சேது சமுத்திரம் திட்டம் தொடர்பாக ஒரு முக்கிய ஆலோசனை!
அரசியல் பண்ண காரணமே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்துத்துவாக்கள் 'ராமர் பாலம்' என்ற ஒன்றை கையிலெடுத்திருக்கிறார்கள். நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு துணை புரியும் ஒரு நல்ல திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக பலி கொடுக்க முனைகிறார்கள் இவர்கள்.
'ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்கிறார் பெண் துறவி உமாபாரதி.
'ராமர் பாலத்தை அழித்து மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், அது இந்து மதத்தையே அவமதிக்கும் செயலாகும். இது நடக்க ஒருநாளும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ராமர் பாலத்தை பாதுகாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம்' என்கிறார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா.
ராமர் பாலத்தைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் வருகிற 25 மற்றும் 26 தேதிகளில் 2 நாள் மாநாட்டுக்கு இந்துத் துறவிகள் அமைப்பு மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன.
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், "புராதன சின்னங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு சட்டப்படி ராமர் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்" என்று தொகாடியா சொன்னாராம். பாபர் மசூதி போன்ற, சரித்திரப் பிரசித்திப் பெற்ற புராதன சின்னங்களை இவர்கள் இடித்துத் தள்ளுவார்களாம். ராமர் பாலம் என்ற, இல்லாத ஒன்றை இவர்கள் காப்பாற்றப் போகிறார்களாம்..!!!!
சேது சமுத்திரம் போன்ற, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான திட்டங்களை இடையூறின்றி நிறைவேற்ற, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அவர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன்.
'சர்ச்சைக்குறிய அந்தப் 'பாலம்' ராமர் கட்டியதல்ல. அந்தக் கால அரபு முஸ்லிம்கள் தங்கள் வணிகப் பொருட்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்ல கட்டிய பாலம். அதனால் இதை இடிக்காமல், ஒரு புராதன சின்னமாக அறிவித்து மத்திய அரசே அதை பாதுகாக்கும்' என்று ஒரு 'பிட்'டை போட்டுப் பாருங்கள். இது மட்டும் 'க்ளிக்' ஆயிடுச்சுன்னா, 'அந்தப் பாலத்தை இடித்தே தீர வேண்டும்' என்று போராட்டம் நடத்தி, அதற்காக உயிரையும் கொடுக்க உமாபாரதி, ராமகோபாலன், தொகாடியா, சு.சாமி எல்லாம் வரிசையில் நிற்பார்கள்.
என்ன நாஞ்சொல்றது?
8 comments:
//அந்தப் 'பாலம்' ராமர் கட்டியதல்ல. அந்தக் கால அரபு முஸ்லிம்கள் தங்கள் வணிகப் பொருட்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துச் செல்ல கட்டிய பாலம். அதனால் இதை இடிக்காமல், ஒரு புராதன சின்னமாக அறிவித்து மத்திய அரசே அதை பாதுகாக்கும்' என்று ஒரு 'பிட்'டை போட்டுப் பாருங்கள். இது மட்டும் 'க்ளிக்' ஆயிடுச்சுன்னா, 'அந்தப் பாலத்தை இடித்தே தீர வேண்டும்' என்று போராட்டம் நடத்தி, அதற்காக உயிரையும் கொடுக்க உமாபாரதி, ராமகோபாலன், தொகாடியா, சு.சாமி எல்லாம் வரிசையில் நிற்பார்கள்.
என்ன நாஞ்சொல்றது?//
ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த யோசனையைத் தெரிவித்திருந்தால் இந்தியாவின் அரசியலே தலைகீழாகி இருக்குமே!
இன்னும் குடி முழுகிடவில்லை; உடனே பரிசீலிக்க வேண்டிய அற்புதமான யோசனை.
மந்திரி சபையில் இருக்க வேண்டிய ஆளெல்லாம் ப்ளாக் எழுதுறாங்கப்பா!
மரைக்காயர் அரசியலில் குதித்தால் வெற்றி நிச்சயம்.
//மந்திரி சபையில் இருக்க வேண்டிய ஆளெல்லாம் ப்ளாக் எழுதுறாங்கப்பா!
மரைக்காயர் அரசியலில் குதித்தால் வெற்றி நிச்சயம். //
தொ(ல்)லை தொடர்புத்துறை கொடுப்பாய்ங்களா?
This is not an imaginary idea. Actual fact is that the bridge built by Prophet Adam's third son Sheed. This Sheed is called now Shedu or Sethu. This narration is given by Kavikko Abdul Rahman in the 7th All World Islamic Literature conferance at Chennai in May 2007
//Actual fact is that the bridge built by Prophet Adam's third son Sheed. //
அப்படிங்களா கூத்தாநல்லூரார்? தகவலுக்கு நன்றி.
அப்படின்னா எனக்கு மந்திரி சபையில இடம் கிடைச்சிடுமா? ;-)
பாரதீய ஜனதா கட்சிபோல், நீங்களும்
உங்கள் ப்ங்குக்கு தமாஷ் பண்ண
வேண்டாம். இந்தத் திட்டத்தினால்
உண்மையிலேயே பயன் அடையக்
கூடியவர்களின் பெரிய 'லிஸ்ட்' ஒன்று உண்டு. அவர்கள் எப்படியும்
தங்கள் காரியத்தைச் சாதித்து
கொள்வார்கள். என்றைக்கும் அப்பாவி
ஜனங்கள் அநாதைகள் ஆகவேண்டியது
தான். இவர்கள் ச்ண்டையில் அவர்கள்
பரிதவிப்பெல்லாம் அடங்கிப்போக
வேண்டியதுதான்--- பத்து வ்ருடத்திற்கு
முன்னால் 'கூடங்குளத்தை' எதிர்த்தவ்ர்களெல்லாம் இன்றுகாணாமல் போனமாதிரி.
ஜீவி அய்யா,
//பாரதீய ஜனதா கட்சிபோல், நீங்களும்
உங்கள் ப்ங்குக்கு தமாஷ் பண்ண
வேண்டாம். //
நான் தமாஷ் பண்ணுவது போல எழுதினாலும் சொல்ல வந்த கருத்து இதுதான்; இந்துத்துவாக்கள் சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பது அது ராமர் கட்டிய பாலம் என்பதற்காக என்பது சும்ம பம்மாத்து. அவங்களுக்கு அரசியல் பண்ண இது ஒரு காரணம், அவ்வளவே. அதே பாலத்தை இடிக்காமல் வைத்திருந்தால் முஸ்லிம்களுக்குத்தான் அதிக அனுகூலம் என்று சொல்லிப் பாருங்கள்.., 'அதை இடித்து விட்டுத்தான் மறுவேலை' என்று வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள்.
இவங்களோட அல்ப அரசியல் காரணங்களுக்காக ஒரு நாட்டு நலத்திட்டம் தடை படக்கூடாது என்பதுதான் பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
"இவங்களோட அல்ப அரசியல் காரணங்களுக்காக ஒரு நாட்டு நலத்திட்டம் தடை படக்கூடாது என்பதுதான் பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். "
ºÃ¢Â¡ ¦º¡ý§Éø Á¨Ã측 «ñ½¡
muneera said...
"இவங்களோட அல்ப அரசியல் காரணங்களுக்காக ஒரு நாட்டு நலத்திட்டம் தடை படக்கூடாது என்பதுதான் பொது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்
சரியா சொன்னேல் மரைக்கா அண்ணா
Post a Comment