Friday, January 18, 2008

நரேந்திர மோடியும் தாவுத் இப்றாஹிமும்!

மரண வியாபாரி மோடி குஜராத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதால் அம்மணி ஜெயலலிதா அவருக்கு விருந்து வைக்கிறாராம். சோ ராமசாமி மோடிக்கு பாராட்டு விழா நடத்துகிறாராம்.


சில மாதங்களுக்கு முன்பு டெஹல்கா இந்த இந்துத்துவ பயங்கரவாதியின் கொடூர முகத்தை அவனது சகாக்களின் வாக்குமூலங்களைக் கொண்டே தோலுரித்து தொங்க விட்டபோது, இந்த ஜெயலலிதாவோ ராமசாமியோ இவனைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இன்றைய பாராட்டுக்கும் விருந்துக்கும் என்ன காரணம்? ஜாதிப் பற்றா? அல்லது, தேர்தலில் வென்றவர்களெல்லாம் உத்தமர்களாகி விட்டதாக மனு தர்மமோ சாணக்கிய சாஸ்திரமோ சொல்கிறதா?


சிபு சோரன் என்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி மன்மோகன்சிங் அமைச்சரவையில் நிலக்கரித்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டார். அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப் பட்டபோது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தலைமறைவானார். பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை.. நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப் பட்டார். அப்போது பாஜக அதை எதிர்த்து பெரும் ஆர்ப்பாட்டம் செய்தது. ஏனய்யா... சிபு சோரன் தேர்தலில் வென்று எம்.பி. ஆனவர்தானே? ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியின் தலைவரும் கூட. நியாயப்படி பார்த்தால் தேர்தலில் வென்றதால் உத்தமராகிப் போன சிபு சோரனுக்கு பாஜக பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும்!


சிபுசோரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்றால், 1975-ல் ஒரு இனக்கலவரம் நடப்பதற்கும், அதில் 10 பேர் மரணமடைவதற்கும் இவர் காரணமாக இருந்தாராம். இனக்கலவரம் நடக்க காரணமாக இருந்தவரே குற்றவாளி என்றால், ஒரு இனத்தையே அழிப்பதற்கு திட்டம் தீட்டி, ஆண், பெண், முதியவர், சிறுவர்கள், வயிற்றுச் சிசு என எந்தப் பாகுபாடுமில்லாமால் 3000 பேரை கொன்று குவிக்க தூண்டுகோலாக இருந்த கொடூரன் எவ்வளவு பெரிய குற்றவாளி? இவன் எத்தனை தேர்தலில் வென்றால்தான் என்ன?



கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மோடி, இதற்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று 'இரத்தம் கொதிக்க'க் கூறியதாகவும், தான் ஒரு மாநில முதல்வராக இல்லாதிருந்தால் உடனடியாக ஜுஹாபுரா (அஹமதாபாத்தின் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி)-வில் குண்டுகளை வெடிக்கச் செய்து முஸ்லிம்களைக் கொன்றிருப்பதாகக் கூறினார் என குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் அர்விந்த் பாண்டியா தெரிவித்துள்ளது தெஹெல்கா வீடியோவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்களை அழைத்துப் பேசிய மோடி தாம் அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அதற்குள் மாநில
முழுவதும் முஸ்லிம்களை எல்லா வழியிலும் மூர்க்கத் தனமாக அழிக்க வேண்டும் என்றும் கூறியதாக
வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் போட்ட காவிப் பயங்கரவாதிகளின் வழியில் குறுக்கிடக்கூடாது என காவல் துறைக்கு மோடி அரசு கட்டளை இட்டது. மேலும் அடைக்கலம் தேடிவந்த முஸ்லிம்களைப் பிடித்து கலவர வெறியர்களிடம் ஒப்படைத்துத் தான் மேற்கொண்ட பணிக்கு தீரா இழுக்கையும் மோடி அரசின் காவல் துறை தேடிக் கொண்டது - நன்றி: சத்தியமார்க்கம்.காம் .


இதற்கெல்லாம் கொடியவன் மோடியும் அவனது அடிவருடிகளும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

மும்பை குண்டுவெடிப்புகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் தாவுத் இப்றாஹிம் இந்த பயங்கரவாதிகளின் டெக்னிக்கை பயன்படுத்தி, ஒரு கட்சியை துவங்கி தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் ஒரு மாநில முதல்வராகியிருக்கலாம். பிரதமராகக் கூட ஆகலாம். பாரத ரத்னா போன்ற விருதுகளெல்லாம் கிடைத்திருக்கும்!

என்ன நாஞ்சொல்றது?

3 comments:

said...

//மும்பை குண்டுவெடிப்புகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் தாவுத் இப்றாஹிம் இந்த பயங்கரவாதிகளின் டெக்னிக்கை பயன்படுத்தி, ஒரு கட்சியை துவங்கி தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் ஒரு மாநில முதல்வராகியிருக்கலாம். பிரதமராகக் கூட ஆகலாம். பாரத ரத்னா போன்ற விருதுகளெல்லாம் கிடைத்திருக்கும்!//

மரைக்கயார்,

இந்த சட்டமெல்லாம் காவிப்படைக்குத்தான் செல்லும். ஒரு இந்துத்வ பயங்காரவாதி சாதாரண அரசியல்வாதியாக இருந்து மிகப் பெரிய பயங்கரவாதத்தைச் செய்தாலும் சட்டம் தன் முகத்தை திருப்பிக் கொள்ளும். அதாவது சட்டம் அவர்கள் மீது இரும்புக் கரத்தை நீட்டாது. ஏனென்றால் காவிப்படைகளெல்லாம் இந்நாட்டு மைந்தர்கள் (!?)

ஆனால்,
தாவூத் இப்ராஹீம் பிதமராகவே இருந்தாலும் அவர் செய்தது குற்றம் குற்றமே என சட்டம் தனது கடமையை தவறாமல் செய்யும். ஏனென்றால் தாவூது இப்ராஹீம் ஒரு முஸ்லிம் என்ற சான்றே போதுமானது.

சட்டம் ஆக்டோபஸாக மாறி அவர் மீது தனது அனைத்து இரும்புக் கரங்களையும் தாராளமாகவே நீட்டும்.

said...

//மரைக்கயார்,
இந்த சட்டமெல்லாம் காவிப்படைக்குத்தான் செல்லும்.//

நீங்க சொல்றது சரிதாங்க முஸ்லிம்.

said...

பார்ப்பனரின் தவறுக்கும் மற்றவரின் தவறுக்கும் வெவ்வேறு விதமான தண்டனைகள் என்பது உங்களுக்குத் தெரியாதா மரைக்காயர்?

பார்ப்பனீய வெறிபிடித்த சோவையும், செயாக்காவையும் விட்டுத் தள்ளுங்கள். நம்முடைய நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன? சேது சமுத்திர திட்டத்திற்காக உண்ணாவிரதம் இருந்த சூத்திரன் கலைஞருக்கெதிராய் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த இவர்கள் விடுமுறை நாளின்போதும் அவசர அவசரமாய் கூடி சூத்திரனுக்கெதிராய் கருத்து கூறினர். ஆனால் இந்த மரண வியாபாரிக்கெதிராய் நீதிமன்றங்கள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது, நீதித்துறையில் மனுவின் ஆதிக்கத்தைப் பறைசாற்றவே செய்கின்றது.