Monday, April 09, 2007

இந்தியாவில் "கோமாதாவை விட மாதாவின் விலை மலிவு!" - தினமலர் செய்தி

'இந்து மதத்துக்கு வாங்க.. வாங்க' என்று ஒரு காலத்தில் கூவிக் கொண்டிருந்தார் எழில் என்பவர். ஏதோ இலவச அழைப்பா இருக்கும் என்று நினத்தால், இதெல்லாம் ஒரு வியாபார தந்திரம் என்பது பிறகுதான் தெரிந்தது. சும்மா இல்லைங்க.. யாராவது ஒரு ஏமாளி இந்து மதத்துக்கு மாறி வர்றேன்னு வந்தா ஐயாயிரம் பத்தாயிரம்னு பிடுங்கிட்டு ஒரு சர்டிபிகேட் கொடுப்பாங்களாம். இந்த ஏமாற்று கும்பலுக்கு தன்னோட வலைப்பதிவிலும் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் சிலர். கூட்டு களவாணித்துவமா இருக்குமோ?


தன்னோட மதத்தைப் பத்தி உசத்தியா சொல்லிக்கொள்ள ஒன்னுமில்லை என்பதால், 'சூடானில் அடிமை வியாபாரம் நடக்கிறது! மலேசியாவில் இந்துக்கோவில் இடிக்கப்பட்டது!! பாகிஸ்தானில் கோமாதாவை பிரியாணி போட்டார்கள்!' என்பது போன்ற உலகச் செய்திகளை, அவை இஸ்லாம் பற்றிய எதிர்மறையான செய்திகளாக இருந்தால் உச்சிக்குடுமி கூத்தாட அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார் ஒருவர். இப்படிச் செய்தாலாவது தனது மத வியாபாரத்தை தூக்கி நிறுத்திவிட முடியாதா என்ற ஒரு நப்பாசைதான்!

இந்த 'காப்பி & பேஸ்ட் வல்லுனரின்' பார்வையில் படாத ஒரு செய்தி நம் கண்ணில் பட்டது. தினமலர் செய்திகளில் காவிப்பொடியை துடைத்துவிட்டுத் தேடினால் அரிதாக சில நல்ல செய்திகளும் தென்படும்! அந்தவகையில் தினமலரில் கண்ட செய்தியை அப்படியே காப்பி & பேஸ்ட் செய்கிறேன்.

வாசித்துவிட்டு வெறுமனே போய்விடாமல், இதற்கெல்லாம் யார் காரணம்?என்று கருத்துச் சொல்லவும் வேண்டுகிறேன். வெறுமனே சூடானையும், பாகிஸ்தானையும் பற்றி பஜனை பாடிக் கொண்டிருக்காமல், (அப்படி பஜனையடித்துக் கொண்டிருந்ததால்தான் சென்றமாதம் 30,00,000 இந்துக்கள் புத்தமதத்தை நோக்கி மாராத்தான் ஒட்டினார்கள்) இந்த சுதேசிப் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் முன்வர வேண்டுகிறேன். வெட்கம் மானம் சூடு சொரனை etc உள்ளவர்கள் இதைத்தான் செய்வார்கள்!

"இந்தியாவில் மாட்டின் விலையை விட, பெண்கள் மற்றும் குழந்தைகள் விலை மலிவாக உள்ளது. 500ல் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை இவர்கள் விற்கப்படுகின்றனர்' என்று பிரபல தன்னார்வ தொண்டு நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் பெண்கள், குழந்தைகள் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. விபசாரத்துக்குத் தான் பெண்களை இந்தியாவில் அதிகமாகக் கடத்துகின்றனர். கொத்தடிமை வேலைக்காக கடத்தப்படுவது, இப்போது ஓரளவுக்கு குறைந்துள்ளது. கோல்கட்டா நகரில் இயங்கி வருகிறது, "பச்சான் பச்சாவோ அந்தோலன்' என்ற தன்னார்வ அமைப்பு. குழந்தைகள், பெண்கள் கடத்தப்படுவதும், விற்கப்படுவதும் அதிகரிப்பதை தடுக்க, இது நடவடிக்கை எடுத்து வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி புவன் ரிப்பு, சில திடுக்கிடும் தகவல்களை நிருபர்களிடம் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:
தெற்காசிய நாடுகளில் பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவது, விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. விபசாரத்தில் தள்ளவும், கொத்தடிமை வேலை செய்யவும் தான், இவர்கள் கடத்தி விற்கப்படுகின்றனர்.

திட்டமிட்டு சில சமூக விரோத கும்பல்கள், குழந்தைகளை இந்தியாவில் கடத்துகின்றன. சில மாநிலங்கள் தான், இந்த கும்பல்களைக் கண்காணித்து, போலீஸ் ஒடுக்குகிறது. "குழந்தையைக் காணவில்லை' என்று புகார் செய்யும் பெற்றோருக்கு, தங்கள் குழந்தை கடத்தப்பட்டு, விற்கப்படுவது பற்றிய தகவல் தெரிவதே இல்லை. போலீசும், குழந்தைகள் கடத்தல் பற்றிய விஷயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் கடத்தல் நடந்தாலும், ஆங்காங்கு போலீஸ் நிலையங்களில், சாதாரண வழக்கு பிரிவில் தான், புகார் பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள நிலைமை பற்றி சொல்ல வேண்டுமானால், மாட்டின் விலை கூட அதிகமாக உள்ளது. ஆனால், கடத்தி விற்கப்படும் குழந்தைகள், பெண்கள் விலை, 500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் தான். மத்திய அரசு, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் தான், குழந்தைகள், பெண்கள் கடத்தி விற்கப்படுவது அதிகரிப்பதை தடுக்க முடியும். இவ்வாறு புவன் ரிப்பு கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/2007april08/general_ind11.asp

இந்த செய்தியை படிச்ச பிறகாவது இவங்களுக்கெல்லாம் சொரணை வருதான்னு பார்ப்போம்!!!

4 comments:

said...

உள்ளூரில் விலை போகாததை வெளியூரில்தான் விலை பேசணும்கிற மாதிரி நம்ம ஊரு பயஸ்கோப்பையெல்லாம் கோழி கூடையைப் போட்டு மூடி வச்சிட்டு. கண்டம் விட்டு கண்டம் போய் படம் பிடிச்சு சூடான் ''பயஸ்கோப்பு பாத்தியா'' ன்னு படம் காட்ட வெட்கப்படணும்.

said...

மரைக்காயர் அய்யா!

ஒரு திருத்தம்..

எழில் என்பவர் அழைப்பது இந்து மதத்திற்கு இல்லை, பார்ப்பனியம் உருவாக்கிய ஆரிய சமாஜி என்ற ஜாதிக்கு!

தொடக்கத்தில் ஏதோ பெரிய பில்டப் கொடுத்து KG பிள்ளைகளுக்கு புரியுற மாதிரி விளக்கம் கேட்டு விவாதம் எல்லாம் புரிந்தார். இப்போ அதெல்லாம் கூட காப்பி / பேஸ்டாத்தான் இருக்குமோ ஒரு சந்தேகம் வருகிறது...

said...

//இந்த செய்தியை படிச்ச பிறகாவது இவங்களுக்கெல்லாம் சொரணை வருதான்னு பார்ப்போம்!!!


இதற்க்கெல்லாம் இவர்களுக்கு சொரணை வராது நண்பர் மரைக்காயரே.

சழூகநிதிக்காக எழுதுபவர்களிடம் இந்த மாதிரி கேள்வி வைத்தால் நேர்மையாக பதில் சொல்வார்கள். கொள்கைக்காக இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும சாடுபவர்களிடம் இதெற்கெல்லாம் பதிலிருக்காது.

இவர்களுடைய நோக்கம் இந்தியாவில் பார்பானிய ஆட்சியை நிறுவி, நடைமுறையிலுள்ள மநுஸ்மிருதி கொள்கைகளை மேலும் அமல்படுத்தி தொடர்ந்து தங்களது சுகபோக வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்வது மட்டும் தான். இதற்காக இவர்கள் எந்தளவு கீழ்த்தரமாக வேண்டுமானாலும் நடப்பார்கள் என்பதற்கு உத்தரபிரதேசத்தில் தேர்தலுக்காக இவர்கள் வெளியிட்ட குறுந்தகடே நல்ல உதாரணமாகும்.


இவர்களுடைய பதிவுகளை மனநிலை சரியில்லாதவர் எழுதுகிற பதிவு போல் அல்லது சங்கபரிவாரின் ஊதுகுழல் என்பது மாதிரி தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

said...

மன்னிக்கவும், சழூகநிதியை சமுகநீதிக்காக என்று மாற்றி படிக்கவும்.