Thursday, January 04, 2007

முன்மாதிரி எம்.எல்.ஏ ஹசன் அலி!

ராமநாதபுரம் எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களைப் பற்றி இந்துத்துவவாதிகள் 'மத வெறியர்' என்ற ரேஞ்சிற்கு திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர் காமராஜர் படத்திற்கு மாலை மரியாதை செய்ய மறுத்ததுதானாம். இந்துத்துவாக்களுக்கு காங்கிரஸ் தலைவர் காமராஜர் மேல் பாசம் பொத்துக் கொண்டு வழிகிறது பாருங்கள்.

இவர்கள் யாரை இப்படி திட்டித் தீர்க்கின்றார்களோ, அதே எம்.எல்.ஏ ஹசன் அலி அவர்களைப் பற்றி செப்-2006-ல் ஜுனியர் விகடனில் ஒரு கட்டுரை போட்டிருக்கிறார்கள். ஒரு முன்மாதிரி என்று சொல்லத் தக்க வகையில் தொகுதி நலனை கருத்தில் கொண்டு அவர் செய்யும் வித்தியாசமான ஒரு முயற்சியைப் பற்றி இந்தக் கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

'ஒரு முஸ்லிமுக்கு இப்படி நல்ல பெயர் கிடைப்பதா?' என்று இந்துத்துவாக்கள் வயிறெரிவதன் காரணம் உங்களுக்கே புரியும்.

**********
தமிழ்நாட்டில் ஒரு காங்கிரஸ் மந்திரிசபை!

‘‘முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தை ஆள ஒரு அமைச்சரவை இருப்பதுதான் உங்களுக்குத் தெரியும். ஆனால், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி யிலும் ஒரு ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ இருக்கிறது. அங்கும் ஒரு மினி அமைச்சரவை இயங்குகிறது... இந்த சங்கதி உங்களுக்குத் தெரியுமா?’’ என நம் நண்பர் ஒருவர் சொன்னபோது முதலில், ‘இதென்ன துக்ளக் தர்பார்?’ என்றுதான் நமக்குத் தோன்றியது.

ஆனால், ராமநாதபுரம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஹசன் அலியின் அலுவலகத்துக்கு நேரில் சென்று பார்த்தபோது, அவரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


வெளியூர்க்காரரான ஹசன் அலி ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டபோது, ‘ராமநாதபுரத்தை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்’ என அடித்துச் சொல்லியிருந்தார். இப்போது, தன் தலைமையில் முப்பது பேர்கொண்ட ஒரு மாடல் அமைச்சரவையை ஏற்படுத்தி, தான் தேர்தல் சமயத்தில் சொன்னதை செயலில் காட்டியிருக்கிறார் ஹசன் அலி. அவரது அலுவலகத்துக்குப் போனால் நிதி, மருத்துவம், கல்வி, உணவு, விவசாயம், மீன்வளம், அறநிலையம், சட்டம்-ஒழுங்கு, இளைஞர் நலன், காவல்துறை என எல்லாத் துறைகளுக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டு ‘அமைச்சரவை பட்டியல்’ ஒன்று போடப் பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அந்தப் பட்டியலில் அமைச்சரவை உறுப்பினர்களின் பெயரோடு, எந்த நேரத்திலும் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, அவர்களின் மொபைல் போன் நம்பரும் இடம்பெற்றுள்ளது!

ஹசன் அலியை அவரது அலுவலகத்தில் சந்திக்கச் சென்றபோது, ஒருபக்கம் மனுக்கள் ஏந்திய கையோடு தொகுதியினரும், மறுபக்கம் வெள்ளை வேட்டி, சட்டையோடு சிலருமாகக் களை கட்டியிருந்தது அலுவலகம். ‘‘போக்குவரத்து மந்திரி யாருப்பா..? ஸ்கூல் விடுற நேரம் பெரியபட்டணத்துக்குப் போதுமான பஸ் வசதி இல்லையாம். டிரான்ஸ் போர்ட் ஆபீஸர்ஸ்கிட்ட பேசுங்க. இந்தாங்க, இந்த மனுவுக்கு ஒரு ரசீது நம்பர் போட்டுக் கொடுங்க..!’’ என்றும், ‘‘ஐயா, உங்க ஊர் குடிநீர் பிரச்னையை கலக்டெர்கிட்ட சொல்லிட்டேன். ஆர்டர் போடுறேன்னு சொல்லிட்டாரு. சந்தோஷமா போயிட்டு வாங்க’’ என்றும் பரபரப்பாக இருந்தார் ஹசன் அலி.

‘‘என்னென்னவோ கனவோடத்தாங்க எம்.எல்.ஏ. ஆனேன். நானே முன்ன நின்னு எல்லா வேலையையும் எடுத்துக்கட்டிப் பாக்கணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா, அது அவ்ளோ சுலபமில்லைனு தெரிஞ்சுபோச்சு. அதனால என்ன பண்றதுனு யோசிச்சேன். நான் மெட்ராஸ் பிரசிடென்சி காலேஜ்ல படிச்சப்ப, ‘மாதிரி மந்திரிசபை’னு பசங்களுக்குள்ள அமைச்சுக் கல்லூரி சம்பந்தமான நடவடிக்கைகளை ஆலோசனை பண்ணி எடுப்போம். அதே செட்-அப்பை இங்க செயல்படுத்துனா என்னனு தோணுச்சு. உடனே பொதுகாரியங்களைப் பண்றதுல ஆர்வமுள்ள முப்பது பேரைப் புடிச்சு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி துறைகளை ஒதுக்கிக் கொடுத்துட்டேன். எந்த கோரிக்கையோட வந்தாலும் இந்த முப்பது துறைகள்ல ஏதாவது ஒண்ணுல அடங்கிடும். சம்பந்தப்பட்ட மந்திரி (மந்திரி என்றுதான் சரளமாகக் கூறுகிறார்!) அந்த மனுவை பரிசீலிச்சு, ஏத்துக்கிட்டு ஒரு ரசீது போட்டுக் கொடுப்பாங்க. அந்த மனுவுல என்னோட கையெழுத்தோட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஃபார்வர்ட் பண்ணி விரைவான நடவடிக்கைக்கு என்ன பண்ணணுமோ அதை பண்ணுவோம். இந்த நிர்வாகத்துக்கு என்னோட சொந்த பணத்தைதான் பயன்படுத்துறேன். அடிக்கடி மீட்டிங் போடுறோம். தொடர்ச்சியா மூணு மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணலைனா, அந்த உறுப்பினர தூக்கிட்டு வேற ஒருத்தர நியமிச்சுருவோம். சட்டசபைக் கூட்டம், வெளியூர் பயணம்னு நான் தொகுதியில் இல்லைனாலும், எல்லா வேலையும் ஸ்மூத்தா போயிட்டு இருக்கும். தி.மு.க. எங்களுக்கு மந்திரி சபைல இடம் கொடுக்கலைனாலும், இந்த மந்திரிசபைல தி.மு.க. உறுப்பினர்களும் இருக்காங்க’’ என்று வாய்விட்டுச் சிரித்தவர் மேலும் தொடர்ந்தார், ‘‘பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்தா வேலை சுலபமா முடியுங்கற சின்ன எண்ணத்தோட விரிவாக்கம்தான் இந்த மாடல் மந்திரிசபை. எனக்கு மக்களோட அடிப்படை வசதிகள் பூர்த்தியாகணும். அதுக்கு அப்புறம் பெரியபெரிய தொழிற் சாலைகள் வந்தா போதும். அதுக்கு இதைப்போல என்னா லான எல்லா முயற்சிகளையும் எடுப்பேன்..!’’ என்று கூறி விடை கொடுத்தார்.

தங்கள் பிரச்னைக்கு ஏதேனும் விடிவு காலம் ஏற்படாதா என்ற ஆதங்கத்துடன் ஹசன் அலியின் ஆபீஸுக்கு வரும் மக்களுக்குப் பொறுப்பான விசாரிப்புகளும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான முயற் சிகளும் பெரும் ஆறுதலாக இருக்கிறது. அதற்காகவாவது மனிதரைப் பாராட்டலாம்!

நன்றி: ஜூனியர் விகடன்

10 comments:

said...

சிறந்த எம்.எல்.ஏ என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் ஹசன் அலி. இவரை முன் மாதிரியாக எல்லோரும் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். கட்டுரைக்கு நன்றி.

said...

ஒரு நல்ல MLA ஒரு நல்ல மதவெறியராயிருக்க முடியாதா என்ன ?

ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் அரசியல் பணி சிறப்பானதுதான் , ஆனால் அவர்கள் வெடிக்கும் குண்டுகள் ?

said...

கரு.மூர்த்தியண்ணா,
அதெப்படின்னா, முஸ்லிம்னா மதவெறியனாத்தேன் இருக்கணும்னு முடிவு பண்ணிடறீங்க!

பொறக்கும்போதே மூளயில ப்ரோக்ராம் பண்ணிக்கிட்டுத்தேன் பொறப்பீங்களோ!!

said...

நன்றி தம்பி அவர்களே,

//ஒரு நல்ல MLA ஒரு நல்ல மதவெறியராயிருக்க முடியாதா என்ன? //

போட்டோவுக்கு மாலை மரியாதை செய்ய மறுத்தா மத வெறியரா? ஒரு நல்ல பார்ப்பன எம்.எம்.ஏ (அப்படி யாராச்சும் இருக்காங்களா?) தனது தொகுதியில் உள்ள முனியாண்டி கோவிலில் கிடா வெட்டி பலி கொடுக்கும் சடங்கில் கலந்து கொள்ள மறுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை என்ன சொல்வீர்கள்? மத வெறியர் என்றா? முனியாண்டியை கும்புடறவங்களும் அதே மதத்தை சேர்ந்தவங்கதானே? முனியாண்டி பக்தர்களின் ஓட்டு மட்டும் இவருக்கு வேணும். அவங்க சாப்பிடும் கிடா கறி இவருக்கு வேணாமா? என்னங்க (அ)நியாயம் இது?

Anonymous said...

//தனது தொகுதியில் உள்ள முனியாண்டி கோவிலில் கிடா வெட்டி பலி கொடுக்கும் சடங்கில் கலந்து கொள்ள மறுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை என்ன சொல்வீர்கள்? மத வெறியர் என்றா? //

மதச்சார்பற்ற அரசு/மக்கள் நடத்துற பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு விழாவும், முனியாண்டி கோவிலில் கிடா வெட்டி விழாவும் ஒண்ணுங்களா? அப்ப அப்துல் கலாம் நம்ம தேச தலைவர்கள் சிலைக்கு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதெல்லாம் உங்க கண்ணுக்கு எப்படி தெரியுது? நாளைக்கு எவனாது கிறுக்கு பிடிச்ச எம்.எல்.ஏ தேசக்கொடிக்கு சல்யூட் பண்றது எங்க மதத்தில தப்புன்னு ஆரம்பிச்சான்னா? அல்லது தாகூர் பாடின தேசியகீதம் கூடாது இக்பால் பாடின பாட்டுக்கு மட்டும்தான் எந்திச்சி நிப்பேன்னு ஆரம்பிச்சான்னா?

said...

அனானி சார், ஏன் இப்படி பதட்டப் படுறீங்க? கூல் டவுன்..

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதை கவனமா தவிர்த்துட்டு எதிர் கேள்வியை போட்டிருக்கீங்க. ஆனா என் கேள்விக்கு பதில் சொன்னீங்கன்னாலே உங்க கேள்விக்கு தானா பதில் கிடைச்சிரும்.

மதச்சார்பற்ற அரசு மட்டன் பிரியாணியோட ஒரு சமபந்தி போஜனம் ஏற்பாடு பண்ணுதுன்னு வச்சுக்குவோம். அதுல உங்க கிறுக்கு புடிக்காத பார்ப்பன எம்.எல்.ஏ கலந்துக்குவாரா? மாட்டாரா? அந்தச் சாப்பாட்டை மற்ற மக்களோட சேர்ந்து சாப்புடுவாரா? மாட்டாரா? மாட்டார்னா ஏன் மாட்டார்? 'அது எங்க ஜாதியில பழக்கமில்ல'ன்னு அப்ப மட்டும் அவருக்கு கிறுக்கு புடிச்சுடுமா? அரசு நடத்துற விழாவுக்கு அவர் கொடுக்குற முக்கியத்துவம் அவ்வளவுதானா?

அப்துல்கலாம் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்னா எல்லா முஸ்லிம் தலைவர்களும் அப்படியே செய்யனும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன? அப்துல் கலாம் பாவம், ஒரு சூழ்நிலைக்கைதியாய் தேசதுரோகிகளின் படங்களை கூடத்தான் பாரளுமன்றத்தில் திறந்து வைத்தார்.

பெருந்தலைவர் காமராஜர் போட்டோவும், தேசக்கொடி, தேசியகீதம் எல்லாம் ஒண்ணுதானுங்களா?

said...

படம் காட்டுவதில் திமுக-வினருக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதை சன் டிவியை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.

இவர் ராமநாதபுரம் சன் டிவியாக இருக்கலாம்.

said...

படங்காட்டுவதாகவே உங்கள் ஆசைக்காக வைத்துக்கொண்டாலும் 'காவி'களுக்கு ஏன் வியர்க்கிறது? ஏன் எதையாவது பிடித்துக்கொண்டு குளிர்காய நினைக்கிறார்கள் என்பது தான்______.

said...

//படம் காட்டுவதில் திமுக-வினருக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதை சன் டிவியை வைத்தே தெரிந்துகொள்ளலாம்.//

புரியலையே? காங்கிரஸ் எம்.எல்.ஏ பற்றிய கட்டுரையில திமுக எப்படி வந்து நுழைஞ்சுது? ஒருவேளை இதுதான் 'திமுகபோபியா'வோ?

Anonymous said...

//'காவி'களுக்கு ஏன் வியர்க்கிறது?//

எத்தனை நாளைக்குத்தான் காமாலைக் கண் என்று சொல்வது, இனி காவிக்கண் என்றும் சொல்லலாம்.

By the way,

இந்திய அரசியல் அமைப்புக்கும் இறையான்மைக்கும் பங்கம் விளைக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து ரத்த யாத்திரையால் முஸ்லிம்களின் ரத்தம் குடித்த அத்வானிஜீ,மோடி ஜீக்களின் மதவெறி பற்றியும் குருகுரு மூர்த்திகளுக்கு விளங்கும்படிக்கும் செப்புங்கோ மரைக்காயார் சாமி.