Sunday, March 11, 2007

இந்துப் பெண்கள் மதமாற்றம் வெறும் புரளி!

இந்து பெண்களை குறிவைக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நண்பர் எழில் ஒரு பதிவு போட்டிருந்தார். ஒரு கும்பல் இந்துப்பெண்களை மிரட்டி மதம் மாற்றுவதாகவும் ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒவ்வொரு இஸ்லாமிய மதமாற்றத்துக்கும் 5000 பவுண்டுகள் தருகிறதாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த தகவலின் உண்மை நிலவரம் பற்றி சகோதரர் அட்றா சக்கை ஒரு பின்னூட்டமிட்டிருந்தார். இந்துப் பெண்களை மதம் மாற்றுகிறார்கள் என்பது வெறும் புரளி என்றும் வழக்கம் போலவே இதுவும் பொய்ப் பிரச்சாரம் என்றும் இஸ்லாமின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாத சிலரின் வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்பதும் இத் தகவல் அறிக்கையின் மூலம் நாம் அறிய முடிகிறது.

சில பொய்களை பரப்புவதன் மூலம் இஸ்லாமை ஒழித்து விடலாம் என்றும் தங்கள் மதத்தை வளர்த்து விடலாம் என்றும் சிலர் மனக்கோட்டை கட்டி அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. பாவம்!

MCB calls for evidence for “forced conversions”

The Muslim Council of Britain
8 March 2007

Press Release:

After persistent reports of forced conversions of British Hindu and Sikh girls to Islam, the Muslim Council of Britain calls upon all concerned to publicise their evidence and hand it to the police authorities immediately.

‘These allegations are not new. What is deeply worrying however is the continuing absence of any actual substantive evidence to corroborate them. We believe it is high time that the plaintiffs supply their evidence to the police and relevant authorities,' said Dr Muhammad Abdul Bari, Secretary-General of the MCB.

If these reports prove to be true the MCB would unreservedly condemn the practice of forced conversion as it goes against a fundamental tenet of our religion - there is no compulsion in matters of faith.

Dr Abdul Bari said, ‘The MCB is fully prepared to co-operate with its Hindu and Sikh counterparts and the police to get to the root of these allegations and to ensure that the religious rights, freedom and dignity of all are respected. In the absence of any hard evidence of forced conversions though, many British Muslims will suspect that this is an underhand attempt to smear them. People from all faiths and none should have the right to convert to other faiths if they so wish.

தகவலுக்கு நன்றி: அட்றா சக்கை

12 comments:

said...

இந்தியாவில் தலித் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ஐ.நா. குழு கவலை


நியூயார்க், மார்ச் 11: இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடி இன பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் குழு கவலை வெளியிட்டுள்ளது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்கள், விசேஷ காவல்படைகளை அமைக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு ஐ.நா. குழு கேட்டுக்கொண்டுள்ளது. நிற வெறி ஒழிப்புக்கான ஐ.நா. குழுவின் சிறப்பு கூட்டம் ஜெனீவாவில் சில தினங்களாக நடைபெற்று வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.

இக்கூட்டத்தில் கிடைத்த தகவல்கள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் தொகுப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ஐ.நா. குழுவின் தொகுப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடி இன பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதும் பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்துவதும் அதிகரித்து வருகின்றன.

வகுப்பு வன்முறையில் இருந்து தலித் மற்றும் பழங்குடி இன மக்களைப் பாதுகாக்க போலீஸ் தவறிவிடுகிறது.

இத்தகைய போலீஸ் அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்; அல்லது கிரிமினல் வழக்கு தொடரலாம்.

"தலித், பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் சட்டப் பிரிவு' குறித்து போலீஸ், நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு கட்டாயப் பயிற்சி தருவதற்கு இந்திய அரசு நடவடக்கை எடுக்க வேண்டும். ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களிடையே உள்ள சாதி வேறுபாடுகளும் இந்தியாவில் அதிகம். இதனால் மனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று ஐ.நா. குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மரைக்காயர் சார்,

இதுக்கு எழில் என்ன சப்பைக்கட்டு கட்டப்போகிறார் என்று பார்ப்போம்.

ஆதாரச் சுட்டி:
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNB20070310101401&Title=International+News&lTitle=Tu]ôhÓf+ùNn§Ls&Topic=0

said...

அட என்னாங்க மரைக்காயர்,

எனக்கு இவ்ளோ பெரிய நன்றில்லாம் வேணாம். ஏதோ என் கண்ணுக்குத் தட்டுப்பட்டதை உங்களுக்கு தெரிவிச்சேன்.

இத நம்ம எயிலு அண்ணாத்தையும் (பின்னூட்டமா) பதிஞ்சுட்டார்

அதே பதிவில ஒரிஜினல் திம்மி அப்படிங்கற பேர்ல ஒரு ஒரிஜினல் மடையர் போட்டிருக்கார். இது புரளிங்கரதுக்கு ஆதாரம் வேணுமாம். இந்த அளவுக்கு இந்த ஆளோட மூளை மழுங்கிப் போனத நெனச்சு வருத்தமாத் தான் இருக்கு.

செய்தியை எல்லாத்துக்கும் முந்தித் தந்த எயிலு அண்ணாத்த கிட்ட இது foreced conversion அப்டிங்கறதுக்கு மறுக்க முடியாத ஆதாரம் கொண்டு வரச் சொல்லுங்க.

அப்புறம் இது புரளியா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணுவோம்.

இங்கிலீசு தெரியலன்னா நல்லா படிச்சு தெரிஞ்சவங்ககிட்டகேட்டு பின்னூட்டம் போடட்டும் இந்த ஒரிஜினல் மடையர்.

இவரை நம்பி இந்தப் பின்னூட்டத்த அனுமதிச்ச எயிலு அண்ணாத்தயாவது அவருக்கு இங்கிலீசு சொல்லித் தரட்டும்.

(எயிலு அண்ணாத்தைக்கு இங்கிலீசு நல்லாத் தெரியும்னு நெனக்கேன். நெறய இங்கிலீசு காப்பி பேஸ்டு பண்றாருல்ல)

said...

//செய்தியை எல்லாத்துக்கும் முந்தித் தந்த எயிலு அண்ணாத்த கிட்ட இது foreced conversion அப்டிங்கறதுக்கு மறுக்க முடியாத ஆதாரம் கொண்டு வரச் சொல்லுங்க.//

அட என்னங்க நீங்க.. எழில் அவர்களுக்கு ஆதாரமெல்லாம் மத்தவங்க கிட்ட கேக்கத்தான் தெரியும். இந்து மதம் பத்தி கேஜி புள்ளைங்களுக்கு புரியுற மாதிரி அவர்ட்ட ஆதாரம் கேட்டு ரொம்ப நாளாயிட்டுது. அதுக்கே இன்னும் பதில் வரலை!

said...

//ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களிடையே உள்ள சாதி வேறுபாடுகளும் இந்தியாவில் அதிகம். இதனால் மனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று ஐ.நா. குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மரைக்காயர் சார்,

இதுக்கு எழில் என்ன சப்பைக்கட்டு கட்டப்போகிறார் என்று பார்ப்போம்.//

mariya அவர்களே, தகவலுக்கும் சுட்டிக்கும் நன்றி. எழில் போன்றவர்கள் இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் MIT-யின் தொழில் நுட்பத்தில் தலையை புதைத்துக் கொண்டிருக்கிறார்கள், நெருப்புக் கோழியைப் போல!

said...

இது போன்ற பொய்களும் பித்தலாட்டங்களும் வேண்டுமென்றே புனையப்படுகின்றன. எனவே, இவையனைத்தும் அவ்வப்போது துகிலுறியப்பட வேண்டும்.
நன்றி அட்றாசக்கை மற்றும் மரைக்காயர்.

said...

Search the web and you will find more than ample evidence for violence against women in islamic/muslim countries.Yes there are problems in India and Hindu society.But Islam is not at all a solution as violence against women
is common in muslim countries, and this includes Female Genital Mutilation also.The record of islamic countries is worse than that of India and Islamic society is worse than Hindu society in treating women.Hindus outlawed
polygamy but muslims in India
still want that.So you should be
ashamed that despite all the tall
claims made by you folks, muslim
society is backward and conservative when it comes to
women.

said...

tamilreber, உமது குற்றச்சாட்டுகளுக்கான பதில்கள் இங்கே இருக்கின்றன.

நான் ஏன் முஸ்லிமானேன்? - யுவான் ரிட்லி

பர்தா எனக்கு சுதந்திர உணர்வு அளிக்கிறது - கமலா சுரையா

ஹிஜாபைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்?

இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்த பிறகு முஸ்லிமான பெண்கள். உங்கள் காழ்ப்புணர்வு பிரச்சாரங்களை வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள்!

said...

உங்கள் காழ்ப்புணர்வு பிரச்சாரங்களை வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள்!

When you say this i can only laugh.

said...

டமில் ரப்பரா டம்மி ரப்பரா?

ஏனய்யா உங்களுக்கு என்ன பதிவோ அதுக்கு சம்பந்தமா பின்னூட்டம் போட வரவே வராதா? தமிழ்ப்பதிவ நல்லா படிச்சுப் பாத்து முடிஞ்சா அதப் புரிஞ்சு அதுக்கு சம்பந்தமா எதாச்சும் எழுதப் பழகுங்கன்னு எத்தன தடவ சொன்னாலும் ஒங்க மண்டையில ஏறாதா?

மரைக்காயர் அய்யா

சம்பந்தம் இல்லாம வர்ர இந்த மாதிரி உளறல்களை பதிஞ்சு உங்க பதிவ கறைப்படுத்திக்காதீங்க அய்யா..

said...

எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோத(ரர்)ரி தமிழ் ரீபெர் அவர்களுக்கு,

//Search the web and you will find more than ample evidence for violence against women in islamic/muslim countries.//

வலைபதிவு செய்திகள் நம்பகத்தன்மைக்கு உட்படுத்தப்பட்டு பின்பு பதிவு செய்யப்படுவதாக இருந்தால், தாங்கள் சொல்லும் குற்றச்சாட்டில் 100% உண்மை உன்று அனுகலாம். அனால், வலைபதிவின் நிலை என்ன? என்பது தாங்கள் அறிந்ததே. இன்று வலைப்பதிவில் யார் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்னும் நிலை தான் இருக்கிறது. இருப்பினும் ஒரு வாதத்திற்கு, இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாகவே இருந்தாலும், அதன் காரணமாக இஸ்லாம் பெண்களுக்கு எதிராக கொடுமை செய்வதாக சொல்ல முடியாது. ஏனென்றால், இஸ்லாம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படுமானால், அது குர்ஆனிலிருந்தோ, இறைத் தூதர் (இறை அருள் அவர்கள் மீது நிலவட்டுமாக!)பொன் மொழிகளிலிருந்தோ தான் சுட்டி காட்டப்பட வேண்டும்.எனவே நீங்கள் இவ்விரண்டிலிருந்தும் பெண்களுக்கு எதிராக கொள்கைகள் வகுக்கப்பட்டு வழிகாட்ப்பட்டுள்ளது என்று கூறுவீர்களானால் அது தான் இஸ்லாம் மீதான குற்றச்சாட்டாகும். உதாரணத்துக்கு சொல்வதாக இருந்தால், இஸ்லாத்தை தவிர உலகத்தில் எந்த மதமும் அல்லது மார்க்கமும் பெண்களை மணமுடிப்பதற்க்கு மணக்கொடையை பெண்களுக்கு கொடுங்கள் என்று கட்டளை பிறப்பிக்கவில்லை. அத்தியாயம் 4 வசனம் 4ல் இறைவன் கூறுகிறான் "நீங்கள் மணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய திருமணக் கொடைகளை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்...". ஆனால் நம் நாட்டில் முஸ்லிம்களின் நிலை என்ன? மற்ற சமுதாயத்தில் வரதட்சணை எப்படி பெண்களை முதிர் கன்னிகளாக ஆக்கி, பெண்களையும், பெற்றவர்களையும் முடிவுறதாக வேதனையில் மூழ்கடித்துள்ளதோ, அதே நிலையில் தான் இஸ்லாமிய பெண்களும், அவர்களின் பெற்றோர்களும் வரதட்சணை என்ற சமூக விரோத செயலால் முடிவுறதாக வேதனையில் துடித்து வருகிறார்கள். அப்படியானால், இஸ்லாம் பெண்களை வரதட்சணை கொடுமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை வைத்தால் எப்படி அபத்தமாகுமோ, அதே போன்று தான் இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதால், இஸ்லாத்தில் பெண்கள் கொடுமைபடுத்தப் படுகிறார்கள் என்னும் தங்களுடைய குற்றச்சாட்டும் அபத்தமானதாகும்.

தற்போது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முஸ்லிம்களால் கடுமையாக செய்யப்பட்டு வருவதால் இத் தீமையிலிருந்து இளைஞர்களும் அவர்களின் பெற்றோர்களும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறார்கள் என்பது வேதனையிலும் ஆறுதலளிக்கும் செய்தியாகும்.

//this includes Female Genital Mutilation also...Hindus outlawed
polygamy but muslims in India
still want that.So you should be
ashamed that despite all the tall
claims made by you folks, muslim
society is backward and conservative when it comes to
women.//
முஸ்லிம்கள் பெண்களுக்கு எதிராக இழைக்கும் குற்றச்சாட்டுகளாக தாங்கள் வைக்கும் இரண்டு விசயங்கள் 1) பெண்களுடைய sexual organல் செய்யப்படும் mutilation 2)பலதாரமணம்
முதல் விசயத்தை பொறுத்த மட்டில், முஸ்லிம்களில் ஒரு சிலர் இதை மார்க்க கடமையாக ஆண்களுக்கு விருத்த சேதனம் (circumcision)கடமையாக செய்யப்படுவதை போன்று செய்கிறார்கள் என்ற தங்களது குற்றச்சாட்டு சரியே. ஆனால் மார்க்க கடமையாக பெண்களுக்கு, இம் மக்கள் செய்வது இஸ்லாத்தின் படி மிகத் தவறானதாகும். ஏன் தவறு என்றால், இவர்கள் செய்வதற்கு காரணமாக காட்டப்படும் முஹம்மது நபி(இறை அருள் அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்களின் பொன் மொழி ஒன்று, அபூதாவூத் என்னும் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்படுவதாவது, "உம்மு அதிய்யா என்னும் பெண்மணி பெண்களுக்கு விருத்த சேதனம் செய்பவராக இருந்தார். அவரிடம் ஒட்ட நறுக்கி விடாதே, மேலோட்டமாக நறுக்குவாயாக! என்று நபியவர்கள் கூறினார்கள்" என்பதே அந்த செய்தியாகும். இஸ்லாமிய சட்ட விதிகளின் படி முஹம்மது நபி(இறை அருள் அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்களின் பொன் மொழிகளை அறிவிக்கும் தொடர்களில் வரும் அனைத்து மக்களும் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும். இப்படி நம்பகத்தன்மை அற்றவர்கள் யாரும் அந்த பொன் மொழியின் அறிவிப்பாளர்கள் வரிசையில் வந்தால், அந்த பொன் மொழி நிராகரிக்கப்படும். அதே நிலை தான் மேலே குறிப்பிட்டுள்ள பெண்கள் விருத்த சேனம் குறித்த பொன் மெழியாகும். உலக முஸ்லிம்களில் ஆண்கள் அனைவர்களும் விருத்த சேனம் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் செய்து வருகிறோம். ஆனால் பெண்கள் விருத்த சேனம், உலக முஸ்லிம்களில் அனைத்து பெண்களாளும் செய்யப்படவில்லை. மிகச் சில மக்கள்களே செய்து வருகிறார்கள். காரணம், இது குறித்து வரும் நபிகளாரின் பொன் மொழி ஆதாரப்பூர்மற்றது என்பதனால் ஆகும். எனவே இது இஸ்லாமிய வழிமுறையல்ல என்பது புலனாகும். மேலும், பெண்களுக்கு விருத்த சேதனம் அவர்களின் காம உணர்வை குறைப்பதற்காக செய்யப்படுகிறது. காமவுணர்வு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இயற்கையானது. அதனை பூர்த்தி செய்வதற்காகவும், சந்ததிகளை உருவாக்கவும் திருமணத்தை மார்க்க கடமையாக ஆக்கியது சத்திய இஸ்லாம். காமத்தை அடக்குவதை சிறந்ததாக கருதியிருந்தால் இஸ்லாம் துறவறத்தை உன்னத தியாகமாக கருதியிருக்கும். ஆனால் இஸ்லாத்தில் துறவறம் தடை செய்யப்பட்டதாகும். இதுவும், இஸ்லாம் பெண்களுக்கு காமத்தை குறைப்பதற்காக விருத்த சேதனம் செய்ய வற்புறுத்தியிருக்காது என்பதற்கு மற்றுமோர் ஆதரமாகும்.
ஆக இஸ்லாத்தில் பெண்களுக்கு விருத்த சேதனம் என்பது இல்லை என்பது தாங்கள் உணர முடியும் என்று கருதுகிறேன். தங்களது இந்த கேள்வியில் முஸ்லிம்களுக்கு நிறைய படிப்பினைகள் இருக்கிறது. இஸ்லாத்தில் இல்லாதவற்றை மார்க்க கடமையாக செய்யும் முஸலிம்களுக்கு முறையாக இஸ்லாத்தின் செய்திகளை உடனடியாக எத்தி வைக்க தேவையான முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும். அப்படி செய்ய தாமதித்தால், இஸ்லாம் மாற்று மத சமூகத்தினரால் தவறாக புரிந்து கொள்ளப்படும்.

அடுத்து தங்களுடைய 2வது குற்றச்சாட்டான பலதாரமணம் குறித்த விபரத்தை இறைவன் நாடினால் நாளை தருகிறேன்.

மேலும் என் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் வேண்டுவது, மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தின் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் போது, அதை உதாசீனப்படுத்தி அவர்களை அநாகரீகமாக விமர்சனம் செய்யாமல், அவர்கள் அறியாமையால் அவ்வாறு எழுதுவதாக எண்ணி, முறையாக பதில் அளிப்பதோடு, அவர்களின் கேளவிகளில் நமக்கு ஏதும் படிப்பினை உண்டா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.
சில மாற்று மத சகோதரர்களின் எழுத்துகள் நமது இதயத்தை இடியாக தாக்குகிறது. அவர்களுக்கு தெரிந்த நாகரீகம் அது தான். அதற்காக அதே நிலைக்கு ஒரு முஃமின் தன்னை தரம் தரழ்த்தி விடக் கூடாது. ஏனென்றால், முஹம்மது நபி(இறை அருள் அவர்கள் மீது நிலவட்டுமாக!)ஏகத்துவத்தை நிலைநாட்ட மட்டும் இறைத் தூதராக அனுப்ப படவில்லை. நற்குணத்தை முழுமை படுத்துவதற்காகவும் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்.

அண்ணல் நபி(இறை அருள் அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் கூறினார்கள், "நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நற்குணங்களை முழுமைபடுத்துவதற்காகவே அனுப்பட்டுள்ளேன்." (ஆதாரம்: அஹ்மத், பைஹகீ, முஅத்தா)

எனவே அண்ணல் நபி(இறை அருள் அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்களை பின்பற்றும் நாம், நற்குணங்களின் பிறப்பிடமாக இருக்க வேண்டும் எனக்கும் எங்களுக்கும் உபதேசித்து இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.
நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

said...

அன்புச் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்களே, டமில்ரெபர் என்ற இந்த நபருக்கு மிக அழகாக தெளிவாக பதில் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

said...

எல்லாம் வல்ல ஏக இறையோனின் திருநாமத்தால் எழுதுகிறேன்.
அன்பு சகோத(ரர்)ரி தமிழ் ரீபெர் அவர்களுக்கு,

தங்களது 2வது குற்றச்சாட்டான பலதாரமணம் பற்றிய விபரங்களைத் தருகிறேன்.

இஸ்லாத்தில் ஒரு ஆண் அதிகபட்சமாக 4 பெண்களை திருமணம் செய்ய, சில விதிமுறைகளின் அடிப்படையிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை அந்த ஆண் முழுமைப்படுத்தும் நிலையில் தான், ஒன்றுக்கு மேற்பட்டு அதிகபட்சமாக நான்கு பெண்களை திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவல்லாமல் பலதாரமணம் செய்ய அனுமதியில்லை. முதலில் அந்த வரைமுறைகள் என்னென்னவென்று பார்க்கலாம்.

1) குடும்ப நிர்வாகத்திற்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்ட வேண்டிய பொறுப்பு, இஸ்லாத்தில் ஆண் (கணவன்) மீதே சுமத்தப்பட்டுள்ளது. எனவே, அவனது மனைவி பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்டி தர வேண்டிய பொறுப்பு கணவன் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே நான்கு மனைவியை கட்டுபவனாக இருந்தால் சராசரியாக ஆண்களில் 4 பேர் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தை ஈட்டும் திறன் உடையவனாக இருத்தல் வேண்டும்.
2)அந்த மனைவிகள் மற்றும் அவர்கள் மூலமாக பெறப்படும் இவனது குழந்தைகள் அனைவரையும் பாதுகாத்து வரும் கடமையும் இவன் மேல் சுமத்தப்படுகிறது.

அண்ணல் நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் கூறினார்கள், "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். உங்கள் பொறுப்பு குறித்து மறுமையில் நீங்கள் விசாரிக்கபடுவீர்கள்."

3) மனைவிகளிடத்தில் எவ்வித பாகுபாடின்றி சமமாக நீதத்துடன் தனது கடமைகளை நிறைவேற்றவும் வேண்டும்.

இவ்வாறு மேலே சொன்ன எல்லா விதிமுறைகளையும் நிறைவேற்ற சக்தி பெற்ற ஒரு ஆண்மகன் விரும்பினால் ஒன்றுக்கு மேற்பட்டு அதிகபட்சமாக நான்கு மனைவியர்களை திருமணம் செய்ய அனுமதிக்கபடுகிறான்.

எனவே விதிக்கப்பட்டுள்ள கட்டளைகள் கடுமையானதாக இருப்பதால், அனுமதியிருந்தும் முஸ்லிம்களில் பெரும்பாலோர்கள் ஒரு மனைவியுடையவராகவே இருப்பதை நடைமுறையில் காணுகிறோம். மிகச் சிலரே 2 மனைவி உடையவர்களாகவும், அரிதிலும் அரிதாகவோ அல்லது இல்லவே இல்லை என்னும் எண்ணிக்கையில் தான் 3 பெண்களையோ அல்லது 4 பெண்களையோ திருமணம் செய்பவர்கள் இருக்கலாம்.

பலதாரமணத்தை வெறும் பாலியல் சுகத்திற்காக முஸ்லிம்கள் பின்பற்றியிருப்பார்களானால், பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் ஆண்கள் 4 மனைவியுடையவராகவும், அரிதிலும் அரிதாகவோ அல்லது ஒருவரும் இல்லை என்ற எண்ணிக்கையில் தான் ஒரு மனைவியுடைய முஸ்லிம் ஆண்களை பார்த்திருக்க கூடும். ஆனால் நடைமுறையில் தலைகீழான நிலையிருப்பதை காண முடிகிறது.

எனவே அனுமதி கடும் விதிகளுக்குட்பட்டு வழங்கப்பட்டதால், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யும் சக்தி பெற்ற ஆண்கள், பெண்களை மனைவி என்னும் அந்தஸ்துடன் வாழவைத்திருப்பதன் மூலம் பெண்களின் கண்ணியமும், வாழ்க்கையும் பாதுகாகப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம். பலதாரமண முடிக்க அனுமதியில்லாத சமூகத்தில் உள்ள ஆண்களில் சிலர், பெண்களை வைப்பாட்டிகளாக உறவு வைத்து கொண்டு அந்த பெண்கள் எந்தவித சமூக அந்தஸ்தும் இல்லாமல் கேவலமாகவும், கேளிக்கைப் பொருளாகவும் நடத்தப்படும் அவலத்தையும் நாம் கண்கூடாக கண்டு வருகிறோம் என்பது வேதனைக்குரிய உண்மை நிலையாகும்.

ஆக, பலதாரமணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதால், வீண் விளையாட்டாக பலதாரமணம் முஸ்லிம்களால் பயன்படுத்தபடவில்லை என்பது நடைமுறை எண்ணிக்கையிலிருந்து புலனாகிறது.

தகுதியுடைய ஆண்கள் மட்டுமே பலதாரமணம் செய்வதால் பெண்கள் மனைவி என்னும் சமூக அந்தஸ்துடன் நடத்தப்படும் நிலை இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமே இருக்கிறது. மற்ற சமூகத்தில் இத்தகைய பெண்கள் வைப்பாட்டிகள் என்னும் இழிவான வாழ்க்கை நடத்த தள்ளபடுவதால், இஸ்லாம் தட்டுமே பெண்களின் உரிமையையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் ஒரே மார்க்கமாக திகழ்கிறது என்பதே நிதாசனமான உண்மை.


எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.

அன்பு சகோதரர் மரைக்காயர் அவர்களே! நீங்கள் ஊக்கப்படுத்துவதற்கு நன்றி. புகழுக்குரியவன் இறைவன் ஒருவனே.

நன்றி. வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது