Saturday, November 24, 2007

தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கலாமா?

தனது தாய்நாடான பங்களாதேசிற்கு திரும்பினால் வழக்கு விசாரணைகளை ச்ந்திக்க நேரும் என்பதால் கடந்த பத்தாண்டு காலமாக வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கும் தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கணுமாம். சொல்றது யாருன்னா விகே மல்ஹோத்ரா என்கிற பிஜேபி தலைவர்.

முஸ்லிம்கள் என்பதற்காகவே குஜராத் மக்களை கூட்டம் கூட்டமாக எரித்துக் கொன்ற அதே சங்பரிவார கும்பலைச் சேர்ந்த பிஜேபி தலைவர் ஒருவர்தான் இந்த முஸ்லிம் அம்மணி மேல் இவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறார்.
காரணம் என்னன்னா கருத்துச் சுதந்திரமாம்!

இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் என்பதற்காக ஓவியர் ஹுசைனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களும் இதே பிஜேபியினர்தான். அப்போ இவங்களோட கருத்துச் சுதந்திரம் எங்கே புல் புடுங்க போயிருந்துச்சுன்னு தெரியலை!

பிரபல இந்திய எழுத்தாளர் கமலா சுரையா முஸ்லிமாக மாறினார் என்பதற்காக அவரைக் கொல்ல முயற்சி செய்ததும் இதே இந்துத்துவ சக்திகள்தான்! கமலா சுரையாவின் கருத்துக்களுக்கு சுதந்திரம் கிடையாதா என்ன?

சரி போகட்டும்! தஸ்லிமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்துடலாம்! நரேந்திர மோடி போன்றவைகளெல்லாம் நடமாடும் பேறு பெற்ற இந்தியாவாச்சே! தஸ்லிமாவுக்கு அடைக்கலம் கொடுக்குறதால ஒன்னும் குறைஞ்சு போயிடாது.

ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்..!

'Oh You Hindu! Awake!' என்ற பெயரில் இந்துக்களை விழிப்புணர்வு பெறச் செய்யும் நூலை எழுதியவர் Dr. சட்டர்ஜி என்பவர். அரிய பல கருத்துக்களை உள்ளடக்கிய இந்நூலை எழுதியதற்காக இந்தியரான Dr. சட்டர்ஜிக்கு பாரத ரத்னா விருது கொடுத்துவிட்டு அதன்பிறகு பங்களாதேஷ் தஸ்லிமாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுப்பதைப் பற்றி யோசிக்கலாம். என்ன நாஞ்சொல்றது?

65 comments:

said...

தஸ்லிமா நஸ்ரினுக்கு தடை என்பது கண்டணத்துக்குரியதுதான். தஸ்லிமா எழுதியது தவறெனில் அதனை அம்பலப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்துவதே சரியான நிலைப்பாடு.அதைவிட்டு அடிப்பதும் துரத்துவதும் ஏற்கனவே இருக்கும் இஸ்லாமியர்கள் குறித்த பிம்பங்ளை மீட்டுருவாக்கம் செய்வதுதூன்.

நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள சாட்டர்ஜி கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

said...

பிஜேபி சங்பரிவார் என்ன சொல்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லை.

ஆனால் தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுக்கலாமா என்றால் கொடுக்கலாம் என்றே சொல்வேன்.

சட்டர்ஜிக்கு பாரத் ரத்னா பொருந்துமென்றால் அது தஸ்லீமாவுக்கும் பொருந்தும். பிஜேபிக்காரர்கள் கொடுக்கச் சொல்கின்ற காரணத்தினாலேயே தஸ்லீமாவுக்கு அடைக்கலம் கொடுப்பது தவறாகிவிடாது.

பிஜேபியின் தவறைச் சுட்டிக்காட்டுவது வேறு..தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுப்பது வேறு. இரண்டிற்கும் என்னுடைய ஆதரவு உண்டு.

said...

தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுப்பது இருக்கட்டும் சுமார் ஈராண்டுகளாக துபாயிலே இருந்து கொண்டு தாய்நாடு திரும்ப வேண்டும் எனும் ஓவியர் ஹுசைனை வரவேண்டாம் உங்கள் உயிருக்கு சங்பரிவார்களால் ஆபத்து என்கிறது நம் அரசு அதற்கென்ன செய்யலாம் ?

இதே சங்பரிவார்கள் சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை (Satanic Verses) தடை செய்தது சரியல்ல என ஆர்ப்பாட்டம் செய்தது நினைவிருக்கலாம்

said...

ஐயா,

Dr. சட்டர்ஜிக்கு எதிரான காவிக்கூட்டத்தின் நிலைப்பாடு அடிப்படைவாதமேன்றால், தஸ்லீமாவிற்கு எதிரான ஒரு சில முஸ்லீம் அமைப்புகளின் நிலைப்பாடும் அடிப்படைவாதத்தின் ஒரு முகம்தானே.

இதுகுறித்து என்னுடைய பதிவில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்

said...

ஒரு சிலர் கூறுவதாவது: ஹுசைன் செய்தது தவறு என்றால் தஸ்லீமா செய்தது தவறுதானே

வேறு சிலர் கூறுவதாவது: தஸ்லிமா செய்தது தவறு என்றால் ஹுசைன் செய்தது தவறுதனே

ஒரு சிலர் கூறுவதாவது: ஹுசைனைத் துறத்திவிட்டு தஸ்லீமாக்கு மட்டும் அடைகலம் ஏன் ?

வேறு சிலர்: தஸ்லீமாவை அரசாங்கம் அப்புறப் படுத்தியது போல ஹுசைனை ஏன் செய்யவில்லை.



இவ்வாறு ஒப்பீடளவில் எல்லோரும் எண்ணத்தை வெளிப்படுத்துகிறோமே தவிற, அவரவர்கள் நேரடியாக கருத்துக் கூற முன்வருவதில்லை. தஸ்லீமாவின் எழுத்தினை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய ஜனனாயக ரீதியில் இடமுண்டு. ஆனால் தஸ்லீமா வெளியேற்றப் படவேண்டும் என போராடுவது ஜன நாயகத்திற்கு எதிரானது. தஸ்லீமா பற்றிய எழுத்தினை விமர்சனம் செய்யலாம். ஆனால் அத்தோடு நின்று விடாமல் தஸ்லீமா வெளியேற வேண்டும் என போராடுபவர்களின் செயல் சரியா தவறா என கருத்துக் கூறினால் உங்கள் பதிவு முமையானதாக இருக்கும்.

said...

ஜி.ரா, மாலிக் கருத்துக்களுடன் அப்படியே ஒத்துப் போகிறேன்.

அவன் பண்ணான். நான் பண்ணக் கூடாதா" எனும் குரல்கள் சமீப காலங்களில் அதிகமாய்ப் பெருகிக் கொண்டே போகிறது.

ஒரு கருத்தைச் சொன்னதற்காக குஷ்பூவை தமிழ்நாட்டை விட்டே வெளியேற்று என்று சொல்லும் கூட்டத்திற்கும், இதற்கும் ஒன்றும் அதிக வித்தியாசம் இருப்பதாய்த் தெரிய வில்லை.

மத சம்பந்தப் பட்ட விஷயங்களில் எல்லாம் தயவு செய்து பி.ஜே.பியை உதாரணமாய்க் காட்டாதீர்கள். அவர்கள் எப்படி ஒருதலைபட்சமாய் நடந்துக் கொள்வார்கள் என்பது தெரியாதா என்ன?

எழுத்தை விமர்சனம் செய்யுங்கள். நாடு கடத்துங்கள் என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை.

said...

எனக்கென்னவோ தஸ்லிமாவிற்கு இங்கு அடைக்கலம் கொடுத்திருப்பதே அரசியலாகத்தான் தெரிகிறது.

அவர் ஒரு விளம்பரப் பிரியை போலத் தான் செயல் படுகிறார்; எழுத்தாளர் போல இல்லை.

இதில் bjp எரிகிற கொள்ளியில் குளிர் காய்கிறது. கருத்து சுதந்திரம் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லையா.??

said...

நண்பருக்கு..

நேற்று நண்பர் ஒருவர் சாட்டில் உரையாடும்போது இது குறித்து தெரிவித்த கருத்தை முன்வைக்கிறேன்:

"அவர்களை நானும் ஆதரிக்கிறேன்.ஆனால் அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கண்டிக்கிற அளவுக்கு இந்து பாசிசத்தை கண்டிப்பதில்லையே..தவிறவும் வங்காளதேசத்தை விட இந்தியாவில் சகிப்புத்தன்மை அதிகம் உள்ளது என்கிற குரலை அடிக்கடி பதிவு செய்கிறாரே அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.."

"இந்து அமைப்புகளை எந்த இடத்திலும் அவர் விமர்சித்ததில்லை..முஸ்லீம் அடிப்படைவாதிகளின் கோபம் இந்த புள்ளியில் இருந்தும் கூட துவங்க நியாயம் இருக்கிறது..எப்படியானாலும் அவரை இப்படி அலைக்கழிக்க விடுவதை நாம் அனைவரும் கடுமையாக கண்டிக்க வேண்டும்.."

இவ்விரண்டு கருத்துமே எனது கருத்தும்.

சல்மான ருருஷ்தி பற்றிய பேச்சு வந்ததால்..

1. அவரை பத்வா செய்தது கோமெய்னி. அதன் காரணம் உலக இஸ்லாமியர்களின் தலைமைத்துவத்திற்கான சியா -சன்னி அரசியலே.

2. இந்திய காங்கிரஸ் அதை தடை செய்தது ஓட்டிற்காக.

3. இதுவரை அந்நூல் குறித்து ஏதெனும் விமர்சனங்கள் அல்லது மறுப்பு வந்துள்ளதா? என எனக்கு தெரியவில்லை. தெரிந்தால் அவற்றை படித்து மேலதிக புரிதல் கொள்ளலாம்.

4. சல்மான ருஷ்தி அதன்பின் 'த மூர்ஸ் லாஸ்ட் சைட்' என்று ஒரு நாவல் இந்து பாசிசம் குறிப்பாக பால்தாக்கரேவை முக்கிய பாத்திரமாகக் கொண்டு எழுதியுள்ளதாக விமர்சனங்களில் படித்துள்ளேன்.

எழுத்தாளன் என்பவன் எந்த பின்புலத்தில் செயல்படுகிறான் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

நிற்க. தஸ்லிமாவை ஆதரிப்பதும் அவரை அம்பலப்படுத்துவதும் (அப்படி அவர் தவறாக எதாவது எழுதி இருந்தால்) அவசியம். அவரை விரட்ட நினைப்பது ஜனநாயக விரோதமானது என்பதே எனது நிலைப்பாடு. பாசிசத்தில் இந்து இஸ்லாம் எல்லாம் ஒன்றுதான். இரண்டும் எதிர்க்கப்பட வேண்டியவையே.

said...

//இந்து அமைப்புகளை எந்த இடத்திலும் அவர் விமர்சித்ததில்லை..முஸ்லீம் அடிப்படைவாதிகளின் கோபம் இந்த புள்ளியில் இருந்தும் கூட துவங்க நியாயம் இருக்கிறது..//

அவர் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி அவர் பேசுவதற்கே உரிமை இல்லாத சூழ்நிலை நிலவும் போது
மற்ற மதத்தைப் பற்றி அவர் என்ன சொல்லி விட முடியும்?

சங்பரிவார்கள் செய்வதும் தவறு தான் . இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்வதும் தவறு தான்.

இதற்கு அது சரி என்று கூறுபவர்கள் முட்டாள்கள்

முற்று பெறாத பதிவை எழுதியதன் நோக்கம் என்னவோ?

said...

தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் கொடுக்கப்பட்டிருக்கும் அடைக்கலம் மனிதாபிமான அடிப்படையில் நீட்டிக்கப்படவேண்டும்.

அதே சமயத்தில் தஸ்லிமாவின் வாழ்வாதாரத்துக்கு மத்திய (அ)மாநில அரசு பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம் - மதங்களை இழிவு செய்து எழுதி 'பிழைப்பு' நடத்தவேண்டிய அவரின் நிலையை தடுப்பதோடு - 'விஷ' எழுத்துக்களின் மூலம் 'அடைக்கலம்' கொடுத்த நாட்டில் உருவாகும் மதகாழ்ப்புணர்வு-மோதல்களையும் தடுக்கலாம்.

said...

//இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வரைந்தார் என்பதற்காக ஓவியர் ஹுசைனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களும் இதே பிஜேபியினர்தான்.//

ஹூசைனுக்கும் தஸ்லிமா பிரச்சினைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை பெரும்பாலும் (தங்கள் லாபத்திற்காக!) மறந்துவிடுகின்றனர். தஸ்லிமா தான் சார்ந்திருந்த மதத்தை விமர்சித்தார். ஆனால், ஹுசைன் இன்னொரு மத்தத்தில் கடவுளாக வணங்கும் கடவுளை நிர்வாணமாக வரைந்தார். அதனால், இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. தஸ்லிமா விவகாரம் இஸ்லாமியர்களின் பிரச்சினை தான், அவர் இந்தியாவிற்குள் நுழையாதவரை. ஆனால், இப்பொழுது அவரை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நம் அரசாங்கத்திற்கு உள்ளது.

இஸ்லாமை விட இந்துக்கள் விமரிசணங்களை தாங்கும் அதிக பக்குவம் உள்ளவர்கள் என்றே நினைக்கிறேன். காரணம், ஹுசைன் விவகாரம் கூட சரசுவதியை வரைந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் நிர்வாணமாக வரைந்தது தான் பிரச்சினை...ஆனால் 'பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காத மதம் தனக்கு தேவையில்லை' என்று சொன்னதற்காக 'தலை'யெடுப்பது என்பது கலைஞரின் தலையை எடுக்க சொன்ன வேதாந்தி போல காட்டுமிராண்டித்தனமானது. (இந்த பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டால் மகிழ்ச்சி)

said...

//தஸ்லீமாவின் எழுத்தினை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய ஜனனாயக ரீதியில் இடமுண்டு. ஆனால் தஸ்லீமா வெளியேற்றப் படவேண்டும் என போராடுவது ஜன நாயகத்திற்கு எதிரானது. //

மத்திய காங்கிரஸ் அரசின் 1-2-3 அமெரிக்க அணு ஒப்பந்தத் திட்டத்திற்கு ஆப்பு வைத்த கம்யூனிஸ்டுகளுக்கு ஆப்படிக்க நந்திகிராம் பிரச்சினை உதவியது. நந்திகிராம் பிரச்சினையைத் திசைதிருப்ப, தஸ்லிமா விவகாரம் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசுக்கு உதவியுள்ளது. நந்திகிராம்,தஸ்லிமா பிரச்சினைகளால் மன்மோகன்சிங் அரசின் மீதான விமர்சனங்கள் மறக்கடிக்கப்பட்டு கருத்துச் சுதந்திரம், கன்றாவிச் சுதந்திரம் என்று கத்திக் கொண்டிருக்கிறோம்.

மும்பை குண்டு வெடிப்புகளுக்குக் குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ள தாவூத் இப்றாஹிமை ஒப்படைக்க வலியுத்திக் கொண்டே, பங்களாதேஷில் தண்டனைக்குறிய குற்றம் செய்த தஸ்லிமா நஸ்ரினுக்கு அடைக்கலம் கொடுக்கச் சொல்வது முரனானது. தஸ்லிமா நஸ்ரினோ அல்லது ஒசாமா பின்லாடனோ அடைக்கலம் கொடுப்பதும் மறுப்பதும் இந்திய சட்டத்தின்பாற்பட்டது.

தஸ்லிமா, முஹம்மது நபியையும் குர்ஆனையும் இழிவாக எழுதியதால் பங்களாதேஷ் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றம் என்பதால் இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். நம்நாட்டுச் சட்டப்படியும் துவேசமாக எழுதுவது தண்டனைக்குறிய குற்றமே. ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை.

என்னைப் பொருத்தவரை, தஸ்லிமாவை மீண்டும் பங்களாதேஷ் அரசிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, நந்திகிராம் மற்றும் அமெரிக்க நலன்பேணும் 123 ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

said...

மரைக்காயர்,

இந்திய மருமகள் சோனியா காந்தியையின் தியாகத்தை விட தஸ்லிமா ஒன்றும் இந்தியாவிற்குச் செய்துவிடவில்லை. ஒருபக்கம் சோனியாவை எதிர்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் தஸ்லீமாவுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பிஜேபியின் இரட்டை முகத்தைக் கிழிக்க இன்னொரு தெகல்கா வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் பற்றி ஒப்பாரி வைக்கும் இவர்கள்தான் பெரியார் எழுதிய இராமயண இந்திப் பதிப்பைத் தடைச் செய்யச் சொல்லி உ.பியில் சாமியாடினார்கள்

said...

//ஜமாலன் said...
தஸ்லிமா நஸ்ரினுக்கு தடை என்பது கண்டணத்துக்குரியதுதான். தஸ்லிமா எழுதியது தவறெனில் அதனை அம்பலப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்துவதே சரியான நிலைப்பாடு.அதைவிட்டு அடிப்பதும் துரத்துவதும் ஏற்கனவே இருக்கும் இஸ்லாமியர்கள் குறித்த பிம்பங்ளை மீட்டுருவாக்கம் செய்வதுதூன். //

நன்றி ஜமாலன். தஸ்லிமா எழுதியதும் தவறு. அவரை அடிப்பதும் துரத்துவதும் தவறு என்பதுதான் எனது நிலைப்பாடும். ஆனால் இந்தப் பதிவில் நான் சுட்டிக்காட்ட விரும்புவது, கருத்துச்சுதந்திரத்திற்கு ஆதரவு என்ற போர்வையில் அரசியல் ஆதாயம் பெற முனையும் காவிகளின் இரட்டை வேடத்தைத்தான்.

said...

//G.Ragavan said...
பிஜேபி சங்பரிவார் என்ன சொல்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லை.

ஆனால் தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுக்கலாமா என்றால் கொடுக்கலாம் என்றே சொல்வேன்.//

உங்கள் கருத்திற்கு நன்றி ராகவன். தஸ்லிமாவை தாக்க முனைவது தவறு. அதே நேரத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவு அளிக்க வேண்டிய தேவையும் இந்தியாவுக்கு இல்லை என்பது என் கருத்து.

said...

//koothanalluran said...
தஸ்லீமாவிற்கு அடைக்கலம் கொடுப்பது இருக்கட்டும் சுமார் ஈராண்டுகளாக துபாயிலே இருந்து கொண்டு தாய்நாடு திரும்ப வேண்டும் எனும் ஓவியர் ஹுசைனை வரவேண்டாம் உங்கள் உயிருக்கு சங்பரிவார்களால் ஆபத்து என்கிறது நம் அரசு அதற்கென்ன செய்யலாம்? //

நன்றி கூத்தாநல்லூரான். இதுதான் இந்துத்துவாக்களின் இரட்டை வேடம். கருத்துச் சுதந்திரம் பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

said...

தஸ்லீமாவை யாரும் துன்புறுத்த வேண்டாம், ஏனெனில் அவர் அடைக்கலம் தேடி நம் நாட்டுக்கு வந்திருக்கிறார். எனவே, நம் வரிப்பணத்தில் அவருக்கு வேண்டிய பாதுகாப்பும் பிற வசதிகளும் செய்து கொடுக்கலாம்.

said...

//உறையூர்காரன் said...
ஐயா,

Dr. சட்டர்ஜிக்கு எதிரான காவிக்கூட்டத்தின் நிலைப்பாடு அடிப்படைவாதமேன்றால், தஸ்லீமாவிற்கு எதிரான ஒரு சில முஸ்லீம் அமைப்புகளின் நிலைப்பாடும் அடிப்படைவாதத்தின் ஒரு முகம்தானே.//

நன்றி உறையூர்க்காரன். தஸ்லீமாவை எதிர்க்க நினைப்பவர்கள் அவரை தாக்கும் அளவிற்க்கு போயிருக்கத் தேவையில்லை. மற்றபடி அவர்களின் எதிர்ப்பிற்கு காரணம் அடிப்படைவாதமா அல்லவா என்ற விவாதத்திற்கு நான் போக விரும்பவில்லை. காரணம், 'அடிப்படைவாதம்' என்றால் என்ன என்பதற்கான வரையறையை யாராலும் தீர்மானிக்க இயலாது.

said...

தஸ்லீமா பற்றிய செய்திகளின் பிண்ணனியில் நந்திகிராம் பற்றிய செய்திகள் சற்று பின்வாங்கிவிட்டது உண்மைதான்.

நந்திகிராமில் நடந்த உரிமைமீறல்களுக்காகப் போராடும்போது, அப்பிரச்சனையின் வீரியத்தைத் தனது நோக்கத்திற்கு திருப்ப, இப்பிரச்சனையில் சம்பந்தமே இல்லாத தஸ்லீமா பற்றிய பிரச்சனையினைச் சேர்த்துக் கொண்டனர், இத்ரீஸ் அலி தலைமையில் போராடியவர்கள்.

இதன் காரணமாக, நல்லடியார் கூறுவது போல் உண்மையாக விவாதிக்க வேண்டிய‌ பிரச்சனை விவாத‌த்திலிருந்து பின் தள்ளப்பட்டுவிட்டது. இது தனது இஷ்டங்களை சந்தர்பத்தினை பயன்படுத்தி இடையே செலுத்தியதால் நிகழ்ந்துவிட்டது.

வங்கதேச அரசு தாமாக தஸ்லீமாவை ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளாத‌ வரையில் இந்தியாவாக அவரை அங்கு அனுப்பினால், சந்தர்ப்பவாதிகளுக்கு செவிசாய்த்தது போலாகிவிடும்.

நந்திகிராமைப் பற்றி மத்திய அரசின் விசாரனை, கமிஷன் ஆகியவைகளை தவிர்க்க இடதுசாரியினர் அணு விஷயத்தில் இசைந்துள்ளனர் என்பதும் உண்மைதான்.

எங்கும் சந்தர்ப்பவாதம். பாதிப்போ நந்திகிராமிற்கு

said...

நிச்சயமாக அடைக்கலம் கொடுத்தாக வேண்டும்.கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா போன்ற நாடுகளே தடுக்காமல் விட்டால் வேறு யார் செய்வது? இங்கு யாரும் என்ன கருத்தும் சொல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டு. சிலரின் மனம் புண்படும் என்றெல்லாம் பார்த்தால் புதிய கருத்துக்கள் உருவாகாமல் போய்விட வாய்ப்புண்டு.
கடவுள் படங்களையும்,சிலைகளையும் செருப்பால் அடித்த இயக்கங்கள் இன்றுகூட வலிமையாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. எல்லாம் கருத்துச் சுதந்திரம்தான்.மத அடிப்படை வாதிகள் சொல்லுகிறர்கள் என்பதற்காக நஸ்ரினை திருப்பி அனுப்பக்கூடாது.

said...

பண, பதவி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளான பிஜேபியின் இன்னொரு சந்தர்ப்பவாதம் தான் இது!

நியாயம், நேர்மை என்பவை சிறிதளவாவது இருந்தால் பிணந்தின்னி மோடியை குறைந்தபட்சம் கட்சியை விட்டாவது நீக்கி இருக்கமாட்டார்களா.!!

உசேனை சொல்வது ஸ்ரீசரண், சீனுவுக்கு உவப்பாக இல்லாத நிலையில், தீபாமேத்தா, அம்பேத்கர் நினைவுக்கு வருகின்றனர்.

இந்துமதத்தின் விநோதங்கள் என்று அம்பேத்கர் எழுதிய புத்தகத்துக்குத் தடைவிதித்தது ஏன்?

இந்துத்துவ நரிகள் ஒரு தஸ்லீமா நஸரீனை எடுத்து முற்போக்கைப் போர்த்திக்கொள்ள முற்படுவதைப்போல
'அதே கருத்துச்சுதந்திரத்தின் போர்வையில்' "இந்துமதத்தின் விநோதங்கள்" என்ற நூலை இஸ்லாமியர்கள் கடைப் பரப்பினால் இந்த மடையர்கள் ஒத்துக் கொள்வார்களா?

டாக்டர் சாட்டர்ஜி விவகாரமும் இவர்களின் பொய்முகத்தை வெளிக்காட்டும். இசுலாமியர்கள் அதை முன்னெடுக்கலாம்.

said...

//மு மாலிக் said...
...தஸ்லீமாவின் எழுத்தினை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய ஜனனாயக ரீதியில் இடமுண்டு. ஆனால் தஸ்லீமா வெளியேற்றப் படவேண்டும் என போராடுவது ஜன நாயகத்திற்கு எதிரானது. தஸ்லீமா பற்றிய எழுத்தினை விமர்சனம் செய்யலாம். ஆனால் அத்தோடு நின்று விடாமல் தஸ்லீமா வெளியேற வேண்டும் என போராடுபவர்களின் செயல் சரியா தவறா என கருத்துக் கூறினால் உங்கள் பதிவு முமையானதாக இருக்கும்.//

நன்றி மாலிக். தஸ்லிமாவின் கருத்துக்களை முக்கியப்படுத்தி அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஜமாலன் சொன்னதுபோல இப்படிப்பட்டவர்களை உதாசீனம் செய்வதே சரியான வழி.

ஆனால், தனது தரங்கெட்ட எழுத்தால் தனது நாட்டிலேயே சர்ச்சைகளை எழுப்பி தேவையற்ற பிரச்னைகளை வளர்த்துவிட்ட ஒரு நபரை ஏன் இந்தியா அடைக்கலம் கொடுத்து பாதுகாக்க வேண்டும்? இந்துத்துவாக்கள் வேண்டுமானால் அவர்களின் அரசியலுக்கு உதவுவார் என்பதற்காக ஆதரவுக்கரம் நீட்டலாம். ஆனால், கருத்துச்சுதந்திரம் புண்ணாக்கு மண்ணாங்கட்டி என்று சொல்லிக்கொண்டு இவர்கள் இதை நியாயப்படுத்த முடியாது.

இந்தியாவில் காவிப்படைகளின் புண்ணியத்தில் ஏற்கனவே மதங்களுக்கிடையிலான உறவுகள் மிக சேதமடைந்திருக்கிறது. தஸ்லிமாவின் வருகை அதை மேலும் மோசமாக்கும் என்பதால் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோர ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. இதுதான் ஜனநாயகம்.

said...

அதே போலத்தான் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும்படி அரசை நிர்பந்திக்க உரிமை உள்ளது...இதுவும் ஜனநாயகம்தான்.தலிபானிஸமும், இந்துத்துவா பாசிஸமும் ஒழிக்கப் பட வேண்டிய விசயங்களாகும்.

said...

//நந்தா said...
..எழுத்தை விமர்சனம் செய்யுங்கள். நாடு கடத்துங்கள் என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை.//

நன்றி நந்தா. நாம் ஒரு இந்தியரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை. பிரச்னைக்குரிய ஒரு வெளிநாட்டு நபரைப் பற்றி பேசுகிறோம். அந்த நபரை இங்கே தங்க அனுமதித்தால் மேலும் பிரச்னைகள் அதிகமாகும் என்றால் அவரை வெளியேறச் சொல்வது நாடுகடத்துவதாகாது.

ஆனால், ஒரு இந்தியக் குடிமகனான ஓவியர் ஹுசைன் இந்துத்துவ பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலால் இந்தியாவிற்குள் நுழைய முடியாமல் இருக்கிறார். இது அவரை நாடுகடத்தியிருப்பதற்கு ஒப்பாகும். அவரை இந்நிலைக்கு ஆளாக்கியிருக்கும் அதே கும்பலே ஒரு வெளிநாட்டு நபருக்கு வக்காலத்து வாங்கி பேசுவது வேதனையான வேடிக்கை.

said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
எனக்கென்னவோ தஸ்லிமாவிற்கு இங்கு அடைக்கலம் கொடுத்திருப்பதே அரசியலாகத்தான் தெரிகிறது.

அவர் ஒரு விளம்பரப் பிரியை போலத் தான் செயல் படுகிறார்; எழுத்தாளர் போல இல்லை.

இதில் bjp எரிகிற கொள்ளியில் குளிர் காய்கிறது. கருத்து சுதந்திரம் பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தையே இல்லையா.??//

ரொம்பச் சரியா சொன்னீங்க ஜ்யோவ்ராம் சுந்தர். நன்றி.

said...

இதே தஸ்லிமா நஸ்ரின்தான் இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் துளியும் தொடர்பில்லை; தீவிரவாதத்துடன் இது யூத, கிறிஸ்தவ மிஷனரிகளின் சூழ்ச்சி, இஸ்லாம்போபியா" என்றெல்லாம் சொன்னதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

பிஜேபியை பொருத்தவரை பெண்ணுரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவை இஸ்லாத்திற்கு எதிராக இருந்தால்தான் ஆதரிப்பார்கள்.உண்மையில் அதில் இவர்களுக்கு ஆர்வமிருந்திருந்தால் சென்ற வாரம் சபரி மலை ஐயப்பனைத் தரிசிக்கச் சென்ற பெண்ணை அடித்து விரட்டும்போதும் ஆர்ப்பரித்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.ஏனென்றால் ஆகம விதிப்படி சன்னிதியில் ஒரு பெண் 'உரிமை'யுடன் புழங்குவது ஹராம்!

said...

பேராசிரியர் முகத்தில் கரியை பூசிய கட்சித் தொண்டர்கள்
ராய்ப்பூர் :இந்து தெய்வங்களை அவமதித்த மருத்துவ கல்லுõரி பேராசிரியர் முகத்தில் கரியை பூசி, பாரதிய ஜனசக்தி மற்றும் பஜ்ரங் தள் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர்.
சட்டீஸ்கார் மாநிலம் ராய்ப்பூரில், ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லுõரி உள்ளது. அங்கு பேராசிரியராக இருப்பவர் வி.கே.ஜெயின். சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்த கல்லுõரியில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விழாவில், பாடல் ஒன்றுக்கு விளக்கம் அளித்த போது, பேராசிரியர் ஜெயின் இந்து தெய்வங்களை பற்றி தவறாக பேசியுள்ளார். அதற்கு, சில டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே, ஜெயின் மன்னிப்பு கேட்டார்.

எனினும், அந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பாரதிய ஜனசக்தி மற்றும் பஜ்ரங் தள் ஆதரவாளர்கள், நேற்று முன் தினம் அந்த கல்லுõரியை முற்றுகை இட்டனர். பேராசிரியர் ஜெயின் வகுப்பை முடித்து விட்டு, வெளியில் வந்ததும், அவருடைய முகத்தில் கரியை பூசி, அவரை அவமானப்படுத்தினர்.அந்த ஆர்ப்பாட்டங்கள் முடிந்து, நெடுநேரம் கழித்த பிறகு, அந்த இடத்திற்கு வந்த போலீசார், பேராசிரியரை மீட்டனர்.

**********
பத்திரிகை அலுவலகம் சூறை
மும்பை : சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை வில்லனாக சித்தரித்த, "அவுட்லுக்' ஆங்கில வார இதழின் மும்பை அலுவலகத்தை, சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.
"அவுட்லுக்' வார இதழின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்த இதழில், வில்லன்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப் பட்டு இருந்தது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் அசாருதீன் ஆகியோருடன் சிவசேனா தலைவர் பால் தாக்கரே பெயரும், கேலிச் சித்திரமும் வெளியிடப்பட்டு இருந்தது. ஹிட்லர் போன்ற தோற்றத்தில், பால் தாக்கரே சித்தரிக்கப் பட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர் கள், "அவுட்லுக்' இதழின் அலுவலகத்துக்குள் நேற்று புகுந் தனர். அங்கிருந்த பொருட் களை சூறையாடினர்.

DINAMALAR 15/08/07

ANY COMMENTS?

said...

நண்பர் மரைக்காயர்,

தஸ்லீமாவின் அந்த பிரச்சனைக்குள்ளான கருத்து என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?

said...

//தஸ்லிமாவை ஆதரிப்பதும் அவரை அம்பலப்படுத்துவதும் (அப்படி அவர் தவறாக எதாவது எழுதி இருந்தால்) அவசியம். அவரை விரட்ட நினைப்பது ஜனநாயக விரோதமானது என்பதே எனது நிலைப்பாடு. பாசிசத்தில் இந்து இஸ்லாம் எல்லாம் ஒன்றுதான். இரண்டும் எதிர்க்கப்பட வேண்டியவையே.//

தஸ்லிமாவை விரட்டுவது என்பதைவிட இந்தியாவில் மதரீதியிலான பிரச்னைகள் உருவாக வெளிநாட்டினரான அவரும் அவரது பேச்சுக்களும் காரணமாக அமைந்துவிடும் விடும் என்பதால் அதை அனுமதிக்கக்கூடாது என்பதே சரியாக படுகிறது. இந்தியாவில் இருக்கும் பிரச்னைகள் போதாது என்று வேலியில போறதையும் எடுத்து வேட்டிக்குள்ள விட்டுக்கலாமா?

இஸ்லாமில் பாசிஸம் என்று எதைச் சொல்கிறீர்கள்?

said...

//இஸ்லாமில் பாசிஸம் என்று எதைச் சொல்கிறீர்கள்?//

பாசிஸத்தின் முதல்கூறு கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது. இஸ்லாம் பெயரால் அதனை செய்தால் அதுவும் பாசிஸமே என்பதே நான் சுட்டிக் காட்டியது.

Anonymous said...

//பாசிசத்தில் இந்து இஸ்லாம் எல்லாம் ஒன்றுதான். இரண்டும் எதிர்க்கப்பட வேண்டியவையே.//

சகோதரர் ஜமாலன்

மேற்கண்ட வரிகளிலிருந்து என்னக் கூற வருகிறீர்கள்?. இஸ்லாத்தில் பாசிசம் உண்டு என்றா?.

வந்தேறிப் பார்ப்பனர்களின் மத அடிப்படையே பாசிசம் தான். இதனை பார்ப்பன மதத்தின் வேதங்களை வைத்துத் தெளிவாக நிரூபிக்க இயலும்.

அதே போன்று இஸ்லாத்திலும் பாசிசம் எனில், இஸ்லாமிய மார்க்கத்தின் வேதத்தைக் கொண்டு அதனை நிரூபிக்க வேண்டும்.

லஜ்ஜையில்லாமல் தன் கர்ப்பப்பாத்திரத்தை தான் கட்டிக்கொண்டவன் அல்லாமல் தான் விரும்பும் அனைவருக்கும் கொடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும் எனக் கூறும் தஸ்லீமாவிற்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுப்பதும் கொடுக்காததும் இந்திய அரசின் விவகாரம்.

இதில் இஸ்லாம் எங்கிருந்து வந்தது?. விபச்சாரம் செய்யும் சுதந்திரம் பெண்ணுக்கு வேண்டும் என நவீனப் பெண்ணியம் பேசும் தஸ்லீமாவிற்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கக்கூடாது என இஸ்லாம் உங்களிடம் கூற வந்ததா?.

சில அதிகப்பிரசங்கிகள் இஸ்லாத்தின் பெயரால் ஏதாவது உளறிக் கொட்டுகின்றார்கள் எனில் உங்களின் பாசிசக் கருத்துக்கள் அவர்களுக்கு எதிராக இருக்கட்டும். அடிப்படையில்லாமல் அல்லது தெரியாமல் இஸ்லாத்தின் மீது வரம்பு மீறிய அவதூறு வார்த்தைகளை அவசரப்பட்டு விட வேண்டாம்.

இறை நேசன்.

said...

//ஸ்ரீசரண் said...
அவர் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி அவர் பேசுவதற்கே உரிமை இல்லாத சூழ்நிலை நிலவும் போது
மற்ற மதத்தைப் பற்றி அவர் என்ன சொல்லி விட முடியும்?
சங்பரிவார்கள் செய்வதும் தவறு தான் . இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்வதும் தவறு தான். இதற்கு அது சரி என்று கூறுபவர்கள் முட்டாள்கள்
முற்று பெறாத பதிவை எழுதியதன் நோக்கம் என்னவோ//

ஸ்ரீசரன், தான் சார்ந்த மதத்தைப் பற்றி பேசும் ஒருவருக்கு சம்பந்தமில்லாமல் சங்பரிவாரங்கள் பரிந்துகொண்டு வருவதன் காரணம் என்னவோ? இவர்கள் என்ன கருத்துச் சுதந்திரத்தின் காவலர்களா? சகோதரர் நல்லடியார் அவரது பின்னூட்டத்தில் இரு சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு என்ன பதில்? இவர்களைப் போல 'கருத்து சொல்கிறேன்' என்ற பெயரில் தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து உளறிக் கொட்டுபவர்கள்தான் அடிமுட்டாள்கள் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு பதிவு என்ற வகையில் இது முற்றுப்பெற்றுதான் இருக்கிறது. ஆனால் அதன் கருத்துக்கள் மீதான விவாதங்கள்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

said...

//பிறைநதிபுரத்தான் said...
தஸ்லிமா நஸ்ரினுக்கு இந்தியாவில் கொடுக்கப்பட்டிருக்கும் அடைக்கலம் மனிதாபிமான அடிப்படையில் நீட்டிக்கப்படவேண்டும். //

நன்றி பிறைநதிபுரத்தான். தஸ்லிமா ஏதோ போக்கிடம் இல்லாமல் இந்தியாவில் வந்து அடைக்கலம் புகுந்திருப்பதுபோல நினைத்து சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் உண்மை நிலவரம் அதுமாதிரி தெரியவில்லை. இது போல போலி சீர்திருத்தம் பேசுபவர்களை கவுரவித்து அவார்டுகள் கொடுப்பதற்கென்றே சில நாடுகளும் அமைப்புகளும் இருக்கின்றன. அத்தகைய ஒரு நாட்டில் போய் இவர் அடைக்கலம் கேட்கலாமே! இந்தியாவிற்கு இருக்கும் தலைவலிகள் போதாதா?

said...

//சீனு said...
ஹூசைனுக்கும் தஸ்லிமா பிரச்சினைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை பெரும்பாலும் (தங்கள் லாபத்திற்காக!) மறந்துவிடுகின்றனர். தஸ்லிமா தான் சார்ந்திருந்த மதத்தை விமர்சித்தார். ஆனால், ஹுசைன் இன்னொரு மத்தத்தில் கடவுளாக வணங்கும் கடவுளை நிர்வாணமாக வரைந்தார். அதனால், இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. //

தான் சார்ந்த மதத்தை தஸ்லிமா விமர்சித்ததற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இந்துத்துவாக்கள் தலையிட என்ன அவசியம் வந்தது? அதிலும் ஒரு ஓவியத்தைக்கூட கலைக்கண்ணோடு பார்க்க முடியாதவர்களா இன்னொரு மதத்தினரின் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுவது?

//தஸ்லிமா விவகாரம் இஸ்லாமியர்களின் பிரச்சினை தான், அவர் இந்தியாவிற்குள் நுழையாதவரை. ஆனால், இப்பொழுது அவரை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நம் அரசாங்கத்திற்கு உள்ளது.//

வெளிநாட்டைச் சேர்ந்த தஸ்லிமாவை பாதுகாப்பதற்குமுன் இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு பயந்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான ஓவியர் ஹுசைனை பாதுகாப்பாக இந்தியாவிற்கு வரச்செய்து அவரது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது.

//இஸ்லாமை விட இந்துக்கள் விமரிசணங்களை தாங்கும் அதிக பக்குவம் உள்ளவர்கள் என்றே நினைக்கிறேன். //
அப்படியா சொல்கிறீர்கள்? சகோதரர் நல்லடியார் இரு சம்பவங்களை தனது பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்? முதல்வர் கருணாநிதியின் தலையெடுக்க விதிக்கப்பட்ட 'பத்வா'?

said...

//நல்லடியார் said...
தஸ்லிமா, முஹம்மது நபியையும் குர்ஆனையும் இழிவாக எழுதியதால் பங்களாதேஷ் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றம் என்பதால் இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். நம்நாட்டுச் சட்டப்படியும் துவேசமாக எழுதுவது தண்டனைக்குறிய குற்றமே. ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுப்பது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை.//

நன்றி நல்லடியார். குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதென்றால் இந்துத்துவாக்களுக்கு ரொம்ப பிடிக்கும்போல. குஜராத் கொடூரங்களை அரங்கேற்றிய மிருகங்கள்கூட சிலகாலம் நரேந்திரமோடியின் பாதுகாப்பில் இருந்தார்களாமே!

said...

//ஒருபக்கம் சோனியாவை எதிர்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் தஸ்லீமாவுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பிஜேபியின் இரட்டை முகத்தைக் கிழிக்க இன்னொரு தெகல்கா வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் பற்றி ஒப்பாரி வைக்கும் இவர்கள்தான் பெரியார் எழுதிய இராமயண இந்திப் பதிப்பைத் தடைச் செய்யச் சொல்லி உ.பியில் சாமியாடினார்கள்//

நல்லடியார், முரண்பாடுகளின் மொத்த உருவமே இந்துத்துவாக்கள். கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் இவர்கள் பேசுகிறார்கள்!!!

said...

//வஹ்ஹாபி said...
தஸ்லீமாவை யாரும் துன்புறுத்த வேண்டாம், ஏனெனில் அவர் அடைக்கலம் தேடி நம் நாட்டுக்கு வந்திருக்கிறார். எனவே, நம் வரிப்பணத்தில் அவருக்கு வேண்டிய பாதுகாப்பும் பிற வசதிகளும் செய்து கொடுக்கலாம்.//

என்னக் கொடுமை சார் இது?

:(

said...

//வங்கதேச அரசு தாமாக தஸ்லீமாவை ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளாத‌ வரையில் இந்தியாவாக அவரை அங்கு அனுப்பினால், சந்தர்ப்பவாதிகளுக்கு செவிசாய்த்தது போலாகிவிடும். //

வங்க தேச அரசு தஸ்லிமாவை ஒப்படைக்கச்சொல்லி கேட்குமா என்பது சந்தேகமே! தஸ்லிமா பிரச்னைகளை தவிர்க்க விரும்புபவராக இருந்தால் இதுபோன்ற தொல்லைகள் இல்லாத வேறு ஒரு நாட்டிற்கு சென்று வசிக்க முடியும். ஆனால் வெகுவிரைவிலேயே ஊடகங்கள் அவரை மறந்துவிடும். எனக்கென்னவோ, ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னதுபோல அவர் ஒரு விளம்பரப் பிரியையாக இருப்பார் என்று தோன்றுகிறது.

said...

நண்பர் வளர்மதியிடம் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். இதில் உள்ள சில கருத்தாக்கங்கள் அவருடையவை. எனக்கு ப்ளாக் இல்லை. அவர் விரிவாக‌ எழுதுவார் என நினைக்கிறேன்.

இந்திய அரசுக்கு சில முஸ்லிம் நாடுகளைவிட (அதாவது பாகிஸ்தான், வங்காளம், சவுதி ...) தான் அதிக ஜனநாயமானது எனக் காண்பிக்க ஆசை (ஆனால் நமது ஜனநாயகம் தான் சந்தி சிரிக்கிறதே ‍~ நல்லடியார் கொடுத்த உதாரணங்கள் மட்டுமே போதுமே!). இது தஸ்லிமாவிற்கு அடைக்கலம் கொடுக்கக் காரணமான அரசியல். மட்டுமல்லாது இசுலாமியர்களைச் சகிப்புத் தன்மை அற்றவர்கள் என்று 'காண்பிக்க' இது கூடுதல் காரணமாகிறது.

எழுத்தாளர் எழுதுவதற்கு என்ன வேண்டும்.? தனிமை அல்லது எழுதுவதற்கு ஏற்ற சூழல். தஸ்லிமா என்ன செய்கிறார்.? ஏற்கனவே இருக்கும் பிளவுகளை இன்னும் அதிகப் படுத்துகிறார் (பின் அவர் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி என்ற பெயரில் உளறிக் கொட்டுவதும், ஊர் ஊராகச் செல்வதும் எதற்காகவாம்.?)

அவரது எழுத்துக்களையும் படித்திருக்கிறேன். மிகச் சாதாரணமான எழுத்து என்பதைத் துளி இலக்கியப் பரிச்சயம் இருப்பவர்கள் கூடச் சொல்லி விடுவார்கள்.

இங்கு அடைக்கலம் புகுந்திருப்பது அவருக்கு நல்ல விளம்பரம் (நன்றாக அவரது புத்தகங்கள் விற்கிறதே.!!). இதைக் கூட்ட‌த் தான் அவ‌ர‌து ப‌ல‌ ஸ்ட‌ண்டுக்க‌ள் (என்னுடைய‌ தாய் வீடு க‌ல்க‌த்தா இன்ன‌ பிற‌).

பார்த்துக் கொண்டே இருங்க‌ள்; இன்னும் சில‌ நாட்க‌ளில் ஜெய‌ல‌லிதா த‌ஸ்லிமாவை ஆத‌ரித்து ஒரு அறிக்கை விடுவார். அது அவ‌ர‌து பி.ஜே.பி. (சார்ந்த‌) அரசிய‌ல்.

இருக்கும் பிர‌ச்ச‌னை போதாதென்று த‌ஸ்லிமா வேறு...

said...

//இஸ்லாமை விட இந்துக்கள் விமரிசணங்களை தாங்கும் அதிக பக்குவம் உள்ளவர்கள் என்றே நினைக்கிறேன். காரணம், ஹுசைன் விவகாரம் கூட சரசுவதியை வரைந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் நிர்வாணமாக வரைந்தது தான் பிரச்சினை...ஆனால் 'பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காத மதம் தனக்கு தேவையில்லை' என்று சொன்னதற்காக 'தலை'யெடுப்பது என்பது கலைஞரின் தலையை எடுக்க சொன்ன வேதாந்தி போல காட்டுமிராண்டித்தனமானது. (இந்த பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டால் மகிழ்ச்சி)// - சீனு

இந்துக்கள் விமர்சனங்களை தாங்கும் பக்குவம் உள்ளவர்கள். சபாஷ்!

ஏன் ஹுசைன் வரைந்த ஓவியத்தை தாங்க முடியாமல் போனது? (தொடர்ந்து சுட்டியை பார்க்க)

தஸ்லீமா மதம் தேவை இல்லை என்று நகர்ந்திருந்தால் அவரை யார் சீண்டப் போகிறார்கள். இவரெல்லாம் மதத்தில் இல்லாமல் போனால் எதுவும் குடிமுழுகி விடாது

''பில்லாராக் கோவிலில் சரஸ்வதி ஆடையின்றி வீணையுடன் மட்டும் காட்சி தரும் சிற்பம் இன்றும் இருக்கிறது'' என்பதை மூடி மறைக்கின்றார். இதன் மூலம் தான் ஒரு நாலாந்தர எழுத்தாளன் என்பதை நிரூபித்து விட்டார்.

சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த ஓவியர் ஹுசைனை ஆதாரித்து எழுதவில்லை! சரஸ்வதியின் நிர்வாண சிலையாக ஏற்றுக் கொண்டுள்ள ஒரு மதம் அதை நிர்வாணமாக வரைந்தவரை ஏன் கண்டிக்க வேண்டும்?

வரைந்தவர் முஸ்லிம் என்பதாலா?

said...

//பாபு மனோகர் said...
நிச்சயமாக அடைக்கலம் கொடுத்தாக வேண்டும்.கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா போன்ற நாடுகளே தடுக்காமல் விட்டால் வேறு யார் செய்வது? //

வெளிநாட்டைச் சேர்ந்த தஸ்லிமாவை பாதுகாப்பதற்குமுன் இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு பயந்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான ஓவியர் ஹுசைனை பாதுகாப்பாக இந்தியாவிற்கு வரச்செய்து அவரது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது.

//கடவுள் படங்களையும், சிலைகளையும் செருப்பால் அடித்த இயக்கங்கள் இன்றுகூட வலிமையாகத்தான் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.//

இதெல்லாம் அவரவர்கள் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. விநாயக சதுர்த்திக்கு பிறகு கேட்பாரற்று குப்பையோடு குப்பையாக ஒதுக்கித் தள்ளப்பட்டிருந்த கடவுள் சிலைகளின் படங்கள் இணையத்தில் பவனி வந்தன. கடவுளர்க்கு இந்நிலை ஏற்பட யார் காரணம்? பக்தர்களன்றோ?

said...

//புகழேந்தி said...
...இந்துமதத்தின் விநோதங்கள் என்று அம்பேத்கர் எழுதிய புத்தகத்துக்குத் தடைவிதித்தது ஏன்?

இந்துத்துவ நரிகள் ஒரு தஸ்லீமா நஸரீனை எடுத்து முற்போக்கைப் போர்த்திக்கொள்ள முற்படுவதைப்போல
'அதே கருத்துச்சுதந்திரத்தின் போர்வையில்' "இந்துமதத்தின் விநோதங்கள்" என்ற நூலை இஸ்லாமியர்கள் கடைப் பரப்பினால் இந்த மடையர்கள் ஒத்துக் கொள்வார்களா?//

நன்றி புகழேந்தி. கருத்துச் சுதந்திரம் கத்திரிக்கா சுதந்திரம் என்றெல்லாம் பினாத்திக் கொண்டு திரியும் காவிப்படையினர் இந்நூலை படித்தாலாவது தங்கள் உண்மை நிலையை உணர வாய்ப்பு ஏற்படும். ஒருவேளை அதையும் ஒரு முஸ்லிம் வந்து சொன்னால்தான் இவர்களுக்கு உறைக்குமோ என்னவோ!

said...

//நல்லடியார் said...
இந்து தெய்வங்களை அவமதித்த மருத்துவ கல்லுõரி பேராசிரியர் முகத்தில் கரியை பூசி, பாரதிய ஜனசக்தி மற்றும் பஜ்ரங் தள் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை வில்லனாக சித்தரித்த, "அவுட்லுக்' ஆங்கில வார இதழின் மும்பை அலுவலகத்தை, சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.//

தகவலுக்கு நன்றி நல்லடியார். இந்த வானரப்படைகள்தான் இந்தியாவில் கருத்து சுதந்திரத்தை காவல் காக்க புறப்பட்டிருக்கிறார்கள். வாழ்க ஜனநாயகம்!

said...

//லொடுக்கு said...
நண்பர் மரைக்காயர்,
தஸ்லீமாவின் அந்த பிரச்சனைக்குள்ளான கருத்து என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?//

சொல்ல லஜ்ஜையா இருக்குங்க.

எதுக்கும் இங்கே தேடிப் பாருங்க

said...

//ஜமாலன் said...

பாசிஸத்தின் முதல்கூறு கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது. இஸ்லாம் பெயரால் அதனை செய்தால் அதுவும் பாசிஸமே என்பதே நான் சுட்டிக் காட்டியது.//

நண்பரே,
இஸ்லாத்தில் பாசிஸம் என்பதற்கும் இஸ்லாம் பெயரால் சிலர் செய்யும் பாசிஸம் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? நீங்கள் சுட்டிக் காட்டுவது இரண்டாம் வகை என்றால் அதற்கு நாம் இஸ்லாமை குறை சொல்ல முடியாதே! இஸ்லாமிய பெயர்களைக் கொண்ட தஸ்லிமா, ஹெச்.ஜி.ரசூல் போன்றவர்கள் சொல்வதையெல்லாம் நாம் இஸ்லாமாக ஏற்றுக்கொள்ள முடியாது அல்லவா!

said...

//இறை நேசன் said...

வந்தேறிப் பார்ப்பனர்களின் மத அடிப்படையே பாசிசம் தான். இதனை பார்ப்பன மதத்தின் வேதங்களை வைத்துத் தெளிவாக நிரூபிக்க இயலும்.

அதே போன்று இஸ்லாத்திலும் பாசிசம் எனில், இஸ்லாமிய மார்க்கத்தின் வேதத்தைக் கொண்டு அதனை நிரூபிக்க வேண்டும்.//

நன்றாக சொன்னீர்கள் இறைநேசன். நன்றி.

said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நண்பர் வளர்மதியிடம் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். இதில் உள்ள சில கருத்தாக்கங்கள் அவருடையவை. எனக்கு ப்ளாக் இல்லை. அவர் விரிவாக‌ எழுதுவார் என நினைக்கிறேன்.//

கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.

said...

//அபூ முஹை said...
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த ஓவியர் ஹுசைனை ஆதாரித்து எழுதவில்லை! சரஸ்வதியின் நிர்வாண சிலையாக ஏற்றுக் கொண்டுள்ள ஒரு மதம் அதை நிர்வாணமாக வரைந்தவரை ஏன் கண்டிக்க வேண்டும்?

வரைந்தவர் முஸ்லிம் என்பதாலா?//

கருத்துக்களுக்கு நன்றி அபூமுஹை. நீங்கள் தந்த சுட்டியில் உள்ள பதிவு இந்துத்துவாக்களின் இரட்டை வேடத்தை மிக அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

said...

//பாசிஸத்தின் முதல்கூறு கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது. இஸ்லாம் பெயரால் அதனை செய்தால் அதுவும் பாசிஸமே என்பதே நான் சுட்டிக் காட்டியது.//

அதே.

//வந்தேறிப் பார்ப்பனர்களின் மத அடிப்படையே பாசிசம் தான்.//

சரி! பார்ப்பனர்களை விட மத அடிப்படைவாதம் இஸ்லாமில் மிக அதிகமாக உள்ளது. இஸ்லாத்தை ஒருவர் விமரிசித்தால் உடனே பத்வா. சமீபத்தில் சல்மான் பிள்ளையாரை வழிபட்டார் என்பதற்கு உடனே பத்வா. ஏன்? அப்பொழுது சொல்வது தானே மத அடிப்படைவாதம் வேண்டாம் என்று?

//ஸ்ரீசரன், தான் சார்ந்த மதத்தைப் பற்றி பேசும் ஒருவருக்கு சம்பந்தமில்லாமல் சங்பரிவாரங்கள் பரிந்துகொண்டு வருவதன் காரணம் என்னவோ?//

சங்க பரிவாரங்கள் இங்கே உள்ளே வர லாயக்கற்றவர்கள் தான். மிதவாதிகளின் தலையீட்டை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

//தான் சார்ந்த மதத்தை தஸ்லிமா விமர்சித்ததற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் இந்துத்துவாக்கள் தலையிட என்ன அவசியம் வந்தது?//

அது தான் சொன்னேனே! "அவர் இந்தியாவில் நுழையாதவரை"ன்னு...திரும்ப படியுங்கள்.

//அதிலும் ஒரு ஓவியத்தைக்கூட கலைக்கண்ணோடு பார்க்க முடியாதவர்களா இன்னொரு மதத்தினரின் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுவது? //
//நல்லடியார், முரண்பாடுகளின் மொத்த உருவமே இந்துத்துவாக்கள். கருத்துச் சுதந்திரம் பற்றியெல்லாம் இவர்கள் பேசுகிறார்கள்!!!//

சூப்பர். அப்போ டேனிஷ்காரர்கள் வரைந்த கார்ட்டூனையும் கலைக்கண்ணோடும், கருத்து சுதந்திரம்ன்னு பார்ப்பது தானே? இங்கே பிரச்சினை சரசுவதியை வரைந்தது அல்ல. நிர்வாணமாக வரைந்தது. இதையும் மேலேயே சொல்லியிருக்கிறேன்.

//வெளிநாட்டைச் சேர்ந்த தஸ்லிமாவை பாதுகாப்பதற்குமுன் இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு பயந்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான ஓவியர் ஹுசைனை பாதுகாப்பாக இந்தியாவிற்கு வரச்செய்து அவரது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது.//

கண்டிப்பாக. முதலில் அவரை வெளியேற்றியதே தவறு. அதுவும் அவர் வருத்தம் தெரிவித்தும் விட்டார். பின் அவரை தண்டிப்பது என்பது தவறு.

//முதல்வர் கருணாநிதியின் தலையெடுக்க விதிக்கப்பட்ட 'பத்வா'?//

இது காட்டுமிராண்டித்தனமானது என்று என் பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்கிறேனே. படிக்கவில்லையா? ஒப்பீட்டளவில் பார்த்தால் பத்வாக்கள் இந்துக்கள் கொடுப்பது மிக மிக சொற்பம். இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது. ஆனால், அந்த ஒரு சாமியாருக்கே எவ்வளவு எதிர்ப்புக்கள். ஆனால், சல்மானுக்கு, டேனியல் பியேர்ல்க்கு, அவனுக்கு பத்வா, இவனுக்கு பத்வான்னு ஏகப்பட்ட பத்வாக்கள். ஆனா ஊனா தலையெடு...

//மிகச் சாதாரணமான எழுத்து என்பதைத் துளி இலக்கியப் பரிச்சயம் இருப்பவர்கள் கூடச் சொல்லி விடுவார்கள்.//

அப்படியா! அந்த எழுத்துக்கேவா இவ்வளவு எதிர்ப்புகள்? (நான் படித்ததில்லை...)

//இங்கு அடைக்கலம் புகுந்திருப்பது அவருக்கு நல்ல விளம்பரம் (நன்றாக அவரது புத்தகங்கள் விற்கிறதே.!!). //

இனிமே தாங்க படிக்கனும்.

/////
இந்துக்கள் விமர்சனங்களை தாங்கும் பக்குவம் உள்ளவர்கள். சபாஷ்!

ஏன் ஹுசைன் வரைந்த ஓவியத்தை தாங்க முடியாமல் போனது? (தொடர்ந்து சுட்டியை பார்க்க)
/////

ஐயோ! எத்தனை தடவை சொல்வது..."ஏன் டேனிஷ்காரர்கள் வரைந்த ஓவியத்தை தாங்க முடியாமல் போனது? (சுட்டி தேவையே இல்லை)...

//தஸ்லீமா மதம் தேவை இல்லை என்று நகர்ந்திருந்தால் அவரை யார் சீண்டப் போகிறார்கள். இவரெல்லாம் மதத்தில் இல்லாமல் போனால் எதுவும் குடிமுழுகி விடாது//

அடேங்கப்பா! இஸ்லாமைவிட்டு வெளியே போகலாமா? சொல்லவேஇல்லையே!!!

/////
சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்த ஓவியர் ஹுசைனை ஆதாரித்து எழுதவில்லை! சரஸ்வதியின் நிர்வாண சிலையாக ஏற்றுக் கொண்டுள்ள ஒரு மதம் அதை நிர்வாணமாக வரைந்தவரை ஏன் கண்டிக்க வேண்டும்?

வரைந்தவர் முஸ்லிம் என்பதாலா?
/////

அப்போ அடுத்தவன் கடவுள் என்றால் உருவம் கொடுக்கலாமா? ஏன்? அது முஸ்லீம் கடவுள் இல்லை என்பதாலா?

said...

//பாசிஸத்தின் முதல்கூறு கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது. இஸ்லாம் பெயரால் அதனை செய்தால் அதுவும் பாசிஸமே என்பதே நான் சுட்டிக் காட்டியது//

சகோதரர் ஜமாலன்,

வணக்கத்திற்குறிய இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ அழைப்பைப் புறக்கணித்து, ஏற்றுக் கொண்டவர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை அவிழ்த்து விட்டும் சமூகப் பகிஷ்கரம் செய்தும் FREEDOM OF SPEEAH கொடுக்க மறுத்த பாகன் Fascist களின் வரலாற்றை அறிந்துமா, இஸ்லாத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று வரலாற்றைத் திரித்த கூட்டத்தில் ஒருவராகிப் போனீர்?

தஸ்லிமா கேட்டது கருப்பைச் சுதந்திரம்;கருத்துச் சுதந்திரம் அல்ல நண்பரே!

said...

சீனுவின் பின்னூட்டங்களைப் படித்து விட்டு புல்லரித்துப் போனேன்.

// சமீபத்தில் சல்மான் பிள்ளையாரை வழிபட்டார் என்பதற்கு உடனே பத்வா. ஏன்? அப்பொழுது சொல்வது தானே மத அடிப்படைவாதம் வேண்டாம் என்று?//

பிள்ளையாரை வழிபடுவது சல்'மான்' கானின் தனிப்பட்ட பிரச்சினை. அதை சல்'மான்'கான் என்ற முஸ்லிம் பெயர் கொண்டு செய்ததால் முல்லாக்கள் உணர்ச்சி வயப்பட்டு பத்வா கொடுத்திருக்கிறார்கள். சல்மான்கான் தன்னை முஸ்லிம் என்று எப்போது சொல்லிக் கொண்டார்? (பெயரைத்தவிர) என்பது அந்த முல்லாக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

//பார்ப்பனர்களை விட மத அடிப்படைவாதம் இஸ்லாமில் மிக அதிகமாக உள்ளது. இஸ்லாத்தை ஒருவர் விமரிசித்தால் உடனே பத்வா.//

இஸ்லாத்தின் அடிப்படைகள் தெரியாமல் சீனு எழுதுகிறார். யாரெல்லாம் முஸ்லிம்; ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும். எப்படியெல்லாம் வாழக்கூடாது போன்ற அடிப்படைகள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதால், இஸ்லாத்தில் மட்டும்தான் முழுமையான மதஅடிப்படைவாதம் உள்ளது. பார்ப்பனர்கள் மதஅடிப்படைகளைப் பேணுகிறார்களா என்பதைப் பற்றி சீனுதான் தெளிவுபடுத்த வேண்டும்.

//சூப்பர். அப்போ டேனிஷ்காரர்கள் வரைந்த கார்ட்டூனையும் கலைக் கண்ணோடும், கருத்து சுதந்திரம்ன்னு பார்ப்பது தானே? .//

//ஐயோ! எத்தனை தடவை சொல்வது..."ஏன் டேனிஷ்காரர்கள் வரைந்த ஓவியத்தை தாங்க முடியாமல் போனது? (சுட்டி தேவையே இல்லை)...//

//அப்போ அடுத்தவன் கடவுள் என்றால் உருவம் கொடுக்கலாமா? ஏன்? அது முஸ்லீம் கடவுள் இல்லை என்பதாலா? //

இறைவனுக்கு உருவமில்லை என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. உருவப்படங்களையும் வரைவதும், ஆராதிப்பதும்கூட முஸ்லிம்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. முஹம்மது நபியைப் புகழ்வதற்காகக் கூட உருவமாகத் தீட்டுவதை வெறுத்துள்ளார்கள். ஏனென்றால் பிற்காலத்தில் முஹம்மது நபியின் உருவம் வணங்கப்பட்டு விடக்கூடாது என்ற 'அடிப்படை'யில்.

புகழ்வதற்காக ஓவியமாக வரைவதையே வெறுக்கும் ஒருவரைப் பற்றி இகழ்வதற்காக ஓவியமாக வரைவதை கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் எதிர்ப்பார்ப்பதுதான் பாசிசம் என்று சீனுவுக்கும் ஜமாலனுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.

//இங்கே பிரச்சினை சரசுவதியை வரைந்தது அல்ல.நிர்வாணமாக வரைந்தது. இதையும் மேலேயே சொல்லியிருக்கிறேன்//

சரஸ்வதியை ஒரு முஸ்லிம் நிர்வாணமாக வரைந்ததுதான் பிரச்சினையே. மற்றபடி வெளிநாட்டவர்களுக்கு விருந்து படைக்கும் கஜுராஹோ மற்றும் எல்லோரா ஓவியங்களில் நிர்வாணம் இல்லை என்று மறைக்க முடியாது.

//ஒப்பீட்டளவில் பார்த்தால் பத்வாக்கள் இந்துக்கள் கொடுப்பது மிக மிக சொற்பம். இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது. ஆனால், அந்த ஒரு சாமியாருக்கே எவ்வளவு எதிர்ப்புக்கள். ஆனால், சல்மானுக்கு, டேனியல் பியேர்ல்க்கு, அவனுக்கு பத்வா, இவனுக்கு பத்வான்னு ஏகப்பட்ட பத்வாக்கள். ஆனா ஊனா தலையெடு...//

இந்துக்களில் பத்வா கொடுக்க முழுஅதிகாரம் படைத்தவர்கள் சங்கராச்சாரி மட்டுமே என்று நினைக்கிறேன். தேவையே இல்லாமல் 'தலை'யிட்டால் தலையை எடுப்பதுதான் நியாயம்!

said...

தஸ்லிமா ஏதோ போக்கிடம் இல்லாமல் இந்தியாவில் வந்து அடைக்கலம் புகுந்திருப்பதுபோல நினைத்து சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.-மரைக்காயர்

சட்டத்திற்கு புறம்பாக-நன்னெறிமுறை மீறி - சமுதாய அமைதிக்கு குந்தகம் விளவிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு
இந்தியாவில் இருந்துக்கொண்டே இஸ்லாத்தை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துக் 'பிழைப்பு' நடத்தி கொண்டு இருக்கிறார்கள் பலர். அடைக்கலம் கொடுத்து இன்னும் ஒருவரை அந்தப்பட்டியலில் சேர்த்துவிடுவதன் மூலம் அவர்கள் நீணப்பதுபோல் 'இஸ்லாம்' இழிந்தோ அல்லது அழிந்தோ விடப்போவதில்லை.

தஸ்லிமா யார்?
1947-ல் நமது இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற பங்களாதேஷை சார்ந்தவர்தனே!. உயிருக்கு பயந்து அடைக்கலம் கோரும் அவருக்கு - நமது இந்தியா அடைக்கலம் கொடுப்பதில் தவறெதுவுமில்லை.

இஸ்லாத்தை இழிவுபடுத்துவதன் மூலம் தான் - தஸ்லிமாவின் வீட்டில் அடுப்பெறியும் நிலையென்றால் - பாவம் இழிவுபடுத்திவிட்டு போகட்டும்.

அடைக்கலம் தருவதை எதிர்க்கும் இந்திய முஸ்லிம்கள் இத்தருணத்தில் செய்யவேண்டியது என்ன தெரியுமா? அவரின் அடைக்கலத்துக்கு ஆதரவுகரம் நீட்டி - தஸ்லிமாவை அழைத்து அல்லது அனுகி நேர்மையான உரையாடல் மூலம் அவரின் தவறான புரிதலுக்கு விளக்கம் கொடுக்கவேண்டும்.

சிறுவயதுமுதல் சரியான நெறிகாட்டலின்றி வழிதவறிய 'தஸ்லிமாவின்' எழுத்தால் உணர்ச்சிவசப்படுவதோ- ஆவேசப்படுவதோ - கொந்தளித்து கோபப்படுவதோ நபி வழியல்ல.

இஸ்லாம் வலியுறுத்தும் அன்பையும்-அமைதியையும் போதித்து -சகோதரி தஸ்லிமாவை நல்வழிக்கு கொண்டு வருவது முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் கடமை.

said...

//சீனுவின் பின்னூட்டங்களைப் படித்து விட்டு புல்லரித்துப் போனேன்.//

அட! உங்க பதிவயே படிச்சுட்டு பூ....ரிச்சு போயிருக்கேன். இதெல்லாம் சாதாரணம்...

//பிள்ளையாரை வழிபடுவது சல்'மான்' கானின் தனிப்பட்ட பிரச்சினை. அதை சல்'மான்'கான் என்ற முஸ்லிம் பெயர் கொண்டு செய்ததால் முல்லாக்கள் உணர்ச்சி வயப்பட்டு பத்வா கொடுத்திருக்கிறார்கள். சல்மான்கான் தன்னை முஸ்லிம் என்று எப்போது சொல்லிக் கொண்டார்? (பெயரைத்தவிர) என்பது அந்த முல்லாக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.//

அப்டி போடு அருவாள! திடீர்ன்னு சல்மான மதம் மாதிட்டீங்களே!! அப்போ இந்த பத்வாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளளாமா?

//யாரெல்லாம் முஸ்லிம்; ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும். எப்படியெல்லாம் வாழக்கூடாது போன்ற அடிப்படைகள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதால், இஸ்லாத்தில் மட்டும்தான் முழுமையான மதஅடிப்படைவாதம் உள்ளது.//

தவறான பதிலா? அல்லது ஒத்துக் கொள்கிறீர்களா?

//இறைவனுக்கு உருவமில்லை என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. உருவப்படங்களையும் வரைவதும், ஆராதிப்பதும்கூட முஸ்லிம்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது.//

சரி! ஒருவர் அதையும் மீறி ஆரதித்தால் அதற்காக அவரை கொல்வீற்கள். அப்படித் தானே?

//புகழ்வதற்காக ஓவியமாக வரைவதையே வெறுக்கும் ஒருவரைப் பற்றி இகழ்வதற்காக ஓவியமாக வரைவதை கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் எதிர்ப்பார்ப்பதுதான் பாசிசம் என்று சீனுவுக்கும் ஜமாலனுக்கும் சேர்த்தே சொல்கிறேன்.//

கொஞ்சம் மேலே படித்து பாருங்கள், ஏன் சொன்னேன் என்று. "அதிலும் ஒரு ஓவியத்தைக்கூட கலைக்கண்ணோடு பார்க்க முடியாதவர்களா இன்னொரு மதத்தினரின் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுவது?"ன்னு நீங்க சொன்னதற்கான பதில் அது. சரி! அப்படி ஒருவர் செய்தால் அதற்காக அவரின் உயிரை எடுப்பீர்களா? அப்புறம், "இரைச்சியை வெளியே தெரியும்படி வைத்தால் பூனை வந்து சாப்பிடத்தான் செய்யும். அதனால் பெண்கள் பர்தா போடனும்"-னு சொல்ற நீங்க தானே நிர்வாணமா வரைந்தது?

//இந்துக்களில் பத்வா கொடுக்க முழுஅதிகாரம் படைத்தவர்கள் சங்கராச்சாரி மட்டுமே என்று நினைக்கிறேன். தேவையே இல்லாமல் 'தலை'யிட்டால் தலையை எடுப்பதுதான் நியாயம்!//

இது cult-கள் செய்யும் வேலை. ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.

தஸ்லிமா தவறு செய்தால் தவறு என்று சொல்லுங்கள். தவறு என்று உணர்த்துங்கள். அதற்காக தலை எடுப்பேன் என்று சொன்னால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த பெண்மனி தேசம் தேசமாக ஓட வேண்டுமா? அவளும் மனுஷி தானே? இப்படி உயிரை எடுக்கும் மதம் தேவையா? அது இந்து மதமானாலும் சரி, இஸ்லாமாக இருந்தாலும் சரி, எல்லா மதத்துக்கும் தான்...

//இஸ்லாம் வலியுறுத்தும் அன்பையும்-அமைதியையும் போதித்து -சகோதரி தஸ்லிமாவை நல்வழிக்கு கொண்டு வருவது முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் கடமை.//

:)

Anonymous said...

////வந்தேறிப் பார்ப்பனர்களின் மத அடிப்படையே பாசிசம் தான்.//

சரி!//


வந்தேறிப் பார்ப்பனர்களின் மத அடிப்படையே பாசிசம் தான் என ஒத்துக் கொண்டமைக்கு நன்றி சீனு அவர்களே.

//பார்ப்பனர்களை விட மத அடிப்படைவாதம் இஸ்லாமில் மிக அதிகமாக உள்ளது.//

வந்தேறிப் பார்ப்பனர்களின் மத அடிப்படையே பாசிசம் தான் என ஒத்துக் கொண்டதோடு, இஸ்லாத்தில் பாசிசம் இல்லை என ஒத்துக் கொண்டமைக்கும் நன்றி சீனு அவர்களே.

நீங்கள் கூறுவது 100 க்கு 1000 சதவீதம் உண்மை தான். இஸ்லாத்தில் அடிப்படைவாதம் உள்ளது. அதில் என்ன தவறு உள்ளது?.

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாக இருக்க வேண்டும் எனக் கூறுவதுத் தவறு ஒன்றும் இல்லையே?.

ஒரு கொள்கையின் அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டவன் உறுதியாக இல்லையெனில் அவன் அக்கொள்கையில் தெளிவாக இல்லை அல்லது பின்பற்றவில்லை என்றாகி விடுமே?.

ஒரு டாக்டர் அவன் படித்த அவனது மருத்துவக் கொள்கையில் உறுதியாக இல்லையெனில் அவனிடம் மக்கள் மருத்துவம் பார்க்கச் செல்வார்களா?

இஸ்லாமியஅ அடிப்படைக் கொள்கையில் அதனை ஏற்றவர்கள் உறுதியாக இருப்பதைக் கண்கூடாக மக்கள் பார்ப்பதனாலேயே கூட்டம் கூட்டமாக அதில் மக்கள் இணைகின்றனர்.

//இஸ்லாத்தை ஒருவர் விமரிசித்தால் உடனே பத்வா.//

இதற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே. இஸ்லாத்தை எவராவது விமர்சித்தால் உடனே பத்வா வழங்கி விட வேண்டும் என இஸ்லாம் எங்காவது கூறியுள்ளதா என்ன?. இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையைச் சரியாக விளங்காத சில அடிப்படைவாதிகளல்லாத முஸ்லிம்கள் அவ்வாறு செய்கின்றனர் என்பதற்காக இஸ்லாத்தைச் சாடி என்ன பிரயோஜனம்?.

//சமீபத்தில் சல்மான் பிள்ளையாரை வழிபட்டார் என்பதற்கு உடனே பத்வா.//

இஸ்லாத்தை விமர்சிப்பதற்கும் இதற்கும் வித்தியாசம் உங்களுக்குப் புரியவில்லையா?

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை இவ்வுலகைப் படைத்தவனை எந்த உருவத்தின் மூலமாகவும் வழிபடக் கூடாது என்பது.

இதனை ஏற்று முஸ்லிமான பின் ஒருவர் அந்தத் தவறைச் செய்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டியவரா இல்லையா?

ஒரு உதாரணம் கூறுகிறேன்:

இந்தியாவின் சட்டதிட்டத்தை ஏற்றுக் கொள்கின்றேன், என்னை இந்தியாவின் குடிமகளாக அனுமதித் தாருங்கள் எனக் கூறி தஸ்லிமா விண்ணப்பிக்கிறார் என வைத்துக் கொள்வோம்.

இந்தியாவும் அனுமதி வழங்கி தஸ்லீமாவை இந்தியாவின் குடிமகளாக ஆக்குகின்றது என வைப்போம்.

அதன் பின்னர் தஸ்லீமா இந்திய தேசியக் கொடியைத் தான் செல்லும் இடங்களிலெல்லாம் தனது கால் வைக்கும் இடத்தில் வைத்து அதன் மீது மிதித்துக் கொண்டு இருந்து விட்டு, இது எனது சுதந்திரம் யாரும் இதில் தலையிட உரிமை இல்லை எனக் கூறினால் இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்?.

கையைக் கட்டிக் கொண்டு ஆமாம், அது உன் உரிமை நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்றுக் கூறிப் பேசாமல் இருக்க வேண்டும் என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?

//ஏன்? அப்பொழுது சொல்வது தானே மத அடிப்படைவாதம் வேண்டாம் என்று?//

தஸ்லீமா இந்தியக் குடிமகள் ஆனபின் அவள் செய்யும் சட்டமீறலுக்கு இந்திய அரசு அவள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு(பத்வா) போட்டால் அப்பொழுது பங்களாதேஷ் அரசு, "அய்யய்யோ இது என்ன அநியாயம்" எனக் கூக்குரல் எழுப்பி நீலிக்கண்ணீர் வடிப்பதைப் போன்று உள்ளது.

இஸ்லாமியக் கொள்கையை மனதார ஏற்றுக் கொள்கின்றேன் எனக்கூறி சாக்கடையிலிருந்து சுத்தமாகி வெளிவந்த பின்னர் மீண்டும் அந்தச் சாக்கடையை வாரித் தன் மீது பூச முனையும் சகோதரனைத் தடுக்கவும், கண்டிக்கவும் முழு உரிமை எங்களுக்கு உள்ளது. அதனைப் பார்த்து நீலிக் கண்ணீர் வடிக்கவும், "அய்யோ அய்யோ அடிப்படைவாதம்" எனக் கூவுவதற்கும் இங்கு எவ்விதப் பிரயோஜனமும் விளையப்போவதில்லை.

இறை நேசன்.

said...

நிஜமாவே முடியலைங்க...சிரிச்சு சிரிச்சு...இங்க எல்லோரும் ஒரு மாதிரியா பாக்குறாங்க...

என்ன சொல்லவரேன்னே தெரியாம பதில் சொல்ல உங்களால மட்டும் தான் முடியும்...

வர்ட்டா...

said...

பஃத்வா என்பதே பயங்கரவாதம் என்பது போல நண்பர் சீனு எழுதுகிறார்.

சல்மான்கானுக்கு கொடுக்கப்பட்ட பஃத்வாவையே எடுத்துக்கொள்வோம்,
என்ன பஃத்வா அது?
'படைத்த ஏக இறைவனை விடுத்து, வேறொரு படைப்பை இறைவனுக்கு இணையாகக் கருதிவிட்டதால், அவர் முஸ்லிம் என்பதன் பொருளை இழக்கிறார். எனவே திரும்பவும் முஸ்லிமாக வருவதற்கு மீண்டும் (கலிமா என்கிற) இஸ்லாமிய உறுதிமொழியை, திரும்பவும் தவறமாட்டேன் என்ற உள்ளப்பாங்குடன் எடுத்துக்கொள்ள வேண்டும்' - அம்புட்டுதான், இது தான் அந்த ஃபத்வா.

இதையும் பயங்கரவாதமாகச் சித்தரிப்பது தான் சீனு அறிந்த கானா சூனாவாவென்று தெரியவில்லை.

நானும் சீனுவும் கூட பஃத்வா கொடுக்கலாம், "நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள்" என்பதாக, அதெல்லாம் பயங்கரவாதமாகிவிடுமா என்ன?

பஃத்வா என்ற பெயரில் சொல்வதெல்லாம் பயங்கரவாதம் என்பதும், அவாள்கள் மெதுவா சொல்லும் கொலைமிரட்டலெல்லாம் க.சு தான் என்பதும் உங்களுக்கே ஓவராயில்லையா சீனு?

said...

நண்பர்களே இந்த முழுவிவாதமும் தற்சமயம் மதம் குறித்ததாக தடம் மாறிக் கொண்டிருப்பது வருந்த தக்கது. எனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளேன்.

தஸ்லிமா பற்றி நான் படிக்காததால் அவர்களது நிலைபாடு குறித்து அல்ல எனது கருத்து. இதில் நணபர் ஜிவோராம் சுந்தர் அவர்களது கருத்துடன் உடன்படுகிறேன். படித்து கருத்து சொல்லியுள்ள வளர்மதியின் கருத்துடனும் உடன்படுகிறேன். காரணம் அவர்கள் மட்டுமே பிரச்சனை குறித்து கருத்தை பயனுள்ள முறையில் பரிமாறி உள்ளனர். மற்றவர்கள் கருத்துக்கள் பயனுள்ளது என்றாலும் அது விபரங்கள் அடிப்படையில் தவிர இந்த பிரச்சனைகள் அடிப்படையில் அல்ல. இதில் எனது பாசிசம் பற்றிய கருத்து இழுக்கப்படுவதால் அது குறித்து எனது நிலையை தெளிவுபடத்திவிடவே..

சீனு, இறைநேசன், மரைக்காயர் மற்றும் நல்லடியார் அனைவருக்குமாக இதனை கூறி்விடுகிறென்.

மதத்தில் இரண்டு கூறுகள் உள்ளன. 1 . நம்பிக்கை 2. கருத்தியல் (தத்துவம் உள்ளிட்டவை). இதுவரையிலான மதங்கள் நம்பிக்கை அடிப்படையில்தான் வளர்ந்து வந்துள்ளது. அந்த நம்பிக்கை ஏற்படுத்தும் வாழ்க்கை முறைகளின் மீது ஏற்படும் நம்பிக்கையும் தான் அவை வளரக் காரணம். கருத்தியல் அடிப்படையில் இல்லை. கருத்தியல் என்பது எப்பொழுதுமே அரசியலாக அதிகாரமாக மாறிப் போகிறது. மதங்கள் கருத்தியல் மையங்களாக மாறி மற்றவற்றை விளிம்பிற்கு தள்ளுகிறது. தான் சொல்வது மட்டுமே சரி என்ற பிறவற்றை தவறாக ஒதுக்குகிறது. இந்நிலை மதங்களை அதிகாரம் கொண்ட அடிப்படைவாத அமைப்புகளாக மாற்றுகின்றன. மதங்களின் புணித மறைகளைப் படித்தும் தூதர்களின் வரலாற்றைப் படித்தும் மதங்களை நம்புபவர்களைவிட மதத்தில் பிறந்து மத நம்பிக்கைகளை சரியானது என மனதளவில் ஏற்றுக் கொண்டு இருப்பவர்களே அதிகம்.

மதங்கள் இன்று எடுக்கும் தீவிர நிலைப்பாடுகள் மதக் கருத்தியல் சார்ந்தவை. மதக்கருத்தியல் என்பது ஒரு அடிப்படை மையமாக மாறும்போது அது தன்னை நியாயப்படுத்த எந்த வன்முறையையும் எடுக்கும். அதன் நீட்சி அது பாசிசமமாகிவிடும் என்பதுதான். இது எல்லா மதங்களுக்கும் உள்ள பொதுக் குணாம்சம். பெளத்தம் சமணம் போன்ற அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட மதங்கள் உட்பட. அம்மதங்களும் பாசிசப் போக்காக மாறியதே வரலாறு. தலீபான் என்கிற மத திவிரவாதமும் ஒரு பாசிசமே. இதன்பொருள் மதங்கள் நல்லவைதான். அவை நல்லவையாகவே இருப்பதில் யாருக்கும் முரண்பாடுகள் இல்லை.

எந்த புணித மறைகளிலும் பாசிசத்தை நிறுவ முடியாது. ஏனெனில் எல்லா மதங்களும் வரலாற்றில் ஒரு முற்போக்கு பாத்திரத்தை ஆற்றியுள்ளன. அதன் தேவை இன்றுவரை உள்ளது. அதனால்தான் அவைகள் இன்றுவரை வாழ்கின்றன. மதம் என்பது ஒரு வரலாற்றுச் சூழலில்தான் உருவாகுகிறது. அதனால் அதன் புணிதக் கோட்பாடுகள் மக்கள் நலம் பற்றி மட்டும்தான் பேசும். நலமற்றதாக மற்றவற்றைத்தான் காட்டும். நன்மை என்பது தீமையின் மறுபக்கமே. தீமையாக ஒன்றை அறிவிக்காமல் நன்மையை விளக்க முடியாது. மதங்கள் தீமை என்று அறிவிப்பவை வரலாற்றுரீதியாக தீமைகளாக மக்களுக்கு இருந்தால்தான் அதனை விலக்கும் மதத்தை மக்கள் ஏற்கிறார்கள். அதனால் மதங்களின் மறைகளை அடிப்படையாகக் கொண்டு எந்த பாசிசம் போன்ற சமூகத் தீமையையும் நிறுவ முடியாது. மேலதிகமாக அடிப்படைவாதம் குறித்து எனது கருத்துக்களை எனது பதிவுகளில் வரும் தொடர் கட்டுரைகளில் விளக்கியுள்ளேன். சுட்டி:http://jamalantamil.blogspot.com/ அது தொடர்கிறது.

//இஸ்லாத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று வரலாற்றைத் திரித்த கூட்டத்தில் ஒருவராகிப் போனீர்?//

நான் இஸ்லாத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்ற எங்குமே சொல்லவில்லை. எந்த மதமும் கருத்தியலாக மாறும்போது தனக்கு எதிரான கருத்தை ஒடுக்கவே செய்யும். அப்படி ஒடுக்காவிட்டால் மதத்தின் அடிப்படையே இல்லாமல் போய்விடும். உடனே நன்மை தீமை குறித்த விஞ்ஞான விளக்கங்கள் தர்க்கங்கள் நடைமுறைகள் பற்றி பேசவேண்டாம். எது நன்மை எது தீமை என்பதை எல்லா மதங்களும் மக்கள் நலன் என்கிற பெயரில்தான் குறிநிலைப்படுத்தி உள்ளது. ஆனால் நடைமுறையில் பிற மதங்களை கொல்வதும் ஒடுக்குவதுமாகத்தான் உள்ளது. எனது பேச்சு எந்த மறை சிறந்தது என்பதல்ல. நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதுதான்.

அடிப்படைவாதம் என்பது ஒரு கொள்கையை அடிப்படையாக ஏற்றுக்கோள்வது என்கிற பொருளில் அல்ல. அது ஒரு அரசியல் சொல்லாடல். இஸ்லாமை தனிமைப்படுத்தி ஒடக்க அமேரிக்கா கண்ட அரசியல் தந்திரம். (மேலதிகமாக இந்த விவாதம் எனது பதிவில் உள்ளது. சுட்டி மேலே.)

எனவே பாசிசம் என்கிற எனது வார்த்தையின் விளக்கம் இதுதான். இதனை தவறாக பயன்படத்தி இரு தரப்பினரும் விளக்கம் சொல்ல வேண்டாம். உரையாடலில் விளக்கம் மறுவிளக்கம் என்பது அடுத்த கட்ட புரிதலுக்கு இட்டுச் செல்லும். தஸ்லிமா ஒரு அரசியலாக ஆக்கப்பட்டுள்ளார். அந்த அரசியலுக்கு இஸ்லாமியர்களும் பலியாகிக் கொண்டிருப்பதுதான் வேதனை. உங்களை அறியாமல் நீங்கள் ஆடுகளத்திற்குள் இறக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை அறியாமலே ஆட்டம் உங்களை தோற்கடித்தக் கொண்டேதான் இருக்கும். ஏனெனில் எதிரணியின் ஆயுதத்தை கையில் எடுத்தால் அவன் உங்களைவிடவும் பலமாக தன்னை ஒருங்கிணைத்துக் கொள்வான். இன்றைய தேவை மதச்சார்பற்ற உரையாடலும் மதசகிப்புத்தன்மையுமே. அதற்கான ஒரு சிக்கலைத்தான் இந்த பிரச்சனை உருவாக்கி உள்ளது. ஆக, எப்படியோ? துவங்கிய ஆட்டத்தை யாரும் நிறுத்தப் போவதி்ல்லை. இதுதான் இன்றைய வரலாற்றுச் சோகம். இச்சோகத்தின ஒரு அங்கத நாடகமே இந்த விவாதமும்.

இறதியாக 'லக்கும் தீனுக்கும் வலியதீன்' அவரவர் மார்க்கம் அவரவர்க்கு.

நன்றி.

அன்புடன்
ஜமாலன்.

said...

சீனு,

சல்மான்கான் பொதுவில் தோன்றுமிடங்களிலெல்லாம் சங்பரிவாரத்திற்கே பிடித்தமான செந்திலகத்துடந்தான் தென்படுவார். சல்மான்கான் முஸ்லிமா இல்லையா என்பது அவரின் நம்பிக்கையிலும் அதனைச் செயல்படுத்தும் பாங்கிலும்தான் இருக்கிறதே தவிர, சல்மான்கான் எனப் பெயர் கொண்டால் மட்டுமல்ல.

அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது தவறானப் புரிந்து கொள்ளப்பட்ட சொல்லாடல். ஆங்கில அகராதிகளில் Fundamentalism என்பதற்கு The interpretation of every word in the Bible as literal truth (பைபிளில் சொல்லப்பட்டதை முழுமையாக நம்புபவரைக் குறித்தச்சொல், இஸ்லாத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது ஏன்?கிறிஸ்தவர்கள் பைபிளைப் பின்பற்றுவதைக் கைவிட்டு விட்டார்களா?

//சரி! ஒருவர் அதையும் மீறி ஆரதித்தால் அதற்காக அவரை கொல்வீற்கள். அப்படித் தானே?//

அப்படியல்ல! மற்றவரின் நம்பிக்கையை மீறுவதுதான் கருத்துச் சுதந்திரம் என்றால், அதே சுதந்திரத்தை எதிர்தரப்பும் கையிலெடுத்தால் என்னவாகும்? மற்றவரின் நம்பிக்கையைச் சீர்குழைக்கும் சுதந்திரம்தான் தற்போதைய தேவை என்றால் சொல்வதற்கொன்றுமில்லை.

ஓவியக் கிறுக்கன் ஹுசைன் வரைந்தது 'முஸ்லிம்களின்' கருத்துரிமை என்று யாரும் சொல்லவில்லை. கருத்துரிமையைக் காப்பதென்றால் ஓவியர் ஹுசைனின் உரிமையும் காக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே சொல்கிறோம்.

//தஸ்லிமா தவறு செய்தால் தவறு என்று சொல்லுங்கள். தவறு என்று உணர்த்துங்கள். அதற்காக தலை எடுப்பேன் என்று சொன்னால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த பெண்மனி தேசம் தேசமாக ஓட வேண்டுமா? அவளும் மனுஷி தானே? இப்படி உயிரை எடுக்கும் மதம் தேவையா? அது இந்து மதமானாலும் சரி, இஸ்லாமாக இருந்தாலும் சரி, எல்லா மதத்துக்கும் தான்...//

உயிரை எடுக்க வேண்டியதில்லை. பிறைநதிப்புரத்தான் சொன்னதுபோல், அவர் திருந்த வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அதேசமயம் கமலா சுரய்யா சந்தித்த இன்னல்களையும் கொலை மிரட்டல்களையும் தஸ்லிமாவும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அப்போது கருத்துச் சுதந்திரக் காவலர்கள் பர்தாவுக்குள் ஓடி ஒளிந்து கொள்வீர்கள் என்பதும் அறிந்ததே!

said...

ஜமாலன் சொன்னது போல் இந்த விவாதம் மதம் குறித்ததாக தடம் மாறுகிறதோ என்று தோன்றுவதால் தொடர்ந்து இவ்விவாதத்தில் கலந்து கொள்ளலாமா என்று சந்தேகம் ஏற்படுகிறது.

பதிவின் தலைப்பு தஸ்லிமாவிற்கு 'அடைக்கலம்' 'கொடுக்கலாமா' என்பது. அவரை 'வெளியேற்றக்' கூடாது என்பதாகப் பல பின்னூட்டங்கள்...!!!

இப்படிக் கருத்து கூறுவதில் உள்ள‌ அர‌சிய‌ல் வெளிப்ப‌டையாக‌வே தெரிகிற‌து.))

இந்த‌ விவாத்தை முஸ்லிம் x இந்துத்வா ஃபாஸிச‌மாக‌ ம‌லின‌ப்ப‌டுத்துவ‌தில் உள்ள‌ பிர‌ச்ச‌னைப்பாடுக‌ள் ப‌ல‌ருக்குப் புரிகிற‌தா என‌த் தெரிய‌வில்லை. சில‌ர் இதைத் தெரிந்தே திசை திருப்புவ‌த‌ற்காக‌ச் செய்கிறார்க‌ளோ என்றும் தோன்றுகிற‌து...

இப்ப‌டி குறுக்கிப் புரிந்து கொள்வதால் :
/அந்த அரசியலுக்கு இஸ்லாமியர்களும் பலியாகிக் கொண்டிருப்பதுதான் வேதனை. உங்களை அறியாமல் நீங்கள் ஆடுகளத்திற்குள் இறக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை அறியாமலே ஆட்டம் உங்களை தோற்கடித்தக் கொண்டேதான் இருக்கும். ஏனெனில் எதிரணியின் ஆயுதத்தை கையில் எடுத்தால் அவன் உங்களைவிடவும் பலமாக தன்னை ஒருங்கிணைத்துக் கொள்வான்./

இது தான் ந‌ட‌க்குமென்று தோன்றுகிற‌து.

நாம் செய்யவேண்டியது தஸ்லிமாவிற்குக் கொடுக்கப்பட்ட அடைக்கலத்தின் அரசியலை அம்பலப் படுத்துவது தான்.

இதை ஒரு இயக்கமாகக் கூட மரைக்காயர் போன்றவர்கள் ~ சரியான அரசியல் புரிதல்களுடன் ~ வளர்த்தெடுக்கலாம்.

said...

//நான் இஸ்லாத்தில் கருத்து சுதந்திரம் இல்லை என்ற எங்குமே சொல்லவில்லை. எந்த மதமும் கருத்தியலாக மாறும்போது தனக்கு எதிரான கருத்தை ஒடுக்கவே செய்யும். அப்படி ஒடுக்காவிட்டால் மதத்தின் அடிப்படையே இல்லாமல் போய்விடும்.//

ஜமாலன் என்ன சொல்ல வறீங்கன்னுக் கொஞ்சம் தெளிவாச் சொல்ல முடியுமா?

முதல் வாக்கியம்: இஸ்லாத்தில் கருத்துச் சுதந்திரம் உண்டு

இரண்டாம் வாக்கியம்: கொள்கை கருத்தியலாக மாறும் பொழுது தனக்கு எதிரானக் கொள்கையை ஒடுக்கும்.

மூன்றாம் வாக்கியம்: அப்படி ஒடுக்கவில்லை எனில் அக்கொள்கையின் அடிப்படையே இல்லாமல் போய் விடும்.

இப்பொழுது இஸ்லாத்தின் அடிப்படை உள்ளதா? இல்லையா?

உள்ளது எனில் அது கருத்தியலாக மாறித் தனக்கு எதிரான அனைத்துக் கொள்கைகளையும் அழித்திருக்கின்றது. ஒடுக்குகின்றது.

எனில், இஸ்லாத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை.

இஸ்லாத்தின் அடிப்படை தற்பொழுது இல்லை எனில், அது மற்ற கருத்தியலாக மாறிய கொள்கையின் நிலைநிற்பிற்காக ஒடுக்கப்பட்டிருக்கின்றது.

ஏனெனில், இஸ்லாத்தில் கருத்துச் சுதந்திரம் உள்ளதால்..

நீங்கள் இதில் எதைத் தான் சொல்ல வருகின்றீர்கள்?

- அப்ராஸ் யாஃபிம்

said...

//நாம் செய்யவேண்டியது தஸ்லிமாவிற்குக் கொடுக்கப்பட்ட அடைக்கலத்தின் அரசியலை அம்பலப் படுத்துவது தான். //

ஜியோவ்ராம் சுந்தர், பிறைநதிபுரத்தான் ஆகியோர் கருத்துகளில் மிகப்பெருமளவு ஒத்துப்போகிறேன்.

தஸ்லீமாவை அம்பலப்படுத்த தஸ்லீமாவே போதுமாயிருக்க, கருத்துச்சுதந்திரத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் ஃபாசிச ஆதிக்கவாதத்தையே நாம் முனைந்து அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்டவர்கள் அவர்களை எதிர்நோக்கியுள்ள சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடாமல், விவேகம் காட்டுவதே அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.

said...

'வெளிநாட்டைச் சேர்ந்த தஸ்லிமாவை பாதுகாப்பதற்குமுன் இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு பயந்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான ஓவியர் ஹுசைனை பாதுகாப்பாக இந்தியாவிற்கு வரச்செய்து அவரது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பு இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது.'

சரியான கருத்துதான்...ஹுசைன் விசயத்தில்,குஜராத் விசயத்தில் மத அடிப்படையாளர்களை எதிர்த்த எத்தனையோ நடுநிலையாளர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் கருத்தை ஏன் தவிர்த்துவிடுகிறார்கள்? வாருங்கள் அவர்களோடு சேர்ந்து எல்லா மத அடிப்படைவாத கருத்துக்களையும் எதிர்ப்போம்! பார்வையை அடிப்படைவாத இந்துத்துவா, இஸ்லாமிய அமைப்புகளின் மீதே மட்டும் வைத்துக்கொண்டிருந்தால் எப்படி..?

said...

கருத்துச் சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்! இந்தப் பதிவின் நோக்கம், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இரட்டை வேடம் போட்டு தஸ்லிமா விவகாரத்தில் அரசியல் ஆதாயம் பெற முயலும் இந்துத்துவ சக்திகளை அடையாளப் படுத்துவதுதான். நண்பர்கள் சுட்டிக் காட்டியதுபோல சிலர் இந்த விவாதத்தை திசை திருப்ப முயன்றனர். அடிப்படைவாதம், சகிப்புத்தன்மை என்றெல்லாம் பேசினர். உங்களை விட எங்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம் என்றனர். ஆனால் பிரச்னை அதுவல்லவே?

சமீபத்திய ஜூனியர் விகடன் இதழில் தஸ்லிமா விவகாரம் பற்றிய கட்டுரை ஒன்று வந்துள்ளது. அந்த இணையப்பக்கத்தில் கருத்துக்களை பதிவு செய்திருக்கும் பெரும்பாலானோர் இதே திசைதிருப்பும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். அங்கும் தஸ்லிமாவின் குடியுரிமை விவகாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு இஸ்லாமின் சகிப்புத்தன்மை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மையை போதிப்பவர்கள் தாங்களே சகிப்புத்தன்மையற்று நட்ந்து கொண்ட பல சந்தர்ப்பங்களை மறந்து போகிறார்கள். அதை நினைவுபடுத்தத்தான் ஹுசைன் வரைந்த நிர்வாண ஓவியத்தைப் பற்றி குறிப்பிட்டேன். அந்த ஓவியத்தை ஒரு கலையாக பார்க்க முடியாத நீங்கள், மற்றவர்களுக்கு சகிப்புத்தன்மை பற்றி போதிக்க வந்தது வேடிக்கையாக இல்லை?

நான் இதைச் சொல்வதால் அந்த ஓவியத்தை நான் ஆதரிப்பதாக பொருள் இல்லை. எந்த ஒரு முஸ்லிமும் இது போன்ற மடத்தனமான காரியங்களை ஆதரிக்க மாட்டார். சகோதரர் அபூமுஹை தந்திருக்கும் சுட்டியில் இதுபற்றி விளக்கமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை இருக்கிறது.

இந்துக்கடவுள்களை நிர்வாணமாக வரைந்ததுதான் பிரச்னை என்பதாக சிலர் குறிப்பிட்டனர். இல்லை நண்பர்களே. அதை ஒரு இஸ்லாமிய பெயரை உடைய ஒரு நபர் வரைந்ததுதான் பிரச்னை. பில்லாராக், எல்லோரா, கஜுராஹோ போன்ற கோவில்களில் சரஸ்வதி உள்ளிட்ட பல கடவுளர்களின் சிலைகள் நிர்வாணக் கோலத்தில் இருப்பது இன்றுவரை எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. விநாயக சதுர்த்திக்கு பிறகு குப்பையாக்கப்பட்ட கடவுள் சிலைகளைப் பற்றி யாரும் கோபமடையவில்லை. காரணம் இவற்றிலெல்லாம் எந்த முஸ்லிமும் சம்பந்தப்படவில்லை.

'கீதை' என ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைத்துவிட்டு நடிகர் விஜய் பட்ட பாட்டை நாடே அறியும். சமீபத்திய தகவல் ஒன்று; ஒரு திரைப்பட விழா மேடையில் நடிகை குஷ்பு கடவுள் சிலைக்கு முன்பாக கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தாராம். அதை எதிர்த்து சிலர் போராட்டம் நடத்துகிறார்களாம். இவையெல்லாம் என்ன சகிப்புத்தன்மையின் அடையாளங்களா?

ஹுசைன் வரைந்த ஓவியத்தை எப்படி உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையோ அதுபோலத்தான் பொறுப்பற்ற சிலரின் கருத்துக்களையும் (டேனிஷ் கார்ட்டூன் விவகாரம் உட்பட..) சில முஸ்லிம்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதே சமயத்தில் சில முஸ்லிம்கள் இப்படி முறைகெட்டு நடந்து கொள்ளும்போது அதை பிற முஸ்லிம்கள் கண்டிப்பது இஸ்லாமிய சமூகத்தில் மட்டுமே நடக்கும் ஒன்று! இதற்கு நான் எத்தனையோ உதாரணங்களை சுட்டிக் காட்ட முடியும்.

ஆக, கருத்துச் சுதந்திரம் பற்றியோ சகிப்புத்தன்மை பற்றியோ இந்துத்துவாக்களிடமிருந்து பாடம் படிக்க வேண்டிய நிலையில் முஸ்லிம்கள் இல்லை என்பதே உண்மை!

said...

'இப்படி முறைகெட்டு நடந்து கொள்ளும்போது அதை பிற முஸ்லிம்கள் கண்டிப்பது இஸ்லாமிய சமூகத்தில் மட்டுமே நடக்கும் ஒன்று!'

அப்படியா?

said...

//அப்படியா?//

ஆமாம்!