Thursday, March 01, 2007

அந்த மூன்று கேள்விகள்!

எனது முந்திய பதிவில் நீலகண்டனுக்கும் அவரது சகாக்களுக்கும் நான் கேட்ட மூன்று கேள்விகள் இவை.

1. இந்து ஒற்றுமை, இந்து தர்மம், என்றெல்லாம் வெட்டி முறிக்கிற உங்களுக்கு எல்லாம் காஞ்சிபுர மடத்தை இழுத்து மூட வேணாம், இப்ப இருக்குற மட அதிபதிகளை விரட்டிவிட்டு ஒரு தலித்தை சங்கராச்சியாரா நியமிக்கணும்னு கோரிக்கை எழுப்பவாவது வக்கு இருக்கிறதா?

2. RSS கூட்டத்துக்கு தலைவரா நீலநிற கண்களை உடைய ஒரு 'சித்பவன்' பிராமணர் மட்டும்தான் வரமுடியுமாமே? ஏன் அப்படி? சித்பவன் பிராமணர்கள் என்றால் யார்? பிராமணர்களிலேயே இவங்க உசத்தியா? RSS கூட்டத்திற்கு யாராவது ஓரு தலித் இதுவரை தலைவரா வந்திருக்கிறாரா? இல்லையென்றால் ஏன்?

3. ஏமாறதவன் என்பவர் சொல்கிறார், "நான் நம் இணைய இஸ்லாமிய சகோதரர்களை கெஞ்சி கேட்பது இதுதான். அறியாமல் நீங்கள் உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்." இவர் தன் வருங்கால சந்ததிகளை எந்த படுகுழியில் தள்ளியிருக்கிறார்? அது இஸ்லாத்தை விட எந்த வகையில் உயர்ந்தது? இவரோட கொள்கை வெளியில கவுரவமா சொல்லிக்கிற மாதிரி கொள்கையா இருந்தா தைரியமா அதைப் பத்தி சொல்லலாமே?

ஜோரா உங்க ஜல்லிகளை கொண்டு வந்து கொட்டுங்க பார்ப்போம்! என்று அழைப்பு விடுத்திருந்தும் நீலகண்டனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. ஜல்லி ஸ்டாக் தீர்ந்து விட்டது போலும்! ஒரு கவன ஈர்ப்பு முயற்சியாக இக்கேள்விகளை மறுபதிவு செய்கிறேன்.

இதில் 'உங்கள் வருங்கால சந்ததிகளையும் இந்த படுகுழியில் தள்ளாதீர்கள்' என்று இணைய இஸ்லாமிய நண்பர்களை கெஞ்சிக் கேட்ட ஏமாறாதவன் என்பவர் மட்டும் 'இவர் எந்தப் படுகுழியில் கிடக்கிறார்?' என்ற நமது 3-வது கேள்விக்கு பதிலளிக்க ரொம்பவே அசிங்கப் பட்டுக் கொண்டு, கடைசியில் தான் எந்தப் போக்கிடமும் இல்லாத அனாதை என்று சமாளித்திருக்கிறார். இவர் தனது சந்ததிகளையும் அப்படியே அலைய விடப்போகிறாரா என்பது தெரியவில்லை. தனது இருப்பிடம் இன்னது என்று சொல்ல முடியாத இந்த நபர் இஸ்லாமிய நண்பர்களையும் தன்னைப் போலவே பரதேசிகளாகும்படி அழைப்பு விடுப்பதை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா?

'எல்லா மதங்களும் பொய்' என்று சொல்லியிருக்கும் ஏமாறாதவனின் சார்பாகவும் எனது முதல் கேள்வியை நீலகண்டன் அவர்களிடம் சமர்ப்பிக்கிறேன். இதற்கு நேர்மையான பதிலை தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

சவூதி அரேபியாவின் மன்னராட்சி பற்றி தமிழ் முஸ்லிம்களிடம் கேள்வி கேட்ட நண்பர் நீலகண்டன், அவர் அங்கத்தினராக இருக்கும் RSS பற்றிய எனது இரண்டாவது கேள்விக்கும் நேர்மையான விளக்கம் அளிப்பார் என்று நம்புகிறேன்.

3 comments:

said...

ஏமாறாதவன் என்பவர் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளித்து விட்டதாகவும் நான்தான் பதில் சொல்ல மறுப்பதாகவும் பல அனானிகள் எனக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள். நேசகுமார் என்பவர் கூட ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதையும் பார்த்தேன். நான் எங்கேயும் போய்விடவில்லை. இவர்களுக்கு பதில் சொல்வதற்குமுன் எனக்கு சம்பளம் கொடுக்கும் நிறுவனத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றது. அதை முடித்தபிறகு ஓரிரு நாட்களில் பதில் கொடுக்கிறேன். கேள்விக்கு ஏற்ற பதில் நிச்சயம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ். பொறுத்திருங்கள்.

said...

மரைக்காயர் அய்யா

நேசகுமார் என்பவர் இஸ்லாமிய எதிர்ப்பு தளங்களில் இருந்து சுட்டு நிறைய கேள்விகள் கேட்பார், ஆனால் அதற்கு தகுந்த பதில்களைக் கொடுத்தாலோ அல்லது அந்த ஆளோட உளறலுக்கு ஆதாராத்தையோ கேட்டால் 'உள்வாங்கி' ஓடியே போய்விடுவார்.

கொஞ்ச நாள் கழித்து எல்லாரும் மறந்திருப்பார்கள் என்ற நப்பாசையில் மீண்டும் வருவார். இந்த ஆள் உங்க கோள்விகளுக்கு பதில் சொல்றது இருக்கட்டும். இதற்கு முன்னால் அபூமுஹை, இப்னுபஷீர், சுவனப்பிரியன் இன்னும் பலர் போன்ற பதிவர்கள் வைத்த கேள்விகளுக்கு பதிலைச் சொல்லிவிட்டு உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.

ஒரு காமடி நினைவுக்கு வருது. ஒரு படத்தில வடிவேலு கதாபாத்திரத்தை அடிவாங்குவதற்கென்றே கைதட்டி உற்சாகப் படுத்துவார்கள். அது போல இந்த நபருக்கு அரைவேக்காடு நீ.., மடவாயு போன்றவர்கள் உற்சாகப்படுத்தி சிங்கம் கெளம்பிருச்சுடோய்ன்னு உசுப்பேத்திகிட்டு இருக்காங்க..

அது எப்டிங்க ஏமாறதவன் ஒளிஞ்சா கரெக்டா நேசகுமார் வர்ராரு? இனியாவது குடுமியை மறைத்து வேசம் போட்டால் கொஞ்ச நாள் தாக்கு பிடிக்கலாம்.

நன்றி!

said...

அட்றா சக்கை அவர்களே, நேசகுமார் என்பவரைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி. இந்த நபர் என்னிடம் கேட்ட சில கேள்விகளுக்கும் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

//ஒரு படத்தில வடிவேலு கதாபாத்திரத்தை அடிவாங்குவதற்கென்றே கைதட்டி உற்சாகப் படுத்துவார்கள். அது போல இந்த நபருக்கு அரைவேக்காடு நீ.., மடவாயு போன்றவர்கள் உற்சாகப்படுத்தி சிங்கம் கெளம்பிருச்சுடோய்ன்னு உசுப்பேத்திகிட்டு இருக்காங்க..//

:-))))