Saturday, May 05, 2007

காதலை எதிர்க்கும் இந்துத்துவாக்கள்!

அந்தச் செய்தியில் சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களோ, அவர்கள் சார்ந்த சமூகங்களோ குறிப்பிடப் படாமலிருந்தால், 'வழக்கமான காதல் பிரச்னைதானே..!' என்று அதை கடந்து போயிருப்பீர்கள். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட ஆண் ஒரு முஸ்லிமாகவும் பெண் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த ஒரு இந்துவாகவும் இருந்து தொலைத்து விட்டதால், மத்தியப் பிரதேச இந்துத்துவாக்களுக்கு 'அரசியல்' பண்ண ஒரு காரணம் கிடைத்து விட்டது. பேனையே பெருமாளா ஆக்குறவங்களுக்கு பெருச்சாளியே கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன?

குஜராத்துக்கு அடுத்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் மத்தியப் பிரதேசம். இதன் தலைநகரமான போபாலில் உள்ள ஈத்கா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா வட்வாணி, பி.காம். இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. அகமதாபாத் ஏரியாவில் பிரியங்கா குடும்பம் வசித்து வந்தபோது, பக்கத்து வீட்டு முகமது உமர் என்ற இளைஞரோடு அவருக்குக் காதல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி தேர்வு எழுத கல்லூரிக்குப் போன பிரியங்கா, அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், இரு வீட்டாருக்கும் ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில், ''நாங்க ரெண்டு பேரும் மேஜர். ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம். எங்க காதலைக் கண்டிப்பா யாரும் ஏத்துக்க மாட்டாங்க. அதனால நாங்க இந்த ஊரை விட்டுப்போய் கல்யாணம் பண்ணிக்கிறோம். நாங்க போன பிறகு யாரும் எந்த கலவரமும் செய்யாதீங்க'' என காதல் ஜோடியான உமரும், பிரியங்காவும் எழுதிக் கையெழுத்துப் போட்டிருக்கின்றனர்.

பிரியங்காவின் கடிதத்தைப் பார்த்துக் கொதித்துப் போன அவளுடைய பெற்றோர், உமர் தங்கள் மகளைக் கடத்திக்கொண்டு போய்விட்டதாகப் புகார் கொடுத்தனர்.

ஈத்கா ஹில்ஸ் காவல் நிலைய போலீஸ், உமரின் சகோதரர் ஷகீல் என்பவரைத் தூக்கிவந்து சட்ட விரோதமாக சிறையில் அடைத்து, 'உமர் எங்கே?' என மிரட்டியது. இப்படி ஷகீல் காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்படும் காட்சிகளை எப்படியோ உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று ரகசியமாகப் படம் பிடித்து வெளியிட்டது. அதன் பிறகு கவர்னர் தலையிட்டு, ஷகீல் விடுதலை செய்யப்பட்டர். இந்த விவகாரம் எல்லா மீடியாக்களிலும் பரபரப்பான விஷயமாக... போபால் நகரம் சூடாகியது.

வி.ஹெச்.பி., பஜ்ரங்தளம் போன்ற இந்து அமைப்புகள் ஒன்றுசேர்ந்து நடத்திவரும் 'இந்து கன்னிகள் பாதுகாப்பு மன்றம்' இந்தக் காதல் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டு, 'பிரியங்காவை மீட்டு உமரைக் கைது செய்ய வேண்டும்' என போராட்டத்தில் குதித்தது. அதன் உச்சக் கட்டமாக ஏப்ரல் 14-ம் தேதி போபால் நகரம் முழுக்க பந்த் நடத்தி தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள்.

இந்துத்துவ கும்பல் இரட்டை முகம் கொண்டவை என்பதற்கு இது ஒரு உதாரணம். 'இந்து கன்னிகளை பாதுகாக்க போராட்டம்' நடத்தும் இதே கும்பலைச் சேர்ந்தவன்தான் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட சொக்ராபுத்தீனின் அப்பாவி மனைவி கவுசர்பீ-யை கற்பழித்து எரித்து கொலை செய்ய காரணமாக இருந்த கயவன் வன்சாரா . இவன் RSS கும்பலில் உறுப்பினனாக இருந்தவன் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

இப்படி ஒருபுறம் காதலுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்க... மும்பையில் ஒரு கோயிலில் தனது பெயரை உமேஷ் என மாற்றி இந்துவாக மாறினார் உமர் . அதே கோயிலில் பிரியங்காவை திருமணமும் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குப் போன தம்பதி, ''எங்கள் திருமணத்தை அங்கீகரித்து, எங்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்'' என மனு செய்தனர். அவர்கள் கேட்ட படியே உத்தரவிட்டது கோர்ட். ஆனாலும் பிரச்னை ஓய்ந்துவிடவில்லை.

உமர் உமேஷாக மாறிய பிறகும் ஏன் பிரச்னை ஓயவில்லை? 'யார் வேண்டுமானாலும் இந்து மதத்திற்கு மாறி வரலாம்' என்று இணையத்தில் பிரச்சாரம் செய்பவர்கள் இதற்கு பதிலளிப்பார்களா? ஒருவேளை உமர் ஆர்யசமாஜிடம் போய் ஐயாயிரமோ பத்தாயிரமோ கொடுத்து ஒரு சர்டிபிகேட் வாங்கியிருந்தால் இந்த பிரச்னை தீர்ந்திருக்குமா?

சிந்தி சமூகத்தின் போபால் நகரத் தலைவரும், உமாபாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பகவன்தாஸ் சம்தானி என்பவரின் கருத்தைப் பாருங்கள்..!

''பிரியங்காகிட்ட செல்போன் இருக்கு. அதோடு டூவீலர்ல காலேஜ் போயிருக்கா. செல்போனும் டூவீலரும்தான் எல்லா பிரச்னைக்கும் காரணம். காதலர்கள் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கிட்டு ஊரு சுத்த ஆரம்பிச்சிடுறாங்க. எங்க சிந்தி இனப் பெண்கள் இனி வெளியே போகும்போது துப்பட்டாவுல முகத்தை மூடக் கூடாது. செல்போன், டூவீலர் பயன்படுத்தக் கூடாதுன்னு தடை விதிச்சிருக்கோம். பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்காம பெற்றோருடைய கண்காணிப்பிலேயே வச்சிருக்க சொல்லி இருக்கோம்''

என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள்..! இந்த விஞ்ஞான யுகத்தில் உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கையில், இவர்கள் நூற்றாண்டுகளை கடக்க மறுத்து அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.! இவங்கதான் சொல்றாங்க, இஸ்லாம் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதில்லை என்று!

இதையெல்லாம் தூக்கி சாப்புடுற மாதிரி ஒரு கண்டுபிடிப்பு இருக்கு..! அதை கண்டுபிடிச்சவர் இந்த இந்துத்துவ கும்பலை சேர்ந்தவர்தான். வி.எச்.பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் என்பவரின் வாயிலிருந்து உதிர்ந்த முத்து இது..! "இந்துப் பெண்கள் முஸ்லிம் ஆண்களிடம் மயங்குவதற்கு உடல்ரீதியான காரணம் ஒன்று இருக்கிறது.
முஸ்லிம்கள் விருத்த சேதனம் (circumcision) செய்து கொள்வதால் அவர்களால் இந்துப் பெண்களுக்கு அதிக உடல் சுகம் (Sharirik anand) கொடுக்க முடிகிறது . இந்து ஆண்கள் இதை செய்து கொள்வதில்லை". 'இது'தான் முஸ்லிம் ஆண்களின் 'ரகசிய ஆயுதம்' என்பது இவரது கண்டுபிடிப்பு..!!!!!

அடப்பாவிகளா! இந்து மத அமைப்பு ஒன்றின் தலைவராக இருப்பவர் பேசுற பேச்சா இது? இந்து சகோதரிகளை இதை கேவலமாக வேறு யாராவது அவமானப் படுத்த முடியுமா?

பிரியங்கா வீட்டிலும் சரி, உமரின் வீட்டிலும் சரி... யாரும் பேசத் தயாராக இல்லை. போபால் முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தரும், 'ஜமாத்-ஏ-உலமா-ஹிந்த்'தின் செய்தித் தொடர்பாளருமான ஹையத் யூசுப், ''இது உமரோட சொந்தப் பிரச்னை. இதுல நாங்க தலையிட ஒண்ணுமே கிடையாது. ஏற்கெனவே இங்கே அடிக்கடி இந்து-முஸ்லிம் பிரச்னை உருவாகும் சூழ்நிலையில் வி.ஹெச்.பி. மற்றும் பஜ்ரங்தள அமைப்புகள் இந்த விவகாரத்தை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதை நிறுத்த வேண்டும். ரெண்டு குடும்பமும் பேசித் தீர்த்துக்க வேண்டிய பிரச்னையை ஊதிப் பெருசாக்க நினைக்கக் கூடாது'' என்றார் வருத்தத்தோடு.

பற்றி எரியும் இந்தப் பிரச்னை பற்றிய வீடியோ செய்தியையும் கண்டு களியுங்கள்!

நன்றி: ஜூனியர் விகடன், சிந்த் டைம்ஸ்

11 comments:

said...

//அடப்பாவிகளா! இந்து மத அமைப்பு ஒன்றின் தலைவராக இருப்பவர் பேசுற பேச்சா இது? இந்து சகோதரிகளை இதை கேவலமாக வேறு யாராவது அவமானப் படுத்த முடியுமா?//

அட சண்டாள பாவிகளா,
இப்படியுமா கேவலப்படுத்துவாங்க? :(

said...

//அடப்பாவிகளா! இந்து மத அமைப்பு ஒன்றின் தலைவராக இருப்பவர் பேசுற பேச்சா இது? இந்து சகோதரிகளை இதை கேவலமாக வேறு யாராவது அவமானப் படுத்த முடியுமா?//

அட சண்டாள பாவிகளா,
இப்படியுமா கேவலப்படுத்துவாங்க? :(

said...

முஸ்லிம்களின் பயங்கர ஆயுதத்தைக் கண்டுபிடித்த வி.எச்.பி. தலைவருக்கு 'ஆயுதம் கண்டான்' என்ற பட்டத்தை வழங்குவதற்குப் பரிந்துரை செய்கிறேன்.

said...

VHP தலிவரு பேஸ்னத மித்தவங்க ஆராச்சும் பேசிருந்தாங்காட்டி, அத்த வெச்சே அர்சியலு பண்ணிருப்பானுங்கோ பேமானிங்கோ.

இந்த VHP, RSS இதெல்லாத்தயும் தூக்கி கடாசுனாத் தான் நாடு வெளங்கும்னேன்.

said...

பின்னூட்டத்திற்கு நன்றி முஸ்லிம் அவர்களே. இவங்க உள்மனசுல இருக்குறதுதான் வார்த்தையா வெளிப்படுது போலிருக்கிறது.

said...

//முஸ்லிம்களின் பயங்கர ஆயுதத்தைக் கண்டுபிடித்த வி.எச்.பி. தலைவருக்கு 'ஆயுதம் கண்டான்' என்ற பட்டத்தை வழங்குவதற்குப் பரிந்துரை செய்கிறேன்.//

அழகு சார், இது போல பட்டமெல்லாம் கிடைக்கும் என்று தெரிஞ்சா இவங்க பாட்டுக்கு இன்னும் இதுபோல நிறைய 'தத்துவங்களை' உதிர்க்கப் போறாங்க :-(

said...

//VHP தலிவரு பேஸ்னத மித்தவங்க ஆராச்சும் பேசிருந்தாங்காட்டி, அத்த வெச்சே அர்சியலு பண்ணிருப்பானுங்கோ பேமானிங்கோ.//

கரீட்டு பாபு சார்!

Anonymous said...

//வி.எச்.பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் என்பவரின் வாயிலிருந்து உதிர்ந்த முத்து இது..! "இந்துப் பெண்கள் முஸ்லிம் ஆண்களிடம் மயங்குவதற்கு உடல்ரீதியான காரணம் ஒன்று இருக்கிறது. முஸ்லிம்கள் விருத்த சேதனம் (circumcision) செய்து கொள்வதால் அவர்களால் இந்துப் பெண்களுக்கு அதிக உடல் சுகம் (Sharirik anand) கொடுக்க முடிகிறது .//

அடத்தூ கழிசடை நாயே! உன்னையெல்லாம் மனிதனாக கருதி தலைவர்களாக கொண்டு நடக்கின்றார்களே, அந்த அப்பாவிகளுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.

மலம் கழிக்கும் இடத்தில் உள்ள கல்லிலிருந்து இந்தியநாடு வரை அனைத்தையும் பெண்ணாக உருவகப்படுத்துவதன் உள்ளடக்கம் இது தானா?

ஒரு இந்து பெண்ணை இதனை விடவும் கேவலப்படுத்த வேறு வாக்கியங்கள் ஏதும் இல்லை.

சகோதரர் நல்லடியார் அவர்களின் பதிவொன்றில் "பெண் விடுதலைக்காக பாடுபடும் இயக்கமாக சங்கபரிவாரத்தின் தலைமை இரத்தவெறி ஆர்.எஸ்.எஸ்ஸை" கூறியிருந்தார். அங்கு நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதிலில்லை.

வந்தேறி ஹிந்துதுத்துவ பார்ப்பன பரிவாரம் பெண்ணியம் பேணும் இலட்சணம் இது தான்.

நடுச்சந்தியில் நிறுத்தி மலத்தில் முக்கிய செருப்பால் இந்த நாய்களை அடித்து விரட்ட வேண்டும்.

இறை நேசன்

said...

//சகோதரர் நல்லடியார் அவர்களின் பதிவொன்றில் "பெண் விடுதலைக்காக பாடுபடும் இயக்கமாக சங்கபரிவாரத்தின் தலைமை இரத்தவெறி ஆர்.எஸ்.எஸ்ஸை" கூறியிருந்தார். அங்கு நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதிலில்லை//

சகோதரர் இறைநேசன்,

RSS பெண் விடுதலைக்குப் பாடுபடும் இயக்கமாக நான் சொன்னதாக ஞாபகம் இல்லை. சுட்டி தர முடியுமா?

Anonymous said...

மன்னிக்கவும் சகோதரர் நல்லடியார் அவர்களே!

//சகோதரர் நல்லடியார் அவர்களின் பதிவொன்றில் சகோதரர் ஸ்ரீசரண் அவர்கள், "பெண் விடுதலைக்காக பாடுபடும் இயக்கமாக சங்கபரிவாரத்தின் தலைமை இரத்தவெறி ஆர்.எஸ்.எஸ்ஸை" கூறியிருந்தார். அங்கு நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதிலில்லை//

என்று வரவேண்டியது. வார்த்தை விடுபட்டதில் அர்த்தமே மாறிவிட்டது. மன்னிக்கவும்.

அன்புடன்
இறை நேசன்

said...

//வி.எச்.பி தலைவர் ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் என்பவரின் வாயிலிருந்து உதிர்ந்த முத்து இது..! "இந்துப் பெண்கள் முஸ்லிம் ஆண்களிடம் மயங்குவதற்கு உடல்ரீதியான காரணம் ஒன்று இருக்கிறது. முஸ்லிம்கள் விருத்த சேதனம் செய்து கொள்வதால் அவர்களால் இந்துப் பெண்களுக்கு அதிக உடல் சுகம் (ஸ்கரிரிக் அனன்ட்) கொடுக்க முடிகிறது .//

இந்துப் பெண்கள் முஸ்லிம் ஆண்களிடம் உடல் சுகத்துக்காக மயங்குவதைத் தடுப்பதற்குத்தான் மும்பைக் கலவரத்தில் ஆண்குறியை வைத்து முஸ்லிம்களைக் கண்டு பிடித்துக் கொன்றனரோ..?

கன்யாஸ்திரிகளைக் கற்பழித்ததை' "தேசபக்தி" என்று சொன்ன கூட்டம்தானே இது. இவர்களிடம் பண்பாட்டை எதிர்பார்க்க முடியுமா?