Monday, November 12, 2007

சோ ராமசாமியின் தேசப்பற்று!

கரண் தாப்பரின் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குள் நா வறண்டு, தண்ணீர் குடித்து, மைக்கை பிடுங்கி எறிந்து, பின்னங்கால் பிடரியில் அடிக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிய 'மாவீரன்(?)' மோடியின் கொடூர முகத்தை அவனது சகாக்களின் வாக்குமூலத்தைக் கொண்டே தோலுரித்து தொங்க விட்டது டெஹல்கா. அரக்கக் குணம் படைத்த அந்த ஜந்துக்களின் கொடூரச் செயல்களை 'அது'களின் வாயாலேயே கேட்டு உலகமே அதிர்ந்தது. மனதில் கடுகளவேனும் மனிதாபிமானம் உள்ளவர்கள் கூட அந்த வாக்குமூலங்களை ஜீரணிக்க இயலாமல் தவித்தனர். இவன்கள் ஒரு தாயில் வயிற்றில்தான் ஜனித்தார்களா என்பதே நம்ப முடியாததாக இருக்கிறது.


ஆனால், இவ்வளவு நடந்த பிறகும், சில இடங்களில் மயான அமைதி நிலவுகிறது!


- செல்வி ஜெயலலிதா: மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு வந்தவர் இவர். சமீபத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் ஒருவர் இறந்ததற்கு கவிதை அஞ்சலி செலுத்திய முதல்வர் கருணாநிதியைக் கண்டித்த அம்மணி, ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான மோடியை கண்டித்து இன்னும் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை!- சங்கரமடத்து இருள்நீக்கி சுப்பிரமணியனார்: பாபரி மசூதி விவகாரத்தில் அழையா விருந்தாளியாய் மூக்கை நுழைத்து, மத்தியஸ்தம் என்ற பெயரில் மசூதியை முஸ்லிம்களிடமிருந்து அபகரிக்க திட்டம்தீட்டியவர் இவர். (ஏன்னா, நாட்டுல மதநல்லிணக்கம் நிலவுறதுக்காக இவர் பாடுபடுறாராம். காலுல சாக்ஸ் மாட்டிண்டு சேரி மக்களை ஆசீர்வதிக்க போனவராச்சே!) ஒட்டுமொத்த குஜராத் முஸ்லிம்களையும் கூண்டோடு கொலை செய்ய வழி செய்த மோடி விவகாரத்தில் இவர் இன்னும் மூச்சு கூட விடவில்லை!


- முன்னாள் பிரதமர் வாஜ் பேய்: 2002-ல் இந்த கொடூரக் கொலைகள் நடந்தபோது, 'இனி வெளிநாட்டினர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்' என்று வெட்கப்பட்ட மனுஷன் இவர். 'இந்தக் கொடூரன் இருக்கும் அதே கட்சியில் நானும் இருப்பதா?' என்று அக்கட்சியில் இருந்து இன்னும் இவர் விலகவில்லை! அட்லீஸ்ட் மோடியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று இவர் முணுமுணுக்கக் கூட இல்லை!


- உச்சாநீதி மன்றம்: முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்க முற்பட்டபோது பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுவதாகச் சப்பைக் கட்டு கட்டி 'ஆட்சி கலைக்கப்பட்டுவிடும்' என்று உச்சநீதி மன்றம் மிரட்டியது. குஜராத் கொடூரங்களைப் பற்றி இத்தனை ஆதாரங்கள், வாக்குமூலங்கள் வெளியான பிறகும் கொடியவன் மோடியின் ஆட்சியை பறித்து அவனை வீட்டிற்கு அனுப்ப இந்த நீதிமன்றம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சிறு முனகலைக் கூட வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை குஜராத் முஸ்லிம்கள் 'பொதுமக்களில்' சேர்த்தி இல்லை போல.

- முதல்வர் கருணாநிதி: "நரேந்திர மோடி தொடர்பாக தெஹல்கா பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளதே?" என பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது "பத்திரிகைகளில் அதுபற்றி படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு என் கருத்தை சொல்கிறேன்." என்று சொன்னவர்தான். இதுவரை கருத்து எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை! அவரோட பிரச்னை அவருக்கு! அடுத்த கூட்டணி வாய்ப்பை கெடுத்துக்கக் கூடாதில்லையா?

- சோ ராமசாமி அய்யர்: மோடியை பிரதமர் பதவிக்கு தகுதியானவன் என்று சொல்லி போற்றியவர் இவர். 'இவ்வளவு கொடூரமான ஒருவனையா நாம் ஆதரித்து எழுதினோம்' என்று இவர் இன்னும் வெட்கித் தலைகுனியவில்லை. பிஜேபி ஆட்சியில் ராஜ்யசபா எம்.பி. பதவியை அனுபவித்த விசுவாசம் தடுக்கிறது போலும். இதுவே வேறோரு கட்சியின் ஆட்சியிலுள்ள மாநிலத்தில் நடந்திருந்தால், இந்த அய்யர் எப்படி விளாசித் தள்ளியிருப்பார்?

இங்கேதான் சோ ராமசாமியின் தேசப்பற்று வெளிப்படுகிறது. ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, உகாண்டாவின் இடிஅமீன், இவர்களெல்லாம் தங்கள் 'திருச்சேவை'களின் காரணமாக உலக வரலாற்றில் அழியாத இடத்தை பிடித்து விட்டார்கள். அதுபோல இந்தியாவின் பெயரை நிலை நிறுத்த யாரும் இல்லையே என்ற ஆதங்கத்தில்தான் சோ அய்யர் மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்திருக்கிறார். குஜராத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட 'சோதனை முயற்சி'யை இந்தியாவெங்கும் நடத்தி, உலக அரங்கில் இந்தியாவுக்கு நிலையான 'புகழை' பெற்றுத் தந்திடுவார் மோடி.

வாழ்க சோ ராமசாமியின் தேசப்பற்று!

(ஆனால், பாவம் இந்தியா!)

7 comments:

said...

//முதல்வர் கருணாநிதி: ..... இதுவரை கருத்து எதுவும் வெளியானதாகத் தெரியவில்லை!//

ஏன் சொல்லவில்லை?

பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கை தாங்கலாய் தூக்கி வரப்பட்டு மேடையில் அமர வைக்கப்பட்ட பின்னர் குஜராத் இனச்சுத்திகரிப்பு பற்றிக் கேட்ட செய்தியாளர்களைப் பார்த்து அவருக்கே உரிய பாணியில் சிரித்துவிட்டு இவ்வாறு கூறினார்:

"விட்டுத்தள்ளுங்கள்! இச்சம்பவம் தமிழகத்தில் நடக்கவில்லையே? இந்தியாவின் வட மாநிலமான குஜராத்தில் தானே நடந்தது?
எனவே இதைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!"

என்று பொறுப்பற்ற முறையில் கூறி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினாரே?

said...

//- உச்சாநீதி மன்றம்://

"உச்சா"நீதிமன்றம் :)))))

எழுத்துபிழையா இருந்தாலும், கரெக்டாதான் இருக்கு!!

said...

//ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, உகாண்டாவின் இடிஅமீன்..//

இந்த வரிசையில்... இந்தியாவின் மோடி!!!

நினைச்சாலே புல்லரிக்குது!

said...

மரைக்காயர் அய்யா,

சரியாப் புடிச்சீங்க, சோவுக்கு தேசப்பற்றா? ஜாதிப் பற்று அய்யா! உச்சா நீதிமன்றத்தில இருக்குற நீதிபதிகள் எத்தன பேரு அவாளுங்கன்னு கணக்கெடுங்க!

வலையில கூட ஒரு சிலர் 'நீயெல்லாம் அரசியல்வாதியாடா?'ன்னு பதிவு போடுவானுங்க, ஆனா இன ஒழிப்பை நடத்துன இந்த அரக்கனைப் பாத்து அட்லீஸ்ட் நீ ஒரு மனுசனான்னு கூட கேக்க மாட்டானுங்க...

ஒடுக்கப்பட்ட இனத்திற்கு அரசுத் துறைகளில் உரிய பங்கு கொடுக்கப்படவில்லை யென்றால் இது போல கொடூரங்கள் நடக்கத் தான் செய்யும்!

said...

மரைக்காயர்,

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 'மோடித்துவா'வினர் ஜெயித்தாலும் ஜெயிக்கலாம். அதை வைத்து "பார்த்தேழா....அபிஸ்டுகள் அநியாயமாக இந்த மனுஷாளின் பிராணனை வாங்கினார்கள். இதோ மக்கள் தீர்ப்பெழுதி விட்டார்கள் பாருங்கள்! மோடி ஒரு அப்பாவின்னு!"

என்பன போன்ற முனகல்கள் வரக்கூடும்! பொறுந்திருந்து பார்ப்போம்.

said...

(என்னையும் குழப்பி , தமிழகத்தையும் குழப்புவது என் குலத்தொழில்)

ஏன் என்னை போட்டு இந்த வாங்கு வாங்கிறேல் நானும் நரகல் நரேந்திர மோடியும் ஒரு சாதி விட்டு கொடுக்க
முடியுமொனோ?

said...

இக்கும்பல்களின் நாட்டுப்பற்றைப் பற்றி இப்போதுதான் தெரிந்ததோ அண்டை நாடான நேபாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்தமாக மன்னர் குடும்பத்தையே காலி செய்தார்கள் தெரியுமா அப்போது தொகாடியா, அசோக் சிங்கல்

அய்யோ உலகத்தின் ஒரே இந்து நாடு நேபாளம் அங்கே கொலை நடந்துள்ளது இந்திய அரசு துக்கம் கொண்டாட வேண்டும், இந்திய அரசு விடுமுறை விட வேண்டும் என்றெல்லாம் கொக்கரித்தவர்கள்