சவுதி ஓஜர் தொழிலாளர் பிரச்னை: தீர்வு என்ன?
வினவு இணையத் தளத்தில் சவூதி ஓஜர் நிறுவனத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்கள். அதாகப்பட்டது, சௌதி ஓஜர் நிறுவனம் சௌதி, லெபனான் நாடுகளை ஆளும் கும்பலின் கூட்டு நிறுவனமாகும். இதில் பலவகைகளில் தொழிலாளர் நலன் நசுக்கப் படுகிறது.. ப்ளா.ப்ளா.ப்ளா..ப்ளா.. உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தானே மேற்கொள்கின்றன, இதில் சௌதி மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா? என்று பொதுமைப்படுத்த முடியாதபடி இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. சௌதி ஓஜரின் உரிமையாளர்களான ஹரிரி குடும்பத்தினரின் பினாமி நிறுவனம் தான் லிபனெட். ஒரு நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு அவர்கள் திருப்தியடையவில்லை. விதியோ, கடவுள் நம்பிக்கையோ அவர்கள் செயலில் குறுக்கிடவில்லை. ஏழை தொழிலாளியின் வயிற்றிலடிப்பதற்கும் வெறித்தனமாய் திட்டமிடுகிறார்கள்.
டீடெய்லா படிக்கணும்னா வினவு பதிவிலேயே படிச்சுக்குங்க.
இந்தப் பதிவுக்கு வினவு வைத்திருக்கும் தலைப்பு: சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப் படுத்தும் அல்லாவின் தேசம்!
என்னாது? சௌதி ஓஜர் = சவுதி அரேபியா = அல்லாவின் தேசமா? ஆமாங்க.. அப்படித்தான் போட்டிருக்காங்க. ஏன்னா, லெபனான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் ஆட்சியாளர்கள்தான் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாம். இந்த இரண்டு குடும்பத்தினர்தான் சவூதி அரேபியா நாடு. சவூதி அரேபியா நாடுதான் அல்லாவின் தேசம். நம்புங்க மக்களே! சவுதியிலேயே இருக்கும் வினவு செய்தியாளரே இதை எழுதியிருக்காரு. அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும்.
அப்படின்னா 'ஓஜர்' என்ற பெயருக்குச் சொந்தக்காரர்களான www.ogerinternational.com என்ற ஃப்ரான்ஸ் நாட்டு நிறுவன குழுமத்திற்கு என்ன நேர்ந்தது? ஓ... அவங்க வேற இருக்காங்களா? அப்படின்னா ஃப்ரான்ஸ் தேசத்தையும் அல்லாவின் தேசம்னு அறிவிச்சுடுவோம். மேட்டர் சால்வ்டு! என்ன வந்தாலும் வச்ச தலைப்பை மட்டும் நாங்க மாத்த மாட்டோம்ல!
ஒருவழியா தலைப்பு மேட்டரை செட்டில் பண்ணியாச்சு.. இனி பதிவுக்கு போவோம்.
சவுதியிலிருந்து வினவு செய்தியாளர் என்ன சொல்றார்னா, அல்லாவின் தேசமான சவுதியின் ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான சவுதி ஓஜர் நிறுவனத்தில் தொழிலாளர்கள் நசுக்கப் படுகிறார்கள். ஒடுக்கப் படுகிறார்கள். அடக்குமுறைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். இத்யாதி..இத்யாதி.. உண்மைதானே? ஆமாம். உண்மையாகத்தான் இருக்கும். சவுதியிலிருந்து அந்த செய்தியாளரே அந்தக் கொடுமைகளையெல்லாம் நேரடியாக பார்ப்பதால்தானே அப்படி எழுதியிருக்கிறார்?
ஆனா, நமக்கு இதுல புரியாத ஒரு விஷயம் என்னன்னா அந்த செய்தியாளரையும் அடக்குமுறைக்கு எதிரா போராடுற மற்ற உழைப்பாளர்களையும் சவுதி ஓஜர் நிறுவனம் ஆள் வைத்து கடத்திக் கொண்டுபோய் சவூதியில் வைத்து கொத்தடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறார்களா என்ன? தப்பிச்சு கிப்பிச்சு வர முடியாதபடி சங்கிலி கிங்கிலி போட்டு கட்டி வச்சிருக்காங்களோ என்னவோ! இதையே நான் வினவு கிட்டே வினவினேனுங்க. அவரு அதுக்கு இன்னும் பதில் சொல்லலை. ஒருவேளை 'நான்தான் வினவு. நான் மட்டும்தான் வினவுவேன். மத்தவங்கள்லாம் வினவக்கூடாது'ன்னு ஏதும் பாலிஸி வச்சிருக்காரோ என்னவோ! சரி.. அது போகட்டும் விடுங்க!
அடுத்ததாக, இந்த பிரச்னைக்கு சவுதியிலிருந்து வினவு செய்தியாளர் என்ன தீர்வு சொல்கிறார் என்று பார்ப்போம்.
சௌதி ஓஜரின் உரிமையாளர்கள் ஆளும் வர்க்கம் + முதலாளி வர்க்கம் = சுரண்டும் வர்க்கம்.
தொழிலாளர்கள் = சுரண்டப்படும் வர்க்கம் + ஒன்றிணைய வேண்டிய வர்க்கம் + போராட வேண்டிய வர்க்கம்
அதாவது, நம்ம சட்டசபையில் இருக்கிறதல்லவா, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி? அது மாதிரி இங்கே முதலாளி கட்சி, தொழிலாளி கட்சி! முதலாளி கட்சியில எல்லோரும் கெட்ட பசங்க.. தொழிலாளி கட்சியில உள்ளவங்க எப்பவுமே போரடிக்கிட்டே இருக்க வேண்டியவங்க. தொழிலாளி ஒருத்தர் கொஞ்சம் பணம் சேர்த்து முதலாளி ஆயிட்டார்னு வச்சுக்குங்க.. அப்ப அவரும் கெட்ட பையனா ஆயிடுவாரு.
வினவு சொல்வதுபோல தொழிலாளி வர்க்கத்தினர் எல்லோரும் ஒருங்கிணைந்து முதலாளி வர்க்கத்திற்கு எதிராக போராடினால் என்ன ஆகும்? இந்த நான்கு விளைவுகளில் ஏதோ ஒன்று நிகழலாம்:
1. முதலாளி வர்க்கம் அடிபணிந்து தொழிலாளர் வர்க்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக் கொள்ளலாம்.
2. 'நான் அப்படித்தான் செய்வேன். உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ' என்று வீம்பு பிடிக்கலாம்.
3. போராடும் தொழிலாளர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டு வேறு நாட்டு தொழிலாளர்களை வரவழைத்துக் கொள்ளலாம்.
4. 'எனக்கு இந்த நிறுவனமே வேண்டாம்' என்று அதை பூட்டிப் போட்டுவிட்டு வேறு தொழிலைப் பார்க்க போய்விடலாம்.
இதில் முதலாவது விளைவு நிகழ வேண்டுமென்பதுதான் வினவின் கனா. ஆனால் அது நிகழ்வதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு என்பது கொஞ்சம் யோசித்தாலே தெரியும். மற்ற மூன்று விளைவுகளில் ஒன்று நிகழ்ந்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் கதி என்னவாகும்?
எனவே, வர்க்கப் பாகுபாடு, ஒருங்கிணைந்த போராட்டம் என்பதெல்லாம் இந்தப் பிரச்னைக்கு தீர்வே அல்ல. மாறாக, தீர்வைத் தேடும் ஒரு வழிமுறை மட்டுமே. அதுவும் தோற்றுப் போவதற்கான சாத்தியங்களே அதிகம்.
அப்படியானால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன? முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் இரு தரப்பினருக்கும் பொதுவான ஒரு தலைமை வேண்டும். அந்தத் தலைமை இரு தரப்பினருக்கும் அவரவரின் உரிமை மற்றும் கடமைகளை வரையறுக்க வேண்டும். அவ்வாறு ஏற்கனவே வரையறுக்கப் பட்டிருந்தால் அவற்றை அவர்களுக்கு நினைவுறுத்த வேண்டும். அவற்றை மீறுபவர்களை தண்டிக்கும் அதிகாரமும் அந்தத் தலைமைக்கு இருக்க வேண்டும். இவையெல்லாம் ஏற்கனவே இஸ்லாத்தில் இருக்கின்றன தோழர்களே!
தொழிலாளியின் வியர்வை உலருமுன் அவனுடைய ஊதியத்தை அவனுக்கு கொடுத்துவிடும்படி முதலாளிகளுக்கு கட்டளையிடும் இஸ்லாம், தொழிலாளர்கள் முதலாளிகளிடம் நடந்துக் கொள்ள வேண்டிய விதத்தையும் சொல்லித் தருகிறது.
அந்த கட்டளைகளை முதலாளி மீறினால் என்னவாகும்? அந்த வயதான தொழிலாளி நரைத்துப் போன தன் தாடியை தடவிக் கொண்டே சொன்னாரே, “நாங்கள் தொழுது பிரார்த்திக்கிறோம், எங்களுக்கான பதிலை கடவுள் அவர்களிடம் வாங்கியே தீருவார்”. நிச்சயம் அது நடக்கும்!
17 comments:
அட அல்லாவின் தேசமே!
ஏனிப்படி உழைக்கும் வர்க்கத்தைக் கொடுமைப்படுத்துகிறாய் அல்லாவின் தேசமே!
அல்லாவின் தேசம் = சவுதி ஓஜர் கம்பெனி = சவுதி அரேபியா
ஓ! ஓஜர் கம்பெனி சவுதி அரேபியாவுக்குச் சொந்தமானது இல்லையா?
சரி, அப்படின்னாலும்
அட அல்லாவின் தேசமே!
ஏனிப்படி உழைக்கும் வர்க்கத்தைக் கொடுமைப்படுத்துகிறாய் அல்லாவின் தேசமே!
அல்லாவின் தேசம் = ஓஜர் கம்பெனிக்கு இடம் கொடுத்துள்ள சவுதி அரேபியா!
வுட மாட்டோமுல்ல!
நல்ல பதிவு சகோ,
தவறு யார் செய்தாலும் தவறுதான். அதில் மாற்று கருத்து இல்லை. அது சவுதில இருக்கிற ஓஜர இருந்தாலும் சரி, பிரான்சோட ஒஜரா இருந்தாலும் சரி. சரி இஸ்லாமியன் தவறு செய்ததாகவே இருக்கட்டும்(எல்லா முஸ்லிம்களும் யோக்கியனா என்ன???) உடனே அல்லாஹ் அல்லது இஸ்லாத்த அத்துடன் சேர்த்திட வேண்டியது. இதே பொழப்பா போச்சு.
அய்யா வினவு, எத்தனையோ நல்லது செய்ற முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களை எடுத்துக்கொண்டு இஸ்லாம் அற்புதமான மார்க்கம் என்று என்றைக்காவது எழுதி இருக்கிறீர்களா??? ஏன் உங்களுக்கு கெட்டது மட்டும் கண்ணுக்கு தெரியுது. அதே கண்ணுல நல்லதையும் பார்க்கலாம்ல. அத பத்தி ஒரு பதிவாவது போடலாம்ல????
உதாரணம், உலகத்தில் தானம் எவ்வளவு செய்ய வேண்டும் என்று எந்த மதமும் சரி, கொள்கையும் சரி சொன்னதில்லை. இஸ்லாம் மட்டுமே வரையறுத்து 2 .5 அல்லது 10 % என்று ஒரு எண்ணிக்கையோடு கட்டளை இடுகிறது. எவ்வளவு நல்ல விஷயம் இது. இதைப்பற்றி தான் ஒரு நாள் எழுதுறது......
கருத்து சுதந்திரம், கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் உசுப்பேற்றி பதிவிடும் வினவுக்கு, பின்னூட்டவெறி தலைக்கேறினால் இஸ்லாம் அல்லது முஸ்லிம் குறித்து எதையாவது எழுதி இணைய சுகம் காண்பது வினவுக்கு அவ்வப்போதைய பொழுதுபோக்கு.
இனிமேல் தோழர் வினவு உரிமை,சுதந்திரம் என்று பதிவெழுதுவதில் அர்த்தமில்லை. அதற்கான அருகதையை இழந்து விட்டார்கள் என்று தெரிவிக்க வேண்டி வினவுக்கு அனுப்பிய மடலை பதிகிறேன்.
//இறை நேசன் said...
அட அல்லாவின் தேசமே!
ஏனிப்படி உழைக்கும் வர்க்கத்தைக் கொடுமைப்படுத்துகிறாய் அல்லாவின் தேசமே! //
என்ன கொடுமை சார் இது? ஒரு நிறுவனம் செய்யும் தவறுகளுக்காக ஒரு நாட்டையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்!
//சிராஜ் said...
நல்ல பதிவு சகோ,
தவறு யார் செய்தாலும் தவறுதான். அதில் மாற்று கருத்து இல்லை. அது சவுதில இருக்கிற ஓஜர இருந்தாலும் சரி, பிரான்சோட ஒஜரா இருந்தாலும் சரி. சரி இஸ்லாமியன் தவறு செய்ததாகவே இருக்கட்டும்(எல்லா முஸ்லிம்களும் யோக்கியனா என்ன???) உடனே அல்லாஹ் அல்லது இஸ்லாத்த அத்துடன் சேர்த்திட வேண்டியது. இதே பொழப்பா போச்சு.//
சரியா சொன்னீங்க சகோ சிராஜ். பல தமிழ் வலைப்பதிவர்களிடம் இந்த 'வியாதி' இருக்கிறது. அவர்கள் எழுதுவது எதாக இருந்தாலும் தலைப்பில் இஸ்லாத்தையோ வேறு மதத்தையோ சாதியையோ இணைத்தால்தான் தங்கள் பதிவு படிக்கப்படும் என்று நம்புகிறார்கள் இவர்கள், பாவம்!
//அதிரைக்காரன் said...
இனிமேல் தோழர் வினவு உரிமை,சுதந்திரம் என்று பதிவெழுதுவதில் அர்த்தமில்லை. அதற்கான அருகதையை இழந்து விட்டார்கள் என்று தெரிவிக்க வேண்டி வினவுக்கு அனுப்பிய மடலை பதிகிறேன்.//
சகோ அதிரைக்காரன், உங்கள் மடலை வினவு தளத்தினர் வெளியிடாதது வருந்தத் தக்கது. கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி பேசும் இவர்களே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல?
DEAR மரைக்காயர்,
KEEP IT UP.
---------------
FOR THE READERS
சொடுக்கி கேளுங்கள்
>>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<
சொடுக்கி கேளுங்கள்
2. >>>>>
பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையானது? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.
இறைவனின் வார்த்தைகளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள். . <<<<<
.
//VANJOOR said...
DEAR மரைக்காயர்,
KEEP IT UP.//
நன்றி சகோதரர் அவர்களே.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அழகிய முறையில் பதில் சொல்லி இருக்கிறீர்கள் பகிர்வுக்கு நன்றி
http://valaiyukam.blogspot.com/2011/05/blog-post_06.html
வினவே..! யார் பயங்கரவாதி..? மாவோயிஸ்டா..? தாலிபானா..? பதில் சொல்..!
முடிந்தால் இதையும் பார்வையிடுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்பு சகோ
வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவை படிப்பதில் மகிழ்ச்சி
//அப்படின்னா 'ஓஜர்' என்ற பெயருக்குச் சொந்தக்காரர்களான www.ogerinternational.com என்ற ஃப்ரான்ஸ் நாட்டு நிறுவன குழுமத்திற்கு என்ன நேர்ந்தது? ஓ... அவங்க வேற இருக்காங்களா? அப்படின்னா ஃப்ரான்ஸ் தேசத்தையும் அல்லாவின் தேசம்னு அறிவிச்சுடுவோம். மேட்டர் சால்வ்டு! என்ன வந்தாலும் வச்ச தலைப்பை மட்டும் நாங்க மாத்த மாட்டோம்ல! //
முஸ்லிம்கள் பெயரில் நடக்கும் தவறுகளுக்கு இஸ்லாத்தையும் - இறைவனையும் முன்னிலைப்படுத்தி ஆக்கம் வடிக்கும் மாண்பை எங்கிருந்து தான் கற்றுக்கொண்டார்களோ...
இந்த நடுநிலை(?) விமர்சகர்கள்...
பகிர்ந்த பதிவிற்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
//ஹைதர் அலி said...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
அழகிய முறையில் பதில் சொல்லி இருக்கிறீர்கள் பகிர்வுக்கு நன்றி //
நன்றி சகோதரரே. நீங்கள் சுட்டிக்காட்டிய பதிவையும் படித்தேன். மிக சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
//G u l a m said...
முஸ்லிம்கள் பெயரில் நடக்கும் தவறுகளுக்கு இஸ்லாத்தையும் - இறைவனையும் முன்னிலைப்படுத்தி ஆக்கம் வடிக்கும் மாண்பை எங்கிருந்து தான் கற்றுக்கொண்டார்களோ...
இந்த நடுநிலை(?) விமர்சகர்கள்...//
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரரே. உண்மையான நடுநிலையாளர்கள் தவற்றைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வார்கள். நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.மரைக்காயர்,
///அப்படின்னா 'ஓஜர்' என்ற பெயருக்குச் சொந்தக்காரர்களான www.ogerinternational.com என்ற ஃப்ரான்ஸ் நாட்டு நிறுவன குழுமத்திற்கு என்ன நேர்ந்தது? ஓ... அவங்க வேற இருக்காங்களா? அப்படின்னா ஃப்ரான்ஸ் தேசத்தையும் அல்லாவின் தேசம்னு அறிவிச்சுடுவோம். மேட்டர் சால்வ்டு! என்ன வந்தாலும் வச்ச தலைப்பை மட்டும் நாங்க மாத்த மாட்டோம்ல!///---செமை..!
//இந்தப் பிரச்னைக்குத் தீர்வு//
//இவையெல்லாம் ஏற்கனவே இஸ்லாத்தில் இருக்கின்றன தோழர்களே!//
நாமும் நடத்தும் பாடத்தை நடத்திக்கொண்டேதான் உள்ளோம். 'விளங்க வேண்டும்' என்ற எண்ணம் அல்லது ஆர்வம் கொண்டால் மட்டுமே உண்மையை அவர்களால் விளங்க முடியும்.
நாம் நமது விளக்கம் சொல்லும் பணிக்கான கூலியை மறுமையில் நாடியுள்ளோம்.
தங்கள் பணி மேலும் தொடர துவா செய்கிறேன்.
'நெத்தியடி முஹம்மத்' எனும் பெயரில் வினவில் நிறைய முறை அவர்களுக்கு பாடம் நடத்தியும் திரும்ப திரும்ப அவர்கள் புத்தி தம் கருத்தை மக்கள் படித்து சிந்தித்து பயனுற வேண்டும் என்பது அல்லாமல் வெறும் ஹிட்ஸ் நோக்கம் மட்டுமே என்பதை...
அவர்கள் தெரிந்தே தான் 'ஒண்ணும் ஒண்ணும் மூணு' என்கின்றனர் என்பதை...
நான் ரொம்ப தாமதமாக உணர்ந்து தெளிந்த பிறகு அங்கே பாடம் சொல்லிக்கொடுக்க போவதே இல்லை.
இந்த பதிவை பொறுத்த மட்டில் நல்ல விஷயத்தை எழுதியுள்ளார்கள். தலைப்பில் தான் விஷமத்தை தூவி உள்ளனர்.
என்னசெய்வது....
வினவு, கட்டண கழிப்பறை கட்டினால் கூட கூட்டம் வராவிட்டால், கூட்டம் வேண்டும் என்பதற்காக அதன் பெயர் பலகையை 'வினவு ஹோட்டல்' என்று மாற்றி வைப்பது வழக்கமான ஒன்றுதானே..?
வ அலைக்கும் ஸலாம் வரஹ்..சகோ முஹம்மது ஆஷிக். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//நாமும் நடத்தும் பாடத்தை நடத்திக்கொண்டேதான் உள்ளோம். 'விளங்க வேண்டும்' என்ற எண்ணம் அல்லது ஆர்வம் கொண்டால் மட்டுமே உண்மையை அவர்களால் விளங்க முடியும்.//
சரியாகச் சொன்னீர்கள். நாம் பதில் எழுதுவது வினவு போன்றவர்களுக்காக மட்டுமல்ல, அவர்களின் பதிவையும் நம்முடைய பதிலையும் படிக்கும் ஏராளமான நடுநிலையாளர்களுக்கும் சேர்த்துத்தான் என்பதால், நாம் தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருப்போமே! நீங்கள் சொன்னதுபோலவே நம் பணிக்கான கூலியை நாம் மறுமையில் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.
//'வினவு ஹோட்டல்'//
திருத்தம்...
"வினவு இலவச ஹோட்டல்"
என்று சொல்ல வந்தேன்...
Post a Comment