Monday, November 19, 2007

ம.பி. சிறையில் தாடிக்குத் தடை!

'சிறைக் கைதிகள், தாடி வைக்கக்கூடாது; குல்லாய் அணியக்கூடாது' என்று சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப்பிரதேச பா.ஜ. அரசு, புது தடைகளைப் போட்டுள்ளது. 'கைதிகள் அடையாளம் காண, இவை தடையாக இருப்பதால், தாடி வளர்க்கவும், குல்லாய் அணியவும் தடை விதிக்கப்படுகிறது' என்று கூறியுள்ளது.


அரசின் சிறுபான்மை நலத்துறை தலைவர் அன்வர் கூறுகையில், "கைதிகளிடம் பாகுபாடு காட்டப்படுவதாக தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். ஆனால், அரசு இப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளதா என்பதை அவர் உறுதி செய்ய தயங்கினார்.

போபால் மத்திய சிறை கண்காணிப் பாளர் சோம்குன்வார் கூறுகையில், "கைதிகளை சிறைக்குள் அனுப்பும் முன்பு, தாடியை மழிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம். அவர்களின் தாடி மழித்த போட்டோ தான், போலீஸ் பதிவேட்டில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

தீபாவளியை ஒட்டி நடத்தப்படும், எருமை மாட்டு மோதல் விளையாட்டுக்கும் சவுகான் அரசு தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போல நடக்கும் இந்த மோதல், பல ஆண்டுகளாக ம.பி.யில் இந்துக்கள் நடத்தி வருகின்றனர்.

நன்றி: தினமலர்
இந்தச்சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமா அல்லது சீக்கியர்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை!
கிரிமினல் கொலைக் குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற முதல் சங்கராச்சாரியார் என்ற பெருமை பெற்ற இருள்நீக்கியார் தண்டம் + தாடி + காவி உடையுடனேயே உள்ளே சென்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!




2 comments:

said...

ஐயா மரைக்காயர் அவர்களே!

தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் இல்லை என்பது மகிழ்வைத் தருகிறது.

சங்கராச்சாரி மட்டுமின்றி, கோவைச் சிறையில் அடைக்கப் பட்டிருந்த முஸ்லிம் கைதிகளுக்கும் அவர்தம் சமய நம்பிக்கைப்படி தாடி வளர்த்துக் குல்லாய் அணியவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இனி ம.பி.யைப் பின்பற்றி ஏதேனும் குழப்பம் செய்யாமல் இருந்தால் தமிழனின் பெயர் நிலைக்கும்.

said...

//கிரிமினல் கொலைக் குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற முதல் சங்கராச்சாரியார் என்ற பெருமை பெற்ற இருள்நீக்கியார் தண்டம் + தாடி + காவி உடையுடனேயே உள்ளே சென்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது!//

மரைக்காயரே,
உலகத் குற்றவியல்/கிரிமினல் தண்டனைச்சட்டங்கள் ஜகத்குருக்குப் பொறுந்தாது. சங்கராச்சாரியார் மீதான வழக்கை மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்ட உன்னதமான நாட்டில், சிறைக்குள் தடி வைத்திருக்க அனுமதியுண்டு என்பதைத் தெரிந்துமா

"இந்தச்சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமா அல்லது சீக்கியர்களுக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை!" என்று எழுதி இருக்கிறீர்கள்!