Tuesday, February 05, 2008

சொந்த செலவில் குண்டு வைத்துக் கொண்ட இந்துத்துவ பயங்கரவாதிகள்!


கடந்த 24-01-08 அன்று தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக முன்னாள் இந்து முண்ணனி தலைவர் குமார பாண்டியனின் சகோதரர் ரவி பாண்டியன் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். குண்டு வெடித்த சூழ்நிலையை கவனித்துப் பார்த்தால், ஒரு பெரும் மதக்கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கிலேயே இச்சதித் திட்டத்தை இந்த பயங்கரவாதிகள் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது புலப்படும்.


இரவு 9:30 மணியளவில் அந்த அலுகலகத்தில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குண்டு வீசப் பட்டிருக்கிறது. குண்டு வீச்சு சம்பவம் நடப்பதற்கு முன்பு இரவு 7 மணி வரை இந்து முண்ணனி அமைப்பாளர் ராஜூ அங்கு இருந்துள்ளார். சம்பவம் நடப்பது இரண்டரை மணி நேரத்துக்கு முன்னதாக அவர் வெளியேறியிருக்கிறார். உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்று தாக்குதல் நடத்தியவர்கள் கருதியிருந்தால் அந்த அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அதை செய்திருக்கலாம்.


சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பும் சம்பவம் நடந்த பின்னரும் இந்து முண்ணனித் தலைவர் ராம கோபாலன் தென்காசிக்கு வந்து முஸ்லிம்களை குறித்து அவதூறுகளை வீசியிருக்கிறார். சம்பவத்தை காரணம் காட்டி பாஜக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.


சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு செல்லச்சாமி என்பவர் நாட்டு வெடிகுண்டுகளுடன் போலீசாரிடம் பிடிபட்டு, அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இச்செய்தி பெரும்பாலான ஊடகங்களில் வரவில்லை.


இந்த குண்டு வெடிப்பு மூலம் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி மதக்கலவரத்தை தூண்டுவதற்காகவே இவர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும். இச்சமூக விரோதிகளின் திசைதிருப்பல்களில் சிக்காமல் கவனமாக செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினர் பாராட்டுக்குரியவர்கள்.


நன்றி: தமுமுக, The Hindu

10 comments:

சம்பூகன் said...

இணையத்திலிருக்கும் பார்ப்பன இந்துத்துவ வெறியர்கள், பல்வேறு பெயர்களில் தங்களுக்கு தாங்களே பிண்ணூட்டம் போட்டு பாராட்டிக்கொள்கிறார்கள், இஸ்லாமியர்கள் பெயரில் ஆபாச தளம் தொடங்கி எழதுகிறார்கள், தென்காசியில் இருக்கும் இந்துத்துவ வெறியர்களோ இஸ்லாமிய சகோதரர்கள் மீது பழி போடுவதற்காக தங்களுக்கு தாங்களே குண்டு வைத்து கொண்டிருக்கிறார்கள் எவ்வளவு ஒற்றுமை பாருங்கள்., ஒருவேளை இது போல பித்தலாட்டம் பண்ணுவதற்கு தனியா வகுப்பு எடுக்குறானுங்களோ?

சம்பூகன்

பிறைநதிபுரத்தான் said...

ம்ரைக்காயரே! தலைப்பை ‘சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்ட சுயம்சேவக்குகள்' என்று மாத்தினால் நன்றக இருக்கும்.

தென்காசியில் - விட்ட போலி மிரட்டலைப்போல - அம்னீஷியா அட்வானிக்கு எதிரான கும்பல் அவரின் யாத்திரையையும் - நித்திரையையும் பொய் மிரட்டல் விட்டு கெடுத்திருப்பார்களோ!

Irai Adimai said...

சூப்பர் தலைப்பு

எப்படின்னே இவ்வளவு அழகான தலைப்ப போட்டீங்க.இவனுங்க போற போக்க பார்த்தா தின்னுற சோத்துல கல்லு கிடந்தா கூட இஸ்லாமிய பயங்கர வாதம்னு சொன்னாலும் சொல்லுவானுக.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு சொல்லுறதுபோல அடுத்த எலக்ஷன்ல ஒண்ணும் இல்லாம ஆகிடுவோமொங்கர பயத்துல என்ன செயுரதுன்னே தெரியாம தனக்கு தானே ஆப்பு வச்சிகித்து இந்த அனுமான் ஜென்மங்கள்.

அன்புடன்
இறை அடிமை

மரைக்காயர் said...

சம்பூகன், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எந்த வழியிலாவது மதக்கலவரத்தை உண்டு பண்ணி அதில் அறுவடை செய்ய வேண்டும் என்பதே இந்த பயங்கரவாதிகளின் நோக்கம். குஜராத்தில் குடித்த ரத்தம் போதாது போலிருக்கிறது.

மரைக்காயர் said...

//தலைப்பை ‘சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்ட சுயம்சேவக்குகள்' என்று மாத்தினால் நன்றக இருக்கும். //

இந்த தலைப்பும் நன்றாக இருக்கிறது பிறைநதிபுரத்தான். நன்றி.

மரைக்காயர் said...

//இவனுங்க போற போக்க பார்த்தா தின்னுற சோத்துல கல்லு கிடந்தா கூட இஸ்லாமிய பயங்கர வாதம்னு சொன்னாலும் சொல்லுவானுக//

கலவரத்தை உண்டாக்குவதற்காக தனது அலுவலகத்திலேயே குண்டு வைத்துக் கொண்ட இந்த வெறியர்கள் இன்னும் என்னென்ன செய்திருக்கிறார்களோ?

இக்பால் said...

இவர்கள் சொந்த செலவில் குண்டு மட்டுமல்ல, அவர்களின் மனைவி மக்களையும் பயன்படுத்துவார்கள். மானங்கெட்டவர்கள்.....

Asalamsmt said...

//சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்ட சுயம்சேவக்குகள்' என்று மாத்தினால் நன்றக இருக்கும். //

இப்படி வைத்தால் எப்படி இருக்கும் // ஆப்பில் மாட்டிய சுயம் குரங்கு//

ஐயா சம்பூகன் ஐயா, கொஞ்சம் பார்த்து மார்க் போடுங்கள்.

அசலம்

Unknown said...

குறுமதியாளர்கள் இந்தக் காவிக்கயவர்கள்.
இதன் மூலம் கலவரத்தை உண்டாக்கி நாட்டை காடாக்குவதைத் தடுத்த காவல் துறையினர் பாராட்டுக்குரியவர்கள்.

உன்னுடையவன் said...

புதிய தகவல் எதுவும் இல்லை. சம்பூகன் மற்றும் அசுரன் ஏற்கனவே கொடுத்த அதே செய்தியை மிகவும் தாமதமாக எழுதியிருக்கிறீர்கள். இருந்தாலும் வாழ்த்துக்கள்..