Sunday, September 07, 2008

தினமலரைப் புறக்கணிப்போம்!


டென்மார்க் நாளிதழ் ஒன்றில் வெளியாகி உலகெங்கும் முஸ்லிம்களின் எதிர்ப்பினை சம்பாதித்த கேலிச்சித்திரங்களில் ஒன்றை, மிகச்சரியாக ரமலான் முதல் நாள் அன்று வெளியிட்டு, தனது இஸ்லாமிய எதிர்ப்புணர்வை மிகத் தெளிவாக மீண்டுமொருமுறை பறைசாட்டியிருக்கிறது தினமலர் நாளேடு!

ஆம், இது முதல் முறையல்ல! சென்ற வருடம் அக்டோபரில், நோன்புப் பெருநாள் நேரத்தில் மற்றொரு டென்மார்க் கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருந்தது தினமலர். அப்போது அதற்கு பெரிதாக எதிர்ப்புக்குரல் எழும்பாததாலோ என்னவோ, மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் தனது செயலை இந்த வருடமும் அரங்கேற்றியிருக்கிறது இந்த பார்ப்பனீய நாளேடு!

பலமான எதிர்ப்பு கிளம்பிய பிறகு அதற்கு 'வருத்தம்' தெரிவித்த தினமலர் ஆசிரியர், 'தவறான கார்ட்டூன் வெளியிட்டதற்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவர்தான் காரணம்' என சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.

என்ன கொடுமை சார் இது? தினமலரில் என்ன கார்ட்டூன் போடுவது என்பதை ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்தான் முடிவு செய்கிறாராமா?

அப்படம் வெளியான 'கம்ப்யூட்டர் மலருக்கு' பொறுப்பாசிரியர் யாரும் கிடையாதா?

வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம், ஆகிய நான்கு பதிப்புகளின் பொறுப்பாளர்கள் யார்?

இவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டா இப்படம் வெளியானது?

இது தெரியாமல் நடந்த தவறு என்றால், தொடர்ந்து இரண்டு வருடங்களாக சரியாக ரமலான் நேரத்தில் இது ஏன் நடக்க வேண்டும்?

மதநல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் தினமலர் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு நச்சுக் கிருமி!

நன்றி: அபூமுஹை

10 comments:

said...

இந்த இடத்தில் நாம் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல இடங்களில் வீரியமிக்க ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன. இந்த போராட்டங்களை பல இடங்களில் இரண்டு மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கங்களான தமுமுக மற்றும் எம்.என்.பி யைச் சேர்ந்தவர்கள் ஒருங்கினைந்து நடத்தியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். இதுபோன்ற ஒத்தக்கருத்துடைய எண்ணற்ற விஷயங்களில் ஒன்றினைந்து பனியாற்றுவது மிகவும் இன்றைய நிலையில் மிக மிக அவசியமானது. இது போண்ற ஒற்றுமை தொடர வாழ்த்துக்கள்...

said...

இந்த இடத்தில் நாம் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பல இடங்களில் வீரியமிக்க ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன. இந்த போராட்டங்களை பல இடங்களில் இரண்டு மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கங்களான தமுமுக மற்றும் எம்.என்.பி யைச் சேர்ந்தவர்கள் ஒருங்கினைந்து நடத்தியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். இதுபோன்ற ஒத்தக்கருத்துடைய எண்ணற்ற விஷயங்களில் ஒன்றினைந்து பனியாற்றுவது மிகவும் இன்றைய நிலையில் மிக மிக அவசியமானது. இது போண்ற ஒற்றுமை தொடர வாழ்த்துக்கள்...

said...

தயவு செய்து கீழ்கண்ட முகவரிக்கு துபாயில் தினமலரை தடைசெய்ய உங்களின் கருத்தை பதிவு செய்யவும். http://www.etisalat.ae/proxy


தமிழகத்தில் இப்பத்திரிக்கைக்கு கனிசமான முஸ்லிம் ஏஜென்டுகள் இருக்கின்றனர். அவர்களை தனித்தனியாக அனுகி, இனி ஒருபோதும் இந்த மஞ்சள் பத்திரிக்கையை வினியோகிக்காது அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இத்தினமலம் பத்திரிக்கை பெருமளவில் அனுப்பிவைக்கப்பட்டு கொள்ளை இலாபம் அடைகிறது. மேற்கண்ட நாடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே உள்ளனர். வியாபாரிகளை அனுகி தினமலரின் விஷமத்தனத்தை விளக்கி அவர்கள் இப்பத்திரிக்கையை விற்பனை செய்வதை நிறுத்திடக் கோரவேண்டும்.

தினமலத்தின் இணையதளமான www.dinamalar.com இணையதளத்தை மேற்கண்ட நாடுகளில் பிளாக்செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்

said...

Why cant all the Muslim brothers and sisters boycott dinamalar. This will show major impact on their sales. Brothers and Sisters of Islam please do not buy dinamalar and do not sell dinamalar in your shops.

Insha-allah, we can request local jamats and Islamic organizations to spread this boycott across Tamil nadu and all over the world(esp Gulf countries and online reading).

Spread this boycott request as much as you can.

To request website block for Saudi and Arab Emirate:

For Saudi
http://www.internet.gov.sa/resources/block-unblock-request/block/

For UAE
http://www.etisalat.ae/proxy

site: www.dinamalar.com

Message: Dinamalar is the Anti Islamic & Anti Muslim Daily Tamil Newspaper. Recently published the Holy Prophet(Sal) Cartoon and got condemn rally throughout Tamil Nadu(South India), carried out by various tamil muslim movements. Please block this Site.

Proofs:

http://videosfromindia.smashits.com/view/3812/police-detained-agitators-angered-by-prophet-mohammeds-cartoon

http://www.thehindu.com/2008/09/03/stories/2008090354890400.htm
(do not inlcude the above http for Emirate website)
Thanks,

said...

தயவு செய்து இதற்க்கு ஜாதீய சாயம் பூச வேண்டாம். அதாவது பார்பனர்களை குறை சொல்ல வேண்டாம்.

தினமளின் செய்கையால் உண்மையான பிராமணர்கள் வேட்கபடுகிறார்கள்.

மத நல்லிணக்கத்தை பேணி காக்கும் எத்தனையோ பிராமணர்களை என்னால் காட்ட முடியும்.

நன்றி

- சிம்பிள் சுந்தர்

said...

உண்மை தான், எல்லா சமுகத்திலும் நல்லவர்கள் இல்லாமல் இல்லை,மத நல்லினக்கத்தை பேணி நடக்கும் மதிப்புமிக்க பிராமணர்கள் நிச்சயம் இருக்கிறார்கள்.

பாருங்க சார் யாரோ தீவிரவாதம் செய்ய முஸ்லிம் தீவிரவாதி என்கிறார்கள்.
நல்லோர்கள் நாம் அனைவர்களும் இந்தியர்களே!.

said...

ஆமாம், ஜாதியம் புகுத்த படாது.

நானும் சிம்பிள் சுந்தர் கருத்தை வழிமொழிகிறேன்...


@மரைக்காயர், இந்த வருடமும் அரங்கேற்றியிருக்கிறது இந்த பார்ப்பனீய நாளேடு! என்பதில் தயவு செய்து, பார்ப்பனியத்தை எடுத்துவிடவும்

சில பேர் செய்யும் தவறுகளால் ஒரு சமுதாயம் எப்படி பொருப்பேற்க முடியும்?

நானும் துபாய் & சவுதி proxy siteல் தினமலரை block பன்ன அனுப்பிவிட்டேன்.

சவுதியில் இருக்கும் அன்பர்கள் இன்னும் 48 மணி நேரத்தில் தினமலர் தடை செய்ய வில்லை என்றால்
Fax: +966 (1) 2639290
email: block@internet.gov.sa

தொடர்பு கொள்ளவும்.

said...

Eood news is Etisalat has banned the dinamar web site no one can view from UAE

Masha Allah.

Ibrahim.

said...

என்ன சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் அது. பிணங்களை விழ வைத்து அதன் மேல் ஏறியே அரசியல் செய்து பழக்கப்பட்ட இந்த ஜென்மங்களை என்னவென்று சொல்வது?

@ சுந்தர்

உங்கள் உணர்வோடு ஓத்துப்போகிறேன்.இதேபோல் தான் என்போன்ற இஸ்லாமியர்கள் நிலையும்.யாரோ செய்யும் வன்முறைக்கு எங்களை மொத்தமாக முஸ்லிம் தீவிரவாதிகள் என்கிறார்கள் :(

said...

இதே போல் இஸ்லாமிய பெயர் தாங்கி ஓருவர் ஹிந்து கடவுள் உருவத்தை விமர்சனத்திற்கு உரிய வகையில் வரைந்ததை மரைக்காயர் கண்டித்தும் இருக்கிறார்.
இதோ சுட்டி

http://maricair.blogspot.com/2008/03/blog-post.html