Wednesday, January 23, 2008

படாத பாடுபடும் பாரத ரத்னா!

"ஆத்தோட போற தண்ணி.. அய்யா குடி.. அம்மா குடி'-ன்னு சொல்வாங்களே அந்தக் கதையா ஆயிப் போச்சு பாரத ரத்னா!

நாட்டின் மிக உயரிய விருதான இதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்று பாஜகவின் அத்வானி கூறியிருந்தார். அ‌வரைத் தொட‌ர்‌ந்து க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி, அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன் மூ‌‌த்த தலைவ‌ர்க‌ளி‌ல் ஒருவரான ஜோ‌திபாசு‌க்கு‌ம், பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌‌சி‌யி‌ன் மாயாவ‌தி‌ அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் ‌நிறுவன‌ர் க‌‌ன்‌சிராமு‌க்கு‌ம் அவ்விருதை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு‌க்கு கோ‌ரி‌க்கை ‌விடுத்‌திரு‌ந்தன‌ர்.

இதற்கிடையில் சிவசேனா தலைவர் பாக்தாக்கரேயும் அவர் பங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்; 'இ‌ந்த ‌விருது‌க்காக எனது பெய‌ர் ‌சிபா‌ரிசு செ‌ய்ய‌ப்ப‌ட்டு எ‌ன‌க்கு வழ‌ங்க நே‌ரி‌ட்டா‌ல் நா‌ன் ஒரு போது‌ம் ஏ‌ற்கமா‌ட்டே‌ன்'. நரி, திராட்சைப்பழக் கதை நினைவுக்கு வருகிறதா?

பாரத ரத்னா விருது, கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் மிகச் சிறப்பான முறையில் பொதுச்சேவையில் ஈடுபட்டவர்களுக்கும் வழங்கப்படுகிறது . இந்த விருதைப் பெற வாஜ்பாய் எப்படி தகுதியுடையவர் என்ற கேள்விக்கு பதிலாக 'ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியில் இல்லாதபோதும் இந்தியாவின் ஜனநாயகம் தழைத்தோங்க வாஜ்பாய் பாடுபட்டுள்ளார் . அதைக் கெளரவிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா அவருக்கு வழங்கப்பட வேண்டும்' என்கிறார் அத்வானி.

ஆனால் வரலாற்றின் பக்கங்களோ வேறு விதமான உண்மைகளை பறை சாற்றுகின்றன.

வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோதுதான் காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மோடியின் ஆதரவோடு இந்துத்துவ பயங்கரவாதிகள் கோர வெறியாட்டம் போட்டனர். இன்றும் அம்மாநில சிறுபான்மை மக்களை அதிகபட்ச அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கின்றன இந்துத்துவ சக்திகள். பிரதமர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்த வாஜ்பாய் 'இனி வெளிநாட்டினர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்' என்று வெட்கப் பட்டதைத் தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. இவர்தான் ஜனநாயகம் தழைத்தோங்க பாடுபட்டாராம்.

1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கு கொண்ட விடுதலைப் போராட்ட வீரர் வாஜ்பாய் என் சங்பரிவாரங்கள் அவருக்கு புகழ்மாலை சூட்டுகின்றன. ஆனால், 'சம்பவத்தன்று கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அறியாச் சிறுவன் நான். எந்தவித போராட்டத்திலும் நான் கலந்து கொள்ளவில்லை ' என்று வாஜ்பாயே கையெழுத்து போட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்தப் போராட்டத்தை தூண்டியவர்கள் என இரு நபர்களின் பெயர்களை அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு அவர்களை வகையாக மாட்டியும் விட்டிருக்கிறார் வாஜ்பாய்.

சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கு கொள்ளவில்லை. தவிர 'ஆங்கில ஆட்சியாளர்களுக்கு எந்த இடைஞ்சலும் தருவதில்லை' என்ற தனது வடிகட்டிய சந்தர்ப்பவாத சுயநலப் போக்கிலிருந்து அது சிறிதும் விலகாமலேயே இருந்தது. சிறுவயதிலிருந்தே இத்தகைய கொள்கைகள், சித்தாத்தங்களில் பயிற்சி பெற்று வந்த வாஜ்பாய் எப்படி விடுதலைப் போரில் பங்கேற்றிருப்பார்?

வாஜ்பாய் மட்டுமல்லாது, இதே ஆர்.எஸ்.எஸ்-ஸில் பயிற்சி பெற்று வந்தவர்கள்தான் அத்வானி, மோடி உள்ளிட்ட பெரும்பான்மையான பாஜக தலைவர்கள். உண்மையான விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்தவர்கள், காந்திஜி கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று நாட்டின் உயர் பதவிகளை கைப்பற்றியிருக்கிறார்கள். நாட்டின் உயரிய விருதுகளும் அவர்களுக்கு வேண்டுமாம்!

இதோடு ஏன் நிறுத்த வேண்டும்? "அப்படியே சாவர்க்கருக்கு ஒரு பாரத ரத்னா, மோடிக்கு ஒரு பரம்வீர் சக்ரா, கோட்ஸேவுக்கு ஒரு பத்மபூஷன்... சூடா பார்சல்...!"

என்னங்கையா... உடுப்பி ஹோட்டல்ல நெய்தோசையா ஆர்டர் பண்றீங்க?

11 comments:

said...

அப்படியே மரைக்காயருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தமிழ்மனத்தில் அந்தஸ்தாவது கொடுக்க வேண்டும்.

said...

//நல்லடியார் said...
அப்படியே மரைக்காயருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்.//

ஏன் இந்த கொலை வெறி நல்லடியாரே?

said...

//அப்படியே மரைக்காயருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்.//

வாஜ்பேயிக்கே பாரத ரத்னா விருது கொடுக்கும்போது மரைக்காயருக்கு நோபல் விருதே கொடுக்கலாம்.

என்ன நாஞ்சொல்றது...!

said...

மரைக்காயர் அய்யா,

வாஜ்பேயி எவ்வளவு நல்ல பேயி.. ச்சே மனுசன் தெரியுமா?

எவ்ளோ பவ்யமா அடக்க ஒடுக்கமா தங்கள் கீழ்படிதலுள்ளன்னு அழகா விசுவாசமா பிரிட்டிஷாருக்கு லெட்டர் எழுதிருக்கார், அவருக்கு பாரத ரத்னா குடுத்துட்டுத் தாங்க மறு வேல பாக்கணும்.

said...

என்னங்க இப்படி சொல்லிட்டுங்க.... அவங்க ஆட்சியிலதான இருட்டா இருந்த இந்தியாவ ஒளிர வைத்தாங்க...... கோத்ரா சம்பவத்தின் மூலமா???

said...

//முஸ்லிம் said...
..மரைக்காயருக்கு நோபல் விருதே கொடுக்கலாம். //

ஒரு முடிவோடத்தேன் கெளம்பியிருக்கீங்களாப்பு? நோபல் பரிசு வாங்குறதுக்கு 'NO பல்' வயசு ஆகியிருக்கணுமில்லா?

said...

பதிவுக்கு நன்றி மரைக்காயரே!

இந்திய குடியரசு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்காவிட்டால் சங்பரிவார் கும்பல்கள் மனம் தளராமல் அவருக்கு ‘அகண்ட் பாரத்' ரத்னா விருது கொடுத்து ஆறுதல் அடைந்து கொள்ளலாமே!!

said...

//சவூதி தமிழன் said...
மரைக்காயர் அய்யா,
வாஜ்பேயி எவ்வளவு நல்ல பேயி.. ச்சே மனுசன் தெரியுமா?
எவ்ளோ பவ்யமா அடக்க ஒடுக்கமா தங்கள் கீழ்படிதலுள்ளன்னு அழகா விசுவாசமா பிரிட்டிஷாருக்கு லெட்டர் எழுதிருக்கார், அவருக்கு பாரத ரத்னா குடுத்துட்டுத் தாங்க மறு வேல பாக்கணும்.//

பிரிட்டிஷ் ரத்னா-ன்னு ஏதாவது விருது இருக்கா?

said...

//இக்பால் said...
என்னங்க இப்படி சொல்லிட்டுங்க.... அவங்க ஆட்சியிலதான இருட்டா இருந்த இந்தியாவ ஒளிர வைத்தாங்க...... கோத்ரா சம்பவத்தின் மூலமா???//

சரியா சொன்னீங்க இக்பால்.

said...

//பிறைநதிபுரத்தான் said...
இந்திய குடியரசு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்காவிட்டால் சங்பரிவார் கும்பல்கள் மனம் தளராமல் அவருக்கு ‘அகண்ட் பாரத்' ரத்னா விருது கொடுத்து ஆறுதல் அடைந்து கொள்ளலாமே!!//

இது நல்ல யோசனையாக இருக்கிறதே? நன்றி பிறைநதிபுரத்தான்!

said...

//அது மட்டுமல்லாமல் அந்தப் போராட்டத்தை தூண்டியவர்கள் என இரு நபர்களின் பெயர்களை அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு அவர்களை வகையாக மாட்டியும் விட்டிருக்கிறார் வாஜ்பாய்.//

என்ன மரைக்கார் காக்கா இந்த ஒரு தகுதி போதுமே. இதுக்குப் பெறவும் பாரத ரத்னா கொடுக்கலன்ன அத்வானி கோவிச்சுக்கிட்டு பாகிஸ்தான் போய்டுவார் என்று எச்சரிக்கிறேன்.