Tuesday, March 25, 2008

ஓவியர் ஹுசைன் இப்படிச் செய்திருக்கக் கூடாது!


ஓவியர் ஹுசைன் வரைந்த 'மகாபாரதம்: கங்கா ஜமுனா யுத்தம்' என்ற ஓவியம் நியூயார்க் நகரில் நடந்த ஏலம் ஒன்றில் சாதனை அளவாக 1.6 மில்லியன் டாலருக்கு விலை போயிருக்கிறது. 4 அல்லது 6 லட்சம் டாலருக்கு விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த ஓவியம், இந்துத்துவாக்கள் அளித்த இலவச விளம்பரத்தினால் இந்த சாதனையை எட்டிப் பிடித்திருக்கிறது.
க்ரிஸ்டீ நிறுவனம் இந்த ஓவியத்தை ஏலம் விடப்போகிறது என்று தெரிந்ததும், 'இந்திய அமெரிக்க அறிவுசீவிகள் சபை' (Intellectual என்றால் 'அறிவுசீவி' என்றுதானே அர்த்தம்? ) ஒரு கடிதம் எழுதி 'ஹுசைன் இந்துக் கடவுள்களை மரியாதைக் குறைவான முறைகளில் சித்தரித்து ஓவியம் வரைந்து இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பதால், அவரது ஓவியங்களை ஏலம் விடக்கூடாது' என்று கேட்டுக் கொண்டார்களாம். 'மீறி ஏலம் விட்டால் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்' என்று அவர்கள் சொல்லியும் க்ரிஸ்டீ நிறுவனம் அவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. இலவச விளம்பரம் கிடைக்கிறதென்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள்?
ஏலம் நடந்த அன்று வெளியே கூச்சலும் ஆர்ப்பாட்டமுமாக இருந்தபோது, உள்ளே அந்த ஓவியம் கனஜோராக, எதிர்பார்க்கப் பட்டதை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான தொகைக்கு விற்கப் பட்டது.
ஆனால், ஹூசைன் இப்படி செய்திருக்கக் கூடாதுதான்! இஸ்லாம், முஸ்லிம்கள் உருவப்படங்கள் வரைவதை தடை செய்திருக்கிறது. பிற மதக் கடவுள்களை ஏசுவதையும் பழிப்பதையும் தடை செய்திருக்கிறது. இஸ்லாமியப் பெயரை உடைய ஹுசைன் இந்த இரு கட்டுப்பாடுகளையும் மீறியே இந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
இந்துத்துவாக்கள் வேண்டுமானால் இரட்டை வேடம் போடுபவர்களாக இருக்கலாம். 'எங்கள் கடவுள்களை மரியாதை குறைவாக வரைந்து விட்டார்' என்று ஒரு பக்கம் கூக்குரல் போட்டுக் கொண்டு, இன்னொரு பக்கம் பங்களாதேஷின் தஸ்லிமா நஸ்ரினுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கலாம். 'எங்கள் மத உணர்வுகள் புண் பட்டு விட்டன' என்று ஓலமிட்டுக் கொண்டே ஔரங்கசீப் பற்றி ஓவியக் கண்காட்சி நடத்தி முஸ்லிம்களின் மன உணர்வுகளை காயப் படுத்தலாம்.
எனவே, இந்துத்துவாக்கள் இப்படியாக தங்கள் 'இரட்டை நாக்கு'த் திறனை வெளிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு முஸ்லிம் என்ற வகையில் ஹுசைன் இப்படி செய்திருக்கக் கூடாது!

10 comments:

said...

அப்படி சொல்வதானால் உங்கள் நபிகள் நாயகம் அவர்களே மற்ற மதங்களை புண்படுத்தும் விதமாக பேசியது தப்புத்தானே மரைக்காயர்

said...

நபிகள் நாயகம் அவர்கள் பிற மதக் கடவுள்களை பழித்திருந்தார்களென்றால் அதைச் சுட்டிக் காட்டுங்கள் மனிதரே

said...

ஓவியர் ஹுஸைன் முஸ்லிம் என்று தன்னை ஒருபோதும் சொல்லிக் கொண்டதாகத் தெரியவில்லை.

நீங்களாக ஏன் வலிந்து அவரை முஸ்லிம் என்று சொல்லுகிறீர்கள்?

said...

//ஓவியர் ஹுஸைன் முஸ்லிம் என்று தன்னை ஒருபோதும் சொல்லிக் கொண்டதாகத் தெரியவில்லை.
நீங்களாக ஏன் வலிந்து அவரை முஸ்லிம் என்று சொல்லுகிறீர்கள்?//

பேரைப் பார்த்து ஏமாந்துட்டேனுங்க!

Anonymous said...

மரைக்காயரே,

ஓவியர் ஹுசைனிடம் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும்படியாக அவரின் பெயரும் வெளிர்தாடியும்தான் இருக்கின்றன. மாதுரி தீட்சித் மயக்கத்தில் தன் 'தெறமெய' அர்ப்பணித்தவர்தான் இந்த ஹுசைன். ஏலத்தில் கிடைத்த பெருந்தொகையை மாதுரி முன்னேற்றக் கழகத்திற்குக் காணிக்கையாக்காமல் இருந்தால் சரி. சங்பரிவாரங்களின் கடைக்கண் பார்வைக்காக ராமஜென்ம பூமிக்குக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. (தற்போதைய அரசியல் சூழலில் ராமர் பாலம் மறுசீரமைப்பிற்காக நன்கொடையாகக் கொடுக்கலாம் என்பதே என் ஆலோசனை)

நன்றி
AKN

said...

//மாதுரி முன்னேற்றக் கழகத்திற்குக் காணிக்கை...

சங்பரிவாரங்களின் கடைக்கண் பார்வைக்காக ராமஜென்ம பூமிக்குக்...

ராமர் பாலம் மறுசீரமைப்பிற்காக நன்கொடையாகக்..//

வெள்ளை தாடிக்கு பின்னாடி இப்புடியெல்லாம் வெவகாரங்கள் இருக்குதா?

said...

ஹூசேன் இந்துமதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக இந்துக்கள் வருந்தினால்.. அவ்வுணர்வில் பங்குகொள்ளும் முஸ்லிம்கள் ஹுசேன் என்ற பெயர்தாங்கிக்கு எந்தவித தண்டனையும் வழங்கவும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலவும் காழ்ப்புணர்வை களைந்தெடுக்கவும் முன் வருகின்றனர்.

ஆனால், தஸ்லிமா விஷயத்திலோ இதே உணர்வை பிராமணாள் மற்றும் பரிவாரங்கள் காட்டுவதில்லை. மாறாக எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, உனக்கு ரெண்டு கண்ணும் போகணும் என்ற மனநிலையிலேயே காலத்துக்கும் இருக்கின்றனர்.

இவர்கள் திருந்தினால் தான் இந்தியாவுக்கு விடிவு.

said...

முஸ்லிமாயிருந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வது ஒரு மேனியா. சாத்தானின் கவிதைகள் எழுதிய ரஷ்டி, கொமேனியின் பத்வா கிடைத்த பிறகு நான் முஸ்லிம் அல்ல என்றார். தஸ்லிமாவும் அப்படியே. அவ்வளவேன் நம்மூர் சல்மாவும், இஸ்லாத்தின் மீது எனக்கு நம்பிக்கையில்லை என்றவர்தான்.

ஹுசைன் ஒரு பெயர் தாங்கி முஸ்லிம்

said...

//தஸ்லிமா விஷயத்திலோ இதே உணர்வை பிராமணாள் மற்றும் பரிவாரங்கள் காட்டுவதில்லை. மாறாக எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, உனக்கு ரெண்டு கண்ணும் போகணும் என்ற மனநிலையிலேயே காலத்துக்கும் இருக்கின்றனர். //

சரியா சொன்னீங்க பாபு. இந்துத்துவாக்களின் நிலைப்பாடு எப்போதுமே இரட்டை வேடம்தான்.

said...

//முஸ்லிமாயிருந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வது ஒரு மேனியா.//

உண்மைதான் கூத்தாநல்லூரான். ஹுசைன் போன்றவர்கள் இஸ்லாம் பற்றி எதுவும் பேசாவிட்டால் கூட இந்துத்துவாக்கள், ஏதோ உலக முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவர் போன்ற அந்தஸ்தை அவர்கள் மீது வலியத் திணித்து, 'உங்காளு இப்படி செய்யுறார் பாருங்க' என்று முஸ்லிம்களையும் இஸ்லாமையும் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.