Friday, March 09, 2007

தற்பெருமை, கரைத்ததும் குடித்ததும், இன்னும் பிற!

தற்பெருமை பேசும் பலரை பார்த்திருக்கிறோம். அதன் extreme case ஒன்றை சமீபத்தில் நேசக்குமார் என்பவரின் பதிவில் பார்க்க நேரிட்டது. இஸ்லாம் என்று கூகிளில் இட்டால் முதல் பக்கத்திலேயே இவரது பதிவு வருகிறதாம். இவரது பெயரை கூகுளிட்டால் 90% அவரைப் பற்றிய பதிவுகள் வருகிறதாம். இது போல ஒரு பட்டியலே இவர் இட்டிருக்கிறார். மததுவேஷம் என்று கூகுளில் இட்டால் கூட முதல் பக்கத்திலேயே இவரது பதிவுதான் வருகிறது. இதை இவர் கவனிக்கவில்லை போலிருக்கிறது.

********

தற்பெருமை அதிகமாக இருக்கும் இடத்தில் நேர்மை துளியும் இருக்காது என்பதற்கும் இவர் பதிவிலேயே உதாரணம் இருக்கிறது.

இந்து மத வேதங்களைப் பற்றி இவர் சொல்கிறார்; "நான் வேதத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். வேதத்தின் முடிவு, சிகரம் என்றெல்லாம் புகழப்படும் வேதாந்தத்தின் மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. ஆனால், வேதங்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததில் எனக்கு இது நமக்கு விளங்காத விஷயம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்."

"... வேதத்தின் பக்கம் போக வேண்டாம். உபநிஷத்துக்களுடன் நமது தேடலை நிறுத்திக்கொள்வோம் என்ற முடிவுக்குவந்துவிட்டேன்
."

என்ன ஒரு அயோக்கியத்தனம் பாருங்கள். இவரது மதத்தின் வேதம் விளங்காத விஷயமாம், அதன் பக்கம் போக வேண்டாமாம், ஆனால் இன்னொரு மார்க்கத்தின் வேதத்தைப் பற்றி இவர் விவாதம் செய்வாராம்.

இதுக்கு பிறகு வர்றதுதான் செம காமடி!

இவரோட நண்பர் ஜாடாயு என்பவர் எழுதுகிறார், "நேசகுமார், இதை நீங்கள் சொல்வது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. குரானையும், ஹதீஸ்களையும், பற்பல இஸ்லாமிய இலக்கியங்களையும் சளைக்காமல் படித்துக் கரைத்துக் குடித்திருக்கும் நீங்கள் இந்த முயற்சியில் அயர்ந்து விட்டீர்களா?"

கரைச்சு குடிக்கிறதுக்கு இதெல்லாம் என்ன ரஸ்னா ஜூஸுங்களா?

எனது நண்பர் இவரைப் பற்றி ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார், "ஒரு காமடி நினைவுக்கு வருது. ஒரு படத்தில வடிவேலு கதாபாத்திரத்தை அடிவாங்குவதற்கென்றே கைதட்டி உற்சாகப் படுத்துவார்கள். அது போல இந்த நபருக்கு அரைவேக்காடு நீ.., மடவாயு போன்றவர்கள் உற்சாகப்படுத்தி சிங்கம் கெளம்பிருச்சுடோய்-ன்னு உசுப்பேத்திகிட்டு இருக்காங்க.."

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான்...!

*********

இவங்க ரெண்டு பேரோட கட்டுரையை(?)யும் திண்ணையில போட்டிருந்தாங்களாம். இப்பல்லாம் நகைச்சுவை கட்டுரை ரொம்ப பேர் எழுத மாட்டேங்குறாங்கன்னு இவங்க கிட்ட கேட்டு வாங்கி போட்டிருப்பாங்களா யிருக்கும்!

4 comments:

said...

மரைக்காயர்,

அமெரிக்காவின் 9/11 தாக்குதலுக்குப் பிறகுதான் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இஸ்லாம் மற்றும் குர்ஆன் பற்றி அறியும் ஆவல் அதிகரித்து. மேலும் அதேஆண்டு இஸ்லாத்தில் இணைந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை முந்தைய வருடங்களைவிட அதிகம்.

நம் நாட்டிலும் வெவ்வேறு புத்தக விற்பனை அரங்குகளில் குர்ஆனின் மொழி பெயர்ப்பு கடந்த காலங்களைவிட அதிகம் விபனையானதாகவும் சமீபத்தில் படித்தேன். இதுபற்றி ஒரு பதிவும் எழுதியுள்ளேன்.

இஸ்லாம் பரவியதன் வரலாற்றை நோக்கினால் அதனை பற்றிய எதிர்மறையான பிரச்சாரங்களையும் வென்றே பரவி வந்துள்ளது.

முஸ்லிம் பதிவர்கள் நேசகுமார் மாதிரியானவர்களின் பதிவுகளுக்கு எதிர்வினையாக மட்டுமே எழுதி வருகிறோம்.

பாவம் இவர்கள் என்னதான் எழுதிக் கிழித்தாலும் இலட்ச இலட்சமாக அவரின் மதத்தை உதறிவிட்டு வெளியேறுபவர்களை தக்க வைக்க முடியவில்லை! இஸ்லாத்தைப் பற்றி எழுதியவை கூகிலில் முன்னனியில் வருவதாகப் சுயபெருமையடிப்பதால் RSS பிரச்சாரக் தகுதி வேண்டுமானால் கூடலாம்! மற்றபடி இஸ்லாம் அனைத்து வகையான தடைகளையும் கடந்தே அரேபியாவிலிருந்து உலகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

said...

சகோதரர் நல்லடியார் அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. இந்த அரைகுறை ஞானிகளுக்கு நீங்கள் தமிழோவியத்தில் கொடுத்த பதிலடி மிக அருமை.

said...

Weapons of Mass Destruction என்று கூகிலில் தேடினால் நகைச்சுவையான சுட்டி கிடைக்கும் என்றும், அதேபோல் Total Failure என்று தேடினால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இணையதளம் வரும் என்றும் படித்திருக்கிறேன்.

உருப்படாத இணைய தளங்களை தேடுபொறிகளில் இணைப்பதற்காகவே பல நிறுவனங்கள் இருக்கின்றன. யாராச்சும் ஸ்பான்சர் செய்தால் மரைக்காயர் பக்கமும் கூகிலில் முதலிடத்தில் வரச் செய்யலாம்.

said...

விடுங்க மரைக்காயரே

ஒவ்வொருத்தருக்கும் ஒரு அல்பத்தில் சந்தோஷமிருக்கும் அதமாறி இவருடைய சந்தோஷம் இது.

இதுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டிருப்பார் அதுக்காகவாவது சுய தம்பட்டம் வேண்டாமா? விட்டு தள்ளுங்க சாரே.