind of discremination even for preyar. Understand the concept and reply.

said...

மேலே பின்னூட்டிஅய் அனானிக்கு

அது எப்டிய்யா இப்டி அழகா கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலன்னு வெட்கம் இல்லாமல் வாதாட முடியுது?

மொதல்ல நீங்க சொன்ன

//(they relayed a scene happend in a mosque based London in which a muslim leader tells muslim ladies that they wont allow ladies inside and he shut it down the doors)//
இதுக்கு நெத்தியடியா வச்சாரு மரக்காயரு


//எங்கேயோ யாரோ ஓரிருவர் செய்வதெல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது சார். புனிதத் தலங்களான மக்கா மதினாவிலேயே பெண்கள் மசூதிக்குள் சென்று தொழுகை நடத்துகிறார்கள்.
//
அதப்பாத்து அப்டியே பிளேட்ட மாத்தி

//Your are trying to hide the fact that ladies are not allowed for preyar along with men in majority of the mosques. That is truth. I meant dicremination between men and women in the above context. I never heared such kind of discremination even for preyar. Understand the concept and reply.
//

இப்டி பல்டி அடிச்சிருக்கீங்க!

நல்ல நகைச்சுவை இருக்குற உங்களுக்கு ஒரு சின்சியரான அட்வைஸ்:

மொதல்ல ஒழுங்க இங்கிலீஷைத் தப்பில்லாம எழுதக் கத்துக்கோங்க அப்புறமா விவாதிக்க வரலாம், சரியா?

Anonymous said...

//
என்னைப் பொருத்தவரையில் அவர் இந்திய தலைநகரில் இருக்கும் ஒரு பெரிய மசூதியின் இமாம். அவ்வளவுதான்.
//

காஞ்சி சிருங்கேரி போன்ற மடங்கள் ஒரு பெரிய மடங்களே அதன் மடாதிபதிகள் பார்ப்பானர்கள் மட்டுமே என் இருக்கிறார்கள் ஏன் தலீத்துக்கள் இல்லை என்றெல்லாம் இனி கேள்விகள் வந்தால் இதே பதிலை அளித்து பார்ப்பானர்களும் சிறப்பு செய்வர் எனபது என் நம்பிக்கை.

Anonymous said...

//
டெல்லி மசூதி இமாமுக்கு இந்திய முஸ்லிம்களே கொடுக்காத முக்கியத்துவத்தை இவர்கள் ஏன் கொடுக்கிறார்கள் என்பது எனக்கும் புரியாத புதிர்தான
//

தில்லி இமாம் சொன்னால் செய்கிறீர்களே!?

தில்லி இமாம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கவேண்டும் என்று சொன்னால் மௌனித்து சம்மதம் தெரிவிக்கிறீர்களே ?

ஒசாமா அமேரிக்கா, ஐரோப்பிய பாவப்பட்ட பொதுமக்கள் மீது தற்கொலைப்படை ஏவிவிட்டால் அவனை ஹீரோ வாக்கி பிள்ளைகளுக்கு அவன் பெயர் வைக்கிறீர்களே ?

இதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் "பிரியாத பிதிர்" இல்லை. என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே இனிமேல் ஜாக்கிரதையாக பலரிடம் விசாரித்து பொதுவாக அறிவு என்பதை உருதுணையாகக் கொண்டு பதில் சொல்லவும், அல்லாஹ் உங்களுக்கு நல்ல ஆழ்ந்த அறிவைக் கொடுக்கட்டும்.

Anonymous said...

Very Good Post Maraickayar

said...

//Your are trying to hide the fact that ladies are not allowed for preyar along with men in majority of the mosques. That is truth.//

நீங்கள் சொல்வது உண்மையல்ல அனானி நண்பரே, இந்த சுட்டியில் உள்ள கட்டுரையை படித்துப் பாருங்கள்.

பள்ளிவாசலுக்கு தொழச் செல்லலாமா?

said...

அட்றா சக்கை அவர்களே, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

said...

//காஞ்சி சிருங்கேரி போன்ற மடங்கள் ஒரு பெரிய மடங்களே அதன் மடாதிபதிகள் பார்ப்பானர்கள் மட்டுமே என் இருக்கிறார்கள் ஏன் தலீத்துக்கள் இல்லை என்றெல்லாம் இனி கேள்விகள் வந்தால் இதே பதிலை அளித்து பார்ப்பானர்களும் சிறப்பு செய்வர் எனபது என் நம்பிக்கை.//

இதுக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறேன் நண்பரே,

//அதுக்கு ஒரு அவசியம் ஏற்பட்டா நீரு சொல்ற மாதிரி ஒரு நபரை இமாமா நியமிக்க இஸ்லாத்துல எந்த தடையும் கிடையாது.//

எதிர்காலத்துல காஞ்சி சிருங்கேரி மடங்கள்ல தலித்கள் மடாதிபதிகளா வர்றதுக்கும் பிராமணர்கள் அந்த தலித் மடாதிபதிகளின் கால்களில் விழுந்து வணங்குவதற்கும் வாய்ப்பு இருக்குறதா உங்களால் சொல்ல முடியுமா?

said...

//Anonymous said...
தில்லி இமாம் சொன்னால் செய்கிறீர்களே!?//

தில்லி இமாம் என்ன சவுதி இமாமே கூட இஸ்லாத்துக்கு மாற்றமான ஒரு விஷயத்தை சொன்னா அதை செய்யனுங்கிற கடமை முஸ்லிம்களுக்கு கிடையாது.

//தில்லி இமாம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கவேண்டும் என்று சொன்னால் மௌனித்து சம்மதம் தெரிவிக்கிறீர்களே ?//

என்ன.. 'மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி' டயலாக்கா? இதெல்லாம் தமிழ் சினிமாவுலத்தான் சரிப்படும். தில்லி இமாம் இப்படி சொல்லியிருக்காருங்குறது எனக்கு நீங்க இப்ப சொல்லித்தான் தெரியுது. நான் மௌனமா இருந்தேங்குறதுக்காக சம்மதம் தெரிவிக்கிறேன் என்று அர்த்தமா?

//ஒசாமா அமேரிக்கா, ஐரோப்பிய பாவப்பட்ட பொதுமக்கள் மீது தற்கொலைப்படை ஏவிவிட்டால் அவனை ஹீரோ வாக்கி பிள்ளைகளுக்கு அவன் பெயர் வைக்கிறீர்களே ?//

ஒசாமா செஞ்சது தப்பு என்று ஏராளமான முஸ்லிம் தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் சொல்லிருயிருக்காங்க. அதெல்லாம் உங்க கண்ல படலீங்களா?

தொகுப்பு-1
தொகுப்பு-2

//இதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் "பிரியாத பிதிர்" இல்லை. என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே இனிமேல் ஜாக்கிரதையாக பலரிடம் விசாரித்து பொதுவாக அறிவு என்பதை உருதுணையாகக் கொண்டு பதில் சொல்லவும், அல்லாஹ் உங்களுக்கு நல்ல ஆழ்ந்த அறிவைக் கொடுக்கட்டும். //

உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. எல்லாம் வல்ல இறைவன் நேர்வழியை உணர்ந்து கொள்ளும் மனப்பக்குவத்தை உங்களுக்கு அளிக்க வேண்டுகிறேன்.

said...

//Drops said...
Very Good Post Maraickayar //

Thanks for your comments.

said...

//எதிர்காலத்துல காஞ்சி சிருங்கேரி மடங்கள்ல தலித்கள் மடாதிபதிகளா வர்றதுக்கும் பிராமணர்கள் அந்த தலித் மடாதிபதிகளின் கால்களில் விழுந்து வணங்குவதற்கும் வாய்ப்பு இருக்குறதா உங்களால் சொல்ல முடியுமா? //

அப்படியெல்லாம் சொல்ல அவர்களால் முடியாது.

அதாவது நல்ல காரை ஓட்ட தெரியாதவன் ஓட்டினால் அது அவன் மீதுள்ள குற்றம். ஆனால் ஓட்டைக் காரை யார் ஓட்டினாலும் அதனால் விளைய போவது விபத்து மட்டும் தான்.
அதுபோல இஸ்லாத்திலே இந்த செயல் இல்லை என்றால் முஸ்லீமை குற்றம் சுமத்துகிறார்கள். நாம் அவர்கள் வேதத்திலேயே தவறை சுட்டிக் காட்டினால் எங்களிடம் அப்படி இல்லை என்று ஒதுங்குகிறார்கள்.
இதை தெரியாமல் பேசுகிறார்களா? அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

said...

//நல்ல காரை ஓட்ட தெரியாதவன் ஓட்டினால் அது அவன் மீதுள்ள குற்றம். ஆனால் ஓட்டைக் காரை யார் ஓட்டினாலும் அதனால் விளைய போவது விபத்து மட்டும் தான். //

அருமையான உவமானம். நன்றி சிராஜுதீன்.