Friday, September 25, 2009

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் ராணுவ வீரர்!

பீகார் தலைநகர் பாட்னாவில் வசிக்கும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்திய ராணுவத்தில் 5 ஆண்டுகாலம் சிப்பாயாக பணிபுரிந்த இந்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பாட்னா அருகே கான்கர்பாக் என்ற இடத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவர் பதுங்கி இருந்தது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

மேலும் விசாரணையில் அவருக்கு ஐ எஸ் ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்பு உள்ளது என்ற திடுக்கிடும் தகவலும் வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள ராணுவ நிலைகளின் வரைபடங்கள், ஏவுகணை வகைகள் மற்றும் அதன் தொழிற்நுட்பம் பற்றிய விவரங்கள் அதன் இருப்பிடங்கள் போன்றவைகள் அடங்கிய தஸ்தாவேஜூகளும் அந்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

ராணுவத்தில் உள்ள சிப்பாய்களுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு பல உறுதியான தகவல்களை விவரங்களை இவர் சேகரித்துள்ளார். இந்திய பகுதி காஷ்மீரில் உள்ள ஏவுகணைகளின் தொழிற்நுட்பம், நிறுத்தி வைக்கபட்டுள்ள இடங்களின் வரைபடம் ஆகியவை அவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவரிடமிருந்து 5 சிம்கார்டுகளும் ஒரு மொபைல் போனையும் கைப்பற்றிய காவல்துறையினர் அதிலுள்ள நேபாளநாட்டு தொலை பேசி எண்களை கொண்ட சிம்கார்டை கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தகவல்: இந்நேரம்.காம்

மேலே கண்ட தகவலில் சொல்லாமல் விட்ட ஒன்று அந்த நபரின் பெயர்.. அது சுதன் சுதாகர்.

ச்சே.. ஜஸ்ட் மிஸ்..! மவனே! ஒன் பேரு மட்டும் சலீம் அபூபக்கர் என்று இருந்ததுன்னா, இன்னேரம் 'இணைய நீதிமான்'களெல்லாம் சேர்ந்து உன்னை, உன் பரம்பரையை, உன் மதத்தை, உன் மதத்தை பின்பற்றும் மற்ற எல்லோரையும் நார் நாராக கிழித்து தொங்க விட்டு, உனக்கு 'தேசத்துரோகி' பட்டம் சுமத்தி, தூக்குத் தண்டனை கொடுத்து தொங்க விட்டிருப்பார்கள்.

அத்துவானியிலேருந்து தமிழ் புளோக் எழுதுற அம்மாஞ்சி வரைக்கும் உனக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றினாத்தான் இந்தியாவுக்கே விமோசனம் கிடைக்கும் என்று போராட்டம் நடத்தியிருப்பாங்க!

அடுத்த விஜயகாந்து படத்திலும் கமலஹாசன் படத்திலும் வில்லனா வர்ற கொடுப்பினையும் உனக்கு கெடச்சிருக்கும்.

சுதாகர்னு பேரு வச்சிருந்ததாலே தப்பிச்சிட்டேடா மவனே!


7 comments:

said...

நன்பரே ஏன் துரோகிகளை மதத்துடன் சம்மந்தப் படுத்துகீறீர்கள்.எல்லாம் மதத்திலும் துரோகிகள் உள்ளனர்.நீங்கள் இதை ஏதோ உள் நோக்கத்துடன் எழுதீயுள்ளீர்.தவறு நன்பரே.

said...

BSF(எல்லை பாதுகப்பு படை)-ல் அதிகாரியாகப் பணி புரியும் என் நண்பனின் உறவினர் ஒருவரிடம் பேசும் பொழுது, பாக்கிஸ்தான் BSF பற்றி குறிப்பிடும் பொழுது, மிகவும் அருகாமையில் இருக்கும் போஸ்ட்-ல் இருந்து சினிமா பாடல் சி.டி, சிகரெட், குவாட்டர் சில சமயம் வீட்டிலிருந்து வரும் ஸ்பெசல் சாப்பாடு எல்லாம் எக்சேன்ஜ் பண்ணிக்கொள்வோம் என்றார்!!!! "அந்த அதிகாரி முஸ்லீம் அல்ல".

said...

நண்பர் சுரேஷ் குமார் அவர்களே, இந்த கேள்விய தான் நாங்களும் பல காலமாக கேட்கிறோம், இதேநேரம் யாராவது ஒரு முஸ்லிம் பெயர் உடைய யாரவது செய்து இருந்தால் நண்பர் மரக்காயர் சொன்னது போல முஸ்லிம் தீவிர வாதி அது இதுனு சொல்லி டங்கு வார கழட்டி இருபாங்க, நல்ல வேல... கொய்யால அவன் பேரு வேற பேரா போச்சி....

said...

<<<
அடுத்த விஜயகாந்து படத்திலும் கமலஹாசன் படத்திலும் வில்லனா வர்ற கொடுப்பினையும் உனக்கு கெடச்சிருக்கும்.


சுதாகர்னு பேரு வச்சிருந்ததாலே தப்பிச்சிட்டேடா மவனே!
>>>

ஹஹஹ... கலக்கல்.<<<
சுரேஷ்குமார் said...
நன்பரே ஏன் துரோகிகளை மதத்துடன் சம்மந்தப் படுத்துகீறீர்கள்.எல்லாம் மதத்திலும் துரோகிகள் உள்ளனர்.நீங்கள் இதை ஏதோ உள் நோக்கத்துடன் எழுதீயுள்ளீர்.தவறு நன்பரே.
>>>

:)

said...

//நண்பர் சுரேஷ் குமார் அவர்களே, இந்த கேள்விய தான் நாங்களும் பல காலமாக கேட்கிறோம், இதேநேரம் யாராவது ஒரு முஸ்லிம் பெயர் உடைய யாரவது செய்து இருந்தால் நண்பர் மரக்காயர் சொன்னது போல முஸ்லிம் தீவிர வாதி அது இதுனு சொல்லி டங்கு வார கழட்டி இருபாங்க, நல்ல வேல... கொய்யால அவன் பேரு வேற பேரா போச்சி....
//
நாம் நம் பார்வை மாற்றி யோசிக்க கற்று கொள்ள வேண்டும்.மதத்தின் மீது தீவிரவாதி சாயம் பூசக் கூடாது.அப்படி பூசுபவர்கள் மூடர்கள்.நாமும் ஏன் அந்த லிஸ்ட்ல் சேரவேண்டும்.

said...

<<<
சுரேஷ்குமார்
நாம் நம் பார்வை மாற்றி யோசிக்க கற்று கொள்ள வேண்டும்.மதத்தின் மீது தீவிரவாதி சாயம் பூசக் கூடாது.அப்படி பூசுபவர்கள் மூடர்கள்.நாமும் ஏன் அந்த லிஸ்ட்ல் சேரவேண்டும்.
>>>

சூப்பருங்கன்னா... :)

ஒரு வார்த்தை சொன்னாலும் சும்மா நச்சுன்னு சொல்லீட்டீங்க!

said...

\\நாம் நம் பார்வை மாற்றி யோசிக்க கற்று கொள்ள வேண்டும்.மதத்தின் மீது தீவிரவாதி சாயம் பூசக் கூடாது.அப்படி பூசுபவர்கள் மூடர்கள்.நாமும் ஏன் அந்த லிஸ்ட்ல் சேரவேண்டும்.//

நண்பர் சுரேஷ் குமார் அந்த லிஸ்டில் சேராமல் இருப்பதற்கு நன்றி, அனால் நம் தாய் திரு நாட்டில் உள்ள மக்கள் அதிகமாக அந்த லிஸ்டில் தான் உள்ளனர் என்பது தாங்கள் அறிவிர்கள் என்று நான் நினைக்கிறன், பத்திரிகை துறை சேர்ந்தவர்கள் அனைவரும் அந்த லிஸ்டில் தான் உள்ளனர்,

இவளவு நாள் நாத்திகம் பேசி வந்த கமல் குட அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டார், நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் நமது பத்திரிகை ரெடியாக கம்போஸ் பண்ணி வைத்துள்ள லச்கரி தோய்பா , அல் உம்மா, சிமி, அல் கொய்த, என்று புலன் விசாரணை என்ற பெயரில் வெளியிட்டு தங்களது அரிப்பை திர்த்து கொள்கின்றன,

நாங்கள் கேட்பது என்னவென்றால் நாட்டில் நடைபெற்ற கண்டு பிடிக்க முடியாமல் உள்ள அணைத்து குண்டு வெடிப்புகளையும் சி பீ ஐ கொண்டு நியாயமான முறையில் வெள்ளை அறிக்கை விட்டு கண்டு பிடிக்க வேண்டும், அதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் மத சாயம் புசாமல் தூக்கில் தொங்க விடப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கற்றது கிடையாது,